Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 14

கருப்பன் ஆட்டம் 14

 

 

ஜல்லிக்கட்டில் தான் வெற்றி பெற்றதை முழுதாக உணரும் முன் கருப்பன் மண்ணில் சாய்ந்தான்.



Advertisement

அதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தர்மன் அதிர்ந்து தன் நண்பனை நெருங்கி வருவதற்குள்ளாக வேலிக்கு பின்னால் நின்றிருந்த கூட்டத்திலிருந்து எத்தனை வேகத்தில் வந்தால் என்று தெரியாத நிலையில் கருப்பனை அடைந்திருந்தால் மலர்விழி.

Advertisement

 ஏனென்றால் அனைவரும் கருப்பனா அய்யனாரா யார் ஜெயிப்பார்கள்? என்ற மேல் நோட்டமாக விழிகளை பதித்து பார்த்து கொண்டிருக்க, ஆனால் மலர்விழியோ கருப்பனையே ஆழ்ந்து பார்த்திருந்ததாள்.

Advertisement

அதனால் அவனின் உடலில் அய்யனார் விஷம் மருந்து ஏற்றிய பண்ணருவாளால் வெட்டியதை அவள் பார்த்து விட்டாள்.

Advertisement

அந்த நொடியே தான் இருக்கும் இடத்திலிருந்து ஓடி வந்து இப்பொழுது கருப்பனை நெருங்கி அவனை தனது மடியில் தாங்கி அமர்ந்திருக்கிறாள்.

 கருப்பன் நிற்க முடியாமல் தள்ளாடி கீழே விழுந்து இருந்தாலும் அவனின் கண்கள் திறந்து சுய நினைவில் தான் இருந்தான்.

தன்னை மலர் மடியில் தாங்கியிருப்பதை புரியாமல் கருவிழிகளை மேலும் உயர்த்தி அவளை பார்த்தான் கருப்பன்.

“அத்தான் உங்களுக்கு ஒன்னும் இல்ல…! உங்களுக்கு ஒன்னும் ஆகாது..! நீங்க தைரியமா இருங்க நம்ம சீக்..சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு போயிடலாம்” என்று கூறியவளின் வார்த்தைகள் தழுத்தழுக்க வந்தது.

 அதனை அருகில் இருந்து பார்த்த தர்மன் மற்றும் அங்கு சுற்றி இருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருக்க, உடனடியாக அவசர உதவிக்கு வந்திருந்த மருத்துவரை அழைத்து பார்க்க,

 அவனின் உடலில் இருக்கும் காயத்தை ஆராய்ந்த மருத்துவர் உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தனர்.

 ஆம்புலன்ஸில் கருப்பன், தர்மன் மற்றும் மகனின் நிலை அறிந்து கூட்டத்தில் இருந்து வந்திருந்த கருப்பனின் அம்மா பொண்ணுத்தாய் மூவரும் சென்று கொண்டிருக்க,

போகும் ஆம்புலன்ஸையே பார்த்துக் கொண்டிருந்தால் மலர். ஆனால் அதனை பார்க்க முடியாமல் அவள் கண்கள் முழுவதும் கண்ணீர் படலம் திரையிட்டு இருந்தது.

 ஆம்புலன்ஸ் மதுரையில் உள்ள மிகப்பெரிய ஹாஸ்பிட்டலில் வந்து நின்றது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கருப்பனுக்கான சிகிச்சை ஆரம்பித்து தொடர்ந்து கொண்டு இருக்க,

அந்த அறையில் இருந்த வெளியில் வந்து மற்றொரு டாக்டரோ “இந்த கேஸ் கத்தி குத்து மாதிரி இருக்குமா? இத நாங்க ஃபர்தரா ட்ரீட் பண்ண முடியாது. இது ப்ராப்பரா ட்ரீட் பண்ணனும்னா முதல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணனும். நீங்க அதை இன்ஃபார்ம் பண்ட்றிங்களா? இல்ல ஹாஸ்பிடல்ல மூலியமா நாங்க இன்ஃபார்ம் பண்ணட்டுமா?” என்று கேட்டார்.

 “டாக்டர் இப்ப இது ரொம்ப அவசியமா?”

“ஆமா கண்டிப்பா பண்ணி தான் ஆகணும்.. ஏன்னா அவர் உடம்புல இருக்கிறது ஒன்னும் அவ்வளவு சாதாரணமான காயம் இல்லை. ஒரு இன்ச் எக்ஸ்ட்ரா உள்ள இறங்கி இருந்துச்சுன்னா கூட இந்நேரம் அவரு உசுரோட இருந்திருக்க மாட்டாரு,

 மொத்த நாலஞ்சு இடத்துல வெட்டு விழுந்து இருக்குது. அதுவும் சும்மா கிடையாது அந்த கத்தியில விஷ மருந்து கலந்து வெட்டி இருக்காங்க.. அந்த விஷம் இப்ப அவர் உடம்பு ஃபுல்லா ஸ்ப்ரெட் ஆயிருக்கு.

அந்த விஷம் மேலும் பரவாம இருக்குறதுக்கான அடிஷனல் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கோம். ஆனா ஆல்ரெடி ஸ்ப்ரெட்டாகி இருந்த விஷத்தால அவருக்கு பெருசா பாதிப்புகள் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கு…! அப்படி வந்தா அதுக்கான பொறுப்பு நாங்களும் எங்க ஹாஸ்பிடலும் ஏத்துக்க முடியாது.

அதனால நீங்க கண்டிப்பா போலீஸ காண்டாக்ட் பண்ணி ஆகணும்” என்று கூறி விட்டார் அந்த மருத்துவர்.

 அதனை கேட்ட பொண்ணுத்தாயி கண்களில் நிறைந்த கண்ணீரோடு உறைந்து நின்று இருக்க, தர்மன் பொண்ணுத்தாயின் நிலையை கவனித்தவன் டாக்டர் புறம் திரும்பி,

“டாக்டர் எங்களுக்கு போலீஸ் யாரையும் தெரியாது. அதனால நீங்களே ஆஸ்பத்திரி மூலமா இன்ஃபார்ம் பண்ணிடுங்க” என்று கூறினான்.

 அதனை கேட்ட மருத்துவர் தங்களின் ஹாஸ்பிடலில் இருந்து காவல் அதிகாரியை அழைத்து விவரம் கூறியிருந்தார்.

 அடுத்தடுத்து இரண்டு காவலர்கள் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து தர்மனிடம் நிகழ்ந்தவற்றை குறித்து விசாரித்தனர்.

 அதனை கேட்ட காவலர் “இதுக்கு யார் காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?” என்று கேட்டான்.

அதற்கு தர்மனோ “எனக்கு எங்க கூட விளையாண்ட அய்யனார் மேல தான் சார் சந்தேகமா இருக்கு..! ஏன்னா அவங்க ரெண்டு பேரும் தான் கடைசியா ஒரே மாட்ட புடிச்சுகிட்டு இருந்தாங்க.

அந்த டைம்ல தான் கருப்பன் ஜெயிச்சிட்டான்னு ஒரு கோவத்துல அய்யனார் இந்த மாதிரி பண்ணி இருக்க அதிக வாய்ப்பு இருக்கு” என்று தனக்கு தெரிந்தவற்றை கூறினான் தர்மன்.

 அதன்பின் காவலர்கள் மருத்துவரிடம் சென்று கருப்பனின் நிலை குறித்து கேட்டவர்கள் பின் தர்மன் கூரியவற்றை வைத்து ஒரு கேசாக பதிவு செய்து கொண்டனர்.

 இங்கு வீட்டில் வந்திருந்த மலர்விழிக்கு நிலை கொள்ளவில்லை அவள் மனம் முழுவதும் அந்த அகண்ட்றிருந்த ஆடுகளத்தில் கருப்பன் தன்னிலை இழந்து பொத்தென்று விழுந்த நினைவுகளே அவள் மனம் முழுவதும் ஆட்கொண்டிருந்தது.

 அவளுக்கு கருப்பனின் நிலை என்னவென்று அறிய வேண்டும்… அவன் நன்றாக இருக்கிறானா என்று தெரிய வேண்டும் போல் மனம் முழுவதும் கலங்கி அவனைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்தது.

 அமுதாவும் அப்பொழுதே வீட்டிற்குள் நுழைந்தவர் “எந்த படுபாவி பய இப்படி பண்ணான்னு தெரியலையே..! புள்ள அது பாட்டுக்க காளை கனக்கா திரிஞ்சுச்சு, எவன் இப்பிடி பண்ணானோ அவன் கையில கட்ட முளைக்க..வெளங்காம போக ” என்று அமுதா சாபம் விட்டுக்கொண்டே வந்தார்.

இத்தனை நேரம் கருப்பனின் நினைவில் இருந்தவளுக்கு அப்பொழுதே கருப்பனை கத்தியால் வெட்டியது அய்யனார் தான் என்கின்ற நினைவும் மலர்விழியின் நினைவில் உதித்தது.

அய்யனார் தான இப்படி பண்ணாரு..! ஆனா எதுக்கு இப்படி பண்ணனும்..? அவருக்கும் அய்யனாருக்கும் ஏதாவது சண்டை இருக்கா…? நான் வந்ததுக்கு அப்பறம் ரெண்டு பேருக்கும் இடையில எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இருந்த மாதிரி தெரியலயே!

அப்படி இருக்கும்போது ஒருத்தர அதுவும் தன் சொந்த அத்த மகன விஷ மருந்து கலந்த கத்தியால வெட்டுற அளவுக்கு அவருக்கு அப்படி என்ன கோபம்..?” என்று யோசித்தவள்,

‘இந்த விஷயத்தை நம்ம மயில்கிட்ட சொல்லலாமா? வேணாமா? அவங்க வீட்டிலேயே இருந்துட்டு அவங்க அண்ணன பத்தி தப்பா சொன்னா, மயில் எதுவும் தப்பா எடுத்துக்குவாளோ..! என்னதான் நம்ம நெருங்கிய தோழியா இருந்தாலும் அவளோட அண்ணன பத்தியே அவ கிட்ட குறை சொன்னா யாரா இருந்தாலும் ஒத்துக்க மாட்டாங்க..,

 எப்படியும் இதை பண்ணது அய்யனார் தான் அப்படின்னு கருப்பனுக்கு தெரிஞ்சுருக்கும். அதனால இந்த விஷயத்தை அவரே பாத்துக்குவாரு. ஆனா அதுக்கு முதல்ல அவரு எழுந்து வரணுமே..! இப்ப எப்படி இருக்காருன்னு ஒன்னு தெரியலையே..!’ என்று மலர்விழி

மனதில் பலவிதமாக நினைத்துக் கொண்டிருக்க, அப்பொழுது அமுதாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்து காதில் வைக்க ஊர்கார பெண்மணி அமுதாவின் தோழி இருளாயி அழைத்திருந்தார்.

“ஏய் அமுதா…! உன் நாத்தனா மவன் ரொம்ப சீரியசா இருக்கானான்டி. டாக்டர் இன்னும் ரெண்டு மணி நேரம் தான் கெடு குடுத்து இருக்காங்களாம்..! எப்படி இருந்த பய, இப்படி சருச்சு புட்டானே எந்த படுபாவி பய பார்த்த வேலையின்னு தெரியலையே!” என்று அழைப்பில் இருளாயி பேசியவர்,

“இப்ப நீ ஆஸ்பத்திரிக்கு போறியா? போனா சொல்லு நானும் வரேன்” என்றார் இருளாயி.

அதற்கு அமுதாவோ “ஆமா இருளாயி போணும்ல, பாவம் பொண்ணு மதினி அந்த ஓடுகாலி சிறுக்கி போன பொறவு ஒத்த மகன பொத்தி பொத்தி வச்சு பாத்துட்டு இருந்துச்சு, அந்த பய நல்லபடியா பொழச்சு கை கால் சொகத்தோட வீடு வந்து சேரனும்.

நான் இப்பவே கிளம்புறேன் இருளாயி நீயும் கிளம்பி ஆலமரத்துக்கு வந்துரு, எட்டு மணி பஸ்ஸுக்கு போய் என்ன ஏதுன்னு பாத்துப்புட்டு அதே பஸ்ஸுலயே வந்துருவோம்” என்று அழைப்பை துண்டித்தவர்,

“ஐயா தொறட்டி முனி ஒரு பாவமும் அறியாத அந்த பயலுக்கு ஏன்யா இத்தனை சோதனை கொடுக்குற..?

என் நாத்தனா மவனுக்கு எந்த ஒரு குறையும் இல்லாம நல்லபடியா வீடு வந்து சேரனும்யா” என்று அமுதா புலம்பியதை கேட்டு அவரின் அருகில் வந்து மலர்விழி என்னவென்று கேட்க,

 இருளாகி கூறிய விஷயத்தை மலரிடம் கூறினார் அமுதா. அதனை கேட்ட மலர்விழியோ கருப்பனின் நலம் எண்ணி பயத்தில் விதிர்விதிர்த்தவள்,

“அம்மா உங்க கூட நானும் வரேன்மா” என்ற மலரை பார்த்து,

“எதுக்கு மலர் நீயி, நீ இரு நான் போயிட்டு வரேன்” என்றார் அமுதா.

 அதற்கு மலரோ கண்களில் திரண்ட கண்ணீரோடு அம்மா ப்ளீஸ்மா வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்கமா, நானும் வரேன் அவரை அந்த நிலைமையில பார்த்துட்டு என்னாச்சோ ஏதாச்சோன்னு நினைச்சுட்டு என்னால இங்கே இருந்து கஷ்டப்பட முடியாது ப்ளீஸ்மா” என்று அவள் கெஞ்சவும்,

 அவள் அழுவதை பார்த்தவர் “சரி வாம்மா” என்றவர் மயிலை விட்டுவிட்டு மலரை அழைத்துக் கொண்டு கருப்பன் அனுமதிக்க பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

 தன் நண்பனின் நிலை என்று தெரிந்த தர்மனால் அங்கு நிற்க முடியாமல் உள்ளமும் உடலும் நடுநடுங்க, மனம் கனம் கூடி அவனால் நிற்க முடியாமல் அங்கிருந்து இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான்.

இத்தனை வருடங்களாக உடன்பழகிய நண்பனுக்கு இந்த நிலை என்றால் பத்து மாதம் ஈன்றெடுத்த தாயின் நிலை…?

 தேற்றுவார் போற்றுவார் இல்லாமல் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க, ஆனால் தன் மகன் எந்த நிலையிலும் மீண்டு வருவான் என்கின்ற சிறு நம்பிக்கையோடு அந்த அறையை வெறித்து பார்த்துக்கொண்டே நின்று இருந்தார் பொண்ணுத்தாயி.

 அமுதாவும் இருளாயும் மலர்விழியும் மருத்துவமனைக்குள் நுழைந்தவர்கள் அங்கே அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் இடிந்த நிலையில் இருந்த பொண்ணுத்தாயை பார்த்ததும் அவரின் அருகில் சென்ற அமுதா,

‘மதினி தம்பிக்கு எப்படி இருக்கு? டாக்டர் ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டார்.

 இத்தனை நேரம் கேட்பாரற்று இடிந்த நிலையில் நின்றிருந்த பொண்ணுத்தாயின் நிலை கரையை கடந்து மடமாய், அணை தாண்டிய வெள்ளமாய் தாங்க முடியாத மன வேதனை கண்ணீராய் ஆங்காரமாய் வெடித்து சிதறியது.

 அதேசமயம் தன் மகனுக்கு தான் இந்த நிலையில் இருந்தால் பிடிக்காது என்பதால் எதுவும் பேசாது கண்களில் வழிந்த கண்ணீரோடு மட்டும் அமைதியாக நின்று இருந்தார்.

 அப்பொழுது கருப்பனை பரிசோதித்து விட்டு அறையில் இருந்து வெளியில் வந்த மருத்துவரிடம் வந்த தர்மன் “டாக்டர் இப்போ எப்படி இருக்கு டாக்டர் கதிருக்கு ஒன்னும் இல்லையே!” என்று கேட்டான்.

அதற்கு அந்த மருத்துவரோ “இன்னும் ஒன் ஹவர் தான் இருக்கு. ஆனா அவர்கிட்ட எந்த இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்ல. அதேசமயம் அந்த விஷம் உடம்பு ஃபுல்லா ஸ்பெரட் ஆயிடுச்சு. இனி பொழைக்கிறது…!” என்று அவர் அந்த வாக்கியத்தை முழுதாக முடிக்க முன்

“ஐயோ…! என் புள்ள…!” என்று ஆங்காரமிட்டு வெடித்து சிதறினார் பொண்ணுத்தாயி.

 தர்மனோ நண்பனின் நிலையை நினைத்து மொத்தமாக உடைந்து போய் இருக்க, பொண்ணுத்தாயின் அழுகையை பார்த்து பொண்ணுத்தாயிக்கு சமாதானம் கூறி தேற்றிக் கொண்டிருந்தனர் இருளாயும் அமுதாவும்.

 இவர்கள் இருவரும் இரு வேறு திசைகளில் கருப்பனின் நிலை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மலர்விழி யாரும் அறியாமல் கருப்பனின் அறைக்குள் நுழைந்தாள்.

கருப்பன் வேட்டை தொடரும்…

💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝

கமெண்ட் ப்ளீஸ் 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!