Skip to content
Post Views: 759
திருவிழா முடிந்த பின் நாட்கள் அழகாக தான் சென்று கொண்டு இருந்தது … ரித்திகா அந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு … அன்று அவளின் முதல் பொது தேர்வு … இப்போது நிரவி ரித்திகாவுடன் ஒரு இரு வார்த்தைகள் பேச ஆரம்பித்து இருந்தாள் … ஆனால் சிவாவுடன் பேச்சு குறைந்து இருந்தது … இருவரும் பார்க்க நேரமும் அமையவில்லை … சிவாவிற்கு அதன் பின் ஊருக்கு வர வாய்ப்பு அமையவில்லை … அவனும் தன் கடின முயற்சியில் பைலட் ஆகி இருக்க ஒரு தனியார் விமான நிறுவனத்தில் ட்ரைனியாக சேர்ந்துள்ளான் … எனவே அவனால் ஊருக்கு வர முடியவில்லை …
அது போக நிரவியும் படிப்பு ம் பரத நாட்டியம் என அதில் மூழ்கி விட்டாள் … ரித்திகாவிற்கு அனைவரும் வாழ்த்து சொல்ல நிரவியும் சிரித்த முகத்துடன் வாழ்த்து சொன்னாள் … அதே அவளுக்கு சந்தோசமாய் இருந்தது … தேர்வுகள் அனைத்தும் அவள் நல்லபடியாய் முடித்து இருக்க அவள் வீட்டிற்கு வரும் போது சந்தோசமாய் வந்தாள் … நிரவிக்கும் முழு ஆண்டு தேர்வு முடிந்து இருக்க எல்லாரும் ஒரு ட்ரிப் போகலாம் என முடிவு செய்து இருந்தனர் ….
Advertisement
சிவாவும் ஒரு வருடம் கழித்து ஊருக்கு வந்து இருந்தான் … எனவே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஏற்காடு செல்வதாய் முடிவு செய்து இருந்தனர் … அன்று இரவு அனைவரும் அவரவர் காரில் ஏற்காடு கிளம்பினர் …
நள்ளிரவில் ரிசார்ட் சென்று சேர்ந்து இருக்க சோர்வில் ஆளுக்கு ஒரு அறைக்கு சென்று உறங்கி விட்டனர் … அடுத்த நாள் காலையில் தா ம த மா க தான் எழுந்த ன ர் … எழுந்து குளித்து விட்டு வந்தவர்கள் வெளியில் உணவை உண்டு விட்டு வெளியே சுற்றி பார்க்க கிளம்பினர் …பாட்டி தாத்தா அனைவரும் வீட்டிலேயே இருக்க பெரியவர்கள் சிறியவர்கள் மட்டும் சுற்றி பார்க்க சென்றனர் ..
நன்றாக சுற்றி பார்த்து விட்டு ரிசார்ட் வர ரிசார்ட் டில் இருக்கும் சமையல்காரர்கள் சமைத்து வைத்து இருந்தனர் … அதை சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் உறங்கி விட்டு அனைவரும் பேச ஆரம்பித்து இருந்தனர் … ஆண் கள் பெண்கள் அவரவர் கூட்டணியில் பேச ஆரம்பித்து இருக்க நிரவி யும் கார்த்திகாவும் சிரியவர்களை மேய்க்க ஆரம்பித்து இருந்தனர் … ஆரவ் ஆகாஷ் சிவாவுடன் பேச ஆரம்பித்து இருக்க ரித்திகா நிரவி கார்த்திகா இருக்கும் இடத்தில அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தாள் ….
Advertisement
இரண்டு நாட்கள் சந்தோசமாக சென்றது … நாளை கிளம்ப வேண்டும் … அதனால் எங்கும் வெளியில் செல்லாமல் மதியத்தில் இருந்து வீட்டில் தான் இருந்தனர் … மணி ஒன்று இருக்கும் …. பெண்கள் சமைக்க சென்று இருக்க ஆண்கள் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர் … வழக்கம் போல் குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்க அப்போது அர்ஜுனன் அவர்கள் இருக்கும் இடம் வர அனைவரும் அவரை தான் பார்த்தனர் … அவரோ “குட்டிமா உனக்கு போன் ” என கூறி அவளிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார் … அவளும் யார் என்று பார்த்து விட்டு அது ஆஷா என தெரிந்து கொண்டு சந்தோஷமாக பேச ஆரம்பித்தாள் …
Advertisement
கார்த்திகா ரித்திகா இருவரும் குழந்தைகளை வேறு இடத்திற்கு அழைத்து செல்ல நிரவி அதை கூட கவனிக்காமல் பேசி கொண்டு இருந்தாள் … முதலில் ஆஷா கூட பேசியவள் அடுத்து அப்துலிடம் பேசி விட்டு ரியாஸிடம் வம்பு பேசி கொண்டு இருந்தவள் திடீரென வயிறு வலி எடுக்க ஒரு மாதிரி நெளிய அமர்ம்பித்தாள் … வலியால் அவளால் பேச கூட முடியவில்லை …
ரியாஸ் அவளிடம் “பாப்பு என்ன ஆச்சு ஒழுங்கா பேச மாட்டிங்குற …” என்று பதட்டமாக கேட்டான் … அவளோ “யாஷ் எனக்கு வயிறு வலிக்குது … அது தான் பேச முடியல ” என்று கூறினாள் …
“நீ போய் அத்த இல்லனா வேற யார் கிட்டயாவது போய் சொல்லு ..” என்று கூறினான் .. அவள் யாரவது உள்ளார்களா என பார்க்கும் போது அங்கு யாருமில்லை .. தூரத்தில் சிவா மட்டும் தான் போன் பேசி கொண்டு இருந்தான் … அவனும் அப்போது தான் அவளை பார்த்தான் .. அவள் நெளிவதை பார்த்து அவள் பக்கம் வந்தான் .. அதற்குள் ரியாஸ் ஆஷாவிடம் குடுக்க ஆஷா அவளிடம் ஒரு சில கேள்விகளை கேட்டாள் … பக்கத்தில் யாரவது உள்ளார்களா ….. என கேட்டார் .. அவளும் சிவா உள்ளான் என கூற அவளும் அவனிடம் கொடுக்க கூறி “சிவா நீ சீக்கிரம் ஓடி போய் போனை சுபா கிட்ட கொடு ” என்று கூறினார் …
Advertisement
அவனும் சென்று கொடுக்க “ஹெலோ சுபா … குட்டிமா போன் பேசுற அப்ப வயிறு ரொம்ப வலிக்குது னு சொல்றா .. எனக்கு தெரிஞ்சு அவ ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா னு நினைக்குறேன் … போய் சீக்கிரம் பாருங்க … நான் அப்பறம் கூப்பிடுறேன் ..” என்று கூறி வைத்து விட்டார் …
சுபா மற்றவர்களிடம் கூற பெண்கள் அனைவரும் நிரவி இருக்கும் இடம் சென்றனர் … அவள் அங்கு வயிற்றை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் .. அவளை பாத்ரூம் அழைத்து சென்றனர் … அங்கு பார்த்த போது அவள் வயதிற்கு வந்து இருந்தாள் ….
சுபாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை … முதலில் திகைத்து நின்றவர் பின் நிரவியை சென்று அணைத்து கொண்டார் … நிரவிக்கு இதை பற்றி ரித்திகா கார்த்திகா மூலம் தெரிந்து இருந்தாலும் கொஞ்சம் பயமாக தான் இருந்தது … எனவே அவளும் அணைத்து கொண்டாள் …
அதன் பின் வீட்டினருக்கு தகவல் செல்ல அனைவருக்கும் சந்தோஷம் தா ன் … அர்ஜுனனும் சசியும் தங்கள் மகளை பார்க்க ஆசைப்பட்டாலும் விட மாட்டார்கள் என அறிந்து அமைதியாகிவிட்டனர் … வீட்டு பெண்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து ஊருக்கு தற்போதே கிளம்பலாம் என முடிவு செய்தன ர் ….
முதலில் கர்ணனும் சுப்ரியாவும் ஊருக்கு கிளம்பி அங்கு ஏற்பாடு செய்ய வேண்டியதை செய்ய ஊருக்கு கிளம்பிவிட்டனர் … ஒரு இரும்பை நிரவியின் கையை கொடுத்து துணியால் அவளுக்கு முக்காடு இட்டு காருக்கு அழைத்து சென்றனர் … அர்ஜுனன் தான் கார் ஓட்டினார் … ஆனால் மகளின் முகத்தை தான் பார்க்க முடியாதவாறு மறைத்து இருந்தனர் …
தன் மகளின் முகத்தை பார்க்க விடமாட்டார்கள் என தெரியும் எனவே கார் ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்து இருந்தார் .. அங்கு ஏற்காட்டில் இரு ந்து கிளம்ப இரண்டரை ஆகி இருக்க பெரியவர்கள் ஆறு மணிக்குள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டனர் … அதனால் மாலை ஐந்து மணிக்குள் அய்யனார்புரம் வந்து சேர்ந்து இருந்தனர் …
அதன்பின் சடங்கு அது இது என நாட்கள் ஓடி இருக்க சிவா நிரவி இருவரும் நேரம் அமையவே இல்லை … எனவே அவனும் டெல்லி சென்று விட்டான் … வருடங்களும் ஓடி இருக்க இருவரும் பேச கூட முடியவில்லை .. இருவரும் சந்திக்கவும் முடிவது இல்லை … அதன் பின் சிவா ஊருக்கு வர ஒரு வருடத்திற்கு மேல் ஆகி இருந்தது … நிரவியும் பத்தாம் வகுப்பு , பரதநாட்டிய வகுப்பு என அவளுக்கு நாட்கள் ரெக்கை கட்டி பிறந்தது … ஆனால் சிவா மேல் உள்ள பாசம் மட்டும் அவளுக்கு அப்படியே இருந்தது … அந்த வயதில் அவளுக்கு அன்பு காதல் என்று எல்லாம் தெரியவில்லை … அவளுக்கு அவனின் சிவா மாமா என்றால் பிடி க்கு ம் அவ்வளவு தான் …
தற்போது ரித்திகா கோவையில் உள்ள கல்லூரியில் பி டெக் இரண்டாவது வருடம் படித்து கொண்டு இருக்கிறாள் … தினமும் சென்று விட்டு வீட்டுக்கு வருமாறு சேர்ந்து இருந்தாள் … கல்லூரி பேருந்தில் தான் சென்று விட்டு வருகிறாள் … வீட்டில் உள்ளோர் காரில் சென்று விட்டு வர கூற அவள் மறுத்து தனியாக சென்று வருகிறேன் என்று கூறி கல்லூரி பேருந்தில் தான் சென்று வருகிறாள் …
நிரவி பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருக்க அன்று பெரியவர்கள் அனைவரும் வெளியில் சென்று இருந்தனர் … வீட்டில் நிரவி மட்டும் சசி கர்ணா குழந்தைகளை பார்த்து கொண்டு இருக்க ரித்திகா கல்லூரிக்கு சென்று இருந்தாள் … அரை நாள் தான் கல்லூரி என கூறி விட்டு சென்றவள் மாலை நான்காகியும் வீட்டிற்கு வரவில்லை …
எதோ யோசனையில் மாடியில் இருந்து எட்டி பார்த்தவள் வெளியில் எட்டி பார்த்தவள் முகம் சட்டென்று மாறி விட்டது … அங்கு கேட்டுக்கு வெளியில் கொஞ்சம் தள்ளி சிவா பைக்கில் அமர்ந்து இருக்க ரித்திகா அவன் பின் இருந்து இறங்கி அவன் முன் நின்று கொண்டு இருந்தாள் … சிவா எதோ பேசி கொண்டு இருக்க ரித்திகா சரி சரி என தலை ஆட்டி கொண்டு இருந்தாள் …
அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ரித்திகா வர சிவா கண்ணை சிமிட்டி உள்ளே செல்ல சைகை செய்து உள்ளே அனுப்பி விட்டான் … அவளும் சரி என தலை அசைத்து உள்ளே வந்தாள் … அவள் சென்றவுடன் வெளியில் சிறிது நேரம் நின்று இருந்தவன் அப்போது தான் வருவது போல் வீட்டிற்கு வந்தான் … வந்தவன் ரித்திகாவை அப்போது தான் பார்ப்பது போல் பேசி கொண்டு இருந்தான் … அதை பார்த்து நிரவிக்கு எதோ போல் ஆகி விட்டது … தன்னிடம் மறைக்க என்ன இருக்கி ற து ஏன் இவ்வாறு நடந்து கொ ள் கி ன் ற னர் என்ற யோ ச னை தான் அவளுக்கு ஓடி கொண்ட இருந்தது …. அதுவே நிரவி மீண்டும் ரித்திகா விடம் பேசுவ தை குறை த்து இருந்தது ..
error: Content is protected !!