Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விலகாதே உயிரே

Vilagaathae Uyirae 4 & 5

Episode 4

அடுத்த நாளும் அதே இடத்தில் அதே நபருடன் ரம்யாவை தேவா பார்த்தான் …இன்றும் அவனுக்கு கோவம் வந்துவிட்டது ,தன் தங்கையிடம் கேட்டிருக்கலாம் என்ன என்று ஆனால் அவனும் நேராக வீட்டிற்கு வந்து அவன் அப்பாவிடம்,

அப்பா….

உங்களிடம் ஒன்று கூற வேண்டும் நீங்கள் சொன்னது சரிதான்.. இப்போதே ரம்யாக்கு நாம் திருமணத்தை முடித்து விடலாம் .அதுவும் தீபாஅண்ணனுக்கே பேசி முடித்து விடுங்கள் .



Advertisement

அப்பா நீங்கள் சொன்னதைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன் .இப்போதுதான் என் மனதில் சரி என்று பட்டது. அதான் உங்களிடம் உடனடியாக வந்து சொல்லுகிறேன் என்றான்….

தேவா இப்படி நிதானம் இல்லாமல் செய்த தவறினால் வரப்போகும் விளைவை அவன் அறியவில்லை… அவன் எதையும் யோசித்து முடிவு எடுப்பவன் தான் ஆனால் தன் தங்கை வாழ்க்கை பற்றி யோசிக்காமல் ஏன் இப்படி முடிவு எடுத்தான் என்று தெரியவில்லை….

நிதானம் நிலை குலைந்தால்
நிம்மதி தொலைந்து போகும்
சிந்திக்க மறந்துவிட்டால்
சிந்தனை சிதைந்து போகும்…..

Advertisement

அடுத்த நாள் காலை தேவாவின் அம்மா கிச்சனுக்குள் சாப்பாடு ரெடி பண்ணி கொண்டு இருந்தாள்.. தேவா ஆபீஸ்க்கு கிளம்பி கொண்டு இருக்கும் போது அவன் தந்தை அருகில் போய்
அப்பா….
தீபாவின் வீட்டில் அவள் அண்ணனை ரம்யாவிற்கு பேசி முடித்து விடுங்கள் நாம் அடுத்த வாரம் தீபா வீட்டில் பெண் பார்த்து தாம்பூலம் மாற்றும் போது  அப்படியே ரம்யாவிற்கும் பேசி முடித்து விடலாம் இதை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்…..

Advertisement

அவன் கிளம்பும்போது தங்கை வெளியே கம்ப்யூட்டர் கிளாஸ்சுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்…

ரம்யா எங்க போற??

அப்படி என்று கேட்டான்

Advertisement

உடனே அவள் அண்ணா, கம்ப்யூட்டர் கிளாஸ் கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என்றாள்..

சரி நானே உன்னை கொண்டு போய் விடுகிறேன் என்றான்.. அவளோ இல்லை அண்ணா  நானே போய் விடுவேன் நீ போ இப்போது பஸ் வரும் நான் போறேன் அப்படி என்று சொன்னாள்…

ஆனால் தேவா விடுவதாக இல்லை என்னுடன் வா நான் அந்த வழியில் தான் இன்று போவேன் உன்னையும் அப்படியே விட்டு செல்கிறேன் என்று வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றி சென்றான்….

அவள் தங்கை அவன் கூட வண்டியில் போகும்போது கையில் மொபைலில் ஏதோ நோண்டிக்கொண்டே வந்தாள்… அவன் அதை கண்ணாடியில் பார்த்தும் பாக்காத மாதிரி விட்டு விட்டான்…

ரம்யாவை கிளாஸ் அருகில் கொண்டு போய் விட்டான் ஆனால் இன்று யாரும் வரவில்லை உடனே தேவா நீ பார்த்து உள்ளே போ என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்….

தேவாவின் அப்பா தீபா வீட்டிற்கு போன் பண்ணி தேவா தீபா இருவருக்கும் பேசி முடிக்கும் போது நாம் ரம்யா விற்கும் பிரபுவிற்கும் பேசி முடிக்கலாமா நீங்களும் பிரபுவிற்கு பெண் பார்க்கிறீர்கள் நானும் ரம்யாவிற்கு மாப்பிள்ளை தேட வேண்டும் நாம் இருவரும் பசங்க கிட்ட கேட்டு பேசி முடிவு பண்ணலாமா என்று கேட்டார்….

உடனே தீபாவின் அப்பாவிற்கும் தான் கேட்க வேண்டும் என்று நினைத்ததை அவரே கேட்டதால் மகிழ்ச்சி…

சரி நான் வீட்டில் அனைவருடனும் பேசிவிட்டு உங்களுக்கு போன் பண்ணுகிறேன் என்று சொன்னார்…

உடனே தீபாவின் அப்பா தீபா அவள் அம்மா இருவரையும் கூப்பிட்டு தேவா அப்பா சொன்னதை சொன்னார் அவர் சொன்னதும் இருவருக்கும் மகிழ்ச்சி உடனே சரி என்று சொன்னார்கள் இன்னும் பிரபுவிடம் மட்டும் கேட்க வேண்டும் அவனிடம் இரவு பேசிக்கொள்ளலாம் என்று அப்பா சொல்லிவிட்டார்….

வழக்கம்போல் பிரபு இரவு வீட்டிற்கு வந்தான்…

தன் அண்ணனிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தீபா ஆர்வமாக  ஹாலில் அமர்ந்திருந்தாள்…

அம்மா அப்பா இருவரும் உடன் இருந்தார்கள்…

அவன் உள்ளே வந்ததும் என்னம்மா இங்க உக்காந்து இருக்கீங்க???
டின்னர் ரெடி பண்ணலையா?? இன்னைக்கு நைட்டு என்னது அப்படி என்று கேட்டான்..

உடனே தீபா அண்ணா இன்று உன்னுடைய ட்ரீட் நீதான் ஆர்டர் பண்ண வேண்டும் என்று அம்மா எதுவும் சமைக்கவில்லை என்று சொன்னாள்…

என்னாச்சு அம்மா அப்படி என்று கேட்டான்…

உன்னிடம் ஒன்று கூற வேண்டும் என்று அப்பா சொன்னார்…

சொல்லுங்க அப்பா …

பிரபு உனக்கு ஒரு பெண் பார்த்து உள்ளேன்..

அப்பா முதலில் தீபாவின் திருமணம் முடியட்டும் பிறகு எனக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேனே இப்போது ஏன் அவசரமாக எனக்கு பார்த்தீர்கள் என்று கேட்டான்…

தீபாவின் திருமணம் முடிந்து அவளுக்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் செய்ய வேண்டும்…

அதன் பிறகு என் திருமணம் பார்த்துக் கொள்ளலாம் என்றான்…

உடனே அப்பா இருப்பா என்னை பேச விடு, நான் பார்த்த பெண் வேறு யாரும் அல்ல உன் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளையின் தங்கை தான்…

தேவாவிற்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவள் பிஇ முடித்திருக்கிறாள் .. இப்போது அவள் கம்ப்யூட்டர் கிளாஸ் போய்க்கொண்டு இருக்கிறாள் நல்ல பெண் தான் வேலைக்கு ஏதும் போகவில்லை பின்னாளில் அவள் இங்கு வந்த பிறகு படிக்க வேண்டும் என்றால் படிக்கட்டும். வேலைக்கு போக வேண்டும் என்றால் போகட்டும் அது அவளுடைய இஷ்டம்….. என்று நான் அவள் அப்பாவிடம் கூறினேன்..

அவர்கள் அப்பாவிற்கு மிகவும் மகிழ்ச்சி எங்கள் மூவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது அதான் உன்னுடைய சம்மதத்திற்கு நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் அப்பா….

அவனோ நீங்கள் சொன்னால் சரிதான் அப்பா என்று கூறினான்….

அவள் தீபாவிற்கும் அளவில்லா சந்தோஷம் அண்ணா நம் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கும் என்று கூறிக்கொண்டு ரூமுக்குள் போனாள்….

பிரபுவோ அப்பா இப்போது இவள் திருமணத்திற்கு செலவு அதிகமாக ஆகுமே இன்னும் என் திருமணமும் என்றால் இன்னும் சில செலவு அதிகமாகும் அப்பா அதனால் முதலில் தீபாவிற்கும் முடியட்டும் பிறகு ஒரு மூன்று நான்கு மாதங்கள் கழித்து எனக்கு முடிக்கலாம் என்று அவன் கூறினான்….

நீ சொல்லுவதும் சரிதான் டா…. நாம் இதை மாப்பிள்ளை வீட்டில் பேசி முடிவு பண்ணிக்கலாம் என்று அப்பா கூறினார்….

அதன் பிறகு பிரபு பிரஷ்ஷப் ஆகி விட்டு வந்து யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு இரவு டின்னர் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்…..

Episode 5

அடுத்த நாள் தீபாவின் அப்பா தேவாவின் அப்பாவிற்கு ஃபோன் செய்து முதலில் தீபா திருமணம் முடியட்டும் பிறகு என் பையன் திருமணம் பண்ணலாம் என்று சொல்கிறான் இரண்டு திருமணத்தையும் ஒன்றாக முடித்தால் செலவு அதிகமாகும் என்று யோசிக்கிறான் அப்படி என்று கூறினார்…..

அதற்கு அவன் அப்பா செலவை பற்றிய யோசிக்காதீர்கள் ..நம் இரு வீட்டிலும் சேர்ந்த செலவு பண்ணுவோம் நிச்சயதார்த்தம் முதல் மறு வீடு வரை எல்லா செலவும் சேர்ந்தே பண்ணி விடுவோம் நீங்கள் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்…

உடனே தீபாவின் அப்பாவிற்கு சந்தோசம் அப்போ இரு திருமணமும் ஒன்றாக நடத்தலாம் என்று அவர் கூறினார்…

இதையெல்லாம் தேவாவிடம் அவன் அப்பா சொல்லி பேசிக்கொண்டு இருந்தார் ஆனால் இது எதுக்கும் ரம்யாவிற்கு தெரியாது…

ரம்யாவிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..

உனக்கு இந்த திருமணம் பண்ணிக்க கஷ்டமா என்று கேட்டு இருக்கலாம் ஆனால் அப்படி கேட்கவில்லை…

அம்மா அப்பா சொன்னால் பிள்ளைகள் சரி என்று கேட்பார்கள் இருந்தாலும் அவளிடமும் ஒரு வார்த்தையை கேட்டு இருக்கலாம்…

வீட்டுக்கிளியே ,
கூண்டை விட்டு வெளியே வா ,
சுந்தந்திர காற்றை சுவாசிக்க பார் ,
அனுபவங்கள் உனக்கு பாடமாகும் ,
உனக்கும் ஆயிரம் வாய்ப்புகள் கொட்டி கிடக்கு !

புரட்சி பெண்ணே உன் புன்னகை போதும்
பூமியை வென்றுகாட்ட ,
அடிமை சட்டங்களை உடைத்தெறி ,
ஆனவக்காரர்களை அடக்க முயற்சி ,
தீயவர்களை திருத்தி ,
நல்லவர்களுக்கு நிம்மதி கொடு !

மிரட்டும் வறுமையை
துணிவால் துறத்து,
கயவர்களின் கையில்
காசுக்காக கசந்காதே ,
நீ புனிதத்தின் பிறப்பு ,
அறிவியலுக்கு இன்றுவரை
விளங்கமுடியாத வியப்பு நீ !

இப்படி எல்லாம் பெண்மையை போற்றும் நாம் பெண்களின் திருமண விஷயத்தில் அவர்களை கேட்காமல் எடுக்கும் முடிவும் அவர்கள் வாழ்வில் பெரும் பிரச்சனையாக மாற்றிவிடும் என்று அப்போது தேவாவிற்கு தெரியவில்லை… அவன் தங்கை மீது இருக்கும் பாசத்தினால் திருமணத்தை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று நினைத்தான்…..

ஒரு வாரம் ஓடியது தெரியவில்லை…

இன்று வெள்ளிக்கிழமை காலையில் பரபரப்புடன் தேவா வீட்டில் அனைவரும் கிளம்பி கொண்டிருந்தனர்…

தேவாவின் தங்கைக்கு எதுவுமே தெரியாது அவள் அண்ணனுக்கு பேசி முடித்து தாம்பளம் மாற்றி விட்டு வருவதற்கு அவளும் அழகாக கிளம்பினாள்…

அவள் அம்மா அவளை நீயும் புடவை கட்டிக்கோ அழகா இருப்ப என்று சொன்னதால் அவளும் அழகாய் புடவை கட்டிக்கொண்டு  வந்தாள்….

தேவாவின் அம்மா ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தாள்…

அவனது அப்பாவோ எல்லாவற்றையும் காரில் கொண்டு போய் வைத்துக்கொண்டு இருந்தார்கள்… நல்ல நேரம் முடிவதற்குள் கிளம்ப வேண்டும் என்று கூறி வீட்டை பூட்டிவிட்டு காரில் அனைவரும் கிளம்பினார்கள்….

அங்கு தீபா வீட்டிலும் அதே பரபரப்பு தான் அவள் அண்ணன் தங்கை இருவரும் ரெடியாகி கொண்டிருந்தார்கள்…

தீபாவிற்கு கல்யாண கலை வந்துவிட்டது முகம் அவ்வளவு அழகாக இருந்தது உடனே ஒரு போட்டோ எடுத்து அதை தேவாவிற்கு அனுப்பினாள்….

உடனே தேவாவிற்கு அவளை புடவையில் பார்த்ததும் மிகவும் அழகாக இருந்தாள்…

அவன் ரிப்ளை பண்ணுவதற்குள் இன்னும் நான்கு போட்டோக்கள் அனுப்பினாள் தீபா..

நான் எப்படி இருக்கிறேன் தேவா ???என்று ஒரு மெசேஜ்…

உடனே தேவா,

என் இதயத்தில்

நிரம்பி வழிந்த

உன் நினைவுகளெல்லாம்

என் இதயத்துடிப்பையும் உனதாக்கியது

இரத்த ஓட்டத்தில் கலந்த

உன்   நினைவுகளெல்லாம்

நித்தம் உன்னைக் காணவே ஏங்கின

நீ என்னைக்  கடந்து செல்ல

உன் அழகினை நெருங்கி அடையாளம் கண்டேன்

புடவை கட்டிய புல்லாங்குழலே

சிற்பிகளெல்லாம்

செதுக்கமறந்த   சிலையே

உன்னை வர்ணிக்க வாய்ப்பளிக்க

என் வரிகளுக்கெல்லாம்

நித்தம் உன் நினைவூட்டுகின்றேன்

என்றும்உன்னையே வர்ணிக்க…….

என்று அவளுக்கு அவன் ரிப்ளை அனுப்பினான்…..

ரம்யாவோ அவர் அண்ணனை பக்கத்தில் உட்கார்ந்து பெண்கள் பண்ணிக் கொண்டே வந்தாள்….

பாலைவனம்   போல்   இருத்த

என் இதயத்தில்

உன்னைக்     கண்டது    முதல்

பொழியத்   தொடங்கின

காதல்   மழைத்  துளி…….

என்று தீபாவிடம் இருந்து பதில் வந்தது….

உடனே ரம்யா அதை பார்த்து அண்ணா அண்ணி உனக்கு ஏற்ற ஜோடி தான் சரியான ஜாடிக்கேத்த மூடி என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்…..

தேவாவின் அப்பா தான் கார் ஓட்டிக்கொண்டு வந்தார்… ரம்யா சிறிது நேரம் அமைதியாக இரு என்று அப்பா கூற அவளோ அப்பா நீங்கள் முன்னாடி பார்த்து வண்டியை ஓட்டுங்கள் என்று சொன்னாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!