Skip to content
Post Views: 2,178
கருப்பன் ஆட்டம் 30
வீட்டிற்கு வெளியே பாம்பினை பார்த்த மலர்விழி வீட்டிற்குள் ஓடி வந்து பயத்தில் கருப்பனை இறுக அணைத்து பிதற்றிக் கொண்டிருந்தாள்.
Advertisement
கருப்பன் முதலில் அவளிடம் “பயப்படாத மலரு நான் இருக்கேன்..!” என்று தைரியம் கூறி தேற்ற நினைத்தவனால் ஒரு கட்டத்திற்கு மேல் பெண்ணவளின் அந்த தொடுகை ஆணவனின் தேக சூட்டை அதிகரித்தது.
அதனை உணராத மலர்விழியோ முகம் முழுவதும் பயத்தில் முத்து முத்தாக வியர்த்திருக்க, வாசல் கதவையே பார்த்து இருந்தாள்.
Advertisement
Advertisement
கருப்பனின் பார்வை பெண்ணவளின முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளியை ஆராய்ந்தது.
அவளின் நெற்றியில் தோன்றிய வியர்வை துளி பெண்ணவளின் கண் கன்னம் நாடியை கடந்து பெண்ணவளின் கழுத்து வளைவில் பயணித்து அவளின் சேலை மாராப்புக்குள் சென்றதை பார்த்து எச்சில் கூட்டி விளங்கினான் கருப்பன்.
Advertisement
மலர்விழி பயத்தில் வாசலில் பார்வை பதித்து இருந்ததால் அவள் இவற்றை கவனிக்காது விட்டிருந்தாள்.
எச்சிலை கூட்டி விளங்கியன் பெண்ணவளின் அள்ள அள்ள குறையாத அங்க வளைவுகள்
தன் மேனியில் உரசுவதை கவனித்த கருப்பனின் உடல், சூட்டைத் தாண்டி இப்பொழுது மோகத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
பின் மலர் கருப்பனின் புறம் திரும்பி “மாமா என்ன சும்மா உக்காந்துட்டு இருக்கீங்க…! வெளிய போயி அந்த பாம்ப பத்தி விடுங்க மாமா …!” என்று சொன்னாள்.
“பத்தி தான…, விட்டுட்டா போச்சு…!” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கூறிவிட்டு தன் மடி மீது அமர்ந்து இருந்த அவளின் இடையை அழுந்த பற்றி கட்டிலில் அமர வைத்தவன் எழுந்து கதவு வரை சென்று தலையை மட்டும் நீட்டி பார்த்தான்.
அந்த பாம்போ மலர் கத்திய கத்தலில் எப்பொழுதோ சென்று விட்டிருந்தது.
‘நீ வந்த வேலைய சிறப்பா செஞ்சிட்ட அதுவரைக்கும் நன்றி…!’ என்று சென்றுவிட்ட பாம்பை நினைத்து மனதிற்குள் நன்றி கூறிக் கொண்டவன் கதவை அடைத்து தாழிட்டான்.
அதனைப் பார்த்த மலர்விழியோ எழுந்து அவனின் அருகில் வந்தவள் “என்ன ஆச்சு மாமா பாம்பு போயிடுச்சா…! இப்ப எதுக்கு கதவை தாப்பா போட்டீங்க….?”என்று கேட்டாள்.
“இப்போதைக்கு போயிடுச்சு…., ஆனா மறுபடியும் திரும்ப வந்துடுமே அதனாலதான் தாப்பா போட்டேன்” என்றான்.
“ஓஓ.. சரி மாமா…! மத்தியானத்துக்கு என்ன சாப்பாடு செய்யட்டும் மாமா…?” என்று கேட்டாள்.
“மத்தியானத்துக்கு சாப்பாடு எல்லாம் செய்ய வேண்டாம்…. செஞ்சு வச்சு சாப்பாடே இன்னும் சாப்பிடாம இருக்கு, அதை இப்ப மொத்தமா சாப்பிட்டு முடிச்சுடட்டுமா…!” என்று அவளை மேலிருந்து கீழாக பார்த்து கண்களால் பருகி கொண்டே இரட்டை அர்த்தத்தில் கேட்டான்.
அவன் கேட்டதன் அர்த்தம் புரியாமல் முதலில் முழித்தவள் பின் ஆணவனின் பார்வை சென்ற இடத்தை கவனித்தவள் பின்பு தான் அவன் கூறியதன் அர்த்தம் உணர்ந்தவலாக,
“மாமா பட்ட பகல்ல என்ன பேச்சு இது..! …நீ..ங்க ஒன்னும் சாப்பிட வேணாம் பேசாம போங்க மாமா…!” என்று கூறியவள் அவனின் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு கதவை திறக்க சென்றாள்.
அதற்கு விடாமல் தன் மார்பில் வைத்து தள்ளிய அவளின் கையை இறுக்கி பிடித்து தனந்தருகே இழுத்து பெண்ணவளை தனது கை வளைவுக்குள் கூட்டி வந்து, தன் வலியை கரம் கொண்டு அவளின் அங்கம் வளைவுகளை அளக்க ஆரம்பித்தவன், பின் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து தனக்குள் பற்றி எரிந்த மோகத் தீயை பெண்ணவளுக்கும் பகிர்ந்து அளித்து, அவளையும் மோகம் என்னும் கடலுக்குள் அழைத்து சென்றான்.
இருவரும் சேர்ந்து வேண்டி விரும்பியே அந்த கடலில் மூச்சு திணற திணற பயணித்தனர். அது பகல் நேரம் என்பதை கூட இருவரும் மறந்தவர்களாக, ஒருவர் உடலுக்குள் ஒருவர் உருகி கரைந்து மீண்டும் மீண்டும் தங்களின் இனிமையான நேரங்களை மேலும் இனிமை கூட்டி செலவழித்து ஆழ்கடலில் இருந்து கரை சேரும் எண்ணம் துளியும் இல்லாமல் பயணித்து கொண்டிருந்தனர்.
மீண்டும் மீண்டும் கூடிய களைப்பில் கருப்பனின் வெற்றுமார்பில் முகம் புதைத்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தால் மலர்விழி.
மாலை நேரமாக அந்த வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. முதலில் கண்விழித்த மலர்விழி தனது உடையை தேடிப் பிடித்து அணிந்து கொண்டு கருப்பனை எழுப்பியவள்
“மாமா யாரோ கதவு தட்டுறாங்க…!” என்றாள்.
“இந்த நேரத்துல யாரு…?” என்ற கருப்பன் எழுந்தவன் லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு சென்று கதவை திறந்தான்.
வாசலில் அன்றைய வேலை முடிந்து விட்டதாக வயலில் வேலை செய்த ஆள் வந்து கூறினார்.
அதனை கேட்டவன் “முடுஞ்சதா… சரி நாளைக்கு காலையில வந்து எல்லாரும் சம்பளம் வாங்கிக்கோங்க…!” என்று கூறி அவர்களை வழி அனுப்பியவன் மீண்டும் கதவை தாழிட்டான்.
அதனைப் பார்த்து பதறியவள் “மாமா பொழுது போயிடுச்சு தள்ளுங்க நாங்க குளிக்க போறேன்…!” என்று அவள் கூறி அவனிடம் இருந்து தப்பிக்க பார்த்தாள்.
“இப்ப குளிச்சு மட்டும் என்னடி பண்ண போற…!” என்று கேட்டு அவளை அள்ளி வந்து கட்டிலில் கிடத்தியவன் மீண்டும் ஒரு முறை அவளுடன் இணைந்து ஒரு கூடலை கூடிக்களித்த பின்பு தான் அவளை விட்டான்.
மலர்விழி எழுந்து குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவள், வீட்டில் இருந்த பாலை வைத்து தனக்கும் கருப்பனுக்குமான டீயை போட்டு எடுத்து வந்து அவனின் கையில் கொடுத்தாள்.
அதனை வாங்கிக் கொண்ட கருப்பன் அவளை பார்த்து டீயோடு சேர்த்து அவளையும் கண்களால் பருகி கொண்டிருந்தான்.
அவனின் கண்களில் தெரிந்த அந்த ஊடுருவும் பார்வையின் அர்த்தம் உணர்ந்த மலர்விழி “மாமா உங்க கண்ணு இருக்கே கண்ணு…, அதை மட்டும் தனியா பேத்து எடுத்துடட்டுமா…?” என்றாள்.
“ஏன்டி இப்படி சொல்ற…?”
“பின்ன, பாருங்க உங்க கண்ணு கள்ளத்தனமா எங்கெங்கெல்லாம் பாக்குதுன்னு….!” என்று கூறினாள்.
“ஓஹோ… அப்படி சொல்றியா….? நான் எதுக்குடி கள்ளத்தனமா பாக்கணும்…? இது எல்லாமே என்னோடது. நான் சுதந்திரமாவே பாத்துட்டு போறேனே…!” என்ற கருப்பனை அதற்கு மேலும் வாய் திறக்க விடாமல் அவனின் வாயில் தனது கை கொண்டு மூடியவள்,
“மாமா இதுக்கப்புறம் இது மாதிரி ஏதாவது பேசினீங்க…., அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன்….!” என்றவள் இரவு உணவிற்கு வேண்டிய வேலைகளை பார்க்கச் சென்றாள்.
மாலை நேரமாக கவுன்சிலர் செல்வம் அய்யனாரை வீட்டிற்கு வருமாறு அழைத்து இருந்தான்.
அய்யனாரும் செல்வம் வீட்டிற்கு வந்தவன் அவனிடம் என்னவென்று கேட்டான்.
அதற்கு செல்வமோ.., அய்யனாரிடம் “என்ன அய்யனாரு கருப்பன்
ஊருக்குள்ள புது பொண்டாட்டியோட ரொம்ப கெத்தா திரியுறான் போலையே…!
ஊர் பஞ்சாயத்துல, எல்லாத்தையும் கூட்டி அந்த புள்ளைய ஊற விட்டு ஒதுக்க சொல்லிட்டு பேசிட்டு இருக்காய்ங்க, அதுக்குள்ள இவன் பாட்டுக்கு அந்த புள்ள கழுத்துல தாலிய கட்டி புட்டியான்…
இவ்வளவு திமிரா தாட்டியமா திரியலாமா…? இல்ல நம்ம தான் அதுக்கு எல்லாம் விடலாமா…?” என்று கேட்டான் செல்வம்.
“இதுல நீங்க இப்பிடி தப்பா நெனைக்க என்ன இருக்குண்ணே…! அந்த புள்ளைக்கும் அவன புடிச்சிருக்கு.., அவனுக்கும் அந்த புள்ளய புடிச்சிருக்கு ரெண்டு பேரும் விரும்பிட்டாங்க, இப்ப கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க…., இதுல தப்பா நினைக்கிறதுக்கு ஒன்னும் இல்லையேண்ணே….!” என்றான் அய்யனார்.
செல்வம் மனதிற்குள்ளோ ‘என்ன இவன் பேச்சே சரியில்லயே…, என்னைக்குமே நம்ம சொன்னா சரி சரி மண்டயாட்றவன் இன்னைக்கு நம்மகிட்டயே எதுத்து கேள்வி கேக்குறியான்…இது சரியில்லையே..!’என்று நினைத்துக் கொண்டவனாக,
“அட என்ன அய்யனாரு நீயி…, எப்படி அவன் அப்பிடி செய்யலாம்…! இந்த ஊருக்குள்ள தலைமைக்கு நான் இருக்கேன், தளபதிக்கு நீ இருக்க, அப்படி இருக்கும்போது எந்த காலத்துலயும் நம்மளுக்கு தொல்லையா வர இருக்குற, புதுசா மொளச்ச அந்த புளியங்கண்ட வேரோடு புடிங்கி எறியனும்ல….!” என்று கூறினான் செல்வம்.
அதனை கேட்டு அய்யனாருக்கோ ‘என்ன செல்வம் அண்ணே பேசுறது ஒன்னும் சரியில்லையே…! அவன் பண்ணது பெரிய கொலை குத்தமா என்ன…, இவ்வளவு பெரிய விஷயமா பேசுறாரு…!
அந்த அளவுக்கு ஒன்னும் இல்ல…! அப்படி இருக்கும்போது செல்வம் அண்ணே ஏன் இப்படி எல்லாம் பேசுது…?’ என்று நினைத்துக் கொண்டவனாக,
“சரிண்ணே இப்ப அவன என்ன பண்ணலாம்னு இருக்கீங்க….?” என்று கேட்டான்.
“அதுதான் அதுக்கு தான் அந்த பயல முடிச்சு விட்ரலாம்ன்னு பாத்தேன்”
“என்னண்ணே இதுக்கு முன்னாடி ஒரு தடவையும் அப்படித்தான் யோசிச்சிங்க, நானும் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுவுட்டேன்… இப்ப மறுபடியும் அவன முடிக்கணும்னு சொல்றீங்க….?”
“என்ன… அய்யனாரு… உன் பேச்சு ஒன்னும் சரியில்லையே…! ஒருவேளை அத்த மகன்னு அவன் மேல உனக்கு பாசம் வந்துருச்சோ…!”என்று செல்வம் கேட்டான்.
அந்த குத்தல் பேச்சு அய்யனாரின் அடி மனதில் புதைந்திருந்த ஈகோவை தட்டி எழுப்பியது. “அவன் மேல… எனக்காவது.. பாசமாவது… அண்ணே இதுக்கு மேல வேற எதுவும் சொல்லாதண்ணே….!” என்றான்.
“பின்ன என்ன அய்யனாரு சிறப்பு செஞ்சு உட்றுவோம்….! உன்னால முடியலன்னா கூட சொல்லுயா இருக்கவே இருக்கானுங்க நம்ம பசங்க….!” என்று கூறினான் செல்வம்.
அதனை கேட்ட அய்யனார் மனதிற்குள் எதனையோ எண்ணி கணக்கு போட்டுக் கொண்டவனாக, “சரிண்ணே நீ என்ன செய்யணும்னு சொல்லுண்ணே செஞ்சுவிட்ருவோம்…!” என்றான்.
“அந்தப் புள்ள ஊர்ல இருந்து வந்து மாச கணக்கு ஆகுது… அந்த புள்ளைய தேடி எவனோ ஒருத்தன் ஊருக்குள்ள வந்து விசாரிச்சு இருக்கியான்….!”
“என்னண்ணே சொல்ற..! ஊருக்குள்ள வந்து விசாரிச்சானா…! யாருண்ணே அது….!”
“எவனோ பேரு கூட மாதேஷாம். உன் வீட்டு அட்ரஸ் கேட்டு தான் விசாரிச்சு இருக்கியான். உன் வீட்டு விலாசத்தை பார்த்ததும் நம்ம பயலுக தான் சுதாரிச்சு அப்படி எல்லாம் யாரும் இல்லைன்னு சொல்லி துரத்தி விட்டு இருக்காய்ங்க.
ஆனா அப்ப கூட கொஞ்சோண்டு இருந்த மூளையை யோசிச்சு அந்த பய போன் நம்பர் வாங்கி வச்சிருக்காய்ங்க…,
நேத்து கருப்பன் அவ இஷ்டத்துக்கு அந்த புள்ள கழுத்துல தாலிய கட்டவும் நான் அந்த பயலுக்கு போன போட்டு இந்த மாதிரி உனக்கு கல்யாணம் நடக்க இருந்த அந்த புள்ளய இங்க ஒருத்தன் வலுக்கட்டையாம கல்யாணம் பண்ணிக்கிட்டியான்னு சொல்லி இருக்கேன்.
அந்த பய எங்கேயோ வெளிநாட்டுல இருந்தானாம் நான் போன் போட்டதும் உடனே அங்க இருந்து கெளம்பிட்டானாம்….!
இன்னும் செத்த நேரத்துல வந்துருவியான்.. வந்து அந்த புள்ளைய கூட்டிட்டு போறானாம்….! அதுக்காக தான் நானும் அப்பயில இருந்து காத்துட்டு இருக்கேன்.
நீயும் என் கூட இருந்தா எனக்கு கொஞ்சம் பக்கபலமா இருப்பேன்னு தான் உன்னையும் கூப்பிட்டேன்….!”என்றான் செல்வம்.
“ஐயோ ஏண்ணே அந்த புள்ள ஒன்னும் அந்த பையன் மேல விருப்பம் இல்லாமல்லாம் கல்யாணம் பண்ணிக்கல, அவன் ஒன்னும் அந்த புள்ள கழுத்துல வலுக்கட்டையாமா தாலி கட்டலயே….!
அவன் தாலி கட்டும் போது அந்த புள்ளைக்கு விருப்பம் இல்லாம இருந்துச்சுன்னா அவன் கன்னத்துலயே பளார்னு ஒரு அப்பு விட்டு தாலி புடுங்கி வீசிட்டு போயிருக்கணும்ல….!
ஆனா அந்த புள்ள அவன்கிட்ட தலை குனிஞ்சு தானே தாலி வாங்கி கிச்சு.., அப்படி இருக்கும்போது ஏண்ணே இப்படி எல்லாம்….?”
‘அட என்ன அய்யனாரு நீ… இப்ப வரவர உன் பேச்சை சரியில்லையே நான் எது சொன்னாலும் அந்த கருப்பனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தான் நீ பேசுற…!” என்றான் செல்வம்.
“ஐயோ அண்ணே அப்படியெல்லாம் ஒன்னும் இல்லண்ணே…! என் மனசுல நியாயம்னு பட்டத சொன்னேன் அவ்வளவுதான்”
“என்ன உன் நியாயமோ…! என்னைக்குமே அந்த கருப்பன் உனக்கும் எனக்கும் எதிரி அதை மட்டும் நீ மறந்துறாத அய்யனாரு…!” என்றான் செல்வம்.
செல்வம் எதிர்பார்த்து காத்திருந்ததைப் போலவே, சிறிது நேரத்தில் மாதேஷும், மலரின் அம்மா அதாவது கருப்பனின் அத்தையான தேவி அவரின் கணவர் நடேசன் மற்றும் கருப்பனின் மொத்த வெறுப்பின் உருவான அவனின் தங்கை மீனாவும் ஒரே காரில் வந்து இறங்கினர்.
இவர்களை சந்தித்த கருப்பன் இனி என்ன செய்யப் போகிறான்…? என்பதை அடுத்து வரும் கதைகளில் காண்போம்….!
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
error: Content is protected !!