Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் என்னை சேருமா 37 Final 2 2

சிவாஅக்னிஸ்வரன்   பாட்டி செல்லம் எப்போதும் பார்வதியுடன் தான் இருப்பான்.. தந்தை, தாய்  என்ன சொன்னாலும் சரி என்று சொல்லி செய்து முடிப்பவன்,, படிப்பிலும் கெட்டி..

 பெர்னிலா அக்னி அப்படி கிடையாது தந்தை செல்லம் சேட்டை ரொம்ப அதிகம்,, சரியாக படிப்பதுமில்லை,  ஸ்கூலில் வம்பு பண்ணுவாள்,,  தினமும் ஒரு  பஞ்சாயத்தை  இழுத்துக் கொண்டு வருவாள்..



Advertisement

 மாயா ஒன்றும்  அவளை சொல்லக்கூடாது ஏதாவது திட்டினால், உடனே தந்தையிடம்  போன் போட்டு மாயா பேபி என்னை திட்டினாங்க என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள்..

மகள் அழுதாள் அக்னிக்கு தாங்காது,, உடனே போன் போட்டு மாயாவை திட்டுவான்,, அவ குழந்தைடி என்று,,….

Advertisement

Advertisement

வீட்டுக்கு வந்ததும் மகளை தூக்கி கொஞ்சுவான்,, அக்னி வீட்டில் இருந்தால், தந்தையோடு தான் இருப்பாள் அவள் மகள் பெர்னிலா அக்னி,, சரியான அப்பா செல்லம், எப்போதும் தந்தையை அணைத்துக்கொண்டு உறங்குவாள்,,.

மாயா அக்னியின் அருகில் வந்தாள்..

Advertisement

” நீ உன் அப்பா கூட போய் தூங்கு” என்று வம்பு பண்ணுவாள்.

“இது என் புருஷன்” என்று மாயா  சொல்லி வலது பக்கம் படுக்க..

“இது  என் டாடா” என்று இடது பக்கம் படுப்பாள்  அக்னியின் மகள்.

அந்த கடற்கறை ரெசார்ட்டில்  ப்பிர்த்தடே   பார்ட்டி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது,,, மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைத்திருந்தான் அக்னி..

அக்னி  குடும்ப முதலில் வந்திருக்க..

 உலகநாதன் கார்  ரெசார்ட்டில் உள்ள பார்ட்டி ஹாலில் முன் வந்து நிற்க..

 காரில் இருந்து முதலில்   இறங்கியது சீரஞ்சீவி தான்..

அக்னியை பார்த்த சீரஞ்சீவி “டாடி” என்று அணைத்துக்கொள்ள..

 மகனை அணைத்துக் கொண்ட அக்னி.. “எப்படிடா இருக்க,  ஹாப்பி  பர்த்டே கண்ணா” என்றான்..

 “தேங்க்யூ டாடி” என்றான்..

” செஸ் கிளாஸ் எப்படி போகுது”?..

 “சூப்பர் டாடி,,  நெக்ஸ்ட் வீக் நாங்க டெல்லி போறோம், ஒரு போட்டி இருக்கு” என்றதும்..

” கண்டிப்பா அதிலேயும்  நீ  தான் வின் பண்ணுவ  டா கண்ணா” என்றான் மகனை….

 “அப்புக்குட்டி” என்ற சத்தம் கேட்டு நிமிர்த்து பார்த்தான் அக்னி..

 ரதியின் தோளிலிருந்த,, தன் அத்தையின் மகள் தங்க ரதி தன்னை  பார்த்து  தூக்கு என்று கைநீட்ட..

“என் தங்க பாப்பா” என்று 3 வயதான ரதி, உலகநாதனின் மகள் தங்க ரதியை தூக்கி அணைத்துக்கொண்டான் அக்னி..

ரதியை போலவே, ரதியின் மகளும் அக்னியை அப்புக்குட்டி என்று அழைக்க…

அந்த  குட்டி தேவதை தன்னை அப்புப்குட்டி என்று அழைத்ததும், வாறி அணைத்தவன்..

“என் தங்க  குட்டிக்கு என்னாச்சுடா,?”.. என்றதும்..

“பாப்பாவுக்கு சூடு  வந்துச்சு” என்று தனக்கு காய்ச்சல் என்றதை சொல்ல..

“அப்படியடா தங்கத்துக்கு சூடு வந்துச்சா” என்றவன் மழலை மொழியில் குழந்தையிடம் பேச..

அக்னியின் மகள் ரதியிடம் வந்து “அத்தை தூக்கு”  என்று சொல்ல,, தன் அப்புக்குட்டியின் மகளை தூக்கிக்கொண்டாள் ரதி..

சிவா, சீரஞ்சீவியை அழைத்து கொண்டு உள்ளே செல்ல..

உலகநாதனின் குடும்பத்தை பார்த்த அக்னியின் குடும்பம் அவர்களை வர வேற்க வெளியில் வந்தனர்..

தேவ் தங்க ரதியை பார்த்து..

“பாப்பு குட்டி  என்கிட்ட வாங்க” என்றதும்,.

குழந்தை தேவ்வை பார்த்து  “நோ” என்று அக்னியின் கழுத்தை கட்டி கொள்ள..

தேவ்வுக்கு  தங்க ரதி பாப்பாவை ரொம்ப பிடிக்கும், மூன்று வயதில் வெள்ளை நிறத்தில்  குண்டு கன்னங்களோடு, சின்னதாக குடுமி போட்டு அழகாய் சிரிக்கும், தங்க ரதியை யாருக்கு தான் பிடிக்காது,,.

தேவ் தன்னிடம்  வா என்று குழந்தையை அழைக்க..

“வரமாட்டேன்,,, நான் அப்புக்குட்டி கூட தான் இருப்பேன்” என்றதும்..

“என்ன  அப்புக்குட்டியா? உனக்கும் அப்புக்குட்டி, உங்க அம்மாவுக்கும் அப்புகுட்டியா?” என்று தேவ் சிரிக்க..

பார்வதி அனைவரையும் கேக்  வெட்ட  அழைத்தார்.,,.

அனைவரும்  குடும்பமாக வந்து  நிற்க..

பெரிய டேபள் போட்டு  மூன்று கேக் தயாராக இருந்தது,, மூன்று பிள்ளைகளும்  அவரவர் பெயர் போட்ட கேக்கின் முன் வந்து நிற்க..

பார்க்கவே அழகாய் இருந்தது,, .. சிவஅக்னிஸ்வரனின் பக்கத்தில் பார்வதி நிற்க,, அக்னி அவளின் மகள் பெர்னிலாஅக்னியின்   பக்கத்தில் இருந்தான்,, ரதியும், உலகநாதனும் சீரஞ்சீவி உலகநாதன் பக்கத்தில் நிற்க..

மூன்று பிள்ளைகளும் கேக் கட் பண்ண, அனைவரும் ஹாப்பி ப்பர்த்தடே என்று பாடல் பாட..

அனைவரும்  குழந்தைகள் யாருக்கு முதலில் கேக் ஊட்டி விடுவார்கள் என்று வேடிக்கை பார்க்க..

எல்லா  வருடம்   மாதிரியே  மூன்று பிள்ளைகளும்   முதலில் மாயாவுக்கு  கேக் ஊட்ட..

தன் மூன்று பிள்ளைகள்  ஊட்டிய கேக்கை உண்டவள்,, தன் செல்வங்களை அணைத்து கொண்டாள்..

“மாயா” என்று  அக்னி சத்தம் போடவும் குழந்தைகளை விட்டு பிரிந்தவள்..

தன் கணவனின் தோள் சாய்ந்து கொண்டாள்…

அவளின் கண் சந்தோஷத்தில் கலங்கியது,, பிள்ளைகள் கேக் வெட்டி தன் சொந்தங்களுக்கு ஊட்டி விட.. அவர்களும் பிள்ளைகளுக்கு  ஊட்டி விட்டனர்..

பார்வதிக்கு   தன்  பிள்ளைகளை  ஒன்றாக நிற்பதை   பார்த்து சந்தோஷ பட்டவர்,, அனைவரையும்  உண்டு விட்டு தன் வீட்டுக்கு அழைத்து சென்றவர்,,

அனைவரையும் ஒன்றாக அமர வைத்து சுத்தி போட்டார்,, தன்  குடும்பத்துக்கு எந்த துன்பமும்  வர கூடாது என்று….

பார்வதியின்  வீட்டில் தன் பிள்ளைகள் பேசிக்கொண்டிருக்க,  பேரபிள்ளைகளும் விளையாடிக்கொண்டிருந்தனர்..

இரவு  வெகு நேரம் ஆனதால் “எல்லாரும் தூங்க போங்க” என்று பார்வதி கூற..

“பாட்டி நான் உங்க கூட”  என்று  குட்டி பிள்ளைகள் அனைவரும் பார்வதியுடன் தூங்க போக..

தங்க ரதி கூட பார்வதியுடன் சென்றாள்..

அனைவரும் அவரவர் துணையோடு தூங்க போக..

உலகநாதன்  ரதியை பார்த்து கண்ணசைத்துவிட்டு  அவருக்கென்று ஒதுக்கி இருந்த அறைக்கு செல்ல..

ரதி மகளுக்கு பால் எடுத்து சென்று பார்வதியிடம் கொடுத்து விட்டு பேசிக்கொண்டிருந்தாள்..

மாயா காலையில் இருந்தே அக்னியை  முறைத்து  கொண்டே இருக்க..

ரூம்பிற்க்கு வந்தவளை  “என்ன மாயா பேபி, வரவர அழகாயிட்டே போற.. மூன்று பிள்ளைகளை பெத்த  மாதிரியா இருக்க” என்று அவளின் கொலு,கொலு  இடுப்பை கிள்ளி விட்டு வம்பு பண்ணியவன், அவளை கட்டியணைத்து தூக்க..

அவனை தள்ளி விட்டவள், “நான் கோபமாக இருக்கேன்,, அதான் சொல்லிட்டீங்களே குழந்தை வேண்டாமுன்னு, இப்பா ஏன் பக்கத்துல வர்ரீங்க,,” என்று அவனிடம் இருந்துவிலக..

“போதும்டி, இன்னொரு தடவை ரிஸ்க் எடுக்க நான் தயரா இல்லை, இரண்டு பிள்ளைகள் நமக்கு போதும்,, வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்” என்று அவளை அக்னி கொஞ்ச…

“இந்த கொஞ்சலுக்கு  ஒன்னும் குறைச்சல் இல்ல” என்றவளை..

“வேற என்ன கொறச்சல், சொல்லுடி கவனிச்சிருவோம்,,” என்று மாயாவை அக்னி பல வகையில் பாதுக்காப்பாய்  கவனிக்க..

“இதுல ரொம்ப தெளிவு நீங்க” என்றாள்..

“உன்னை தெரியாத  எனக்கு, கேப்பு கெடச்சா அடுத்த மாசம் உனக்கு  வயிரு வீங்கி போயிடும் டார்லிங் ” என்று மாயாவோடு  இணைந்தான் அக்னி..

பார்வதி கதை சொல்லி பிள்ளைகளை  தூங்க வைக்க,, தங்க ரதி தூங்கிய பின்னே உலகநாதன் இருக்கும் அறைக்கு உணவை  எடுத்துக்கொண்டு வந்தாள் ரதி…

கையில் உணவு தட்டோடு வந்த ரதியை  பார்த்த உலகநாதன்,.

“என்ன ரதி”?..

“சாப்பாடு, நீங்க ப்பர்த்தடே பார்ட்டியில  சரியாவே  சாப்பிடல, அப்பறம் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டப்போ  ஏக்கமா பாத்தீங்க” என்றவள்..

கணவனுக்கு உணவை  ஊட்ட..

“என்  கண்ணை பார்த்தே எல்லாத்தையும் புரிஞ்சுக்கிற ரதி”..

“நான் குழந்தைக்கு ஊட்டி விடும் போதே உங்களுக்கும் ஊட்டி விட்டு இருப்பேன்,, தேவ் அங்கே இருந்தான்,, நான்  ஊட்டி விட்டதை பார்த்தா  என்னை  கேலி பண்ணுவான்”,, என்று ரதி வெட்க பட…

“என் ரதி வெட்க படுறது கூட அழகுதான்” என்றவர் மனைவியை அணைத்துக்கொண்டவர்.

“மனசு நிறைஞ்சு இருக்கு ரதி,, வீடு நிறைய பிள்ளைகள்,, நம்ம இரண்டு பேரும் சேர்ந்து   வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமா  நம்ம தங்க ரதி,, நம்ம வாரிசா நம்ம பிள்ள சிரஞ்சீவி,, எல்லாருக்கும் தூணா நிக்குற அக்னி, பாசத்த அள்ளி கொடுக்குற மாயா,, எல்லோருக்கும்  தாயா இருக்குற பார்வதியம்மா,, கலகலவென பேசுற தேவ்,,  எனக்கு  இன்னொரு பொண்ணு மாதிரி நிலா,, இந்த மாதிரி உறவுகள் கிடைக்க நாமா குடுத்து வச்சு இருக்கனும்.. நான் பெரிய பாக்கியம் பண்ணி இருக்கேன்..

வாழ்க்கையில  உன்னை  பாக்குறதுக்கு முன்னாடி  ஏதையோ தேடி ஓடிட்டே இருந்தேன்,, எனக்கு என்ன வேணுமுன்னு  தெரியல, ஆனா ஏதோ பெருசா இழந்துட்டேன்னு மட்டும் தெரியும்…

ஒரு வாய்ப்பு எனக்கு  கிடைக்காத,  என் ரதியை  பாக்கனுமுன்னு பல முறை ஏங்கி இருக்கேன்,,..

 என்  ரதி கூட   அடுத்த ஜென்மத்துலையாவது சேரனுமுன்னு  நெனச்சு  இருக்கேன்..

எத்தனை ஜென்மம்  எடுத்தாலும், என் ஜீவன் உன்னை வந்து சேருமுன்னு  காத்திருந்தேன் ரதி..

ஆனா இந்த ஜெனுமத்துலே  என் ஜீவன் உன்னை சேர்ந்திருச்சுடா”..

என்று அவளை  அணைத்துக்கொள்ள..

உலகநாதனின் தலைகோதிய ரதி.

“ஒருத்தரை  உண்மையா நேசிச்சா, நம்ம எந்த சூழ்நிலையில இருந்தாலும்,, அது நம்மலை சேர்த்து வைக்கும் மச்சான்”.. என்றவள்..

“நீங்க  என் மேல வச்சு இருந்த பாசம் தான்,  பல வருசம் கழிச்சு நாமா சேர்ந்திருக்கோம்” என்ற ரதி உலகநாதனை காதல் பார்வை பார்க்க….

ரதியை  தன்னோடு அணைத்துக்கொண்ட உலகநாதனுக்கு உலகத்தை வென்று விட்ட சந்தோஷம்,,

விதியின் வசத்தால் பிரிந்து என் ஜீவன் உன்னை சேருமா  என்று ரதிக்காக  காத்திருந்த  உலகநாதனுக்கு,,..

காத்திருந்ததின் பலனாக அவருக்கு கைமேல் பலன் கொடுக்க..

வாழ்க்கையே இல்லை என்று தனியா  வாழ்ந்து வந்தவருக்கு, அவர் வாழ்க்கையின்  வரமாய்  மாயா, ரதி, இப்போது தங்க ரதி என்று  வந்திருக்க….

பாசம் காட்ட மாயா, காதலையும் பாசத்தையும் அள்ளி கொடுக்க ரதி.. இவர் கொஞ்சி வளர்க்க தங்க ரதி,.. என்று மூன்று பெண்கள்  சேர்த்து அவர் வாழ்க்கையை வண்ண மயமாக்க..

சிரஞ்சீவியோ , அவரை  இளைஞன் போல தன்னோடு ஓட வைத்திருந்தான்..

உலகநாதன் குடும்பத்திற்க்கும், அக்னியின்   குடும்பத்திற்க்கும்  அனைத்து  செல்வங்களும் கிடைத்து, நீண்ட நாள் எந்த குறையும் இல்லாமல் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி விடை பெருவோம்…. 🙏 நன்றி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!