Skip to content
Post Views: 1,156
கண்மணி ஜனனி மித்ரா மூவரும் அமர்ந்து இருப்பதை பார்த்த செண்பகம் அம்மா “ஏய் மூனு பேரும் இங்க உட்காந்து என்ன பண்ணிட்டு உட்காந்து இருக்கீங்க… வெட்டி நியாயம் பேசிட்டு இருக்கீங்களா… எந்திரிச்சு போங்கடி மூனு பேரும்…..” என்று விரட்டினார்….
கண்மணி பாவமாக அவள் அம்மாவை பார்க்க அவர் மீண்டும் மூவரையும் விரட்டினார்… கண்மணி “அம்மா” என கூறியவள் அனைத்தையும் கூறிவிட்டாள்…. அவருக்கே என்ன செய்வது என்றே தெரியவில்லை…
Advertisement
அர்ஜுனன் சுபா இருவருக்கும் ஒரே பயம் தான்… ரித்திகா இதுவரை சிறுபிள்ளை தான்… ஆனால் இனிமேல் அவளை இன்னும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே இருவருக்கும் எண்ணமாக இருந்தது… அதில் கவனம் செலுத்தியவர்கள் நிரவியை மறந்து இருந்தனர்…
Advertisement
செண்பகம் அம்மா மூலம் அர்ஜுனன் சுபா தவிர மற்றவர்களுக்கு தெரிந்து விட அனைவரும் நிமிடத்தில் பதறி தான் விட்டனர்… அர்ஜுனன் அனைவரின் முகமும் நிமிடத்தில் மாறியதை பார்த்து “என்ன ஆச்சு எல்லாருக்கும்.. ஏன் எல்லாரோட முகமும் மாறி போச்சு…” என்று கேட்டான்….
Advertisement
“வீட்டுல மூனு பேர் இல்ல… அது கவனிக்கலயா நீங்க… மத்த ரெண்டு பேரை கூட விடுங்க… உன் பொண்ணு இங்க இல்ல… அதை கூட நீ பாக்கல… ஏன் ன்னா ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க… உங்களுக்கு ஒவ்வொரு தடவையும் அவளை பத்தி ஞாபகம் படுத்திட்டே இருக்கனுமா உங்களுக்கு… அண்ணி நீங்க அவளுக்கு உடம்பு சரி இல்லைனு அவளை பாத்துட்டு இருந்திங்க… சரி போன் வந்தது அவளை வீட்டுல விட்டுட்டு போனீங்க… ஆனா இது வரைக்கும் அவளை பாக்கவே போகல நீங்க… அவ உங்க பொண்ணு தான் ஞாபகம் இருக்கா உங்களுக்கு” என்று கர்ணன் கோவமாக கேட்டான்….
Advertisement
சுபா நிரவியின் அறைக்கு செல்ல பார்க்க “அண்ணி எங்க போறீங்க… இந்த அக்கறை முன்னாடியே இருக்கனும்… இப்போ அவ அங்க இல்ல ஹாஸ்பிடல்ல இருக்கா…” என்று கூறியவுடன் சுபா கண் கலங்க “ப்ளீஸ் அண்ணி… அழ ஆரம்பிக்காதீங்க… இப்போ ரித்திகாவோட பங்சன் முடிங்க… அதுக்கு அப்பறம் போய் பாருங்க… இப்போ சசி அண்ணா பயங்கர கோவத்துல இருக்கான்… நீங்க அங்க போனா அண்ணா கோவத்துல ஆடி தீர்த்துருவான்…. தயவு செஞ்சு ரித்திகாவோட சடங்கை எந்த ஒரு வருத்தமும் இல்லாம பண்ணுங்க…” என்று கொஞ்சம் கட்டளையாக கூறினான்…
அதன் பின் முகத்தில் சிரிப்பை ஒட்டி வைத்து கொண்டு சடங்கை முடித்தனர்… சடங்கு முடித்த கையுடன் சுபா அர்ஜுனனை அழைத்து கொண்டு மருத்துவமனை கிளம்ப முகுந்தன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான்…
அவன் வந்ததும் அனைவரும் அவனை சூழ “டாக்டர் ஹாஸ்பிடல்ல ரெண்டு பேர் தான் இருக்கனும்னு சொல்லிட்டாங்க… அதனால தான் ராஜம்மாவை விட்டுட்டு மித்ராவை கூட்டிட்டு போக வந்தேன்… நிரவி குட்டி இப்போ நல்லா இருக்கா… ஆனா இன்னும் காய்ச்சல் முழுசா குறையல….” என்று கூறிவிட்டு மித்ரா வந்ததும் கிளம்பிவிட்டான்.. அர்ஜுனன் சுபா இருவரையும் அவன் கண்டுகொள்ளவே இல்லை….
அந்த நாள் அப்படியே முடிய அன்று இரவு செண்பகம் அம்மா ரித்திகாவுடன் தங்க சுபாவும் அர்ஜுனனும் அவர்கள் அறையில் அமர்ந்து இருந்தனர்… நிரவி மருத்துவமனையில் இருப்பது தெரிந்த பின் இருவரும் ஒருவருக்கொருவர் இன்னும் பேசிக்கொள்ளவில்லை…
சுபா கட்டிலில் அமர்ந்து இருக்க அர்ஜுனன் அறைக்குள் இருக்கும் சிறிய அறையில் அமர்ந்து கொண்டு இருந்தான்….. இருவருக்கும் தெரிந்தது ரித்திகாவை கஷ்டப்படுத்த கூடாது என்பதை மட்டுமே பார்த்தவர்கள் நிரவி கஷ்டப்படுத்தி உள்ளோம் என…
சுபாவோ ராஜம்மா உடன் உள்ளார் என நம்பிக்கையில் அவள் நிரவியை சென்று பார்க்கவில்லை… அவள் செய்தது மிக பெரிய தப்பு தான்… அவள் தவறு அவளுக்கே புரிகிறது ஆனால் செய்ததை மாற்ற முடியாதே…. அவள் நிரவியை கஷ்டப்படுத்தியதை எண்ணி மனது வலிக்க சத்தமிட்டு அழுக ஆரம்பித்து இருந்தாள்…
அவனும் வருத்தத்தில் இருந்ததால் அவள் அழுதது முதலில் கேட்கவில்லை… கொஞ்ச நேரம் சென்ற பின் தான் கேட்டது… கேட்ட உடன் வேகமாக எழுந்தவன் அவளிடம் விரைந்து சென்றான்… அங்கு அவள் முகத்தை முட்டியில் புதைத்து அழுது கொண்டு இருக்க வேகமாக அருகில் சென்று “அம்மு… அம்மு என்னை பாரு அழுக கூடாது..” என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டு கூறினான்…
அவளோ “நான் நல்ல அம்மா இல்லையா மாமா… நான் பெத்த பொண்ணையே கஷ்டப்படுத்துறேன்.. என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு மாமா…” என்று அவள் மேலும் அழுக அர்ஜுனன் எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவளை தன் மார்பில் சாய்த்து இருந்தான்…..
அப்போது அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டு அர்ஜுனன் கதவை திறக்க சென்றான்… அங்கு முகுந்தனும் வர்ணனும் தான் நின்று இருந்தனர்… அர்ஜுனன் கதவை திறந்து விட்டு உள்ளே கட்டிலுக்கு சென்று அமர்ந்து கொண்டான்…
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு உள்ளே வந்து அங்கு இருக்கும் சோபாவில் அமர்ந்து விட்டனர்… இருவரையும் பார்த்து சுபாவின் அழுகை இன்னும் தான் அதிகமாகியது…
முகுந்தன் இருவரையும் பார்த்து “நான் ஒன்னு சொல்லட்டா… நீங்க ரித்திகாவை உங்களுக்கு பிறந்த பொண்ணா சொந்த பொண்ணா பார்த்தா எந்த பிரச்னையும் வராது.. நீங்க ரெண்டு பேரும் அந்த பொண்ணு மனசுல நம்ம அப்பா அம்மா இருந்து இருந்தா இப்படி கஷ்டப்பட விட்டு இருக்க மாட்டாங்கனு நினைச்சிடுவாளோனு பயந்து பயந்து அந்த பொண்ணை ஓவர் கேர் எடுத்துக்குறிங்க… அது தான் இங்க பிரச்சனை… நீங்க ரெண்டு பேரும் மூனு போரையும் ஒரே போல நடத்துங்க.. ஜெயிச்சா பாராட்டனும் தப்பு செஞ்சா கண்டிக்கனும்.. ரித்திகா ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை புரிஞ்சிப்பா…”
“நான் உனக்கு சொல்லனும்னு இல்லை அர்ஜுன்.. என்னை விட தெளிவு நீ… நீங்க ரெண்டு பேருமே மூனு வருஷத்துக்கு முன்னாடி ஏற்பட்ட அசம்பாவிதத்தை மறக்கல அது தான் உண்மை.. திரும்பியும் அதே போல பிரிவு உங்க ரெண்டு பேருக்குள்ள வந்துருமோனு பயபடுறிங்க… அது தான் ரொம்ப அன் செக்குயுர்டா(unsecured) இருக்கீங்க… எங்க நீங்க செய்யுற சின்ன சின்ன விசயமும் பிரச்சனை ஆகிடுமோனு பயப்படுறீங்க… எங்க அர்ஜுனன் இல்லை டா நீ… எங்க அர்ஜுனன் திரும்பியும் வேணும் எங்களுக்கு” என்று கூறினான்…
அர்ஜுனன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “புரியுது மச்சான் நான் முன்ன மாதிரி இல்ல தான்… அது எனக்கே தெரியுது… எனக்குள்ள பயம் வந்துருச்சு மச்சான்… இந்த பயம் எனக்கு எல்லாம் மறந்து போய் எனக்கும் திரும்பியும் ஞாபகம் வந்ததுல இருந்து இருக்கு… எங்க திரும்பியும் எனக்கு எதோ ஆகிடுமா நான் இல்லைனா திரும்பியும் நீங்க என்ன ஆவிங்க… ஒரு தடவை கடவுள் புண்ணியத்துல திரும்பியும் வந்துட்டேன்… ஒரு வேலை நான் திரும்பியும் வரலனா கடைசி வரை அம்மு இங்க வந்து இருக்க மாட்டா… எல்லாம் என் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு…”
“ஒரு வருஷம் ஆக போகுது நான் திரும்பியும் வந்து ஆனா எனக்குள்ள பயம் அப்படியே இருக்கு… நான் தப்பு செய்ய கூடாதுனு யாரையும் காயப்படுத்த கூடாதுனு நினைச்சு செய்யுறது எதோ ஒரு விதத்துல எல்லாரையும் காயப்படுத்திட்டு தான் இருக்கு… நிரவியை மட்டும் கஷ்டப்படுத்துல நான் எல்லாரையும் தான் கஷ்டப்படுத்துறேன்… அது எனக்கு புரியுது மச்சான்… எல்லாரும் என்னை புரிஞ்சி தான் அமைதியா இருக்கீங்க… எல்லாமே எனக்கு புரியுது… நான் என்ன பண்ணட்டும் மச்சா எனக்கே புரியல… குட்டிமா விசயத்துல நான் செஞ்சது தப்பு தான்… முழுக்க முழுக்க என் தப்பு தான்… ஆனா ரித்திகாவை என் சொந்த பொண்ணா தான் பாக்குறேன் மச்சா… அவளை நான் பிரிச்சு எல்லாம் பாக்கல…” என்று கூறி அவனையே அணைத்து கொண்டு அழ முகுந்தனும் அவனை அணைத்து கொண்டான்…. வர்ணனும் அணைத்து கொண்டான்…
ரித்திகா குழந்தைகள் பெரியவர்கள் நந்தினி வாணன் தவிர்த்து அனைவரும் வெளியில் நின்று தான் அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்தனர்… அர்ஜுனன் அழ ஆரம்பித்ததும் யாராலும் தாங்க முடியவில்லை… அனைவரும் உள்ளே வந்து விட்டனர்… ஆண்கள் அர்ஜுனனை கட்டிக்கொள்ள பெண்கள் அனைவரும் சுபாவை அணைத்து இருந்தனர்… முகுந்தனின் அலைபேசி வழியாக அனைத்தையும் கேட்ட சசியின் கண்களிலும் கண்ணீர்….
error: Content is protected !!