Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல் ❤️ 14

அடுத்த நாள் காலை வானதி எழுந்து குளித்து முடித்து விட்டு வெளியே வந்தாள்…. அப்போது தான் அருளின் வீட்டு சாவி அங்கிருக்கும் மேசையில் இருப்பதை பார்த்து பத்மினியை தேடினாள்….



Advertisement

அப்போது யுகேன் எழுந்து வந்தான்… அவனை அழைத்து சாவியை காட்டி “பெரிய வீட்டு சாவி தானு” என்று சைகையில் கேட்டான்…. அவனும் ஆம் என்று தலை அசைத்து கூறிவிட்டு பின்பக்கம் சென்றுவிட்டான்…..

Advertisement

அவளோ மனதிற்குள் “வீட்டு சாவி இங்க இருக்கு… அப்டினா எங்க தூங்கி இருப்பாரு….நைட் சாப்பிட்டு இருக்க மாட்டாரே… ஒரு  வேளை சாப்பிடலனா ஒன்னும் ஆக மாட்டாரு… என்னமோ பண்ணட்டும்” என்று யோசித்து கொண்டே நின்று இருந்தாள்…..

Advertisement

அவள் யோசனையுடன் அங்கேயே நின்று இருந்தாள்…. யுகேன் மீண்டும் உள்ளே வரும் போது கூட அங்கே நின்று இருந்தாள்…  அவன் வந்து இவள் இப்படி நின்று இருப்பதை பார்த்து அவளை அழைத்து பார்த்தான்… அவள் அப்பொழுதும் யோசனையிலேயே நின்று இருந்தாள்…. அவளை போட்டு உலுக்கி தான் சுயநினைவு கொண்டு வந்தான்….

Advertisement

“ஏன் அண்ணி இங்கயே நின்னு இருக்கீங்க” என்று கேட்டான்…

அவளோ சைகையில் “உன் பெரிய அண்ணா கிட்ட இன்னொரு சாவி இருக்கா டா” என்று கேட்டாள்…. அதற்கு அவனோ “இல்லையே அண்ணி ஒன்னு அம்மா கிட்ட இருக்கும்… இன்னொன்னு என்கிட்ட இருக்கு… அவர் கிட்ட இருக்காது” என்று கூறினான்…

“உன்கிட்ட இருக்க சாவியா இது” என்று அவள் கையில் வைத்து இருந்த சாவியை காட்டி கேட்டாள்…

“இல்ல அண்ணி இது அம்மா கிட்ட இருக்க சாவி… என்கிட்ட இருக்க சாவி உள்ள இருக்கு” என்று கூறினான்…

“நைட் உன் அண்ணா எங்க தூங்கி இருப்பாரு டா… ரெண்டு சாவியும் இங்க தான் இருக்கு…. கடைக்கு போயிட்டாரா” என்று சைகையில் கேட்டாள்….

“இல்ல அண்ணி கடை சாவியும் என்கிட்ட தான் இருக்கு…. இப்போ போய் செல்வா ண்ணா கிட்ட குடுத்துட்டு வரணும்…. அண்ணன் எப்பவும் ஒன்பது மணிக்கு மேல தான் போகும்… நான் தான் ஏழு மணிக்கே செல்வா அண்ணன் கிட்ட குடுத்துட்டு வருவேன்… நைட் செல்வா அண்ணா என்கிட்ட தான் தருவாரு”என்று கூறிவிட்டு “ரெண்டு சாவியும் இங்க இருக்கு…. அண்ணா எங்க இருப்பாருனு தெரியல அண்ணி” என்று கூறினான்…

அப்போது வேலு வீட்டிற்கு வர “என்ன ஆச்சு ரெண்டு பேரும் தீவிரமா பேசிட்டு இருக்கீங்க” என்று கேட்டான்…

“அது வந்து மாமா ரெண்டு சாவியும் இங்க இருக்கு… அண்ணா எங்க இருக்குனு தெரியலயே…. நேத்து மூர்த்தி அண்ணன் போகும் போது அண்ணன் வீட்டுக்கு போயிடிச்சு சொல்லிச்சு… ஆனா சாவி இல்லாம எப்படி போக முடியும்…. பின்பக்க கதவும் மூடிட்டு தான் வந்தேன்… அண்ணன் நைட் எங்க தூங்கி இருக்கும்னு தெரியல…. அம்மா சாவி அண்ணன் கிட்ட கொடுத்து இருக்கும்னு நினைச்சிட்டு நேத்து தேவாவை அடிச்ச கோவத்துல அதை கண்டுக்கல…. ஆனா அண்ணி தான் காலைல பாத்துட்டு கேட்டாங்க…” என்று யுகேன் கூறினான்….

“டேய் அவன் பழைய வீட்டுக்கு போய் இருப்பான்…. அவனே வருவான்… நீ போய் செல்வா ண்ணா கிட்ட சாவி குடுத்துட்டு அவனை கூட்டிட்டு வா” என்று கூறி அனுப்பி வைத்தான்…. அவன் சென்ற பின்னும் வானதி எதோ யோசனையில் தான் இருந்தாள்….

அவள் தலையில் லேசாக கொட்டி “என்ன பாப்பா என்ன யோசனை” என்று கேட்டான்…. அவளோ “அண்ணா உங்க மச்சான் பழைய வீட்டுல இருக்க மாட்டாரு… கண்டிப்பா பெரிய வீட்டுல தான் இருப்பாரு…” என்று சைகையில் கூறினாள்….

“எப்படிடா சொல்ற….” என்று கேட்டான்…. அதற்கு வானதியோ “அண்ணா பழைய வீட்டுக்கு போய் இருந்தா பக்கத்து வீட்டு சித்தி போன் பண்ணி சொல்லி இருப்பாங்க… இல்லனா அண்னன் சொல்லி இருக்கும்…. பெரிய வீட்டுல இருந்தா யாரும் உங்க மச்சானை பார்த்து இருக்க முடியாது… அது தான் யாரும் சொல்லல….கண்டிப்பா பெரிய வீட்டுல தான் இருப்பாரு… வீட்டுக்குள்ள போய் இருக்க முடியாது…. அப்டினா வெளிய இருக்க திண்ணைல தான் அப்டியே தூங்கி இருப்பாரு…. தேவாவை அடிச்ச வருத்தம்… நான் பேசாம போனது எல்லாத்தையும் யோசிச்சு அப்டியே தூங்கி இருப்பாரு…. பனி வேற அதிகமா பெய்யுது என்ன பண்ணாரோ தெரியல…. போய் இந்த சாவியை குடுத்துட்டு வாங்க… யுகி கிட்ட கால் பண்ணி சாவி மட்டும் குடுத்துட்டு வர சொல்லிடுங்க” என்று அவள் அங்கிருந்த அவளின் அலைபேசியில் டைப் செய்து காட்டினாள்…

அவனும் சரி என்று கூறிவிட்டு சாவி வாங்கி கொண்டு அருள் தற்போது இருக்கும் பெரிய வீட்டுக்கு சென்றான்….அங்கு அருள் கண்ணெல்லாம் சிவந்து போய் தலையை தொங்க போட்டவாரு அமர்ந்து இருந்தான்…  அவனுக்கே தெரியாமல் அவன் அரை மணி நேரம் உறங்கியது தான்…. அதன் பின் இரவு கொஞ்சம் கூட உறங்கவே இல்லை….

அதனால் தலையெல்லாம் கலைந்து கண்கள் எல்லாம் நன்றாக சிவந்து இருந்தது…. “டேய் பைத்தியக்காரா… நைட் முழுக்க இப்படியே தான் இருந்தியா…. சாவி வாங்கிட்டு போக வேண்டியது தானு… வானதி வீட்டுக்கு வந்து இருக்க வேண்டியது தானு… உன் ஈகோ தடுக்குதா வர…. எதுவும் விசாரிக்கமா தேவாவை அடிச்சது நீ…. அங்க வராம இங்க வந்து உட்காந்து சீன் கிரியேட் பண்றியா…. இந்தா சாவி வாங்கிட்டு முதல்ல போய் தூங்கி எந்திரி…. நான் சாப்பாடு கொண்டு வரேன்….” என்று கூறி அவனின் கையில் சாவியை திணித்தான்… ஆனால் அவன் அதை பிடிக்கவே இல்லை… அப்டியே அதை கீழே போட்டு விட்டான்….

வேலு தான் கீழே இருந்ததை எடுக்க முற்பட்டான்… அப்போது வானதி வந்து அங்கு நின்றாள்… வந்தவள் வேலுவை எடுக்க விடாமல் தடுத்து விட்டாள்….

அருளை கையை கட்டி முறைத்து பார்த்தாள்… அவன் தானாகவே கீழே குனிந்து சாவியை எடுத்து கொண்டு வீட்டினுள் சென்றான்…. இவர்கள் இருவரும் உள்ளே செல்ல அவன் மேலே குளிக்க சென்று இருந்தான்…

இந்த வீடு அருளின் அப்பா தன் சொந்த சம்பாத்தியத்தில் சிறுக சிறுக சேமித்து பெரிய வீட்டை கட்டி இருந்தார்…. இந்த வீட்டை தான் நாயகியும் அவர் கணவனும் ஏமாற்றி எழுதி வாங்கி இருந்தனர்….

கோர்ட் கேஸ் முடிந்து இவர்களிடமே வீடு திரும்பி வந்து இருந்தது…. நல்ல நாள் பார்த்து இந்த வீட்டிற்கு குடி வந்து இருந்தனர்….

வீட்டிற்கு முன்னே இருப்பக்கமும் திண்ணை வைத்து கட்டி உள்ளே சென்றால் ஹால், கிட்சன், பூஜை அறை, மற்றும்  மூன்று அறைகள் இருந்தது…. ஒன்று பத்மினிக்கு இன்னொன்று தாயம்மா பாட்டிக்கு மற்றொன்று ரஞ்சிக்கு

மேலே முதலில்   யுகேனுக்கு அடுத்து தேவாவுக்கு என்று அடுத்து அடுத்து அவர்களுக்கு இருந்தது…. கடைசியாக அருளுக்கு கொஞ்சம் பெரிய அறை….. மேலே ஒரு மொட்டை மாடி… வீட்டை சுற்றியும் தோட்டம் அமைத்து அழகாக இருந்தது அந்த வீடு….

நேராக வானதி கிட்சன் சென்று மாவு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு சட்னி அரைத்து அவனுக்கு தோசை சுட்டு வைத்தாள்….

அவன் குளித்து விட்டு கீழே வரும் போது வானதி அதை தட்டில் வைத்து விட்டு அவனை பார்க்காமல் வீட்டிற்கு சென்று விட்டாள்…..

அருள் பாவமாக அவள் போவதையே பார்த்து கொண்டு இருக்க வேலுவோ “நீ பண்ணதுக்கு கொஞ்சுவாங்காளா…. ஒழுங்கா பாப்பாவை சமாதானம் படுத்து… தேவா கூட அப்பயே மறந்துட்டான்…. ஆனா பாப்பா கோவமா தான் இருக்கா… நீ சாப்பிடாம இருக்கனு  மனசு கேட்காம வந்து இருக்கா ஒழுங்கா சமாதானம் பண்ணிடு…. நான் வரேன்” என்று கூறி அவனும் கிளம்பிவிட்டான்….

வானதியை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று அருளுக்கு நன்றாக தெரியும்…. தான் செய்த முட்டாள்தனத்திற்கு இது தேவை தான் என நினைத்துவிட்டு வீட்டை பூட்டி கொண்டு வானதியின் வீட்டிற்கு சென்றான்…  அங்கு அவளின் குட்டிமாவின் கையால்   அடி வாங்க போகிறான் என்று தெரியாமல்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!