Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 2

அத்தியாயம் – 2

ஆதவ்…இந்த பொண்ணு யாரு என்னனு விசாரி என்றான் விக்ரம்.

சார்…என்றான் ஆதவ்.



Advertisement

என்ன? “ சொல்றதை மட்டும் செய்”

போகலாம் என்று விக்ரம் வேகமா முன்னே செல்ல

ஆதவ் அவனை பின் தொடர்ந்து ஓடினான்.

Advertisement

அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்ததும்,

Advertisement

“சார் இப்போ தான் இன்வெஸ்டேர்ஸ் எல்லாரும் போறாங்க”.

‘மீடிங் கேன்சல் ஆயிடுச்சு சார் ரொம்ப நேரம் வைட் பண்ணாங்க. சோ இன்னொரு நாள் மீடிங் வச்சுக்கலாம் சொல்லிட்டாங்க” என்றாள் ரிசெப்சன்னிஸ்ட்.

யார கேட்டு இவங்க மீடிங் கேன்சல் பண்ணாங்க.

Advertisement

இங்க எல்லா முடிவுகளையும் நான் தான் எடுக்கணும்.

கொஞ்சம் நேரம் கூட வெயிட் பண்ணி இன்வெஸ்ட்மென்ட் பண்ண முடியாத இவங்க எப்படி ஒரு பிஸ்னஸ் முழுமைக்குமான ஒப்புதல் எனக்கு தர முடியும்.

வேண்டாம் அனைத்து டீல்ஸ்சையும் கேன்சல் பண்ணுங்க, நான் இன்னைக்கே சென்னைக்கு கிளம்பறேன் என்றான் கோபத்தின் உச்சத்தில் விக்ரம்.

ஓகே சார் என்று நகர்ந்து கொண்டனர்.

எல்லாம் அந்த ஓம குச்சி பொண்ணால தான்.

அவ மட்டும் என் கையில் கடைச்சா, ரெண்டா உடைச்சிருவேன்.

நல்லா மூங்கில் குச்சி மாதிரி….என்று அவளை திட்டி கொண்டு இருந்தான்.

ஆனால் அவள் குணமும், தோரணையும் அவனுக்கு உள்ளுக்குள் பிடிக்கவே செய்தது.

சார்….ர்…என்று மீண்டும் விக்ரம் முன் வந்து நின்றான் ஆதவ்.

இப்ச்…இப்போ என்ன பிரச்சனை.

ஃபிலைட் டிக்கெட்….

என்னனு சொல்லி தொலை.

பயத்தோடு சார், ஃபிலைட் டிக்கெட் கிடைக்கல என்று கூறினான் ஆதவ்.

ஏன்?”

இன்னைக்கு இங்க இருந்து சென்னைக்கு போற ஃபிலைட் ஏதோ டெக்னிக்கேல் ஃபால்ட் ஏற்பட்டு இருக்கிறதாம்.

அதை சரி செய்யும் வரை விமானங்கள் இயங்காதாம் என்று கூறினான் ஆதவ்.

இப்போ என்ன பண்றது. கார்ல தான் போகணுமா என்றான் விக்ரம்.

இல்ல சார்…ட்ரெயின்.

வாட்?”

இதோ ட்ரெயின் டிக்கெட் என்று அவன் முன்னே நீட்ட

ஏய் என்ன ஆதவ்?என்ன பத்தி தெரிஞ்சு இருந்தும் ட்ரெயின்ல… போய்..

இப்ச்…ஏன் இப்படி ஸ்டுபிட் மாதிரி நடந்துக்கற?

நான் எப்படி ட்ரெயின்ல போவேன்

எனக்கு தான் ட்ரெயின் ட்ராவெல்லிங் ஒத்துக்காதுனு உனக்கு தெரியும்

ஆனா நீ? தெரிஞ்சே இப்படி வாட் த என்றான் விக்ரம்.

வேற வழி இல்ல சார்.

கார் என்னனு தெரியல ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது.

சர்விஸ் போய் இருக்கு.

எப்போ முடிச்சு கொடுப்பானுங்க தெரியல.

இப்போதைக்கு இதை தவிர வேற வழி இல்லை சார் என்றான் பயந்தப்படி.

கொடுத்து தொலை என்று ஆதவின் கையில் இருந்து டிக்கெட்டை பிடுங்கினான் விக்ரம்.

இன்னும் ஏன் இங்க நிக்குற போ.. போய் தொலை என்று கூற,

சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு வெளியே சென்றான் ஆதவ்.

ஆனால் வெளியே வந்ததும் அவன் இதழ்கள் விரிந்தது.

போங்க சார் போங்க என்று குரோதமாக சிரித்தான் ஆதவ்.

நெரிசல் நிறைந்த அந்த இரயில் நிலையம் பரபரப்புடன் மக்கள் கூட்டம் இதை எல்லாம் பார்த்த விக்ரம் முகம் சுழித்தான்.

இதுவே அவன் முதல் ரயில் பயணம்.

எங்கும் ஒரே இரைச்சல்.

அவன் காதை அடைத்து கொண்டான்.

ட்ரெயின் பாம் என்ற ஒலியை எழுப்பி நகர துவங்கியது.

அனைவரும் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு அவனை இடித்து தள்ளி ஓடினர்.

இப்ச்…இறுட்டேட்டிங் பிபில்ஸ் என்று தன் லேப் டாப் ஃபேகை எடுத்து கொண்டு தன் முன் பதிவு செய்யப்பட்ட கோச் நோக்கி ஓடினான்.

அதற்குள் தொடர்வண்டியின் வேகம் அதிகரித்தது.

காலை படிக்கட்டில் வைக்க ஏற முடியாமல் தடுமாறினான்.

அப்போது அவன் கையை பிடித்து ஒரு கரம் உள்ளே இழுத்தது.

கண்களை மெல்ல திறந்தான்.

யோவ்.. உனக்கு அறிவு இருக்கா இல்லையா?

ட்ரெயின் மூவ் ஆகுறதுக்கு முன்னாடி ஏற மாட்ட என்று ஒரு கீச்சு குரல் ஒலிக்க

இந்த குரலை எங்கோ கேட்டு இருக்கிறோமே என்று திரும்பினான் விக்ரம்.

அவளும் அப்போது தான் முகத்தை சரியாக பார்த்தாள்.

ஏய்.. நீயா? என்று இருவரும் ஒருவரை ஒருவர் முகத்துக்கு நேரே கை நீட்டி கொண்டு கேட்டு கொண்டனர்.

யார என் லைஃப்ல திரும்ப பார்க்க கூடாதுனு நினைச்சேனோ,

அவ என்ன காப்பாத்தி இருக்கா என்று வருந்தினான்.

அதே தான் எனக்கும்.

நீனு தெரிஞ்சு இருந்தா கை கொடுத்து காப்பாத்தி இருக்க மாட்டேன்.

தள்ளி விட்டு கொன்னு இருப்பேன் என்று அவனை பார்த்தாள் சிந்து.

முகத்தை ஒருவாராகா வைத்து கொண்டு இருந்தான் விக்ரம்.

அவனை எரிச்சலுடன் பார்த்து “நீ அவ்ளோ எல்லாம் பீல் பண்றதா இருந்தா அப்படியே குதிச்சு செத்துரு” என்று விட்டு தன் பின்னலை பின்னே போட்டு கொண்டு கர்வத்துடன் அவனை கடந்து சென்றாள்.

சரியான பஜாரியா இருப்பா போலே என்று முனகினான் விக்ரம்.

ஆமாம்…ஆமாம் என்றாள் போய் கொண்டே.

சென்னை வரை இவளுடன் எப்படி சமாளிக்க போகிறோம் என்று நினைத்தாலே இவனுக்கு கதி கலங்கியது.

மூச்சை இழுத்து விட்டு தன் இருக்கை 42யில் அமர்ந்தான்.

41யில் அவள். ஐயோ பரிதாபம்.

வாடா…வா…என்ன பேச்சு பேசுன. மாட்டினியா என்ற அசரீரி ஒலித்து கொண்டு இருந்தது.

அவனை நினைத்து நகைத்து கொண்டாள்.

போயும் போயும் இவ கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்.

இதுக்கு எல்லாம் காரணம் அந்த ஆதவ் தான்.

அவனுக்கு இருக்கு என்று முனகி கொண்டான்.

ஹாய்…அக்கா. நீங்க எங்க போறீங்க? என்று எதிரே அமர்ந்து இருந்த ஒரு சிறுமி கேட்டாள்.

புன்னகையுடன், நான் சென்னை போறேன் டா செல்லம் என்றாள் சிந்து.

இதை அனைத்தையும் விக்ரம் கவனிக்க மறக்கவில்லை.

அக்கா சென்னை தான் உங்க சொந்த ஊரா?

இல்ல டா செல்லம். என் ஊர் தஞ்சை.

இப்போ வேலை சென்னையில் கிடைத்து இருக்கிறது.

சோ அதனால நான் சென்னையில் இருக்கும் என் தோழி வீட்டுக்கு செல்கிறேன் என்றாள் சிந்து.

வாவ்…சூப்பர் அக்கா என்றாள் அந்த சிறுமி.

சரி நீ சொல்லு…. உன் பெயர் என்ன?

என் பெயர் பிரியா.

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன்.

தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்க்க என் பாட்டி தாத்தாவுடன் வந்தேன்.

விடுமுறை முடிந்ததால் வீடு திரும்புகிறோம் என்றாள் ப்ரியா.

அவள் பாட்டி தாத்தாவும் சிந்துவை பார்த்து புன்னகைத்தனர்.

விக்ரம் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்து இருந்தான்.

ஆனாலும் அவன் கண்கள் அவள் மேல் அடிக்கடி படர்ந்து மீண்டது.

அவள் அதை கவனிக்கவே செய்தாள்.

ஆனாலும் அவள் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.

எதிரே ஒரு இளைஞன் சிந்துவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

தன் செல்போனில் அவளை படம் எடுத்து கொண்டான்.

இதை உணர்ந்த சிந்து

அவன் தலையில் தட்டி எழுந்திருடா என்றாள்.

என்ன? என்ன ஆச்சு என்று அனைவரும் பதறினர்.

இப்ச்…என்று உச்சு கொட்டியப்படி இவளுக்கு வேற வேலையேயில்ல என்று தன் மடி கணினியில் வேலையில் புதைந்தான்.

அவன் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்தாள்.

அங்கே அனைவரும் சூழ்ந்தனர்.

என்ன மா…என்ன ஆச்சு? ஏன் இந்த பையனை இப்படி அடிக்கிற?

இவன் அப்படி என்ன தப்பு பண்ணான் என்று கேட்டு கொண்டு இருக்க

அவன் கையில் இருந்த செல்போனை பிடுங்கி அனைவரின் முன்னே திரையை இயக்கி காண்பித்தாள்.

அதில் சிந்துவின் புகைப்படம் இருந்தது.

அனைவரும் டேய்.. ஏண்டா ஏன் இப்படி பண்ண?

உனக்கு பொண்ணுங்கனா அவ்ளோ இளக்காரமா போச்சா?

இவனை அடுத்த ஸ்டேஷன்ல இறக்கி போலீஸ்ல ஹாண்ட் ஓவர் பண்ணுங்க என்று ஒருவர் கூறினார்.

நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க என்று அவன் மன்றடினான்.

ஆனால் அதை யாரும் காதில் வாங்கி கொள்ளவும்மில்லை.

அதே போல் அடுத்த ஸ்டேஷன் வர அவனை ரயில்வே காவலரிடம் ஒப்படைத்தனர்.

மீண்டும் ரயில் சல சலப்பு அடங்கி சகஜம்மானது.

ஆனால் விக்ரம் மட்டும் அவளை முறைதப்படி அமர்ந்து இருந்தான்.

என்ன அப்படி பாக்குற?”

உனக்கும் கம்பி என்ன ஆசை இருக்கிறதோ.

வேண்டும் என்றாள் சொல்.அதற்கு ஏற்பாடு பண்ணிரலாம் என்று கேலி செய்து சிரித்தாள்.

என்ன பொண்ணு இவ?

ஏன் இவ்ளோ திமிர், ஆட்டிட்டுட்.

இவளை பார்க்கும் போது ஆத்திரம் தான் அதிகரிகிறது.

என்ன சார்…மனசுக்குள்ள திட்டுறீங்க போலே இருக்கு என்றாள் சிந்து.

அவன் தன் லேப்டாப்பை வேகமா மூடி முகத்தை ஜன்னல் வழி திருப்பி கொண்டான்.

ஹும்…ரொம்ப தான் என்று அவளும் திரும்பி கொண்டாள்.

அவனை தவிர மற்ற அனைவரும் சிந்துவிடம் சகஜமாக பேசி பழகினர்.

அனைவரும் சிரித்து, பேசி மகிழ்ந்தனர்.

அவன் தவறியும் அவளை பார்க்கவில்லை.

சில மணி நேரத்திற்கு பிறகு அந்த கம்பெர்ட்மேண்டில் இருந்த அனைவரும் அமைதியாக அவர் அவர் உறங்கவும், தன் கை பேசியில் பாடல் கேட்கவும் செய்தனர்.

சிந்து ஜன்னலின் கம்பியில் தலை சாய்த்து கொண்டு கண்கள் இமைக்காமல் வெட்ட வெளியை பார்த்து கொண்டு இருந்தாள்.

தென்றல் காற்றில் அவள் கூந்தல் தாறுமாறாக பறந்தது.

அதை அள்ளி முடிந்து கண்களை அயர்ந்தாள்.

அதுவரை மிகுந்த எரிச்சளோடு இருந்த அவன் விழிகள், அவள் ஸ்பரிசம் கண்டு அவனையும் அறியாமல் அவளை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தான்.

எத்தனை அழகான பெண்.

ரொம்ப சாதாரணமா இருக்கா.

எந்த ஒப்பனையும் இல்லை.

இயற்கையாகவே இவள் நிறம் செம்பூவை ஒத்திருக்கிறது.

இவளின் இதழ் என்ன கோவை கனிகளோ?

விழிகள் என்ன என் உயிர் கொல்லி விஷமோ?

நேருக்கு நேர் பார்த்தவன் எவனும் உயிர் பிழைக்க மாட்டான்.

அவன் பார்வை மெல்ல அவள் கழுத்தை தாண்டியும் பயணிக்க

டேய்…என்ன டா பண்ற என்று மிரட்டியது அவன் மனசாட்சி.

ச்ச…. என்று பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.

உறக்கத்தில் என்ன கனவு கண்டாளோ!

அவள் இதழ்கள் மெலிதாய் விரிந்தது.

ஐயோ…. கடவுளே ஆனாலும் இவள் அருகில் கண்ணியம் கொள்வது சற்றே கடினம் தான்.

தேனூறும் இரு இதழ்கலுக்கு மத்தியில் சிக்கி கொண்டு தவித்தது அவன் இதயம்.

கடந்து சென்ற பனிக்காற்றும் அவளை தீண்ட

குளிர் எடுத்து நடுங்கியது.

இதில் இவன் மட்டும் என்ன விதி விலக்கா?”

தடம் விட்டு தடம் மாறுகையில்

தடக் தடக் என்ற ரயில் ஓசையும் அதிர்வும் அவள் துயிலை கலைத்தது கண்களை திறந்தாள்.

யோவ் உனக்கு அறிவு இல்ல என்றாள் சிந்து.

வாட்…என்று அதிர்ச்சியுடன் கேட்டான் விக்ரம்.

தென்றல் மீண்டும் வீசும்….*

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!