Skip to content
Post Views: 134
“அண்ணா இத நம்ம சும்மா விட கூடாது. நம்ம ஊருக்குள்ள சில நண்டு சீண்டுங்க இப்படித்தான் பண்ணிக்கிட்டு அலையுதுங்க. இன்னைக்கு இவங்களுக்கு தரப்போற தண்டனையில இனி யாருக்கும் இப்படி செய்ய துணிவு வரக்கூடாது அண்ணா” என்றான் பக்கத்து வீட்டுக்காரனுடன் குளத்தில் மறைந்து நின்று பேசிக்கொண்டு இருந்த தனது மனைவியை அடித்து வீட்டில் விட்டுவிட்டு வந்தவன்.
“ஆமா தம்பி நீ சொல்றது கரெக்ட் தான். இனி இந்த மாதிரி தப்ப நம்ம ஊர்ல எந்த பசங்களும் செய்யக்கூடாது. நம்ம ஊருக்குன்னு ஒரு பெருமை இருக்கு அது இவங்களால கெட்டுப் போக கூடாது. இன்னைக்கு நீங்க கொடுக்க போற தீர்ப்புள்ள இனிமே காதலிக்கிறேன் என்கிற பெயரில் இந்த மாதிரி அசிங்கம் பண்ற நாய்களுக்கு எல்லாம் புத்தி வரனும்” என்றார் ஒருவர் இதனை சொல்லும் அவரின் மகள் தான் போன மாதம் ஓடிப்போய் ஒருவனை கல்யாணம் செய்து கொண்டாள்.
“ஆமா மாமா இப்ப இருக்குற பசங்க எல்லாம் லவ் பண்ணுறேன்னு பண்ணுற அலப்பறைய தாங்க முடியல. அத பார்த்து இவங்களுக்கு எல்லாம் ஒரு புத்தி வரட்டும்” என்றான் ஒருவன்.
இப்படி ஆளாளுக்கு ஒன்று பேசிக்கொண்டு இருக்க, “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா. முதல்ல அங்க என்ன நடக்குதுன்னு நம்ம தெரிஞ்சுக்கணும் அதுக்கப்புறம் அவங்கள என்ன செய்யலாம்னு முடிவு பண்ணலாம்” என்றார் ஊர் தலைவர்.
Advertisement
“தலைவரே இதுல தெரிஞ்சுக்க இன்னும் என்ன இருக்கு. அதான் நம்ம சுப்பு சொல்றானே. இந்த இந்திராவோட பொண்ணும் ஒரு பையனும் கட்டிபுடிச்சுட்டு நின்னதா இதுக்கு மேல இதுல தெரிய என்ன இருக்கு. சட்டுன்னு வாங்க தலைவரே அவங்க ரெண்டு பேரையும் கையோட பிடிச்சு தண்டனை கொடுப்போம்” என்றான் கூட்டத்தில் ஒருத்தன்.
அவன் சொன்னதைக் கேட்டு பயந்து போன இந்திரா, “ஐயா என் பொண்ணு அப்படி எல்லாம் பண்ண மாட்டாயா. நீங்க கொஞ்சம் என்ன நடந்துச்சினு விசாரிங்க” என்றாள் அழுகையுடன்.
“இப்படி அழுது நடிக்காத. அன்னைக்கு நீ தப்பு பண்ணும் போது நாங்களும் இப்படித்தான் அழுதுட்டு இருந்தோம். அதே தப்ப இன்னைக்கு உன் பொண்ணு பண்ணி உன்ன அழ வச்சாரு பாரு கடவுள். பெரியவங்க சும்மாவா சொன்னாங்க நம்ம எத விதைக்கிறோமோ அது தானே வளரும்னு” என்றார் இகழ்ச்சியாக பாரதியின் தாய் மாமாவும் இந்திராவின் ஒரே அண்ணனும் ஆன ராஜலிங்கம்.
Advertisement
“அண்ணா ப்ளீஸ் என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க என் பொண்ணு பத்தி எதுவும் சொல்லாதீங்க என் பொண்ணு அப்படி பண்ணி இருக்க மாட்டா ப்ளீஸ் அண்ணா நீங்க கொஞ்சம் சொல்லுங்க” என்று அவரின் முன்னே போய் கையெடுத்து கும்பிட்டு கெஞ்ச
Advertisement
“ஏய் சீ வாய மூடு யாருக்கு யார் அண்ணா நம்ம உறவு முடிஞ்சு எத்தனையோ வருஷம் ஆயிட்டு. ஆமா உன்ன யாரு இப்ப இந்த ஊருக்கு வர சொன்னது உன்னால நாங்க பட்ட அசிங்கம் போதாதா இப்போ உன் பொண்ணால நாங்க படனுமா. அண்ணன் தம்பினு ஏதாவது பேசினா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன் பாத்துக்க” என்றார் கோபமாக.
அதில் கோபம் கொண்ட சுபாஷ், “அம்மா இங்க பாரு அழாத. அக்கா கண்டிப்பா இப்படி பண்ணி இருக்க மாட்டா. அதனால நீங்க இப்படி அழாதீங்க. அக்கா வரட்டும் அதுக்கப்புறம் தெரியும் என்ன நடந்துச்சுன்னு அப்புறம் இருக்கு உங்கள தப்பா பேசினவங்களுக்கும் அக்காவை பத்தி பேசினா எல்லாத்துக்கும் சேர்த்து” என்றான் தனது கைகளை முறுக்கிக் கொண்டு
“என்ன தம்பி பேச்சு எல்லாம் ரொம்ப அதிகமா இருக்குது. இங்க தப்பு பண்ணது உங்க அக்கா சரியா என்னமோ நாங்க தப்பு பண்ண மாதிரி பேசுற. இப்படி ஒரு அக்கா கூடயும் இப்படி ஒரு அம்மாவுக்கும் பொறந்த உனக்கு எல்லாம் இவ்வளவு வாய் இருக்கக் கூடாது” என்றாள் ஒருத்தி தனது மகனை விட அதிகமாக மார்க் வாங்கும் அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியால்
Advertisement
“ஏய் யாரப்பாத்தி” என்று கோபமாக அவளை அடிக்க சென்றவனை பிடித்து நிறுத்திய இந்திரா, “ தம்பி ப்ளீஸ் எதுவும் பேசாதடா” என்று அவனிடம் கெஞ்சி சமாதானம் செய்துவிட்டு,
“அப்பா ப்ளீஸ் பா நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க என் பொண்ணு அப்படி பண்ணி இருக்க மாட்டா பா” என்று தனது தந்தை ராஜேந்திரனிடம் கெஞ்ச
“ஏய் யாருக்கு யார் அப்பா. அதான் 20 வருஷத்துக்கு முன்னாடி எங்களுடைய எந்த உறவும் வேண்டாம்னு சொல்லிட்டு தான அந்த அனாத கூட போன இப்ப என்ன புதுசா உறவு கொண்டாடுற. நாங்களும் இப்படித்தான் என் பொண்ணு இந்த மாதிரி பண்ண மாட்டான்னு உன் மேல நம்பிக்கை வச்சோம். ஆனா நீ எங்களுக்கு திருப்பி என்ன பண்ண. அத தான் இப்போ உன் பொண்ணு உனக்கு பண்றா நல்லா அனுபவி” என்றார் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல்
“அம்மா நீயாவது கொஞ்சம் சொல்லு” என்று தனது அன்னையைப் பார்த்து அழ
அவர் எதுவும் சொல்ல முடியாமல் தனது சின்ன மகளை பார்த்து வாயை சேலை முந்தியால் மூடிக்கொண்டு அழத் தொடங்கினார்.
யாரும் தனக்கு உதவாதத்தை பார்த்த இந்திரா வேதாச்சலத்தை பார்த்து, “பெரியப்பா நீங்களாவது சொல்லுங்க என் பொண்ணு அப்படி பண்ணி இருக்க மாட்ட. நீங்களாவது நம்புங்க பெரியப்பா” என்று அவர் காலை பிடித்து அழ
சட்டென்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்ட வேதாச்சலம்,
“இங்க பாரு இந்திரா அதுதான் உன் பொண்ணு எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டனு நீ சொல்ற இல்ல அப்ப ஏன் அழுற நீ தைரியமா நின்னு எந்த பிரச்சினை வந்தாலும் நம்ம பார்த்துக்கலாம்” என்று அவளுக்கு தைரியம் சொல்லி அவளை தனது மருமகளிடம் ஒப்படைத்தவர் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, “போதும் ஆளாளுக்கு பேசுனது எல்லாம். இந்த ஊர்ல இருக்குற எல்லா பெரிய மனுஷன் கிட்டயும் நான் ஒன்னு கேட்கேன் நீங்க யாராவது ஒருத்தர் சொல்லுங்க அந்த பொண்ணு இதுவரைக்கும் எங்கயாச்சும் யாரோடாவது நின்னு பேசினா நாங்கள் பார்த்தோம் அப்படி சொல்லுங்க பாப்போம். சும்மா வாய்க்கு வந்ததை சொல்லக்கூடாது சரியா என்ன நடந்துச்சு தெளிவா தெரியிற வரைக்கும் இங்கே இருக்கிற யாரும் அந்த பொண்ண பத்தியோ அவளோட குடும்பத்தை பத்தியும் பேசினீங்க அவ்வளவுதான். இந்த இடத்துல உங்க பொண்ணு இருந்தா நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா” என்று கோபமாக கூட்டத்தை பார்த்து திட்டியவர்.
“டேய் சுப்பு நீ சொல்லுடா எங்கடா அவங்க ரெண்டு பேரு. ஏதோ ரெண்டு பேரையும் ஒண்ணா இருந்ததை பார்த்தேன்னு சொன்னியே எங்கடா அவங்க சொல்லு எங்க இருந்தாங்க” என்று சுப்பையாவை பிடித்து மிரட்ட
அதில் பயந்து போனவன் “ஐ..யா.. நா…ன் எது…வும் பா..க்..க..ல ” என்று அவன் திணற
“ஐயா இங்கே பாருங்க உங்களோட கோபம் எனக்கு புரியுது இப்ப என்ன நடந்ததுனு சரியா விசாரிச்சு தண்டனை கொடுக்கணும் அவ்வளவுதான. நான் அதை சரியா பண்றேன். டேய் இப்பவே போய் ரெண்டு பேரு அவங்கள கூட்டிட்டு வாங்க” என்று ஊரின் தலைவர் தனக்கு பின்னாடி இருந்த இருவரை பார்த்து சொன்னார்.
“சரிங்க ஐயா” என்று சொல்லி இருவரும் அவர்களைப் பிடித்து வர கிளம்ப அதற்குள் வேகமாக ஒரு கார் வந்து நின்றது.
அனைவரும் அந்த காரினை பார்த்துக் கொண்டிருக்க அதில் இருந்து திருவும் பாரதியும் இறங்கினர்.
அவர்கள் இருவரையும் பார்த்த சிலர்,“ஐயோ இவனா இவன்கிட்ட மனுசன் பேச முடியுமா” என்று அதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே எஸ்கேப் ஆகினர்.
அவர்கள் இருவரையும் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டு இந்திரா வேகமாக அவளை நெருங்கி, “ ஏய் எங்கடி போன எல்லாரும் என்னென்னவோ சொல்றாங்க. நீ என்கிட்ட ராட்டினம் ஆட போறேன்னு சொல்லிட்டு தான போன. எங்க தனியா போன. எங்க சொல்லு” என்று அவள் இருத் தோல்களையும் பிடித்து குலுக்க
“அத்த போதும் கைய எடுங்க” என்று அவரின் கையை பிடித்து தள்ளி விட்டு பாரதியை தனக்கு பின்னே பாதுகாப்பாக நிறுத்தி வைத்த திரு கூட்டத்தை ஒருமுறை பார்த்து நோட்டம் விட்டுக்கொண்டு, “என்னாச்சு அத்தை ஏன் இவ்ளோ கோவமா இருக்கீங்க. இவங்க எல்லோரும் பாரதிய பத்தி என்ன சொன்னாங்க” என்றான் அனைவரையும் முறைப்புடன்
“அது ஒரு பெரிய கதைப்பா . அது உனக்கு நான் அப்புறமா சொல்றேன். நீ சொல்லுப்பா நீங்க ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா வந்தீங்க” என்றார் விநாயகம்.
“அது ஒன்னும் இல்லப்பா ராட்டினம் ஆடும் போது இவளோட சேரி கிழிஞ்சிட்டாம். அதனால கோயிலுக்குள்ள வர முடியாம வெளிய தனியா நின்னுட்டு இருந்தா நான் என்னனு விசாரிச்சப்போ சொன்னா அதான் அவள வீட்டுக்கு கூட்டிட்டு போய் டிரஸ் மாத்தி கூட்டிட்டு வந்து இருக்கேன் என்னப்பா பிரச்சனை” என்றான் திரு
“என்ன தம்பி நீ அசால்ட்டா சொல்ற. ஒரு வயசுக்கு வந்த பொண்ணு சேலை கிழிஞ்சது எப்படி ஒரு வயசு பையன் கிட்ட சொல்ல முடியும் உங்க ரெண்டு பேருக்குள்ள வேற ஏதோ உறவுமுறை இருக்குன்னு நினைக்கிறேன்” என்றார் ஊர் பெரியவர் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் கயவன்.
“யாரு மாணிக்கம் தாத்தாவா. அது ஒன்னும் இல்ல தாத்தா போனவாரம் உங்க பேத்தியோட கைய புடிச்ச ஒருத்தன் இழுத்துட்டான்னு சொல்லி உங்க பேத்தி வந்து என்கிட்ட சொன்னாலே அந்த முறையில தான். இன்னும் ஏதாவது முறைய பத்தி விளக்கமா சொல்லனுமா தாத்தா” என்றான் அவரைப் பார்த்து நக்கலாய் சிரித்துக்கொண்டு
அவனின் இந்த பதிலில் பம்மி போனவர் அப்படியே தலையை மறைத்து கூட்டத்தில் மறைய அவரின் பக்கத்தில் நின்றவன், “இதுதான் வயசுக்கு தகுந்த மாதிரி பேசணும்னு சொல்றது அவன் கிட்ட யாரவது பேச முடியாது நீ அவன் கிட்ட போய் ராங்கா பேசினா இப்படித்தான் பண்ணுவான். இவன பத்தி தெரிஞ்சதால தான் யாரும் வாயைத் திறக்காம இருக்காங்க உனக்கு மட்டும் என்ன” என்றார் குத்தலாக.
“என்னப்பா ஊர் பெரிய மனுஷங்களா இவங்க ரெண்டு பேரும் வர்றதுக்கு முன்னாடி என்னென்னமோ சொன்னீங்க இப்ப பேச வேண்டியதுதானே ஏன் எல்லாரும் அமைதியா இருக்கீங்க. ஏன் அமைதியா இருக்கீங்கனு நான் சொல்லட்டா இவங்களுக்குக்காக பேச யாருமே வர மாட்டாங்க நெனச்சு தான இவ்வளவு பேசினீங்க இப்போம் அந்தப் பொண்ணு கூட இருந்தது எங்க அண்ணன் தெரிஞ்ச உடனே யாரும் வாய் திறக்கலை அப்படித்தானே. ஏண்டா இப்படி எல்லாம் இருக்கீங்க பணம் இருந்தா ஒரு பேசி பணம் இல்லன்னா ஒரு பேச்சு உங்கள எல்லாம் மனுசங்கன்னு சொல்ல முடியாது. என்ன ஜென்மங்கடா நீங்க எல்லாம் ஒரு விஷயத்தை பத்தி முழுசா தெரியுறதுக்கு முன்னாடி அந்த பொண்ண பத்தி எவ்வளவு அசிங்கமா பேசுறீங்க. இதுல பழைய கதை வேற. நீங்கலாம் உண்மையிலேயே ஆம்பளைங்க தானா இல்ல வேற எதுவுமா எனக்கு தெரியவில்ல” என்றான் கோபமாக கூட்டத்தை பார்த்து சரண். அவன் பேச்சைக் கேட்டு அனைவரும் தலை குனிந்து நிற்க, தனது தம்பியின் பேச்சினை பார்த்து ரசித்து கொண்டிருந்த திரு அவனுக்கு கண்ணாலே நன்றி சொன்னான். அதற்கு அவனும் கண்ணாலே சரி போடா என்று சொல்ல இருவரில் கண் அசைவையும் பார்த்துக் கொண்டிருந்த சுபாஷுக்கு ஏதோ புரிந்தது இருந்தும் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.
“சரி ஊர்ல இருக்க பெரியவங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுக்கோங்க என்னோட மகன் விநாயகத்தோட பையன் திரு குமரனுக்கும் என்னோட பொண்ணு இந்திராவோட மகள் திவ்யபாரதிக்கும் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணலாம் நாங்க ரெண்டு குடும்பமும் சேர்ந்து முடிவு பண்ணிட்டோம் சரியா நல்ல காதுல கேட்டுக்குங்க என்னோட பேரனுக்கும் பேத்திக்கும் நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதா முடிவு பண்ணிட்டோம். அதனால இங்க இருக்கிற எல்லாரும் என்னோட பேரனை பத்தியோ இல்ல என் பேத்திய பத்தியோ ஒரு வார்த்தை பேசினாலும் அதுக்குப் பிறகு நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல. நான் சொல்றது புரியும் நினைக்கிறேன் என்று கூட்டத்தைப் பார்த்து உறுமிய வேதாச்சலம் தாத்தா. திரு மற்றும் பாரதியின் தோள்களில் தனது இருக் கையை வைத்து அணைத்துக் கொண்டார்.
வேகமாக ஓடிவந்து பஞ்சாயத்தில் குழப்பம் பண்ணலாம் என்று வந்த வசுந்தராவும் கமலாவும் வேதாச்சலம் தாத்தாவின் இந்த வாக்கியத்தை கேட்டு அதிர்ந்து போய் நின்றனர்.
error: Content is protected !!