Skip to content
Post Views: 2,037

கருப்பன் ஆட்டம் 19
Advertisement
கருப்பன் அமர்ந்திருக்க, அவனுக்கு முன்பாக ஒரு அகலமான இடத்தில் மாட்டு சாணம், கோமியம், பால், நெய் மற்றும் சில மாட்டு பொருள்களும், பழ வகைகளும் சேர்த்து அங்கு வரிசைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
அந்த இடத்தில் நிரப்பி இருந்த மாட்டுச்சாணத்தை முதலில் தனது இரு கை கொண்டும் நன்றாக பிசைந்து கலந்தவன் பின் தனக்கு முன்பு இருந்த ஒவ்வொரு பொருள்களையும் ஒவ்வொன்றாக தர்மன் எடுத்துக் கொடுக்க,
Advertisement
Advertisement
அதனை வாங்கிய கருப்பன் அதனை மாட்டுச்சாணத்துடன் இணைத்து கலவையாக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு பொருளின் தனித்தன்மையும் அதன் பலன் குறித்தும் மாணவர்களுக்கு பொறுமையாக விளக்கினான்.
அவன் விளக்கிக் கொண்டிருந்த விதம் மாணவர்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது. அனைவரும் ஆரம்பத்தில் மாட்டு சாணத்தில் கருப்பன் கை கொண்டு கலக்கியத்தை பார்த்து முகம் சுளித்தாலும், பின் அவன் கூறிய அதில் உள்ள நன்மைகளும் அதனால் நிலத்தில் உண்டாகும் மண் வளம் அனைத்தையும் ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்துரைக்கவும்,
Advertisement
விவசாயத்தில் இயற்கை உரத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பின் அதனை தாங்களும் செய்யலாமா என்று ஆர்வமாக கேட்டனர்.
கருப்பனும் அதற்கு சரி என்று கூறி விட, மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த பஞ்சகவ்யத்தை தங்களது கை கொண்டு கலந்து அதன் தன்மையை தொட்டு உணர்ந்து பயின்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் கடை கண்களால் மலர்விழியையும் கவனித்துக் கொண்டிருந்த கருப்பன் அனைத்து மாணவர்களும் கற்று கொண்டு அமைதியாக நின்று பார்த்து கொண்டு இருக்கும் வேளையில் மலரிடம் திரும்பியவன்,
“ஹலோ ப்ரஃபசர் உங்க ஸ்டூடண்ட் எல்லாம் உரத்துக்கு வேண்டிய விஷயங்களை பிராக்டிக்கலா கத்துக்கிட்டாங்க நீங்க இன்னும் வந்து கத்துக்களையே….!” என்று கேட்டான்.
அதற்கு மலர்விழியோ “என்னது நானா…!” என்று கூறி முழித்தாள்.
“நீங்க தான்.. பின்ன அக்ரிகல்ச்சர் ப்ரொஃபஸர்ன்னா சும்மாவா வாங்க வந்து ட்ரை பண்ணுங்க…!” என்று கேட்கவும்,
சரி என்ற மலர்விழியும் கருப்பனின் அருகில் சென்று அந்த கலவையை கலந்தாள்.
அவளுக்கு இது புதிது. ஏனென்றால் அவள் படித்தது அனைத்தும் சென்னையில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பதால் அங்கே அவளுக்கு பிராக்டிக்கல் சொல்லித் தரப்படுமே தவிர, அதனை மாணவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள்.
அதனாலேயே மாணவர்கள் அதனை தொட்டு உணர்ந்து கற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைவாகவே இருப்பார்கள்.
ஆனால் கிராமத்தில் வளர்ந்த மாணவர்கள் அப்படி அல்லவே….! அதனால் மாணவர்கள் அனைவரும் முழு மகிழ்ச்சியோடு அதனை உணர்ந்தே கற்றுக் கொண்டனர்.
மலர்விழி முதன்முதலாக மாட்டுச்சாணத்தில் கை வைப்பதற்கு அவள் முகம் அஷ்ட கோணனாக மாறியதை கவனித்த கருப்பன்,
தர்மனிடம் திரும்பி ( மாணவர்களின் முன்பு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்பதால் )
“இவங்கள எல்லாம் யாருடா ப்ரஃபஷரா போட்டது…?” என்று கூற வெடுக்கென கருப்பன் புறம் திரும்பினால் மலர்.
“என்ன லுக்கு… தொட்டு பாக்கவே இவ்வளவு அறுவருப்பு படுற நீங்க எல்லாம் இயற்கை உரத்த பசங்களுக்கு கற்றுக் குடுக்க வந்துட்டீங்க…!” என்று அவன் நக்கலாக கூறவே,
“நான் பண்ண மாட்டேன்னு சொல்லவே இல்லையே…! நான் பண்ணத்தான் போறேன்…!” என்றவள் அதன் பிறகு எந்த வித அறுவருப்பும் இன்றி சகஜமாகவே அந்த மாட்டுச்சாணத்தோடு கலந்து இருந்த பொருட்களில் கையை தனது கை கொண்டு கலவையை செய்தார்.
அதன் விளைவாக அவள் உடலில் ஆங்காங்கே சேரும் மாட்டுச் சாணமும் தெறித்து தென்பட்டதது.
கலவை நிலை முழுமை அடைந்த பிறகு “சரி இந்த பக்குவம் போதும் இது அப்படியே கொண்டு போயி அந்த பெரிய வட்டையில் ஊத்தி இறுக்கி மூடி வெச்சிரனும்.
கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகணும்..
அப்பந்தேன் அது உள்ளேயே இருந்து அதன் எல்லா கலவையும் ஒண்ணுமன்னா கலந்து அது ஒரு விளை நிலத்துக்கு பயன்படுத்தக்கூடிய உரமா மாறும்.
அதுக்கப்புறம் அத எடுத்து நம்ம நிலத்துக்கு பயன்படுத்திக்கலாம்” என்று கூறிய கருப்பன், தர்மனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட தர்மனோ மாணவர்களை தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு இருக்கும் மரங்களை குறிப்பிட்டு காட்டி தனக்கு தெரிந்தவற்றை விவரித்தான்.
மலரும் அவள் பங்கிற்கு மாணவர்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தாள். கருப்பன் அங்கிருந்து கிளம்பியவன் தோட்டத்தில் பாய்ந்து கொண்டிருந்த பம்பு செட்டின் நீரில் ஒரு குளியலை போட்டுவிட்டு தனது குட்டி வீட்டிற்கு சென்றவன் வேறு ஒரு உடைக்குமாறி மீண்டும் மாணவர்களின் அருகில் வந்தான்.
எத்தனை நேரம் தர்மனும் மலரும் கூறியதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களின் விழிகள் வேறெங்கும் அகலாது ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது.
அதனை கவனித்த மலரும் அவர்களின் பார்வை சென்று திசை நோக்கி விழிகளை திருப்ப, அங்கே கருப்பன் ஃபார்மலாக இளம் பச்சை நிற சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் போட்டு சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை அவிழ்த்துவிட்டிருந்தவன் தனது அடர்ந்த கேசம் காற்றில் மிதந்து கொண்டிருக்க,தனது தாடியில் கை கொண்டு நீவியவாறு அவர்களின் முன்பு வந்து கொண்டிருந்தான்.
அவனை இத்தனை நாட்களாக டி-ஷர்ட் லுங்கியில் அல்லது கருப்பு சட்டை வேட்டியிலும் பார்த்து ரசித்த மலர்விழிக்கு அவனின் இந்த புதுவித தோற்றம் அவனை ஒரு ஆணழகனாக எடுத்துக்காட்டியது.
கருப்பன் இத்தனை நேரம் தான் செய்த வேலைக்கு தகுந்த உடையை அணிந்திருந்தான். ஆனால் இதன் பிறகு தோட்டத்தில் உள்ள மரங்கள் கொடிகள் செடிகளின் வளம் விளைச்சல் குறித்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தனது உடையையும் நேர்த்தியாக அணிந்து கொண்டு வந்திருந்தான்.
சிறிது நேரம் அவனையே கண்கொட்டாமல் பார்த்திருந்த மாணவர்கள் தங்களுக்குள்ளாகவே
“டேய் கதிரண்ணே என்னா சூப்பரா இருக்காருடா…! நம்மளையே தூக்கி சாப்பிட்ருவாரு போலயே…! இப்பவே காலேஜ் ஸ்டுடென்ட் மாதிரி எவ்வளவு அழகா லுக்கா ஹேண்ட்சாமா இருக்காரே…! நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்டா இல்ல இவரு ஸ்டூட்டான்னு தெரியல…!
இவ்வளவு நேரம் அந்த மாட்டு சாணத்தை அறுவருப்பு இல்லாம பிசைஞ்சுகிட்டு இருந்தது இவர்தானான்னு சந்தேகமா இருக்குடா….!
எவ்வளவு அழகா மேன்லியா இருக்காருன்னு பாரேன்…! நல்லவேளை நம்மளோட பேச்ல இவர் படிக்கல, அப்படி மட்டும் நடந்து, இவரு கூட நம்ம சேந்து படிச்சுருந்தோம்ன்னு வையி நம்ம வருஷம் ஃபுல்லா சிங்கிளாவே காலத்தை கடத்தி இருப்போம்…!” என்று தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டு தர்மன் உடன் சென்றனர்.
மலர்விழி தான் தன்னவனின் இந்த பேரழகில் உறைந்த நிலையில் நின்று அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னை ரசிப்பதை கவனித்த கருப்பன் அவளின் அருகில் சென்று முகத்தருகில் நெருங்கி சொடக்கிட, பட்டென சுயம் பெற்றவனாக திடிக்கிட்டவள் சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே யாவரும் இல்லாமல் இருக்கவும்,
“ஐயோ..! எல்லாரும் எங்க போயிட்டாங்க…?” என்று கேட்டாள்.
“தர்மன் கூட்டிட்டு போயிருக்கியான். ஆமா… நீ இங்க எதுக்கு வந்த…?” என்று கேட்டான்.
“எதுக்கு… வந்தனா….? என்ன கேள்வி..! பசங்களுக்கு சொல்லிக் கொடுக்குறதுக்காக வந்தேன்…!”
“உன்னையும் உன் கோலத்தையும் பார்த்தா சொல்லிக் கொடுக்க வந்த மாதிரி இல்லையே…! ஏதோ காலைல இருந்து காட்டுல களப்புடுங்கி, வரப்பு வெட்டின்னு வேலை செஞ்சு கலைச்சு ஓஞ்சு போன மாதிரியில்ல இருக்க..!” என்று அவள் உடலில் உடையில் ஆங்காங்கே சிதறி இருக்கும் மாட்டு சாணத்தையும் சேரையும் சுட்டி காட்டி கேட்டான் கருப்பன்.
அவன் கேட்ட கேள்வியில் அவனைப் பார்த்து முறைத்தவள் “ஆங்…எல்லாத்துக்கும் காரணமே நீங்க தானே..! நான் பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். நீங்கதான் சும்மா இல்லாம ஒரு ப்ரஃபசர் இதெல்லாம் செய்யணும்னு புடிச்சி இழுத்து விட்டுட்டீங்க….!
எனக்கு முன்ன பின்ன இந்த மாதிரி எல்லாம் செஞ்சு பழக்கம் இல்லை. அதனால நீட்டா அந்த வேலையை செய்ய தெரியாமல் இப்படி உடம்பு எல்லாம் ஆயிடுச்சு…!” என்று கூறியவள், ஆமா…. அதுக்குள்ள ஏன் இந்த வேலை எல்லாம் பாக்குறீங்க உடம்பு கொஞ்சம் நல்லா தேறி வரவும் வந்துருக்கலாமே…! என்று கேட்டாள் மலர்.
“என் உடம்புக்கு ஒரு குறையும் இல்ல, நான் நல்லாயிட்டேன். அப்புறம் உன் காலேஜ் கரஸ்பாண்டன்ட் எனக்கு கால் பண்ணி ஸ்டூடண்ட்டோட பிராக்டிக்கலுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் அரேஞ்ச் பண்ண முடியுமான்னு கேட்டாரு….! அவரு பேச்சுக்கு மதிப்பு கொடுக்கணும் அப்படிங்கறதுக்காக இந்த வேலையை நான் செஞ்சேன்.
அப்புறம் உன் ட்ரஸ்ல இந்த மாதிரி இருக்கறதுனால எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, வா ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் முன்னாடி போயிட்டாங்க…” என்று கூறவும்
சரி என்றவள் கருப்பன் முன்னே செல்ல,அவன் பின்னாலயே அவனை பின் இருந்தவாறு பார்த்து ரசித்து கண்களாலேயே விழுங்கி கொண்டு நடந்தால் மலர்விழி.
இருவரும் நடந்து சென்று மாணவர்களுடன் இணைந்து கொண்டனர். கருப்பன் அனைவரையும் தன்னுடைய தோப்பிற்குள் இருந்த அனைத்து வகையான மரங்களையும் செடி கொடிகளையும் சுட்டிக்காட்டி அதன் நற்பண்புகளையும்,
இயற்கை உரத்தால் உண்டான தன்னுடைய தோப்பில் இருக்கும் பயிர்களுக்கும் மற்ற நிலத்தில் உள்ள பயிர்களுக்கும் இடையில் உள்ள விஷயங்களை எடுத்துக் கூறியவன்
மாணவர்களிடம் திரும்பி “நீங்களும் எதிர்காலத்துல இதே போல இயற்கை உரத்தால ஆன விவசாயம் செய்யணும். இப்போ இருக்கிற ஜெனரேஷன்ஸ் இயற்கை உரம் தயாரிக்கிறதுக்கு முன் வர்றது இல்ல, ஆனா உங்க கிட்ட இருக்கிற இந்த ஆர்வம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.
உங்களுக்கு இயற்கை உரம் பத்தியோ….! இல்ல விவசாயம் பத்தியோ…! இல்ல சத்தான மண் வளம் பத்தியோ எந்தவிதமான சந்தேகம் இருந்தாலும் என்னை காண்டாக்ட் பண்ணுங்க. நான் வந்து உங்களுக்கு கிளியர் பண்றேன்….! என்றவன்
அதே சமயம் எக்காரணக் கொண்டும் உயிர்க்கொல்லி மருந்துகளை நம்மளுடைய நிலத்துல அடிச்சு நம்மளுக்கு இயற்கை தாயா இருக்கிற நம்மளோட நிலத்தை மலடாக்கிடாதீங்க…!” என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் மலரோ, அவன் கூறிய விஷயங்களை கேட்டு தன்னவனை மெச்சுதலாய் பார்த்தவள் யாவருக்கும் சந்தேகம் வராத விதமாக அவனையே வைத்தக் கண் வாங்காமல் ரசித்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
அந்த நேரம் மலரின் அருகில் “ஸ்ஷ்….!ஸ்ஷ்….! என்று சத்ததோடு பாம்பு ஒன்று அதன் போக்கில் கடந்து சென்று கொண்டிருந்தது.
அதனை கவனித்த மாணவி ஒருத்தி “மேடம் உங்க பக்கத்துல பாம்பு ஒன்னு போகுது…!”என்று கூறி பயத்தில் கத்தவும்,
“என்னது….பாம்பா….!” என்று கூறி பதறிய மலர்விழி பயத்தில் தன் என்ன செய்கிறோம்…!ஏது செய்கிறோம்…! என்று தெரியாமல் அந்த இடத்தையே நான்கு சுத்து சுத்தியவள் பின் கருப்பன் அருகில் சென்று,
குரங்கு குட்டியை போல அவன் இடுப்பில் ஏறி அமர்ந்தவள் அவனின் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
மலர்விழியின் இடையை தன் கொண்டு அழுந்த பிடித்து அவளை தாங்கி, போகும் பாம்பை கவனித்த கருப்பன் தர்மன் புறம் திரும்பி “தர்மா அத புடிச்சு கொண்டு போய் மலை காட்டுல விட்டுடு…!” என்று கூறினான்.
“சரி” என்ற தர்மன் அந்த பாம்பை லாபகரமாக பிடித்து அங்கிருந்து எடுத்துச் சென்று இருந்தான்.
மலர்விழி கண்களை இறுக மூடிக் கொண்டு அவன் கழுத்தை நன்றாக கட்டிக்கொண்டு அவனின் கழுத்துவளைவில் முகம் புதைத்து அவனின் இடுப்பில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள்…!
“மேடம்..பாம்பு போய் ரொம்ப நேரம் ஆச்சு..!” என்று கூறி தங்களுக்குள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.
“இல்ல அதுபோகல நீங்க பொய் சொல்றீங்க…?” என்று கூறி கண்களை திறக்க மறுத்தால் மலர்விழி.
“ஐயோ மேம் நெஜமாவே பாம்பு போயிடுச்சு…!” என்று மற்றொரு மாணவி கூறவும் பொறுமையாக தனது ஒற்றை விழியே திறந்து பார்த்த மலர்விழி அங்கு பாம்பு இல்லாததையும், அதனை தர்மன் கையில் எடுத்துக் கொண்டு போவதையும் பார்த்தவள் திரும்பி கருப்பனின் முகம் பார்த்தாள்.
கருப்பனோ தனக்கு மிக அருகில் இருக்கும் அவளின் முகத்தை ரசனையாக ரசித்துக் கொண்டிருந்தான்.
தர்மனின் கையில் சென்று கொண்டிருந்த பாம்போ ‘நான் பாட்டுக்கு செவனேன்னு தானடா என் ஆள பாக்க போயிட்டு இருந்தேன்…! என்னைய மட்டும் என் ஆள பாக்க போக விடாம பண்ணிபுட்டு என்னைய வச்சே ஒரு ரொமான்டிக் சீன் உருவாக்கிடீங்களேடா… என் சாபம் உங்கள சும்மா விடாதுடா!’ என்று நினைத்துக் கொண்டே சென்றது..🤣🤣🤣
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
கமெண்ட்ஸ் ப்ளீஸ் 🙏🏻😊
error: Content is protected !!