Skip to content
Post Views: 2,585

கருப்பன் ஆட்டம் 6
Advertisement
மயில் கூறிய விஷயங்களை கேட்ட மயிலின் அம்மா அமுதா அதிர்ச்சியில் சிறிது நேரம் நின்றிருந்தவர் பின்பு கருவிழிகளை திருப்பி மலரை பார்க்க,
Advertisement
Advertisement
அவரின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட மலரோ, அம்மா என்ன மன்னிச்சிடுங்கம்மா, எனக்கு அந்த கல்யாணத்துல துளியும் விருப்பம் இல்லை.
அப்படிப்பட்ட கல்யாணத்தை சகிச்சுக்கிட்டு ஏத்துக்கிட்டா கூட வாழ்நாள் முழுக்க நான் சந்தோஷம் இல்லாம கொடுமையான வாழ்க்கை அனுபவிக்கிறதுக்கு பதிலா செத்துடலாம்னு நினைச்சு தான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன்.
Advertisement
ஆனா அதுக்குள்ள மயில் தான் என்னை தடுத்து இங்க கூட்டிட்டு வந்துட்டா, உங்களுக்கு நான் வந்தது தொல்லையா இருந்தா சொல்லிடுங்கம்மா நான் கிளம்பி போயிடுறேன்” என்று மலர் தயங்கி தயங்கி கூற,
“அட என்னமா நீ இப்படி தயங்கிட்டு இருக்க, நீ இங்க வந்தது சரியான விஷயம் தான். நம்ம அப்பா அம்மாவுக்கு அப்புறம் நம்மளுடைய வாழ்க்கைய முழுசா ஒருத்தன் கிட்ட ஒப்படைக்கிறது இந்த கல்யாணம்தான்.
அப்படி இருக்க வேண்டியவன் நம்ம மனசுக்கு புடிச்சவனா இருந்தா தான் அந்த வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். அப்படி இருக்கும்போது அந்த ஆளு சரியானவனா இருக்கானான்னு பாத்து தேர்ந்தெடுக்க வேண்டியதும் நம்மளுடைய பொறுப்பு தானே,
உங்க அப்பா அம்மா சொன்ன பையன உனக்கு பிடிக்கல, அவன் தப்பானவனா இருக்கும் போது நீ அத எதிர்த்து வேணான்னு சொல்லிட்டு இங்க வந்தது எல்லாம் சரிதான். அதுக்காக சுருக்கு வச்சுக்க போனதெல்லாம் தப்பு தானே!
அந்த நேரம் மட்டும் மயில் அங்க இல்லாம இருந்திருந்தா என்ன ஆகியிருக்குறது? படிச்ச புள்ள நீ இப்படித்தான் அவசரப்பட்டு முடிவு எடுப்பியா?” என்ற கேட்க
“தப்பு தான்மா” என்று தலை குனிந்து கொண்டு நின்றால் மலர்.
“இந்த காலத்து புள்ளைகளை எல்லாம் என்னத்த சொல்றதோ போங்க, சின்ன விஷயத்தை கூட எதிர்த்து நின்னு போராடாமல் இப்படி தற்கொலை பண்றேன் இல்லைன்னா கிணத்திலேயே ஆற்றலையோ குதிக்கிறேன்னு கிளம்பிட்றீங்க
சரின்னு வீட்ல வச்சு பாத்துக்கிட்டா வீட்டுக்குள்ள இருக்க பிள்ளைங்க இப்படி தான் சுருக்கு வச்சிக்கிறது, கைய அறுத்துகிறது. ஏன் தான் இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் இப்பிடி இருக்கீங்களோ?” என்று கூறியவர் மயிலை பார்க்க,
அவளோ ஈ.. ஈ..! என்று இழித்து வைத்தால் அவளை பார்த்த முறைத்தவர் “நீ கூட்டிட்டு வந்ததெல்லாம் சரிதாண்டி இந்நேரம் அவங்க அப்பா அம்மா அந்த கல்யாண மாப்பிள்ளை எல்லாரும் உன்னை தேடி இங்க வந்துட்டு இருப்பாங்களே என்ன பண்ண போற?” என்று அமுதா கேட்டார்.
அப்பொழுது தன் தாய் தந்தையை நினைவு வந்தவளாக முழித்துக் கொண்டு நின்றிருந்தால் மலர்.
அதே நேரம் மலர் வீட்டில் காலையில் மணப்பெண் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் அங்கிருந்து அனைவரும் மணமகளின் தாய் தந்தையரான நடேசன் மற்றும் தேவி மீது கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்க,
அங்கு வந்த மணமகன் மாதேஷோ அவர்களை எரிக்கும் பார்வை பார்த்தவன் நடந்தவற்றை விசாரித்தான்.
அவர்களோ நேற்று இரவு உணவை சாப்பிட்டுவிட்டு மலரும் மயிலும் அவர்களின் அறையில் சென்று உறங்கியது வரை கூறி முடித்திருந்தனர்.
அதன் பின் காலையில் எழும் பொழுது அவர்கள் வீட்டில் இல்லை என்கின்ற தகவலை கேட்டதும் மாதேஷ் தன்னுடைய ஆட்களை அனுப்பி சென்னையில் உள்ள முக்கியமான பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையம், விமான நிலையம் என அனைத்து இடங்களிலும் தேடி முடித்தவன்,
ஹோட்டல்ஸ் பெண்கள் தங்கும் விடுதிகள் ஹாஸ்டல்ஸ் சிறு சிறு கோயில் குளம் என அனைத்தையும் ஒன்று விடாமல் தனது ஆட்கள் மூலம் விசாரித்து விட்டான். ஆனால் எங்குமே மலர் இல்லை.
அந்த செய்தியை இப்பொழுதுதான் அவனின் ஆட்கள் மாதேஷிற்கு கூறியிருந்தனர். தன் முன்பு இருந்த டீபாயை காலால் உதைத்து தள்ளிய மாதேஷ் “ரெண்டு பொட்டச்சிக அவளுகல உங்களால கண்டுபிடிக்க துப்பு இல்ல ச்.. சீ” என்று கூறியவன் மூலையில் அப்பொழுதுதான் தோன்றியது.
அவளின் தோழி மயிலும் உடன் இருந்ததை உடனே நடேசன் தேவி அருகில் வந்தவன் “உன் பொண்ணு கூட ஒருத்தி இருந்தாலே அவ பேர் என்ன?” என்று கேட்க,
“அவ.. அவ பேரு மயிலு” என்றனர் இருவரும்.
“அப்போ அவ கூட தான் உன் பொண்ணு போயிருப்பா இப்ப உடனே அந்த மயிலுக்கு போன் பண்ணி அவ எங்க இருக்கான்னு கேளு” என்று கேட்கவும்,
மலரின் அப்பா நடேசன் அவளின் அம்மா தேவி இருவரும் மாறி மாறி மலரின் எனக்கும் மயிலின் எனக்கும் அழைத்துப் பார்த்தனர். அவர்கள் இருவரின் இணைப்பும் சுவிட்ச் ஆஃப் என்று வரவே
ஓ..ஷீட்…! என்று தனது காலை தரையில் உதைத்தவன் தன்னுடைய நெருங்கிய நண்பனான போலீஸ் அதிகாரி ஒருத்தனுக்கு அழைத்து இருவரின் மொபைல் எண்ணையும் கொடுத்து கடைசியாக அந்த இணைப்பு எங்கே துடிக்கப்பட்டது என்று விசாரிக்க கூறினான்.
மயிலின் அம்மா அமுதா கூறியதைப் போல வந்த சிறிது நேரத்தில் மயில் குடத்தை எடுத்துக்கொண்டு ஊர் மத்தியில் உள்ள குலக்கரைக்கு சென்று தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தாள்.
இரண்டு நடை எடுத்த பிறகும் அமுதா மேலும் தண்ணீர் எடுக்கக் கூறவும் அதற்கு சலித்துக் கொண்ட மயிலோ,
“போமா இதுக்கு மேல என்னால தூக்க முடியாது. நீ என்ன ரெண்டு நட தான தூக்க சொன்ன? நான் தான் ரெண்டு தடவை தூங்கிட்டேன்ல்ல என்னால முடியுது, ஆள விடு நான் ரொம்ப டயர்டா இருக்கேன் தூங்க போறேன் என்று கூறவும்,
“வந்தேன்னு வை வெளக்கமாத்து கட்ட பிஞ்சிடும் வந்து தூங்குறியா இல்லையாடி!” என்று அமுதா அதட்டல் போடவும்,
வீட்டிலிருந்து வெளியில் வந்த மலர் “அம்மா மயிலுக்கு பதிலா நான் தண்ணி தூக்க வரட்டுமா?” என்று கேட்டாள்.
அதற்கு மயிலோ “எங்கடி போற போறேன்குற?” என்று கேட்க
“நானும் அம்மா கூட தண்ணி தூக்க போறேண்டி” என்றாள்.
“உனக்கு தண்ணி குடம் தூக்கத் தெரியுமா? இல்ல முன்ன பின்ன குடம் தூக்கி இருக்கியா?”என்ற மயில் கேட்க,
“இது என்ன பெரிய சாகசம் குடத்த தூக்கி இடுப்புல வச்சா வீட்டுக்கு வந்து சேர போறேன்” என்று அசால்டாக கூறினால் மலர்.
“ஓஹோ..! குடத்தை தூக்கி இடுப்புல வச்சா தண்ணி வீட்டுக்கு வந்துவிடுமா! சரிதான் போதாயி” என்று மயில் கூறியவள் வீட்டில் அமர்ந்து விட,
மலர்விழி அமுதாவுடன் குலக்கரை சென்று தண்ணீர் நிரப்பிய குடத்தை தூக்கி இடுப்பில் வைக்க, அது அவளின் இடுப்பில் அமர்வேனா என்று வழுக்கி கொண்டு வந்தது.
இத்தனைக்கும் மலர் வைத்திருந்த குடம் அளவில் சிறியதுதான். அதுவே அவளுக்கு தூக்கிப் பழக்கம் இல்லாததால் வழுக்கிக் கொண்டிருந்தது.
கருப்பன் செல்வியின் கணவனை அவன் தவறை உணரும் மட்டும் அடித்தவன், பின் ஒரு கட்டத்தில் தனது ஆத்திரம் தீரும் மட்டும் அடி வெளுத்து கொண்டிருக்க, விஷயம் அறிந்து அங்கு வந்த தர்மன் தன் நண்பனை பிடித்து தடுத்தான்.
கருப்பனின் கோபத்தை கட்டு படுத்த தர்மனால் மட்டுமே முடியும் என்பதால் அவனுக்கு தகவல் தெரிவித்திருந்தனர் ஊர் மக்கள்.
பின் தர்மன் அவனை திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தவன் “என்னடா கதிரு, இப்பிடி போட்டு அடிக்குற! செத்து கித்து தொலஞ்சுற போறாண்டா” என்று ஆதங்கமாக கூறினான்.
“இவன மாதிரி ஆளுங்க உயிரோட மண்ணுக்கு பாரமா இருக்கிறதுக்கு செத்து போனாகூட அந்த புள்ள நூறு நாள் வேலை பாத்து பிள்ளைகளை வளத்துக்கும்” என்று கோபமாக கதிரிடம் திரும்பி பேசி கொண்டு வந்தான்.
மலரின் கவனம் குடத்தின் மீது இருந்ததால் பாதையிலோ அல்லது எதிரில் வரும் நபர்கள் மீதும் கவனம் செலுத்தாமல் வந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது அந்த பாதை ஒரு இடத்தில் திருப்பம் வர கருப்பனும் மலரை கவனிக்காமல் திரும்ப கருப்பன் மீது ஒரு பூ பந்தாய் வந்து மோதினால் மலர்விழி.
ஆனால் மலரோ தான் திடீரென்று ஒரு பாறையில் முட்டி நிற்பதை போல் முகம் சுளித்தவள் குடத்துடன் சேர்ந்து தடுமாறி விழ போக, பட்டென சுதாரித்து கொண்ட கருப்பனோ,
இமைக்கும் நொடிகளுக்குள் அவளை இடையோடு கரம் கொடுத்து பிடித்தவன் மற்றொரு கையால் குடத்தில் உள்ள தண்ணீரும் விழாமல் பிடித்து கொண்டான்.
ஒரு வலிய கரம் தனது இடையில் அழுந்துவதை உணர்ந்த மலரோ விழு போகும் பயத்தில் மூடிய தனது விழிகளை திறந்து பார்க்க, தனக்கு மிக அருகில் கருப்பனின் முகத்தை கண்டவள் முதலில் விழி விரித்தவள் பின் பட்டென அவனிடம் இருந்து விலகி நின்று அவனின் முகம் பார்த்தவளோ முகத்தை இறுக்கமாக முகத்தை மாற்றி கொண்டு
“ஏய் இடியட் முன்னாள் ஆள் வர்றது கண்ணு தெரியல பார்த்து வர மாட்ட?” என்று கேட்க,
அதற்கு கருப்பனோ எந்த பதிலும் கூறாமல் அமைதியாக நின்றான். அவனின் அமைதிக்கு காரணம் அவளின் இடை தந்த மென்மையான உணர்வு. கத்தி, அறிவாள், கடப்பாறை, மண்வெட்டி, அடிதடி போன்ற கடினமான வேலை செய்து காய்ச்சு போய் இருந்த கைக்கு அவளின் இடையின் மென்மை இரும்பின் மேல் வைத்த வெண்ணை போல் வழுக்கியதாய் உணர்ந்தான் கருப்பன்.
அவனின் நிலையை பார்த்த மலரோ “என்ன மேன் பாத்துட்டு இருக்க, நான்தான் குடம் தூக்கிட்டு வரேன்ல உனக்கு தெரியல கண்ண எங்க பின்னாடியா வச்சிட்டு வந்த?” என்று மலர் கேட்க,
அந்நேரம் மலரின் அருகில் வந்த அமுதாவோ, “என்னாச்சு மலருமா” என்று கேட்க,
“அது வந்து அம்மா இவரு இவர் வந்து என் மேல இடிச்சிட்டாரு” என்று மலர் கூறியவள் நிமிர்ந்து கருப்பனை பார்க்க,
அவனின் அந்த அழுத்தமான பார்வை மலரின் மீது பதிய அதில் மலரின் பேச்சு தடுமாறி “அம்…அம்மா அ..அது வந்து நா.. நான் தான் தண்ணி தூக்கிட்டு வரும்போது கவன சிதறி இவர் மேல இடிச்சிட்டேன்” என்றாள்.
“நீ கொஞ்சம் கவனமாக வந்து இருக்கலாம்லமா, என்று கூறிய அமுதா தம்பி ஏதோ தெரியாம இடிச்சிரு பாப்பா நீ போயா” என்று கூறவும் கருப்பன் மலரை ஒரு பார்வையை பார்த்துவிட்டு குடத்தை கீழே வைத்து அங்கிருந்து சென்றான்.
போகும் அவனையே திரும்பிப் பார்த்துக் கொண்டே குடத்தை தனது இடுப்பில் வைப்பதற்கு பெரும்பாடுபட்ட மலரோ மனதினில்
‘காட்டான் உடம்பு எப்படி வளர்த்து வெச்சிருக்கான் பாரு, அப்பா லைட் அடிச்சதுக்கே நெத்தி இந்த வழி வலிக்குது, இது உடம்பா இல்ல இரும்பா” என்று புலம்பிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
மாதேஷின் போலீஸ் நண்பன் மாதேஷிற்கு அழைத்து அவர்கள் இருவரின் போனும் இறுதியாக சென்னை பேருந்து நிலையத்தில் கட்டானதாக கூறவே, என்ன என்று சற்றே அதிர்ந்தான் மாதேஷ்.
“ஆமாண்டா ரெண்டு பேரோட போன் சிக்னலும் சென்னை பஸ் ஸ்டாண்டிலயே நின்றுச்சு” என்று அந்த நான் போலீஸ் நண்பன் கூறவும்,
மாதேஷ் தனது ஆட்களோடு அந்த பேருந்து நிலையத்திற்கு வந்தவன் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை
அக்சஸ் செய்து மலரும் மயிலும் எங்கெங்கெல்லாம் சென்றனர் எந்த பஸ்ஸில் ஏறினர் என்பதை கண்டுபிடிக்க முயன்றான்.
கருப்பன் வேட்டை தொடரும்….
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
உங்களின் கருத்து எனக்கு மிகவும் முக்கியம் வாசக பெருமக்களே தயவு செய்து கமெண்ட் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🏻😊
error: Content is protected !!
Very interesting sister..
மிக அருமை…
Mayil Amma sonnathu pola intha kaalaththu pengalukku manobalam , eathaiyum aethirththu nirkkum sakththi miga kuraivu thaan❤️❤️❤️…
Amma sariyaag sonnargal.👌👌👌👌.
Maral, karuppan yatharththa mana mothal arumai 👏👏👏
.
Mathaesh oru vaelai ivargalai kandupiduththu vanthu vitaal, avvalvu thaan…
Waiting for next episode
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻
Mayil amma sonnadhu crct da… Saagaradhu prbl. Ku solution aagadhu… Ponnuga emonotinally week aaidaranga… Malar karuppan sequence etharthama irundhadhu… Iyo indha madhesh ivanga kandupudichita avalo than. Kandipa karuppan thuniya irupa… Super sis🥰
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻