Skip to content
Post Views: 930

அன்று முழுவதுமே பெண்கள் கொண்டாட்டமாக இருந்தனர்… ஆண்கள் ஒரு நிலம் வாங்கும் விசயத்திற்கு சென்று இருக்க அன்று அவர்கள் தினம் தான்…
அங்கு டெல்லியில் மதிய உணவை அவள் உண்டுவிட்டு ஒரு ஸ்டிக்கி நோட் எடுத்து டைனிங் டேபிளில் “நான் சாப்பிட்டு விட்டேன்” என எழுதி ஒட்டி வைத்தவள் அவனின் அறை கதவை தட்டிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.. போகும் அவளை பார்த்தவன் டைனிங் டேபிள் அருகில் சென்றான்.. ஸ்டிக்கி நோட்டை பார்த்தவன் இனிமேல் எத்தனை நாளுக்கு கண்ணாமூச்சி ஆட்டமா என எண்ணி சலித்து கொண்டவன் அமைதியாக உண்டுவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்…
அடுத்த நாள் மாலையே ஆஷாவும் அப்துலும் வீட்டிற்கு வந்து இருக்க இருவருக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது..
நிரவியும் கல்லூரிக்கு சென்று வர ஆரம்பித்து இருக்க இவன் ஒரு கேஸ் விஷயமாய் காஷ்மீர் செல்ல வேண்டியதாய் இருந்தது… எனவே இருவரும் பார்த்துக்கொள்ளவே இல்லை…நாட்கள் யாருக்கும் காத்திராமல் செல்ல காஷ்மீர் சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை.. சீக்ரெட் மிஷன் காரணமாக அவன் அங்கே தங்க வேண்டியதாய் இருந்தது..
அவன் சென்ற இரண்டு நாட்கள் தான் ஆகி இருந்தது.. ஆனால் அதுவே யுகமாய் தெரிந்தது… நாட்கள் செல்ல செல்ல அவனை மிகவும் தேட ஆரம்பித்து இருந்தாள்… அந்த தேடல் அவளுக்கு ஒரு பதிலை சொல்லி இருந்தது… அது காதல்.. ஆம் காதல் தான்… காதலை புரிந்து கொண்ட பின் அவனை காண மனம் ஏங்கியது.. ஆனால் அவனுடன் பேசக்கூட முடியவில்லை…
இதற்கிடையில் ரித்திகாவிக்ரு ஒன்பதாம் மாதமே பிரசவ வலி வந்து இருக்க அவளை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்.. சிவா அதை கேட்டு அரக்க பறக்க ஓடி வந்து இருந்தான்.. அவளை காணும் வரை அவன் அவனாக இல்லை… மிக பதட்டமாக வந்தான்.. அவன் வருவதற்குள் அவனின் பெண்ணரசி தன் தாயிற்கு சிரமம் தராமல் பூமிக்கு வந்து இருந்தாள்…
அவன் வரும் போது அவனின் மஹாராணியும் இளவரசியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்… அவன் ஏற்கனவே மெடிக்கல் லீவ் எல்லாம் நாளை கிளம்புவதாய் இருக்க இன்று பிரசவ வலி வந்தது எதிர்பாராதது…
அவன் அடுத்த அரை மணி நேரத்தில் ரித்திகா கண் விழித்து இருக்க அவள் கண்கள் தேடியது அவனை தான்.. அவள் எதிர்பார்த்தது போல அவளை பார்த்து தான் அமர்ந்து இருந்தான்..
அவளுக்கு சோர்வாய் இருந்தாலும் அவனை பார்த்த சந்தோசத்தில் அவள் முகம் பிரகாசித்தது… அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “ரொம்ப வலிச்சதா ரிதும்மா.. நீ சொல்லிட்டே இருந்தல உன்கூட லேபர் பெயின் அப்ப நான் கூட இருக்கனும்னு.. ஆனா நான் பாப்பா பிறந்த பின்னாடி தான் வந்து இருக்கேன்” என்று வருத்தமாக கூறினான்..
அவளோ “மாமா பாப்பா எனக்கு ரொம்ப சிரமம் தராம பிறந்துட்டா… நீங்க கவலைப்படாதீங்க.. பாப்பா டுயு டேட்டுக்கு டூ வீட்ஸ் முன்னாடியே பிறந்துட்டா… சோ நீங்க பீல் பண்ணாதீங்க..” என்று கூறி அவனை கீழே குனிய கூறி நெற்றியில் முத்தமிட்டாள்..
பின் அவளே “பாப்பாவை பாத்திங்களா உங்களை மாதிரியே பாப்பாவுக்கு கன்னத்துல குழி விழுது சிரிக்குற அப்ப.. உங்களுக்கு அவ்வளவா தெரியாது.. பட் பாப்பா சின்னதா சிரிச்சா கூட தெரியுது..” என்று தன் மகளை பார்த்தவாறு கூறினாள்…
அவளை பற்றி பேசியது தெரிந்ததோ என்னவோ சினுங்க ஆரம்பித்து இருந்தாள்.. சிவா மென்மையாய் அவளை தூக்கியவன் ரித்திகாவிடம் கொடுத்தான்.. தகப்பன் தூக்கியது தெரிந்துவிட்டதோ என்னவோ பொக்கை வாய் போட்டு கன்னத்தில் குழி விழ சிரித்தாள் அவனின் பெண்ணரசி…
அதை கண்கொட்டாமல் பார்த்தான் சிவா பாப்பா பசிக்காக அழ ரித்திகா பாப்பாவிற்கு தாய்ப்பால் தர மெல்ல உதவினான்..
நிரவி வர முடியா சூழல் அவளுக்கு இன்டெர்னல் ஆரம்பித்து இருக்க அவளால் வர முடியவில்லை.. இன்டெர்னல் முடிந்து ஒரு வாரம் விடுமுறை என இருக்க அப்போது வருகிறேன் என்று கூறிவிட்டாள்..
குழந்தை பிறந்து இரண்டு நாட்களில் ரித்திகாவையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.. அந்த பெண்ணரசி அனைவரையும் தன் சிரிப்பிலேயே ஆண்டாள்.. ஆண்கள் என்ன வேலை செய்ய சென்றாலும் அவளை பார்த்து விட்டு தான் சென்றார்கள்.. அதே போல் வெளியில் இருந்து வந்தாலும் அவளை பார்த்து கொஞ்சிவிட்டு தான் அறைக்கு செல்வார்கள்..
வீட்டில் இருந்தாலும் தாத்தாக்களின் கைகளில் தான் இருப்பாள்.. அருனேஸ் அர்ஜுனன் வீட்டில் இருந்து தான் கல்லூரி செல்கிறான்.. அவனால் ஒரு நாள் கூட அந்த சின்னக்குட்டியை பார்க்காமல் இருக்க முடியவில்லை…
ஆண்கள் அந்த சின்ன குட்டியை கையிலேயே வைத்து இருக்க பெண்கள் தான் சூடு கண்டுவிடும் உடம்பு தரையில் பாயை போட்டு அதில் படுக்க வைத்து கொஞ்சுங்கள் என்று கூறி செல்வார்கள்…
பாப்பா பிறந்து பதினைந்து நாட்கள் கழித்து பெயர் சூடும் விழா ஏற்பாடு செய்து இருந்தது… நிரவி இன்டெர்னல் முடிந்து ஊருக்கு வந்து இருந்தாள்… அவள் வந்த அடுத்த நாள் பெயர் சூட்டும் விழா.. அவள் இரவு பத்து மணி மேல் வந்து இருக்க அவளால் குழந்தையை பார்க்க முடியவில்லை…
அடுத்த நாள் வேகமாக எழுந்து குளித்த நிரவி ரியாஸ் எதோ பதில் அனுப்பியுள்ளனா என பார்த்தவள் அவன் அனுப்பவில்லை என சோர்ந்தவள் தன்னை திடப்படுத்தி கொண்டு சிரித்த முகமாய் வெளியில் வந்தாள்…
எப்போதும் சீக்கிரம் எழுந்து கொள்ளும் அந்த சின்ன குட்டி அன்று பார்த்து நன்றாக உறங்கி கொண்டு இருந்தது…அனைவரும் தயாராகி இருக்க ரித்திகாவும் அந்த சின்னக்குட்டியும் மட்டும் குளிக்கவில்லை.. அதே போல் செண்பகம் அம்மாவும் குளித்து இருந்தாலும் சாதாரண சேலையை தான் உடுத்தி இருந்தார் அந்த சின்னக்குட்டி எழுந்ததும் குளிக்க வைக்க..
அதோ இதோ என அந்த சின்னக்குட்டி எழுந்து இருந்தது…செண்பகம் அம்மா குளிக்க வைத்து ரித்திகாவிடம் கொடுக்க அவள் பாப்பாவிற்கு அனைத்தும் தயார் செய்து பால் கொடுத்து விட்டு குட்டியான பட்டு பாவாடை அணிந்து சிவாவின் கையில் கொடுத்தாள்.. அறையை விட்டு வெளியேறுவதற்குள் ரித்திகா வந்து அந்த சின்னக்குட்டியை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள்..
சிவா மீண்டும் அறைக்குள் வர ரித்திகா கேள்வியாய் பார்த்தாள்.. “சின்ன குட்டியை குட்டி வாங்கிட்டு போயிட்டா…” என்று கூறியவன் கட்டிலில் அமர்ந்து கொண்டான்..
“பெரிய குட்டி சின்ன குட்டியை தூக்கிட்டு போயாச்சா.. ஒரு பத்தே நிமிஷம் நான் குளிச்சிட்டு வரேன்.. நீங்க அதுக்குள்ள அத்தைங்க இல்லனா அம்மாங்க யாரையோ வர சொல்லுங்க.. புடவை கட்ட கஷ்டமா இருக்கு” என்று கூறி குளியலறை சென்றுவிட்டாள்…
அவள் உள்ளே சென்றதும் கதவை சாத்தியவன் அவள் உடுத்த வேண்டிய உடையை எடுத்து கட்டிலில் வைத்தான்.. குளித்து விட்டு அவசரமாக அவள் வெளியில் வர அவனை பார்த்து திகைத்துவிட்டாள்.. “மாமா இது விளையாடுற நேரமா ஏற்கனவே நேரமாகி போச்சு.. போங்க யாரையோ வர சொல்லுங்க” என்று கூறி தலையை உலர்த்த “ரிது எதுக்கு டென்ஷன் வா நான் ஹெல்ப் பண்றேன்” என்று கூறியது மட்டுமில்லாமல் அழகாக அவளுக்கு புடவை கட்டி விட்டு நகை எல்லாம் போட்டு விட்டு இருந்தான்…
அவள் அவனையே பார்த்து கொண்டு இருக்க அவள் நெற்றி முட்டி முத்தமிட்டவன் “சீக்கிரம் தலை சீவு ரித்து” என்று கூறி கட்டிலில் அமர்ந்தான்… அவளும் தலை சீவியவள் போட்டு வைத்து விட்டு குங்குமம் எடுக்க வேகமாக அவள் அருகில் வந்து நெற்றியிலும் உச்சியில் வைத்துவிட்டான்…
இருவரும் தயாரஆகி கீழே வரும் போது அனைத்தும் தயாராகி இருந்தது.. நல்ல நேரத்தில் குட்டி பாப்பாவுக்கு பெயர் நிஷ்விகா என்று பெயர் சூட்டினர்.. பெயரை கேட்டு நிரவி இருவரையும் பார்க்க இருவரும் ஒரே போல் அவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தனர்..
நிரவிக்கு ஆனந்தத்தில் கண் எல்லாம் கலங்கிவிட்டது… கேட்ட குடும்பத்தினருக்கும் ஆச்சர்யம் தான்… நிரவி மேல் இருவருக்கும் அவ்வளவு பாசமா என.. அவள் பெயரை கொண்டு ஆரம்பித்து முடியும் பெயரை தேடி தேடி சூட்டி இருந்தனர்.. அவனின் இரு குட்டிகளுக்கும் ஒரே எழுத்து தான் வித்தியாசம்.. நிரவி இருவரையும் தான் பார்த்து கொண்டு இருந்தாள்…
வந்தவர்கள் உணவு அருந்த செல்ல பெரியவர்கள் குட்டி பொண்ணை அழைத்து கொண்டு ரித்திகாவை அழைத்து செல்ல கூறிவிட்டனர்… சிவாவும் ரித்திகாவும் அவர்களின் சின்ன குட்டியை அழைத்து கொண்டு அறைக்கு சென்றுவிட்டனர்.. நிரவி மெதுவாக அவர்கள் அறைக்கு சென்றாள்…
அவளை பார்த்த சிவா “குட்டி வாடா ஏன் வெளிய நிக்குற” என்று கூறி கைபிடித்து அவளை அழைத்து வந்தான்… நிரவி கண் கலங்கி “என்மேல அவளோ பாசமா மாமா…” என்று கேட்க அவனோ “நீ என் குட்டிடா.. உன்மேல பாசம் இல்லாம இருக்குமா.. நடுவுல நமக்கு கொஞ்சம் டேர்ம்ஸ் சரியில்ல… பட் அப்பயும் உன்மேல பாசம் இருந்தது குட்டி…” என்று அவள் தலையில் கலைத்து கூறினான்… ரித்திகா இருவரையும் தான் சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தாள்…
நிஷு குட்டி மெத்தையில் படுத்து இருக்க ரித்திகா மெத்தையின் ஓரத்தில் அமர்ந்து இருந்தாள்… நிரவி அவள் அருகில் செல்ல ரித்திகா புரியாமல் எழுந்து நின்றாள்… நிரவி மெதுவாக அவள் அருகில் சென்று அவளை அணைத்து கொண்டாள்.. ரித்திகாவுக்கு கண் எல்லாம் கலங்கிவிட்டது… “குட்டி” என்று மென்மையாக அவள் அழைக்க நிரவி கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது…
அவள் மெதுவாக “சாரி க்கா..” என்று கூறினாள்… அவள் அக்கா என்று அழைத்ததையும் கேட்டதும் ரித்திகா கொஞ்சம் சத்தமாக அழுதுவிட்டாள்…அவள் அழுவதை பார்த்த நிரவியும் அழுதுவிட்டாள்..
சிவா தான் இருவரையும் சமதானப்படுத்தினான்.. நிரவி இருப்பதால் சிவா உணவு பரிமாறும் இடத்திற்கு சென்றுவிட்டான்… முதலில் இருவரும் பேசாமல் உட்காந்து இருக்க பின் இருவரும் பேச ஆரம்பித்து இருந்தனர்….
இங்கு கார்த்திகா நிரவியை தேடி சிவாவின் அறைக்கு வர அவளை ஒரு உருவம் அறைக்குள் இழுத்தது… முதலில் பயந்து கத்த போனவள் இழுத்தது யாரென அறிந்து அமைதியாகிவிட்டாள்… “என்ன தங்கம் கத்துவ அப்படினு பார்த்தா அமைதியா இருக்க” என்று கேட்க அவளோ” என்னை என் மாமாவை தவிர யாரு பிடிச்சு இழுப்பா…” என்று அவள் புருவமுயர்த்தி கேட்டாள்..
அதில் மயங்கியவன் அவளை அணைக்க வர அவனை தள்ளி விட்டு “எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறமா தான்” என்று கேலியாய் கூறியவள் அந்த அறையை விட்டு ரித்திகா இருக்கும் அறைக்கு ஓடிவிட்டாள்.. ஆரவும் போகும் அவளை பார்த்து சிரித்து கொண்டே வெளியேறினான்..
வழக்கம் போல் மொட்டை மாடியில் சண்டைகள் கோழிகள் சண்டையிட்டு கொண்டு தான் இருந்தனர்… “மாமா இப்போ பெரிய மாமா கிட்ட சொல்லுவியா மாட்டியா” என்று கோவமாக அவள் கேட்டாள்…
“அடியே சொல்றேன்டி.. உன் ரேடியோவ ஆப் பண்ணு… முதல்ல உன் எக்ஸாம்ஸ்ல நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணு.. நான் சொல்றேன்..” என்று கூற அவளோ “நான் நல்ல மார்க் எடுக்கலனா என்னை விட்டுட்டு போயிடுவியா” என்று தன்ஷிகா கோவமாக கேட்டாள்..
“பல்லை உடைச்சு கைல குடுத்துடுவேன்டி.. என்ன பேச்சு பேசுற.. உன்னை விட்டுட்டு நான் போயிடுவேனா…” என்று கேட்க அவளோ அவனை அணைத்து கொண்டாள்..
“மாமா ரெண்டு நாள் முன்னாடி கண்மணி அத்தையும் அம்மாங்க மூனு பேரும் பேசிட்டு இருந்தாங்க.. உங்களுக்கும் வயசு ஆகுதாம்… சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும்… எனக்கு ஒரு ஆசை நிரவியை ஆகாஷுக்கு கட்டனும்னு சொன்னாங்க..”
“அதுக்கு சுபிம்மா எனக்கும் சந்தோஷம் தான்… ஆனா பிள்ளைங்க சம்மதம் முக்கியம்.. அதுவும் இல்லாம அவளுக்கு படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு… பசங்களுக்கு சம்மதம்னா நாம மேற்கொண்டு பேசலாம்னு சொல்லிட்டாங்க…”
“நீயே சொல்லு எனக்கு பயமா இருக்குமா இருக்காதா.. கொஞ்ச நாள் முன்ன பெரிய மாமா பேசுனாங்க உன் கல்யாணத்தை பத்தி.. இப்போ அத்தை அதுவும் நிரவி அக்காவுக்கு கேட்குறாங்க… நீயே சொல்லுடா எனக்கு எப்படி இருக்கும்… எனக்கு பயமா இருக்கு மாமா.. நீ இல்லனா என்னால உயிரோடவே இருக்க முடியாது மாமா…” என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவள் வாயை பொத்தியவன் அவள் கண்களை பார்த்து பேச ஆரம்பித்தான்…
“தனும்மா இங்க பாரு.. இன்னிக்கு நான் கண்டிப்பா சொல்லுறேன்… நீ கவலைப்படாத.. என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் என்னை நம்புடி.. எனக்கு எப்பவும் என் தனும்மா தான்.. அவ இல்லனா நானும் இல்ல…” என்று கூறி இறுக்கமாக அணைத்து கொண்டான்…
ஆகாஷ் கண்டிப்பாக இன்று வீட்டில் பேச வேண்டும் என முடிவு எடுத்து கொண்டான்…
error: Content is protected !!