Skip to content
Post Views: 1,769

தன் முன் மண்டியிட்டு இருந்தவனை நிமிர்த்தி அவன் கண்ணை துடைத்து விட்டு அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு “இனிமே கோவத்தை குறை மாமா” என்று சைகையில் கூறிவிட்டு அவனை அழைத்து கொண்டு ரஞ்சியின் வீட்டிற்கு சென்றான்…
நாளை யுகேனும் பாரதியும் அவரவர் கல்லூரிக்கு செல்ல இருக்கின்றனர்…. அதனால் அனைவரும் ரஞ்சியின் வீட்டில் கூடி இருக்கின்றனர்…
Advertisement
அந்த நாள் சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்து இருந்தது…. வானதி பாரதியின் பாட்டியிடம் கண்டிப்பாக கூறிவிட்டாள்… இனிமேல் அவர் அவளின் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று…. அவரும் சரி என்று கூறிவிட்டார்….
Advertisement
Advertisement
அடுத்த நாள் காலை பெரியவர்களிடமும் தேவா வேலு ரஞ்சியிடமும் விடைபெற்று கொண்டு அருள் வானதி யுகேன் பாரதியை அழைத்து காரில் புறப்பட்டனர்….
முதலில் பாரதியை சேலத்தில் உள்ள அவள் கல்லூரி விடுதியில் விட்டு விட்டு சென்னை நோக்கி பயணத்தை தொடங்கினர்…
Advertisement
பாரதியிடம் அருள் வானதி இருவரும் மாறி மாறி அறிவுரை கூறிவிட்டு அவளே “ஐயா சாமிகளா நான் தனியா எங்கயும் போக மாட்டேன்.. தினமும் போன் பண்ணுவேன்… மாசத்துக்கு ரெண்டு தடவ வந்துட்டு போவேன்” என்று அவர்கள் கூறியதை கூறி நிறுத்தி வைத்து இருந்தாள்….
அவளை விட்டு விட்டு யுகேனை சென்னையில் அவனுடைய கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்டு அவனிடமும் அறிவுரைகளை வாரி வழங்கினர்… பின் ஒரு நாள் மட்டும் அருளும் வானதியும் சென்னையிலேயே தங்கினர்….
சென்னையில் அருளின் நண்பன் குடும்பம் ஒன்று உள்ளது… அவர்கள் இன்று கண்டிப்பாக இங்கு தங்கிவிட்டு தான் செல்ல வேண்டும் என்று கூறியதால் அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலை அவர்கள் வீட்டில் காலை உணவு உண்டு விட்டு சென்னை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்…..
அருள் வானதிக்கான ஒரு நெடுந்தூர தனிமையான பயணம்…. இதுவரை இருவருக்கும் இவ்வளவு தனிமையான பயணம் அமைந்தது இல்லை…. தற்போதும் இருவரும் அந்த தனிமையை ஆழ்ந்து அனுபவித்தனர்….
நெடுஞ்சாலை பிரிவு ரோட்டில் காரை நிறுத்திய அருள் அங்கிருந்த சிறிய கோவிலுக்கு வானதியை அழைத்து சென்றான்…
அங்கு சாமி கும்பிட்டுவிட்டு வெளியே அழைத்து வந்தவன் அங்கு இருந்த மரத்திற்கு அருகில் அழைத்து சென்றான்… அது ஒரு பெரிய மரம்… அங்கு உட்கார்ந்து இளைப்பாறவே நிறைய கற்கள் போட்டு வைத்து இருந்தனர்….
அவளை உட்கார வைத்து அவள் பக்கம் திரும்பி அமர்ந்த அருள் அவள் கையை மென்மையாக பிடித்து கொண்டு பேச ஆரம்பித்தான்….
“குட்டிமா உனக்கு என் மேல எந்த கோவமும் இல்லையே” என்று அவள் கண்ணை பார்த்து கேட்டான்…
அவளோ புரியாமல் “என்ன கோவம்???” என்று சைகையில் வினவினாள்…
“என் கோவத்தால ரொம்ப கஷ்டம்ல எல்லாருக்கும்…. எவளோ சந்தோசமா ஆரம்பிச்ச நாள்… என்னோட முன் கோவத்தால எப்படி முடிஞ்சு போச்சு…” என்று சோகமாக வினவினான்…
அவள் போனை எடுத்து டைப் செய்ய முற்படும் போது அவளை தடுத்து “குட்டிமா நீ டைப் செய்யாத… நீ எப்பயும் போல சொல்லு… என்கிட்ட மட்டுமாச்சும் நீ சொல்ல வரதை அப்டியே சொல்லு” என்று கூறி அவளை சைகையிலேயே கூற கூறினான்….
அவள் சைகையிலேயே கூற ஆரம்பித்தாள்…. “எனக்கு இன்னமும் உன் மேல கோவம் தான் மாமா… தேவா அப்படி பண்ணுவான்னு நீ கொஞ்சமாச்சும் யோசிச்சு இருக்கனும் மாமா…. அன்னிக்கு நீ அவனை அடிக்காம இருந்து இருந்தா அந்த பிரச்சனைய நீ வேற மாதிரி மாத்தி இருக்கலாம்…. ஆனா அவனுக்கு எவளோ கஷ்டமா இருந்து இருக்கும் … அத்தனை பேர் முன்னாடியும் அவனை அடிச்சா நம்ம அண்ணன்னே நம்மல நம்பலயேனு அவனுக்கு எப்படி இருக்கும்…. உன் முன்கோவத்தை கொஞ்சம் குறை மாமா ப்ளீஸ்…” என்று அவனுக்கு புரியுமாறு மெதுவாக சைகையில் அழுகையுடன் கூறினான்….
“ப்ளீஸ் அழுகாத குட்டிமா… சத்தியமா இனிமே என் கோவத்தை நான் கொஞ்சம் கொஞ்சமா குறைக்குறேன்….” என்று அழுத்தமாக கூறினான்….
அவள் அப்டியே அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்… அவனும் அவளுக்கு வாகாக அமர்ந்து கொண்டு “இப்படி உன்கூட பேசனும்னு எத்தனை நாள் ஆசை தெரியுமா…. துபாய்ல இருக்கப்ப நான் என்னோட துக்கம் சந்தோசம்னு சொல்லிக்க கூட ஆளு இல்லை… முதல் முதல்ல நான் துபாய் போனப்பா நான் நானாவே இல்லை…. அப்போ உன்கூட பேச கூடிய சூழ்நிலையும் இல்ல… ரொம்ப தவிச்சு போயிட்டேன்…. அடுத்து இங்க வந்துட்டு போனப்பறம் தான் நான் நானா இருந்தேன் அங்க….
திரும்பியும் ஒரு வருஷம் உங்களை பாக்காம இருந்தது… திரும்பியும் சென்னை வந்தப்பறம் எப்போ டா ஒரு வருஷம் போகும்… நம்ம ஊருக்கு எப்போடா வருவோம்னு இருந்தது… எப்பயும் உன்னை பாத்துட்டு இருக்கலாம்… நம்ம ஊருல பசங்க கூட இருக்குறது…. அம்மா கையால சாப்பிடுறது… அப்பத்தா கிட்ட திட்டு வாங்கிட்டு உன்னை சீண்டிட்டு தம்பிங்க கூட சண்டை போட்டுக்கிட்டு ரஞ்சி கூட பேசுறதுனு இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன் தெரியுமா…. இன்னும் ஒரே குறை நீ எப்பயுமே என்கூட இருக்கனும்…” என்று கூறி அவளின் உச்சியில் முத்தமிட்டான்…
அவள் நிமிர்ந்து அவனை சிரிப்புடன் பார்த்தவிட்டு மீண்டும் அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்….
பின் வானதி எழுந்து அருளிடம் சைகையில் “மாமா நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தா அந்த குழந்தை என்னை மாதிரி குறையா பிறந்தா என்ன மாமா பண்ணுவ…” என்று கேட்டாள்…
அவள் அப்படி கேட்டவுடன் அவளை முறைத்து விட்டு காருக்கு சென்றுவிட்டான் அருள்… இவளும் பாவமாக அவன் பின்னே சென்று காரில் அமர்ந்தான்….
அவள் ஏறியவுடன் கோவத்தில் கத்த தொடங்கிவிட்டான்…. “அவங்க என் குழந்தைங்கடி அவங்க எப்படி பிறந்தாலும் ராஜா இல்லனா ராணி மாதிரி பாத்துப்பேன்டி பைத்தியக்காரி… இப்படி இன்னொரு தடவ யோசிக்காம பேசுனா வெச்சிக்கோ அவளோ தான்… நீயே எப்படி உன்னை குறைனு சொல்லிக்கலாம்.. எங்களுக்கு அப்படி எல்லாம் ஒன்னும் தெரியல…. இந்த மாதிரி ஒரு எண்ணம் எதோ உன் மனசுல வந்ததுனா நான் மனுஷனா இருக்க மாட்டேன்டி” என்று வேகமாக காரை இயக்கினான்….
அவனின் வேகம் அவளுக்கு பயமாக இருக்க மெல்ல மெல்ல அவனின் தோளில் சாய்ந்து தன் பயத்தை அவனுக்கு காட்டினாள்…. அதன்பிறகு தான் அவனுக்கு வேகமாக காரை ஓட்டுவது தெரிந்து கொஞ்சம் வேகத்தை குறைத்தான்….
மீண்டும் வேறு பிரிவு ரோட்டின் வழியில் காரை நிறுத்தி அவளை பார்த்து “குட்டிமா தயவு செஞ்சி இந்த மாதிரி எல்லாம் யோசிக்காத… உன்னை யாருமே குறை உள்ள பொண்ணா பாக்கல…. ப்ளீஸ் இப்படி எல்லாம் யோசிச்சு டென்ஷன் ஆகாத… நீயே இப்படினா நீ போற ஸ்கூல்ல எத்தனை சின்ன பசங்க இருக்காங்க…. அவங்க எவளோ மனசு கஷ்டப்படுவாங்க நாம ஏன் மத்த பசங்க மாதிரி இல்லனு எப்படி யோசிப்பாங்க…. நீயே இந்த மாதிரி உன்னை நினச்சா அவங்க மனசு எப்படி இருக்கும் யோசி… நீ உனக்கு இருக்குறது குறைனு நினச்சா அந்த சின்ன பசங்க என்ன நினைப்பாங்க…. நீதான் அவங்களுக்கு இது எல்லாம் குறை இல்லனு அவங்களுக்கு புரிய வைக்கணும்… இனிமே இப்படி யோசிக்க கூடாது குட்டிமா” என்று அவளிடம் மென்மையாக கூறினான்…
அவளும் கண்ணீருடன் அவனை பார்த்து தலையசைத்து விட்டு கன்னத்தில் அவன் எதிர்பார்க்கா நேரம் முத்தமிட்டு விட்டு மீண்டும் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்….
அவன் அவளிடம் “குட்டிமா கார் நீ கொஞ்ச நேரம் டிரைவ் பண்றியா???” என்று கேட்டான்… அவளும் ஒத்து கொண்டு மாற்றி அமர்ந்தாள்… அவள் கையில் கார் பொறுமையாக செல்ல அருள் அவளையே பார்த்தாவாரு இருந்தான்….
அவனின் பார்வையில் வெட்கம் வந்தாலும் அதை மறைந்து கொண்டு காரை ஓட்டினாள்… அவன் கண்ணில் அவளுக்கான ரசிப்பு இருந்தாலும் அவன் மனதில் தேவி இப்படி எல்லாம் பேச மாட்டாளே யாரோ அவளை பேசி குழப்பி இருக்காங்க…. கிழவி கிட்ட இதை பத்தி பேசனும் என நினைத்து விட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்… அது தான் அவனோட குட்டிமாவை பாக்குறது….
error: Content is protected !!