Skip to content
Post Views: 2,850
ஆமாம் என்றவள் அவனின் மடிமீது தலை வைத்து விட்ட தூக்கத்தை தொடர.
மணி ஆச்சு பாரு கௌசி எழுந்து கிளம்பு.உங்க அம்மா வீட்டுக்கு போகனும் என்று சொல்ல.
Advertisement
ஒரு 5 மினிட்ஸ் என்றவள் கோடியின் இடுப்பை இறுக்கமாக பிடித்து கொள்ள.
Advertisement
கோடி கௌசியின் தலை வருடி விட்டவன். வாம்மா டைம் ஆச்சு என்று கௌசியின் நெத்தியில் முத்தமிட.
Advertisement
மெதுவாக எழுந்தவள். கோடியின் கன்னத்தில் முத்தம் மிட்டு. இதோ வர்ரேன் என்றவள். முகம் கழுவி வர. இருவரும் வெளியில் வந்து குருவம்மாளிடம் நாங்க கமலம் அக்கா வீட்டுக்கு போறோம் என்ற கோடி சுந்தர் எங்கே என்றான் .
Advertisement
குருவம்மாள் அவனா மணிமொழி் வீட்டுல ஒரு துக்க செய்தி அதுக்கு போய் இருக்காங்க. நீங்க இரண்டு பேரும் போங்க என்றார்.
தென்றல் எங்கே என்றான் கோடி.
அவ எங்கே இங்கே வந்தாள். அவ மாமியா மண்டபத்தில் இருந்தே தென்றலை கூட்டிட்டு போய்யிட்டாங்க.
சரி என்றவன்.வா கௌசி என்று தனது பைக்கில் கௌசியை கூட்டி சென்றான்.
கமலம் வீட்டிற்கு செல்ல கமலம் வீட்டில் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தனர்.
கமலம் கோடிஸ்வரனை தம்பி உங்க வீட்டுல இருந்து எப்போ வர்ராங்க .
அம்மாவுக்கு முடியல, தென்றல் அவ மாமியார் வீட்டுக்கு போயிட்ட என்றவன். அண்ணன் வர முடியாத சூழ்நிலை.
நீங்க சாப்பிட வாங்க தம்பி என்றவர்.கௌசியை , கோடியை வைத்து விருந்து பரிமாறினார்.
சிவா கோடியிடம் தயங்கி நைட்டு எங்க வீட்டுல தங்குறீங்களா. இல்ல உங்க வீட்டுக்கு என்று இழுக்க.
நாங்க எங்க வீட்டுக்கு போறோம் என்றான்.
சரி உங்க வீட்டுல முதல் இரவுக்கு அலங்காரம் பண்ணட்டுமா என்றான் சிவா.
கோடிஸ்வரன் ஒன்னும் வேண்டாம் என்று மறுத்து விட. எல்லோரும் முறையின்னு ஒன்னு இருக்குல தம்பி என்றார்கள்.
கோடிஸ்வரன் கௌசி படிப்பு முடியட்டும் அப்பறம் பாத்துக்கலாம் என்றான்.
நந்து கௌசியை பார்க்க அவளின் ரூம் வர .கௌசி நாளைக்கு பரிச்சைக்கு புக்கை எடுத்து படித்து கொண்டு இருந்தாள்.
நந்தினி என்னடி பண்ணுற என்று கௌசியை பார்த்து சிரிக்க.
நாளைக்கு முக்கியமான எஃசாம் கா அதான் படிக்குறேன்.
ரொம்ப கஷ்டம் என்ற நந்து.
கமலத்தை கூப்பிட.அவரோ வெளியில் யாரோட பேசிக்கொண்டு இருந்தார்.
கோடிஸ்வரன் அவங்க இல்லை என்று சொல்ல கௌசியின் ரூம் சென்றான்.
அங்கு நந்தினி கௌசியை திட்டிக்கொண்டு இருந்ததை பார்த்தவன்.
என்னவென்று பார்க்க தன் மனைவி புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டு இருந்ததை பார்த்தவன்.
நந்துவை ஏன் கௌசியை திட்டுறீங்க என்றான்.
ஒன்னும் இல்லை என்றவள் அம்மா என்று கீழே செல்ல.
கோடிஸ்வரனை உள்ள வாங்க என்று அழைத்த கௌசி புக்கை மூட.
நீ படி கௌசி நான் இருக்கேன்
என்றவன். ஒரு சேரில் அமர்ந்து கொண்டு கௌசியின் ரூம்பை சுத்தி பார்க்க.
கமலம் வந்தவர்.கௌசியை பார்த்து முறைத்து புக்கை மூடு என்று சத்தம் போட.
அக்கா என்றவன் அவளை திட்டாதீங்க படிக்கட்டும் என்றவன். நாங்க எங்க வீட்டுக்கு போறோம் என்றவன்.கௌசியிடம் உன்னோட படிக்குற புக்கை எல்லாம் எடுத்து வச்சுக்கோ என்றவன். அங்கே கௌசியின் உடைகள் பேக் செய்ய பட்டு இருக்க. இதை நான் எடுத்துட்டு போறேன். நீ வா என்று கீழே சென்றவன். கமலத்தை தனியே அழைத்தான்.
கமலம் சங்கட பட்டுக் கொண்டே கோடியிடம் பேச.
கமலத்தை பார்த்தவன் .நீங்க கௌசியை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டீங்கல, இனிமேல் நான் பாத்துக்கிறேன். படிப்பு ரொம்ப முக்கியம். கௌசி படிக்கட்டும். எங்க வாழ்க்கை எப்படி தொடங்கனுமோ அப்போ தோடங்கிறோம். முதல்ல அவ படிப்பு முடியட்டும் என்றவன். எல்லோரிடம் சொல்லி விட்டு. கௌசியை அழைத்து அவன் வீடு சென்றான் .
கௌசியை வீட்டினுள் அழைத்து வந்தவன் .ஒரு அறையில் அவளின் பேக்குகளை வைத்தவன். இந்த ரூம்புல நீ இருந்துக்கோ கௌசி என்றவன். ஏதுத்த ஒரு ரூம்பை காட்டி . அங்கே நான் இருந்துகிறேன் என்றான்.
கௌசி ஏன் நமக்கு கல்யாணமாச்சுல இரண்டு பேரும் ஒரே ரூம்புல தான் இருக்கனும்.
நான் அவ்வளவு நல்லவன் இல்லம்மா . உன்ன ஒரே ரூம்புல வச்சு பாத்துக்க என்றான்.
ஒரே ரூம்புல இருந்தா என்ன? அது உனக்கு புரியாது.படிக்குற பிள்ள , படிக்குற வேலையை மட்டும் பாரு உனக்கு பால் காய்ச்சி தரவா என்றவன். எனக்கு அது மட்டும் தான் தெரியும் என்றான்.
அவளோ நான் முதல்ல குளிக்கனும் என்றவள். பாத்ரூம் நோக்கி செல்ல.
கோடிக்கும் உடம்பும் கச, கச வென இருக்க. அவனும் குளிக்க சென்றான்.
முதலில் குளித்து முடித்தவன் வெளியில் வந்து கௌசியை பார்க்க .அவள் இன்னும் வராமல் இருக்க. கோடிஸ்வரன் சமையல் அறை சென்று பாலை காய்ச்சி கொண்டு இருக்க.
கௌசி கோடியின் பின் இருந்து நீங்களே பாலை காய்ச்சிடிங்களா என்று கேட்க.
திரும்பி பார்த்த கோடி வாய் அடைத்து நின்றான். ஒரு டிசர்ட்டும், சாட்ஸ்சும் அணித்து இருந்தவளை பார்த்தவன். என்ன கௌசி இது என்றான்.
கௌசியோ என்ன இது என்றவள் புரியாமல் முழிக்க.
இது என்ன டிரஸ் என்றான் கோடி.
இது தெரியாதா டிசர்ட்டும், சாட்ஸ்சும்.
அது தெரியுது, இப்போ ஏன் இதை போட்டு இருக்க.
அது நான் வீட்டுல தூங்கும் போது இப்படித்தான்.
அய்யோ என்ற கோடி ,நான் சும்மா இருந்தாலும் இவ என்ன சும்மா இருக்க விட மாட்டா போல.
நீ இந்த டிரஸ்ச மாத்திட்டு வா வேற ஏதாவது கொஞ்சம் புல்லா போட்டுட்டு வா என்றான் கோடி.
ஏன் என்றவள். நீங்க ஏற்கனவே இந்த டிரஸ்சுல என்னையா. பாக்கலயா. ஏற்கனவே பாத்து இருக்கீங்க தானே இப்ப மட்டும் என்ன.
அது அப்போ ,இது நீ இப்போ என் பொண்டாட்டியா என்னால பாக்க முடியாது சொன்னா கேளுமா. வேற டிரஸ் மாத்திட்டு வா என்க..
நீங்க வந்த அன்னைக்கே என்னை திட்டுறீங்க என்ற கௌசி தேம்ப.
ஐயோ ,அப்படி சொல்லலம்மா, புரிஞ்சுக்க மாட்டேங்குறாளே என்றவன்.பாலை ஆப் பண்ணியவன்.கௌசி அணைத்து கொண்டு சமாதானம் பண்ண. சொன்னா புரிஞ்சுக்கோடி என்றவன்.
அவனின் மனதில் தோன்றியதை அவளிடம் சொல்ல.
அவளோ வெட்கப்பட்டு கொண்டே சாரி என்றவள். ஒரு நிமிசம் என்றவள் அவளின் ரூம் சென்று .ஒரு நைட் பேன்டை போட்டு வர.
பாலை அவளுக்கு ஆத்தி கொடுத்தவன். இது நல்லா இருக்கு என்றான்.
இருவரும் பாலை குடிக்க. கோடி நீ படி கௌசி நான் தூங்க போறேன். ஏதாவது வேனுமுன்னா என்ன எழுப்பு என்றவன் அவன் அறைக்கு சென்று தூங்கிவிட்டான்.
கோடி நைட் 2 மணிக்கு எழுந்து பாத்ரூம் சென்று வந்து . கௌசியின் ரூம்பை பார்க்க. விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. இன்னுமா இவ தூங்கலை என்றவன் கௌசியின் ரூம் வர.
கௌசி படித்துக்கொண்டே டேபிள் மீது தலை வைத்து தூங்கி இருக்க.
கோடி அவளை எழுப்பி விட. கௌசி கட்டிலில் படுத்து தூங்கு உடம்பு வலிக்கும் .என்று அவளை எழுப்ப .
அவளோ நன்றாக தூங்கி இருந்தாள். கோடிஸ்வரன் கௌசியை அலேக்கா தூங்கியவன் கட்டிலில் படுக்க வைக்க.
கௌசிக்கு மெதுவாக விளிப்பு வர. கோடியை பார்த்து சிரித்தவள்.அவனின் கைபிடித்து இங்கே இருக்கலாமே என்றாள்.
கோடிஸ்வரன் என்னம்மா என்றான்.
அது புது இடமா இருக்கா, கொஞ்சம் பயமா இருக்கு என்றாள் கௌசி.
கோடி கௌசியின் அருகில் அமர்ந்து நான் இங்கே இருக்கேன் தூங்கு என்க.
கௌசி கோடியிடம் , உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்றவள். கோடியின் டிசர்டை பிடித்து இலுத்தவள்.கோடியின் மார்பில் தலைவைத்து அவனை அணைத்து படுத்துகொள்ள.
கோடியோ அடி பாவி , நான் போட்ட கோட்டை எல்லாம் அழிச்சுட்டாளே என்றவன்.தூங்கிருடா கோடி என்றவன் .கௌசியை அணைத்து கொண்டே தூங்கி விட்டான்.
அதிகாலையில் கௌசிக்கு முழிப்பு வர. எழ பார்க்க அவளால் எழ முடிய வில்லை. பக்கத்தில் கோடிஸ்வரனின் தலை மட்டும் தெரிய.என்னவென்று பார்க்க.கோடிஸ்வரன் கௌசியின் இடுப்பை சுற்றி கையை போட்டு இருந்தவன்.கௌசியின் கழுத்துக்கு கீழ் தலை வைத்து அணைத்து தூங்கி கொண்டு இருக்க. ஹலோ சார், என்றவள். குட் மார்னிங் என்று எழுப்ப.
சும்மா இரு கௌசி என்றவன். அவளை இன்னும் அனைத்து தூங்க. ஹலோ சார் , மாமா சார் என்றவள் கோடியை எழுப்ப.அவன் எழுந்துக்குற மாதிரி தெரியல என்றவள்.
கோடிஸ்வரனின் கன்னத்தை கடிக்க.
ஐயோ அம்மா என்றவன், பாவி இப்படியா கடிப்ப என்றவன் கன்னத்தை பிடித்து கொண்டு எழுந்து உக்கார.
விடு, சூட் என்றவள் எழுந்து பாத்ரூமுக்கு ஓட.
ஒரே தாவில் , கோழி குஞ்சுவை அமுக்குவது போல் அவளை பிடித்து இழுக்க.
சாரி சார், சாரி சார் நான் எழுப்புனேன் நீங்க எழுந்துக்கலா.அதான் என்றவள். கோடிஸ்வரனின் தாடையை பிடித்து கொஞ்ச.
அவளின் செயலை பார்த்து சிரித்தவன். போ என்று விட.
தாங் யூ மாம்ஸ் என்றவள் . குளிக்க போய் விட்டாள்.
கோடி அவன் அறைக்கு சென்றான். கோடியின் வீட்டு காலிங் பெல் அடிக்க.
கௌசி கதவை திறந்தாள் .
கமலம் நின்று இருந்தார்.
எழுந்துட்டியா என்றவர். இந்த காபி , டிபன் இதில் இருக்கு சாப்பிட்டு கிளம்பு காலேஜுக்கு டைம் ஆச்சு என்றவர். மதியம் நம்ம வீட்ல சாப்பிட வாங்க , தம்பிட்ட சொல்லிரு என்றவர் கிளம்ப.
அம்மா என்றவள் , கமலத்தை அணைக்க. என்னடா என்றவர் மகளின் தலை கோத .
நன்றி மா என்றாள் கமலத்திடம்.
எதுக்கு டா என்றார் கமலம்.
கோடி, கோடி சாரை எனக்கு கொடுத்ததுக்கு என்க.
கமலம் நல்ல இருப்ப டா , தம்பி உன்ன நல்ல பாத்துப்பார். தம்பி மனசு நோகமா நடத்துக்கனும் சரியா என்று கிளம்பி விட.
கௌசி கதவை பூட்டி விட்டு திரும்பி பார்க்க.
கோடிஸ்வரன் கௌசியை பெருமையாக, ஆசையாக பார்த்து தன் இரண்டு கையையும் விரித்து வா என்க..
கௌசி வேகமாக சென்று கோடிஸ்வரனை அணைத்து கொண்டாள்.
கோடிஸ்வரன் கௌசியின் உச்சன் தலையில் முத்தம் மிட்டு. லவ் யூ பொண்டாட்டி .
கௌசி கேட்கல சத்தமா என்றாள்.
இருவரும் தங்கள் துனையை தனக்கு கிடைத்த பாக்கியம் என்று கடவுளுக்கு நன்றி சொல்ல.
இருவரும் கிளம்பி ,கௌசியை காலேஜில் விட்டவன், கோடிஸ்வரன் அவனின் காம்புளக்சுக்கு சென்றான்……
error: Content is protected !!