Skip to content
Post Views: 732
“அத்த”என்ற சத்தத்தில் சமையல் செய்து கொண்டிருந்த புஷ்பா திரும்பி அங்கே தயங்கி நின்ற பாரதியை பார்த்து புன்னகைத்து, “வாம்மா அங்க ஏன் நிக்க உள்ள வா” என்றார் சகஜமாக
அதில் கொஞ்சம் பயம் நீங்கியவள் அவரின் பக்கத்தில் போய் நிற்க, “என்னமா நல்லா தூங்கினியா? காப்பியா? டீயா” என்று கேட்க
“அது அத்த எப்படி அசந்து தூங்குனேன்னு எனக்கே தெரியல. உங்க பையன் கூட என்ன எழுப்பல”என்றவள் அவசரமாக, “இல்ல இல்ல சாரி அத்தை இனி கரெக்ட் டைமுக்கு எந்திரிச்சு வந்துறேன்” என்று அவள் பயத்தில் உளற
“போதும் போதும் நான் உன்கிட்ட ஏதாவது கேட்டனா டீயா காப்பியா தான கேட்டேன் அதுக்கு ஏன் இவ்ளோ லெந்தா பேசுற”
Advertisement
“அது இல்ல அத்த அம்மா காலையில 5 மணிக்கு எல்லாம் எழுந்திரிக்க சொன்னாங்க. ஆனா நான் 8 மணிக்கு முழிச்சேன் அதான். இனி கரெக்ட் டைம் ல எந்திரிச்சி வந்துருவேன் அத்தா” என்று இழுக்க
“அதுக்கு என் பையன் விட்டாத்தான”என்று அவர் முனுமுனுக்க
“என்ன அத்த சொன்னீங்க”
Advertisement
“அது இருக்கட்டும் என்ன பாத்தா சிங்கம் புலி மாதிரி தெரியுதா”என்றாள் தீவிரமாக
Advertisement
“இல்ல அத்த”
“பின்ன ஏன் இப்படி பயப்படுற இது உன் வீடு மாதிரி தான். உன் வீட்ல எப்படி இருந்தியோ அதே மாதிரி இங்க இரு உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.என்ன உன் அம்மாவா நினைச்சுக்கோ சரியா. எங்க சொல்லு பாப்போம் டியா காபியா”
“சரி அத்த காப்பி தாங்க”
Advertisement
“ உனக்கும் காபி தான் பிடிக்குமா. குட் கேர்ள் இப்படி தான் இருக்கணும். உனக்கு ஒன்னு தெரியுமா எங்க வீட்ல என்ன தவிர வேற யாரும் காபி குடிக்க மாட்டாங்க. நான் எனக்கு மட்டும் காபி போடறதுக்கு கஷ்டப்பட்டு இங்க எல்லாரும் குடிக்கிற டீய நானும் குடிப்பேன் இப்ப தான் எனக்கு கம்பெனிக்கு நீ வந்துட்டேன் இல்ல இனி நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து காப்பி போடலாம் சரியா” என்றவரின் பார்த்து சிரித்தாள் பாரதி.
“அது சரி வந்து இவ்வளவு நேரம் ஆச்சு கொஞ்சமாவது உன் புருஷன் எங்க போனானு தேடுனியா”
“ தெரியும் அத்தை நைட் ஏதோ கேஸ் விஷயமா வெளியே போனாரு இன்னும் வரவே இல்ல கரெக்டு தானே”
“அவன் போகும் போது நீ தூங்கிட்டு இருந்ததா தான சொன்னான் அப்படி இருக்கும்போது உனக்கு எப்படி தெரியும் அவன் நைட்டே கிளம்பிட்டானு”
“ அது நேத்து நைட்டு எனக்கு மெசேஜ் பண்ணிட்டு தான் போயிருக்காரு. காலைல மொபைல்ல அந்த மெசேஜ் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன் அத்த”
“ஓ மெசேஜ் பண்ணானா நான் கூட உனக்கு சொல்லாம போய் இருப்பான் அது சொல்லி உங்க ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி விடலாம்னு நினைச்சேன். பயபுள்ள எப்படியோ தப்பிச்சிட்டான்”என்று வருத்தப்பட
“ அத்தை அப்படி எல்லாம் திரு மாமா என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டார். அப்படி அவர் போன எதாவது அர்ஜென்ட் டா இருக்கும்”என்றாள் அவனை புரிந்து கொண்டவளாக
“ ஓ அவ்வளவு நம்பிக்கையா உன் திரு மாமா மேல”என்றார் உள்ளே பெருமையாக நினைத்து கொண்டு
“ஆமாம்” என்பது போல் தலையாட்டியவள், “ நீங்க ரொம்ப ஸ்வீட் அத்த”என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டவள்,
“அப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு. என் பிரண்ட்ஸ் எல்லாரும் இப்படி பயம் காட்டுனாங்க தெரியுமா. அவங்க சொன்னதை வைச்சி நான் மாமியார்னா கொடூரமானவங்களா இருப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா நீங்க ரொம்ப ஸ்வீட். அத்தை எனக்கு காபில ஹார்லிக்ஸ் கொஞ்சம் போட்டு தாங்க” என்று உரிமையுடன் கேட்டுக்கொண்டு சமையலறை மேடையில் ஏறி அமர்ந்தாள்.
“ம் விவரம் தான் வந்த முத நாளே மாமியாருக்கு ஐஸ் வைச்சி வேலை வாங்குற அது சரி”
“ நான் எங்க மாமியார வேலை வாங்குனேன் என்னோட அம்மா கிட்ட தானே கேட்டேன்” என்று அவருக்கு மேலும் பெரிய ஐஸ் வைக்க
“அம்மாடியோ நீ பெரிய கேடியா இருப்ப போலயே. உன்ன பர்ஸ்ட் டைம் பார்க்கும் போது ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே நம்ம பையன எப்படி சமாளிப்பானு நினைச்சேன். ஆனா நீ ஆள முழுங்கிவிடுவ போலயே. தெரியாம நாங்க தான் உன்கிட்ட மாட்டிக்கிட்டோமா”
“இல்லையே திரு மாமா தெரிஞ்சு தான் என்கிட்ட மாட்டுனாரு” என்று கலகலவென சிரித்தாள்.
“அது சரி வாயாடி நீ இருக்கியே. இப்பதான் வீடே நெறஞ்ச மாதிரி இருக்கு. உனக்கு தெரியுமா எனக்கு பொம்பள பிள்ளைங்கனா ரொம்ப பிடிக்கும். எனக்கு கண்டிப்பா இரண்டாவது பொட்ட புள்ள தான் பிறக்கும் நான் நினைச்சேன். ஆனா இந்த முந்திரி கொட்ட வந்து பெறந்துட்டு என்னோட ஆசை இப்பதான் நிறைவேறுன மாதிரி இருக்குது இப்படியே சிரிச்சுக்கிட்டே இருடா தங்கம்” என்று அவளுக்கு திருஷ்டி கழித்தார் புஷ்பா.
அப்போது சமையலறை உள்ளே வந்த சரண் மேடையில் அமர்ந்து கால்களை ஆட்டிக் கொண்டு தனது அத்தை கொடுத்த டீயினை குடித்துக் கொண்டு இருந்த தனது அண்ணியையும் அவளுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த தனது அன்னையும் பார்த்தவன் புன்னகையுடன் சிறிது நேரம் ரசித்து விட்டு அதனை தன் அண்ணனுக்கு போட்டோ எடுத்து, “ஸீ த மாமியார் மருமகள் கூட்டணி” என்று அனுப்பிவிட்டு முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
“அம்மா இங்கே என்ன நடக்குது. உங்கள அப்பா சமையல் ஆகலனு சொல்லி கத்திட்டு இருக்காங்க இங்க என்ன மாநாடு நடக்குது. வீட்டுக்கு வந்த மருமக மொத நாளு இப்படித்தான் இருக்கணுமா இருங்க இருங்க இப்பவே போய் உங்க அம்மாக்கு போன் பண்ணி சொல்றேன்னா இல்லையா பாருங்க. முழிச்சதே லேட்டு இதுல ஒரு வேலை செய்யாம மாமியார் கிட்ட காபி வாங்கி குடிச்சிட்டு அரட்டை வேற. கொஞ்சமாவது இது நம்ம புகுந்த வீடு மாமியார்னு பயம் இருக்கா. கொஞ்சமாவது மரியாதை தெரியுதா ” என்று பாரதியை பார்த்து திட்ட
அதில் பயந்து போன பாரதி, “ஐயோ அம்மா கிட்ட சொல்லாதீங்க அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப திட்டுவாங்க. ப்ளீஸ் சொல்லாதீங்க. அத்த தான் இது உன் வீடு மாதிரி இருனு சொன்னாங்க. ப்ளீஸ் அம்மா கிட்ட சொல்லாதீங்க இனி எல்லா வேலையும் நான் பண்றேன்” என்று மேடையில் இருந்து இறங்கி கண்ணை மூடிக்கொண்டு சரணிடம் கெஞ்ச
“ ஃபிளவர் குயின் பாத்தியா உன் மருமகள எல்லாத்துக்கும் காரணம் நீதானாம் அவங்க ஒண்ணுமே செய்யலையாம். பாத்தியா வந்து ஃபர்ஸ்ட் டேவே உன்னை எப்படி மாட்டி விடுறாங்கன்னு. இவங்க கூட தான் நீங்க பார்ட்னர்ஷிப் வச்சுக்க போறீங்களா”என்றான் நக்கலாக
அவனின் நக்கல் பேச்சில் கண்ணை திறந்து பார்த்த பாரதி தன்னை முறைத்துக் கொண்டு இருந்த மாமியாரையும், கேலி சிரிப்புடன் நின்ற சரணையும் பார்த்து அசடு சிரிப்பு சிரித்தாள்.
“அம்மாடி மருமகளே அம்மா அம்மானு சொல்லி அவன் போட்ட ஒரே பால்ல நீயும் அவுட் ஆகி என்னையும் ரன் அவுட் பண்ணிட்டியே. நல்லா வருவமா நீ” என்றாள் அவளை முறைத்துக் கொண்டு புஷ்பா.
“ அது அத்தை அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. இவங்க திடீர்னு வந்து பேசவும் என்ன சொல்லுன்னு தெரியாம டங்குனு டங்க் ஸ்லிப் ஆகி ஏதோ சொல்லிடேன். இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னிச்சிவிடுங்க” என்று அவரின் கன்னத்தை பிடித்து கெஞ்சினாள்.
“ ஆமாம் மிஸ். நான் எதுவுமே பண்ணல மிஸ் பக்கத்துல இருக்க பையன் தான் மிஸ் பண்ணான் ப்ளீஸ் மிஸ் என்ன மன்னிச்சுருங்க மிஸ் மிஸ் மிஸ்” என்று பாரதியின் பேச்சினை சிறு குழந்தை போல நடித்துக் காட்டினான் சரண்.
“போங்க நீங்க ரொம்ப மோசம் இருங்க என் திரு மாமா வந்த உடனே உங்களை அவங்க கிட்ட சொல்லி கொடுக்கேன்” என்றாள் அவன் கலாய்த்ததில் கடுப்பான பாரதி.
“ஆமா உங்க திரு மாமா பெரிய ஆளு அப்படியே எங்களை துப்பாக்கி வச்சு சூட் பண்ணிடுவாங்க. போமா வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா” என்று அவளை மேலும் கலாய்க்க
“டேய் உனக்கு சமையல் கட்டுல என்னடா வேலை. இங்க நின்னு என்ன அரட்டை அடிச்சிட்டு இருக்க”என்று வந்தார் விநாயகம்.
“ வந்துட்டாருயா ஹீட்லர் இனி ஒன்னும் பேச முடியாது. இவர் மட்டும் சமையல் கட்டு பக்கம் வரலாம் ஆனால் நான் வரக்கூடாதா. எல்லாம் என் நேரம்” என்று மெதுவாக புலம்பிக்கொண்டு, “சீனியர் என்ன கூப்பிட்டீங்களா” என்று வேகமாக வெளியே சென்றான் சரண்.
“என்னைக்காவது உன் பிள்ளை நான் கேட்கிற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லி இருக்கானா. எப்ப பாரு குரங்கு மாதிரி சேட்டை பண்ணிட்டு கிடக்குறது. இவன் எப்பதான் பெரிய மனுஷனா ஆகப் போகிறான். கொஞ்சமாவது ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளர்ந்து இருக்கா. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரு. இவனுக்கு கேடுக்க ரெண்டு
பேர் வேற இருக்காங்க. இவன் என்ன பண்ணாலும் கொடி பிடிச்சிட்டு வந்துருவாங்க ”
“ யாருங்க அது”
“ வேற யாரு எல்லாம் உன் மாமனரும் உன் தம்பியும் தான். ஒருத்தர் வீட்டுக்குள்ள சப்போர்ட் பண்றார் இன்னொருத்தன் வெளிய சப்போர்ட் பண்றான். இப்படி இருக்கும் போது இவனுக்கு எங்கிருந்து பொறுப்பு வரும். இதுல உன் தம்பி வேற அடுத்து இவனுக்கும் நம்ம சாரா குட்டிக்கு கல்யாணம் பண்ணலாமானு கேக்கான்” என்றார் மனிதர் நொந்து போய்
“ ஐயோ இவன பத்தி திட்டினதுல உன்ன மறந்துட்டேன்மா. உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்காமா. காலையிலே ஏதாவது சாப்டியாமா” என்றார் பாரதியை பார்த்து
“ அதெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு மாமா. நான் காபி குடிச்சிட்டேன் உங்களுக்கு என்ன மாமா வேணும்.டீ தரவா மாமா”
“ அதெல்லாம் காலையிலேயே குடிச்சிட்டேன்மா. அது சரி உன் புருஷன் வந்துட்டானாமா. கல்யாணம் முடிஞ்சு முதல் நாளே இப்படி பொண்டாட்டி கிட்ட சொல்லாம நைட்டு வீட்டை விட்டு போலாமா. எல்லாம் இவ குடுக்குற செல்லம் தான்மா” என்றார் மனைவியை காட்டி மூத்த மகனை திட்டினார்
“ ஐயோ மாமா அவர திட்டாதீங்க அவர் என்கிட்ட சொல்லிட்டு தான் போனார். அவர் போனத பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா நீங்க ப்ளீஸ் அவர திட்டாதீங்க”
“சரிம்மா இனி உன்னோட புருஷனை நான் திட்டல போதுமா” என்றவர் புஷ்பாவை பார்த்து, “சாப்பாடு ரெடி ஆயிட்டாமா அப்பாவ சாப்பிட கூப்பிடு மாத்திரை போடணும் தான” என்றார்.
“ டிபன் அப்பவே ரெடியாயிட்டீங்க. எல்லோரும் எந்திருச்சு வரட்டும் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
“அதெல்லாம் எல்லாரும் அப்பவே முழிச்சாச்சி நான் எல்லாரையும் டைனிங் டேபிள் வர சொல்றேன். எல்லாத்தையும் எடுத்து வைம்மா. பாரதி நீயும் வந்துருமா” என்று சொல்லி வெளியே சென்றார் விநாயகம்.
error: Content is protected !!