Skip to content
Post Views: 3,654

கருப்பன் ஆட்டம் 3
தர்மன் தனது ஆருயிர் நண்பன் கருப்பனை அடித்த அடியில் தனது கையை உதறிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
Advertisement
அதனைப் பார்த்து கருப்பனோ “வந்த வேலை பார்த்தமா, சூ** மூடிட்டு இருந்தமான்னு இல்லாம உனக்கு எதுக்கு தேவை ம** இல்லாத வேலை” என்று கேட்டவன் முத்து போட்டுக்கொடுத்த டீயை விருப்பமே இல்லாமல் குடித்து மீதியை கீழே ஊற்றினான்.
Advertisement
தர்மனோ “ஏன்டா நீ காய்கறிய தான திங்குற இல்ல வேற இரும்பு எதுவும் திங்குறியா இப்பிடி உடம்ப வளத்து வச்சுருக்க?” என்று கேட்டான்.
Advertisement
அதற்கு கருப்பனோ “ உனக்கு விளக்கம் குடுக்க எனக்கு விருப்பம் இல்ல, இருந்தாலும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, நான் காய்கறி தான் திங்குறேன்.
Advertisement
காய்கறியினாலும் உன்னையாட்டம் மார்க்கெட்ல விக்கிற மருந்து கலந்த காயெல்லாம் இல்ல. இயற்கை உரத்தால ஆன என்னோட தோட்டத்துல வளர்த்த காய்கறி” என்றான் கெத்தாக,
“அடேயப்பா, உன்னோட தோட்டத்துல விளைஞ்சா என்ன, அத என்னமோ பெரிய உலக அதிசயம் மாதிரி சொல்ற?” என்று கேட்டான் தர்மன்.
“பின்ன இல்லையா ஒவ்வொருத்தனும் தனக்கு நிலத்துல விளைச்சல் ஆனா போதும், விளஞ்ச பொருள் வியாபாரம் பண்ணா போதுன்னு தான் நினைச்சு குறைஞ்ச விலையில் கண்டவனும் விக்கிற செயற்கை உரத்த வாங்கி வந்து நிலத்துக்கு போடுறியான்.
அதனால அதுல இருக்கிற காய்கறிக்கும் சேதம், அள்ள அள்ள குறையாம நம்மளுக்காக தன்னுடைய ஆரோக்கியத்தை தாரை வைத்து கொடுக்கிற நிலத்துக்கும் சேதம்.
ஆனா இதுவே என்னோட காட்ட எடுத்துக்கோ, இயற்கை உரத்தாலான காய்கறிகளை மட்டும் தான் நான் விளைய வைக்கிறேன். அதை மட்டும் தான் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். அதனால தாண்டா இப்படி உடம்பு இரும்பேறி இருக்கு” என்றான் கருப்பன்.
“அது என்னமோ வாஸ்தவந்தாண்டா இப்பல்லாம் எங்கடா நல்ல காய் கிடைக்குது.
பூராம் மருந்து கலந்த காயா தான இருக்குது.
அதனால தானோ என்னமோ சின்ன சின்ன பிள்ளைகளுக்கு எல்லாம் சின்ன வயசுலையே வரக்கூடாத வியாதி எல்லாம் வருது.
பொறக்கும் போது ஆரோக்கியமா தான் பொறக்குதுக, பொறந்த ரெண்டு மூணு வருஷத்திலேயே கண்ணுல பிரச்சனை கண்ணுக்கு கண்ணாடி போடு, சுகர் இருக்கு, ரெத்த சோகை இருக்கு மாத்திரைய போடுங்குறாய்ங்க.
இந்த உலகம் எங்க தான் போய் முடிய போகுதோ” என்று தர்மன் பொதுநலம் குறித்து பேசினான்.
“அட விளக்கெண்ண பெரிய பொதுநலன் பத்தி பேசுறீரோ, இப்ப நம்ம விவசாயிங்க எல்லாம் செயற்கை உரத்துக்கு மாறினதுக்கு காரணமே இவய்ங்க தான்டா,
இப்போ உதாரணத்துக்கு ஒரு விஷயம் எடுத்துக்கோயன் இயற்கை உரத்துல விளைச்சல் பண்ணா அந்த காயவோ கீரையோ புழு பூச்சி சாப்பிடும் அதனால அது பார்க்க ஓட்டையாவோ அங்கங்க கருப்பாவோ பாக்க பார்வையா இருக்காது.
அதனால அந்த காயில் கீரையில இருக்கிற அந்த ஒன்னு ரெண்டு பூச்சி கடிச்ச இலையை பார்த்து வங்காம அப்படியே மொத்தமா ஓரம் ஒதுக்கி வைச்சுடுவாய்ங்க. அதனால கஷ்ட்ட பட்டு விளைச்சல் பண்ணவனுக்கு முதலுக்கு முதலும் நட்டமாகி காயும் வேஸ்ட்டா போயிடும்.
அப்போ உரத்துக்குன்னு நிறைய வட்டிக்கு காசு கடன் வாங்கி செலவு பண்ணி அதை கஷ்டப்பட்டு விளைய வச்சு, அதை சந்தையிலே கொண்டு போய் கொடுக்கும்போது இப்படி எல்லாரும் பண்ணி
புடுறாய்ங்க.
ஆனா இதுவே நல்லா கலரா பல பலன்னு இருக்குற காயப் பாத்தா உடனே வாங்கிடுவாய்ங்க. அதனாலயே நம்ம விவசாய மக்கள் எல்லாம் என்ன பண்றாங்கன்னா தெரிஞ்சே, மக்களுக்கு விஷத்தை விளைய வச்சு கொடுக்குறாங்க. அவைங்க அப்படி பண்ணா, இவனும் பாவம் என்ன பண்ணுவியான்.
அப்படி பல பலன்னு வேணும்னா இப்ப மார்க்கெட்ல கிடைக்கிற செயற்கை உரத்த வாங்கி விதைச்சா மட்டும்தான் அந்த மாதிரி கிடைக்கும்.
அப்போ யாரும் நம்ம உடம்புக்கு தேவையானதை எடுத்துக்கல பார்வைக்கு வேண்டியதை எடுக்குறாய்ங்க. அதனால உடம்புல இது மட்டும் இல்ல இதுக்கு மேலயும் கூட வியாதியும் பிரச்சினை வரும்.
இது எல்லாம் பார்த்து தான் நானெல்லாம் படிச்சு இயற்கை உரம் ரெடி பண்ணிட்டு இருக்கேன். பாப்போம் பிற்காலத்துல என்னால முடிஞ்ச இயற்கை உரத்த மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்து இந்த மக்களுடைய உடல் ஆரோக்கியத்தை நல்வழிப்படுத்த, முடிஞ்ச காரியத்தை செய்வோம்” என்றான் கருப்பன்.
“ஏய் சூப்பர் டா மச்சான் நல்ல விஷயம்டா என்றான் தர்மன்.
ஆம் நம் நாயகன் கதிர் எனும் கருப்பன் பசுமை புரட்சி செய்ய நினைத்து BSC Agriculture பட்ட படிப்பை முடித்திருந்தான்.
ஆமா! என்ன கவுன்சிலரோட சின்ன விட்டு முன்னாடி இருந்த வக்கை புல்ல கொளுத்தி புட்டியாம், கவுன்சிலர் கட்டை விரலை வேற வெட்டி புட்டியாம்” என்று தர்மன் கேட்க,
“உனக்கும் தெரிஞ்சு போச்சா” என்றான் கருப்பன் அசால்டாக.
“ எனக்கு மட்டுமா தெரிஞ்சுச்சு, அடேய் கருப்பா ஊர்காரன் பூரா அதைத்தான்டா பேசுறாய்ங்க.
“அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்ற?
“என்னடா இவ்ளோ அசால்டா கேக்குற? நீ கை வச்சிருக்குறது ஆளுகட்சி கவுன்சிலர் மேலடா, இந்நேரம் போலீஸ் படையே உன்னை தேடி வந்துட்டு இருப்பாய்ங்கடா” என்று தர்மன் கூற,
“அதுக்கு என்னடா?”
“அடேய் புடிச்சுட்டு போய் ஜெயில்ல போட்டுடுவாய்ங்கடா!”
“புடுச்சுட்டு போனா தானே!”
“புடுச்சுட்டு…போனா… தானேவா..! டேய் அவனுக்கு எவ்ளோ பெரிய கவுரவ கொறச்சலான விஷயத்தை பண்ணிப்புட்டு வந்துட்டு இவ்வளவு அசால்ட்டா பேசுற?
“நான் தான் அவன் விரலை வெட்டுனேன் அப்படின்னு முதல்ல அவன் வாயைத் திறந்து சொல்லணும்ல” என்றான் கருப்பன்.
“டேய் மச்சான் உன் பேச்சை சரியில்லடா, கவுன்சிலரோட விரல வெட்டுற அளவுக்கு நீ போயிருக்கன்னா அதுல அவன் ஊர் காரய்ங்கல ஏமாத்துனது மட்டும் காரணம் இல்ல போலியே, வேற ஏதோ வில்லங்கம் இருக்கனுமே! என்ன ஆச்சுடா மச்சான்” என்று கேட்டான் தர்மன்.
அந்த நேரம் கவுன்சிலர் செல்வம் வீட்டினை நோக்கி சென்றார் பொன்னுத்தாயி.
கவுன்சிலர் கையில் கட்டுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தான்.
அப்பொழுது பொண்ணுதாயை பார்த்த கவுன்சிலரின் மனைவியோ “இந்தா பொண்ணு தாயி உன் மவங்காரன் பண்ணி வச்சிருக்க வேலை பாத்தியா? இப்பிடி மனுஷனோட கட்ட விரலை போய் வெட்டி இருக்கியான் பாரு? உன் மவனெல்லாம் விளங்குவானா!” என்று கவுன்சிலரின் மனைவி உமா கருப்பனை சாபமிட வாய் திறக்க,
அதற்குள் அவளை ஒரு அதட்டல் போட்டு அடக்கினார் கவுன்சிலர்.
“என்னையா நீயி என்ன அடக்குற! அந்த கருப்பன் உன் விரலை வெட்டி இருக்கியான். உனக்கு என்ன வயசா திரும்புது இதுக்கப்புறம் அந்த விரல் சேருமோ! என்னமோ? இனிமே கட்ட விர இல்லாம நீ என்ன வேலை செஞ்சுருவ, அந்த எடுப்பட்ட பயல பெத்தவ வந்து இருக்கான்னு நான் அவன பத்தி பேசிட்டு இருந்தா நீ ஏன் என்னை வந்து அதட்டுற?” என்று கவுன்சிலரின் மனைவி கேட்டதற்கு,
“ஏய் உமா உள்ள போ நான் பேசுகிறேன்” என்று தன் மனைவியை அடக்கி அனுப்பி வைத்தவன் பொண்ணுத்தாயை பார்க்க,
அவரோ, “எய்யா செல்வம் என் மகன் ஏதோ தெரியாம செஞ்சுபுட்டியான் போலீஸ் கேஸ் எதுவும் கொடுத்துடாதயா” என்று கெஞ்சினார்.
அதற்கு கவுன்சிலரோ மனதிற்குள் ஒன்றை நினைத்து கொண்டு தன்னை சுற்றி இருந்த ஆட்களின் முன்பு தனது கெத்தை விட்டு தராமல் “போத்தா போ முதல்ல இடத்தை காலி பண்ணு” என்று கூறி பொண்ணு தாயை அனுப்பி வைத்தான்.
அடுத்த படியாக அடுத்தடுத்து வரிசையாக கவுன்சிலர் வீட்டை சூழ்ந்த காவல் அதிகாரிகள் கவுன்சிலரிடம் அவனின் கை விரல் அறுபட்டதைப் பற்றி கேட்டனர்.
அதற்கு கவுன்சிலரோ வாழை தோப்பில் தார் வெட்டும் பொழுது தெரியாமல் விரலை வெட்டிக் கொண்டேன் என்று பொய் சொல்லி சமாளித்தான்.
அதனை கேட்ட அருகில் நின்றிருந்த அவனின் அல்லக்கைகள் குழம்பி போய் அவனை புரியாமல் பார்த்தனர். காவல் அதிகாரியும் அவன் அவ்வாறு கூறவும் அதற்கு மேல் எதுவும் விசாரிக்காது அங்கிருந்து சென்று விட்டனர்.
கவுன்சிலர் அங்கிருந்த நபர்களை பார்த்து “என்னடா அப்படி முழிக்கிறீங்க?” என்று கேட்க,
அதற்கு அவர்களோ “அண்ணே அந்த கருப்பன் தானண்ணே உன் விரலை வெட்டுனியான். அது தான் ஊருக்கே தெரியுமே! அப்படி இருக்க நீ ஏன் போலீஸ் கிட்ட உண்மைய சொல்லல” என்று கேட்டனர்.
அதற்கு கவுன்சிலரோ நேற்றைய பொழுது நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தான்.
அதே சமயம் கருப்பனும் தர்மனிடம் அதை தான் சொல்லி கொண்டிருந்தான்.
நேற்றைய பொழுது கவுன்சிலர் பம்மி பம்மி கருப்பனிடம் வந்தான்.
கருப்பன் மாலைப்பொழுது வரப்பில் பாய்ச்சி கொண்டிருந்த நீரை வேறு வரப்பிற்கு மண்ணை வெட்டி மாற்றி கொண்டு இருந்தான்.
அந்த நேரம் அங்கு வந்த கவுன்சிலர்
‘கருப்பா நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணுமே!” என்று கேட்டான்.
அவனின் மனதில் ஊர் விஷயத்தால் ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் கூட, அவன் தன்னிடம் ஏதோ விஷயம் பேச வருகிறான் போலும் என்று நினைத்த கருப்பன் “ம்ம்” என்றான்.
“இல்ல கருப்பா நீ தான் இந்த கிராமத்திலேயே இயற்கையா விவசாயம் பண்ற, அது சுத்து பட்டு எல்லா கிராமத்துக்கும் தெரியும்.
அதனால தோட்டக்கலை ஆஃபீஸர் தோட்டத்து விளைச்சல செக் பண்ணு வந்தா கூட உன்ன பத்தி தெரிஞ்சதுனால உன் காட்டப்பக்கம் வந்து எதுவும் விசாரிக்க மாட்டாய்ங்க. அதனால எனக்கு ஒரு உதவி பண்ணி தரியா? என்று கேட்டான்.
போலீஸ்காரன், செக் பண்ண மாட்டான், என்று கூறியதும் கருப்பனின் புருவம் யோசனையில் சுருங்கியது.
“பெருசா ஒன்னும் இல்ல கருப்பா உன்னுடைய இந்த இரண்டு ஏக்கர்ல ஒரு அரை ஏக்கர் மட்டும் கஞ்சா செடி வளர்த்து தரியா?” என்று கேட்டான் கவுன்சிலர்.
அவன் அவ்வாறு கேட்டதற்கு கருப்பன் அவனிடம் அமைதியான குரலில் பேசி முடியாது என்று மறுத்து விட்டான். அதன் பின் கவுன்சிலரும் வேறு நில தாரரிடம் நாளை பொழுது பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அவன் சென்றதும் போகும் அவனையே கண்களில் அனல் பறக்க பார்த்துக் கொண்டு நின்று இருந்த கருப்பனின் மனதிலோ,
“ஊர்காரய்ங்கள ஏமாத்தி ஓட்ட வாங்கி அது இதுன்னு காச புடுங்கி ஒவ்வொருத்தன் வயித்துல அடிச்சது பத்தாதுன்னு, நிலத்தை உசுரா நினைக்கிற என்கிட்டயே உன்னுடைய எச்சத்தனத்தை விதைக்க வரியா? அந்த அளவுக்கு அடுத்தவன் உசுர குடுச்சு நீ சம்பாதிக்கணுமா உனக்கு இருக்குடா மவனே! என்று நினைத்து கொண்டவன்,
இன்று அதிகாலையில் அவன் தனது சின்ன வீட்டிற்கு சென்று அந்த பெண்மணியோடு சல்லாபித்துக் கொண்டிருந்த நேரத்தில் யாரும் அறியாமல் வீட்டிற்குள் நுழைந்தவன் கவுன்சிலரின் அறை கதவை தட்ட,
கவுன்சிலர் கதவைத் திறந்தவுடன் அவனை கீழே தள்ளி தன் ஆத்திரம் தீரும் மட்டும் அவனை அடி உதைத்தவன் அவனின் கட்டை விரலை வெட்டி விட்டான்.
இதெல்லாம் சரி, போலீஸ் கேட்டப்போ கவுன்சிலர் ஏன் உண்மைய சொல்லல அதுக்கு என்ன காரணமா இருக்கும்?
கவுன்சிலர் தோட்டத்துல இத பேசுனப்போ ஏன் கருப்பன் அமைதியா பதில் சொன்னான்?
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
கமெண்ட் ப்ளீஸ்
நான் இந்த கதைய வெற்றி கரமா கொண்டு போறதுக்கு கதை குறித்த உங்களுடைய கருத்து ரொம்ப முக்கியம் மக்களே!
கமெண்ட் ப்ளீஸ் 🙏🏻😊
error: Content is protected !!
உண்மையில் கருப்பன் , தர்மன் இருவரும் விவாதித்த விஷயங்கள் நிச்சியம் ஏற்று கொள்ள கூடியவை…
விவசாயத்தில் இயற்க்கை மற்றும் செயற்கை உரங்களின் செயல்கள் ,அதனால் ஏற்படும் நன்மை , தீமை இரண்டையும் நண்பர்கள் மூலமாக அருமையாக எடுத்துரைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏..
விவசாயிகள் செயற்கை உரத்தை நாடுவதற்கும் மக்களாகிய நாம் தான் காரனம்.நம் கண்ணோட்டம் தான் காரணம் என்று…
நாட்டில் நடைபெறும் இயல்பை சரியாக, தெளிவாக கூரிய ஆசிரியருக்கு நன்றிகள்🙏🙏🙏…
கருப்பன் அந்த கவுன்சிலர் கையை வெட்டியது தவறே இல்லை..இவனை போல் ஒரு சிலரின் சுயநலமாக பண வெறியால் இன்றைய சமுதாயம் சீர் அழிந்து போகிறது…
நிச்சியம் கருப்பணிடம் அந்த கவுன்சிலர்களுக்கு எதிரான ஆதாரம் சிக்கி இருக்கும் ..
அதான் ஆளு பம்முறான்😀😀😀😘
Today episode very nice and usefull message 🙏🙏🙏🙏👏👏👏
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻🫂
Super super sisy ma… Dharman and karuppan discussion super…🥰🥰😍😍😍😍😍