Skip to content
Post Views: 1,941

கருப்பன் ஆட்டம் 21
மண் வீட்டினுள்ளே தர்மன் உறங்கிக் கொண்டிருக்க, இன்று நடந்த நிகழ்வில் சுழன்ற கருப்பனின் நினைவில் மலர்விழி பயத்தில் தன்னை கட்டிக்கொண்டு தனது இடுப்பில் ஏறி அமர்ந்ததையும், அவளின் மெல்லிய வெண்பனி இடையில் தனது இரும்புக்கரம் பதிந்ததையும் நினைத்துப் பார்த்தவனுக்கு அவளின் நினைவிலேயே உறக்கம் வராமல் போகவே, எழுந்து அந்த வீட்டின் வெளியில் வந்து நின்று வானில் ஒளிர்ந்த அந்த வட்ட நிலவை வெறித்துக் கொண்டிருந்தான்.
Advertisement
அதே நேரம் உறக்கத்தை தொலைத்திருந்த மலர்விழி வெகுநேரமாக கருப்பனின் அலைபேசி எண்ணை பார்த்துக் கொண்டிருந்தவளின் உடல் மொழி அவள் பேச்சைக் கேட்காமல் கருப்பனின் எண்ணிற்கு அழைப்பு விடுத்திருந்தது.
Advertisement
எதிர் முனையில் இருந்த கருப்பனுக்கும் அந்த அழைப்பு வந்து சேர்ந்திருந்தது.
Advertisement
‘என்னது இது புது நம்பரா இருக்கு…? அதுவும் இந்த டயத்துல….! என்று மணியை பார்க்க மணி இரவு 11 என காட்டியது.
Advertisement
கருப்பன் அழைப்பை ஏற்று காதில் வைக்க, மறுமுனையில் எந்த சத்தமும் இல்லாமல் ஒரு வித அமைதி.
வெகு நேரம் எந்த பேச்சும் இல்லாமல் இருக்கவும் தானே பேச ஆரம்பித்தான் கருப்பன்.
“ஹலோ யாரது…! போன போட்டுட்டு பேசாம அமைதியா இருக்குறது…?” என்று கணீர் குரலில் கேட்டான்.
அப்பொழுதும் மலரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதிலேயே அழைத்திருப்பது, திருட்டுத்தனமாக தன்னுடைய அலைபேசி எண்ணை பதிவு செய்து கொண்ட மலர்விழி தான் என்பதை அறிந்தவன்,
“ஏய் திருட்டு பூனை என்னடி இந்த நேரத்துல கூப்ட்ருக்க…?” என்று கேட்டான்.
அவன் தன்னை கண்டு கொண்டான் என்பதை அறிந்த மலர்விழியோ ஒற்றை விழியை மூடி நுணி நாக்கை கடித்து கொண்டவள் ‘அய்யய்யோ கண்டுபிடிச்சிட்டானே காட்டான்…!’ என்று நினைத்தவள்,
“யார் திருட்டு பூனை…! நானா…?”என்று கேட்டாள்.
“ஆமா.. எனக்கு போன போட்டுட்டு அமுக்குனி கணக்கா பேசாம இருக்குறியே நீ தாண்டி திருட்டு பூனை….!” என்றான் கருப்பன்.
“ஹலோ..! நான் ஒன்னும் வேணும்னு உங்க கிட்ட பேசணும்னு போன் பண்ணல, தெரியாம கைப்பட்டு கால் வந்துருச்சு…. அதுக்காக திருட்டு பூனைன்னு சொல்லுவீங்களா…?” என்று கேட்டால் மலர்.
அவள் கூறியதில் உதட்டை விரித்து புன்னகைத்தவன், “சரி..அது இருக்கட்டும்… என் நம்பரை எதுக்கு இந்நேரத்துல நீ பார்த்துட்டு இருந்த…?” என்று சரியான கேள்வியை கேட்டான்.
அந்த கேள்வியில் முழித்த மலரிடம் எந்த பதிலும் இல்லை.
கருப்பனே தொடர்ந்தவன் “ஏண்டி என்னோட ஞாபகமா இருந்துச்சா…? அதனால தூக்கம் வரலையா…?” என்று அடுத்த கேள்வியாக அவளின் நிலையை நேரில் இருந்து பார்த்தவனாக கேட்டுவிட, அதற்கும் மலரிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.
“அது…அது வந்து.. உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே….!” என்று கேட்டால் மலர்.
“எனக்கு என்ன…! நான் நல்லா தான இருக்கேன்..!” என்றான் கருப்பன்.
“இல்ல ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்ல, இதுல நான் வேற மத்தியானம் பாம்ப பாத்த பயத்துல வந்து உங்கள கட்டிப்பிடிச்சுட்டு இடுப்புல ஏறி உட்கார்ந்துட்டேன்.
அதனால உங்களுக்கு வலி எதுவும் ஆயிடுச்சா…?” என்று திக்கி திணறி அவனிடம் பேச்சு கொடுத்தால் மலர்.
“ஆமா வலிக்குது…!’ என்றான் கருப்பன்.
“ என்னது வலிக்குதா…!?” என்று சற்றே அதிர்ந்தவளாக கேட்டால் மலர்.
“ஆமா லைட்டா நெஞ்சு வலிக்குது. என்னை பத்தின ஃபீலிங்ஸ் உனக்குள்ள இருந்தும் கூட அதுக்கான ரீசன் என்னன்னு நீ புரிஞ்சும் கூட அதை என்கிட்ட சொல்லாம இழுத்து அடிச்சுட்டு இருக்கல்ல, அதனால லைட்டா நொட்டாங்கை பக்க நெஞ்சு வலிக்குது….!” என்று தனது இடது மார்பை தடவி கொண்டே கூறினான் கருப்பன்.
அவன் பேச்சில் எதிர்ப்புறம் அழைப்பில் இருந்த மலர்விழியின் முகம் செவ்வானமாய் சிவந்து போயிருந்தது.
“என்னடி பதிலையே காணோம்…?” என்று குறும்பாக புன்னகைத்தபடி கேட்டான் கருப்பன்.
அப்பொழுதும் மலரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை . அவளின் முகம் வெட்க சிரிப்போடு அவனுக்கு பதில் கூறும் நிலையில் இல்லாமல் அவள் இருக்கும் நிலையை உணர்ந்தானா…! என்னமோ…! அமைதியாக அழைப்பில் காத்திருந்தான்.
இருவரின் மூச்சுக்காற்று மட்டுமே எதிரெதிர் புறம் வந்து கொண்டிருப்பதை இருவரும் உணர்ந்தவர்களுக்கு இப்பொழுது இந்த நிமிடம் இருக்கும் இந்த ஏகாந்த நிலையிலேயே வெகு தூரம் கடந்தாலும் போதும்..! என்று தோன்றவே அழைப்பை துண்டிக்காமல் அப்படியே இருந்தனர்.
சிறிது நேர அமைதிக்கு பிறகு “சரிடி திருட்டு பூனை…, உன்கிட்ட இருந்து இன்னைக்கு பதில் வராதுன்னு தெரிஞ்சு போச்சு நீ போன வச்சுட்டு தூங்கு…” என்றான் கருப்பன்.
அவன் அவ்வாறு கூறவும் வேகமாக
“ஏங்க…” என்றால் மலர் ஏக்கமாக…
“அப்போ நீ உன் பதில சொல்லு” என்றான் கருப்பன்.
ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு கொண்டவள் “ஏன்னு தெரியல உங்களை எப்ப பார்த்தனோ….! அப்பவே உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருச்சு, ஆனா அத நேரா உங்ககிட்ட எப்படி…!” என்று அவள் மேலும் தயங்க,
‘ம்ம்கூம்… இவள இப்பிடியே பேச விட்டா இவ வாயில இருந்து மறுபடியும் உண்மைய வாங்க முடியாது… இத வேற முறையில தான் டீல் பண்ணனும்…’ என்று நினைத்து கொண்டவன்,
“உனக்கு சொல்ல தயக்கமா இருந்துச்சுன்னா… இப்பிடி ட்ரை பண்ணு, மாமா மாமா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மாமா ….! நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா மாமா….! நம்ம ரெண்டு பேரும் சேந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து பதினஞ்சு புள்ள குட்டி பெத்து போடலாமா மாமா …! அப்படின்னு கேளு…!” என்றான் கருப்பன்.
அவன் கூறிய வார்த்தைகளை கேட்டவள் அவன் கூறிய கடைசி வார்த்தையில் விழி விரித்து “என்னது…. 15 புள்ளைங்களா…!” என்றாள்.
“ஆமா எனக்கு 15 புள்ளைங்க வேணும். ஒவ்வொன்னும் உன்னை விட ஒரு படிக்கு மேல துடுக்குதனமாவும், என்னைய விட ஒரு படி தைரியமாவும், ஊருக்குள்ள நடக்குற அநியாயமான விஷயத்துக்கு எல்லாம் நியாயமா முறையில கேட்டு அத மாத்துற மாதிரியும்,
அப்பறம் என்னுடைய இந்த இயற்கை முறை விவசாயத்தை மாத்தாம அப்படியே தலைமுறை தலைமுறையா கொண்டுட்டு போற மாதிரியும் 15 பசங்களுக்கு குறையாம வேணும். ஏன் உனக்கு வேண்டாமா…?” என்று கேட்டான் கருப்பன்.
“ஆங்.. சரித்தான்…! ஆள பாரு 15 புள்ளை வேணுமாமே! அதுக்கெல்லாம் என் பாடி தாங்காதுப்பா…!” என்றால் மலர்.
“ஓ அப்படியா… அப்ப சரி விடு…!’ என்று அவன் உதட்டை மடித்து கடித்து சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான்.
அவன் அவ்வாறு கூறவும் இவளின் எதிர்பார்ப்பு மங்கி விட, இவளே அதனையும் கேட்டாள், “என்னது…. அப்ப சரி விடுவா….! ஏன் நீங்க வேற ஏதாவது ஆஃபர் கொடுக்குறது…!” என்று கேட்டாள் மலர்.
“ஆஃபர் வேணுமா …! சரி உனக்காக வேணும்னா கொஞ்சமா கொறச்சு 13 புள்ளைங்க ஒனக்கு ஓகேவா…!” என்று கேட்டான்.
“ஏங்க என்னைய பார்த்தா உங்களுக்கு பாவமாகவே தெரியலையா…! எனக்கு அவ்வளவு எல்லாம் தாங்காதுங்க…! நம்ம வேணும்ணா ஃபைனலா 10 புள்ளை மட்டும் பெத்துக்கலாமா….?” என்று அவள் கேட்க,
“ம்ம்.. இந்த டீலிங் கூட ஓகே தான்…!” என்று கூறினான் கருப்பன்.
(என்னடா நடக்குது இங்க…!🙄 இன்னும் ரெண்டு பேரும் சரியா பேசிக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள புள்ள பெத்துக்கறதுக்கு டீலிங் பேச போய்ட்டீங்க🙄🙄🙄)
“சரி சொல்லு எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்….!” என்றான் கருப்பன்.
“என்னது…. எப்போ ஸ்டார்ட் பண்ணலாமா….!”
“பின்ன….. 10 புள்ளைன்னா எப்படியும ஒன்னு ரெண்டு ட்வின்ஸா பெத்துக்கிட்டா கூட ஒரு ஏழு எட்டு வருஷம் ஆயிடும். இப்பவே ஸ்டார்ட் பண்ணா தானே சரியா இருக்கும்…!” என்றான் கருப்பன்.
அவன் அவ்வாறு கேட்ட பிறகே, தான் இத்தனை நேரம் பேசியது மூளையில் உரைக்க,
‘ஐயோ மலரு என்னடி பேசிட்டு இருக்குற…!’ என்று தனது தலையில் அடித்து கொண்டவள் “நான் எதுவும் சொல்லல…!” என்று அழைப்பை துண்டிக்க போக,
“ஏன் போன வச்சிடாதடி திருட்டு பூனை..! இப்ப சொல்லு உனக்கு என்ன புடிச்சிருக்கா…?” என்று மீண்டும் கேட்டான்.
“புடிக்காம தான் 10 பிள்ள பெத்துக்கறதுக்கு டீலிங் பேசுனனாக்கும்…!” என்று கூறி விட்டு,
‘ ஐயோ…! இந்த வாய் என் பெர்மிஷனே இல்லாம எல்லாத்தையும் ஒளறி வைக்குதே…!’ என்று எண்ணி உதட்டை கடித்து கொண்டால் மலர் .
“ஓஹோ… அப்பிடி…! சரித்தான்….! சரி சாப்டியாடி…?”
“சாப்ட்டேன்…! என்றவளின் குரல் உள்ளிருந்து வெளிவர தயங்கியது,
நீங்க சாப்டீங்களா…!” என்று ஒருவித உற்சாக குரலில் பேசினால் மலர்.
அதன் பிறகு வந்த பேச்சுக்கள் அனைத்தும் நொடிப்பொழுதை மணிப்பொழுதை கவனிக்காது சென்றது. ஆனால் என்ன பேசினார்கள் என்று கேட்டால் அது அவர்களுக்கே தெரியாது…???
மணி நடுனிசி ஒன்று என்று காட்ட கடிகாரத்தை பார்த்து மலரின் விழிகள் விரிந்து “அத்தான் மணி ஒண்ணாச்சு…!” என்றாள்.
“சரி அதுக்கு என்ன இப்ப…!” கருப்பன் சாதாரணமாக தோளை குலுக்கி கொண்டே கேட்டான்.
“எவ்வளவு நேரம் நான் பேசிட்டேன் சேரி நான் போன வெச்சுடுறேன்…!” என்றவள் அடுத்து கருப்பன் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாது அழைப்பை துண்டித்து இருந்தாள்.
ஏனென்றால் இன்னும் பேசினாலும் நேரம் கடக்குமே தவிர அர்த்தமற்ற, அளவற்ற காதல் பேச்சுகளுக்கு முடிவென்பதே இருக்காது என்பதை புரிந்து கொண்டதால் அவள் அழைப்பை துண்டித்து இருந்தாள்.
அந்த நேரம் ரெஸ்ட் ரூம் போவதற்காக எழுந்து வந்த தர்மன், கருப்பன் இந்த நேரத்தில் போனை கையில் வைத்துக் கொண்டு வெளியில் நிற்பதை பார்த்தவன்,
“டேய் மச்சான் என்னடா இந்த நேரத்துல இங்கன வந்து நின்னுட்டுருக்க…?” என்று கேட்டான்.
அதற்கு கருப்பனோ ஒன்றும் கூறாமல் முகம் முழுவதும் வெட்கச் சிரிப்போடு நின்று கொண்டிருக்க, அதனை பார்த்த மார்க்கத்தில் நண்பனின் நிலையை புரிந்து கொண்டவன்
“டேய் மச்சான்..!” என்று அவரின் தோலை தொட்டு தனது முகம் பார்க்க செய்தவன்,
“என்னடா அந்த புள்ள உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கு.. என்ன விஷயம்…!” என்று கேட்டான்.
அதற்கு கருப்பனோ “எந்த புள்ள…?” என்றான்.
“ஏய் எனக்கு தெரியாதாடா உன்னைய பத்தி… இன்னைக்கு காலைல தோப்புல அந்த புள்ள கிட்ட நீ தனியா பேசிகிட்டு வந்ததையும், அந்த புள்ள உன் இடுப்புல ஏறி உக்காந்துக்கிட்டதையும், அந்த புள்ளைய நீ தாங்கி பிடிச்சதையும் நான் பார்க்கலன்னு நெனச்சிட்டு இருக்கியா…?” என்று கேட்டான் தர்மன்.
அவன் கேட்ட விதத்தில் அனைத்தையும் நினைவு கூர்ந்து பார்த்தவன் மேலும் சிறு புன்னகையோடு அவன் முகம் பார்க்க,
“டேய் மச்சான் இது நமக்கு செட் ஆகுமாடா…? ஏன்னா நம்ம வாழ்க்கையில இந்த காதல் விசயத்துல பலவிதமான பிரச்சனைகள நம்ம கடந்து வந்திருக்கோம். அதான் மச்சான் கேக்குறேன்…?” என்றான்.
அவன் கேட்ட கேள்வியில் இத்தனை நேரம் இருந்த வெட்க சிரிப்பு அனைத்தும் வடிந்து, புருவங்கள் இடுங்க ஒரு வித யோசனைக்கு சென்றான் கருப்பன்.
“டேய் மச்சான் நான் சொன்னது உன் மனசுல உள்ளது ரணத்தை, வெளிக்கொண்டு வர்றதுக்கோ, இல்ல ஞாபகப்படுத்துறக்கோ இல்லடா…! ஆனா அதுவும் ஒரு பொம்பள புள்ள தான. அதுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கும்.
அவங்களும் நம்மள மாதிரி தான இருப்பாங்க…!” என்று கூறினான் தர்மன்.
அதனைக் கேட்ட கருப்பனோ “ தர்மா அத பத்தி பேச நான் விரும்பல, ஏன்னா அந்த புள்ள அதோட ஊர்ல இருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு மூணு வாரத்துக்கு மேல ஆச்சு.
ஆனா இதனால் வரைக்கும் அந்த புள்ள வீட்ல இருந்து யாரும் வந்த மாதிரியும்.., அந்த புள்ளைய பத்தி ஊருக்குள்ள எங்கயாவது விசாரிச்ச மாதிரியும் நான் கேள்விபடல,
அப்படியே புள்ள மேல அக்கறை இருக்கிறவங்க தான் இத்தனை நாளா தான் பெத்த புள்ளைய, அதுவும் பொட்ட புள்ளைய கூட தேடாம இருப்பாங்களா…? இதுல இருந்து தெரியல அவங்க குடும்பத்தோட லெச்சனம் என்னன்னு…?” என்று கேட்டான் கருப்பன்.
“சரி அப்போ நீயும் அந்த புள்ளையும் விரும்புறதா முடிவு எடுத்துட்டீங்களா…?” என்று கேட்டான்.
“ஆங்.. அதெல்லாம் முடிவு பண்ணி பேசியாச்சு, பத்து புள்ள பெத்துக்கறதுக்கு சம்மதமும் வாங்கியாச்சு…!” என்று குறும்பு சிரிப்புடன் கூறிய கருப்பன் வீட்டிற்கு உள்ளே செல்ல,
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து அவன் பின்னே உள்ளே சென்றவன் “என்னது… 10 புள்ளையா…!” என்றான் தர்மன்.
“ஆமா! அதுக்கு அவளே ஓகே சொல்லிட்டா…! நீ என்னமோ வலிய பொறுத்து பெத்து போட போற மாதிரி இப்பிடி முழிக்குற..?” என்றான் கருப்பன்.
“ நடத்துங்கடா நடத்துங்க…!
என் கூடயும் தான் ஒருத்தி இருக்கா… பேச போனாலே என்னமோ பச்ச மொளகாய கிள்ளி கண்ணுல வச்ச மாதிரி பாக்குறதும் பேசுறதும் என்று சடைந்து கொண்டே ஒன்னுக்கு ஊத்த சென்றான் தர்மன்.
அவன் சென்று வரும் பொழுது “டேய் மயிலு புள்ளைய பத்தி ஒன்னும் பிரச்சனை இல்ல, ஆனா அந்த புள்ளையோட அண்ணங்காரன பத்தி தெரியும்ல உனக்கு…!” என்றான் கருப்பன்.
“ஏன் தெரியாம…! தெரியுமே நல்லாவே தெரியும்…! தெரிஞ்சதுனால தான் லவ் பண்றேன். அதுக்கு மீறி எனக்கு ஏதாவது ஒன்னுன்னா என் நண்பென் நீ இருக்கல்ல… பின்ன எனக்கு என்ன கவலை…!” என்றான் தர்மன்.
“ஆக மொத்தம்… அங்க சுத்தி இங்க சுத்தி என்னை கொண்டு போய் அவன் கூட கோர்த்து வுட பாக்குற என்ன…?”
“அப்படி இல்ல மச்சான்…! தோள் கொடுக்க தோழன் இருக்கும்பொழுது நான் எதுக்கு பயப்படனும்…!”
“நீ ஒரு முடிவோட தான் சுத்துற…!” என்றான் கருப்பன்.
அதற்கு தர்மனோ ஈஈ…! என்று இழித்தவன் தான் கட்டி இருந்த லுங்கியின் முடிச்சை அவிழ்த்து உதறி மீண்டும் கட்டிக்கொண்டு சென்று படுத்து விட்டான்.
கருப்பன் வேட்டை தொடரும்….
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
error: Content is protected !!