Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Suyambu

Suyambu 3

சுயம்பு-3 

இனி அவர்களின் உரையாடல் தமிழில்: 

 

சீஃப் டாக்டர் மல்ஹோத்ரா சற்று உரத்த குரலில் “நான் பேசறது உங்களுக்கு கேக்குதாஇங்க மழை தொடர்ந்து நிக்காம பெய்றதால அடிக்கடி பேசும் போதே லைன் கட் ஆகிடும்..” 



Advertisement

உத்ரா இந்த ஹாஸ்பிடல்ல தான் வேலை செய்யறாங்க…” 

அவங்களும் டவுட் சவுத் ஆப் இண்டியாலேந்து தான் வந்திருக்காங்க..ரொம்ப நல்ல பொண்ணு…” 

 

Advertisement

அவங்க ஆர்த்தோ கோல்ட் மெடலிஸ்ட்..ஆனால் அந்த பந்த்வே கிடையாது..ரொம்ப எளிமையான ஆளு.. தன்மையானவங்கரொம்ப நிதானமானவங்க 

Advertisement

 

ஒவ்வொரு பேஷண்ட்டையும் பதறாமபயமுறுத்தாம பொறுமையா பாப்பாங்க..இங்க வர்ற பேஷண்ட்க்கு எல்லாருக்குமே உத்ராவை அவ்ளோ பிடிக்கும் ..” 

 

Advertisement

யாருக்கு எந்த ஹெல்ப்னு சொன்னாலும் முதல்ல உத்ரா தான் போய் அவங்களுக்காக நிப்பாங்க..சொல்லாமலே நிறைய பேஷண்ட்ஸ்க்கு பண உதவி பண்ணுவாங்க…” 

 

பேஷண்ட்ஸ் மட்டும் இல்லை இந்த மொத்த ஹாஸ்பிடலுக்குமே உத்ராவை ரொம்ப பிடிக்கும்..” என உத்ரா புகழ் பாட ஆரம்பித்தார். 

 

டாக்டர் எனக்கு ஒரு சந்தேகம்.. எத்தனை வருஷமா உத்ரா அங்க வேலை பண்றானு சொல்ல முடியுமா” என கவுதம் நிதானமாக கேட்டான். 

 

மூணு வருஷமா இங்க தான் வேலை செய்யறாங்க..” என்ற மல்ஹோத்ராவின் பதிலை கேட்டு மேலும் தனக்கு வேண்டிய சில விவரங்களை கேட்டு விட்டு “தேங்க்யூ டாக்டர்..எனக்கு தெளிவாக்கினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..சீக்கிரமே உங்களை வந்து சந்திக்கிறோம் ..”  

 

நாங்க இன்னும் சில மணி நேரத்துல அங்க வந்துடுவோம்நாங்க வர்றதை உத்ரா கிட்ட சொல்லிடாதீங்க டாக்டர்..” 

 

நாங்க அவளுக்கு ரொம்ப க்ளோஸ்..சொல்ல போனா அவ என்னோட தங்கச்சி..” 

 

ப்ளீஸ் இதை சீக்ரட்டா வெச்சுக்கோங்கஇது உத்ராவுக்கு ரொம்ப அதிர்ச்சியான ஆச்சர்யமா இருக்கும்வில் சீ யு தேர்..பை டாக்டர்” என்றான் 

 

அவரும் பதிலுக்கு “சேம் ஹியர்..ஈகர்லி லுக்கிங் பார்வேர்ட் ட்டூ மீட் யூ கைஸ்..ஷுர்..வில் மெயின்டையின் தி சீக்ரட்..நோ ஒரிஸ்..பை” என சொல்லி சிரித்தபடி போனை வைத்தார். 

 

பக்கத்தில் குழப்பமாக பார்த்தபடி இருந்த ஸ்வேதாவை பார்த்த கவுதம் “டாக்டர் மல்ஹோத்ரா கிட்ட தான் பேசினேன்..நமக்கு வந்த தகவல் உண்மை..மனுக்கு அடிபட்டிருகாகிறது உண்மை.” 

 

ஆனா அவருக்கு யார் நம்மள பத்தி  சொல்லி இருப்பாங்கனு உனக்கு தெரியுமாயோசி..” 

 

யார் கவுதம்..என்னால கெஸ் கூட பண்ண முடியல 

 

தி க்ரேட் உத்ரா” என நக்கலாக சொன்னதை கேட்டு ஸ்வேதா அதிர்ந்து போய் அவனை பார்த்தாள். 

 

என்னதுஉத்ராவாஇத்தனை வருஷமா எங்கே இருந்தா.. எப்படி அங்க போனா கவுதம்..யார் மூலமா போய் இருப்பா..” 

 

நமக்கு தெரிஞ்ச எடத்துல எல்லாம் தேடினோமே 

அவளை பத்தி ஒரு சின்ன தகவல் கூட கிடைக்கலையே..அவ எப்படி அங்க போயிருப்பா” என வேக வேகமாக கேட்டு பதற ஆரம்பித்தாள். 

 

நிதானம்… நிதானமா..கேளு.. 

ஸ்வே..வேகன்ஸி பாத்து அப்ளை பண்ணி போயிருக்கா..யாரோ 

அவளோட சீனியர் தான் சொன்னாங்களாம்..” 

 

இவ்ளோ பெஸ்ட் டாக்டரை அங்க அனுப்பினத்துக்கு அந்த சீனியர்க்கு தேங்க்ஸ்னு வேற மல்ஹோத்ரா சொன்னார்..” 

 

யார் அந்த சீனியர்..நமக்கு தெரியாம புதுசா யார் அவ வாழ்க்கையில 

 

நாம எவ்ளோ வேண்டாதவங்களா அவளுக்கு இருந்திருந்தா சொல்லாம போயிருப்பாயார் சொல்லி அவ போனானு கூட நமக்கு தெரியல பாரு..” என வருத்தமாக சொன்னான்.  

 

உடனே கவுதம் ப்ளைட் டிக்கெட் பார்க்க..மோசமான வானிலையால் ஷில்லாங்க் போகும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு தெரிய வந்தது. 

 

அடுத்தது என்ன செய்வது என சில நிமிடங்கள் யோசித்தவன் உடனே அவர்கள் இருவருக்கும் கொல்கத்தாவுக்கு போக டிக்கெட் புக் செய்து விட்டு நேரத்தை பார்க்க இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பினால் தான் ப்ளைட் பிடிக்க சரியாக இருக்கும் என உணர்ந்து ஸ்வேதாவை பேக் செய்து ரெடியாக சொல்லி விட்டு போனான். 

 

தன் அம்மா ப்ரபாவிடம் போய்  

மாமனுக்கு ஏதோ சின்ன ஆக்ஸிடெண்ட்டாம்..ஷில்லாங்க் இருக்கானாம்..அதனால நானும் ஸ்வேதாவும் போய் பாத்து அவனை இங்க அழைச்சிட்டு வரோம்..நாங்க வரவரைக்கும் குழந்தைகளை பாத்துக்கோ மா..” என சொன்னதும்.. 

 

என்னடா..சொல்றதிடீர்னு என்னாச்சு..அங்க ஏன் அவன் போனான்உனக்கு எப்டி தெரியும்..யார் சொன்னாங்க..”என பதறிபடி விசாரிக்க.. 

 

அவரை சமாதானம் செய்தவன் “அந்த ஹாஸ்பிடல் டாக்டர் தான் போன் பண்ணார்..அவன் ஏன் போனான்னு தெரியலநாங்க போய் பாத்தா தான் தெரியும் மா..” 

 

உன்னால தனியா இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்கணும்னா கஷ்டம்.. 

ரெண்டு பேரும் பண்ற வால்த்தனத்தை சமாளிக்க முடியாது..” 

 

ஸ்வேதா கிட்ட சொல்லி அத்தை வர சொல்றேன்..நாங்க வர வரைக்கும் அவங்களும் உன் கூட இருக்கட்டும்.. ” என சொல்லி ஸ்வேதாவை அழைத்து அவளுடைய அம்மாவை வர சொல்லி போன் பண்ண சொன்னான்.  

 

அடுத்த அரை மணி நேரத்தில் இருவருமாக கிளம்பி ஏர்போர்ட் போனதும்..கொல்கத்தாவில் இருக்கும் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்தவன்.. 

அவரிடம் நிலைமையை சொல்லி உதவி கேட்க..அவரும் உடனே தன்னுடைய பெரிய காரை டிரைவரோடு அவர்களோடு அனுப்பி வைப்பதாக அவனுக்கு உறுதியான பதில் சொன்னார்.  

 

ப்ளைட் கிளம்பியதும் கவுதமின் அருகில் உட்கார்ந்த ஸ்வேதா “நாம பாக்க சின்ன பொண்ணா இருந்த மான்குட்டி மாதிரி இருந்த உத்ராஎன்ன ஆச்சு யாருக்கும் தெரியாம போய் தனியா வாழறா..அந்த அளவுக்கு பெரிய மனுஷியா ஆகிட்டால்ல.” என வருத்தப்பட்டாள்.. 

 

ஸ்வேவருத்தப்படாதஅவ கிட்ட பேசினா தான்.. தெரியும்ஏற்கனவே ஒரு வாரமா நீ மூணு டெலிவரிஒபி பேஷண்ட்ஸ் பாக்கறதுனு ரொம்ப பிசியா இருந்த…” 

 

அங்க போய் ரெஸ்ட் எடுக்க முடியுமானு தெரியாதுஸோ..இந்த ஜர்னி டைம்ல ரிலாக்ஸ் பண்ணிட்டு அமைதியா தூங்கு” என்றதும்.. 

இல்லகவுதம்.. எனக்கு எவ்ளோ கோவம் வருது தெரியுமா..எதுவும் நம்ம கிட்ட எல்லாம் சொல்லாத அளவுக்கு அப்டி என்ன நாம அவளுக்கு பண்ணோம்என மனம் தாளாமல் தொடர்ந்து பேசியபடி இருந்தவளை பார்த்தவன் … 

ஸ்வே..நான் அடுத்த தடவை சொல்ல மாட்டேன்.. ஏற்கனவே உன்னை தூங்க சொல்லிட்டேன்னு நெனக்கறேன்..” என கண்டிப்புடன் சொன்னதை கேட்ட ஸ்வேதா..அடுத்தது அவன் சொன்னதை கேட்காது போனால் வாரக்கணக்கில் பேசாமல் இருப்பான் என்பதை அனுபவத்தில் உணர்ந்து இருந்ததால் அமைதியாக தூங்க ஆரம்பித்தாள்.  

 

அவள் தூங்க முயல்வதை பார்த்தவன் தானும் கண்களை மூடி தன்னை சில நிமிடங்கள் நிதானித்து கொண்டவன் பின்னர் அவனும் தூங்கி போனான்.  

கொல்கத்தாவில் ப்ளைட் தரையிறங்கும் நேரம் ஏர்ஹோஸ்டஸ் எழுப்பி எழுந்த ஸ்வேதா மெல்ல கவுதமையை தட்டி எழுப்பி சில நிமிடங்கள் தங்களை நிதானித்து கொண்டு..ப்ளைட் தரையிறங்கியதும் மெதுவாக இறங்கினார்கள்.  

 

அப்போதே மணி இரவு ஒன்பதை நெருங்கவே..ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் அங்கு ஏற்கனவே அவனுடைய நண்பர் தன்னுடைய காரை அனுப்பியதால் காத்திருந்த  காரில் ஏறி இருவருமாக அவருடைய வீட்டுக்கு சென்றனர்.  

 

அங்கு சென்றவர்களை வாசலிலேயே தன் குடும்பத்தோடு வந்து வரவேற்ற கவுதமின் நண்பர் அவர்களை உள்ளே அழைத்து சென்று தன் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.  

அவர்கள் தங்களை ரெப்ரெஷ் செய்து வந்ததும்தன் தம்பிக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதால் உடனே அவசரமா ஷில்லாங்க் கிளம்ப வேண்டும் என சொன்ன ஸ்வேதாவிடம்…  

 

மேம் உங்களுக்கு இங்கிருக்கும் நிலைமை தெரியாது..சரியான பாதுகாப்பு இல்லாமல் இரவு நேரத்தில் ட்ராவல் செய்வது வேண்டாம்..” 

அதுவும் வேறு மாநிலம் வேறு போக வேண்டும்நாளை அதிகாலை கிளம்புங்க” என  நண்பர் சொல்லவே அவர் சொன்னதை புரிந்து அதற்கு சம்மதித்தாள் ஸ்வேதா.  

இரவு டின்னரை விரைவாக முடித்த ஸ்வேதாவும் கவுதமும் மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்பதால் நண்பர் குடும்பத்தினரிடம் அப்போதே விடை பெற்று தூங்க சென்றார்கள்.  

 

மறுநாள் அதிகாலை அவர்கள் ரெடியாகி வெளியே வந்ததும் அவ 

நண்பர் குடும்பமே எழுந்திருந்ததுஅவர்கள் அனைவரும் வாசலில் வந்து வழியனுப்ப வந்தனர். 

 

இதை சற்றும் எதிர்பாராத கவுதமை தனியாக அழைத்த நண்பர் “நீங்க கேட்ட மாதிரி ஹிந்திகாசி ரெண்டு மொழியுமே முகர்ஜிக்கு தெரியும்.. அங்க லோக்கல்ல பேசறதுக்கு அவரை விட்டுடுங்க..அவர் நல்லா மேனேஜ் பண்ணுவார்…” 

நல்லபடியா போயிட்டு வாங்க..உங்க ப்ரதர்இன்லா எதுவும் பிரச்சினை இல்லாமல் நல்லபடியா இருப்பார்.. 

கவலைப்படாதீங்க….ஆல்  பெஸ்ட்..” என நல்ல வார்த்தைகளாக சொல்லி அவனை உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வைத்தார். 

அவனும் மிக சந்தோஷமாக அவரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்து காரில் ஏறி கையசைக்க கார் கிளம்பியது. (தொடரும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!