Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 20 2

 உலகநாதன் முடிவே பண்ணிவிட்டார் ரதிதேவியை  தவிர வேற யாரையும் திருமணம் பண்ணப்  போவதில்லை என்று..
 சுரேஷ் தான் உலகநாதனை  கிண்டல் பண்ணிக் கொண்டு  இருந்தான்.


Advertisement

” டேய் ஏன்டா இப்படி பாக்குற  வேற யாராவது பார்த்தா  பிரச்சனை ஆகிட போகுது” என்று..

Advertisement

 ஏனென்றால் உலகநாதன் ரதிதேவியை ரசனையோடு காதல் பார்வை பார்க்க,, அவரின் பார்வை  அனைவருக்கும் தெரியும்படி இருக்க நண்பனை  தோளில் தட்டி சிரித்துக் கொண்டிருந்தார்..

Advertisement

 “டேய் போடா டிஸ்டர்ப் பண்ணாத” என்ற  உலகநாதன் ரதிதேவியின்  பின்   தொடர்ந்தபடியே,,..

Advertisement

 “இவன் இன்னைக்கு அடி வாங்கி கொடுக்காமல் போக மாட்டான் போலயே,, டேய் இங்கே இருந்து பாருடா” என்று உலகநாதனை  பிடித்து வைத்துக் கொண்டார்..
 “டேய் உண்மையிலேயே சொல்லணும்னா பேரழகிய இருக்காடா,,  என் தேவதைடா அவ. நான்  இப்படி எல்லாம் ஒரு பொண்ணை பார்த்து ரசிச்சது இல்ல.. எவ்வளவு  அழகா இருக்கா,, என்னடா பண்றது என் மனசு அவ பின்னாடியே போகுது” என்று உலகநாதன் புலம்ப…
 “டேய் கல்யாணம்  முடிஞ்ச உடனே உன் ரதியை   உட்கார வச்சு  பார்த்துட்டே இரு, இப்போ  கம்முன்னு இருடா” என்றார்.
 உலகநாதன் ரதிதேவியின் அழகை பார்த்து பாராட்டி, பூரித்து போய் பேசிக் கொண்டிருக்க..
அங்கே சவித்தா  “ரதிக்கா  உன்னை ஒருத்தர் பார்த்து சைட் அடிக்கிறார்” என்று சவிதா ரதியின் காதில் சொல்ல…
” ஏய் வாய மூடிட்டு வாளா,  யாரு பார்த்தா நமக்கு என்ன” என்றாள் ரதி..
” அக்கா அவர் பார்க்க   புதுசா இருக்காரு நம்ம ஊர் மாதிரியும் தெரியல,, வெளியூர்க்காரர் மாதிரி தெரியுது,,  நல்ல கருப்பா, வளர்த்தியா ரஜினிகாந்த் மாதிரி  சூப்பரா இருக்காரு பாரேன்” என்றாள் சவிதா…
 “சவி நீ அடி வாங்க போற,ரோட்டில் யாரு  யாரை பார்த்தா உனக்கு என்ன, வாய மூடிட்டு வாளா பின்னாடி “என்றாள்.
 “நீ  ஏன் ரதிக்கா இப்படி இருக்க,, அவர் உன்னை மட்டும்தான், ஆசையா  பார்க்கிறார் பாரேன்” என்று மீண்டும் சொல்ல ..
 “நீ ஏன்ளா  ஆம்பள பையனை எல்லாம் ஏற்றெடுத்து பார்க்கிற,  குனிஞ்சுகிட்டு  ரோட்ட பார்த்து நட”…
 “உன்ன மாதிரியெல்லாம் நான் குனிஞ்சிட்டே போக முடியாது, நாலா  பக்கமும்  வேடிக்கை பார்த்துட்டு தான் வருவேன்,, அப்போ தானே யாரும் நம்மள பாக்குறன்னு நம்மளுக்கு  தெரியும்”..
 “அப்போ  அந்த ரஜினிகாந்தை நீயே பாரு, என்னை விடு “என்று கூறி ரதிதேவி வேகமாக நடக்க.
 “அத்தை பணியாரம்” என்று அக்னி கேட்க..
 “பணியாரம் வேணுமா அப்புகுட்டி?” என்று  பணியார கடையில்  நின்று அக்னிக்கு  பணியாரம் வாங்கியவள்..
” ஏளா உனக்கு  பணியாரம் வேணுமா? ”  என்று சவியை   ரதி பார்த்து கேட்க..
 அவளோ உலகநாதன்  யாரை பார்க்கிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்..
“ஏளா  உன்னைத்தான் கேட்கிறேன், பணியாரம் வேணுமா, ஏன் பின்னாடி பாக்குற?” என்று சவிதாவை   ஒரு இடி இடிக்க,.
” எனக்கு பணியாரம் வேண்டாம் நீயும் உன் அப்புகுட்டியும்  பண்ணியாரத்தை  வாங்கி சாப்பிடுங்க” என்றாள்…
” உனக்கு ஏத்தம்  கூடி போச்சு, இரு குரு சித்தப்பா கிட்ட சொல்லி உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்றேன்”..
 “ஆத்தா ரதிதேவி நான் யாரையும் பாக்கல என் அப்பா கிட்ட சொல்லி என் ஜோலியை முடித்து விடாதே” என்றவள்.. உலகநாதனை  பார்ப்பதை தவிர்த்து தோழிகள்  இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்..
 உலகநாதன் சிறிது தூரம் ரதிதேவியின் பின்னாடி சென்று அவளை ஆசை தீர பார்த்து விட்டே வந்தார்..
 ரதிதேவியை அவருக்கு மிகவும் பிடித்தது.. அவளின் அமைதியான முகம்,  நான் அழகி என்ற எந்த திமிர் கொஞ்சம் கூட இல்லை, அவள் நிதானமான பேச்சு, பார்வை,  நடந்து போகும் விதம்,,.
அதுவும் அவள் அக்னியிடம் தாய் போல கவனித்து பணியாரம் வாங்கி,, ஊட்டி விட்டதையும்   பார்த்தவருக்கு  மிகவும் பிடித்து போனது..
 மறுநாள் காலையிலயே பள்ளிக்கூடம் வாசலிலே உலகநாதன்  வந்து,,  ரதிதேவியை பார்க்க நிற்க..
 ரவிதேவியை  அவள் சகோதரர்  ஞானபிரகாஷ் கொண்டு வந்து ஸ்கூலில் விட,, அன்று அக்னி  பள்ளிக்கூடம் வரவில்லை  அவனுக்கு உடம்பு முடியவில்லை என்று அவன் வராமல் இருக்க..
 உலகநாதன் காலையிலே ரதிதேவியை  பார்க்க வந்திருக்கா.. அவளோ டூவீலரில் பள்ளி வாசலில்  வந்து இறங்கி அப்படியே பள்ளிக்கூடத்திற்க்குள்  சென்று விட..
 உலகநாதன் சரியாகவே ரதிதேவியை  பார்க்கவில்லை  என்று  வருத்தத்தோடு நின்றிருக்க…
 சவிதா வரும்போதே  உலகநாதனை பார்த்து முறைத்தபடியே  தான் ஸ்கூலுக்குள் சென்றாள்..
 மதிய உணவு வேளையில்  சவித்தா ரதியிடம் வந்து அமர்ந்து கொண்டே மெல்ல “ரதிக்கா நேத்து வந்த அந்த கருப்பு ரஜினிகாந்த், பைக் ஹீரோ காலையிலே நம்ம பள்ளி கூட வாசலில் வந்திருந்தார் நீ பார்த்தியா”?..என்றாள்..
” ஏளா நீ சும்மாவே  இருக்க மாட்டியா, யாரு வந்து,   நம்ம ஸ்கூலுக்கு வாசலில் நின்னா நமக்கு என்ன?  அவங்க சொந்தக்காரங்க  பிள்ளைகளை ஸ்கூல்ல  விட கூட  வந்திருக்கலாம்,,  தெரியாம யாரை பத்தியும் தப்பா பேசாத” என்றாள் ரதி…
 “நான் கண்டிப்பா அடிச்சு சொல்றேன் அந்த ரஜினிகாந்த் உன்னை தேடி தான் வந்திருக்கார் எனக்கு தெரியும்” என்றாள் சவிதா..
 “சவித்தா தேவை இல்லாம பிரச்சனையை  இழுக்காதே,, இன்னும் ரெண்டு நாள்ல என்னை பொண்ணு பார்க்க வர்றதா  அப்பா  சொல்லிக்கிட்டு இருந்தாங்க,, ஊர்ல இருந்து அண்ணன், அண்ணி  எல்லாம் வராங்க,, இந்த நேரத்துல இப்படி  எல்லாம் பேசாத..
 ஆம்பள பசங்க பொம்பள புள்ளையை  பார்க்க தான் செய்வாங்க, அதுக்கு நம்ம அவன்  என்னை பாக்குறன்னு நாமா திரும்பி பார்த்தா பிரச்சனை தான் வரும்..
நம்மள பார்த்தா பாத்துட்டு  போகட்டுமுன்னு, நம்ம  வேலையை பார்த்துகிட்டு போகனும், இல்லையின்னா நம்ம குடும்பத்துக்கு தான் அவமானம், நம்மல பெத்தவங்க நம்ம மேல நம்பிக்கை வச்சு தானே வேலைக்கு அனுப்புறாங்க, நீயேன்  கண்ட வங்கலை  பத்தி பேசி உன்  மரியாதையை கெடுத்துக்காத,,, சும்மா  ரஜினிகாந்த், கமலஹாசன்னு சொல்லிட்டு திரியாத, முதல்ல ஆம்பள பையனுங்கல பாக்குறத நிப்பாட்டு” என்றாள் ரதி கோபமாக..
 “சரி நான் யாரையும் பாக்கல” என்று அவள் ஒரு மாறி பீல் பண்ணி பேசியது ரதி சிரிப்பு வர. தோழிகள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
 சாயங்காலம் பள்ளி முடிந்ததும் ரதியும் சவிதாவும் ஸ்கூலை விட்டு வெளியே வர,..
 உலகநாதன் பள்ளி எதிரில் நின்று ரதியை  பார்த்த வாறு நிற்க.
 “ரதிக்கா அங்க பாரு, ரஜினிகாந்த் நிற்கிறார்” என்றாள் சவிதா.
 இவளை திருத்தவே முடியாது என்று நினைத்த  ரதி,, “சவி வாய மூடிட்டு பின்னாடி வா” என்று     அவளை மிரட்டி  இழுத்துக் கொண்டு சென்றாள்..
 உலகநாதனுக்கு சிரிப்பு, ரதியின்  பக்கத்தில் உள்ள பெண் தன்னை பார்த்து ரதியிடம் சொல்வதும், அதற்கு ரதி அவளை திட்டி இழுத்து  செல்வதை பார்த்தவருக்கு ரதியின் மேல் இன்னும் ஆர்வம் தோன்றியது..
 இன்று  ரதி தேவி மெருன்  வண்ண காட்டன் புடவையில் அழகாக இருந்தாள், அந்த மெருன் கலர் ரவிதேவியின்  கலரை  இன்னும் எடுத்துக்காட்ட அவளிடம் பேச வேண்டும் என்று ஆசை வர,, ரதியின் பின்னாடி சென்றார் உலகநாதன்…
 ரதி சவிதாவின் கைய பிடித்து இழுத்துச் செல்ல,,
” ரதிக்கா நான் உண்மையா தான் சொல்றேன் அவர் உன்னைத்தான் பார்க்கிறேன் அவர் கண்ணு உன்னை மட்டும்தான் பார்க்குது” என்று மறுபடியும் அவள்  உலகநாதனை திரும்பிப் பார்த்து சொல்ல..
 உலகநாதன் பின்னாடி வருவது தெரிய,, “அக்கா அவர் உன் பின்னாடி தான் ப்பாலோ பண்ணிட்டு வர்றார்” என்றாள்…
 “ஏண்டி இம்சை வாய் வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா வாய மூடிட்டு சும்மா வா” என்று ரதி திரும்பி  பின்னாடி பார்க்க உலகநாதன் அவளை பார்த்து படி சிரித்தபடி நிற்க..
 யாருடா இந்த  ஆறு அடிக்கு மேல் இருக்கும்  மனிதர், இவர் தான் சவித்தா சொன்னா ரஜினிகாந்தோ என்று  உலகநாதனை ஒரு நிமிடம் பார்த்தாள்.. சவித்தா  ரதியின்  காதில் “பாரு  நான் சொன்ன ரஜினிகாந்த், உன் பின்னாடி வர்ராங்க”.. என்று கூற..
“நீ சொன்னா ஆளு இவர் தானா?”..
“அதே ரஜினிகாந்த் தான்” என்று சவி கூற..
ரதிக்கு கோபம் யார் இவர் ஏன்  என் பின்னாடி வருகிறார் என்று பார்த்தவள்…
” என்ன வேணும்,  ஏன் நீங்க எங்க பின்னாடி வர்ரீங்க?” என்று ரதி  கேட்கவும்..
 உலகநாதனுக்கு ரதி திரும்பி பார்த்து  பேசியதும்  என்ன பேசுவது என்று தெரியாமல்..
 “உங்க ஸ்கூல பத்தி விவரம் வேண்டும்” என்றார்..
 “என்ன விவரம் வேண்டும்” என்று ரதி கேட்க..
“என் பையனை உங்க ஸ்கூல்ல சேர்க்கணும்” என்றார்..
 “ஏன் சார் ஸ்கூல்ல சேர்க்கணும்னு ஆபீஸ் ரூம் வந்து பேச வேண்டியதுதானே? ” ஏன் இப்படி ரோட்டில்  வர டீச்சர் கிட்ட விவரம் கேட்டுட்டு இருக்கீங்க”..என்றாள்..
 “இது நல்ல ஸ்கூல் தானே” என்று கேட்டார்  உலகநாதன்..
” ஆமாம் சார் ” நல்ல ஸ்கூல் தான்,,இங்கிலீஷ் மீடியம்,  தமிழ் மீடியம், என்று தனித்தனியா  இருக்கு சார்,, ” என்று கூற..
  “சரி நான் வர்ரேன்” என்று  உலகநாதன் கிளம்ப..
” எப்ப அட்மிஷன் போட வருவீங்க” என்றாள் ரதி..
 “இப்பதான் பொண்ணு பார்த்திருக்கிறேன் , இனிமே தான் பேசி முடிச்சு, கல்யாணம் பண்ணி,  குழந்தை வர்ரதுக்கு  இன்னும்  அஞ்சு வருஷம் ஆகும் ரதி”என்று சொல்லி கண்ணடித்து சிரிக்க..
 “என்ன?  என்றாள் புரியாமல்..
 சவிதா பின்னாடி  இருந்து கொண்டு சிரிக்க..
 “உங்க பிரண்டுக்கு புரியுது உங்களுக்கு தான் புரியல” என்றார் உலகநாதன்..
 ரதி புரியாமல் முளிக்க.
 “இன்னும் புரியலையா” என்றார் உலகநாதன்,,
 அவள்  “ஆமாம்” என்று தலையாட்ட..
 “உங்களுக்கு ஓகேன்னா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம், புள்ள பெத்து இதே ஸ்கூல்ல சேர்க்கலாமா, உனக்கு ஓகேவா ரதிதேவி'” என்று மெல்ல சிரித்தபடியே  கூற..
 “ஆவென்று” வாயை பிளந்தவள்..
பின்பு  “உங்ககிட்ட எல்லாம் பேசுனேன்  பாருங்க” என்றவள்.. தன்  தலையில் அடித்து கொள்ள…
” இப்ப வேண்டாம் ரதி  நாளைக்கு கூட ஓகே சொல்லு போதும்” என்று    சிரித்தபடியே பைக்கில் ஏறி சென்றார்  உலகநாதன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!