Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 34

கருப்பன் ஆட்டம் 

கருப்பனின் காரிகையவள் 💝



Advertisement

 பொன்னுத்தாயி கதவை அடைத்து சாத்திய பிறகு மலர்விழியின் தாய் தந்தையர் மற்றும் அண்ணன் அண்ணி என யாவரும் அங்கு நிற்காமல் ஊரை விட்டு கிளம்பினர்.

 மாதேஷிற்கு தான் இங்கு வந்து மலர்விழியே அழைத்துச் செல்லாமல் செல்வது பெரும் எரிச்சலாகிப் போனது. அவன் எவ்வாறேனும் மலர்விழியை கடத்தி சென்று விடலாம் என்று குரூரமாக ஒரு திட்டத்தை தீட்டினான்.

Advertisement

Advertisement

 அதனை தற்சமயம் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை நல்ல பிள்ளை போல் அமைதியாக ஊருக்கு கிளம்பி இருந்தான். 

 பொண்ணுத்தாயி தான் செய்து வைத்திருந்த சாம்பாரையும் அவரைக்காய் பொறியலையும் கொண்டுவந்து தன் மருமகளிடம் கொடுத்தவர் அதனை சாப்பிடுமாறு கூறினார்.

Advertisement

 அதற்கு மலர்விழியோ “இல்லத்த எனக்கு வேண்டாம்..!” என்று மறுத்து விட்டாள். பொண்ணுத்தாயி எத்தனை கூறியும் வேண்டவே வேண்டாம் என்றும் மறுத்துவிட்டாள்.

 அதன் பின்பு தானும் சாப்பிடாமல் சோற்றில் வடிச்ச.தண்ணீரை ஊற்றி மூடி வைத்துவிட்டு உறங்கிப் போனார் பொண்ணுத்தாயி.

 அறையினுள் படுத்திருந்த மலர்விழிக்குத்தான் மூன்றாம் நாளாக உறக்கம் எட்டாக் கனியாகி போனது. 

முதன்முதலாக கணவன் வீட்டில் தன்னவன் அறையில் படுத்து இருக்கிறாள்…, ஆனால் உடன் கணவன் இல்லை. காலையில் தன் கணவனிடம் கூடி கழித்த நிமிடங்கள் வேறு பெண்ணவளின் நினைவில் வந்து சென்றது.

அதனை நினைத்து துடித்தவளுக்கு “கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிற….? காலையில அவ்வளவு அருமையான பொழுதா இருந்துச்சே இப்போ இப்பிடி ஒரு நிலைமை நான் இத கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லையே கடவுளே…! 

அம்மாக்கும் அப்பாவுக்கும் புடிச்சிருந்து கல்யாணம் பண்ணி போனாங்க… ஆனா என் அண்ணி எப்படிப்பட்ட சூழ்நிலையில அண்ணன கல்யாணம் பண்ணாங்க…, ஆனா அது எதுவும் தெரியாம மாமா இப்புடி என்னைய ஒதுக்கி வச்சுட்டாரே….!

 எப்போ தான் என் மாமா என்ன புரிஞ்சுக்க போறாரோ….?”என்று நினைத்தவளுக்கு கண்ணீர் மட்டுமே துணையாகிப் போனது. 

 வீட்டின் கூடத்தில் படுத்திருந்த பொண்ணு தாய்க்கு தன் மருமகளின் விசும்பல் சத்தம் கேட்கவே செய்தது. 

 ஆனால் இப்பொழுது அவரால் என்ன செய்து விட முடியும் தன் மருமகளை பத்திரமாக பார்த்துக் கொள்வதை தவிர….! 

 இப்படியே சிறிது நாட்கள் சென்றால் இருவருக்கும் இடையில் உள்ள மன வருத்தங்கள் கண்டிப்பாக குறைந்து விடும் என்று எண்ணியே மலர்விழியை அவளின் தாய் தந்தையருடன் ஊருக்கு அனுப்பி வைக்காமல் தன்னுடனே தங்க வைத்துக் கொண்ட பொண்ணுத்தாயி. 

 நாட்கள் அதன் போக்கில் கடந்தது. மலர்விழி தன் வீட்டில் தான் இருக்கிறாள் என்பதை கருப்பனுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார் பொண்ணுதாயி.

அவனும் அவள் ஊரில் இல்லை என்பதை நினைத்து கொண்டு தனது ஆத்திரத்தை முன்னிலைப்படுத்தி நாட்களை கடத்தி கொண்டே இருந்தான். அப்படியாக மூன்று வாரங்கள் கழிந்து இருந்தது. 

 நாட்கள் செல்ல செல்ல மலர்விழி தன் கணவனை நினைத்து நினைத்து பசலை நோயில் வாடினாள்.

ஒரு நாள் ஆயினும் தன் கணவனுடன் ஆசை தீர கூடிய நிமிடங்கள் நினைவில் வந்து செல்லவே, அந்த நிலையில் இருந்து கடந்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.

என்னதான் விஷயம் கருப்பனுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாலும் பொண்ணுத்தாயிடம்,

 “இப்படியே எத்தனை நாளைக்கு உன் மகனையும் மருமகளையும் பிரிச்சு வச்சிருக்க போற…?” என்று ஊர் மக்கள் கேட்பது பொண்ணுத்தாய்க்கு சற்று சங்கடமான நிலையை உண்டு பண்ணியது.

 ஆனால் முன்பு போல் இல்லாமல் இப்பொழுது அவரிடம் கேள்வி கேட்கும் அனைவரிடமும் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றார் பொண்ணுத்தாயி. 

அன்று ஒரு நாள் செல்வத்திற்கு மாதேஷ் அழைத்திருந்தான்.

மாதேஷ் செல்வத்திடம் மலர்விழியை எப்படியேனும் கடத்தி கொடுத்தால் உனக்கு அதிகமாக தொகையை தருகிறேன் என்று அவனிடம் டீலிங் பேசினான்.

அவன் கூறிய தொகையின் மதிப்பு அதிகம் என்பதால் அதற்கு பேராசைப்பட்டு கொண்டு செல்வமோ தான் அதற்கு உடன்படுவதாக கூறினான்.

அப்படியாக அன்று ஒரு நாள் பொண்ணுத்தாய்க்கு முக்கியமான திருமண விசேஷம் இருப்பதாக கூறி பத்திரமாக இருக்குமாறு தன் மருமகளிடம் கூறியவர் கிளம்பிவிட்டார். 

 வெகு நாட்களாக கோபத்தில் தனது தோட்டத்து வீட்டிலேயே இருந்து கொண்டான் கருப்பன். 

 வேலைக்கு செல்லும் பொழுதும் வரும் பொழுதும் கருப்பனுக்கான உணவினை ஹோட்டலில் வாங்கி வந்து கொடுத்து செல்வான் தர்மன். 

 வெகு நாட்களாக ஹோட்டலில் சாப்பிட்டதால் கருப்பனுக்கு தன் அன்னையின் கைப்பக்குவதில் உணவினை சாப்பிட தோன்றவே தன் தாய் இருக்கும் வீட்டிற்கு வந்தான்.

 வீட்டின் கதவு திறந்து இருந்தது. பொண்ணுத்தாயி வீட்டில் இருந்தால் எப்பொழுதும் கதவு திறந்து இருப்பதால் கருப்பன் வீட்டினுள் நுழைந்தான்.

 வீட்டிற்குள் வந்தவன் கூடத்தில் தன் அன்னையைத் தேட, அவரோ அங்கு எங்கும் இல்லை. 

‘எங்க போயிருச்சு இந்த ஆத்தா…!’ என்று நினைத்துக் கொண்டவன் “ஏத்தா எங்க போயிட்ட…!” என்ற கேட்டான். அதற்கும் எந்த பதிலும் இல்லை. 

‘எங்க போச்சு அதுவும் கதவ தொறந்து போட்டுட்டு…’ என நினைத்தவனுக்கு பசி அதிகமாக வந்திருந்தது.

‘சரி எங்கேயாவது கடைக்கு போய் இருக்கும் நாம சாப்பிடுவோம்…!’ என்று நினைத்தவனாக கிச்சனுக்கு சென்று உணவினை தட்டில் பரிமாறிக் கொண்டிருந்தான்.

 மலர்விழி அறையில் உள்ள குளியலறையில் குளித்து ரவிக்கையும் உள்பாவாடையும் மட்டும் அணிந்தவள் சேலையை கையில் எடுத்துக் கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தவளுக்கு அடுப்படியில் யாரோ பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது.

‘அத்த மதியத்துக்கு மேல தானே வருவேன்னு சொன்னாங்க…! இந்நேரம் என்ன அடுப்படியில பாத்தரம் உருட்டுற சத்தம் கேக்குது…! ஒரு வேலை திருடன் எவனாவது வந்துட்டானோ…!’ என்று நினைத்தவளாக கையில் உள்ள சேலையை அரைக்குறையாக தன் மேலே போட்டு மூடி கொண்டவள் அறை கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.

தட்டில் உணவினை பரிமாறிக் கொண்ட கருப்பன் கூடத்தில் அமர்ந்து சாப்பிட துவங்கினான். அந்த நேரம் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த மலர்விழியை பார்த்ததும் அனைத்து கசங்க நினைவுகளும் கருப்பனின் மனத்திரையில் ஓடியது. 

அவளை பார்க்காது பார்வையை வேறு திசை திருப்பி தனது கை முஷ்டியை இருக்கியவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி விசிறி எரிந்தான். அதில் உள்ள உணவுகள் அனைத்தும் சிதறியது.

 அதனை பார்த்து பதறியவள் “மாமா என் மேல உள்ள கோவத்துல சாப்பாட்டு தட்ட ஏன் மாமா வீசி எரியுறீங்க…? நான் பண்ண தப்புக்கு சாப்பாடு என்ன மாமா பண்ணுச்சு…? சரி இருங்க நான் போய் உங்களுக்கு சாப்பாடு போட்டு வரேன்…!! என்று கூறியவள் அந்த தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். 

அவள் சமையலறைக்கும் நுழைந்ததும் வேறு எதுவும் பேசி அவளை காய படுத்த எண்ணாமல் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான் கருப்பன்.

 மாதேஷ் செல்வத்திடம் போனில் பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் செல்வத்திடம் “நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே…!” என்றான். 

“அட என்னங்க நீங்க.. தயங்கிட்டு இருக்கீங்க… என்னன்னு கேளுங்க….!” என்றான் செல்வம்.

 “இல்ல. …. அன்னைக்கு நானும் மலர் ஃபேமிலியும் உங்க ஊருக்கு வந்தோம்ல….!” 

“ஆமா…!”

 “அன்னைக்கு உங்க முகம் கொஞ்சம் பயந்த மாதிரியும், மீனா அக்கா அப்புறம் ராகுல் முகம் கொஞ்சம் கோவமா இருந்த மாதிரியும் இருந்துச்சே…, என்ன ஆச்சு….? எதுக்கு அவங்க ரெண்டு பேரும் உங்கள பாத்து மொறச்சாங்க…?” என்று கேட்டான்.

 அதற்கு செல்வமோ “இப்ப எதுக்குங்க அதை எல்லாம்….!’ என்று கேட்டான்.

 “சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க… இல்லனா ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா நீங்க சொல்லுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…!”என்று நீ சொல்ல வேண்டாம் ஆனால் சொல்ல வேண்டும் என்னும் விதமாக அவன் பேசிய வார்த்தை செல்வத்தை பேசத் தூண்டியது. 

 “அது ஒன்னும் இல்லங்க…, இத்தன வருசத்துக்கு அப்பறம் உன்கிட்ட மட்டும் சொல்றேன். ஆனா இதை நீங்க வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்…!! என்றான் செல்வம்.

 “சரி சொல்ல மாட்டேன்.. சொல்லுங்க…!” என்ற மாதேஷும் மிகத் தீவிரமாக அவன் கூற வருவதை கேட்டான்.

“அந்த கருப்பனோட அக்கா மீனா இருக்கால்ல…, அவ கல்யாணத்துக்கு முன்னாடி கொலுக்கு மொழுக்குன்னு மப்பும் மந்தாரையுமா கொப்பும் கொழையுமா அப்படியே பாக்க லட்டு மாதிரி இருப்பா…! எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்…..! அவளை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன்….! 

அதுக்குள்ள எங்க அப்பன் காரன் என் பொண்டாட்டிய புடிச்சு எனக்கு கட்டி வச்சுட்டியான். முடியாதுன்னு சொன்னா கட்சியில உன்னைய சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டான் .

என்ன தான் கல்யாணம் ஆகி பொண்டாட்டி வந்துட்டாலும் அவள அடைஞ்சே தீரனும்னு ஒரு வெறி எனக்குள்ள.இருந்துகிட்டே இருந்துச்சு. இப்போ உங்களுக்கு இருக்கே அந்த மாதிரி….!” என்றான் செல்வம்.

‘இவன் என்ன…, சந்தடி சாக்குல நம்மள இவன் கூட கூட்டு சேக்குறான்…!’ என்று நினைத்த மாதேஷ், இருந்தாலும் அவன் சொல்றதும் சரி தானே என்றும் நினைத்துக் கொண்டான். 

“சரி அப்புறம் என்ன ஆச்சு…?” என்று மாதேஷ் கேட்டான்.

“அப்புறம் என்ன நானும் அந்த மீனாவ எப்படியாவது ஒரு ரெண்டு நாளாவது ஆசை தீர அனுபவிக்கணும்னு நினைச்சேன். அதுக்கு கொஞ்ச நாள் தேவைப்படும்னு நானும் அவ பின்னாலயே சுத்திக்கிட்டு இருந்தேன்.

திடீர்னு பார்த்தா அவளுக்கு இந்த வீணா போன அய்யனார் கூட நிச்சயம் பண்ணிட்டாய்ங்க.., நானும் அந்த அய்யனார் கிட்ட என்னென்னமோ பேசி பார்த்தேன்…! அவள கூட்டிட்டு எங்கையாவது வெளியே போ அப்படின்னு….!”

அதனைக் கேட்ட மாதேஷோ…”நிறுத்துங்க.., அய்யனார் கூட மீனா அக்கா வெளிய போனாங்கன்னா நீங்க யோசிக்கிறது எப்படி நடக்கும்….?” என்று கேட்டான்.

“அது ஒன்னும் பெரிய வேலை இல்ல போற இடத்துல அந்த அய்யனார் ரெண்டு குவாட்டர் உள்ள தள்ளி படுக்க வச்சுட்டு நம்ம என்ஜாய் பண்ணலாம்ல்ல…!” என்றான் செல்வம்.

 “பரவால்லயே இருந்தாலும் நீங்க சூப்பரா ஐடியா போட்டு இருக்கீங்களே…! சரி அப்புறம் என்னங்க ஆச்சு…?” 

 “அப்புறம் என்ன ஆச்சு…! இன்னும் மூணு நாள் தான் கல்யாணம் அப்படின்னு தெரிஞ்சு போச்சு…! அய்யனாரு நிச்சயம் பண்ண பொண்ணா இருக்கும் போதே அவள அப்படி உருகி உருகி காதலிச்சான். கல்யாணம் ஆயிடுச்சுன்னா சொல்லவா வேணும்….! பொண்டாட்டிய விட்டு நகல கூட மாட்டியான்.

அப்புறம் நான் என்கிட்ட என்ஜாய் பண்றது….! அதனால தான் கருப்பன் அவங்க அப்பா அம்மான்னு எல்லாரும் பத்திரிகை குடுக்க ஊர் தேசத்துக்கு போன நேரமா பார்த்து

அவ வீட்டுக்குள்ள புகுந்து…!” என்று செல்வம் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனை இடைநிறுத்தினான் மாதேஷ்.

“என்ன பிரதர் சொல்றீங்க…? அப்போ நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே என்று அவன் கிட்ட….?” என்று கேள்வியோடு நிறுத்தினான்.

 “இல்ல..இல்ல.. அதுக்குள்ள அவ எவனுக்கோ போன் போட்டு வர சொல்லி என்கிட்ட இருந்து தப்பிச்சு ஊர விட்டு ஓடிப் போயிட்டா…!” என்றான் செல்வம்.

“என்னங்க சொல்றீங்க…? அது யாரு…?” என்ற மாதேஷ் ஆர்வமாக கேட்டான்.

‘யாரு…! எல்லாமே அந்த ராகுல் பய தான் இப்போ மீனாவோட புருஷனா இருக்கானே அவன் தான்…!” என்ற சடைவாக கூறினான் செல்வம்.

 “சரி சரி, இதுல எனக்கு ஒன்னு மட்டும் புரியல…! ராகுல் சென்னையில பிசினஸ் பாத்துட்டு இருக்கான் ….! அப்படி இருக்கும்போது மதுரையில அவ்வளவு சின்ன கிராமத்துல இருக்குற மீனா அக்காவுக்கு எப்படி ராகுல் பிரதர் கூட பழக்கவந்துச்சு…?” என்று கேட்டான் மாதேஷ்.

கருப்பன் வேட்டை தொடரும்….

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!