Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 19 2

கௌசியிடம்  துருவாவின்  பிறந்த சான்றிதழ், ஆதார் என்று அனைத்தையும் வாங்கியவன். மறுநாள்  துருவாவை  ஸ்கூலில் சேர்த்துவிட, துருவா கௌசியிடம் மம்மி நான் ஸ்கூலுக்கு போறேன் என்று கோடி வாங்கி குடுத்த பேக்கையும்  வாட்டர் பாட்டீலையும் எடுத்து கொண்டு ஸ்கூலுக்கு போறேன் என்று சிரித்து கொண்டு போகும் மகனை  பார்த்து  கோடியும், கௌசியும் பாய் சொல்லி விட்டு வீடு வரும் பொழுது துருவா  இவ்வளவு  சந்தோஷமாக  இருப்பது, ஆச்சரியம்,  தங்களோடு  இருக்கும் போது இவ்வளவு சந்தோஷமாக துருவா  இல்லையா இன்று கோடி வந்தவுடன்  அனைத்தையும் அவனிடம் சொல்லி  கேட்பது இவளுக்கு வியப்பாக இருந்தது. நான் துருவாவை இன்னும்  நல்ல கவனித்து  இருக்க வேண்டுமோ. இதற்கு தான்  தந்தை கூட  இருக்க வேண்டுமோ என்று நினைத்து கொண்டே  கௌசியும்  கோடியும் வீடு வந்து சேர்ந்தவர்கள்.

 கௌசி கிச்சனில்ஏதோ வேலை செய்ய  என்ன கௌசி கோர்ட்டுக்கு    போகலயா என்றான்.

அவளோ கோர்ட் இன்னும் இரண்டு நாள்  லீவு  என்று சொல்ல.



Advertisement

 சூப்பர்  என்ற  கோடி ,கௌசி  இழுக்க .

அவளோ மதியம்  என்ன சமைக்கலாம்  என்று யோசனையில்  இருக்க. கொடி இழுத்தவுடனே.

Advertisement

Advertisement

அதிர்ச்சியாகி  அவன் மேல் விழ.

கௌசியை  இழுத்து  கொண்டு  பெட் ரூம்  சென்றான். அவளோ என்ன ,எங்க  போறீங்க.

Advertisement

அது என் பொண்டாட்டி என் மேல  கோபமா  இருக்க. அந்த கோபத்தை குறைக்க  போறேன்.

அவளோ எப்படி என்று கேட்க.

கோடி செயலில் இறங்க.

கௌசி இது பகல், வேண்டாம் என்று சொல்ல.

அவனோ  சமதானம்  பண்ண பகல்  ஏது, இரவு  ஏது என்று கௌசியை  ஏகாப்பட்ட  முறை சமதானம்  பண்ணி விட்டு விலக.

கோடியின்  4 வருஷ  தேடலை  உணர்தவள்.

அவளின் தேடலையும் ,அவனிடம்  காண்பிக்க. கோடி கௌசியை  கொஞ்சி தீர்த்து  விட்டான்.

துருவாவை  கூப்பிடும்  நேரம்  ஆவதை  பார்த்தவன். கௌசியை  நீண்ட இதழ்  முத்தம் மிட்டு விலக.

அவளோ  கோடியை விடாமல் மாம்ஸ் ,புருஸ் என்று  கோடியை பிடித்துக்  கொஞ்சி மீண்டும் கோடியை முத்தமிட்டு இது போதாது என்று   அவனிடம் நெருங்கினாள்.

கோடிஸ்வரன்  அடியே விடுடி , பிள்ளையை கூப்பிட நேரம் ஆச்சு  என்று சொல்ல அதன் பின்னே விட்டாள் கோடியை. போலச்சு போங்க  என்றாள்.

கோடி நேரம்டி, நான் சொல்லுற டைலாக்க நீ சொல்லுற.குளித்துவிட்டு மகனை ஸ்கூலில்  இருந்து  அழைத்து வரும் பொழுதே, மதிய உணவை வெளியில் வாங்கி வந்தான்.

கோடி ரூம்  வந்து கௌசியை பார்க்க அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். மகனிடம்  சென்று  இருவரும்  சாப்பிட, துருவா தந்தையிடம்  இன்று நடந்ததை  சொல்லி  கொண்டு இருந்தான்.சிறிது  நேரத்தில்  துருவாவுக்கு   தூக்கத்திற்கு கண்கள் மூட.

வாடா  என்றவன் மகனை தூங்க வைத்து விட்டு . கௌசியை எழுப்பி  சாப்பிட  சொல்ல.

அவளோ எழுப்பிய கோடியை அணைத்துக்கொண்டு மீண்டும்  தூங்கினாள்.

கோடியும்  நீண்ட நாள் கழித்து.நன்றாக தூங்கி எழ.முதலில்  கண் விழித்தது கோடிதான்.தன்னை கட்டி கொண்டு தூங்கும்  மனைவியை சாப்பிடு கௌசி என்று எழுப்ப.அந்த சத்தம் கேட்ட துருவா எழுந்து தந்தையின் மேல் படுக்க.

மகனை அணைத்து கொண்டவன்.கோடியின்  மனம் நிறைந்து இருந்தது. இது என் குடும்பம் , இவர்கள் தான் உனக்கு எல்லாம் என்று  கௌசிக்கும்,துருவாவுக்கும் நெத்தியில் முத்தமிட.

துருவா அவனின் நைனாவிற்கு.  கோடி  செய்தது  போல் ,கோடியில் நெத்தியில் முத்தம் வைத்து .பால் வேணும் நைனா என்றான்.

கோடி தன்னிடம்  உரிமையா  கேட்கும்  மகனை  தூக்கி கொண்டு வாடா என்று வெளியில்  வந்தவன். மகனுக்கு பால் காய்ச்சி குடுத்துவிட்டு.

கௌசியை  எழுப்பி விட்டான். டைம் ஆச்சு எழுந்து சாப்பிடவா.

அவளோ கோடியை கைநீட்டி அருகில் அழைக்க.

 ஒத படுவா  நைட்டு பாத்துக்கலாம்.போ குளிச்சுட்டு வந்து சாப்பிடு என்று விரட்ட.

அவளோ உம் என்று மறுபடியும் அழைக்க.

ஏய் பையன்  வெளியே இருக்கான்டி.

அவளோ நீ வந்தே ஆகனும்  என்று இரண்டு  கைகலையும் விரித்து வா என்க.

ஏன்டி படுத்துற என்றவன். மகனை பாரத்துவிட்டு  வர.

 கௌசி கோடியை அணைத்துவிட்டு சில முத்தங்கள் கொடுத்து  விட்டு போங்க என்று  சொல்லி விட்டு பாத்ரூம் சென்றாள்

கோடி மனைவி முத்தம் வைத்த இடத்தை தொட்டு பார்த்துவிட்டு.அவ்வளவு ஆசை என் மீது என்று மகனோடு விளையாட சென்றான்.

 கௌசி  குளித்துவிட்டு  வந்து சாப்பிட என்ன இருக்கு என்று பார்க்க.கோடி மனைவிக்காக பிரியாணி வாங்கி வைத்ததை   சூடுபண்ணி வைத்து இருந்தான்.

கௌசி உணவை தொட்டு பார்த்து. கோடி தான்  உணவை சூடு பண்ணி வைத்துள்ளான் என்று நினைத்து. கணவனை பார்க்க . கோடி மகனிடம்  விளையாடிக்கொண்டே கௌசி பார்த்து சாப்பிட என்று சொல்ல.

கௌசி  டைனிக் டோபலில் இருந்தேன் கோடிக்கு பறக்கும் முத்தத்தை  கொடுக்க.

 கோடி தலையாட்டி அதை ஏற்றவன்.   மனைவிக்கும் பறக்கும் முத்தத்தை அனுப்ப. இருவரும்  இப்போ  தான்   புதிய தாக திருமணம்  ஆனது போல் கொஞ்சி கொண்டனர்.

கௌசி கோடியிடம் சிவாவை நம்ம  வீட்டுக்கு விருந்துக்கு் கூப்பிடவா.

கோடி  உம் கூப்பிடு. ஏன் என்கிட்ட கேட்குற.

நீங்க என் புருஷ்.என்று கோடியை கிள்ளி விட்டு போக.

கோடி நான் செய்யுறத நீ செய்யுற என்றான். கௌசி போன் பண்ணி சிவாவை விருந்துக்கு அழைக்க.

 மறுநாள்  சிவா,  சிவாவின் மனைவி  செல்வி, கமலம் ,இராஜாசெல்வம் என்று அனைவரும் வந்து இருந்தனர்.

கௌசி கேட்கும்  ஒவ்வொன்றையும் , கோடி  வாங்கி  வந்து கொடுத்து, மனைவிக்கு  உதவி செய்யும் கோடியை  அனைவரும் பார்த்து இருந்தனர்.

கமலத்துக்கு  கோடியையும், கௌசியை பார்க்க நிறைவாக இருந்தது.

 இரண்டு நாள் மைசூரில் இருந்து விட்டு வீடு வந்தனர்.

கமலம்  கோடி இங்கே பெங்களுரில்  எம்,எல் ,ஏ  வாக பார்க்கும் போது எவ்வளவு கம்பீரமாக, காரில் செல்வான்  வருவான்.  யாரிடமாவது பேசும் போது கூட  அதிகாரமாக பேசுவான். ஒரு  இளகு தன்மை இருக்காது. இன்று தன் மகளிடம் இருக்கும் கோடி  முகம் வேறு. தன் மகளை  கோடிக்கு அவ்வளவு  பிடித்து இருக்கும் போல என்றவர் இருவரும் நல்ல  இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டினார்.

கோடிஸ்வரன் மனைவி மகனை பார்ப்பதே வேலையாகி போயின. கௌசிக்கு  கோர்ட் லீவ் என்றாள். பெங்களூருக்கு  அழைத்து சென்று விடுவான் .அங்கே கமலத்திடம்  இருவரையும் விட்டு. அவனின் வேலையை  செய்வான்.

 சில மாதங்கள் செல்ல. கமலம் கௌசிக்கு  போன் பண்ணி சிவாவின் மனைவி செல்வி கர்ப்பாமாக  இருப்பதாக  சொல்ல.கௌசி சந்தோஷபட்டவள்.உடனே அண்ணணுக்கு  அழைத்து வாழ்த்து  சொல்லியவள்.

பின்பு தனக்கு  இந்த மாதம்  வர வேண்டிய  மாத வீடாய்   இன்னும் வரலீயே  என்றவள். யோசித்து சந்தோஷபட்டு  கோடிக்கு தெரியாமல், டெஸ்ட் பண்ணி  பார்த்தாள். இரண்டு சிவப்பு   கோடுகள் வர. அதை எடுத்துக்கொண்டு கோடியிடம் வர.

அவனோ  மகனிடம்  சேர்ந்து  பால் விளையாடி  கொண்டு இருந்தான்.

கௌசி  கோடியை மெல்ல  ரூம்புக்குள்  அழைத்தாள்.

கோடி என்னவென்று  கண்களால் கேட்க.

கௌசி வாங்க என்றாள் ஆசையாக.

 கோடி சொல்லு கேம் சூப்பர இருக்கு  என்னவென்று சத்தமாக கேட்க.

 கௌசி வாயா  லூசு புருஷ என்றவள்.அவள் தலையில் அவளே அடித்து கொள்ள.

 என்னடி என்றவன் .துருவாவிடம்  நீ 5 நிமிசம்  பால்  விளையாடு  நைனா வர்ரேன் என்றவன்.  கௌசியை என்னடி  மாமா மேல அவ்வளவு ஆச வந்துருச்ச  பகல்லே  ரூம்புக்கு  கூப்பிடுற. துருவா இருக்கான் என்று கௌசியின் அருகில் வர.

கௌசி  கோடியை பார்த்து ரொம்ப ஆசை தான் என்றவள். அவன் கையில்  டெஸ்ட்  பண்ணதை  கொடுக்க.

ஏய் பொண்டாட்டி என்று கௌசியை தூக்கி சுற்றியவன். கீழே விட்டு  கௌசிக்கு  எண்ண முடிய முத்தங்களை  கொடுத்து அவளை அணைத்து கொண்டவன்.  ரொம்ப சந்தோஷம்  கௌசி  என்றவன். ஹாஸ்பெட்டல்  போலாமா என்றான்.

கௌசி இன்னும் ஒரு மாசம் கழிச்சு  போகலாம் என்றவள். இந்த  பாப்பா  பிறக்குற  வரை  நீங்க என்கூடவே இருக்கனும் என்றவள்.கோடியின் கையை பிடித்து கொண்டு்கேட்க.

கோடி  கௌசியிடம்  நான் எங்கே போக போறேன் கௌசி .இனி முழு நேரமும்  உன்ன பாக்குற வேலை தான் என்றவன். அவள் துருவா  பிறக்கும்  போது நான் இல்லை.   இப்போது இந்த பிள்ளை  பிறக்கும்  போது தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்  போல என்று நினைத்தவன்.கௌசியிடம் இந்த பாப்பா  பிறக்கும்  போது  உன் கூடவே  இருப்பேன் என்றவன் அவளின்  தலை கோத.

கௌசி பயமா இருக்கு என்றாள்.

என்னடி பயம் .என்னை  இனிமேல் உன்க்கிட்ட இருந்து யாரும் பிரிக்க முடியாது.

மாதங்கள் வேகமாக  செல்ல  கௌசிக்கு 7 மாதங்கள்  முடியும் தருவாயில்.

கோடி மனைவிக்கு  வளகாப்பு  பண்ணி பார்க்க ஆசை பட்டு  கௌசியிடம் கேட்க.

அவளோ ஒரே வார்த்தையில்  வேண்டாம் .

ஏன் கௌசி என்றதற்கு.

 மறுபடியும்  இத பத்தி  பேசதீங்க என்று பேச்சை  மாற்றினாள்.

கமலம்  மருமகள் வளகாப்பிற்க்கு அனைவரையும் அழைத்து இருக்க. கோடி குடும்பமாக  வந்து இருந்தான்.

சிவாவின் மனைவிக்கு வளகாப்பு நடந்து கொண்டு இருக்க. அனைவரும்  வந்து வளையல் போட்டு,  நல்ல இருக்கனும் என்று வாழ்த்தி செல்ல.

கௌசி  சிவாவின் மனைவிக்கு தங்க வளையல் வாங்கி வந்து இருந்தாள் .அவள் கர்பமாக இருப்பதால் செல்விக்கு  வளையல் போட முடியாது. எனவே   கோடியிடம்  வளையலை  குடுத்து உங்க தங்கச்சிக்கு வளையல் பொடுங்க என்று சொல்ல.

கோடி துருவாவை தூக்கி கொண்டு அத்தைக்கு  வளையல் போடலாம் என்றவன்.துருவாவை வளையல் போட சொல்ல.  துருவா குட்டி  அழகாக வளையல் போட்டுவிட்டான்.

கோடிஸ்வரன் நந்து விடம் கண்சாடை  காட்ட. சிவா  மனைவின் பக்கத்தில்  இன்னொரு   மனை போட   பட்டு  கௌசியை. அமர சொல்ல  கமலம்   அன்றே மகளுக்கும்  வளகாப்பு நடத்தினார்.

கௌசி வேண்டாம் என்று  தலையாட்ட.

நந்தினி  உன் வீட்டு காரர்தான் சொன்னார்.அமைதியா இரு என்றவள். முதலில் தங்கைக்கு வெள்ளி  வளையல் போட. பின்பு சொந்தங்கள், அனைவரும் போட்டனர். கோடியும் துருவாவும் கௌசிக்கு வளையல் போட வர.

கௌசி எல்லாம் உங்க வேலையா வீட்டுக்கு வாங்க இருக்கு.

துருவா மம்மி என்றவன் முதலில் அவன்தான் கௌசிக்கு வளையல் போட . பின்பு  கோடி தங்க வளையல் மனைவிக்கு போட்டு விட்டான்.  துருவா கௌசியின் மடிமீது அமர்ந்து கொண்டு மம்மி பாப்பா எப்போதும் வரும்.

கௌசி

இன்னும்  இரண்டு  மாசம்  கழித்து பிறக்கும்  கண்ணா என்றாள்.

இரண்டும்  மாதம் கழித்து.முதலில் சிவாவின் மனைவிக்கு  நடுயிரவில்  பெண்  குழந்தை பிறக்க.கோடிஸ்வரன் தான் அவனது காரில்  கமலத்தையும், இராஜாசெல்வத்தையும்  அழைத்து சென்றான். சிவா மனைவிக்கு குழந்தை  பிறந்து இருக்கும் இடம்  பெங்களுரில் இருந்த 2 மணிநேர பயணம் என்பதால்.

கௌசியை வீட்டில் விட்டு மூன்று பேர் மட்டும்  சென்றனர்.

 கௌசிக்கு   டெலிவரியாக இன்னும் 10 நாள் இருக்க. அவளை அழைத்து செல்ல வில்லை.

 கௌசி நான். தான் போக முடியவில்லை கோடியாவது அண்ணன் மகளை பார்த்து வரட்டும் என்று கோடியை போக சொல்ல.

கமலம்  நிறைமாதமாக  நிற்கும் மகளை பார்த்து இருந்துக்கோ. நான் நைட் வந்துருவேன் . கோடி தம்பி சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன். ஏதாவது நா போன் போடு சரியா  பத்துரம் என்றுசொல்லி சென்றார்கள்.

 துருவா  காலையில் இருந்தே நைனா ,நைனா வேணும் பாக்கனும் என்று அழ. கௌசி சிவா மாமா அத்தைக்கு பாப்பா  பிறந்து இருக்குடா  நைனா அங்கே போயிருக்காரு வந்துருவாரு.

அவனோ நானும் பாப்பா பாக்க போறேன். நைனா வேணும் என்று அழ.

கௌசி துருவாவை  வாடா ஐஸ் கீரிம் வாங்கி தர்ரேன்  என்று சமாதானம் படுத்தி வெளியில் அழைத்து வர. பக்கத்தில் உள்ள கடையில்  ஐஸ்கிரீம் இல்லாமல் இருக்க, தொலைவில்  இருந்த கடைக்கு  சென்று  ஐஸ்கிரீம் வாங்கி  தந்து விட்டு.  ஒரு சந்தில் வர.

ஒரு பைக்கில்   இருவர் கௌசியின் அருகில்  வந்து   கௌசியின்  கழுத்தில்  இருந்த தாலி ஜெயினை புடுக்க பார்க்க.

கௌசி மாட்டேன் என்று  செயினை பிடித்து கொள்ள. ஆள் யாரும் இல்லாமல் இருக்க.

பைக்கில்  வேகம் கௌசியின்   கழுத்தில் இருந்த  வேற  செயினை பறித்து கொண்டு திருடர்கள் வேகமாக  சென்று விட.

 கௌசி கீழே விழுந்து  வயிறில் அடி பட  , அந்த ரோட்டில் யாரும் இல்லாமல் இருக்க.

துருவா மம்மி  ,மம்மி என்று அழ.

 கௌசி வயிறு வழியில் துடித்தாள் கழுத்தில் இருந்து வேற இரத்தம்  வர.

துருவாவை  யாரையாவது  கூப்பிட்டு  வா  என்க.

அவனோ  மம்மி வா மம்மி  என்று அழைக்க.

என்னால  எழ முடியல டா . நல்ல பையன் தானே  சொன்ன கேளு . அம்மா வாள  எழுந்து  வர முடியாது. பக்கத்தில்  யாராவது  இருக்காங்களா பாத்து  கூப்பிட்டு வா என்றவள் போ  என்று வழியில் அழ.

சின்ன  பிள்ளைக்கு என்ன  தெரியும்  அவன்  அங்கே் இங்கே  என்று ஓடியவன். ஒரு வயதான  முதியவரை

 பார்த்தவன். பாட்டி  மம்மி , மம்மி என்று அழ.

அவர். என்னடா  என்று கேட்க. அந்த முதிய பாட்டியை  கைபிடித்து  கௌசியின் அருகில்  இழுத்துக்கொண்டு வர.

அந்த  முதியவர் கௌசியை பார்த்து   அடியே  உனக்கு என்னாச்சு  என்று கேட்டு அருகில் வர.

கௌசி அத்தை என்றவள்  மயக்கத்திற்கு  சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!