Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விலகாதே உயிரே

Vilagaathae Uyirae 5

Episode 5

அனைவரும் ஒரு வழியாக தீபாவின் வீட்டை அடைந்ததும் மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துட்டாங்க என்று வாசலில் இருக்கும் ஒருவர் சொல்லிக் கொண்டு உள்ளே போக வாங்க மாப்பிள்ளை என்று அனைவரும் தேவாவை வரவேற்க பின்னாடியே அவர் வீட்டார்களையும் வரவேற்றார்கள்……

அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் ஒருவர் பொண்ண காபி எடுத்துட்டு வர சொல்லுங்க என்று சொல்லவும் தீபா காபி எடுத்துக் கொண்டு வந்தாள்….

அதைப் பார்த்த தேவா அப்படியே மெய் மறந்து நின்று கொண்டு இருந்தான்…



Advertisement

அங்கே பிரபுவும் அமர்ந்திருக்க உடனே அவர்களின் அப்பா பேச வேண்டியதெல்லாம் நம்ம பேசி இருக்கலாமா என்று கேட்டார்..

மாப்பிள்ளை தீபா கிட்ட ஏதாவது நீங்க பேச வேண்டியது இருக்கா என்று கேட்க..

அவன  விட்டா விடிய விடிய அவன் பேசிட்டு தான் இருப்பான் ….கல்யாணம் முடிஞ்சு எல்லாம் பேசட்டும் என்று தேவாவின் அப்பா சொல்லவும்…

Advertisement

சரி அப்போ உங்களுக்கு சம்மதம் தானே தேவாவ தீபாவுக்கு பேசி முடிச்சிட்டு ,அதே கையோட ரம்யா, பிரபு  நிச்சயதார்த்தத்தை முடித்துவிடலாம் என்று சொல்லவும்…

Advertisement

ரம்யாவிற்கு தூக்கி வாரி போட்டது..

அவள் அம்மாவிடம் என்னம்மா சொல்றீங்க என்கிட்ட எதுவுமே சொல்லாம கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க….

வாய மூடிட்டு அமைதியா இரு ரம்யா நடக்கிறது மட்டும் பாரு தேவையில்லாம எதுவும் பேசாதே என்று அம்மா சொல்லவும்…

Advertisement

அப்பா என்ற ரம்யா வாயை திறப்பதற்குள் எங்களுக்கு சம்மதம் தான் நான் இப்பவே தாம்பூலம் மாத்திக்கலாம் என்று ரம்யாவின் அப்பாவும் சொன்னார்..

உடனே ரம்யாவிற்கு இஷ்டம் இல்லாமல் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு இருக்கவும்…

என்னாச்சுமா  என்ன வேண்டும் என்று தீபாவின் அப்பா கேட்க..

உடனே ரம்யா நான் உங்கள் மகனிடம் கொஞ்சம் பேச வேண்டும் அதன் பிறகு தாம்பளம் மாற்றிக் கொள்ளலாம் என்று  கூற அனைவரும் ரம்யாவை பார்த்தார்கள்…..

உடனே தீபாவின் அப்பா சரி அதுக்கு என்ன போய் பேசிட்டு வாமா ரம்யா ….

தேவா அப்படியே நீங்களும் ஏதாச்சு தீபா கிட்ட பேசணும் நான் பேசிக்கோங்க என்று சொல்லவும்…

உடனே அங்கே ஒரு பாட்டி நாங்கெல்லாம் அந்த காலத்துல என்று ரம்யா பிரபுவிடம் பேச ரூமுக்குள் போகும்போது ஆரம்பித்தால்…

இந்த காலத்துல எல்லா பொண்ணுங்களும் ரொம்பவே பாஸ்டா இருக்காங்க என்று ரம்யாவை பார்த்து சொல்லவும்…

ரம்யா எதுவும் கண்டு கொள்ளாமல் ரூமுக்குள் பிரபுவிடம் பேச சென்றாள் …

மறுபுறம் தேவாவும் தீபாவும் பேசிக்கொண்டு இருக்க தேவா அவளை வர்ணித்துக் கொண்டிருந்தான்…

நீ  இருக்கும் இடமெல்லாம்

உன்    அழகை அள்ளித்

தெளித்துவிடுகிறாய்

போலும்,அதனால்     தான்..

நீ இருக்கும்     இடமெல்லாம்

அழகாவே     காட்சியளிக்கின்றன……..

சரிங்க போதும் என்று அவள் தீபா வெக்கப்பட்டு தலை குனிந்தால்…..

உன் அப்பாவிடம் சொல்லி திருமண நாளை சீக்கிரம் முடிவு பண்ண சொல்லு…

என்னால் உன்னை இவ்வளவு தூரத்தில் நின்று பார்க்க முடியாது தினமும் உன்னை என் பக்கத்தில் வைத்து பார்த்து ரசிக்க வேண்டும் என்னுடன் சீக்கிரமாக வந்து விடு என்று தேவா கூற,

இப்போ அதற்கென்ன சொல்லிவிட்டால் போச்சு நீங்களே உங்கள் மாமாவிடம் போய் பேசுங்கள் என்று தீபா சொன்னாள்….

இவர்களது ரொமான்ஸ் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அந்தப் பக்கம் ரம்யா பிரபுவிடம் பேசுவதற்காக அறைக்குள் வந்தாள்…

அவன் அருகில் நின்று ரம்யா…

Mr Prabhu….

நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்…

சொல்லுங்கள் ரம்யா என்று பிரபு கூற…

அது….

அது வந்து….

என்னாச்சு ரம்யா என்று கேட்டான் பிரபு….

இல்லை நீங்கள் முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள் பிறகு நான் சொல்ல வந்ததை சொல்கிறேன் என்றாள்…

பிரபு தன்னை பற்றி அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்…

அவனது படிப்பு வேலை நண்பர்கள் என அனைத்தையும் அவளிடம் சொன்னான்….

இப்போது ரம்யா சொல்ல தொடங்கினால் பிரபு நான் பிஇ முடித்து இருக்கிறேன் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை என்று சொல்ல

அதனால் என்ன ரம்யா திருமணம் முடிந்து பிறகு கூட நீ படித்துக் கொள் என்று அவன் அவளை சொல்ல விடாமல் வாயடைத்தான்….

இல்லை எனக்கு…..குகு….

அது வந்து….

எல்லாமே நான் பார்த்துக் கொள்கிறேன் திருமணத்திற்கு பிறகு உன் விருப்பம் தான் என் விருப்பம் நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் உனக்கு என்ன பண்ண பிடிக்கிறதோ பண்ணு என்று அவளை பேசவே விடவில்லை……

இல்லங்க பிரபு அது வந்து…..

ரம்யா நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள்… என்று அவன் சொல்லிக் கொண்டே போனான்…..

அவள் மனதிற்குள்ளே அட யாருடா இவன் நம்ம வாயை திறக்கவே விட மாட்டாங்க என்று நினைத்துக் கொண்டாள்..

அதற்குள் அரை கதவின் வெளியே அந்த பாட்டி டப் டப் என்ற தட்டினாள்….

எவ்வளவு நேரம் தான் பேசுறீங்க போதும் வெளியே வாங்க என்று சொன்னாள்….

உடனே அவன் பாட்டி  கூப்பிடுறாங்க வா வெளியே போலாம் என்றான்….

இந்த பாட்டி வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணுது என்று ரம்யா முணுமுணுத்துக் கொண்டே வெளியே வந்தாள்..

தீபாவும் தேவாவும் வந்து சபையில் அமர்ந்தார்கள்…

அதன் பின் ரம்யாவும் பிரபுவும் அமர்ந்தார்கள்….

இரண்டு பெண்களுக்கும் மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா மாப்பிள்ளைக்கும் பெண்ணை பிடித்திருக்கிறதா என்று கேட்க ரம்யா வேறு வழியில்லாமல் தலையசைத்தாள்…

அதன்பின் என்ன ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் நிச்சயம் முடிந்த கையோடு அடுத்த மாசம்  திருமணம் வைத்துக் கொள்ளலாம் இப்போது இரு வீட்டார் சம்மதத்துடன் தாம்பூலத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் சொன்னதும் தேவாவின் அப்பாவும் தீபாவின் அப்பாவும் தாம்பரம் மாற்றிக் கொண்டார்கள்….

திருமணம் ஆயிரம் காலத்து பயிர் அதை பெரும் அரை நொடியில் முடிவு பண்ணி விட்டார்கள்….

இப்போது அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி….

தாம்பூலம் மாற்றிய கையோடு கை நினைத்து விட்டு செல்லலாம் என்று பாட்டி சொன்னதும் அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள்…

பிரபுவிற்கு தேவாவிற்கும் தீபா ரம்யா சாப்பாடு பரிமாறினார்கள்….

தேவா அவன் இலையை பார்க்கவே இல்லை தீபாவின் முகத்தை தான் பார்த்துக் கொண்டே இருந்தான்….

அட நல்லா சாப்பிடுங்க மாப்பிள்ளை என்று தீபாவின் அப்பா குரல் கேட்டதும் அப்போதுதான் குனிந்து இலையைப் பார்த்து சாப்பிட தொடங்கினான்….

சாப்பிட்டு முடித்த பின் பிரபு கை கழுவ நின்று கொண்டிருந்தான் அப்போது ரம்யா அவன் அருகில் போய் நான் உங்களிடம் முக்கியமாக ஒன்று பேச வேண்டும் உங்கள் போன் நம்பரை கொடுங்கள் என்று கேட்டாள்….

அவனோ சரி தருகிறேன் என்று சொல்லி நம்பரை கொடுத்தான்….

ஒரு வழியாக நம்பர் வாங்கி விட்டாள் ரம்யா இனிய பிரபுவிடம் தனக்கு இந்த திருமணத்தில்  விருப்பம் இல்லை என்று சொல்லவேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தாள்…

அதன் பின் அனைவரும் விடைபெற்றார்கள்… நல்ல நாள் குறித்து நிச்சயதார்த்தம் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்…

அன்று இரவு ரம்யா மாடியில் போன் பேசிக் கொண்டிருப்பதை அவள் அண்ணன் கவனித்தான்.

ரம்யா….

என்று அண்ணா அழைக்கும் குரல் கேட்டதும் வேகமாக போனை வைத்து விட்டாள்…

என்னாச்சு அண்ணா சொல்லு….

என்று கேட்டாள்…

நீ யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டான்…

அவளோ உடனே தனது தோழியென்றாள்…

பொய் சொல்லாதே ரம்யா நீ ராஜேஷ் கூட தானே பேசிக்கொண்டு இருக்க எனக்கு தெரியாது என்று நினைத்து இருக்கியா????

😡😡😡😡

என்று கேட்டான்…..

அவளோ…

தயங்கி தயங்கி….

ஆம் என்றாள்….

இனி அவனுடன் பேசுவதை பார்த்தால் நடக்கிறது வேறு என்று கோபமாக அவளை எச்சரித்துவிட்டு கிளம்பினான்….

ரம்யாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவள் அண்ணன் இடமும் அவள் எதுவும் சொல்லவில்லை…

சரி பிரபுவிடம் பேசலாம் என்று போன் பண்ணினாள்….

எப்படியாவது இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று அவனிடம் சொல்லி அவனை திருமணம் வேண்டாம் என்று சொல்ல சொல்லி விடலாம் என்று திட்டம் போட்டாள்….

பிரபுவுக்கு ஃபுல் ரிங் போய் கட் ஆனது….

என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டு கீழே இறங்கி அவள் அறைக்குள் போனாள்…

அதற்குள் அவள் அம்மா இந்த நேரத்துல மாடியில இருட்டுக்குள்ள தனியா எல்லாம் போக கூடாது கல்யாணம் பேச முடிச்சாச்சு ….

அப்படி என்று சொல்லி இனிமேல் நீ கம்ப்யூட்டர் கிளாஸ் ரூம் போக வேண்டாம் வீட்டிலேயே இரு என்று அம்மா கூற…

அவளோ அம்மா இன்னும் திருமணத்திற்கு நிறைய நாள் இருக்கிறது அதற்குள் நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்து விடுவேன் சர்டிபிகேட் வந்ததும் நான் எங்கேயும் போக மாட்டேன் என்று சொன்னாள்…

நீ நான் சொன்னால் எதுவும் கேட்க மாட்ட ….

உன் அண்ணன் தேவா வரட்டும் என்றாள்…

சரி விடு மா… என்று அவள் அப்பா கூறினார்… போகட்டும் திருமண தேதி இன்னும் குறிக்க வில்லையே அதுவரை அவள் போகட்டும் .. கோர்ஸ் முடித்துவிட்டு வரட்டும் வீட்டுக்குள்ளே  இருந்து என்ன செய்யப் போகிறாள் என்று அப்பா கூற…

வீட்டுக்குள்ள இருந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று அம்மா கத்த….

உங்க பொண்ணுக்கு ஒரு சமையலும் தெரியாது அதை கத்துக்கலாம் இல்ல… போற இடத்துல என்ன கம்பியூட்டர் வச்சா சமைக்க போற….

இல்ல அவ மாமியார் தான் இந்த சர்டிபிகேட் வைத்து சாமி கும்பிட போறாங்களா….

ஒழுங்கா வீட்ல இருந்து சமையலை கத்துக்கோ என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரம்யா வேகமாக ரூமுக்குள் போய் அறை கதவை மூடினாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!