Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே?? 20

மனசு 20
மானவ் என்னோட அப்பா தோழரின் மகன். அப்பாவிற்கு அடுத்த இடத்தில் வேலை செய்தவர். மும்பையில நான் காலேஜ் படிக்கும் போது அங்கே கம்பெனி ஒன்று நடத்தி வந்தான். அடிக்கடி அவன் அப்பாவின் தொந்தரவால் என்னை கல்லூரியில் பார்க்க வருவான்.
கல்லூரி எக்ஸாமும் முடிய குஜராத்திலே எனக்கும் திருமணம் பேசுவதா இருந்தது. அதனால இவனோட தான் வீட்டுக்கு போனேன். ஆனா நாங்க போறதுகுள்ள எங்க குடும்பம் மட்டுமல்ல மானவ் குடும்பம், எங்க அப்பாவுக்கு விசுவாசமாக வேலை செய்த யாரும் உயிரோட இல்லை…அனீஷ் மட்டும் மயங்கி இருந்தான். கண்கலங்கிய சாயாலி..


Advertisement

அவங்க எங்கள விரட்டினாங்க. மானவ் தான் என்ன அக்காவோட அனுப்பி வைச்சு…அனீஷ ஹாஸ்பிட்டல் சேர்த்து ட்ரீட் பண்ணான்…

Advertisement

ஒரு நாள் எங்கள தேடி வந்தான். நாங்க சேர்ந்து தான் இருந்தோம்….முடித்து விட்டாள்.

Advertisement

புருவம் உயர்த்தி கேள்வியுடன், “அப்ப உங்க எதிரி ஆட்கள் உங்கள பாத்தா கொல்ல வருவாங்கல்ல?” உதய்கிருஷ்ணா கேட்க,

Advertisement

“வரமாட்டாங்க” என்றான் மானவ் உறுதியுடன்.
ஏன்?
“நாங்க செத்தது போல ஏற்பாடு செஞ்சிட்டான் மானவ்” என்றாள் சாயாலி. மானவ் அவளை பார்த்தான்.
ஓஓ! பாத்தா அடையாளம் தெரியாதா? உதய்கிருஷ்ணா கேட்க,
தெரியாது என்ற இன்பவேணி, சாயா அவங்க தந்தை உத்தரவில்லாமல் வெளியே வர முடியாது. அதனால் அதிகம் வெளியே சுற்றியதில்லை. மானவ் உருவத்தில் மாறுபாடு உள்ளதால் அவங்களால் கண்டுபிடிக்க முடியாது..
“என்ன மாறுபாடு இந்த மச்சமா?” விதார்த் மானவ் கன்னத்தில் இருந்த மச்சத்தை தொட்டு பார்த்தான். மானவ் அவன் கையை தட்டி விட்டான்.
அன்றொரு நாள் சித்ராண்ணீ சொன்னாங்களே! மானவ் ரௌடி மாதிரி இருக்கான். அவன பார்த்தாலே வாமிட் வர்ற மாதிரி இருக்குன்னு என பட்டென நேரடியாக இன்பவேணி சொல்ல, எல்லாரும் அதிர…
“அது..நான் அப்படி சொல்லல…..” தயக்கமுடன் சித்ரலேகா மானவ்வை ஏறிட, விரக்தி புன்னகையுடன் அவளையும் சாயாலியையும் பார்த்தான் அவன். அவள் திகைத்து மானவ்வை பார்த்தாள்.
மானவ் தான் அவன் தந்தையை பார்த்து எப்போதும் கூறுவான். இன்று அதே வார்த்தை சித்ரலேகா மூலம் திருப்பி அடித்தது.
“ஏன் அண்ணீ?” வாயை மட்டும் சாயாலி அசைக்க, யாரும் அவளை கவனிக்கவில்லை. சித்ரலேகா அவளை கண்டுகொண்டாள்.
நீங்க தயக்கப்பட ஒண்ணுமில்லை அண்ணீ. மானவ்வும் நீங்க கிருஷ்ட பேசியதை கேட்டான்.
“சாரி…” மானவ்வை பார்த்து சித்ரலேகா கூற,
உனக்கு தோணுனத தான பேசுன. பரவாயில்லை..
“சாரி” மீண்டும் சித்ரலேகா கூற, மானவ் இப்பொழுது போல் முன் இல்லை. அவன் படிச்சிருந்தான். நல்ல வேலையில் இருந்தான் சாயாலி கூற..
“போதும் மேடம்…உங்களுக்கு எங்க மேடம கல்யாணம் பண்ணிக்கிறது பிரச்சனையில்லையே??” மானவ் விதார்த்திடம் கேட்க, “இல்லை” என்றான் விதார்த்.
விது விருப்பமில்லைன்னா நேரடியா சொல்லு. திருமணத்தின் பின் அவ குடும்பத்த வச்சி அவள நீ காயப்படுத்தக் கூடாது என்றாள் இன்பவேணி.
சாயாலி கடந்த வாழ்க்கை பற்றி கவலையில்லை. ஒரு வேளை அவள கண்டுபிடிச்சி அவங்க வந்தாலும் நாம பாத்துக்கலாம் என்றான் விதார்த்.
மானவ் அவன் கை பற்றி, “தேங்க்ஸ்” என்றான்.
நீ எதுக்கு தேங்க்ஸ் சொல்ற?
அவன் தான் என்னோட திருமணத்துல்ல அண்ணா இடத்துல நிக்கப் போறான் என்றாள் சாயாலி.
மேடம்…நானா? நோ…மேடம்…
“சொன்னா கேக்க முடியாதா?” அவனிடம் மட்டும் குரல் உயர்த்தினாள் சாயாலி.
“ஓ.கே மேடம்” புன்னகைத்தான்.
தாத்தாவோ அனைவரையும் முறைத்து நின்றிருக்க, பாட்டி தொண்டையை செருமி கணவனை வெறித்தார். தாத்தா அமைதியாகி விட, அனைவருக்கும் நிம்மதியானது.
மானவ் நிம்மதியாக கோசலையுடன் திருமண ஏற்பாட்டை பற்றி பேசினான்.
ஆதாரத்தை வைத்து மானவ் ஷோபனாவை ஜெயிலுக்கு அனுப்ப போவதாக உதய்கிருஷ்ணா பிரியங்காவின் தந்தை மற்றும் கௌதமின் தந்தையை வரவைத்து வீடியோவை காட்ட, அவர்கள் அவமானமாக உணர்ந்தார்கள்.
“இது தான் உங்க குடும்பத்துக்கு கடைசி வாய்ப்பு. எங்க மேல யாரும் கை வச்சா உங்க குடும்பம் பத்திய அனைத்தும் வெளிய வரும்” என மிரட்டி அனுப்பி விட்டான்.
ஷோபனாவை மீண்டும் வெளிநாட்டிற்கே அனுப்பும் ஏற்பாட்டை பிரியங்காவின் தந்தை பார்க்க, ஷோபனாவின் தந்தை நாங்க எல்லாருமே வெளிநாடுக்கே போறோம் என்று குடும்பத்தோடு கௌதமையும் சேர்த்து அழைத்து சென்று விட்டார். அதனை உதய்கிருஷ்ணாவிடம் சொல்லவும் தான் அவனுக்கு நிம்மதி. இருந்தாலும் பாதுகாப்பிற்காக தன் நண்பனிடம் கூறி திருமணத்தன்று ஏற்பாடு செய்திருந்தான் உதய்கிருஷ்ணா.
திருமண மண்பத்தில் போலீஸார் புடை சூழ, பெரியவர்கள் ஆசி வழங்க இரு ஜோடிகளின் திருமணமும் நடந்தேறியது.
“அதிகாலை மழைதானா
அவனோடு இனி நானா இது
 நான் கேட்ட காலங்கள்
       தானா…
உயிரே உயிரே உறையும்
  உயிரே இனிமேல்
     நீதானா…”
காணொளி ஒன்று அனைவர் மத்தியிலும் திரையாக்கப்பட்டிருந்தது.
யாரோ திருமண வாழ்த்துக்காக தயார் செய்திருக்கிறார்கள் என எண்ணி உதய்கிருஷ்ணா பார்க்க,
இன்பவேணி உதய்கிருஷ்ணா இருவரும் காதலித்த சமயம் விதார்த்துடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியது. அத்தோடு நில்லாமல் உதய்கிருஷ்ணாவின் திருமணமில்லா முதல் கல்யாணம் பற்றி பிரியங்காவின் தந்தை அவரே பேசி இருப்பதை கண்டு கோபமானான் உதய்கிருஷ்ணா. நல்ல செய்தியாக ஜான்வியின் பிறப்பு மட்டும் அதில் கூறப்படவில்லை.
இன்பவேணியின் தந்தை ஸ்தானத்தில் இருந்து சீர் செய்வதாக பிரியங்காவின் தந்தை கூற, உதய் ஏற்றுக் கொண்டான். அதனால் அவரும் வந்திருந்தார்.
“என்ன பண்ணி வச்சிருக்கீங்க?” சீற்றமுடன் உதய்கிருஷ்ணா அவர் சட்டையை பிடிக்க, “இந்த ஏற்பாட்டை செய்தது நான் தான்” என்ற குரலில் வெறியானான் உதய்கிருஷ்ணா.
“ஏன்டா இப்படி பண்ண?” கோசலை மானவ்வை அடிக்க, உதய்கிருஷ்ணாவும் அவனை அடிக்க பாய்ந்து கொண்டு வந்தான். எல்லாரும் அவனை அழுத்தி பிடித்தனர்.
உதய்கிருஷ்ணாவின் தொழில் வட்டார நண்பர்கள், பெரிய தலைகள் அனைவரும் வந்திருக்க, அவன் அவமானமாக உணர்ந்தான். ஆனால் அவர்கள் உதய்கிருஷ்ணாவின் நல்ல மனதை அவர்களுக்குள் பாராட்டி பேசினார்கள். அதையெல்லாம் கேட்கும் எண்ணத்தில் அவன் இல்லை..
“எதுக்காக தாலியே கட்டாம பிரியங்கா தான் மனைவின்னு நான் வாழணும்? என்னோட குடும்பத்து ஆட்களை வெளியே விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தான் அத்தனை துயரத்தையும் அனுபவித்தேன். ஆனா ஒரே நிமிசத்துல எல்லாத்தையும் பாழாக்கிட்டீயே??” பிடித்திருந்தவர்களை தள்ளி மானவ் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் உதய்கிருஷ்ணா.
பாவம் அவன் வார்த்தையில் அங்கே ஒருத்தி புதைந்து கொண்டிருப்பது அவனுக்கு தெரியவில்லை. இன்பவேணி கண்ணீர் வழிய மானவ் அதே நிமிர்வுடன் உதய்கிருஷ்ணாவை வெறித்து இன்பவேணியை அர்த்தமுடன் பார்த்தான்.
“இதுக்கு தான் அவனோட உனக்கு திருமணம் வேண்டாம்னு சொன்னேன்” என்ற அர்த்தம் அவளுக்கு மட்டுமல்ல கோசலை சாயாலிக்கும் புரிந்தது.
குடும்பத்துக்காக என அனைத்தையும் பொறுத்த உதய்கிருஷ்ணா அவன் காதலிக்காக எந்த இடத்திலும் நிற்கவில்லை. இப்பொழுதும் அவன் குழந்தைக்காக தானே திருமணம் செய்து கொள்வதாக இருந்தான்.
இவனுக்கு நான் ஒன்றுமேயில்லையா? இவனால் எப்படி இவ்வாறு பேச முடிந்தது? அதுவும் இத்தனை ஆட்கள் முன்னிலையில்?? அப்ப பொழுதுபோக்குக்காக தான் தன் காதலை ஏற்றானா இவன்? வேதனையுடன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் இன்பவேணி. மானவ்வின் பார்வை அவளிடமிருந்து அகலவேயில்லை.
உதய்கிருஷ்ணா மானவ்வை பார்த்து இன்பவேணியை பார்க்க, “போதும் உதய் போ மணமேடையில் அமரு” என கார்த்திக்கேயன் பேச்சோடு நில்லாமல் அவனை இழுத்து சென்று இன்பவேணி அருகே அமர வைத்தான்.
உதய்கிருஷ்ணாவிற்கு அவன் செய்தது; அவன் பேசியது தவறில்லை என்ற எண்ணம். தன் குழந்தையை சுற்றி மனம் சென்றது. ஜான்வியை பார்த்தான். சித்ரலேகா கையில் அழகாக சமத்தாக இருந்தாள்.
சித்ரலேகா உதய்கிருஷ்ணாவை முறைத்து பார்க்க, இன்பவேணிக்கு உதய்யால் ஏற்பட்ட ரெண்டாவது ஏமாற்றம். முதல் ஏமாற்றத்திற்கு கூட காரணம் தெரிந்தது. ஆனால் இந்த ஏமாற்றம் அவள் வாழ்நாள் முழுக்க அவளுடன் வரப் போவதாயிற்றே! மனம் வலித்தது.
உதய்கிருஷ்ணா திட்டினாலும் அவளாகவே இந்த இரு வாரமாக பேசிக் கொண்டிருந்தாள் இன்பவேணி. குடும்பத்து விசயத்தில் அவன் பேசினால் மட்டும் எந்த பதிலும் கொடுக்காமல் இருந்தாள். ஆனால் இன்று தான் அவன் இனியும் அப்படி தான் இருப்பான். தன்னால் அவனை மாற்றுவது என்பது இயலாத காரியம். அவனாக மாறினால் தான் உண்டு என்று எண்ணி தன் தாலியை கையில் எடுத்து பார்த்தாள்.
மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அன்னை கண்ணில் நீர் வழிந்தது. சாயாலி விதார்த்தை பார்த்தாள்.
“குடும்பத்துக்காக அமைதியா இருந்தானா? அப்ப காதலிக்கும் போது இன்னுவ அவன் நம்ம குடும்பமா பாக்கலையா?” என்ற எண்ணத்தில் அவனுக்கு கோபம் வந்தது.
“விது எழுந்திரு…நில்லுங்க…” என மணமக்களை நிற்க வைத்தனர். புகைப்படம் எடுக்க தொடங்கினார்கள். ஒருவர் முகத்தில் கூட புன்னகையில்லை. புகைப்படம் எடுப்பவன்…
சார்…யாருமே சிரிக்க மாட்டிக்கிறீங்க? கொஞ்சம் சிரிங்க. அப்ப தான் போட்டோஸ் அழகா வரும் என்றான்.
உதய்கிருஷ்ணா மற்ற மூவரையும் பார்க்க, ஒவ்வொருவர் முகமும் ஒவ்வொரு உணர்வில் இருந்தது.
“ஏன் மூவரும் மூஞ்சிய இப்படி வச்சிருக்காங்க? இவங்கள பத்தி நாம பேசலையே!” புரியாமல் அவர்களை பார்த்தான் உதய்கிருஷ்ணா.
மானவ் மணமேடையில் ஏறி, இன்பவேணி சாயாலி தோளில் கை போட்டு…எப்ப எனக்கு ட்ரீட் தருவீங்க?
“பார்க்கலாம்” என்றாள் சாயாலி வெறுமெனே..
“பாக்கலாமா? நாளைக்கு ட்ரீட் வேணும். நல்ல பிராண்டா வாங்கி தாங்க. மட்டமா வாங்கிறாதீங்க. வாயில வைக்க முடியாது” கண்சிமிட்டி இருவரையும் பார்த்தான்.
உதய்கிருஷ்ணா அவனை முறைத்து பார்க்க, இருவர் மனதை மாற்ற இவ்வாறு பேசுகிறான் என விதார்த்திற்கு புரிந்தது.
“அதெல்லாம் உனக்கு எதுவும் கிடையாது..” சாயாலி முகம் திரும்ப…
வேணி பாப்பா…நீ சொல்லு..வாங்கி தருவேல்ல?
பாப்பாவா? என அவனை பார்த்து, அவன் கன்னத்தில் இடித்து…டிரிங்ஸ் நீ குடிக்க முடியாது. நினைவிருக்குல்ல?
ஒரு நாள் குடிச்சா ஒண்ணுமில்ல..
“அதெல்லாம் குடிக்கக் கூடாது” சாயாலி அவன் மறுகன்னத்தில் இடித்தாள்.
“சரி…எனக்கு வேண்டாம்” என பாவனையுடன் அவன் கூற, இரு பெண்களுக்கும் சிரிப்பு வந்தது.
விதார்த்திடம் மானவ் கண்ணடிக்க, “என்ன அவர பாத்து கண்ணடிக்கிற?” சாயாலி கோபமானாள்.
அடேங்கப்பா…ஜெல்லஸ்ஸா? மாப்பிள்ள எங்க மேடம் உங்க மேல ஜெல்லஸ்ஸா இருக்காங்க..
விதார்த் புன்னகைக்க, மேடம் நீங்க இப்படி கோபமா மூஞ்சிய உம்முணு வச்சிட்டு இருந்தா எதிர்காலத்துல நீங்க வருத்தப்பட வேண்டி இருக்கும் என்றான்.
“என்ன பேசுறான் இவன்?” உதய் கிருஷ்ணா உள்ளுக்குள் கடுகடுத்தான்.
எதிர்காலமா?
“அஹம்…உங்க புள்ளைங்க உங்கள பாத்து கேலி பண்ணுவாங்க…சரிதான இன்பவேணி, இல்ல இல்ல..இன்னும் கொஞ்ச நாள்ல ஜான்வியே வளந்து உங்கள கேலி பண்ணுவா…” சிரித்தான்.
பெண்கள் முகம் செம்மை பூச நகர்ந்து நின்ற மானவ் புகைப்படம் எடுப்பவனிடம் கை காட்ட, அவன் புன்னகைத்து புகைப்படமாக்கினான்.
உதய்கிருஷ்ணாவிற்கு இப்பொழுது தான் மானவ் ஏன் மேடை ஏறினான். அவ்வாறு பேசினான் என்று புரிந்தது.
அனைவரும் உணவுண்ண செல்ல, மாப்பிள்ளை பொண்ணை ஊட்டி விட சொன்னார்கள். விதார்த் சாயாலி புன்னகையுடன் ஊட்டிக் கொள்ள, தயக்கமுடன் இன்பவேணி எடுத்து உதய்கிருஷ்ணாவிடம் நீட்ட, எந்த உணர்வும் காட்டாது வாங்கிக் கொண்டான். அவன் ஊட்ட மாட்டேன் என்று மறுத்து விட இன்பவேணி மனம் கசங்கினாலும் புன்னகை முகமாக பாட்டியை பார்த்தாள்.
அவருக்கும் அவள் கஷ்டம் புரிந்தது. உண்டு இவர்கள் ஜோடியாக வர பாட்டி இன்பவேணியை தனியே அழைத்து பேசினார்.
கொஞ்ச நாள் பொறுத்துக்கோம்மா. உதய் நல்லவன். புரிஞ்சுப்பான்.
அவன் தானே! என பெருமூச்சுடன், “சரிங்க பாட்டி” என ஏற்றுக் கொண்டாள்.
ஜோகனும் பாருவும் ஒன்றாக அவர்களிடம் வந்து வாழ்த்து கூறினார்கள். இன்பவேணி ஆபிஸில் தான் பார்வதி வேலை செய்து கொண்டிருப்பாள். ஜோகனையும் அவளையும் சந்திக்க வைத்து, இருவருக்கும் புரிய வைத்து திருமணம் இவள் தான் செய்து வைத்திருப்பாள்.
ஜோகன் உதய்கிருஷ்ணா அருகே அமர, கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான் உதய்கிருஷ்ணா.
உதய் சார்…
“என்ன?” புருவம் உயர்த்தினான்.
“இன்பவேணிய நல்லா பாத்துக்கோங்க. அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா…” தயங்கினான்.
“கஷ்டமா?” புன்னகைத்து பின் முறைத்தான் உதய்கிருஷ்ணா.
மேலும் ஜோகன் இன்பவேணிக்காக பேச, “மூடிட்டு போடா. எனக்கு என்ன செய்யணும்னு தெரியும்” என்றான்.
“என்ன இப்படி பேசுறார்?” விழித்தான்.
உங்க விருப்பமில்லாம…
பல்லை கடித்து, “எனக்கு விருப்பமில்லைன்னா அவள வச்சுக்கலாமான்னு ட்ரை பண்றீயா?” கொச்சையாக உதய்கிருஷ்ணா பேச பட்டென கோபமாக எழுந்தான் ஜோகன்.
பார்வதி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாளே! ஜோகன் கை பிடித்து, “வா போகலாம்” அழைத்தாள்.
அவள் கையை தட்டி விட்டு உதய்கிருஷ்ணாவை நெருங்கி, “நீ இன்பவேணிக்கு டிசர்வேயில்ல. அத சொல்ல தான் வந்தேன்” என முறைத்து தன் முகத்தை சரி செய்து பாட்டி தாத்தாவிடம் சொல்லி இன்பவேணியிடம் வந்தான்.
புன்னகைத்து, “ஆல் தி பெஸ்ட் மேடம். எதுவும் பிராபிளம்னா சொல்லுங்க. நான் கெல்ப் பண்றேன்” என்று அவன் நகர, “ஆல் தி பெஸ்ட்டி. நாளைக்கு கால் பண்றேன்” என உதய்கிருஷ்ணாவை அலட்சியம் செய்து பார்வதி ஜோகன் பின் ஓடினாள்.
விதார்த் ஜோகனை நிறுத்த,
முறைத்த ஜோகன், “உன்னோட அண்ணா பேச்சே சரியில்ல. இன்பாவ மட்டும் அவர் ஏதாவது செஞ்சு கஷ்டப்படுத்துனா நான் சும்மா இருக்க மாட்டேன். இருட்டா இருந்த வாழ்க்கையை பிரகாசிக்க வச்சி குடும்பத்தை கொடுத்துருக்கா…அவளுக்கு ஒண்ணுன்னா உன்னோட அண்ணா சாவு என் கையில தான்” என மிரட்டி சென்றார்.
இன்பவேணி ஜோகனுக்கு ஆர்ட் கேலரில வேலை வாங்கிக் கொடுத்திருந்தாள். அதை வைத்து அவன் முன்னேற வழி சொல்லியும் இருந்தாள். அதனை கூறி ஜோகன் ரொம்பவே மாறிட்டான் என அவனது நல்லெண்ணம் அனைத்தையும் கூறி இருந்தாள்.
“இவன் இப்படி பேசுகிறான்” என எண்ணிய விதார்த் தன் அண்ணனை பார்க்க, உதய்கிருஷ்ணா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்பவேணி சொந்தங்களுடன் எல்லாரும் பேசிக் கொண்டிருக்க, சாயாலி அவள் மச்சான்கள் மனைவிகளுடன் அரட்டையில் இருந்தாள். இன்பவேணி யாருடனும் பேசாமல் தனியே அமர்ந்திருந்தாள்.
கார்த்திகேயனின் தாய் அவளருகே வந்து அமர்ந்து அவள் தலை கோதினார்.
“பெரிம்மா…” அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் முகம் நிமிர்த்தி, எங்க வேணி அழவே மாட்டா. அவளோட துருதுரு பேச்சு இல்லாம கல்யாண வீடு மாதிரியேயில்ல. உனக்கு நாங்க இருக்கோம்டா. எனக்கு அப்புறம் அண்ணா, அண்ணீ, மச்சான், அக்கா எல்லாரும் இருக்காங்க. முன்னாடி மாதிரி தனியா மட்டும் கோபத்துல எங்கேயும் போயிடக் கூடாதுடா..
சரி பெரிம்மா..
மாப்பிள்ள பக்கத்துல போய் உட்காரு..
பெரிம்மா, கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமா? சோர்வா இருக்கு..
“கண்டிப்பாடா” என்ற உதய்கிருஷ்ணாவின் பாட்டி சாயாலியை பார்க்க, அவள் மும்பரமாக பேசிக் கொண்டிருந்தாள்.
“வாம்மா….” என்று பாட்டி அவளை அழைத்து சென்றார். கோசலை அவர்களை பார்த்துக் கொண்டே மானவ்விடம் வந்து பேச, அவனும் அவருடன் சென்றான்.
பூப்புனித நீராட்டு விழாவின் போது இருந்த இன்பவேணி இன்று மாயமாகி போனாள்? யார் செய்த வினையோ? விதியின் சதியோ?
பாட்டி பெரியவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
அண்ணனும் தம்பியும் பார்த்துக் கொண்டிருந்த போது, “வேணி எங்க அத்த? உங்கட்ட தான பேசிட்டு இருந்தா?” கார்த்திகேயன் மனைவி அனைவர் சிந்தனை, பேச்சுகளை கலைத்தாள்.
சோர்வா இருக்குன்னு ஓய்வெடுக்க போயிருக்கா. ரொம்ப நேரம் நின்னது கூட கால் வலிக்கும். அவ ஓய்வெடுக்கட்டும். நீ ஆகாஷ பாரு என்றார்.
சாயாலி எழுந்து, “அக்கா எந்த அறையில இருக்காங்க?” கேட்டாள்.
பாட்டி அவ்வறையை காட்ட, செல்ல இருந்த சாயாலி கை பிடித்த விதார்த்,
“அதான் ஆன்ட்டி ரெஸ்ட் எடுக்குறான்னு சொல்றாங்கல்ல? நீ வா” என அவனருகே அவளை அமர்த்திக் கொண்டான்.
விது மாமா, அக்கா கஷ்டத்துல இருக்கான்னு தோணுது..
தெரியும். அவளுக்கான பிரைவேசி இன்னிக்கோட முடியப் போகுது என தன் அண்ணனை பார்த்தான்.
மாமா..
“ம்ம்! நாம நைட் பேசலாம். இப்ப அமைதியா இரு” என விதார்த் சொல்ல, அவளும் விட்டு விட்டாள். அறையினுள் தன் வாழ்க்கையை எண்ணி அழுது சோர்ந்து தூங்கி விட்டாள் இன்பவேணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!