Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-4

டாக்டர். விஜய ராஜவேல், எம்.எஸ். (ஆர்த்தோ), என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்த அறைக்கதவை ஒருமுறை தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்திருந்தான் விஜய சிவமாறன். தன் அறைக்குள் நுழைந்தவனை கண்டு சிரித்தவர்

“ஹாய் சிவா…. ஹவ் ஆர் யூ மேன்? அம்மாவோடா ரிப்போர்ட்ஸ் தான் பார்த்துட்டு இருக்கேன் உட்க்காரு….” என்று அறுபது வயது தொடக்கத்திலிருக்கும் ராஜவேல் கூற, அவரிடம் பரஸ்பரம் நல விசாரிப்பை முடித்துவிட்டு தன் அன்னை பருவதத்தின் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை அறிய காத்திருந்தான்.

தன்னிடமிருந்த மருத்துவ கோப்புகளை முழுமையாக ஆராய்ந்தவர் தன்னெதிரில் அமர்ந்திருந்த சிவமாறனிடம்

“அம்மாவோட ரிப்போர்ட் எல்லாமே பார்த்துட்டேன் சிவா…. நீ-ரீப்ளோஸ்மென்ட் சர்ஜரி (knee replacement surgery) பண்றது தான் அவங்களுக்கு நல்லது….”



Advertisement

“சர்ஜரியா? ஏன் சித்தப்பா? வேற‌ வழி ஏதாவது….”

“இல்லப்பா, நம்மளும் மாத்திரை, ஃபிஸியோன்னு எல்லாமே பண்ணிட்டோம் ஆனா பருவதம் அண்ணிக்கு ஓரளவுக்கு தான் குணமாகிருக்கு ஆனாலுமே அவங்களால இன்னும் நடக்க முடியலையே…. இப்போவே சர்ஜரி பண்றது பெட்டர், இது என்னோட சஜஷன்….”

“நீங்க சொல்றது புரியுது சித்தப்பா…. ஆனா அம்மாவுக்கு ஹாஸ்பிடலே பிடிக்காது…. அவங்களை வம்படியாத்தான் இங்க கூட்டிட்டு வந்தேன்…. இப்போ சர்ஜரின்னு நான் சொன்னா அவங்க ஒத்துக்கவேமாட்டாங்க…. இவ்வளவு ஏன், எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு சித்தப்பா….”

Advertisement

“நீயே பயந்தா எப்படி சிவா? அனஸ்தேஷியா கொடுத்துட்டு முழங்கால் கட் செய்து சேதமான கார்டிலேஜ் அன்ட் போன் ரிமூவ் பண்ணி ஆர்ட்டிஃபிஷியல் இம்ப்லேன்ட் பொருத்தி ஸ்டிச்செஸ் போட்டுவோம்…. இவ்வளவு தான் ப்ரொசிஜர், பொதுவா ஒன்னுலிருந்து ரெண்டு மணிநேரத்துக்குள்ள சர்ஜரி முடிஞ்சிடும்….”

Advertisement

“எனக்கு புரியுது சித்தப்பா…. ஆனா அம்மா இதுக்கு கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க….”

“இப்போவே அவங்க நாலு ஸ்டெப் எடுத்து வைக்கிறதுக்கு எவ்வளவு கஷ்ட்டப்படுறாங்க? இப்படியே விட்டா அவங்களால சுத்தமா நடக்க முடியாம போயிடும் அது அவங்களுக்கு தான் கஷ்ட்டம்…. முக்கியமா, டெஸ்ட் ரிப்போர்ட்ல அண்ணியோட பிபி, சுகர், இசிஜி எல்லாமே நார்மலா இருக்கு…. சர்ஜரிக்கு தேவையான மத்த டெஸ்ட் எடுத்துட்டா மூணு நாள்ல சர்ஜரி வச்சிக்கலாம்…. இனி நீதான் சிவா சொல்லனும்….”

“எனக்கு ஓகே சித்தப்பா…. ஆனா சர்ஜரி முடிஞ்ச அடுத்த நாள் நான் அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்….”

Advertisement

“ஏன்?”

“அவங்களுக்கு இங்க செட்டாகுது சித்தப்பா…. ஆனா வீட்டுக்கு கூட்டிட்டு போனாலும் அடிக்கடி ஹாஸ்பிடல் வரணும்…. ஆனா சர்ஜரி முடிச்சிட்டு அடிக்கடி ட்ராவலும் பண்ணக்கூடாது…. அதான் என்ன பண்றதுன்னு தெரியல….”

“பேசாம அண்ணிக்கு ஒரு ஹோம் நர்ஸ் வச்சிடு சிவா….”

“ஹோம் நர்ஸா?”

“ஆமா சிவா…. சர்ஜரி முடிஞ்சதுக்கு அப்புறம் ஒருநாள் மட்டும் அப்சர்வேஷன்ல வச்சிட்டு நீ வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு…. நம்ம ஹாஸ்பிடலிருந்து நல்ல நர்ஸா நானே உனக்கு சஜஸ்ட் பண்றேன், நான் ரெண்டு நாளுக்கு ஒருமுறை வந்து பருவதம் அண்ணியை செக் பண்ணிக்குறேன்….”

“சரி சித்தப்பா, நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம்….” என்று சிவமாறன் கூறவும் அவ்விருவர்கள் அமர்ந்திருந்த அறைக்கதவு தட்டவும் சரியாக இருந்தது.

“மே ஐ கெட்டின் டாக்டர்….” என்று குரல் கேட்டு நிமிர்ந்தவர்

“எஸ்….” என்று ராஜவேல் கூறியவுடன் அவ்வறைக்குள் நுழைந்திருந்தாள் ஆழினி.

“குட்மார்னிங் டாக்டர்….” என்று ஆழினி கூறி மெலிதாக சிரிக்க, அவளை கண்டு புன்னகைத்தவர்

“குட்மார்னிங் ம்மா…. இன்னிக்கு உனக்கு என்ன ஷிஃப்ட?” என்று வினவிய ராஜவேலிடம்

“ஈவ்னிங் ஷிஃப்ட் டாக்டர்….” என்று கூறிய ஆழினியின் கண்கள் ராஜவேலின் எதிரில் அமர்ந்திருத்தவனை ஒரு நொடி தீண்டி சென்றது.

ஆழினியின் வருகையை அறிந்தாலும் அறைக்குள் வந்ததிலிருந்து அவளை ஏறெடுத்தும் பார்க்காதவனின் அலைபேசி அழைப்பு வந்துள்ளதாக கூறி சிணுங்க ஆரம்பிக்க

“எக்ஸ்கியூஸ் மீ….” என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்த சிவாமாறன் தன்னருகில் நின்றிருந்த ஆழினியை அப்பொழுது தான் கண்டிருந்தான்.

ஆழினியை கண்டதும் அவனது நெற்றி சிந்தனையில் சுருங்க, ஒருநிமிடமானாலும் தன் மனதில் உண்டான அதிர்ச்சியை அந்நொடியிலேயே மறைத்தவன் அவ்விடத்திலிருந்து வேகநடையுடன் வெளியில் சென்றிருந்தான்.

அறையிலிருந்து செல்லும் சிவமாறனை கண்டுவிட்டு தன்னெதிரில் அமர்ந்திருந்தவரிடம்

“டாக்டர், என்னை நீங்க வர சொன்னதா நர்ஸ் சொன்னாங்க….” என்று கூறிய ஆழினியை கண்டு மெலிதாக சிரித்தவர்

“என் எதிர்ல ஒருத்தர் உட்கார்ந்திருந்தாரே அவங்க என் ரிலேட்டிவ், அதாவது என் அண்ணன் பையன்…. அவங்க அம்மாவுக்கு மூணு நாள் கழிச்சு நீ-ரீப்ளேஸ்மென்ட் சர்ஜரி பண்ணப்போறோம்…. அவங்களோட ரிப்போர்ட்ஸ் இங்கிருக்கு, நீங்க பார்த்துட்டு சர்ஜரிக்கு வேண்டிய டெஸ்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துடுங்க…. சர்ஜரி முடிஞ்சு இங்கிருந்து அவங்க டிஸ்சார்ஜாகி போற வரைக்கும் நீங்க அவங்களை கொஞ்சம் கேர் பண்ணிக்கோங்க ஆழினி…. இது என்னோட பெர்சனல் ரெக்வொஸ்ட்….” என்று ராஜவேல் கூறியதை கேட்டு பதறியவள்

“சார், ஏன் ரெக்வொஸ்ட் அது இதுன்னு சொல்றீங்க? நான் உங்க ஸ்டூடென்ட் ‘இதை நீ கண்டிப்பா பண்ணனும்னு’ ஆடர் போடுங்க நான் சந்தோஷமா செய்வேன்….” என்று ஆழினி கூற, அவள் கூறியதை கேட்டு சரியென்று கூறி தலையசைத்து சிரித்த ராஜவேலிடம் மருத்துவ பரிசோதனைகளின் பதிவினை பெற்றுக்கொண்டு பருவதத்தின் அறையை நோக்கி சென்றிருந்தாள்.

மருத்துவமனையில் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் படுத்து கொண்டிருந்த பருவதத்தின் அறைக்குள் நுழைந்த ஆழினியை கண்டு எழ முயற்சி செய்தவரின் அருகில் வேகயெட்டுக்களுடன் சென்றவள்

“அச்சோ, எழுந்திரிக்காதீங்கம்மா….” என்று ஆழினி கூறியவாறு அவரை கட்டிலில் படுக்கவைக்க, அவளை பாவமாக பார்த்தவர்

“இப்போ என்ன டெஸ்ட்ம்மா எடுக்கனும்? எந்த ரூம்க்கு கூட்டிட்டு போக போறீங்க?” என்று பருவதம் வினவ, அவரின் முகத்தில் தோன்றும் பாவனைகளை கண்டு மனதிற்குள் சிரித்தவள் பருவதத்தின் மனதிலிருக்கும் பயத்தை நன்றாக புரிந்து கொண்டாள்.

“டெஸ்ட் எதுவுமில்ல அம்மா…. நீங்க டேப்லெட் சாப்பிட்டீங்களான்னு கேட்கத்தான் வந்தேன்….” என்று ஆழினி கூறியதை கேட்டு நிம்மதி பெருமூச்சிவிட்டவர்

“அப்படியா? நான் கூட டெஸ்ட் எதாவது எடுக்க போறியோன்னு நினைச்சு பயந்துட்டேன்….”

“ஏன்ம்மா பயப்படுறீங்க? இங்கென்ன நாங்க அந்தளவுக்கா உங்களை கொடுமை படுத்துறோம்?”

“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா, எனக்கு ஹாஸ்பிடல்னாலே பிடிக்காது…. அவ்வளவு சீக்கிரம் நான் இந்த பக்கம் வரவேமாட்டேன்…. மேலுக்கு எதாவது முடியாம போச்சுன்னா கைவைத்தியம் பண்ணிக்குவேன்…. ஆனா இந்த முட்டி வலி என்னை தலைகீழா மாத்திடுச்சு…. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பாத்ரூம்ல வழுக்கி விழுந்தேன் அப்போ ஆரம்பிச்சது எனக்கு கஷ்ட்டக்காலம்…. ஹாஸ்பிடல் பக்கமே வராதவ மாசாமாசம் வந்துட்டும் போயிட்டும் இருக்கேன்…. நாலடி எடுத்து வைக்கவே சிரமமாயிருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல படுத்தப்படுக்கையாகிடுவேன் போல….” என்று பருவதம் தன் கதையை சோகமாக கூறி முடிக்க, அவரது பயத்தை எவ்வாறு தேற்றவேண்டுமென்பதை ஆழினி நன்றாக அறிந்து கொண்டாள்.

பருவதத்தின் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து அவரது நிலையை பற்றி முன்பே அறிந்தவள் அதை மறைத்தவாறு அவரின் கால்களை பரிசோதனை செய்ய தொடங்கினாள்.

“அம்மா, நீங்க நிறைக்கிற மாதிரி இதொன்னும் அவ்வளவு பெரிய மேட்டரேயில்ல, சாதரணமான பிராப்ளம் தான்…. ஒரேயொரு சர்ஜரி பண்ணாலே போதும் எல்லாம் சரியாகிடும்….” என்று ஆழினி கூறியதை கேட்டு மிரண்டவர்

“சர்ஜரியா? என்னம்மா ஏதேதோ சொல்ற? எனக்கு அதெல்லாம் வேண்டாம்….”

“பயப்படாதீங்கம்மா…. நானென்ன உங்களுக்கு சர்ஜரி பண்ணப்போறாங்கன்னு சொன்னேனா? பண்ணா நல்லாகும்னு தான் சொல்றேன்….”

“என்னை நீ ரொம்பவே குழப்புற….”

“குழப்பலம்மா, உங்களுக்கு சர்ஜரி பண்ணப்போறாங்கன்னு நான் சொன்னேனா?”

“இல்ல….”

“பண்ண நல்லாகும்னு தான சொன்னேன்?”

“ஆமா….”

“பார்த்தீங்களா, நீங்களே ஒத்துக்கிட்டீங்க?”

“ஏய், என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே….”

“ச்சே ச்சே…. உங்களுக்கு சர்ஜரி பண்ணா கண்டிப்பா சரியாகிடும்…. நீ-ரீப்ளேஸ்மென்ட் சர்ஜரி, அதாவது மூட்டு மாற்று அறுவை சிகிச்சைன்னு தமிழ்ல சொல்லுவாங்க…. உங்களை செக் பண்ற டாக்டர் சர்ஜரி பண்ணுறதுக்கு ரெக்கமென்ட் பண்ணா உடனே ஓகே சொல்லிடுங்க…. நம்பிக்கை இல்லன்னா ரெண்டு மூணு டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணி முடிவெடுங்க….”

“நம்பிக்கை இல்லாம இல்லம்மா…. ஏனா என் புருஷனோட தம்பி இந்த ஹாஸ்பிடலோட சீஃப் தான்…. டாக்டர் விஜய ராஜவேல் தெரியுமா? அவர் தான் எனக்கு ட்ரீட்மெண்ட் பாக்குறாங்க….”

“சூப்பர்ம்மா…. உங்க கொழுந்தனாரு இருக்கிறப்போ என்ன கவலை? அவரே உங்களுக்கு சர்ஜரி பண்ணிடுவாரே….”

“அப்போ சர்ஜரி பண்ணா நான் பழைய மாதிரி நடப்பேனா?”

“நடக்குறதென்ன? உசைன் போல்ட்க்கே டஃப் கொடுக்குற அளவுக்கு நீங்க ஓடலாம்….”

“ஹேய்…. மறுபடியும் என்னைய வச்சு நீ ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே?” என்று பருவதம் நக்கலாக வினவ

“ச்சே ச்சே….” என்று கூறிய ஆழினியை கண்டு வாய்விட்டு சிரித்த பருவதத்தின் சிரிப்பொலியை அறையின் நுழைவு வாயிலில் நின்று கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.

தன் கடந்த கால வாழ்க்கையும், தந்தையின் இழப்பும் ஒருசேர அளித்த மனவேதனையில் சிரிப்பென்பதை மறந்திருந்த தன் அன்னையின் புன்னகையை வெகுகாலத்திற்கு பிறகு பார்த்திருந்தவனின் இதழ்களும் புன்னகையில் விரிந்தது. குறிப்பாக தன் தாயின் மனதை மாற்றி அவரை சிரிக்க வைத்த ஆழினியின் செயலை மனதிற்குள் மெச்சிக்கொண்டவனின் இதழ்கள் அவளை நினைத்து மென்மேலும் அழகாய் மலர்ந்தது.

 

ஒளி வீசும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!