Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –26

காலேஜ் முடிந்ததும் கண்மணியை அழைத்துக் கொண்டு சூப்பர்மார்க்கெட்டில் விட்ட குணா நேராக கோச்சிங் சென்டருக்குச் செல்ல அங்கு கமலி காத்திருந்தாள்

”அய்யோ இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே, எங்க போனாலும் வருதே, இவள் இல்லாத இடம்னு எதுவும் இல்லையா” என மனதுள் புலம்பிக் கொண்டே வெளியே காட்டிக் கொள்ளாமல்

”வா கமலி என்ன இந்த பக்கம்”



Advertisement

”கோச்சிங் சென்டருக்கு எதுக்கு வருவாங்க படிக்கத்தான்”

”புரியலையே”

”நானும் இங்க சேர்ந்துட்டேன்”

Advertisement

”உனக்கெதுக்கு இதெல்லாம் உனக்கு எல்லாம் தெரியுமே”

Advertisement

”அப்படின்னு யார் சொன்னது, எனக்கு தெரியாததை கூட உன்கிட்டயிருந்து தெரிஞ்சிக்கலாம்னு வந்திருக்கேன், பீஸ் கூட கட்டிட்டேன் குணா, இங்க பாரு ரசீது”

”இதப்பாரு இங்க நான் டீச்சர், என்கிட்ட நீ கூட படிக்கறவன்கிட்ட பேசற மாதிரி பேசக்கூடாது, அப்புறம் மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க”

”சாரி சார், இனிமேல சார், நான் கரெக்டா சார், பேசறேன் சார்” என அவள் பேச அவனுக்கு கோபம் வந்தது

Advertisement

ஆனாலும் வேலை முக்கியம் என கருதி பாடம் எடுக்கச் சென்றான், அங்கு கமலியும் அமர்ந்து பாடம் கவனிக்கிறாளோ இல்லையோ குணாவையே சைட் அடிக்க குணாவோ அவள் பக்கம் கூட பாராமல் பாடம் எடுத்து முடித்துவிட்டு வெளியே வந்தான், வழக்கம் போல கண்மணி காத்திருப்பாள் என நினைத்தான், ஆனால் அவள் இல்லை என்றதும் பயந்தான், பின்னால் வந்த கமலியோ

”குணா கண்மணி எங்க”

”அதான் தெரியலை நான் போய் ஹாஸ்டல்ல அவள் இருக்காளான்னு பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு அவன் செல்ல கூடவே கமலியும் சென்றாள்

”நீ எதுக்கு வர்ற”

”கண்மணியை காணலை, அவள் எனக்கு தோழியாச்சே, அவள் மேல எனக்கு அக்கறை இருக்க கூடாதா என்ன” என சொல்ல அவனோ நொந்துப் போனான்.

ஹாஸ்டலுக்கு வந்ததும் கமலியே முன்னாடி சென்று வார்டனிடம் பேசி கண்மணியை அழைத்து வந்தாள், அவள் வரவும் குணாவோ

”என்னாச்சி கண்மணி ஏதாவது பிரச்சனையா” என அச்சத்துடன் கேட்க அவளோ முகம் வாடியிருந்தாள், பேசாமல் நின்றாள், கமலிக்கே அவளின் செயல் புதிராக இருந்தது

”கமலி என்னாச்சின்னு கேட்கறேன்ல பதில் சொல்லு“

”கவின் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்திருந்தான்“

”ப்ச் அவனை” என குணா பொங்க கமலிக்கு கவின் மீது கோபம் எழுந்தது

”கவின் உன்னை டார்ச்சர் பண்ணானா”

”கடையில பயங்கர கலாட்டா பண்ணிட்டான், முதலாளி என் மேல கோபப்பட்டு என்னை வேலையை விட்டு விரட்டிட்டாரு” என சொல்லி கண்கள் கலங்க குணாவோ

”அப்பவே என்னை தேடி வந்திருக்கலாம்ல, நான் அந்த கடை முதலாளிகிட்ட பேசியிருப்பேன்ல“

”வரலாம்னு இருந்தேன் ஆனா அங்க” என அவள் கமலியை பார்க்க குணா புரிந்துக் கொண்டான்

”கமலி என்ன இது, அந்த கவின் அடங்கவே மாட்டானா என்ன” என குணா கமலியிடம் கோபம் கொள்ள அதற்கு கமலியோ

”குணா எனக்கு எதுவும் தெரியாது”

”என்ன தெரியாதுங்கற, நீ என்னடான்னா கோச்சிங் க்ளாஸ்க்கு வந்த, கவின் என்னடான்னா சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் கலாட்டா பண்ணியிருக்கான், என்ன இரண்டு பேரும் பேசி வைச்சி செய்றீங்களா, நட்பு நட்புன்னு சொல்லிக்கிட்டு டபுள் கேம் விளையாடறியா கமலி” என கோபமாக கத்த கமலி பதறினாள்

”குணா கோபப்படாத, எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது“

”இதோட நிறுத்திக்க, உன் மேல பாவம் பார்த்து உன்னை எங்க கூட சேர்த்துக்கிட்டது நான் பண்ண தப்பு, நீயும் வேணாம், உன் நட்பும் வேணாம், இனிமேல எங்களை தொந்தரவு செய்யாத, போ போய் உன் அண்ணன்கிட்டயும் சொல்லு, உனக்காகதான் அவனை நான் உசுரோட விட்டுவைச்சேன்

இப்ப நீயே இல்லைங்கறப்ப அவனை நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு தெளிவா சொல்லிடு, இனி அவன் கண்மணி பக்கம் வந்தான் தொலைச்சிடுவேன்” என மிரட்டிவிட கமலிக்கு பயம் வந்தது, கண்மணியோ குணாவிடம்

”குணா போதும் கிளம்பு” என அதட்ட அதில் அவனும் கிளம்பிவிட கமலியோ கண்மணியிடம் பேச வர அவளோ பேச மறுத்து ஹாஸ்டலுக்குள் சென்றுவிட கமலிக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது, கோபத்துடன் கவினை சந்திக்க சென்றாள்

கவினோ தனது அறையில் பலவித குழப்பங்களுடன் இருக்க அவனுடன் சண்டைக்கு நின்றாள் கமலி

”டேய் பைத்தியம் உனக்கு என்னடா பிரச்சனை, ஏன்டா என் விசயத்தில தலையிடற, உன்னால குணா என்னை அவமானப்படுத்தி விரட்டிட்டான் இப்ப உனக்கு சந்தோஷமா”

”ஏன் கத்தற போ இங்கிருந்து“

”ஏன்டா கண்மணி வேலை செய்ற இடத்தில போய் பிரச்சனை பண்ண“

”பின்ன அவள் செய்ற வேலையை பார்த்துட்டு சும்மாயிருக்க சொல்றியா“

”அப்படி என்ன செய்தா”

”என்ன செய்தாளா, அவளோட அப்பா அம்மா இப்ப எங்க இருக்காங்க தெரியுமா”

”அவமானத்தால ஊரை விட்டு போனதா சொன்னா”

”கரெக்ட்தான், அவமானத்தால ஊரைவிட்டு போனவங்க நேரா கோவையில இறங்கி அந்த குணாவோட வீட்ல தங்கிட்டாங்க”

”அச்சோ நிஜமாவா”

”நிஜம்தான், ஊர்ல இருந்து என் நண்பன் விசாரிச்சி எனக்கு சொன்னான், அதை கேட்டதும் எனக்கு எப்படியிருந்தது தெரியுமா, நீ வேற அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே வீட்ல தங்கப் போறதா வேற சொன்ன, அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு வேற சொன்ன, அதையெல்லாம் கேட்கற எனக்கு எப்படியிருக்கும் சொல்லு, அதான் அவள்கிட்ட பேச போனேன், ஆனா அவள் திமிரா நடந்துக்கிட்டா, பதிலுக்கு நான் கலாட்டா பண்ணிட்டு வந்துட்டேன்”

”முட்டாள் அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துட்ட, அவங்களுக்குள்ள கல்யாணம் ஆகலை, வெறும் மோதிரம் மாத்தியிருக்காங்க தாலியில்லை, மெட்டியில்லை, குங்குமம் இல்லை, எதுவும் இல்லை, உன்கிட்டயிருந்து அவளை காப்பாத்த குணா சொன்ன பொய் இது“

”பொய்யோ மெய்யோ குணாவோட அவள் சேர்ந்து வாழக்கூடாது”

”அவள் நல்ல பொண்ணு, கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் அவங்க ஒண்ணா வாழ மாட்டாங்க”

”அப்படின்னு நீதான் சொல்லிக்கனும், எனக்கு பயமாயிருக்கு கமலி, வேற வேற இடத்தில தங்கினா கூட பரவாயில்லை, ஒரே வீட்ல ஒண்ணா தங்கறப்ப ஏதாவது ஒரு சூழ்நிலையில அவங்களுக்கும் அறியாம தப்பு செய்துட்டா என் கதி என்ன”

”சீய் எப்ப பாரு சந்தேகப்புத்தியோடவே இருக்காத கவின், குணா மேல எனக்கு நம்பிக்கையிருக்கு, அவன் கண்மணியை காப்பாத்ததான் பார்க்கறான்”

”அப்படின்னு உனக்கு உறுதியா தெரியுமா நான் நம்ப மாட்டேன்“

”சரி விடு உன்கிட்ட இப்ப எப்படி சொன்னாலும் நீ நம்ப மாட்ட, ஆனா நேர்ல பார்த்தா நம்புவல்ல“

”எப்படி”

”அவன் வாழ போற வீட்டுக்கு எதிர் வீட்ல நாம வாழலாம்”

”புரியலை“

“நான் ஒரு வீட்டை வாடகைக்கு பார்த்து வைச்சிட்டேன், இனிமேல நாம அங்கதான் தங்க போறோம்“

”லூசு சொந்த வீட்டை விட்டுட்டு எதுக்கு வாடகை வீடு”

“அந்த வாடகை வீட்டுக்கு எதிர்க்கதான் குணாவோட வீடு இருக்கு, காலேஜ்லயும் சரி அவன் வேலை செய்ற இடத்திலயும் சரி, நான் கண்காணிக்கிறேன், ஆனா அவங்க வீட்ல எப்படியிருப்பாங்கன்னு தெரிஞ்சிக்கனும்ல அதுக்குதான் இந்த ஏற்பாடு”

”சரி எப்ப அங்க போறோம்”

”முதல்ல அவங்க போகட்டும் அன்னிக்கே நாமளும் போகலாம்”

”குணா மட்டும் கண்மணியோட வாழறான்னு தெரிஞ்சது அவங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட நான் தயங்க மாட்டேன்” என கோபத்தில் பொங்கி எழுந்து சென்றான் கவின், அவனது பேச்சால் கமலி பயந்துவிட்டாள்.

இரண்டு நாள் காலேஜ் முடிந்தது, அடுத்த நாள் சனிக்கிழமை வரவும் குணா வீட்டிற்கு தேவையான பொருட்களை கீழ் போர்ஷனில் இருந்து வாங்கிக் கொண்டான், மறுநாள் ஞாயிறு காலையிலேயே கண்மணியுடன் புது வீட்டில் குடிபுகுந்தான், அதே நேரம் கவினும் கமலியும் கூட எதிர் வீட்டிற்கு குடி வந்தார்கள்.

இந்த 3 நாட்களும் குணா கமலியை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை, அதுவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது, ஆனால் இப்போது எதிர் எதிர் வீடு என்பதால் வேறு வழியின்றி அவளை பார்த்துதானே ஆக வேண்டிய சூழ்நிலையில் சிக்கினான் குணா, அதற்காகவே வெறுத்தான், அவனின் கோபத்தைக்கண்டு கண்மணி ஆறுதல் படுத்தினாள்

பால் காய்ச்சினாள், அதை அனைவருக்கும் தந்தாள், மற்றவர்கள் தந்த பொருட்களை வீட்டில் சரியான இடத்தில் அடுக்கி முடிக்கவே மதியம் ஆகிவிட அதற்கே அவள் ஓய்நதுவிட்டாள், குணாவோ வெளியில் இருந்து சாப்பாடு வாங்கி வர முயல அதை மற்றவர்கள் தடுத்தார்கள், அவர்களே அன்றைய நாள் முழுவதும் சாப்பாடுதர அதை சாப்பிட்டு முடித்தார்கள்

கமலிக்கும் கவினுக்கும் அவ்வளவு பெரிய வீடு இருந்தும் வசதியிருந்தும் பால்கனியே கதியே என கிடந்தார்கள், எதிர் வீட்டில் என்ன நடக்கிறது என தெரிந்துக் கொள்வதில் அப்படியொரு ஆர்வம், கண்மணியோ தன்னை குணாவின் மனைவியாகவே பாவித்துக் கொண்டாள், தாலி தெரியுமாறு அணிந்தாள், குணாவுடன் இணக்கமாக பேசி பழகினாள்

அவனும் இது அனைத்தும் ட்ராமா என நினைத்துக் கொண்டாலும் அவனும் அவளுடன் இணக்கமாகவே பேசிக் கொண்டிருந்தான், அக்காட்சியைக்காணும் போதெல்லாம் கவினுக்கு கோபம் தலைக்கேறியது, அவனை கமலியே சமாதானம் செய்தாள்.

இரவானது அனைவரும் சாப்பிட்டு முடித்து ஓய்வெடுக்க செல்ல குணாவும் தன் வீட்டிற்குள் வந்தான், அங்கு கண்மணியிருக்கவும் சிரித்தான்

”எதுக்கு இந்த சிரிப்பு” என அவள் ஆசையாக கேட்க அவனோ

”இப்படியெல்லாம் எனக்கு நடக்கும்னு நான் கனவுல கூட காணலை கண்மணி”

”எப்படி” என சொல்லிக் கொண்டே அவன் பக்கத்தில் நெருங்கி வந்து அவனது தோளில் சாய்ந்துக் கொள்ள அவனோ மெல்ல சிரித்து அவளை தன்னை விட்டு விலக்கி விட்டான்

”என்னாச்சி குணா”

”ஒண்ணுமில்லையே“

”ஏன் என்னை ஒதுக்கனும்”

“சே சே, நான் எங்க ஒதுக்கினேன், ரொம்ப டயர்டா இருக்கு நான் போய் தூங்கறேன், நீயும் தூங்கு நாளைக்கு காலேஜ் இருக்குல்ல” என சொல்லியவன் பாய் தலையணையுடன் வீட்டை விட்டு வெளியேறி முன்னால் இருந்த திறந்த வெளியில் பாய் விரித்து தலையணை வைத்து அமர்ந்தான், அதைக்கண்ட கண்மணி வியந்தபடியே அவனிடம் சென்று அமர்ந்தாள்

“குணா எதுக்காக இங்க வந்த, உள்ளே அவ்ளோ இடம் இருக்குல்ல அங்க வந்து தூங்கு வா”

”என்னது உள்ளயா சரியா போச்சி போ, நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, வெளியதான் கல்யாணம் ஆச்சின்னு பொய் சொன்னேன், சொன்ன பொய்க்காக உன்கிட்ட அத்துமீறி நடக்க முடியாதே”

”தூங்கறதுல என்ன பிரச்சனை வந்துடும்”

“இல்லை கண்மணி, அது சரியா வராது, நீ போய் தூங்கு, கதவை சாத்தி தாள்பாள் போட்டுக்க”

”என்னாச்சி குணா உனக்கு, முன்னெல்லாம் என்னை கட்டிப்பிடிப்ப, முத்தம் தருவ ஆனா இப்ப நான் உன் மனைவின்னு ஆனபின்னாடி கூட என்னை நெருங்க மாட்டேங்கற“

”எப்ப நீ என் மனைவியான”

”அதான் தாலியை”

”அது அவசரத்தில நடந்த ஒரு விபத்து, அதை நான் கல்யாணமாவே நினைக்கலை நீயும் அப்படியே நினை”

”சரி காதலியோட பேசற மாதிரி கூட பேசலைன்னா எப்படி”

”முன்னாடின்னா நான் உனக்கு காதலன், உன் விருப்பப்படி நடந்துக்கிட்டேன், ஆனா இப்ப நான் உனக்கு காவலன், உன்னை பாதுகாக்கறதுதான் என்னோட கடமையே, வேலியே பயிரை அழிக்க கூடாது பாரு, நீ உள்ள போய் தூங்கு, நான் இங்க உனக்கு காவலா இருக்கேன், என்னை தாண்டி யாரும் உன்னை நெருங்க மாட்டாங்க”

”கமலி கவின் இருக்காங்கன்னு பேசறியா”

”அவங்க இருந்தா எனக்கென்ன இல்லைன்னா எனக்கென்ன, நான் அவங்களுக்காக பேசலை உண்மையாவே நான் உனக்கு காவல்காரன்தான்”

”குணா”

”கண்மணி உணர்ச்சி வசப்படாத, அப்புறம் உன் லட்சியம் என்னாகும், நாம படிக்கனும் பெரியாளாகனும், நல்ல வேலைக்குப் போகனும், லைப்ல செட்டில் ஆகனும், கல்யாணம் செய்துக்கனும், ஒண்ணா வாழனும், குடும்பம் குழந்தைகள்ன்னு சந்தோஷமா வாழனும், பின்னாடி வர்ற சந்தோஷத்துக்காக இப்ப நாம சில விசயங்களை தியாகம் செய்றது தப்பில்லை“

”உன்னை நினைச்சா பெருமையா இருக்கு குணா, உன்னைப் போல ஒருத்தனை காதலிச்சதுக்காகவே நான் கர்வப்படறேன் ஐ லவ் யூ குணா” என்றாள் முதல் முறையாக

அதற்கே அவன் மெய்சிலிர்த்துப் போய் அவளை அணைக்க முயன்று பின் தன் தவறை உணர்ந்து சட்டென விலகி

”குட் நைட் கண்மணி” என்று சொல்லிவிட்டு அவன் படுத்து தூங்க, கண்மணியும் பெருமூச்சுவிட்டு உறங்கச் சென்றாள்

நடப்பதை கவனித்த கமலிக்கும் கவினுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி, அவர்கள் கணவன் மனைவி என சொன்னாலும் தனித்தனியாகதான் வாழ்கிறார்கள் என்றதுமே இருவரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் போனது.

அன்று இரவு வீட்டிற்குள் கண்மணி குணாவை நினைத்தபடியே தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தாள், வெளியே குணாவோ கண்மணி கைகெட்டும் தூரத்தில் தனது கண்பார்வையில் இருப்பதை நினைத்து மகிழ்ந்தான், அவனுக்கு நிம்மதி வந்தது, கவினோ கமலியை உறங்க அழைக்க அவளோ வர மறுத்தாள்

”ஏய் லூசு, அதான் குணா அங்க படுத்து தூங்கறானே, அப்புறம் என்ன வா நாம போய் தூங்கலாம்”

”இல்லை கவின், நாம இருக்கறதை பார்த்துட்டு குணா நாடகம் ஆடறான்னு தோணுது, விடியறவரைக்கும் நான் இங்கதான் இருப்பேன், பாதி ராத்திரியில குணாவோ இல்லை கண்மணியோ ஒண்ணு சேர்ந்துட்டா”

”சே இவ்ளோ சந்தேகப்புத்தியா உனக்கு”

”ப்ச் எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைக்குதான், நீ போ நான் வரலை“

“இல்லை பரவாயில்லை நானும் இருக்கேன்”

”எதுக்கு?”

”உனக்கு துணைக்கு”

”உனக்கும் சந்தேகம் வந்துடுச்சா“

”சே சே”

”ஏய்”

“நீ சொன்ன பின்னாடி லைட்டா சந்தேகமா இருக்கு”

”சரி பார்க்கலாம் என்னதான் நடக்குதுன்னு” என கமலி சொல்ல கவினும் உறங்காமல் பால்கனியில் அமர்ந்து குணாவையும் கண்மணியிருந்த வீட்டையும் கண்காணிக்கலானான்.

குணாவோ எழுந்து அமர்ந்தபடியே எதேச்சையாக சோம்பல் முறிப்பது போல முறித்தபடியே எதிர்வீட்டைப் பார்த்து திடுக்கிட்டு சட்டென படுத்து விட்டான்

”பாவிங்களா இரண்டும் என்ன ஆந்தைங்க மாதிரி விழிச்சிக்கிட்டு இருக்காங்க, சரியான சந்தேகபிசாசுங்க, இவங்க முன்னாடி எப்படிதான் வாழறதோ” என புலம்பிக் கொண்டே அசதியில் கண்கள் மூடி உறங்கலானான் குணா.

கண்மணியும் எதேச்சையாக ஜன்னல் திறந்துப் பார்த்தாள், குணா அசந்து உறங்குவதைக்கண்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவள், எதிர் வீட்டில் கவினும் கமலியும் தங்களையே கவனிப்பதைக்கண்டு நொந்துப் போய் படுக்கையில் படுத்து உறங்கலானாள்.

மறுநாள் பொழுது விடிந்ததும் கண்மணி அவசர அவசரமாக குளித்து ரெடியாகி வந்தவள் 2 கப் காபி தயாரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் வந்தவளைக்கண்ட கவினுக்கு வெறி ஏறியது.

”ப்ச் அய்யோ முடியலையே, என்ன ஒரு அழகு, இவளை நான் அடைய பாக்கியம் செய்திருக்கனும், ஓ என்ன அது காபியா, எனக்கு தந்தா நான் அமிர்தமா நினைச்சி குடிச்சிருப்பேனே, ஆனா போயும் போயும் அவனுக்கு தர்றாளே, பார்க்கிறேன், இன்னும் எத்தனை நாளுக்குன்னு, கண்மணி என் அழகு தேவதையே” என ஜொள் விட்டவனின் தோளில் கமலி பலமாக ஒரு அடி போட அதில் கவின் திடுக்கிட்டான் கமலியோ

”ரொம்ப வழியுது போ போய் துணியில துடைச்சிக்க” என கிண்டல் செய்ய கவினோ நொந்துப் போனான்.

கண்மணியோ எதிர்வீட்டை ஒரு நொடி பார்த்துவிட்டு

”சே காலையில இவங்க முகத்திலயா முழிக்கனும்” என நினைத்துக் கொண்டே குணாவிடம் வந்தாள்

அவனோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான், தூக்க கலக்கத்தில் அவனின் வேட்டி கலைந்திருக்க அந்த நிலையில் அவனை பார்த்ததும் தன்னால் கண்மணிக்கு வெட்கம் வந்தது, வெட்கத்துடனே அவனருகில் அமர்ந்து அவனது உடையை சரிசெய்ய அந்த அசைவில் அதிர்ந்து விருட்டென எழுந்து கண்மணியைக்கண்டதும்

”ஏய் என்ன செய்ற நீ” என பதற அவளோ நாணத்துடன்

”உங்க துணி கலைஞ்சிருந்தது அதை சரிசெய்தேன்”

”வேணாம் கண்மணி இப்படி எதுவும் செய்யாத ப்ளீஸ்”

”ஏன் என்னை வெறுக்கிறீங்க“

”நான் வெறுக்கலை, நமக்குள்ள இடைவெளி இருக்கனும், அது நம்ம படிப்புக்கு ரொம்ப நல்லது” என சொல்லியவன் அவளை ஏற இறங்கப் பார்த்து ஆசைக்கொண்டான்

”ஆஹா கண்மணி அதுக்குள்ள குளிச்சி முடிச்சிட்டு காபியோட வந்திருக்க, இந்த காபி எனக்கா“

”ஆமாம் உனக்குதான் இந்தா வாங்கி   குடி“

 என சொல்ல அவனோ பெட் காபியை குடித்தபடியே அவளை ரசிக்க ரசிக்க அவளுக்கு கூச்சமே எழுந்தது.

”குணா அப்படி பார்க்காத எனக்கு என்னமோ செய்யுது”

”எனக்கும்தான்”

”கமலி கவின் இரண்டு பேரும் நம்மளையே கண்காணிக்கறாங்க, அமைதியா இரு குணா, நான் போய் டிபன் செய்றேன்” என சொல்லிவிட்டு அவள் வீட்டிற்குள் சென்றுவிட குணாவோ காபியை குடித்தபடியே எழுந்து சென்று எதிர்வீட்டைப் பார்த்தான், கவினும் கமலியும் இருக்கவே அவனுக்கு காபி கூட கசந்தது

”சே இதுங்க தொல்லை தாங்க முடியலை” என சத்தமாக சொல்லிவிட்டு செல்ல அதைக்கேட்ட கவினோ

”பாரு அவன் நம்மளைத்தான் சொல்றான்”

”தெரியுது”

”வா போலாம்”

”இல்லை வேற என்ன நடக்குதுன்னு நான் பார்க்கனும், நீ போ” என சொல்லியும் கவின் செல்லாமல் இருந்தான்.

குணாவோ காபியை பருகிவிட்டு குளிக்க வீட்டிற்குள் செல்ல அங்கு அவளோ டிபன் வேலையில் சமைத்துக் கொண்டிருக்க அதைக்கண்டவன்

”ஆமா என்ன சமைக்கற“

”இட்லி மாவு இல்லை கோதுமா மாவு இருக்கு அதான் சப்பாத்தி செய்யலாம்னு”

”சப்பாத்தி வேணாம் பூரி ஓகே செய்வியா“

”கண்டிப்பா செய்றேன் குளிச்சிட்டு வா” என சொல்லிவிட்டு அவள் சமையல் வேலையை செய்ய குணாவோ குளிக்க தேவையானவற்றை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான். குளித்து முடித்து இடுப்பில் ஒரே ஒரு துண்டை கட்டிக் கொண்டு ஈர தலையும் ஈர உடம்புடன் வெளியே வந்தவனைக்கண்ட கண்மணிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது

”சீய் குணா” என அவள் நாணத்தில் கண்களை மூடிக்கொள்ள அதைக்கண்டவனுக்கு ஆர்வம் அதிகமானது

”ஓய் என்னாச்சி அட வெட்கப்படறியா”

”பின்ன இப்படியா வருவ”

”ஏன் இதுல என்ன ஓஓ சரி சரி” என சொல்லிக் கொண்டே அவளை நெருங்கியவன்

”கண்ணை திறந்து பாரு“

”இல்லை உன்னை இப்படி பார்க்க மனசு அலைபாயுது வேணாம்”

”அப்ப கண்ணை திறக்க மாட்ட சரி திறக்காத அப்படியே இரு” என்றவன் உரிமையுடன் அவளை அணைக்க எண்ணம் கொண்டு அருகில் வந்தான்

பின் தன் தவறை உணர்ந்து சட்டென வீட்டை விட்டு வெளியேறி சென்றான், அந்த சத்தம் கேட்டு கண்கள் திறந்த கண்மணியோ அங்கு குணா இல்லாமல் போகவே அதிர்ந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்.

குணாவோ வெளியே சென்றவன் தனது ஈர தலையை துவட்டிக் கொண்டே எதிர்பக்கம் பார்க்க கவனோ கொலைவெறியுடன் இருந்தான், கமலியோ அநியாயத்திற்கு வெட்கப்பட்டு சிரித்தாள், அதைக்கண்ட குணாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!