Q2. சுடர்கின்ற காதல் தீயே
அழுது கொண்டே வந்தவள் அமர்ந்தது என்னவோ கோயில். இப்படிப்பட்ட துரோகத்தையும், ஏமாற்றத்தையும் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
ஒரே நாளில் தன் வாழ்க்கை இப்படி மாறிவிடும் என்று அவளும் நினைக்கவில்லை.
திருமணம் ஆனதிலிருந்து ஒரு மாதம் கழித்து அவனது நடவடிக்கைகள் மாறத்தான் செய்தது. இருந்தும் விடாமல் அவளை நாடிக் கொண்டுதான் இருப்பான். அதனால் பெரிதாக இவள் கண்டு கொள்ளவில்லை.
Advertisement
அவள் செய்யும் சாப்பாட்டை சாப்பிடுவது, கேள்வி கேட்டால் பதில் சொல்வது, அவள் ஏதாவது செய்தால் திட்டிக் கொள்வது, அவளை கேவலமாக உடலை வைத்து திட்டுவது, இவள் கோபத்தில் நைட்டு வர வேண்டாம் என்று சொன்னால் கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தி அவளுடன் கலந்து விடுவான்.
பாதுகாப்பு உறை பயன்படுத்தியதே அவருக்கு இப்பொழுது தான் தெரியும்.
Advertisement
Advertisement
தூணில் அமர்ந்திருக்க கண்களில் கண்ணீர். அவனோடு வாழ்ந்த காலங்கள் அனைத்தும், நினைவுகளாய் வர சந்தோஷை வெறுத்தாள். ஒவ்வொரு நாள் தன்னுடன் இருக்கும் பொழுது, காதலே இல்லாமல் வெறும் சுகத்திற்காக இருந்தான் என்று நினைக்கும் பொழுது, அவள் உடலை நினைத்து அவளுக்கே அருவருப்பாக இருந்தது.
நல்ல வேளை படிப்பு முடித்து இருந்தாள். இவனை நம்பி படிப்பு முடிக்காமல் இருந்திருந்தால் வாழ்க்கை என்னாவது என்று யோசிக்க இப்பொழுது பயமாக இருந்தது.
Advertisement
படிப்பு முடித்ததும் வேலைக்கு செல்கிறேன் என்று சொன்னவளை வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு அவன் வேலைக்கு செல்வதாக கூறியும் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து கஷ்டப்படுத்தவும் செய்வான். அவனுக்கு ஏதோ கஷ்டம் போல என்று இவளும் அமைதியாக கழித்துக் கொண்டிருக்க, அன்று பார்ட்டியில் நடந்ததை நினைத்து பார்த்தாள்.
“எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போ” என்று இவள் நச்சரித்ததால், அவனுடைய பிரண்டின் கல்யாண கெட் டு கெதருக்கு கூட்டி சென்றான்.
இவன் கல்லூரி முடிக்கும் பொழுதே அவங்க அப்பா இவனுக்கு பெண் பார்த்து விட்டார். அதன் பிறகு அவர்கள் வெளியே அங்கும் இங்கும் சுத்தி கொண்டுதான் இருப்பர். இவளிடம் வேலைக்கு போகிறேன் என்று கூறி , அவளுடன் தான் சுத்துவான். அவளுடன் இருந்த பழக்கம் பெட்டு வரையும் சென்றது. அதே சமயம் இவளையும் விட முடியவில்லை.
சந்தேகப்பட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்வதால், வேறு வழி இல்லாமல் பார்ட்டி கூடிட்டு வந்தான் ஒரு சுடிதார் அணிவித்து.
வேற எங்கேயாவது கூட்டி செல்வான் என்று பார்த்தால், அது நவ நாகரீக ஹோட்டல் ஆக இருக்க இவளுக்கு பயமாக இருந்தது.
அவனை விடாமல் அவனுடனே இருந்தால் பயந்து கொண்டு, சில சமயம் அவனே அறியாமல் இவளை நன்றாகத்தான் பார்த்துக் கொள்வான். அன்றும் கூடயே வைத்து நன்றாக பார்த்துக் கொண்டான்.
இவனைப் போலவே இவனது நண்பர்களும் பொறுக்கிகள். இவளை பார்த்ததும் பிடித்து போக சந்தோஷ பற்றி தான் தெரியுமே, எதற்காக இவளை கல்யாணம் பண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று, அதனால் நம்மளும் தொட்டால் தப்பில்லை கண்டு கொள்ள மாட்டான் என்று நினைத்து விட்டனர்.
அவர்களுக்கே தெரியாமல் குடிக்கும் ஜூஸில், ஒருவித மருந்தை கலந்து விட, அவளுக்கு கண்கள் சுருக்கி கொண்டு தூக்கமே வந்துவிட்டது.
“சந்தோஷ், எனக்கு என்னமோ பண்ணுது என்ன விட்டு போகாத ” என்று அவன் கைகளை இறுக்கிப்பிடித்து புலம்பிக் கொண்டிருக்க,
” இவளுக்கு என்ன ஆச்சு என்னத்த குடிச்சு தொலச்சா, இப்படி பொலம்பு கிட்டு இருக்கா? இவளை எல்லாம் வீட்டிலேயே விட்டு இருக்கனும் இங்க கூட்டிட்டு வந்தது என் தப்பு தான். சரியான இம்சை ” என்று கூறிவிட்டு அவளை தூக்கும் பொழுது அவனது ஆளிடம் இருந்து கால் வந்தது.
” டார்லிங் எங்க இருக்க? நான் இந்த ஹோட்டல் வந்து இருக்கேன். உடனே பாக்கணும். ஐ நீட் யூ ப்ளீஸ் டார்லிங்” என்று கொஞ்சலாக, கெஞ்சலாக அவள் கொஞ்ச, அவனுக்கு இப்பொழுது அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
இந்த பார்ட்டிக்கு அவளைத்தான் கூப்பிட்டான். அவள் வேலை இருப்பதாக சொல்லவே இவளை அழைத்து வந்தான். இவர்களுடைய நண்பர் வட்டாரம் அனைவருக்கும் இவர்களது கல்யாணத்தை பற்றி தெரியும். யாருமே அவளிடம் சொல்லவும் இல்லை. மொத்தமாக துரோகம் பண்ணி இருந்தனர்.
” ஐயோ! என் டார்லிங் வரேன்னு சொல்லி இருந்தா இவள கூட்டிக்கிட்டு வந்திருக்க மாட்டேன். இப்ப என்ன பண்ணலாம். இவ வேற மட்டை ஆகிட்டா இவள வீட்டுக்கு கூட்டிட்டு போயி விட்டு வந்தாலும் லேட்டாயிடும், என்ன பண்ணலாம்? ”
என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவனது பெண் தோழி வந்து, என்ன விஷயம் என்று கேட்க,
அனைத்தையும் சொல்லிவிட, “இவளை நான் ஒரு ரூமில் பத்திரமாக படுக்க வைக்கிறேன் நீ காலையில் வந்து இவளை கூட்டி செல்” என்று சொல்ல,
அவன் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து, ” என்னடா இவள தனியா விட்டு போக பயமா இருக்கா, அந்த அளவுக்கு இவளை லவ் பண்றியா என்ன? ”
அவனோ மனதில் கூட ஒரு நிமிடம் அப்படித்தான் யோசித்தான். நான் எதற்காக இவ்வளவு யோசிக்கிறேன் என்று அப்பொழுதும் தோன்றியது. இருந்தும் அதை வெளிக்காட்டாமல், “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. திடீர்னு கண்ணு முழிச்சா என்ன காணும்னு கேப்பா? அது இல்லாம இவளுக்கு ஜூஸ் மட்டும் தான் கொடுத்தேன். இவ எதுக்கு இப்படி மயங்கி இருக்கான்னு எனக்கு தெரியல” அதான் யோசிச்சிட்டு இருந்தேன் .
“ஜூஸ் நெனச்சு ட்ரிங்க்ஸ் எதையாவது குடிச்சிருப்பா? இதுக்கெல்லாம் ரொம்ப பீல் பண்ணாத பத்திரமா அவள அந்த ரூம்ல படுக்க வச்சறேன் காலைல வந்து கூட்டிட்டு போ. என்னவோ ஒரிஜினல் பொண்டாட்டி மாதிரி ரொம்ப தாண்டா அக்கறைப்படுற ” என்று சிரித்துக் கொண்டு தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த அறைக்கு செல்ல,
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏன் இப்படி யோசிக்கிறான் என்று அவனுக்கும் புரியவில்லை. ஏதோ தன்னை விட்டுப் போவது போல் அவனுக்கு தோன்றியது. அடுத்த நிமிடம் அவனது காதலி போன் பண்ணவும், அனைத்தையும் மறந்து விட்டு ஓடி விட்டான்.
அவன் சென்ற சிறிது நேரத்தில், நான்கு பேர் அந்த அறைக்குள் செல்ல, ஏற்கனவே போதை மருந்து அருந்திய ஒருவன் தள்ளாடிக் கொண்டு வந்து அறைக்கு வர, அப்பொழுதுதான் ஒரு பெண்ணை நான்கு பேர் சுத்து போட்டு இருப்பது தெரிந்தது. அந்த போதையிலும் தெளிவாக இருந்தவன் நால்வரை அடித்து விரட்ட, அனைவரும் பயந்து ஓடிவிட்டன. இவன் கதவை திறக்கலாம் என்று செல்லும் பொழுது அது ஆட்டோமேட்டிக் அது லாக் ஆகிவிட்டது.
அவனுக்கும் உடல் சூடாகி விட என்ன செய்வது என்று புரியாமல் திரும்பிப் பார்க்க அந்த பெண் அறையும் குறையுமாக படுத்திருந்தாள். தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவள் மீது சரிய, அவளுடைய தாலி அவனை குத்தியது. அந்த போதையிலும் பார்க்க வேறு ஒருவன் மனைவி என்று தெரிந்த பிறகு, அப்படியே குளியல் அறைக்குள் செல்ல, தண்ணீரில் அரை மணி நேரம் நின்றும் அவரது உடல் கேட்கவில்லை.
இதற்கு மேல் முடியாது என்று, அந்த பெண்ணின் தாலியை கழட்டி வைத்துவிட்டு, அவளுடன் ஒன்றாக கலந்து விட்டான். மொத்தமாக மூன்று நான்கு முறை என்று போய்க்கொண்டிருக்க அவனாலும் கண்ட்ரோல் பண்ண முடியாமல், தனது உயிரை அவளிடம் கொடுத்து விட்டு, அப்படியே பக்கத்தில் சரிந்து படுத்து உறங்கிவிட,
எப்பொழுதும் காலை ஐந்து மணிக்கு முழிப்பவன், கண்களை கசக்கி கொண்டு விழித்து பார்க்க, ஏதோ மிகவும் பஞ்சு போன்ற இருந்த பொருளின் மீது படுத்து இருப்பது போல் தோன்ற, வேகமாக கண்விழித்து பார்க்க ஆடை இல்லாமல் ஒரு பெண்ணை பார்த்ததும் அதிர்ந்து போனான். தன்னையும் பார்க்க அவன் உடலிலும் ஆடை இல்லை என்ன நடந்தது என்று அவனுக்கும் புரிந்தது.
தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட, போன் அடிக்க அந்த போன் அருகே தாலி இருந்தது. அப்பொழுதுதான் வேறு ஒருவனின் மனைவி என்று புரிய அவனுக்கு குற்ற உணர்ச்சி மிகவும் அதிகமானது.
தன்னால் முடியவே முடியாது என்று நினைத்திருந்த ஒரு செயல், இப்பொழுது முழுவதுமாக அவளை கையாண்டதிலேயே தன்னால் முடியும் என்று அவனுக்கு தோன்றியது. இது எப்படி சாத்தியம் என்று தான் அவனும் நினைத்திருந்தான். இதை நினைத்து சந்தோஷப்படுவதா, மாற்றான் தோட்டத்து மல்லிகையை அடைந்து விட்டதை நினைத்து வருத்தப்படுவதா என்று அவனுக்கு தெரியவில்லை.
வேகமாக ஆடைகளை மாற்றிக்கொண்டு, அந்த பெண்ணிற்கு போர்வையை போற்றிக் கொண்டு, வெளியே செல்ல கதவு லாக் ஆக இருக்க, ஒரு ஆளை வர சொல்லி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.
காலையில் அந்த தோழி வந்து பார்க்க அவளை இந்த நிலையில் பார்த்து அதிர்ந்து தான் போனாள். “அய்யய்யோ இந்த குடிகார நாய்ங்க அவள என்னமோ பண்ணிட்டாங்க போலயே, இப்ப என்ன பண்றது?” என்று அவளும் பயத்தில் நாக்கை கடிக்க, ஒரு ஐடியா தோன்றியது. அதன்படி உடனே சந்தோஷுக்கு கால் செய்து, ” மச்சி உன் வைஃப் வாந்தி எடுத்துட்டா அதனால நைட்டு டிரஸ் எல்லாம் கழட்டி போட்டு தான் படுக்க வச்சிருக்கேன். வரப்ப அவளுக்கு தகுந்த மாதிரி ஒரு டிரஸ் வாங்கிட்டு வா அந்த குண்டுக்கு என்னிடம் டிரஸ் இல்ல ”
” சரி சரி இந்த தொல்லை வேறயா? எனக்கு எங்க இதே பிரச்சனை தான் இவ சைஸ்க்கு டிரஸ் கிடைக்கறது இல்ல. கண்ணு முழிச்சா அதுக்கு வேற கத்துவா? ” என்று வெளிப்படையாக திட்டி விட்டு உடை வாங்கிக் கொண்டு வர தன் தோழி அங்கு நிற்பதால் உண்மை என்று நம்பி உள்ளே செல்ல, அவளும் அப்பொழுதுதான் கண்விழித்தாள்.
ஆடைகள் இல்லாமல் இருப்பதை பார்த்து பயந்து போனாலும், கதவை திறந்து கொண்டு, கையில் ஆடையோடு வரும் சந்தோஷ பார்த்து நிம்மதியானது. உடம்பு வலியில் அவளுக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. இதுனால் தான் சந்தோஷ் ஆடை வாங்கி வரான் என்று புரிந்து கொண்டு, போர்வையை போற்றி விட்டு குளித்து முடித்துவிட்டு ஆடை மாற்றி வந்தாள்.
அதன் பின் இருவரும் எப்பொழுதும் போல் பேசி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
அந்த இரவு அவன் அழைக்க முடியாது என்று சொல்லிவிட, அவனும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டான். அவளுக்கு உடல் வலித்ததால் சொல்லிவிட்டாள்.
அடுத்த நாளிலிருந்து அவன் மாற ஆரம்பித்து விட்டான் காரணம் அவனுக்கு வந்த போட்டோஸ். அதில் நான்கு பேர் இருக்க, இவளை சுற்றி அவர்கள் ஆடை அவிழ்ப்பது அதிலிருந்து வீடியோவாக.
அதைப் பார்த்து உண்மையாகவே அவனுக்கு கோபமாகவும், வருத்தமாகவும் இருந்தது. அங்கு கூட்டிக்கொண்டு சென்று இருக்கக் கூடாதோ என்று காலம் கடந்து உணர்ந்தான். அவளிடமும் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. சொன்னால் கண்டிப்பாக வேற ஏதாவது முடிவு எடுத்து விட்டால் இவனுக்கு வருத்தம் என்று புரிந்தது. அதன் பின் அவளை சீண்டவே இல்லை.
அவளே அழைத்தாலும் உடல்நிலை சரியில்லை, ஏதாவது நம்பும்படி காரணம் சொல்லி விடுவான். அவளுக்கும் இவன் இந்த விஷயத்தில் இப்படி இருப்பது புதிதாக தெரிந்தது.
அடுத்த 20 நாளில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரிய, அவனுக்கு அதிர்ச்சி காரணம், கணக்கு போட, பாட்டி நாள் என்று புரிந்தது. அவன் குழந்தையாக இருந்தால் ஆவது மனது மாறி இருக்குமோ என்னமோ. வேறு எவனோ குழந்தை என்று மனதில் பதிந்து விட்டது.
அதன் பின் மொத்தமாக விலகி விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக விலகலாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு வராமல் இருப்பது, செலவுக்கு காசு கொடுக்காமல் இருப்பது, அவளை வார்த்தைகளால் காயப்படுத்துவது என்று சிறுக சிறுக அனைத்தும் செய்ய, ஒரு நாள் பெரிய சண்டையில் இரண்டு நாட்கள் வீட்டுக்கு வரவில்லை.
அப்பொழுதுதான் அவளது காதலி, “இதனால் வரைக்கும் இருந்தது போதும், இனிமேல் அவ கூட இருந்தீங்கன்னா, போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அந்த குழந்தைக்கு உங்களை தான் அப்பான்னு சொல்லி அவ கூட வாழ வச்சிடுவா. இது உங்களுக்கு தேவையா ஒழுங்கா இப்பவே எல்லா உண்மையை சொல்லி அவளை விட்டு பிரிஞ்சிடுங்க. இல்ல உங்களுக்கு தான் கஷ்டம்” என்று சொல்ல அவனுக்கும் புரிந்து அன்று எல்லாத்தையும் சொல்லி அவளை விரட்டி விட்டான்.
நடந்த அனைத்தையும் நினைக்கும் பொழுது அவளுக்கு ஒரு விரக்தி புன்னகை.
♥️
