Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 20

கருப்பன் ஆட்டம் 20

 கருப்பன் மலைக்காட்டில் விட சொல்லிய பாம்பினை சிறிது நேரம் கையில் வைத்துக் கொண்டே அதனுடன் கதைப்பேசிய படி சென்றவன், பின் அதனை தூக்கி கழுத்தில் மாலையாக போட்டு தோரணையாக நடந்து அதனுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே சென்றான் தர்மன். 



Advertisement

 தனது வீட்டில் இருந்த மயில் மலர் கல்லூரி மாணவர்களுடன் கருப்பனின் தோட்டத்திற்கு வந்திருப்பதாக ஊர் மக்கள் பேச கேட்டறிந்தவள் தானும் சென்று அவளை பார்த்து விட்டு வரலாம் என்று கருப்பன் தோட்டம் நோக்கி வந்தவள்,

கழுத்தில் பாம்பை போட்டுக்கொண்டு அதனுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே செல்லும் தர்மனை பார்த்தவள், 

Advertisement

Advertisement

‘என்ன இவன் பாம்பு கூட எல்லாம் பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கியான்…!’ நினைத்தவளாக,

Advertisement

“ம்ம்க்குகூம்…!” என்று தனது தொண்டையை செரும்பினாள். அவளின் அந்த குரல் கேட்டு அது யார் என்று அறிந்தவன்,

“நாகராஜா நம்மளுக்கு ஒரு இன்ட்ரஸ்டிங்கான டைம் பாஸ் வந்துருச்சு என்னனு பாக்கலாமா…?”என்று அதனுடன் பேசிக்கொண்டே திரும்பினான்.

தர்மனை பார்த்துக்கொண்டிருந்த மயிலோ அவனிடம் “என்ன பெரிய ஆதிசேஷன்னு நினைப்போ ….! கழுத்துல பாம்போட திரியிறீரு…?” என்று கேட்டாள். 

 அதற்கு தர்மனோ “ஏன்…! கழுத்துல பாம்பு போட்டவங்க எல்லாம் ஆதிசேஷனா தான் இருக்கணுமா என்ன? நானும் இவனும் ஒரு சின்ன டீலிங் பேசிட்டு இருந்தோம்…!”என்று தர்மன் கூற,

“அதுவும் சரித்தான், இனம் இனத்தோட தான சேரும்…!” என்று கூறி தருமனின் காலை வாரினாள் மயில்.

“என்னது இனம்… இனத்தோட.. சேருமா…!” என்ற ஸ்லொ மோசனில் கூறிய தர்மன், அதே ஸ்லோ மோசனில் பாம்பை பார்க்க,  

அதற்கு என்ன புரிந்ததோ என்னவோ பாம்பும் ஸ்லோ மோஷன் திரும்பி தர்மனை பார்த்தது.

 பாம்பு மனதிற்குள்ளோம் ‘அடப்பாவிகளா…! நான் பாட்டுக்கு என் ஆள பாக்கலான்னு போயிட்டு இருந்தேன். அதையும் அந்த புள்ள கெடுத்து விட்டுருச்சு, சரி இன்னைக்கு நம்மளுக்கு நேரம் சரியில்லை, வீட்ட பக்கம் போலாம்னு பார்த்தா அதுக்கு விட மாட்டேன்னு புடிச்சி வெச்சி இருக்கானே இந்த படுபாவி பய, இதுல இவன கொண்டு வந்து என் இனதோட சேர்த்து உடுது இந்த புள்ள…! என்ற நினைத்துக்கொண்டு இருந்தது. 

“சரி..சரி.. நீ எக்கேடோ கெட்டு ஒழி நான் போறேன்…!” என்று கூறிய மயில் அங்கிருந்து ஒரு அடி எடுத்து வைக்க, 

“ஏய் இந்தாடி நில்லுடி..!” என்று கூறி மயிலை நிறுத்தினான் தர்மன். 

“இந்தாரு.. இந்த வாடி போட்டின்ற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்கிட்ட வாய புடிச்சு கிழிச்சு புடுவேன்” என்றால் மயில்.

“சரி சரி இப்ப எதுவும் சொல்லல, எனக்கு உரிமை கிடைச்சதுக்கு பொறவு சொல்லிக்குறேன்…! எப்ப உன் பதில சொல்ல போற…?” என்று கேட்டு அவளை பார்த்து கண்ணடித்தான் தர்மன். 

 அவன் கேட்ட விதத்தில் முகம் வெட்க சிவப்பை பூசிக்கொள்ள, அதனை முடிந்து மட்டும் மறைத்து அவனைப் பார்த்து முறைத்தால் மயில்.

“மொறைக்கும் போது கூட அழகா தாண்டி இருக்க என் அழகி…!” என்று அவள் முகம் முன்பு விரல் நீட்டி வழித்து தன் உதடு குவித்து முத்தமிட்டு கூறினான் தர்மன். 

அதற்கும் மயிலிடமிருந்து முறைப்பு மட்டுமே பரிசாக கிடைத்தது.

“அடியேய் முறைச்சு முறைச்சே காலத்தை கடத்தலான்னு பாத்திட்டியா…! உன்கிட்ட என் மனசுல உன்ன விருப்பத்தை சொல்லி கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆயி போச்சு, 

 ஆனா நீ உன் மனசுல கொள்ள பிரியம் இருந்தும் அத வெளிய சொல்லாம என்னைய இப்படி சுத்தல்ல விட்டுட்டு இருக்கிற….

நீ இப்படியே என்ன சுத்துல்லயே விட்டுட்டு இருந்தேன்னு வையி உன் வீட்டுக்கு பக்கத்து சந்துல இருக்கிற கனகா என் மேல ஒரு கண்ண வச்சுட்டு சுத்திட்டு இருக்கா,

உன்கிட்ட இருந்து பதில் வராம இப்பிடியே நீண்டுச்சுன்னா அப்புறம் அவ கூட தான் நான் சுத்த வேண்டியதாக இருக்கும் பாத்துக்க…!”என்று கூறினான் தர்மன்.

 அவன் அவ்வாறு கூறவும் இத்தனை நேரம் மேலோட்டமாக அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்த மயிலுக்கு அடி வயிற்றிலிருந்து புகை கிளம்பியது.

 “இப்ப என்ன சொன்ன…! என்னைடா சொன்ன நீயி கனகா கூட சேந்து ஊர் சுத்துவியா…? ஊர் சுத்தறதுக்கு காலு இல்லாம இடுப்புக்கு கீழ ஒட்ட வெட்டி எடுத்து

வீட்டோட இருக்க வச்சுப்புடுவேன் ஜாக்குறத…!” என்று கூறினால் மயில்.

 அவள் கூறும் பொழுது அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்த தர்மன் “அடியாத்தி இவ செஞ்சாலும் செய்வா…!” என்று வேறு புறம் திரும்பிக்கொண்டான்.

“இன்னும் ரெண்டு கிழி கிழிச்சுவிடு இவன, நான் பாட்டுக்கு போறவனையும் புடிச்சு நிக்க வச்சுட்டான் படுபாவி பய…!” என்று பாவம் பாம்பும் அதன் போக்கில் மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தது.

 “சரிடி நீயும் விருப்பத்த வெளிக்காட்ட மாட்டேங்குற…, வேற எவகிட்டயும் நான் பேச போறேன்னு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்குற…, எத்தனை வருஷத்துக்கு நான் இப்படியே ஒண்டிக்கட்டையாவே இருக்குறது சட்டுபுட்டுன்னு உன் சம்மதத்தை சொன்னா தானே நாம அடுத்தடுத்த பிராசஸ் ஸ்டார்ட் பண்ணலாம்…!” என்று தர்மன் மீண்டும் கண்ணடித்து கேட்டான்.

 அவன் கேட்ட தோரணையில் அவளுக்கு வெட்கமும் சிரிப்பும் ஒரு சேர வந்து விடவே, அவனைப் பார்த்து மெலிதாக வெட்க சிரிப்பு சிரித்து விட்டு அங்கிருந்து சென்றால் மயில். 

“ஐ நம்ம ஆளு நம்மள பார்த்து சிரிக்கிறா…!” என்று குதூகலமாக அங்கிருந்து சென்றான் தர்மன்.

 இவர்களுக்கு நடுவில் இருந்த அந்தப் பாம்பு தான் பாவம் அதன் காதல் இன்று கைக்கூடாத கவலையில் வயித்தெரிச்சலில் 

“ஸ்ஷ்…ஸ்ஷ்…” என்று இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது.

 மலர் பயத்தில் கருப்பனின் இடுப்பில் ஏறி அமர்ந்திருந்தவள், பின் மாணவி ஒருத்தி பாம்பு சென்று விட்டதாக கூறவும் ஒற்றை விழியை திறந்து பார்த்து பாம்பு இல்லாததை உணர்ந்தவள் திரும்பி கருப்பன் முகம் பார்க்க,

அவனும் அவளின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை இவ்வளவு அருகில் பார்த்து ஒரு ஆணின் வாசம் உணர்ந்த மலரின் இதயம் படபடவென துடிக்க, அதனை உணர்ந்தும் கூட இவ்வளவு அருகில் இருப்பவர்களை விழி அகலாது ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கருப்பன். 

 மயில் தர்மனிடம் பேசிவிட்டு கருப்பன் தோட்டத்திற்கு வந்தவள் அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சியில் விழிவிரிய அவர்களின் அருகில் வந்தவள் 

“அடியே மலரு…! இங்கே என்னடி நடக்குது….!”என்று கேட்டாள்.

 மயிலின் சத்தம் கேட்ட மலரோ கருப்பனின் கழுத்தில் இருந்த பிடியை விடுத்து அவனின் பிடியிலிருந்து இறங்கி பட்டென விலகி நின்றவள், 

“அ..அது… ஒ…ஒன்னும் இ… இல்ல மயிலு….!”என்றவள், 

 “ஆமா நீ இங்க என்னடி பண்ற?” என்று மலர் மயிலிடம் கேட்டாள்.

“நீ உன் காலேஜ் பசங்க கூட இங்க வந்திருக்குறதா ஊருக்குள்ள பேசிகிட்டாய்ங்க, அதான் எந்த மாதிரியான பாடமெல்லாம் நடந்துட்டு இருக்குன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்…!” என்று கூறினால் மயில்.

அதற்குள் நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்த கருப்பன் மாணவர்களின் புறம் திரும்பி “ஓகே காய்ஸ் டைம் ஆயிடுச்சு….. இன்னைக்கு இயற்கை உரம் விவசாயம் மண் வளம் பத்தி நீங்க கத்துக்கிட்டதெல்லாம் எல்லாருமே ஃப்யூச்சர்ல திறம்பட செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்குறேன். உங்களுக்கு எந்த சந்தேகமா இருந்தாலும் என்ன காண்டாக்ட் பண்ணுங்க,

 அப்புறம் இன்று கடைக்கண்ணால் மலரை ஒரு பார்வை பார்த்தவன் என்னோட கான்டாக்ட் நம்பர் யாருக்காவது வேணுமா…?” என்று கேட்டான்.

 அவன் கேள்வியில் பட்டென கருப்பன் விழி பார்த்த மலர் அமைதியாக அவனை பார்த்து இருக்க, அவளின் கண்களில் தெரிந்த அந்த ஆர்வத்தை கவனித்த கருப்பன் மாணவர்களுக்கு தன்னுடைய அலைபேசி எண்ணை தெரிவித்தான்.

 அதனை திருட்டுத்தனமாக தன்னுடைய மொபைலில் பதிவு செய்து கொண்டால் மலர். 

அவனின் எண்ணை மயிலிடம் கேட்டு வாங்கி இருக்கலாம் தான்…, ஆனால் அவள் தான் அவளை கேலி கிண்டல் செய்தே வைத்து செய்து விடுவாளே…, என்கின்ற பயம் மலர் விழிக்கு.

 ஒருவழியாக அன்றைய ப்ராக்டிக்கல் க்ளாஸ் இனிதாக முடிந்துவிட, அனைத்து மாணாக்கர்களும் சென்று வேனில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

அவர்களின் பின்னால் வேனில் ஏற சென்ற மலரை பார்த்த மயிலோ “அடியே மலரு நீ எதுக்கு மறுபடி காலேஜ் போற….? நீ இங்கே இருந்துட வேண்டியது தானே…!” என்று கூறினாள்.

அதற்கு மலரோ “இல்லடி ஸ்டூடண்ட்ட போய் பத்திரமா காலேஜ்ல விடனும். அதுவரைக்கும் பசங்க எல்லாம் என் பொறுப்பு தான்….!” என்று கூறினாள்.

 “ஆமா ஆமா உங்களை எல்லாம் நம்பி வந்தா பசங்க ரொம்ம்ப சேஃபா இருப்பாங்க…!’ என்று மலரை பார்த்து புன்முறுவல் செய்தான் கருப்பன்.

 அதற்கு அவனை பார்த்து மென்மையாக முறைத்தவள் அங்கிருந்து சென்று விட்டாள். 

 இவர்கள் தோட்டத்தில் செய்த அனைத்து ரகளையையும் மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தது இரு கொடூர விழிகள். 

 இரவு நேரம் அமுதாவின் வீட்டில் இரவு உணவினை முடித்துக் கொண்டு மலரும் மயிலும் தங்களின் அறைக்கு உறங்க சென்றனர்.

 படுத்தவுடன் மயில் உறங்கி விட, மலருக்கு தான் உறக்கம் வரவில்லை அவள் கருப்பனின் நினைவில் உழன்று கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் அவனின் நினைவு அவளிடம் இருக்கும் தான். ஆனால் இன்று அவனுடனான அத்தனை நெருக்கம், ஒரு ஆணவனின் வாசம், முதன் முதலாக ஒரு ஆண்மகனின் அந்த தொடுகை இன்னும் கூட தன் உடலோடு ஒட்டி இருப்பதைப் போல் ஒரு குறுகுறுப்பு அவள் உடல் முழுவதும் வியாபித்து இருந்தது.

 அவளின் உடல் ஒருவித குறுகுறுப்பில் தவிக்கவும், அதற்கு தகுந்தார் போல் அவளின் மனமோ அதுதான் அவரோட போன் நம்பர் உன்கிட்ட இருக்குல்ல போன் போட்டு பேச வேண்டியதுதானே…!’ என்று அவனிடம் பேச சொல்லி உந்தித்தள்ளியது. 

 அதே நேரம் கருப்பன் இத்தனை நாட்கள் உடல்நிலை காரணமாக தன் அம்மா கேட்டு கொண்டதால் தன் அம்மாவுடன் அந்த வீட்டில் இருந்தவன் இன்று தான் தன்னுடைய மண் வீட்டிற்கு வந்திருந்தான். 

 கருப்பன் எப்பொழுது மண் வீட்டிற்கு வருவான் என்று காத்திருந்த தர்மனும் இன்று அவனுடன் சேர்ந்து கொண்டான்.

 இருவரும் இத்தனை நாட்கள் பேசாத பல கதைகளை பேசிக்கொண்டே படுத்து இருந்தனர். ஒரு கட்டத்தில் தர்மனும் உறங்கிப் போய் இருக்கவே, இப்பொழுது கருப்பனுக்கு மலரின் நினைவு வந்து தொற்றிக் கொண்டது.

‘ஒரத்துக்கு வேண்டியத தொட்டு செய்ய மாட்டேங்குறா….! சின்ன பாம்பை பார்த்து பயப்படுறா…! இவ எல்லாம் ஒரு அக்ரிகல்ச்சர் ப்ரஃபஸ்ஸர் …!” என்று நினைத்துக் கொண்டு படுத்து இருந்தவனின் அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்க்க புது எண்ணாக தோன்றியது. மலர்விழி தான் அழைத்திருந்தாள்.

 வெகுநேரமாக அலைபேசி திரையில் கருப்பனின் எண்ணை விழியகலாது பார்த்துக் கொண்டிருந்த மலர்விழியின் மனமும் உடலும் அவளின் பேச்சைக் கேட்காமல் அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்திருந்தது…..

கருப்பன் வேட்டை தொடரும்….

💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝

கமெண்ட் ப்ளீஸ் 😊🙏🏻

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!