Skip to content
Post Views: 1,716
கருப்பன் ஆட்டம் 36
செல்வத்தின் கையில் இருந்த கத்தியை வாங்கிய அய்யனார்
“நீ சொன்ன மாதிரியே முடிச்சு விட்டுருவோமா…?” என்று கேட்டான்.
Advertisement
அவன் தர்மனை கூறுகிறான் என்று எண்ணிய செல்வமோ மீசையை முறுக்கிக் கொண்டு “….ம்ம்…முடுச்சுவுடு அய்யனாரு…!”என்றான்.
Advertisement
அவன் கூறிய அடுத்த நொடி அவன் மார்பிலேயே நான்கைந்து முறை குத்தி குத்தி எடுத்தான் அய்யனார்m
Advertisement
திடீரென்று அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்த்திராத செல்வம் அதிர்ச்சியில் கண்கள் விறிய அவனைப் பார்த்தான்.
Advertisement
“என்னடா பாக்குற…? என்ன பாக்குற…? நான் வந்தது இவன அடிக்கிறதுக்கோ வெட்றதுக்கோ குத்துறதுக்கோ இல்ல.., ஒன்ன ஒன்ன மொத்தமா சரிகிறதுடா…!
நீ ஒருத்தன் இருந்துட்டு இந்த ஊரை நாசக்கேடு பன்றது பத்தாதுன்னு என் குடும்பத்துக்குள்ளயும் நுழைஞ்சு என் வீட்டு பொண்ணுங்க மேலயே கை வைக்க பார்த்திருக்கல்ல…, உனக்கு எம்புட்டு ஏத்தக்** இருக்கணும்.
உன்னை எல்லாம் இன்னும் விட்டு வச்சா…. அது இந்த ஊருக்கும் இந்த மண்ணுக்கும் தாண்டா அசிங்கம். உன் பேச்ச நம்பி நான் எத்தனை தடவ கருப்பன கொல்ல பாத்துருப்பேன்.
ஆனா எந்த இடத்திலுமே அவன் என்ன எதுத்து பேசுனதே இல்ல…, நான் தான் அவன கத்தியால குத்துனேன்னு தெரிஞ்சும் கூட இதுவரைக்கும் ஏன் அப்படி பன்னேன்னு கூட கேட்டதில்லை…..!
அவன் மானஸ்தன்டா என் அத்த மவன் என்னயிருந்தாலும் என் ரெத்த சொந்தம்…, உன்ன மாதிரி கேடுகெட்ட பொம்பள பொறுக்கி கூட கூட்டு சேர்ந்துக்கிட்டு நான் தான் இத்தனை நாள் தப்பு பண்ணிட்டேன்…! அதுக்கான பரிகாரத்தை நானே தேடிக்குறேன்…!” என்று கூறியவன் தான் குத்திய அந்த கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு அதீத ரத்தப் போக்கால் மயங்கி கிடந்த தருமனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியில் வந்தான்.
வீட்டிற்கு வெளியில் இருந்த கருப்பனோ அப்பொழுது தான் டவுனிலிருந்து தருமன் அனுப்பிய செய்தியை கேட்டு வேகவேகமாக தனது வீட்டிற்கு வந்தவன் அய்யனார் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டு வாசலிலேயே நின்று விட்டான்.
அவனுக்கு தெரியாது தர்மன் அங்கு குத்துயிரும் கொலை உயிருமாக கிடப்பது.அதனால் தான் அவன் அத்தனை பொறுமையாக வெளியில் இருந்தது.
ஆனால் இப்பொழுது அய்யனார் தர்மனை தோளில் போட்டு தூக்கிக் கொண்டு வருவதை பார்த்து பதறியவன் ஓடிச் சென்று அய்யனாரிடம் தர்மனை பெற்றுக் கொண்டவன் அந்த ஊருக்குள் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை செய்தவன், பின் ஆம்புலன்ஸில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை அறையில் தர்மன் அனுமதிக்கப்பட்டதும், அந்த மருத்துவமனையில் இருந்து காவலர்களை அழைத்து இருந்தனர்.
அங்கு வந்த காவலர்கள் என்னவென்று விசாரிக்க அவனும் வீட்டில் நடந்தவற்றை தனக்கு தெரிந்தவரை கூறினான். அதனை வழக்காக பதிவு செய்து கொண்ட காவலர்கள் கவுன்சிலர் செல்வம் வீட்டிற்கு வந்தனர்.
அங்கே செல்வம் இறந்த நிலையில் இருக்க, அய்யனாரே அவர்களின் முன் சென்று நடந்த விஷயங்களை எடுத்துக் கூறி, தான் கொலை செய்த கத்தியோடு அவர்களிடம் ஆஜரானார்.
ஊரே ஒரே பரபரப்பாக இருந்தது. பொண்ணுத்தாயி தன் மருமகளின் நிலையை நினைத்து பதறியவர், பின் அய்யனார் தகுந்த நேரத்தில் வந்து தன் மருமகளை காப்பாற்றியதை நினைத்து அய்யனாரை தெய்வமென வணங்கினார்.
அமுதாவோ “நீ ஏன்யா இந்த வேலையெல்லாம் பண்ண…?இப்ப பாரு நீ ஜெயிலுக்கு போக போறயே..” என்று அய்யனாரிடம் கேட்டார்.
அதற்கு அய்யனாரோ “இப்போ இல்லத்தா முன்னாடியே நான் ஜெயிலுக்கு போக வேண்டியவந்தேன்…,இந்த நாசமா போன செல்வம் பேச்சைக் கேட்டு நான் தான் கருப்பன பன்னருவாள்ல விஷத்தை கலந்து குத்துனேன்…!”என்று கூறினான்.
அதனை கேட்டு அதிர்ந்த அமுதாவோ “என்னய்யா சொல்ற…?” என்றார்.
“ஆமாத்தா…! நான்தான் இந்த குடிய கெடுத்தவன் பேச்சு கேட்டு வருஷா வருஷம் ஜல்லிக்கட்டுல கருப்பனுக்கு கொடச்சல் கொடுத்தது. கருப்பன் எந்த ஒரு தப்புமே பண்ணலத்தா….! எனக்கும் மீனாவுக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்னதுக்கு காரணம் கூட இந்த செல்வம் தான்.
ஒரு தப்பும் அறியாத கருப்பனுக்கு இத்தனை வருஷம் நான் குடுத்த கொடைச்சலுக்கு அவன் எந்த ஒரு விஷயத்துலயும் என்னை யாருகிட்டயும் சொல்லிக் கொடுத்தோ இல்லை மாட்டி விடவோ இல்ல…!
அதுக்கு எல்லாம் எனக்கு தகுந்த தண்டனை வேணும்னு தான் நான் இத பண்னேன். இது நான் நானே முடிவெடுத்து பண்ண விஷயம் தான்….! அப்புறம் நான் போயிட்டு வரதுக்கு வருஷக்கணக்காக ஆகும்… மயில் விரும்பின பயலுக்கு உடம்பு சரி ஆகி வரவும் அவனுக்கே கட்டி வச்சிரு…!”என்று கூறிவிட்டு அங்கிருந்து காவலர்களுடன் சிறைச்சாலை நோக்கி கிளம்பினான் அய்யனார்.
போகும் அவனையே ஊரில் உள்ள செல்வத்தால் பாதிக்க பட்ட பெண்கள் தெய்வம் எனவும் செல்வத்தின் மனைவி சில பல சாபங்களையும் விட்டும் வழி அனுப்பி வைத்தனர்.
இங்கே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மனுக்கு காயம் அவனின் அடிவயிற்றில் உயிர் நாடிக்கு மிக அருகில் இருப்பதால் அவன் உயிர்பிழைத்து வருவதே மிகவும் சிரமம் என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள்.
தர்மனின் விஷயம் கேட்ட மலரும் மயிலும் அமுதாவும் பொண்ணுத்தாயும் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.
மயிலோ தர்மனின் நிலையை கேட்டறிந்தவள் அலறி கதறி துடித்தாள்.
“ஐயோ தர்மா…! என்னடா இப்படி ஆயிடுச்சு…! உனக்காடா இந்த நெலமை….! யாரோ பண்ண தப்புக்கு நீ என்னடா பாவம் பண்ண…? என்கிட்ட இத்தனை நாள் கேட்டியேடா என் காதலை ஏத்துக்குவியா…! எனக்கு பதில் சொல்லுன்னு கேட்டுக்கிட்டே இருந்தியே…! இப்ப சொல்றேன்டா தர்மா…. எனக்கு நீன்னா உசுருடா….! என்ன தனியா தவிக்க விட்டுட்டு போயிடாத தருமா…! நீ மீண்டு வாடா தர்மா….! உன் கூட சேர்ந்து ரொம்ப வருஷம் வாழனும் டா…! நீ இல்லாத உலகத்துல நான் இருக்குறதை என்னால நினைச்சு கூட பாக்க முடியாது தர்மா….! சீக்கிரம் மீண்டு வா தர்மா ….”என்று மயில் ஒரு புறம் கதறினாள்.
மற்றொரு புறமோ “ஐயா சாமி இப்படி ஆத்தால அம்போன்னு விட்டுட்டு போக பார்க்கிறியா….? நீ சீக்கிரம் எந்திரிச்சி வாயா…? எவளோ பெத்த சிரிக்கி மக எக்கேடா கெட்டு போகட்டும்னு வராம, நீ ஏன்யா உன் தலையை குடுத்து இப்படி உயிருக்கு போராடிக்கிட்டு வந்து படுத்து கெடக்க….! இந்த ஆத்தாவ கதர வக்காதயா…! என்ன பெத்த அய்யா..! ராசா…! சீக்கிரம் இந்த ஆத்தாகிட்ட வந்துரு சாமி….!” என்று தர்மனின் அம்மா முத்துலட்சுமியின் கதறலும் அந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் எதிரொலித்து கேட்டது.
அவர்களின் கதறல் சத்தம் அங்கே தன் நண்பனின் நிலையை நினைத்து ஜடமென நின்றிருந்த கருப்பனின் காதுகளை எட்டவே இல்லை.
அவன் தன் நண்பனை நினைத்து அவனின் உடல்நிலை நினைத்து மருத்துவர் கூறிய கடைசி வார்த்தையை நினைத்து சிலை என சமைந்து இருந்தான்.
தன் நண்பன் தன் மனைவியின் மானத்தை காப்பதற்காக ஒரு கொடிய மிருகத்துடன் போராடி அவனின் உயிரையே பணையம் வைக்க துணிந்ததை எண்ணி தன் நண்பனை நினைத்து பெருமிதம் கொள்வதா…? இல்லை இப்பொழுது உயிர் போகும் நிலையில் கிடக்கும் இந்த நிலையை நினைத்து வேதனை கொள்வதா….? என்று தெரியாத நிலையில் மனதளவில் துடித்தான் கருப்பன்.
மலர்விழியும் தனக்கு தெரிந்த தெய்வங்கள் அனைத்தையும் மனதளவில் வேண்டிக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய மானம் காப்பதற்காக தனது உயிரையே விட துணிந்த ஒரு உன்னதமான உயிர் இந்த உலகத்தில் இருந்து செல்வதை என்னால் ஏத்துக்க முடியாது கடவுளே…! எப்படியாவது என் அண்ணே தர்மனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம அவர் சீக்கிரம் மீண்டு வரணும். அவரை நீங்க தான் காப்பாத்தி குடுக்கணும் என்று தனக்கு தெரிந்த அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டே இருந்தால் மலர்விழி.
அந்த அவசர சிகிச்சை பிரிவின் வாசலில் அனைவரும் இருக்க, அந்த அறைக்குள் மருத்துவர்களும் செவிலியர்களும் மாறி மாறி போவதும் வருவதுமாக மிகப் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தனர்.
அப்பொழுது அறையில் இருந்து வெளியில் வந்த மருத்துவர் ஒருவர் “தர்மனுக்கு ப்ளட் ரொம்ப லாஸ் ஆயிடுச்சு அவருக்கு உடனே ப்ளட் ஏத்தணும்.., இங்க யாருக்கு ஏ பி பாசிடிவ் பிளட் குரூப்…?”என்று கேட்டார்.
அதற்கு மலர்விழி முன்னே வந்து “டாக்டர் எனக்கும் அதை ப்ளட் குருப் தான், என் உடம்புல இருக்குற உசுர தவிர எதை வேணாலும் எடுத்து என் அண்ணனுக்கு கொடுத்துடுங்க.., ஏன் இந்த உசுர மட்டும் கேக்குறேன்னா…! என் அண்ணனுக்காக காலம் முழுசும் நன்றி விசுவாசமா இருக்கணும் அதுக்காக மட்டும் தான்…!” என்று கூறினாள்.
அதனைக் கேட்டு கருப்பனுக்கோ சங்கடமான நிலைதான்.
அடுத்த அரை மணி நேரத்தில் தர்மனுக்கு வேண்டிய அனைத்து ரத்தங்களும் மலர்விழியிடமிருந்து எடுத்து அவசர சிகிச்சை பிரிவினுள் கொண்டு செல்லப்பட்டனர்.
பெண்களின் கதறல் சத்தம் அந்த இடத்தை நிறைத்துக் கொண்டே இருந்தது. முத்துலட்சுமியின் அருகில் வந்த மலர்விழியோ “அம்மா என்ன மன்னிச்சிடுங்கம்மா…, அண்ணே எனக்காக தான் அந்த வீட்டுக்கே வந்துச்சு…, என்ன காப்பாத்துறதுக்காக வந்துச்சு…, ஆனா வந்த இடத்துல இந்த அளவுக்கு ஆகும்னு நான் எதிர்பாக்கலம்மா…!” என்று கைக்கூப்பி கேட்டாள்.
அந்த நேரம் முத்துலட்சுமி இருந்த மனநிலையில் நிகழ்ந்த விஷயங்கள் எதுவும் அறியாதவர் தன் மகனின் நிலையை மட்டுமே நினைத்து கொண்டு,
“வாடியம்மா மகராசி இன்னும் எத்தன பேரு குடிய கெடுக்க காத்திட்டு இருக்க , அன்னைக்கே நட்ட நடுராத்திரியில உன்னை கூட்டிட்டு வந்தப்பவே சொன்னேன்…., இந்த கருமத்த எல்லாம் எங்கேயும் கூட்டிகிட்டு திரியாத…, தொரத்தி விட்டுபுட்டு வான்னு…,.. ம்ம்கூம்…. என் பேச்ச எங்க அவன் கேட்டியான்.
உன்ன மாதிரி ஒருத்திய தங்கச்சியா ஏத்துக்கிட்டு அவன் பட்ட கஷ்டம் எல்லாம் இத்தோட போகட்டும், இதுக்கு அப்புறம் அவன் எப்படி மீண்டு வர போறானோ தெரியல…!
தகப்பன் இல்லாம பொட்ட புள்ளைய வச்சுக்கிட்டு நான் படுற பாடு என்னன்னு எனக்கு தான் தெரியும்…. ஆத்தா மகராசி நீ எங்க இருந்து தான் கிளம்பி வந்தியோ…., நீ இருக்கிற இடமெல்லாம் தருசா போயி கெடக்கு…,
இனிமே என் மவன் எந்திரிச்சு வந்தாலும் கூட அவன் மொகத்துல கூட நீ முழிச்சிராத உன் மூச்சுக்கத்து பட்டா கூட அது விளங்காத காத்தா மாறி போயிடும். என் புள்ள மேல உன் மூச்சு காத்து கூட படக்கூடாது…., சரியான தரித்திரம் புடிச்சவளா வந்து சேர்ந்திருக்க….!” என்று கூறினார் முத்துலட்சுமி.
அதனைக் கேட்ட கருப்பனுக்கு ஆத்திரமாக வந்தது. ஆனாலும் தற்சமயம் முத்துலட்சுமிடம் எதிர்த்து பேச முடியாமல் தன் மனைவியையே அழுத்தமாக பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.
அவன் பார்வையின் அர்த்தம் புரியாத மலர்விழியோ அந்தப் பார்வையில் பயந்தவளாக அவனின் கண்ணில் படாதவாறு வேறு புறம் சென்று நின்று கொண்டாள்.
தர்மனின் நிலை….?
கருப்பன் வேட்டை தொடரும்….
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
error: Content is protected !!