Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 20 (இரண்டாம் பாகம்)

கண்மணி சுபா ஊரை விட்டு வந்த பின் நடந்ததை கூற ஆரம்பித்தாள்… முகுந்தன் அதை பற்றி கூற வந்தாலும் மறுத்து விடுவாள்.. ஆனால் இன்று கண்மணி கூறுவதை கேட்க ஆரம்பித்தாள்….

நந்தினி சுபாவை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு நிம்மதியாக உறங்கினாள்… அது தான் அவளின் கடைசி நிம்மதியான உறக்கம் என்று அறியாமல்….



Advertisement

அடுத்த நாள் மெதுவாக விடிய சுபாவை பார்க்க மித்ரா அவளின் அறைக்கு சென்றாள்… அவளை காணாமல் வீடு முழுவதும் தேடி விட்டு அனைவரிடமும் கூறினாள்… அவர்களும் தேடி பார்த்து விட்டு இடிந்து போய் அமர்ந்து இருந்தனர்…. அப்போது தான் ஆரவும் வீட்டில் இல்லாதது தெரிந்தது…

Advertisement

Advertisement

ஆரவ் இல்லாதது நந்தினிக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான் இருந்தும் சுபாவை அசிங்க படுத்த தப்பு தப்பாக பேச ஆரம்பித்தாள்… “என் தம்பி இல்லாம போய் ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள யார் கூடயோ  ஓடி போயிட்டா…. குடும்ப மானத்தை வாங்கவே ஓடி போயிட்டா” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே அவள் மண்டையில் ஒரு ரப்பர் பந்து வேகமாக வந்து விழுந்தது…

Advertisement

பந்து பட்டு நெற்றி உடனடியாக வீங்கி விட்டது…. வலி அவளுக்கு உயிர் போனது… அனைவரும் நந்தினியின் பேச்சில் கோவமாக இருந்தனர் அவள் மீது… அதனால் யாரும் கண்டு கொள்ளவில்லை…

தன்னை அடித்தது யார் என்று கோவமாக பார்த்த போது அங்கு கோவமாக சிவனேஸ் நின்று இருந்தான்…. “டேய் என்ன திமிரா.. நான் உன் அம்மா ஞாபாகம் இருக்கா என்னை எதுக்கு அடிச்ச” என்று கேட்டு கொண்டே அவன் அருகில் சென்றாள்….

ஆனால்  அவனோ கைக்கு கிடைத்த பொருட்களை எடுத்து அவளை நோக்கி வீசினான்…. அவனின் இந்த கோவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை… அருகில் நின்ற சசி தான் அவனை அமைதிப்படுத்தினான் தன்னுடன் அணைத்து கொண்டு…

அப்போதும் கோவம் குறையாமல் “விடு மாமா என்னை… இவங்க பேட்… இவங்க சீட்டிங் லேடி… அத்தை பத்தி தப்பு தப்பா சொல்றாங்க… இவங்க சொல்றது எல்லாமே பொய்… இவங்களை எனக்கு பிடிக்கவே இல்லை… என் பக்கத்துல வர வேண்டாம்னு சொல்லுங்க” என்று கூறி அவனிடம் இருந்து திரும்பி பக்கத்தில் உள்ள பொருளை அவள் மீது வீசினான்….

“என்ன ஆச்சு சிவா… என்ன பண்ணாங்க அம்மா…” என்று கேட்டான் வாணன்….

“அப்பா இவங்க என் அம்மா இல்லை… இவங்களை அம்மானு சொல்லாதீங்க” என்று கோவமாக கூறினான் சிவனேஸ்….

மீண்டும் அவனே நேற்று இரவு நடந்த அனைத்தையும் கூறி முடித்து இருந்தான்….

“இவன் பொய் சொல்றான்…. சின்ன பையன் யார் சொல்லி கொடுத்தோ இப்படி சொல்றான்… ஏன் அந்த ஓடுகாலியே இப்படி சொல்ல சொல்லி இருப்பா” என்று சிறியவன் கூறியதையும் பொய் என்று உரைத்தாள் நந்தினி….

அவள் அவ்வாறு சொல்லி முடித்ததும் மீண்டும் கோவம் கொண்ட சிவனேஸ் பக்கத்து டேபிளில் வைத்து இருந்த கண்ணாடி பொம்மையை அவளை நோக்கி வீசி இருந்தான்…. அது அவளின் கையில் பட்டு அந்த கண்ணாடி பொம்மை உடைந்து ரத்தம் வந்தது… மேலும் கண்ணடி துண்டு அவள் கையிலும் சென்று இருந்தது…

“அப்பா நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல… நான் இந்த வருஷம் பப்ளிக் எழுத போறேன்… இவங்க பண்ணது எல்லாத்தையும் உங்க போன்ல நான் வீடியோ ரெகார்ட் பண்ணி இருக்கேன்…. நேத்து இவங்க பண்ணதை என்னால தடுக்க முடிஞ்சி இருக்கும்… ஆனா எனக்கு உதவிக்கு யாரும் இல்ல… எல்லாரும் தூக்க மாத்திரை கலந்த பால் குடிச்சதுனால மயக்கத்துல இருந்திங்க.. அது தான் அத்தைய இவங்க துரத்தி விட்டதும் நான் ஆரவை அத்தை பின்னாடியே போக சொல்லி முகுந்தன் சித்தப்பா வீட்டுக்கு போக சொன்னேன்….” என்று சற்று வருத்தமாக கூறி முடித்தான்…

அந்த விடியோவை பார்த்ததும் அனைவருக்கும் நந்தினி மீது ஆத்திரமாக வந்தது…. வாணன் பார்த்துவிட்டு அவளை நான்கு ஐந்து முறை அறைந்து “ச்சே நீ எல்லாம் ஒரு பொண்ணாடி… ஏன்டி இப்படி மாறி போன… எதுக்காக என் தங்கச்சி மேல் இவளோ வன்மம் உனக்கு…. அவ என்னடி உன் மேல கெடுதல் பண்ணா… அவ குழந்தை மாதிரிடி…. இது வரைக்கும் யாருக்கோ கெட்டது பண்ணி இருக்காளா….  உன்னை பாக்கவே எனக்கு பிடிக்கல… என் மூஞ்சில முழிக்காத….” என்று கூறி அறைக்குள் நுழைந்து கொண்டான்….

அப்போது தான் முகுந்தன் குடும்பம் உள்ளே வந்தது… மருதாயி பாட்டி தான் “ஏன் எல்லாரும் இங்க இருக்கீங்க…. வாணன் ஏன் கோவமா பேசிட்டு போறான் என்ன ஆச்சு…” என்று கேட்டார்….

சுப்ரியா தான் அழுது கொண்டே அனைத்தையும் கூறினாள்… மேலும் “பாட்டி சிவனேஸ் ஆரவ் குட்டியை அக்காவை கூட்டிட்டு அங்க வீட்டுக்கு தான் போக சொல்லி இருக்கான்… அக்கா எங்க”  என்று கேட்டாள்…..

அவரோ அதை கேட்டு அதிர்ந்து “பிரியா ம்மா சுபா வீட்டுக்கு அங்க வரல….” என்று கூறினார்…. அதை மாரியப்பனும் ஆமோதித்தார்….

அனைவரும் பதறி விட்டனர் எங்கு சென்று இருப்பாள் என தெரியாமல்…. நந்தினி அப்போதும் திருந்தாமல் தான் இருந்தாள்…. “நான் சொன்னேன்ல எங்கயோ போயிட்டா… நன் துரத்திவிட்டது ஒரு சாக்கு… இல்லனாலும் போய் இருப்பா” என்று திமிராக கூறினாள்…..

அதுவரை அமைதியாக இருந்த பாலா பெல்ட் எடுத்து அவளை விளாசிவிட்டார்… யாரும் அவரை தடுக்கவில்லை… பின் மருதாயி பாட்டி தான் “பாலா விடு செத்துற போறா… இப்போ சுபாவை தேடுங்க….” என்று கூறினார்…..

அப்போது ராஜம்மாவும் அவர் கணவரும் ஒரு பேப்பருடன் வீட்டிற்கு வந்தனர்…. அவர்கள் கையில் இருக்கும் பேப்பரை பார்த்து பாட்டி என்னவென்று கேட்டார்… அவர்களோ “அம்மா காலைல எழுந்து வெளிய வரும் போது இந்த பேப்பர் வெச்சு மேலே கல்லு இருந்தது… படிச்சி பார்த்தோம்… சுபா பாப்பா எழுதினது போல அது தான் வேகமாக இங்க கொண்டு வந்தோம்” என்று கூறினார்….

அதை சசி வாங்கி வேகமாக படித்தான்… அதில் “இந்த லெட்டர் படிக்குற அப்ப உங்களுக்கு நான் இல்லனு தெரிஞ்சி இருக்கும்… அவங்க துரத்தி விடாம இருந்தாலும் மாமா இல்லாத வீட்டுல என்னால இருக்க முடியாம உங்க கிட்ட சொல்லிட்டு வேற இடத்துக்கு போய் தான் இருப்பேன்… இப்போ உங்களுக்கு தெரியாம போறேன்… தயவு செஞ்சி என்னை தேடாதீங்க… போலீஸ் கம்பளைண்ட் அந்த மாதிரி எதுவும் தர வேண்டாம்… என்னால இனிமே அந்த வீட்டுல இருக்க முடியாது… அந்த ஊருலயும் தான்… நிரவி குட்டியை மட்டும் நல்லா பாத்துக்கோங்க…”  என்று எழுதி இருந்ததை படித்து முடித்தான்….

இருந்தும் சுற்றுவட்டார பகுதியில் தேடி பார்த்தனர்…. நந்தினி வலியில் மயங்கி இருந்தாள்… மருதாயி பாட்டி சொன்னதால் போனால் போகட்டும் என்று மித்ராவும் பிரியாவும் அவளுக்கு கண்ணாடி துண்டால் ஏற்பட்ட காயத்தை சுத்தம் செய்து மருந்து இட்டனர்… அதன் பின் அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை…..

அனைவரும் ஒரு ஒரு இடமாக தேடி செல்ல முகுந்தன் தூரமாக ஒரு இடத்திற்கு சென்று காரை நிறுத்தி விட்டு அந்த லெட்டரை பற்றி யோசித்தான்…

அவன் தான் சுபா கிளம்பும் முன் இந்த மாதிரி எழுத கூறி அவள் எழுதி முடித்ததும் ராஜம்மாவிடம் குடுத்து இவ்வாறு கூற கூறினான்…. மாலை வரை அப்படியே ரோட்டில் சென்று விட்டு வீடு திரும்பினான்…

நடுவில் மற்றவர்களிடம் அழைத்து விசாரித்து கொண்டான்…. அதே போல் சுபாவிற்கும் அழைத்து பேசினான்…. இங்கு நடந்ததை கூற வந்த போது அதை வேண்டாம் என கூறிவிட்டாள்…. அதனால் அவனும் எதுவும் கூறவில்லை…

அந்த நாள் முழுவதும் நந்தினி மயக்கத்தில் இருக்க மற்றவர்கள் எல்லாம் சோகமாக திரும்பி வந்தனர்…..

யாருக்கு உணவு உண்ணவில்லை… ராஜம்மாவும் தேவியின் அம்மாவும் தான் கட்டாய படுத்தி இரவு உணவை மட்டும் உண்ண வைத்தனர்… அறைக்கு சென்று யாரும் உறங்கவில்லை…. அனைவரும் அமர்ந்த நிலையிலேயே உறங்கி இருந்தனர்…. நிரவி குட்டி அப்பா அம்மா அண்ணன் மூவரையும் காணாமல் அழுது கொண்டே இருந்ததால் அவளுக்கு காய்ச்சல் வந்து இருந்தது…..

சசி தான் அவளை கீழே இறக்கி விடாமல் கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டான் இரவு முழுவதும்….

அடுத்த நாள் காலை முகுந்தனின் அலைபேசி சத்தத்தில் தான் அனைவரும் எழுந்தனர்…. ஒருமுறை அழைப்பு சத்தம் முழுதாக அழைத்து நின்றது… அடுத்த முறை அழைக்கும் போது தான் முகுந்தன் எடுத்து யார் என்று பார்த்தான்…

அழைத்தது வர்ணன்… ஒரு நிமிடம் அவனிடம் என்ன சொல்ல போகிறோம் என்று தெரியாமல் தடுமாறிவிட்டான்…. பின் முகுந்தன் அழைப்பை ஏற்று பேசுவதற்குள் டேய் சென்னை நான் ரீச் ஆயிட்டேன்… நான் பக்கத்துல வர அப்ப கால் பண்றேன்… என்னை பிக் அப் பண்ணிக்கோ என்று கூறி விட்டு  முகுந்தனின் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டான்…..

முகுந்தனுக்கு ஒரு பயம் வர்ணன் புரிந்துகொள்வானா என்று…. ஏற்கனவே அர்ஜுனன் பற்றி தெரிந்தே  வருத்தமாக இருந்தான்… இப்போது சுபா பற்றி தெரிந்தால் என்ன செய்வான் என்றே பயம் தான் அவனுக்கு அதிகமாக இருந்தது…..

வர்ணன் புரிந்துகொள்வானா….?!??!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!