Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 38

  1. கருப்பன் ஆட்டம் 38

 தர்மனுடன் கருப்பனின் வீட்டிற்கு வந்திருந்த மலர்விழி தர்மன் சென்ற பிறகு கருப்பனை பின்னிருந்தவாறு இறுக அணித்திருந்தாள். 

அவளின் திடீரணைப்பில் ஒரு நொடி உறைந்த கருப்பன் பின் தன்னை சுதாரித்துக் கொண்டவன், அவளின் பிடியிலிருந்து தன்னை விலகிக் கொள்ள முயற்சித்தான்.



Advertisement

 ஆனால் அது அவனால் முடியாத காரியமாக அவனை உடும்பு போல் இறுக்கி அணைத்து இருந்தால் மலர்விழி. 

Advertisement

அவன் நினைத்திருந்தால் உடும்பே வந்து பிடித்திருந்தாலும் விலகி நிறுத்தி இருப்பான் தான். ஆனால், தன் ஆசை காதல் மனைவி இத்தனை நாட்களுக்குப் பிறகு தன்னை ஆசையாய் அணைத்து இருப்பதில் ஆண் மகனுக்குள்ளும் ஆசை கிளர்ந்தெழவே செய்தது.

Advertisement

 அவன் அமைதியாக இருப்பதை வைத்தே தன் அணைப்பை ஏற்றுக் கொண்டான் என்பதை அறிந்து கொண்டவள் தனது கைகளை ஆணவனின் மேனியில் படரவிட்டாள்.

Advertisement

 “ஏய்…ஒழுக்கமா கைய எடுக்குறியா…? இல்லையாடி…?” என்று கூறிய கருப்பனுக்கும் பெண்ணவளின் தொடுகை பிடிக்காமல் இல்லை. 

 “ஏன் மாமா…! நான் கைய எடுத்ததும் நீங்க என்னைய அணைச்சுக்க போறீங்களா?” என்று மலர்விழி அவனின் காதில் கிசுகிசுத்தாள்.

 “இப்ப ஒழுக்கு மரியாதையா என் மேல இருந்து கைய எடுக்கலைன்னா இங்க நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்லடி…!” என்றான் கருப்பன்.

அதை கூறும்பொழுது அவனின் குரல் உடைந்து நெளிந்து குழைந்து வருவதை உணர்ந்து மலர்விழியோ “அப்படியா மாமா…! என்ன பண்ணுவீங்க…? என்னைய என்ன பண்ணாலும் எனக்கு டபுள் ஓகே…!’ என்று கூறி அவனின் முதுகில் அழுத்தமாக இதழ் பதித்தாள். 

 அந்த ஒற்றை இதழ் முத்தமே கூறியது இத்தனை நாட்கள் பசலை நோயில் அவள் தவித்த தவிப்பையும் தன் கணவன் மீது அவள் வைத்திருந்த ஆசையையும்….!

 அதனை உணர்ந்த ஆணவனின் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து நரம்புகளும் புடைக்க உடல் முறுக்கேரி சூடேற கிளம்பியது. 

 “என்னடி நானும் பேசிட்டே இருக்கேன்…நீ உன் இஷ்டத்துக்கு ஒட்டிட்டு இருக்கிற…!என்ன கொழுப்பா…!” என்று கேட்ட கருப்பன் அவளை கயித்து கட்டிலில் தள்ளி விட்டுவிட்டு கதவருகே சென்று கதவை தாழிட்டு விட்டு வந்தவன், 

 பெண்ணவளை இறுக அணைத்தான். இத்தனை நேரம் அவள் அணைத்த அணைப்பு எதுவும் அணைப்பே இல்லை எனும் ரீதியில் இருந்தது ஆணவனின் அந்த தாபம் நிறைந்த இறுகிய அணைப்பு. 

 அவனின் அந்த அணைப்பில் பெண்ணவள் தான் மூச்சு விட சிரமப்பட்டு அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து தன்னிலை கூற வர, அதற்குள் அவளின் இதழை தனது இதழால் சிறையிட்டு இருந்தான் மலர்விழியின் ஆசை காதல் கள்வன் கதிர் எனும் கருப்பன். 

 அதன் பிறகு அந்த தோட்டத்து வீடு முழுவதும் முத்தச் சத்தமும் முனகல் சத்தமும் மட்டுமே நிறைந்திருக்க, பெண்ணவளை முடிந்து மட்டும் ஆட்கொண்டு இத்தனை நாட்கள் தன் ஆசை காதல் மனைவியை விட்டுப் பிரிந்த ஏக்கத்தை ஒரே நாளில் தீர்த்துக் கொண்டிருந்தான் கருப்பன்.

 தன் உள்ளம் கவர்ந்த ஆசை காதல் கள்வன் தன்னிடம் இருந்து திருடும் அனைத்து தேன்களையும் விரும்பியே திருட அனுமதித்தால் காட்டானின் கள்ளியவள்.

 இருவரும் காலையில் ஆரம்பித்த கூடலை இடைவிடாது தொடர்ந்து மாலை பொழுதே இடைவெளி கொடுத்து இருந்தனர். 

 மலர்விழி கருப்பனின் வெற்று மார்பில் முகம் புதைத்து ஆணவனின் முடிகள் அடர்ந்து நிறைந்திருந்த நெஞ்சத்தின் மார்புக் குழியில் நீண்டு சுருண்டிருந்த முடிகளை தனது விரல் கொண்டு சுருட்டி கொண்டே “மாமா என் மேல இருந்த கோபம் எல்லாம் உங்களுக்கு போயிடுச்சா….!”என்று கேட்டாள். 

“கோபம் போயிருச்சானு கேட்டா…. கோபமே இல்லையே….!” என்றான் கருப்பன்.

“ என்ன சொல்றீங்க மாமா….! அப்போ என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா..? அப்ப ஏன் மாமா என்ன ஊரு விட்டு போக சொன்னீங்க….?” 

“கோபமெல்லாம் இல்லடி நீ என்கிட்ட உண்மைய மறைச்சுட்ட அப்படிங்கற வருத்தத்தோட உச்சம்…! அதுதான் உன்கிட்ட அப்படி பேச வச்சுச்சு….

அதுக்கப்புறம் எப்போ மீனா தப்பு பண்ணலன்னும் செஞ்ச தப்புக்கு எல்லாம் காரணம் செல்வம்தான் அப்டிங்குற உண்மையும் தெரிஞ்சதோ அதுக்கப்புறம் உன் மேல இருந்த அந்த வருத்தம் கூட வடிஞ்சு போயிடுச்சுடி…,

ஆனா மறுபடியும் வந்து உன்னிடம் பேசுறதுக்கு ஆம்பள தனம் இடம் கொடுக்கல அதனாலதான் உன்னை தூரமா இருந்தே பாத்துகிட்டே விலகி இருந்தேன்….! சரிடி உனக்கு நான் தான் மீனாவோட அண்ணன்னு எப்படி தெரியும்…?” என்று கேட்டான் கருப்பன்.

“அதுவா மாமா….!

 அண்ணி ஒரு தடவ காலேஜ்ல இருந்து கன்னியாகுமரிக்கு டூர் போயிருந்தப்போ எங்க அண்ணனும் அங்க ஏதோ பிசினஸ் விஷயமா போயிருக்கான். 

போன இடத்துல அண்ணிய கடல் அலை இழுத்துட்டு போயிருக்கு…, அப்போ சரியான நேரத்துல எங்க அண்ணன் தான் போய் காப்பாத்தி இருக்கான்.

ஒரு நாளே ஆனாலும் இரண்டு பேத்துக்கும் இடையில மனசு மனசும் விரும்பி இருக்க ரெண்டு பேருமே அவங்க மனசுல உள்ளதை வெளிய சொல்லிக்காமையே ஃபோன் நம்பரை மாத்திக்கிட்டாங்க.

ஆனால் அதுக்கப்புறம் மீனா அண்ணி எங்க அண்ணன் கிட்ட ஃபோன்ல பேசுனதே இல்லையாம்…! பல முறை ட்ரை பண்ணி பார்த்துருக்கான், ஆனா மீனா அண்ணி போன எடுக்கவே மாட்டாங்களாம்.

அப்பிடி தான் ஒரு நாளு அந்த செல்வம் சொன்ன மாதிரியே…, மீனா அண்ணிக்கிட்டு தப்பா நடந்துக்க பாத்து இருக்கான்…,

அப்போ உங்க குடும்பத்து ஆளுங்க எல்லாருக்கும் அவசரமா போன் போட்டுருக்காங்க அந்த நேரம் யாரோட போனும் ரீச் ஆகலையாம்….!

அப்போ மதுரையில பிசினஸ் விஷயமா வந்துருந்த என் அண்ணே டீலிங் முடுச்சுட்டு இந்த ஊர தாண்டி போறப்போ ஏதேர்ச்சியா எப்பையும் போல அண்ணிக்கு ஃபோன் போட்டு இருக்கான்.

எதிர்முனையில ஃபோன் அட்டென் ஆகவும் அண்ணியோட கதறல் சத்தம் கேட்டுருக்கு உடனே பதறி போன எங்க அண்ணே ஊருக்குள்ள வந்து அண்ணிய அந்த செல்வம் நாய் கிட்ட இருந்து காப்பாத்தி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருச்சு.

 மீனா அண்ணி எங்க வீட்ல வந்து ரொம்ப ரெண்டு மாசத்துக்கு மேல ஒரு விருந்தாளி மாதிரி தான் இருந்தாங்க, 

நடக்க இருந்த கல்யாணம் நிண்டு போனதால குடும்பத்துக்கு அவமானம் ஆயிருக்கும்ன்னு நினைச்சு அழுதுட்டே இருந்தாங்க, 

 அதுக்கப்புறம் கொஞ்ச நாள் போகவும் தான் எங்க அம்மாவும் அப்பாவும் ரெண்டு பேத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க…, அப்ப கூட ரெண்டு பேரும் விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் உங்க எல்லாத்தையும் நினைச்சு அழுதுட்டே இருப்பாங்க அப்போ உங்கள பத்தி சொல்லுவாங்க, உங்களோட ஃபோட்டோவ அவங்க போன்ல காமிச்சி இருக்காங்க.., அதை பார்த்த உடனே உங்கள எனக்கு பிடிச்சு போச்சு மாமா…!

 அப்பயில இருந்தே உங்களை மனசுக்குள்ள விரும்பிட்டு இருந்தேன். ஆனா கல்யாணம் விஷயம் பேச ஆரம்பிச்சதும் நான் பேசுற எதையும் என் குடும்பத்துல உள்ளவங்க காது குடுத்து கூட கேட்கல, அப்படி இருக்கும்போது நான் ஒருத்தர லவ் பண்றேன் அதனால எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா அவங்க சுத்தமா ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் நான் தற்கொலை பண்ணிக்க போனேன் மாமா…! ஆனா பாருங்க விதி என்ன கொண்டு வந்து உங்க கிட்டயே சேத்து வச்சுடுச்சு…!”என்றால் மலர்.

 “மீனா பாவம்ல அவளோட நெலமை தெரியாம நாங்க வேற அவளை தலை முழுகிட்டு,அதுக்கப்புறம் தேடாம கூட விட்டுவிட்டோம். அவ எங்களை நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டு இருப்பால்ல…!”

“ஐயோ…, அப்படி எல்லாம் இல்ல மாமா, என்னதான் நீங்க அவங்கள ஒதுக்கி வச்சுட்டீங்கன்னு அண்ணிக்கு தெரிய வந்தாலும் கூட, இதுநாள் வரைக்கும் உங்களை வெறுத்தோ திட்டியோ அண்ணி பேசி நான் கேட்டதோ கேள்விப்பட்டதோ இல்ல மாமா…! 

நீங்கன்னா அண்ணிக்கு அவ்வளவு உசுரு.., ஏன் நானே கூட அண்ணி ஃபீல் பண்ணும் போது உங்கள பத்தி ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டன்னா என் அண்ணன பத்தி பேசாதன்னு தான் சொல்லுவாங்களே தவிர, எந்த இடத்துலயும் உங்களை விட்டுக் குடுத்து கூட பேச மாட்டாங்க மாமா…,

 அவ்வளவு தங்கமானவங்க மீனா அண்ணி…! 

இப்ப கூட ஒன்னும் இல்ல மாமா நாளைக்கே வான்னு ஒரு வார்த்தை சொன்னா போதும் அவங்க ஆசையா நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு காத்துட்டு இருக்காங்க மாமா…, நீங்க ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க மாமா….!” என்றால் மலர்விழி. 

“கண்டிப்பா சொல்றேண்டி, பாவம் மீனா இத்தன வருஷம் அவள நான் ஒதுக்கி வச்சதே பெரிய தப்பு, இதுக்கப்புறம் நான் அந்த தப்ப பண்ணக்கூடாது.

 நம்ம தர்மனுக்கு கல்யாணம் வருதுல்ல, நம்மளே நேரா போயி பத்திரிக்கை வச்சு அழைச்சுட்டு வருவோமா…?” என்று கேட்டான் கருப்பன்.

“கண்டிப்பா போலாம் மாமா…,நானும் அப்படியே எங்க வீட்ல நம்ம வர்றதை பத்தி சொல்லிரட்டுமா….?”

“இல்ல அதெல்லாம் வேணாம்…! சொல்லாம சஸ்பென்ஸா சர்ப்ரைஸா போலாம்….!” என்றான் கருப்பன்.

“பார்ரா என்னோட காட்டானுக்குள்ளேயும் இப்படி ஒரு விஷயம் ஒழிஞ்சிட்டு இருக்கு….!” என்றால் மலர்விழி.

“ஏய் யாரை பாத்துடி காட்டாங்குற…?”

“வேற யாரு..! நீ தான்யா காட்டான்…! இவ்வளவு நேரம் என்னை போட்டு பாடா படுத்திட்டு இருந்தியே…! நீ தான்யா…!” என்றால் மலர். 

 “ஓ நான் காட்டானா….? காட்டான் எப்படி இருப்பான்னு உனக்கு இன்னொரு மொற தெளிவா காட்டவா….!” என்ற கருப்பன் அவளை கீழே தள்ளி அவளின் மீது படர்ந்தவன் அவள் கூறிய காட்டானின் அர்த்தத்தை அவள் பாணியிலேயே அவளுக்கு தெளிவா காட்டினான் அவளின் முழு சம்மதத்தோடு….! 

 காட்டான் என்று கூறி அவனின் காட்டு தனத்தை முழுமையாக ரசித்து அனுபவித்து இன்பத்தின் எல்லையில் கணவனுடன் உலாவிக் கொண்டிருந்த மலர்விழிக்கு அந்த நிலையில் இருந்து மீள விருப்பமே இல்லாமல் மீண்டவள் “சரிங்க மாமா நேரமாச்சு, ரொம்ப நேரமா என்ன காணோம்னு அத்த தேடுவாங்க….!” என்றால் மலர். 

 “அதெல்லாம் தேட மாட்டாங்க…, இந்நேரம் தர்மன் சொல்லி இருப்பான், நீ உன் ட்ரஸ் எல்லாம் இங்க இருக்குல்ல போய் குளிச்சிட்டு றவைக்கு (இரவுக்கு) வேண்டிய சாப்பாட செய்…!” என்றான் கருப்பன்.

“சரி மாமா நான் போய் குளிச்சிட்டு சாப்பாட்டு வேலைய பாக்குறேன்…!” என்ற மலர்விழி துள்ளலாக எழுந்து குளித்து முடித்து இரவு உணவிற்கான வேலைகளை ஆரம்பித்தாள்.

 கருப்பன் கூறியதைப் போலவே அடுத்த இரண்டு நாட்களில் தன் அம்மா பொண்ணுத்தாயி மற்றும் அவனின் ஆசை மனைவி மலர்விழியை அழைத்துக்கொண்டு தன் அத்தை மட்டும் தங்கையின் வீடான மலர்விழியின் பிறந்த வீட்டிற்கு சர்ப்ரைஸ் ஆக வந்திருந்தான் கருப்பன். 

 தன் மகள் மருமகன் மற்றும் தன் அண்ணன் மனைவியை அங்கே எதிர்பார்த்திராத தேவி அவர்களை இன்முகமாக வரவேற்று கூடத்தில் உள்ள சோஃபாவில் அமர வைத்தவர், தன் மகன் மருமகள் மற்றும் கணவரை அழைத்தார்.

 அனைவரும் கூடத்திற்கு வந்தவர்கள் அங்கிருந்த மூவரையும் இன்முகமாக வரவேற்றனர்.

கருப்பன் நடேசன் மற்றும் ராகுலிடம் “என்ன மன்னிச்சிடுங்க…, உண்மை என்னன்னு தெரியாம நான் அவசரப்பட்டு அப்படி பேசிட்டேன் என்றான். 

 அதனைக் கேட்ட ராகுலும் நடேசனும் 

“ஐயோ மாப்ள என்ன இது பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு…, அதெல்லாம் நாங்க உங்களை எதுவும் தப்பா நினைக்கல நீங்க இந்த மாதிரி பேசி எங்களை சங்கடப்படுத்தாதீங்க…!” என்று கூறினார்கள்.

“சரிங்க மாமா இன்னும் மூணு நாள்ல என் நண்பன் தர்மனுக்கும், அமுதா அத்தையோட பொண்ணு மயிலுக்கும் கல்யாணம். நீங்க எல்லாரும் வரணும்..!” என்று கூறியவன் அவர்களுக்கு பத்திரிக்கை வைத்தான்.

அதனை வாங்கிய தேவியோ “யாரு அமுதா அக்காவுடைய மக மயிலுக்கு கல்யாணமா…?”என்றார். 

“ஆமா அத்தை அவளுக்கு தான் கல்யாணம், என் நண்பன் தான் இந்த தர்மன் இரண்டு பேரும் விரும்பி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க…!” என்றான்.

“கண்டிப்பா வந்துருவோம் மாப்ள….!” என்றவர்கள் அவர்களுக்கான இரவு உணவை சமைத்து விருந்து படைத்து ஒரு நாள் இரவு தங்க வைத்து அவர்களை நன்கு உபசரித்து ஊருக்கு அனுப்பி வைத்தனர் தேவி மற்றும் நடேசன்.

கருப்பன் வேட்டை தொடரும்….

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

 உங்களின் பொன்னான கருத்தை தெரிவியுங்கள் என் அன்பு வாசகர்களே…! 🙏🏻😊

2 thoughts on “கருப்பனின் காரிகையவள் 💝 38

  • thisis a fantastic article, really nice created, i enjoy reading it, i will be back to check out for latest update, keep up the good work and applause. ng.yandaz.com

    Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🙏🏻💖🥰

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!