ராஜியை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள். பாரியும் வில்வாவும் வேலை பார்க்கும் மருத்துவமனை என்பதால், எல்லாம் துரிதமாக நடைபெற்றது.
Advertisement
இவர்களது போறாத நேரம், சற்று நேரம் முன்பு தான் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்திருந்தது. அதனால் இவர்களால் விக்ராந்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. டெல்லியிலும் பாம் த்ரெட் என்று செய்திகளில் கூறிக்கொண்டிருந்தார்கள்.
Advertisement
அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், ராஜிக்கு மைல்டு ஹார்ட் அட்டாக் என்றும், உடனே ஆஞ்சியோ செய்ய வேண்டும், தேவை பட்டால் ஸ்டெண்ட் வைக்க வேண்டும், குடும்பத்தார் யாரவது கையெழுத்து போட வேண்டும் என்றார்.
Advertisement
ட்ரெக்கிங் போயிருந்த தர்ஷனையும் பிடிக்க முடியவில்லை, அங்கே சிக்னல் இருக்காது என்று போகுமுன்பே தர்ஷ் கூறி சென்றது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. அடுத்து ஹர்ஷித்தா வர்ஷித்தாவை அழைத்து பக்குவமாய் விஷயத்தை கூறினார்கள்.
Advertisement
“நாங்க உடனே கிளம்பி வருகிறோம்” என்று பெண்கள் பரபரத்தனர். பாம் த்ரெட் என்பதால், டெல்லி செல்வதற்கான அனைத்து பிளைட், மற்றும் ட்ரையின்களும் ரத்து செய்ய பட்டிருந்தது. என்ன செய்வது என தெரியாமல் அல்லாடினார்கள் பெண்கள்.
“ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க, நாங்க இருக்கோம் இல்ல, நாங்க ராஜிம்மாவை பார்த்துக்கிறோம்”, என்று பாரியும் வில்வாவும் தான் பெண்களுக்கு சமாதானம் கூறினார்கள்.
பின் மருத்துவர்களிடம் பேசி, இவர்களின் ஒப்புதலை மெயில் மூலம் பெற்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
“ப்ளீஸ், கொஞ்சம் எங்களுக்கு அப்டேட் பண்ணிட்டே இருங்க” என்றாள் வர்ஷித்தா கெஞ்சலாக.
“நீங்க உங்க அப்பாவுக்கு மட்டும் இன்பார்ம் பண்ண பாருங்க, நாங்க இங்கே ராஜிம்மாவை பத்திரமா பார்த்துக்கிறோம், உங்களுக்கும் அப்டேட் பண்றோம்
கவலை படாதீங்க” என்றனர் பாரியும் வில்வாவும்.
ஆஞ்சியோ செய்ததில் ராஜிக்கு ஒரு ஸ்டென்ட் வைக்க வேண்டி இருந்தது.
சர்ஜரி முடிந்து, இனி பயப்பட ஒண்ணுமில்லை என்று டாக்டர் கூறிய பிறகே பாரிக்கும் வில்வாவிற்கும் நிம்மதியாக இருந்தது.
‘அப்பாடா’ என்று இருவரும் இரண்டு நிமிடங்கள் அமர்ந்திருப்பார்கள். அவ்வளவே,
ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஹர்ஷும் வர்ஷும் மாறி மாறி அழைத்து என்னாச்சு என்று கேட்டு கொண்டே இருந்தனர்.
பதில் பேசியே இருவரும் களைத்து விட்டனர்.
சற்று நேரத்திலே ராஜியை அறைக்கு மாற்றிவிட்டார்கள். அதிகம் பேச வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறி சென்றனர்.
வீடியோ காலில் ராஜியை பார்த்து ஹர்ஷும் வர்ஷும், “மீ…” என தேம்பி தேம்பி அழத்தொடங்கிவிட்டார்கள்.
பாரி போனை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்துவிட்டான்.
“நீங்க அழுதா ராஜிம்மாக்கு டிஸ்டர்பா இருக்கும் இல்ல, அழுகாம இருந்தா தான் உள்ளே இருந்து கால் பண்ணுவேன்” என்று மிரட்டிய பிறகே இருவரும் அமைதி ஆகினார்கள்.
எப்பொழுதும் முரட்டு தோற்றம், திமிர் கலந்த பார்வை, என்று கெத்தாக பார்த்த பெண்கள் சிறு பிள்ளைகளாக மாறி தேம்பிக்கொண்டிருத்ததை பார்த்ததும் என்னவோ போல இருந்தது பாரிக்கு.
ராஜி கண் விழித்ததும், மீண்டும் மருத்துவர்கள் வந்து பார்த்துவிட்டு,
“எல்லாம் நார்மலா இருக்கு. ஆனா இன்னும் ஒரு வாரம் ரெஸ்ட்லயே இருங்க.. அதிகம் பேசக்கூடாது, இன்னிக்கு லிக்விட் புட் எடுத்துக்கோங்க, நாளைக்கு சாலிட் புட் சாப்பிடலாம், இங்கயே டயட் புட் தான் கொடுப்பாங்க அதையே சாப்பிட்டுக்கோங்க. நாளைக்கு எல்லாம் நார்மலா இருந்தா டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று கூறி சென்றார்.
ராஜி இவர்கள் இருவரையும் பார்த்து மென்மையாக புன்னகைத்தார்.
“அதை தானே நாங்களும் சொல்றோம்.. லூசு மாதிரி உளறாதீங்க. அப்புறம் என்னாச்சு நிம்மி சிஸ்டர் வீட்ல, அதை சொல்லுங்க?”
இவர்கள் பேசிகொண்டிக்கும்பொழுது தூக்கத்தில் இருந்து விழித்துவிட்டார் ராஜி. இவர்கள் உரையாடலை கேட்டு அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“மீ…” என்று பெண்கள் ராஜியின் சிரிப்பு சத்தத்தில் அவரிடம் கவனத்தை திருப்பினார்கள்.
“மீ எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் டா.. நார்மல்லா தான் பீல் பண்றேன்.. பப்பா கிட்ட சொல்லிட்டீங்களா?
“இன்னும் இல்லை மீ. மார்னிங் எப்படியும் சொல்லிடுவோம்”
“சரி நீங்க ஸ்கூல் போங்க.. சும்மா போன் பண்ணிட்டே இருக்காதீங்க. நாங்க டிஸ்சார்ஜ் அப்ப கால் பண்றோம்” என்று கண்டிப்புடன் அன்னையாக கூறினார் ராஜி.
நண்பர்கள் நன்றியுடன் ராஜியை பார்த்தனர்.
“எங்களுக்கு இப்ப ஸ்கூல் போக வேண்டாம் மீ.. உங்க கிட்ட வரணும் போல இருக்கு”
“பீ பிராக்டிக்கல்.. உடனே வரவும் முடியாது. இப்ப அவசியமும் இல்லை.. ஸ்கூல் போனா கொஞ்சம் டிஸ்ட்ராக்ட் ஆகும் தானே.. கிளம்புங்க. பாருவும் வில்லுவும் கூடவே இருக்காங்க. நாங்க பார்த்துகிறோம்”
ஒருவாறு பெண்களை சமாதானம் செய்து கிளப்பி விட்டார்.
பின், நர்ஸ் வந்து ராஜிக்கு பிரஷ் ஆக உதவிவிட்டு, உணவு கொடுக்கும் படியும் கொடுத்தபின் கொடுக்கும் மாத்திரைகளையும் எடுத்து கொடுத்துவிட்டு சென்றார்.
“ஏன் வில்லு, நிம்மி சிஸ்டர் வீட்டு கதை எல்லாம், எதுக்கு பிள்ளைங்க கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?”
“நிம்மி சிஸ்டர் கதை மட்டும் இல்ல ராஜிம்மா, நம்ம செக்யூரிட்டி வீட்ல அவர் ஜிம்மி நேத்து ஆறு குட்டி போட்டதை கூட சொன்னோமே” என்றான் வில்வா.
“ஆமா, அதுல நாலு ஆண் நாய்குட்டி, இரண்டு பெண் நாய்குட்டி வரைக்கும் சொன்னோம்” என்றான் பாரி.
அதுக்கு பெயர் யோசிச்சு சொல்றேன்னு உங்க பொண்ணுங்க சொன்னாங்களா, அப்ப என்ன அப்டேட்ன்னு கேக்க வந்த சீதா மிஸ், நான் தான் பெயர் வைப்பேன்ன்னு சொல்லி, அவங்க வீட்டுக்காரரோடு டிஸ்கஷன் வேற”
ராஜி ‘ங்ஞே’ என்று விழிக்கவும்,
“பின்ன ராத்திரி பூரா அஞ்சு நிமிஷத்துக்கு ஒருக்கா என்ன அப்டேட் கொடுக்க முடியும்? சொல்லுங்க?”
“நீங்க மாத்திரை போட்டு நல்லா தூங்கிட்டீங்க”
“ஆமா பாய்ஸ், நல்லா தூங்கிட்டேன், கனவுல என் விதுகூட டூயட் வேற தெரியுமா?”
அதிகமா சிரிக்க கூடாது ராஜிம்மா . பேசாம கண்ணை மூடி ரெஸ்ட் எடுங்க என்று கூறி விட்டு அங்கேயே இருவரும் அட்டெண்டர் பெட்டில் படுத்து ஐந்தே நிமிடத்திலே தூங்கியும் விட்டனர்.
மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
ஒரு வழியாக விக்ராந்தை தொடர்பு கொண்டு மகள்கள் விஷயத்தை கூறி விட்டார்கள்.
அவரால் உடனடியாக கிளம்ப முடியாது சூழ்நிலை. பதற்றமாக ராஜியின் கைபேசிக்கு அழைத்தார்.
பாரி தான் அழைப்பை எடுத்தான்.
“ஹலோ… “
“ஹலோ சார்… “
“ராஜி.. ராஜி… எப்படி இருக்கா? “
“ராஜிம்மா இப்ப நல்லாவே இருக்காங்க. இப்ப பயம் ஒன்னும் இல்லை. நாளைக்கே டிஸ்சார்ஜ் சொல்லிட்டாங்க சார். வாஷ் ரூம் போய் இருக்காங்க. ஒரு நிமிஷம், அவங்க கிட்ட கொடுக்கிறேன்”
“ஆமா சார், ஸ்டென்ட் வச்சிருக்காங்க… ஆனா இப்ப எல்லாம் நார்மல். நான் உங்களுக்கு அவங்க ரிப்போர்ட்ஸ் எல்லாம் அனுப்பறேன்…”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ராஜி வந்துவிட்டார்.
“இந்தாங்க ராஜிம்மா , சார் பேசுறாங்க”
“விது…”
“ராஜி…”
“வீடியோ கால் பண்ணட்டுமா.. உன்னை பார்க்கணும்”
வில்வா உடனே கைபேசியை வாங்கி வீடியோ அழைப்பில் கால் செய்து ராஜியிடம் கொடுத்தான்.
சில வினாடிகள் பேச்சே இல்லை. இருவர் கண்களும் கலங்கியது.
“சாரி சாரி ராஜி, தனியா ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா?”
“அது எல்லாம் ஒன்னும் இல்ல விது.. பாருவும் வில்லுவும் கூடவே இருக்காங்க.. இப்ப முன்ன விட இதயம் ஸ்ட்ராங்கா தான் ஆயிருக்கு.. ஒன்னும் இல்லை..” என்று ராஜி தான் கணவருக்கு நிறைய ஆறுதல் கூறினார்.
“நீங்க செஞ்ச உதவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது” என்று பாரிக்கும் வில்வாவிற்கும் அத்தனை முறை நன்றி கூறினார்.
“இன்னும் நான் இங்கே இருந்து கிளம்ப ரெண்டு மூனு நாளாவது ஆயிடும். தீவிரவாதிகளை பிடிக்காம நகர முடியாது”
“——————–”
“இன்னும் ரெண்டு வாரத்துக்கு ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க சார். நீங்க வர வரைக்கும் நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம்..” என்று வில்வா தான் அங்கே நிலவிய அமைதியை களைத்து கூறினான்.
“சாரி ராஜி, இப்ப கூட உன் பக்கத்துல இருக்க முடியாம போச்சு”
“பக்கத்துல இல்லாட்டி என்னங்க. நீங்க தான் எனக்குள்ளேயே நிறைஞ்சு இருக்கீங்களே..”
ராஜியை நன்றாக பெட்டில் சாய்ந்து அமர வைத்து விட்டு, அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு பாரியும் வில்வாவும் வெளியே வந்துவிட்டனர்.
இவர்கள் வீட்டிற்கு சென்று சேரவும் தர்ஷ் வரவும் சரியாகயிருந்தது. தர்ஷை வேறு ஒரு முறை சமாதானம் செய்து என்று பாரியும் வில்வாவும் ஒரு வழி ஆகிவிட்டார்கள்.
இவர்களும் ராஜி வீட்டிலே தங்கி கொண்டார்கள். பாரியும் வில்வாவும் நைட் ஷிப்ட் டே ஷிப்ட் என்று மாறி மாறி வாங்கிக்கொண்டு, ராஜியை பார்த்துக்கொண்டார்கள்.
ஐந்தாம் நாள் காலை, ஞாயிற்று கிழமை விக்ராந்த் வந்து சேர்ந்தார்.
சாப்பாடு தூக்கம் இல்லாமல், மனிதர் பார்க்கவே பரிதாமாக காட்சி அளித்தார்.
“என்ன விதுப்பா.. இப்படி காய்ஞ்சு போன் கருவாடு மாதிரி களைச்சு போய் வந்திருக்கீங்க..” என்று ராஜி தான் அவரை பார்த்து கவலை படவேண்டியதாக இருந்தது.
ராஜியோ பாரி வில்வா கவனிப்பில் பிரெஷ் ஆப்பிள் மாதிரி காணப்பட்டார்.
“பப்பா, என்ன முழிக்குறீங்க.. நிஜமாலுமே இவங்க ஹார்ட் அட்டாக் வந்து சர்ஜரி பண்ண மாதிரி எல்லாம் இல்லை.. சும்மா பிக்னிக் வந்த மாதிரி, அவங்க பிரண்ட்ஸ் கூட ஜாலியா எஞ்சாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க மீ” என்றான் தர்ஷன்.
பாரியும் வில்வாவும் அவரை பார்த்தது புன்னகைக்கவும், “தேங்க் யு பாய்ஸ்” என்று இருவரையும் தன் இரு பக்க தோளோடு இறுக்கி அணைத்துக்கொண்டார்.
“போங்க நீங்க வந்ததும் என்னை கட்டி பிடிக்காம, அவனுங்களை கட்டி பிடிக்கிறீங்க” என்று குறை பட்டு கொண்டார் ராஜி.
“ஷ்..ஷ்… என்ன பேசுற நீ பசங்களை வச்சுகிட்டு”
ராஜி முகத்தில் அத்தனை வெட்கம்.
மனைவியின் முகத்தை பார்த்து விக்ராந்தின் பிடி கொஞ்சம் தளரவும், பாரியும் வில்வாவும் வெளியே ஓடி வந்தனர்.
“டேய் வில்வா, எத்தனை எலும்பு உடைஞ்சுதுனு தெரியலையே”
“ஆமாடா பாரி, கட்டி பிடிக்கிறதுக்கே இப்படியா?”
“என்னா பிடி…” இருவரும் அவர்கள் தோள்களை பிடித்து அமுக்கி கொண்டு நின்றார்கள்.
பாரியின் கைபேசி ஒலித்தது..
“திரும்ப அப்டேட்டா? “ என்று அலறினார்கள் நண்பர்கள் இருவரும்.
“நல்ல லூசு குடும்பத்துக்கிட்ட வந்து வசமா மாட்டி இருக்கோம் போல டா”