Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீங்காத நினைவு நீ

Neengaatha Ninaivu Nee 4



Advertisement

Advertisement

Advertisement

      நீங்காத  நினைவு நீ

Advertisement

  அத்தியாயம் = 4

       கீலூரு  முறை  பொங்கல்  திருவிழா  நன்றாக   நடந்து  கொண்டு இருந்தது.

  நளினி  அவரின்  வீட்டிற்கு  அவளின்  சொந்தத்தையும்,  அவரின்  கணவர்  தமிழ் அரசு  சொந்தத்தையும்   பொங்கலுக்கு  அழைத்து  இருந்தார்.

நளினியின்  வீடு  சொந்தங்களால்   நிறைந்து  இருந்தது.

அம்மன்  கோவிலில் இருந்து ஆலி பொம்மை  கீலூரு  ஆட்களை பொங்கலுக்கு அழைத்து செல்ல  வந்தது.

  அன்பு அரசன்  பட்டு  வேஷ்டி, சட்டையில் இருந்தான். கீலூரில்  உள்ள  அனைத்து  இளைஞர்களும்   இன்று வேஷ்டி சட்டையில் இருக்க. அவர்கள் வீட்டு  பெண்கள்  பட்டில்  ஜொலித்தார்கள்.

நளினியின்  வீட்டு  முன் தான், கீலூரு ஆட்கள்  கூடி  கோவிலுக்கு  செல்ல  ரெடியாகியிருந்தனர்.

 அம்மனுக்கு  பொங்கல்  முறை செய்ய  கீலூரில் உள்ள அனைவரும் தயாராகினார்கள். முதலில்  ஆலி பொம்மை  ஆடி கொண்டு செல்ல. ஒருவர் ஆலி பொம்மை முன்னாடி    வேட்டு , வெடி போட்டுக்கொண்டே முன்னாடி   வந்தார்.

ஆலி பொம்மை பின்னாடி   அன்பு  ஏற்பாடு  பண்ணி வைத்திருந்த கொட்டும்,  நடன ஆட்கள்  நடனம் ஆடிக்கொண்டும் செல்ல,

அடுத்தது அம்மனுக்கு கீலூரில் இருந்து  அபிஷேகம் பண்ண பாலை, பால் குடத்தில் 51  பெண்கள்  எடுத்துக் கொண்டு  நடந்து வந்தனர்.

அடுத்த சில  பெண்கள்  அம்மனுக்கு அலங்காரம்  பண்ணவும். பூஜை  செய்யவும் தேவையான   பூ, மாலை,   தேங்காய்,  பழம், சந்தனம், வளையல்கள் என்று அம்மனுக்கு தட்டில் வைத்து   எடுத்துக்கொண்டு வரிசையாக  நடந்து வர, அவர்கள் பின்னாடி  பெரிய  குதிரை வண்டியில், அம்மனுக்கு  சாத்துவதற்காக  15 அடி  மாலையை  குதிரை வண்டியில்  வைத்து எடுத்துக்கொண்டு வந்தனர், கடைசியாக  இன்னும்  ஒரு மேளம் வைத்து, அன்புவும், அவன் நண்பர்களும்  வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு  மேளத்துக்கு  ஏற்ற வாறு நடனம் ஆட பார்ப்பவர்களுக்கு  கண்கொள்ளா காட்சியாக  இருந்தது.

 ஊரில்  உள்ள மெயினான ரோடுகளில்  ஊர்வலம்  சுற்றி வரும். ஊரின் மெயின் பஜார்  முலுவதும் சுற்றி  வந்தவர்கள்.

ஆண்டவர் கனி  கடை வைத்து  இருக்கும்  கடையின்  முன்பு  ஊர்வலம் வர, அன்பு வேட்டு,   வெடி போட்டுக் கொண்டு வருபவரிடம் பெரிய, பெரிய  வான வெடியை  வெடிக்க சொல்ல.

 வெடி  சத்தம்  கேட்டு ஆண்டவர் கனி  கடையில்  இருந்து  வெளியே வந்து நின்று பார்த்தான். தற்செயலாக  பெரியசாமியும் ஆண்டவர்  கடையில் இருந்தான் வெளியே வந்து  இருவரும் கீலூர்  ஆட்கள் பொங்கல்  முறை எடுத்து  செல்வதை  வேடிக்கை பார்த்தார்கள்.

அன்பு  மேளம் அடிக்கும்  ஆட்களை சத்தமாக   மேளம் அடிக்க சொல்லிவிட்டு.

ஆண்டவர் கனியின்  கடையின் முன்  குத்தாட்டம்  போட, பெயரிசாமி தூ என்று திட்டி விட்டு கடையின்னுள் சென்றான்.

அன்புவும் அவன் நண்பர்கள் பண்ணும்  , ஆட்டத்தை பார்த்து  ஆண்டவர் கனி  மனதில் சிரித்து கொண்டு நின்று இருந்தான்.

பின்பு  திவ்யா அரிய நாச்சியை பார்க்க, பட்டு புடவை உடுத்தி , தலைநிறைய   குண்டு  மல்லி வைத்து  இருந்தாள்.

அவள்  கையில்  அம்மனுக்கு சாத்துவதற்கான  பட்டு புடவையை தட்டில் வைத்திருந்தாள். எப்போதும் நளினி தான்  புடவையை கையில்  வைத்திருப்பார். இம்முறை திவ்யாவின்  கையில் புடவை தட்டை  பார்த்த ஆண்டவர்கனிக்கு, அவள்  அன்புக்கு  மனைவியாக  போகிறாள் என்று  சொல்லாமல் சொல்லியது.

ஆமாம்  அவர்களின்  வீட்டு  முறைப்படி  வீட்டு பிள்ளைகளோ, மகளோ, அல்லது  மருமகள் தான்  புடவை  தட்டை  எடுத்து வருவார்கள். இந்த   வருடம்  திவ்யாவின்  கையில் தட்டை பார்த்தவன். அன்புவுக்கு  பேசி  முடித்து விட்டார்கள்  போல என்று  நினைத்தான். அவன்  மனதோ  நீ தான்  அவள  வேண்டாமுன்னு  நெனச்சுட்டல   அப்பறம் என்ன அவ யார  கட்டுன   உனக்கு என்ன, என்று மனதை அவளை பாக்காத  என்று கண்களை திருப்பினான்.

திவ்யா  அன்புவும்  அவன்  நண்பர்களும்  நீண்ட  நேரம்  ஒரே  இடத்தில் ஆடுவதை பார்த்தவள்  சீக்கிரம்  வாங்க  என்று சொல்ல செல்ல,  மேள சத்தத்தை கேட்டவள்  தனக்கும்  ஆட வேண்டும்  என்று  தோன்ற.

அன்புவின்  அருகில்  வந்து அவனை பார்த்து  கண்களால்  ஆடவா  என்று  கேட்க.

அவளின்  கையில் இருந்த  தட்டை வாங்கியவன். அவன்  அணிந்து  இருந்த  கூலர்சை  அவளுக்கு  மாட்டிவிட்டு  ஆடு  என்றான்.

அவளோ  குஷியாகி மேளத்துக்கு  ஏற்றவாரு  மெதுவாக  அன்புவிடம்  சேர்ந்து  டான்ஸ் ஆட. இருவரும்  இணைந்து   அழகாக  டான்ஸ் ஆடினார்கள்.

அங்கே  இருந்த  அன்புவின் நண்பர்கள் விசில்  அடித்து   சூப்பர் என்று பாராட்டி, போட்டோக்கள் எடுத்தனர்.

அன்புவின்  நண்பர்கள் விசில் அடிக்கும், சத்தம் கேட்டு  ஸ்ரீ ஜெயமும், நளினியும் பின்னாடி   திரும்பி பார்க்க. மகனும், வருங்கால  மருமகளும்  சேர்ந்து ஆடுவதை பார்த்தவர்  ஜோடி பொருத்தம் சூப்பர் என்றே நினைக்க  தோன்றியது.

அனைவரும்  தன்னை பார்ப்பதை பார்த்த திவ்யா  வெக்கப்பட்டு  சிரித்து அன்புவின்  பின் ஒலிந்து கொண்டாள்.

ஏய்  ஆடுமா என்று அன்பு  திவ்யாவை  கைபிடித்து  ஆட இலுக்க.

அவளோ வேண்டாம் என்று  அன்புவின் கூலர்சை  அவனுக்கு  மாட்டி விட்டவள். அவனின்  கையில் இருந்த  புடவை  தட்டை  வாங்கி   கொண்டு நளினியிடம்  சென்று விட்டாள்.

நளினி மருமகளிடம்   நல்லா  டான்ஸ்  ஆடுனடா என்றார்.

ஆண்டவர்  கனி  கனத்த  மனதுடன்  திவ்யாவை  பார்த்து  நின்றான்.

அன்பு, திவ்யா இருவரை  சேர்ந்து  பார்ப்பதற்கு அழகான  ஜோடி  போல தெரிய  எல்லாம் விதி என்றவன், அவனின்  கடையினுள் சென்றான்.

கீலூர்  ஊர்காரர்கள்  அனைவரும் கோவில் சென்று  அம்மனுக்கு  அபிஷேகம் செய்து  முடித்து, புடவை, மாலை சாத்தி வழிப்பட்டனர்.

கீலூர் காரர்கள்  இராண்டவது  நாள் பொங்கல் விழாவை முடிக்க.

அடுத்தது  பக்கத்தில்  உள்ள   மேலப்பட்டி ஊர்  காரர்கள்   பொங்கலை நடத்துவார், பின்பு வேறு ஊர் காரர்கள்  வரிசையாக பொங்கல்  விழாவை நடத்து வார்கள்.

 கோவிலில்  கொடி கட்டிய 7 வது  நாள்  எல்லா  ஊர்காரர்களுக்கு சேர்ந்து  ஊர் பொங்கல் கொண்டாடுவார்கள்.  பின்பு  சாயங்காலம் முளைபாரி  எடுத்து ஊர் சுற்றி  தெப்ப குளத்தில் கரைப்பார்கள்.  8 வது நாள்  தீ சட்டி எடுத்து அம்மனை வழிபடுவார்கள்.

9வது நாள்  பூ மிதி திருவிழா மற்றும் அன்னதானம்  நடக்கும்.

10 வது நாள்  விளக்கு பூஜை  செய்வார்கள்.

11 வது நாள் வான வேடிக்கை என்று பொங்கல்  விழா நிறைவு பெறும்.

இன்று  7 வது நாள்  ஊர் பொங்கல். காலையிலே  அனைவரும்   கோவில் சென்று  பொங்க சோறு செய்து அம்மனுக்கு படைத்து  விட்டுக்கு வருவார்கள்.  பின்பு  சாயங்காலம் முளைபாரி  வளர்ந்ததை   பெண்கள் பூஜை  செய்து.கும்மி அடித்து  பாட்டு பாடி, தலையில் வைத்து  ஊர்சுற்றி வருவார்.

பெண்கள் எல்லாரும்  முளைபாரி  தூக்கி கொண்டு வருவதை பார்க்க அழகாக  இருக்கும்.

முளைபாரி  தூக்கி வரும் வழியில் உள்ள  எல்லா  கோவிலின் வாசல் முன்  முளைபாரியை  வட்டமாக வைத்து  கும்மி அடிப்பார். பாட்டு பாட வென்றே சில பேரை அழைத்து செல்வார்கள். முன்னாடி மேளம்  பின்னாடி  வேட்டு  என்று  தனி, தனியே  ஒரு,  ஒரு  ஊர்காரர்களாக வருவார்கள், ஊர் சுற்றி கோவில் வந்து அம்பாளை பார்த்து வணங்கி விட்டு , கோவில் பக்கத்தில் உள்ள தெப்ப குளத்தில்  முளைபாரியை  கரைப்பார்கள்.

எல்லா ஊர் முளைபாரியும் வர. தெப்ப குளத்தில்  கரைப்பதற்கு கூட்டமாக இருந்தது.  ஒருவர், ஒருவராக   முறைபாரியை வாங்கி  தெப்ப குளத்தில் கரைத்து கொண்டு இருக்க. கூட்டத்தில்  ஒருவர்  அய்யோ ஒரு குழந்தை  குளத்தில்  விழுந்துருச்சு என்று  சத்தமிட, அனைவரும்  கூட்டத்தில் உள்ள   அவர், அவர்  குழந்தை  களை  தேடிக்கொண்டு இருந்தார்கள்.

 தூரத்தில்  இருந்து     திவ்யா அரிய நாச்சி  ஒரு  ஐந்து  வயது  குழந்தை    தெப்ப  குளத்தில்  விழுவதை  பார்த்தவள். நளினியிடம்  அத்தை  ஒரு  குழந்தை  தண்ணியில  விழுந்துருச்சு  என்று  சொல்லிவிட்டு அடுத்த  நொடியே  தண்ணீரில்  குதித்தாள்.

தெப்ப  குளத்தை சுற்றி பெண்கள்  கூட்டமாக இருக்க. ஆண்கள்  யாரும்  இல்லை.

ஆண்டவர் கனியின் தங்கை  மீனா  என்ற  மீனாட்சி  தன் குழந்தையை   தேடியவள்  யோகா   சித்தி  என்று   அழைத்தவள் நம்ம பாப்பாவை  பாத்திங்கல.

 என்னடி  நீ தானே  கையை பிடிச்சு  கூட்டி  வந்தே  நானும் பார்கவியும்  முளைபாரி  கரைக்குற இடத்துக்கு போகிருந்தோம் பாக்கலடி.

பிள்ளையை  எங்கேடி  என்றவர். குழந்தையை தேட .

சித்தி  தெரியல  என் பிரண்ட்  தீபா கிட்ட பேசிட்டு இருந்தேன்.

அவ உங்க பின்னாடி தான்  உங்க  சேலைய பிடிச்சுக் கிட்டு வந்த.

அடியேய் என்னடி  சொல்லுற நான்  அனிகா குட்டியை பாக்கலடி.

எல்லாரும் ஒரு  குழந்தை  தண்ணில  விழுந்துருச்சாம்  என்று சத்தமிட.

அய்யோ  என்ற  மீனா  சித்தி  அது என்  பிள்ளையா என்று தெப்பக்குளம்  அருகில்  போய் தேட. குழந்தையின்   செருப்பு  தெப்ப குளத்தின்  தண்ணீரில்  மேல்  மிதக்க, அதை  பார்த்த மீனா அய்யோ  சித்தி  என்று யோகாவை  அழைத்தவள். அனிகாவின்  செருப்பு  குளத்தில்  மேல்  மிதப்பதை    காண்பித்து என்  குழந்தை என்று அழ.

யோக  அக்காவின் மகளை  ஒன்னும் இல்ல டி  பயப்படாத என்று பெரியசாமிக்கும், ஆண்டவர் கனிக்கு   போன்  போட  இருவரும் அருகில்  இருந்ததால் வேகமாக  வந்தார்கள்.

யோகா  விஷயத்தை சொல்ல.

எங்கே  குழந்தை விழுந்தது  என்று இருவரும் தெப்பக்குளத்தை  பார்த்து கொண்டு இருக்க.

அங்கே  நளினி  அன்புவை அழைத்து  திவ்யா  தண்ணியில  குதிச்சு, ரொம்ப  நேரம்  ஆச்சு  இன்னும்  காணல குழந்தைய   காப்பாத்த  போனவள  காணும்  என்று  அன்பு விடம் சொல்ல.

அன்பு தெப்ப  குளத்தில் குதித்து இருந்தான்.

அந்த  பக்கம் ஆண்டவர் கனி  குழந்தையின்  செருப்பு  மிதந்த  பக்கமாக குளத்தில்   குதித்து இருந்தான்.

அன்புவும், ஆண்டவர்கனியும்  தெப்பக்குளத்தில்  இருவரை தேட.

ஆண்டவர்கனி  திவ்யாவை  கண்டு  பிடித்து விட்டான்.

மூச்சுக்கு   திணறியவள் மயக்கமாகி இருந்தாள்.

ஆண்டவர்கனி  தெப்பக்குளத்தின்  மேல்  திவ்யா அரிய நாச்சியை  முடியை பிடித்து  இழுத்து நீந்தி  வந்தான்.

ஆண்டவர் கனிக்கு  அது  திவ்யா என்று  முதலில்  தெரியாது. யாரோ  ஒரு  பெண் என்றே  இழுத்து வந்தான். மேலே வந்து  பார்த்தால். திவ்யா அரியா நாச்சி அவளின் கை அணைப்பிள் இருந்தாள்  குழந்தை அனிகா.

ஆமாம்  திவ்யா யாரோ ஒரு குழந்தை   தண்ணில  விழுந்துருச்சு  காப்பாத்தலாம் என்று  தண்ணியில  குதித்தாள்.

குளத்தில் ஆழம்  அதிகம்  என்பதால். குழுந்தையை  பார்த்து  அவளின்  சேலையால்  குழந்தையை  கட்டியவன்  நீந்தி மேலே வரும் போது  மூச்சு விட  செறம பட்டு  மயக்கமானாள்.

ஆண்டவர்   கனி குளத்தில் இருந்து  இருவரையும்   தூக்கி வந்தவன். திவ்யாவின்  சேலையை கழட்டி  குழந்தையை பிரித்தவன். இருவரின்  கன்னத்தை தட்ட இருவருக்கும்  சுயநினைவு  இல்லாமல்  இருந்தார்கள்.

வந்து விட்டான்  அன்பு  தெப்ப குளத்தில் இருந்து. வந்தவன்  திவ்யாவை பார்க்க. அவளோ  மயக்கமான  நிலையில்  ஆண்டவர்  கனியின்  மடியில்  படுத்து  இருக்க.

முதலில்  ஆண்டவர்கனியிடம் இருந்த   திவ்யாவை தூக்கியவன் தன் தோள் மீது போட்டு ஆண்டவர் கனியை  பார்த்து முறைத்து விட்டு.

 சற்று தள்ளி கீழே அமர்ந்து திவ்யா, திவ்யா  என்று கன்னத்தை தட்ட அவளோ சுயநினைவு இல்லாமல் இருந்தாள்.

நளினி ஓ என்று அழுதார். ஐய்யோ  என் வருங்கால   மருமகளுக்கு குழந்தையை  காப்பாற்ற போகி இப்படி ஆகிடுச்சே என்று  அழுதுக் கொண்டே திவ்யா, திவ்யா மா எழுமா என்று கன்னத்திலும்,   முதுகிலும்  தட்டி  விட்டு அம்மாடி எழுடா என்று திவ்யாவை  சுயநினைவுக்கு கொண்டு வர முயற்சி பண்ண.

 அவளோ அமைதியாக படுத்து  இருந்தாள்.

அன்பு ஜீவாவிடம்  ஆம்புலன்ஸ்க்கு  போன்  போடுடா என்றவன். பின்பு  வேண்டாம் என்று  கூறி. அவனே  அவளை தூக்கி கொண்டு  ஹாஸ்பெட்டல் வந்தான்.

இங்கே ஆண்டவர் கனி  குழந்தைக்கு  முதல் உதவி செய்து கொண்டு தலைகீழ்  குழந்தை தூங்கி ஆட்டவும்.

குழந்தை  குடித்த  தண்ணீரை  இருமல்வுடன்  வெளியே துப்பி, உயிர்  பிழைத்து விட. கொஞ்சம்  மூச்சு விட சிரம படுவதை பார்த்தவர்கள், குழந்தையை தூக்கி கொண்டு திவ்யாவை  சேர்த்து இருந்த அதே    மருத்துவமனைக்கு வந்தனர்.

இருவரும் ஒரே மருத்துவமனையில்  அனுமதிக்கபட்டு சிகிச்சை வழக்கப்பட. இருவருக்கும்  ஒன்றும் மில்லை  ஓய்வு எடுத்தால் போதும்,  சதாரண மயக்கம்  தான். கொஞ்சம் நேரம் கழித்து வீட்டுக்கு  கூட்டிட்டு போங்க என்று டாக்டர் சொல்லி விட்டு சென்றார்.

அனைவருக்கும்  அப்போது தான் நிம்மதியாக  இருந்தது.

குழந்தை அனிகாவை   கீழே விட  வில்லை மீனா அழுது கொண்டே மடிமீது குழந்தையை வைத்திருந்தாள் . திவ்யா கண் விழிந்ததை  தெரிந்து கொண்டவள் யோகா விடம்  அந்த பொண்ணை  பார்த்து  நன்றி  சொல்ல  வேண்டும் வாங்க சித்தி என்று  அழைக்க.

யோகா வா என்று  மீனாவை  திவ்யா இருக்கும்  அறைக்கு  அழைத்து  செல்ல. அங்கே  ரூம்பில்  உள்ளவர்கள் அமைதியாக நின்று இருந்தனர். இவர்களை பார்த்து அன்புவும், ஸ்ரீ ஜெயமும்  ரூம்பைவிட்டு  வெளியே சென்றனர்.

மீனா திவ்யாவின்  அருகில் வந்து திவ்யாவின் கைபிடித்து கொண்டு நன்றி சொல்லி விட்டு கண் கலக்க.

அய்யோ  வேணாம்  சிஸ்டர்  குழந்தை நல்லா இருக்குல  அது போதும் என்றவள்  மீனாவை  தேற்ற.

 அவளோ  நீங்க  மட்டும் இன்னைக்கு  என் பிள்ளையை  சரியான நேரத்துல  பாக்கலன்னா  என்  நிலைமை  என்ன  ஆகிறுக்கும்.

 அதெல்லாம் ஒன்னும்  ஆகியிருக்காது கவல படாதீங்க என்றவள். குழந்தையிடம்  உங்க  நேம்  என்ன குட்டிமா   என்று கேட்க.

 குழந்தை  அம்மாவின் முகத்தை  பார்க்க.

உன் பேரு  என்னன்னு ஆண்ட்டி கிட்ட  சொல்லு என்றாள்.

குழந்தை திவ்யாவை பார்த்து.  அனிகா  யூ, கே,ஜி  என்று சொல்ல.

ஓ… ஸ்கூல் போறீங்கலா  சூப்பர் என்றவள் குழந்தைக்கு  கை கொடுக்க.

அனிகாவும்  கைகொடுத்தாள்.

யோகாவும்  திவ்யாவிடம் நன்றி  சொல்ல.

பராவாயில்லை மா என்றாள்.

யோகா  நளினியை பார்க்க. அவரோ அமைதியாக  நின்று  இருந்தார். ஏனென்றால் இதுவரை   யோகாவை  நளினிக்கு  தெரியும். தெரிந்தும்  பேச   மாட்டார்கள்.

இருவரும்  பார்த்து  கொண்டு  அமைதியாக  நிற்க.

 யோகா அக்கா மகளிடம்   போலாம் என்க.  மீண்டும்  ஒருமுறை திவ்யாவிடம்  நன்றி சொல்லி விட்டு  இருவரும்  வெளியே சென்றுவிட்டார்கள்.

அன்பு  திவ்யா  இருந்த  ரூம்பிற்கு வர. எல்லோரும்  அமைதியாக இருக்க.

திவ்யா அன்பு வை நிமிர்ந்து பார்க்க.

அவனோ  அவளை  தீயாய்  முறைத்துக்கொண்டு  இருந்தான்.

அத்தை  இந்த அன்பு மச்சானை பாருங்க என்னை  முறைக்குறாங்க என்று குறைபட.

 அவனோ  உன்னை  முறைக்க  மட்டும் தான்  இப்போ முடியும், வீட்டுக்கு வா உனக்கு இருக்கு.

அய்யா  சித்தப்பா  என்னன்னு  கேளுங்க. உங்க மருமகனை  என்று அவரிடம் பஞ்சாயத்தை  வைக்க.

 ஸ்ரீ ஜெயம்  ஏன்டா  பிள்ளையை  முறைக்குற.

 மாமா  தெப்பக்குளம் எவ்வளவு ஆழமுன்னு  தெரியாம  குதிச்சுருக்க  ஏதாவது  ஆகியிருந்த. அவ  அம்மா, அப்பாவுக்கு என்ன  பதில்  சொல்லுறது.

அவன்  சொல்லுறதும்  சரி தானேம்மா  என்றார் ஸ்ரீ ஜெயம்.

 நீங்க வேற  சித்தப்பா என் கண்முன்னாடி  ஒரு  குழந்தை தண்ணியில  விழுது அத  மொத  காப்பாத்த  தோணுமா,இல்ல இந்த  குளத்தில்  ஆழம்  எவ்வளவு என்னன்னு விசாரிக்க  தோணுமா.

 வாய்  நல்லா பேசு  உனக்கு  ஏதாவது  ஆச்சுன்னா என்ன பண்ணுறது.

நளினியோ சும்மா  இருடா அதான் அவளுக்கு  ஏதும்  ஆகலையே. வீட்டுக்கு போய்  சுத்திப் போடனும். என்று திவ்யாவின்  ஈர கூந்தலை  துடைத்து விட்டு கொண்டே, டாக்டர் கிட்ட  கேட்டு வா எப்போ  இவளை  வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று.

அவர் அப்பவே  சொல்லிட்டார். மயக்கம் தெளிஞ்ச  கொஞ்சம் நேரம்  கழிச்சு கூட்டிட்டு  போங்கன்னு.

ஸ்ரீ ஜெயம்  பணம்  கட்டிவிட்டு வர்ரேன்  என்று  முன்னாடி செல்ல.

அன்பு  திவ்யாவிடம்  போலாமா என்று கேட்டு  மெல்ல  அழைத்து வந்தான்.

 ஸ்ரீ ஜெயம்  கார்  எடுத்து வந்தார்.

நளினி அவரின்  கணவருடன்  டூவிலரில் செல்ல. இவர்களை  காரில் வரும் மாறு சொல்லிவிட்டு சென்றார்.

அன்பு மெல்ல  காரில் ஏறு என்க.

மச்சான் என்றவள்  தலை சுத்துது, வாமிட் வருது  என்றவள். வாமிட் பண்ண   இடம் தேடி போய் வாமிட் எடுக்க.

அன்பு அவளின் பின்னாடியே போயி தண்ணீர் கொடுக்க. அதை வாங்கி   குடித்து கொஞ்சம்  வாய்யை  சுத்தம் பண்ணிவிட்டு  முடியல மச்சான் என்றாள்.

சரியாகிடும் வா  இரண்டு நாளைக்கு அப்படி தான் இருக்கும். நல்லா ரெஸ்ட் எடு  என்று அவளை தோள் சாய்ந்து அழைத்து வந்து காரில் ஏற்றி போலாம் மாமா என்றான்.

  ஹாஸ்பெட்டல்  ஏதுத்த  கடை வாசலில்   நின்று இருந்தான் ஆண்டவர் கனி.

இப்போது தான் அவர்கள் வீட்டு ஆட்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு. திவ்யாவை பார்த்த பின் தான்  போக வேண்டும் என்று காத்திருந்தான். அன்பு அணைத்தவாறே திவ்யாவை காரில் ஏற்றியதை பார்த்தவன். தன் பொருள்  இன்னொருவன்  கையில்  இருப்பதை  போல் உணர்ந்தவன். அது  தனக்கு வேண்டும்  என்று  முடிவுக்கு வந்தான்.

 மறுநாள் பொழுது  அனைவரும்  நன்றாக விடிந்தது.

 இரண்டு நாட்கள்  திவ்யாவை அன்பு   வெளியே எங்கும் போக விட வில்லை  வீட்டில்  ரெஸ்ட் எடுக்க சொல்லியவன்.  திருவிழாவிற்கும் அழைத்து  சொல்ல வில்லை.

இன்று கோவிலில்  விளக்கு  பூஜை  சாயங்காலம் நடக்கும். அதற்கு போகலாம் என்று நளினியை திவ்யா அழைக்க.

 அவரோ  வேண்டாம்டா  அன்பு திட்டுவான். உன்னை  வெளியே எங்கேயும்  கூட்டிட்டு போக கூடாதுன்னு சொல்லி இருக்கான்.

அத்தை  வாங்க அத்தை  நான் விளக்கு பூஜையை  பார்த்தது

இல்லை, பார்க்கணும், கலந்து  கொள்ளனும் என்று ஆசையாக  கேட்டாள்.

அன்பு திட்டுவான் டா.

அன்புவின்  தந்தை தமிழ் அரசு மருமக ஆசை படுதல கூட்டிட்டு போ நளினி என்றார்.

நீங்க சும்மா இருக்க, அவன்  சிவகாசிக்கு  நாளைக்கு நடக்குற  வான வெடிக்கைக்கு  வேட்டு  வாங்க போயிறுக்கான், போகும் போது இவளை  வெளிய அழைச்சிட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டு தான் போனான்.

 அவன் அப்படி தான் சொல்லுவான்   மருமக ஆசை படுதுல கூட்டிட்டு போ. அன்பு வந்தா நான்  பேசிக்கிறேன் என்றவர் மருமகளை நளினியோடு  கிளம்ப சொல்லி விட்டு சென்றார்.

திவ்யாவும், நளினியும்  விளக்கு  பூஜைக்காக  குத்து  விளக்கை எடுத்து  கொண்டு  அம்மன்  கோவிலுக்கு  சென்றனர்.

விளக்கு பூஜை முடிந்தவுடன் திவ்யாவுக்கு  நடந்த  விசயத்தை  கேள்வி பட்ட அன்பு, ஆண்டவர் கனி மீது  கடும் கோபத்தில் வந்தான்  கோவிலுக்கு……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!