Skip to content
Post Views: 1,599

பத்மினியும் கமலாவும் ஜோசியர் முன் அமர்ந்து இருந்தனர்.. ஜோசியர் அருளின் ஜாதகத்தை பார்த்து கொண்டு இருந்தார்.. இரண்டு மூன்று முறை நன்றாக பார்த்துவிட்டு இருவரிடமும் பேச ஆரம்பித்தார்….
“இந்த ஜாதககாரருக்கு ஏற்கனவே கல்யாணம் பேசி முடிச்சு கல்யாண்ம் நடக்காம போய் இருக்கா” என்று கேட்டார்…
Advertisement
“ஆமா ஐயா.. ஆனா ஒரு பிரச்சனைல நடக்கல…” என்று கூறினார் பத்மினி…
Advertisement
“ஹ்ம் இந்நேரத்துக்கு இவருக்கு கல்யாணம் ஆகி இருக்கும்… ஒரு இக்கட்டான சூழ்நிலைல நடந்து இருக்கா…” என்று கேட்டார்….
Advertisement
“ஆமா ஐயா அதை பத்தி பேச தான் வந்தோம்… நேரம் காலம் எதுவும் பாக்கல…” என்று கூறினார் பத்மினி
Advertisement
“எந்த நேரத்துல நடந்தது… என்னிக்கு நடந்தது” என்று கேட்டார் அவர்…
“முந்தாநாள் காலைல ஒரு ஒன்பதரை இருக்கும் ஐயா”என்று கூறினார் பத்மினி….
“நல்ல நாள் நல்ல நேரம் தான்… கடவுள் ஆசீர்வாதம் எப்பயும் உங்க பையனுக்கு இருக்கு… ஆனா ஒரு சிக்கல்… உங்க பையன் ஜாதகத்துல ரெண்டு தடவ கல்யாணம்னு இருக்கு…” என்று கூறினார் ஜோசியர்…
அதை கேட்டு கமலாவும் பத்மினியும் அதிர்ந்து விட்டனர்… அவர்களின் அதிர்ச்சியை பார்த்து “கவலை படாதீங்க… ரெண்டு தடவ கல்யாணம் நடக்கும்னு தான் இருக்கு… ஆனா ரெண்டு தாரம்னு இல்ல…. ஒரு நல்ல நாள் பார்த்து நீங்க ஆசைப்படுற மாதிரி கூட கல்யாணம் பண்ணுங்க.. அப்படி பண்ணவாட்டி இப்போ கட்டுன தாலியை கோவில் உண்டியல்ல போட்ருங்க… வேற எந்த பிரச்சனையும் இல்ல… உங்க குலதெய்வ கோவில்ல பொங்கல் வெச்சிட்டு அந்த தாலியை கழட்டி போடுங்க எந்த பிரச்சனையும் இல்ல… ரெண்டு ஜாதகத்துக்கும் இனிமே நல்ல காலம் தான்… இதுவரைக்கும் அவங்க பட்ட கஷ்டம் எல்லாத்துக்கும் சேர்த்து இப்ப சந்தோசமா இருப்பாங்க… இதுல நல்ல நாள் நல்ல நேரம் எல்லாம் குறிச்சு இருக்கேன்… உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்க பண்ணுங்க” என்று கூறினார்…
அதை கேட்ட பின் தான் இருவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது… அதன் பின் அவருக்கு நன்றி கூறி வீட்டை நோக்கி சென்றனர்….
“அண்ணி ஒரு நிமிசத்துல அந்த ஜோசியர் பயப்பட வெச்சிட்டாரு அருளுக்கு ரெண்டு கல்யாணம் நடக்கும்னு…. இப்போ தான் நிம்மதியா இருக்கு… வானதி கிட்ட தேதியை காட்டி அவளுக்கு எந்த தேதி தோது படும்னு கேட்டு அந்த நாள்லயே குலதெய்வ கோவில்ல நம்ம வீட்டு ஆளுங்களை வெச்சு கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே பொங்கல் வெச்சிட்டு அன்னிக்கு சாயந்திரம் வரவேற்பு வெச்சிக்கலாம்” என்று பத்மினி கூறினார்…
கமலாவும் அதை அமோதித்து “நீங்க சொல்றது சரி தான் அண்ணி.. வானதி கிட்ட கேட்டு தேதியை குறிச்சிட்டு வேகமா வேலையை ஆரம்பிக்கணும்….” என்று அவரும் கூறினார்…
இருவரும் பஸ்சில் ஏறி மேலூர் வந்து வீட்டை நோக்கி நடந்தனர்… வீட்டை அடைந்தவுடன் பாட்டிகள் இருவரும் ரஞ்சி பாரதி வானதி மட்டுமே இருந்தனர்….
ஆண்கள் அனைவரும் வெளியில் சென்று இருந்தனர்…. தாயம்மா பாட்டி தான் “ஜோசியர் என்ன சொன்னாரு பத்மினி…” என்று கேட்டார்…..
ஜோசியர் கூறியதை அனைத்தும் பாட்டியிடம் கூறிவிட்டு வானதியிடம் “உனக்கு எந்த தேதி தோதுபடும்னு சொல்லு வானதி ம்மா” என்று அவளிடம் தேதிகளை காட்டினார்…..
அவளும் இரு தேதியை காட்டினாள்…. ஒன்று ஒரு வாரத்தில் வரும் தேதி… இன்னொன்று பதினைந்து நாட்களில் வரும் தேதி…. பெண்கள் அனைவரும் பதினைந்து நாட்கள் கழித்து வரும் தேதி சரியென்று கூறிவிட்டனர் …. ஆண்கள் வந்தவுடன் அதை கூறி அவர்களிடம் சம்மதம் வாங்கிவிட்டனர்….
அப்போது தான் வேலு விளையாட்டாக ஒன்று கூறினான்… அதை கேட்டு அருள் அதிர்ந்துவிட்டான்….
அது வேறு ஒன்றும் இல்லை… வேலு வானதியை இந்த பதினைந்து நாட்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறினான்…..
“அத்தை ஒரு பதினஞ்சு நாள் வானதிம்மா எங்க வீட்டுல இருக்கட்டும்… இப்போ தான் முறைப்படி கோவில்ல திரும்பியும் கல்யாணம் பண்ண போறோமே… முறைப்படியே எல்லாம் பண்ணலாம்…” என்று கூறினான்….
பத்மினியோ என்ன கூறுவது என்று தெரியாமல் அருளையும் வானதியையும் தான் மாறி மாறி பார்த்தார்… வீட்டு மாப்பிளை கூறியதை வேண்டாம் என சொல்லவும் மனது இல்லை அவருக்கு….
முதலில் ரஞ்சியும் வானதியும் கூட அதிர்ச்சியில் அவனை பார்த்தனர்… அதன் பின் அவன் முகத்தில் தெரிந்த குறும்பில் சிரித்து விட்டு அருளை தான் பார்த்தனர்…. ஆனால் அருள் அதை எல்லாம் கவனிக்கவில்லை….
“அது எல்லாம் வேண்டாம் அது தான் எங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சே… அவ இங்கயே இருக்கட்டும்… உங்க வீட்டுக்கு எல்லாம் வேண்டாம்.. என் பொண்டாட்டி என் கூட தான் இருப்பா” என்று வேக வேகமாக கூறினான்….
அவனை பார்த்து அனைவரும் சிரிக்க வானதி மட்டும் தலையில் அடித்து கொண்டாள்…. அனைவரின் சிரிப்பு சத்தத்தில் தான் வேலு தன்னை கேலி செய்கிறான் என்று தெரிந்து கொண்டு வானதியை பார்த்து இளித்து கொண்டே வேகமாக மாடி ஏறிவிட்டான்….
அடுத்து அனைவரின் பார்வையும் வானதியை நோக்கி சென்றது… அவளும் வேகமாக அறைக்கு சென்றுவிட்டாள்… அங்கு சிரித்தவாரு கட்டிலில் அமர்ந்து இருந்தவனை தலையணை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்….
“அடியே குல்பி எதுக்கு இந்த அடி… எல்லாம் உன் அண்ணன்காரன் தானு பண்ணான்… அவன் உன்னை கூட்டிட்டு போறேன்னு சொன்னதும் கொஞ்சம் ஷாக்… அதுல படபடனு பேசிட்டேன்… எல்லாம் உன் மேல வெச்சு இருக்க லவ்டி லவ்…..” என்று அடித்து கொண்டு இருப்பவளின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்து அணைத்தவாறு கூறினான்…
அவளும் அவன் நெஞ்சில் குத்திவிட்டு மீண்டும் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்…
ஒரு நிமிடம் அவன் நெஞ்சில் சாய்ந்து நின்றவள் பின் அவனை பிடித்து கட்டிலில் தள்ளிவிட்டு கீழே ஓடி விட்டாள்… அருளும் சிரித்து கொண்டே முகம் கழுவிவிட்டு கீழே சென்றான்…
அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு உண்டுவிட்டு கல்யாண ஏற்பாட்டை பற்றி பேச ஆரம்பித்தனர்…
முதலில் வானதி காலேஜ் லீவ் போட்டு இங்கு வீட்டில் இருக்கும் இருவரை காலேஜ் போக சொன்னாள்… இருவரும் சிணுங்கி கொண்டே மறுத்தனர்… இருவரையும் மிரட்டி “நீங்க என்ன ஸ்கூல் படிக்குறிங்களா ப்ரோபஸ்சனல் கோர்ஸ் படிக்குறிங்க… ஒழுங்கா காலேஜ் போங்க… லீவ் டேஸ்ல தான் அந்த கல்யாண நாள் வருது… ஒழுங்கா அன்னிக்கு வாங்க… பதினஞ்சு நாளுக்கு லீவ் போட போறிங்களா…” என்று சைகையில் மிரட்டி ஒத்துக்கொள்ள வைத்தாள்….
யுகேன் அப்போதே சென்னை கிளம்பி இருக்க பாரதியும் கிளம்பி இருந்தாள்… தேவா தான் கார் ஓட்டினான்… முதலில் பாரதியை அவள் கல்லூரியில் விட்டுவிட்டு அடுத்து யுகேனை பஸ்சில் ஏற்றி விட புதிய பேருந்து நிலையம் சென்றான்… அவனை ஏற்றிவிட்டு இரவு தான் வீடு திரும்பினான்…
அதற்குள் வீட்டில் அனைத்தும் பேசி முடித்து இருந்தனர்… அனைவரும் ஒரு ஒரு வேலை எடுத்து கொண்டனர்… ஆனால் அருள் வானதிக்கு ஒரு வேலையும் சொல்லவில்லை… வானதியை அந்த பதினைந்து நாட்கள் பாட்டி பள்ளிக்கு விடுமுறை எடுக்க முடியுமா என்று கேட்டார்… அவளும் ஒத்துக்கொண்டாள்….
பத்மினியும் தேவாவும் அனைவரையும் வரவேற்புக்கு அழைப்பு விடுத்தனர்… அருளின் குடும்பம் அனைவரும் அந்த நாளுக்காக ஆவலாக காத்து இருந்தனர்… அந்த நாளும் சந்தோசமாக விடிந்தது…
யுகேனும் பாரதியும் முதல்நாள் மாலை தான் வீட்டிற்கு வந்து இருந்தனர்… குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே போல் சிகப்பு நிறத்தில் ஆடை எடுத்து இருந்தனர்…பெண்கள் அனைவருக்கும் சிகப்பு நிற சேலை… ஆண்கள் அனைவருக்கும் சிகப்பு நிற சட்டை பின் பட்டு வேட்டி… இரண்டு பாட்டிகள் ரித்து குட்டிக்கும் கூட சிகப்பு நிறத்தில் ஆடை…
ஊரே அசந்து போய் பார்த்தது…. அவர்கள் பார்ப்பதை பார்த்து இரண்டு பாட்டிகள் தான் தங்களுக்குள் திட்டி கொண்டனர்… “பாக்குறாங்க பாரு கொள்ளி கண்ணுங்க… நைட் வந்து சுத்தி போடணும் எல்லாருக்கும்” என்று பேசிக்கொண்டு வந்தனர்…
கோவிலில் எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்து இருக்க கோவில் பூசாரி சாமிக்கு தீபாரதனை செய்துவிட்டு இவர்களுக்கு மாலையை கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தார்… இருவரும் மாலை மாற்றி கொண்டனர்…
பின் தாலி சாமி பாதத்தில் வைத்து கொண்டு வந்து கொடுத்தார்… அருள் சாமியை கும்பிட்டு விட்டு தாலியை வாங்கி குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்தான்… அனைவரும் சந்தோசமாக தலை அசைத்தனர்… பின் வானதியை பார்த்தான்…
அவள் ஆனந்த கண்ணீருடன் அவனை பார்த்து தலையசைத்தாள்… அவனும் சந்தோசத்துடன் அவளின் கழுத்தில் இரண்டாவது முறையாக தாலி கட்டி இருந்தான்…. அதன் பின் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து விட்டு அருள் பஞ்சாயத்தில் கட்டிய தாலியை அவனே கழற்றி உண்டியலில் போட்டு இருந்தான்.. அதன்பிறகு அனைவரும் வீட்டிற்கு சென்றனர்… ஆண்களில் அருள் மட்டும் வீட்டில் இருக்க மற்றவர்கள் எல்லாம் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனிக்க சென்று இருந்தனர்…
பெண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.. அறையில் அருளும் வானதியும் கை கோர்த்து சோபாவில் அமர்ந்து இருந்தனர்.. இருவரும் பேசிக்கொள்ளவில்லை… ஆனால் இருவரும் அவ்வளவு சந்தோசமாக இருந்தனர்….
error: Content is protected !!