ஊரே அந்த கோவிலில் கூடியிருந்தது.. தங்கள் ராசா , மகன், சகோதரன் , மருமகன், மகன் இப்படி அனைவராலும் கொண்டாடப்படுபவனுக்கு இன்று கோவிலில் முதல் மரியாதை… அவ்வளவு சந்தோஷம் அங்கிருக்கும் மக்களுக்கு.. தங்கள் வீடு பிள்ளைக்கு முதல் மரியாதை தருவது போல் இருந்தது அவர்களின் அந்த சந்தோசம்…
Advertisement
அந்த சந்தோசம் எல்லாம் நொடியில் பறிபோனது வேறு ஒருவனுக்கு கிடைத்த முதல் மரியாதையை பார்த்து…
Advertisement
அந்த அவனோ தன்னை அவமான படுத்திய தன் குடும்பத்தை ஒருநொடி பார்த்துவிட்டு .. தன்னை இந்த நிலமைக்கு தள்ளிய தன் தகப்பனின் முகத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய மகனை தூக்கிக்கொண்டு ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு வேகமாக சென்றுவிட்டான்…