Skip to content
Post Views: 2,060
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் 25 ( Final)
Advertisement
அந்த இலங்கை விமான நிலையத்தின் பயணிகள் காத்திருக்கும் இடத்தில்.
Advertisement
Advertisement
தன் தாய் மஞ்சுவின் தோளில் முகத்தை மறைத்து வைத்திருந்தான் டாக்டர் ஹரிஹரன்..
கொஞ்ச நேரம் முன்பு தான் அன்பு, பார்கவியும் மும்பை பிளைட் ஏறி சென்றிருக்க..
Advertisement
இப்போது இவர்கள் அனைவரும் சென்னை விமான அழைப்பிற்க்காக காத்திருந்தனர்.. மஞ்சு வின் தோளிள் முகத்தை வைத்திருந்தவனின். கன்னத்தை தொட்டு தடவிய மஞ்சு “ஒழுங்கா சாப்பிடு ஹரி, உடம்பை பாத்துக்கோ, அம்மா எங்கேயும் போல, இங்கேயே தான் உன் பக்கத்துல இருக்கேன்னு நெனச்சுக்கோ” என்று மகனின் கன்னம் தடவியவர்.. ” என்னை பாக்கனுமுன்னு ஒரு போன் போடு அம்மா வந்துருவேன், இல்ல நீ வா” என்று தன்னை பிரியப்போறோம் என்று மகன் வருந்துவதை தாங்க முடியாமல், மகனிடம் பேசி சமாதானம் பண்ணிக்கொண்டு இருந்தாள் மஞ்சு.
விருநகரில் இருந்து வந்த அனைவரும் ஹரி முகத்தை வைத்தே. அவன் தாய்யை பிரியவதை நினைத்து வருந்துகிறான் என்று நினைத்து இருவருக்கும் கொஞ்சம் தனிமை கொடுத்து தன்று தள்ளி அமர்ந்திருக்க.. ஸ்ரீஜெயம் கூட சற்று தள்ளி நின்று. மகனையும், மனைவியும் பார்த்தார்..
மகன் இப்படி வருந்துவான் என்று அவர் நினைக்க வில்லை.. அனைவரும் ஏர்போர்ட் கிளம்பும் போது கூட. சிரித்து பேசிக்கொண்டு வந்தவன். அன்பும் பார்கவியும் மும்பை கிளம்பும் போது கூட அன்பு விடம் ஏதோ கேலி பண்ணி சிரித்து விட்டே மும்பை அனுப்பிவைத்திருந்தவன்..
இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான பயணிகள் அழைப்போம் என்று அறிவிப்பு வந்தவுடன்.. மஞ்சுவின் கையை பிடித்து கொண்டு கண்கலங்கியவனை பார்த்த அனைவருக்கு கண்கலங்கி நிற்க.. இருவரும் பேசட்டும் என்றே தனிமை கொடுத்து தள்ளி நின்றனர்..
மஞ்சு பேசுவதை கேட்டவன் அமைதியாக இருக்க. அவளுக்குமே மகனை விட்டு போவது கஷ்டமாக இருக்க.. ஸ்ரீஜெயத்தை நினைத்து கண்கலங்காமல், மகனை தேற்றியவள், மகனின் நெத்தியில் முத்தமிட்டு, “அம்மா எப்பையும் உனக்கு அம்மா தான் புரியுதா” என்றாள்..
ஹரி”உம்” என்று தலையாட்ட..
நளினிக்கு இதற்கு மேல் என்னால முடியாது என்றவர்..
ஹரியின் பக்கத்தில் வந்து “எய்யா ராசா ஏன்டா கண்ணா? கலங்குற, உன் அம்மா சந்தோசமா இருப்பாடா,, உன் அப்பா என் தம்பி ஸ்ரீஜெயம் அவளை நல்லா பாத்துப்பான், வருத்தப்படாத, எந்திரி முகத்த தொட” என்றவர் அவர் புடவையாலே தம்பி மகன் முகத்தை துடைத்து விட்டவர்.
“இன்னும் ஒரு மாசத்துல, உன் தாய் மாமன் மகன் பெரியசாமி கல்யாணம் வருதுல, நீ அப்போ வாயா,, உனக்கு கஷ்டமா இருந்த இப்போ கூட எங்க கூட வாயா போகலாம், எங்க ஊருல வந்து டாக்டரா இரு, வேலை பாரு” என்று கூற..
“இல்லை அத்தை நான் இங்கேயே இருக்கேன், இவ்வளவு நாள் நானும் அம்மா தானே ஒன்னா கூட இருந்தோம், இப்போ நீங்க எல்லாரும் புதுசா வந்து இருக்கீங்க சந்தோஷமா இருக்கு அத்தை” என்றவனை தோளில் தட்டி கொடுத்த நளினி “எதுக்கும் கலங்க கூடாது சரியா, உன் அம்மாவை நாங்க பத்திரமா பாத்துக்குறோம்” என்று கூற. “சரி” என்று தலையாட்டியிருந்தான் ஹரி..
விமான நிலையத்தில் சென்னை விமான பேசேஞ்சர் வாங்க என்று அழைப்பு ஒலிக்க..
அனைவரும் ஹரியிடம் சொல்லிவிட்டு கிளம்ப..
ஸ்ரீஜெயம் மகனின் அருகில் வர.
ஹரிக்கு கண்கலங்கியது அழகூடாது என்று நினைத்தவன். தந்தையை நிமிர்ந்து பார்க்க. மகனை அணைத்தவர்.
“நீ என் சொத்துடா, உன் அம்மா என் பொக்கிஷம், நீங்க இரண்டு பேரும் கிடைக்க நான் புண்ணியம் பண்ணி இருக்கனும்” என்றவர். “நீ வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லு அப்பா எல்லாத்தையும் விட்டுட்டு, உன் கூட இருக்கேன், இப்படி சின்ன பிள்ளை மாதிரி பீல் பண்ணாதேடா, என்னால தாங்கமுடியாது, உன் அம்மா பாரு எப்படி உட்கார்ந்து இருக்கா” என்று மஞ்சுவை காட்டினார்..
மகன் வருந்துவதை நினைத்து ஓய்ந்து போய் இருந்தவளை பார்த்து “வா” என்று ஸ்ரீஜெயம் அழைக்க. இருவரின் பக்கத்தில் வந்து நிற்க.
“நம்ம எல்லாம் ஒரே குடும்பம்டா ஹரி, இந்த பிரிவு நிறந்தரம் இல்ல, நீ அங்க வா. நாங்க இங்க வர்றோம், உலகம் ரொம்ப சின்னது டா, நாங்க எங்கே போக போறோம், பக்கத்தில் இருக்குற விருதுநகர் தான், நீ வாங்கப்பான்னு ஒரு போன் போடு அப்பா அடுத்த நிமிஷம் உன் கண்முன்னாடி நிப்பேன் போதுமா, எதுக்கும் கலங்க கூடாது”… என்றவுடன்.
தந்தையும், தாயையும் சேர்த்து அணைத்துக்கொண்டவன் “சாரி பா” என்றவன். “இனி நான் பீல் பண்ண மாட்டேன் பா, நீங்க இரண்டு பேரும் ஹாப்பியா போயிட்டு வாங்க, நான் மாமா பையன் கல்யாணத்துக்கு வரேன்” என்றான்..
“உடம்பை பார்த்துக்கோ ஹரி” என்று மகனிடம் சொல்லிவிட்டு மஞ்சுவை தோள்லணைத்து சென்றார்..
ஹரி இரண்டு பேரும் மறையும் வரை பார்த்தவன், எனக்கு இனி எதுவும் என்றால் என் தந்தை, தாய் இருக்கிறார்கள் என்று ஏர்போர்ட்டை விட்டு சென்றான்..
மஞ்சவும், ஸ்ரீஜெயமும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். மனைவியின் வருத்தமான முகத்தை பார்த்தவர், அவளின் கையை பிடித்து நான் இருக்கிறேன் என்று கையில் அழுத்தம் கொடுக்க. மஞ்சு நிமிர்ந்து ஸ்ரீஜெயத்தை பார்த்தவள். கண்களாலே நானிருக்கிறேன் என்று நம்பிக்கை தர.. அவரின் தோள் சாய்ந்து கண்மூடிக்கொண்டவளின் கண்முன்னே இரண்டு நாள் முன்பு ஹரி தன்னிடம் தனியே பேசிவிட்டு, ஸ்ரீஜெயத்தை அனுப்பிவைக்கிறேன் பேசுங்க என்று ஸ்ரீஜெயத்தை அனுப்பி வைக்க.
உள்ளே வந்த ஸ்ரீஜெயம் மஞ்சுவை பார்த்தார்.. அவள் அவரிடம் பேச தயங்கி நிற்பதை பார்த்தவர்.. மஞ்சுவை தன்னை நோக்கி பார்க்க வைத்தவர், “உனக்கு எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருக்கலாம் பாப்பூ, நான் உன்னை கட்டாய படுத்த மாட்டேன்”. என்றவர்..
“இனி நீ எங்கே இருக்கீயோ அங்கே தான் நான் இருப்பேன், அது இலங்கையானாலும் சரி, இல்ல விருதுநகர் ஆனாலும் சரி” என்று பேசி விட்டு, உன்னை விட்டு எங்கு போக மாட்டேன் என்பது போல் அமர்ந்து விட..
அவர் அமர்ந்திருந்த கோலம் கண்டு, ஸ்ரீ ஜெயத்தின் கைகளை பிடித்துக்கொண்டவள் “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ஸ்ரீ.. நான் உங்க கூட விருதுநகர் வாறேன்” என்றவள்.. “எனக்கு உங்க கூட விருதுநகரில் உள்ள வீட்டில் வாழனுமுன்னு ஆசை” என்று சிரித்தபடியே கூற.
அவள் பேசியதை கேட்ட ஸ்ரீஜெயம் இன்ப அதிர்ச்சியில் “பாப்பூ” என்று கூறி அணைத்துக்கொண்டு கண்கலங்கினார்..
மறுநாளே பக்கத்தில் உள்ள கோவிலில் வைத்து இருவரின் திருமணம், தன் சொந்தத்தோடு எளிய முறையில் நடந்தது, இதோ ஸ்ரீஜெயமின் கைகோர்த்த படியே விருதுநகர் வந்து இறங்கினாள்..
அண்ணன் மார்கள் தங்கள் வீட்டுக்கு அழைக்க, ஸ்ரீஜெயத்தின் முகத்தை பார்த்து அனுமதி கேட்க.. “சரி” என்றார் ஸ்ரீஜெயம்..
முதலில் ஆண்டவர்கனி வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்து விட்டு, அடுத்ததாக நளினியின் வீடு வந்து சேர்ந்தனர்..
நளினி தம்பியையும், மஞ்சுவையும் ஆரத்தி எடுத்தே வீட்டினுள் விட்டார்..
ஸ்ரீஜெயம் மஞ்சுவை பத்தி யாரும் ஊர்காரர்களிடம் சொல்ல வேண்டாம்,, அவர்களே தெரிந்து கொண்டால், கொள்ளட்டும் என்று கூறி இருக்க.. யாரும் ஊர்கார்களிடம் மஞ்சுவை பத்தி சொல்லவில்லை..
நளினி தனது வீட்டில் ஸ்ரீஜெயத்துக்கும், மஞ்சுவுக்கும் ஆரத்தி எடுக்கும் போது பார்த்த சில பேர், பொண்ணு மேல தேரு ஆண்டவர் கனி உறவு முறை சொந்த பொண்ணு மாதிரி இருக்குல. என்றவர் ஸ்ரீஜெயத்திடம் ஏன்பா கல்யாணமுன்னு சொல்லி இருக்க கூடாது, இப்படி யாருக்கும் தெரியாத மாதிரி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்க என்றவர்கள். “நீ கல்யாணம் பண்ணி நல்லா இரு” என்றவர்கள் பொண்ணு நல்லா இருக்குல.. என்று பேசிக்கொண்டே சென்றார்கள்..
மஞ்சுவுக்கு அப்பாடா என்று இருந்தது. அவள் மிகவும் பயந்து இருந்தாள், தன்னை கண்டு கொண்டாள் என்ன பதில் சொல்வது என்று.. இப்போது பெரிய பிரச்சனை முடிந்தது என்று பெருமூச்சு விட்டாள்.
இரண்டு பேரும் நளினி வீட்டில் உண்டு விட்டு, ஸ்ரீஜெயம் அவன் வீட்டிற்கு மஞ்சுவை அழைத்து வந்திருந்தான்.. “வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள்ள வா பாப்பூ” என்று அவளை அழைத்து வந்தான்..
மஞ்சுவுக்கு ஸ்ரீஜெயம் வீடு ஏற்கனவே தெரியும். வெளியே இருந்து பார்த்திருக்கிறாள்,, உள்ளே வந்து பார்த்தது இல்லை..
வீடு பெரியதாக இருந்தது. உள்ளே சென்று ஒரு, ஒரு அறையாக சுற்றி பார்க்க, “மஞ்சு இங்கே வா”. என்று ஸ்ரீஜெயம் ஒரு அறைக்கு அழைத்து சென்றான்..
error: Content is protected !!