Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 15

வரம் நீயே 15 வைசாலி அமைதியாக நின்றிருந்தாள். அரசன் சித்ராவை தொடர்பு கொண்டு, தன்னிடம் பேசுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அரசன் பேசும் வரை அவளும் மௌனமாக நிற்க, “கால் அட்டன் பண்ணு லாலி” என்றான். அதற்கு வைசாலி பதில் பேசும் முன்பே அழைப்பு துண்டிக்கப்பட, கைபேசியை வெறித்துப் பார்த்தாள். “அதிகாரம்” என்று முறைத்தவள், அதை அங்கேயே வைத்து விட்டு அறை பகக்ம் திரும்பினாள். அரசனின் அழைப்பை பார்த்து விட்டு, “எல்லாம் திமிர்..” என்று பல்லைக் கடித்தபடி […]

Readmore

வரம் நீயே 14

வரம் நீயே 14 “கொடுத்த மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்களா?” என்று அந்த சிறுமியிடம் வைசாலி கேட்க, அவள் வேகமாக தலையாட்டினாள். “குட் கேர்ள்” என்று கன்னத்தில் தட்டியவள், “இத கண்டினியூ பண்ணுங்க. சீக்கிரம் சரியாகிடும். அதே மருந்த எழுதி தர்ரேன் வாங்கிக்கோங்க” என்று எழுதிக் கொடுத்தாள். அவர்கள் நன்றி சொல்லி கிளம்ப, அடுத்த குடும்பம் வந்தது. அந்த சிறுவனை அமர வைத்து என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்கு மருந்து எழுதும் போது, கைபேசி மௌனமாக அதிர ஆரம்பித்தது. […]

Readmore

வரம் நீயே 13

வரம் நீயே 13 வைசாலியோடு தோப்பை பார்க்கக் கிளம்பி இருந்தான் அரசேந்திரன். “இந்த பக்கம் நாங்க வரலையே?” என்று வைசாலி சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். தென்னந்தோப்பிற்குள் நுழைந்ததுமே அன்னாந்து பார்த்தாள். “வெயிலே உள்ள வரல.. எவ்வளவு இருட்டா இருக்கு பகல்லயே..?” “மரம் நெருக்கமா இருக்குல” “ம்ம். சுத்தமா வெயிலே இல்ல.. கூலா இருக்கு” என்று அன்னாந்து பார்த்துக் கொண்டே நடந்து, ஒரு கல்லை மிதித்து நின்று விட்டாள். “ஸ்ஸ்..” என்று காலை உதற, “என்னாச்சு?” […]

Readmore

வரம் நீயே 12

வரம் நீயே 12 அரசேந்திரனின் கார் வந்து வாசலில் நிற்க, பக்கத்து வீட்டுப் பெண்மனி எட்டிப் பார்த்தார். “என்ன அரசு நல்லா இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வர, “நல்லா இருக்கேன் சித்தி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றபடி காரை விட்டு இறங்கினான். “நான் இருக்கேன். உன்னை தான் ஊருக்குள்ள பார்க்கவே முடியல. வர்ரனு அம்மா சொல்லவே இல்லையே?” “காலையில தான் கிளம்புனேன். அதான் சொல்லல” என்றவன் கதவை தட்ட, “நான் அப்புறமா வாரேன். உள்ள […]

Readmore

வரம் நீயே 11

வரம் நீயே 11 மாதவனை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவன் பேசியதை ஒப்புதல் வாக்குமூலமாக வாங்கிக் கொண்டனர். மேலும் பதினைந்து நாட்கள் அவனை சிறையில் வைத்து விட்டு, பிறகு மீண்டும் விசாரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. குடும்பத்தினர் யாரும் மாதவனை பார்க்க அரசேந்திரன் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் வைத்து மிருதுளாவை மட்டும் மாதவனிடம் அழைத்துச் சென்றான் அரசன். கையில் விலங்கோடு சிறை செல்வதற்கு தயாராக இருந்த வாகனத்தில் மாதவன் அமர்ந்து இருந்தான். “அண்ணா..” என்றவளின் குரலில் பட்டென நிமிர்ந்தான். கண்கலங்கி மிருதுளா […]

Readmore

வரம் நீயே 10

வரம் நீயே 10 பரபரப்பாக அந்த காவல் நிலையம் இயங்க ஆரம்பித்தது. ஆளாளுக்கு பேசியபடி தங்களது வேலையில் ஈடு பட்டிருக்க, எந்த சத்தமும் பாதிக்காமல் மாதவன் சிறைக்குள் அமர்ந்து இருந்தான். காலை மடக்கி அமர்ந்து கைகளை கோர்த்து தலைக்குப்பின்னால் வைத்து குனிந்தபடி அமர்ந்து இருந்தான். நேற்று மாலை அவனை அழைத்து வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறான். அவனோடு உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒருவன் நேற்று வெளியேற்றப்பட, மாதவனை தனிமை சூழ்ந்து கொண்டது. கதவு திறக்கும் சத்தம் கேட்க, தலையை நிமிர்த்தினான். […]

Readmore

வரம் நீயே 9

வீடு வந்து சேர்ந்த வைசாலி எதையோ யோசித்துக் கொண்டே உள்ளே செல்ல, “இப்ப வர்ரா பாரு.. சாலி இங்க வா. சாப்பிட்டியா நீ?” என்று சித்ரா கேட்டார். “ம்ம்?” என்று கேள்வியாக பார்த்தவள், சுற்றியும் பார்த்தாள். உணவுண்ட மயக்கத்தில் ஹாலிலேயே ஆண்கள் அனைவரும் உறங்கி இருக்க, பெண்கள் ஒரு அறையில் படுத்திருந்தனர். தன் அறை காலியாக இருப்பதைப் பார்த்தவள், “ம்மா இங்க வாங்க” என்று அழைத்தபடி உள்ளே சென்றாள். தந்தையை பார்த்து கைகாட்டி விட்டு செல்ல, அவரும் […]

Readmore

வரம் நீயே 8

அடுத்த நாள் காலை.. அரசன் பிரகாசத்தை வைத்திருக்கும் காவல்நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். அவனை வெளியே அமர வைத்து விட்டு, இன்ஸ்பெக்டர் உள்ளே சென்றான். பிரகாசம், முகம் வெளிறி, பயத்தில் உறைந்து போய் அமர்ந்து இருந்தார். இரவு ஒரு நொடி கூட கண்ணை மூடவில்லை. மூட முடியல்லை. இரவெல்லாம், குற்றவாளிகள் அடி வாங்கி அலறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு திருடனை பிரகாசத்தின் கண் முன்னால் அந்த அடி அடித்து உதைத்தனர். அதை பார்க்கப் பார்க்க பிரகாசத்திற்கு […]

Readmore

வரம் நீயே 7

அரசேந்திரன் வைசாலி வீட்டிலிருந்து கிளம்பி, நேராக ஆதிகேசவன் இருந்த மருத்துவமனைக்குச் சென்றான். கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய, “வாங்கணா” என்றான் ஆதி. அவனது முகத்தில் தெளிவும் தைரியமும் மீண்டு இருந்தது. அதை கவனித்தபடி அரசன் அவன் முன்னால் வந்து நின்றான். “எப்படி இருக்க ஆதி? ட்ரீட்மெண்ட் நல்லா போகுதா?” “நல்லா போகுதுணா. உட்காருங்க.” அரசன் அமர்ந்ததும், “இப்ப தான வந்துட்டுப்போனீங்க? ஏன் திரும்ப?” என்று ஆதி விசாரிக்க, அரசன் ஒரு நொடி அமைதிகாத்தான். “நீ சத்தியத்த […]

Readmore

வரம் நீயே 6

அரசன் கண் முன்னால் இருந்த கணினி திரையை வெறித்துக் கொண்டிருந்தான். மனோகரியின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஃபைல் அது. திறந்து பார்த்திலிருந்து மனம் வெதும்பியது. அருகில் இருந்த சதீஷ் அரசனின் தோளை தொட்டு, “சார்.. ” என்றான். “இவன் மனோகரிக்கு மட்டும் தான் இப்படி பண்ணிருக்கானா? இல்ல வேற யாருக்கும் பண்ணிருக்கானானு பார்க்கனும் சதீஷ். எல்லாத்தையும் ஃபைல் பண்ணி கொடு.” “பண்ணிடலாம் சார். ஆனா எனக்கு இன்னொரு டவுட்டு?” அரசன் கேள்வியாக புருவம் உயர்த்த, “இவன் எதுக்காக […]

Readmore