Skip to content
Post Views: 394
அத்தியாயம் – 10
இந்தியா கேட், புதுதில்லி.
Advertisement
மறுநாள் காலை என்ன முயன்றும் வசுந்தராவால் அதிகாலை ஓட்ட நேரத்திற்கு எழுந்து கொள்ள முடியவில்லை. இருந்த அசதியில் வருணனுக்கு செய்தி அனுப்பவும் கூட மறந்து விட்டார்.
வழமையான நேரத்திற்கு வந்து விட்ட வருணன், சிறிது நேரம் காத்திருந்து பார்த்து விட்டு தனியே ஓடத் துவங்கினார். மனதினோரம் சிறு ஏமாற்றம் எழாமல் இல்லை. ப்ரதாப்பை அழைத்தாவது கேட்டிருக்கலாம் என்ற யோசனை பாதி தூரம் ஓடிய பிறகே வந்தது.
Advertisement
Advertisement
அவர்களது கல்லூரிக் காலத்தில் இருவரும் நாள் தவறாமல் வந்து விடுவர். வருணன் தில்லியில் இருக்கும் போதெல்லாம் தனியாக வந்து விடுவார் தான். அதையெல்லாம் யோசித்து தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டார்.
என்றாலும் அன்றாட வாழ்வில் வசுந்தரா அருகில் இல்லாதது வருணனுக்கும் புதிதான விஷயம் தான். ஆரம்பகட்ட நாட்கள் ஆதலால் அவருக்கு அது மிக கடினமாகவே இருந்தது. வசுந்தரா அருகில் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் அணுகவும் கூட முடியாத இடத்தில் அல்லவா இருக்கிறார்! வசுந்தரா இருக்கும் இடத்தில் இருந்து சில மைல்களே தள்ளி இருந்து கொண்டு அனுபவிக்கும் இந்த வேதனைக்கு தில்லிக்கும், கோவைக்கும் இருக்கும் இடைவெளியே மேல் என்று தோன்றி விட்டது இன்று.
Advertisement
இங்கிருந்து கோவை சென்று விட்டால் கூட நன்றாக இருக்கும் என்றே வருணன் நினைத்தாலும், தேவராஜனும், தாரா தேவியும் தான் அவரை இங்கே பிடித்து வைத்திருந்தனர். வசுந்தராவிற்கு ஒரு நல்ல அடித்தளத்திற்கு உதவ வேண்டும் என்பதே அவர்களது முதன்மை காரணமாக இருந்தாலும், வேறு சில காரணங்களும் இருந்தன.
அமெரிக்காவின் சுங்க வரி குறித்தான நேற்றைய செய்திகளைப் படித்த பின்னர், இந்திய அரசு தரப்பில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படாதது ஒரு பக்கம் வருணனின் மூளையை குடைந்து கொண்டிருந்தது. இன்று வசுந்தராவிடம் பேச முடியாததால், அதைக் கொண்டு எதுவும் பிரச்சனையோ என்று வேறு யோசனை ஓடியது.
பல்வேறு யோசனைகளுக்கு நடுவே அன்றைய நாளுக்கான திட்டமிடலில் மனம் சென்று விட, ஓட்டத்தை விரைவாகவே முடித்துக் கொண்டு காலை உணவைக்கூட தவிர்த்து விட்டு கட்சி அலுவலகத்தில் வேலையை ஆரம்பித்து விட்டார் வருணன். வரவிருக்கும் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம், கூட்டணி பற்றிய கலந்துரையாடல்கள் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தன. ஆதலால் வருணனுக்கு தலைக்கு மேல் வேலை இருக்க, ம.ம.க வின் கட்சி அலுவலகத்தில் பரபரப்புக்கு பஞ்சம் ஏதும் இல்லை.
தாரா தேவியும் எப்போதும் வரும் நேரத்திற்கு முன்னரே வந்திருக்க, அவருக்கு முன்னரே அறையில் அமர்ந்திருந்த வருணனைப் பார்த்து ஆச்சரியமாக புருவத்தை உயர்த்தினார்.
“இஸ் எவிரிதிங் ஆல்ரைட் வருண்?” என்ற சத்தத்தில் திரும்பிப் பார்த்த வருணன், எழுந்து அவரிடம் வந்தார்.
“எஸ் மேம். ஜஸ்ட் வாண்ட்டட் எ ஹெட் ஸ்டார்ட் ஃபார் த டே. இந்தக் கூட்டணி விஷயம் பேச நிறைய பேர் வந்துடுறாங்கல்ல. அதுக்கு முன்னாடியே கொஞ்சம் பீஸ்ஃபுல்லா மித்த வேலை பார்த்துடலாம்னு வந்துட்டேன். நீங்க என்ன இவ்ளோ சீக்கிரம்?”
“சேம் ரீசன் தான் வேறென்ன! இன்னிக்கு உதயன் வர்றேன்னு சொல்லிருக்காரு. தமிழ்நாட்டுல நான் கேட்ட சீட்ஸ் கிடைக்கிறது கஷ்டம்னு மணிவாசகம் சார் ஏற்கனவே ஃபோன்ல சொல்லிட்டாரு. அது பத்தி பேச தான் உதயன் வர்றாரு.
சரி அதெல்லாம் இருக்கட்டும், நீ சாப்பிட்டியா?” என்றவர் கடிகாரத்தில் ஒரு நொடி கண்பதித்து,
“கண்டிப்பா இந்த டைம்ல சாப்பிட்டுருக்க மாட்ட. சோ கிவ் மீ கம்பெனி, கம் கம்” என்று உணவு அறைக்கு கையோடு அழைத்து வந்து விட்டார். மேசையில் இருந்தவற்றை திறந்து பார்த்தவர்,
“ஆலூ பரோட்டா தான் இருக்கு போல. அது ஓகே வா?” என்க,
“நீங்க விடுங்க மேம், நான் பார்த்துக்குறேன். நமக்கு இதெல்லாம் காலாங்காத்தால செட் ஆகாது, இட்லி தோசை தான். மே பி டோஸ்ட் அண்ட் எக்ஸ் எடுத்துக்குறேன்” என்ற வருணன், வாட்டிய ரொட்டியில் வெண்ணெயைத் தடவிய படி,
“கேபினட் மீட்டிங் முடிஞ்சப்பறம் உதய் அண்ணா என்கிட்ட பேசினார் மேம். அவங்க அசெம்பிளி எலெக்ஷன்ல தான் ஃபுல் ஃபோக்கஸ்ல இருக்காங்க. இந்த தடவை நடிகர் வெற்றி வேந்தனோட, வேந்தன் மக்கள் கழகத்துக்கு (வே.ம.க – VMK) கன்னித் தேர்தல்!
அவரோட ஃபேன்ஸ் பேஸ் வச்சு, மெஜாரிட்டி வாக்குகள் எடுக்காட்டியும், கணிசமா ஓட்டைப் பிரிப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ மணிவாசகம் சார் நமக்கு சீட் கொடுக்குறது கஷ்டம்னு சொன்னது ஒன்னும் சர்ப்ரைஸ் கிடையாது, எதிர்பார்த்த விஷயம் தான்!” என்றவாறு, தாரா தேவியின் அருகில் வந்து அமர்ந்தார்.
“ஹம்ம், கரெக்ட் தான். ஆனா என்னோட கவலை என்னன்னா, SPP எப்பவும் பிளவுபட்ட தேசிய கட்சியா இருந்துருமோன்றது தான். அதுவும் சவுத்ல என்ன பண்ணாலும், லோக்கல் எலெக்ஷன்ல ஒன்னும் கிழிக்க முடியலன்றது வெரி ஃப்ரஸ்ட்ரேட்டிங்!” என்றார் தாரா தேவி வருணனை அளவெடுக்கும் பார்வையுடன்.
அது புரிந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,
“மாநில கட்சிகள், கட்சித் தலைமைகள் எல்லாம் ரொம்ப ஸ்டிராங் மேம். அதுக்கு நேரெதிரா பல வருஷங்களா தேசிய தலைமைகள் பெருசா இம்ப்ரெசிவ்வா எதுவும் பண்ணல. நம்ம கட்சியோட பெரிய பின்னடைவு வாரிசு அரசியல் தானே” என்றார் வருணன் நிதானமாக.
“ம்ம்ம் இது கண்டிப்பா சேஞ் பண்ணனும் வருண். அதுக்காக தான் நான் வசுந்தராவுக்கு பி.எம் போஸ்ட்டே தூக்கி குடுத்துருக்கேன்! உதயனுக்கும் அவங்க பார்ட்டி எம்.பிஸ்கும் நல்ல மினிஸ்டர் போஸ்ட் குடுத்துருக்கோம்.
நீ தான் ஃபுல் ஸ்டேரடஜி லீட் பண்ற. இன்னும் வேற என்ன தான் பண்றது தமிழ் நாட்டு மக்கள் மனசுல SPP எடம் பிடிக்கிறதுக்கு?” என்ற தாரா தேவி, கையில் வைத்திருந்த முட்கரண்டியை சலிப்புடன் தட்டில் எறிந்தார்.
அந்தக் கேள்விக்கு உடனே எந்த எதிர்வினையும் ஆற்றாமல், வாயிலிருந்த ரொட்டியை மெதுவாக விழுங்கிய பின்னர், தட்டின் அருகில் இருந்த ஆரஞ்சு பழரசத்தை சில மிடறுகள் பருகிய வருணன், தாரா தேவியின் பக்கம் திரும்பி,
“இதெல்லாம் விதை விதைக்கிற மாதிரி தான் மேம். நல்ல விதைகள் சரியான நேரத்துல, சரியான இடத்துல, பருவத்துல விதைச்சிருக்கோம்னு நம்புவோம். அது மரமா வளர்ந்து பலன் கொடுக்குறதுக்கு நிறைய டைம் எடுக்கும். ஏன்…நம்ம லைஃப் டைமே கூட எடுக்கும். அண்ட் பலன் கொடுக்காமயும் போகலாம். அரசியல் பெரும் சூதாட்டம் தானே!
நீங்க சொன்னதும் கரெக்ட் தான் தமிழ் நாட்டு மக்கள் மனசில தான் இடம் பிடிக்கணும், நாங்க எல்லாம் ஹார்ட் சொல்றத தான் கேக்குற ஆட்கள்” என்றார் சிரித்துக் கொண்டே.
“சிரிக்காத வருண். என்ன பண்ணலாம் சொல்லு? சென்டர்ல நம்ம அலையன்ஸ் அப்டின்றதால நாம 25% சீட்ஸ் கேட்டோம். அது முடியாதுன்னு மணிவாசகம் சொல்லிட்டாரு. எனக்கு டெபுடி சி.எம் தேவாஜிக்கு கொடுக்கணும்னு தான் பிளான். அதுவும் நடக்காது போல” என்றார் தாரா தேவி ஒரு நீண்ட பெரு மூச்சுடன்.
“25% கண்டிப்பா கிடைக்காதுன்னு தெரிஞ்சே தானே மேம் கேட்டோம்! இன்னிக்கு உதய் அண்ணா கிட்ட 15-20% னு பேசுவோம். பதிலுக்கு அவங்க கேட்குற மாநில சுயாட்சி, தமிழ்நாட்டு வருமானத்துக்கேத்த மத்திய நிதி பங்கீடு, அப்புறம் மூனு இல்லாட்டி நாலு பெரிய திட்ட அறிவிப்பு இது மூனும் ஆஃபர் பண்ணுவோம்”
“25% கே இதெல்லாம் அதிகம் வருண். நீயென்ன 15-20% கு சொல்ற?” என்றார் அதிருப்தியாக.
“வேற வழி இல்ல மேம், தனியா நின்னா இதுவும் கூட ஜெயிக்க மாட்டோம். அண்ட் நான் இது ஆஃபர் பண்ணலாம்னு தான் சொன்னேன். அவங்க இதுக்கு ஒத்துக்குவாங்கன்னு சொல்லல! சே எஸ் இஃப் தே அக்ரீ ஃபார் 10%” என்றார் வருணன் திடமாக.
“வாட்? 10% ஆ?” என்றார் தாரா தேவி நெரித்த புருவங்களுடன்.
“ம்ம்ம, அதுக்கு மேல கிடைச்சா வீ ஆர் லக்கி. பட் எல்லாம் ஜெயிப்போம்னு சொல்ல முடியாது. இன்னிக்கு தேதிக்கு 23 சீட் கிடைச்சதுன்னாவே பெரிய விஷயம் தான். அண்ட் டெபுடி சி.எம் கேளுங்க…எனக்கு தெரிஞ்சு அது உதய் அண்ணாவுக்கு தான், ஆனா இப்போ ஒருவேளை சென்ட்ரல் மினிஸ்டிரி அவர்கிட்ட இருக்குறதால கிடைக்கிறதுக்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.
பட், நமக்குக் குடுத்தா மித்த இடதுசாரிகள் பிரச்சனை பண்ண வாய்ப்பு இருக்கு. அதுனால ஏதாச்சும் வெயிட்டான மினிஸ்டிரி கிடைச்சுதுன்னா அப்பாவை புடிச்சு போட்டுடலாம்” என்ற வருணன் எழுந்து நிற்க, அவரோடு சேர்ந்து நடந்த தாரா தேவியின் முகத்தில் யோசனை ரேகைகள்.
அவர் அமைதியாகவே இருப்பதைப் பார்த்த வருணன்,
“என்ன மேம்?” என்றார் தாரா தேவியின் அறையில் அவரது இருக்கைக்கு எதிரே அமர்ந்து கொண்டு.
“சரியா வருமா வருண்? ரொம்பவும் இறங்கி போற மாதிரி இருக்கே?” என்றார் தாரா தேவி, மேசையில் கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டு முகத்தை அதில் தாங்கியவராய்.
வலது காலை மடக்கி இடது தொடையில் வைத்தவாறு, பேனாவை அதில் லேசாகத் தட்டிய படியே,
“இது தான் என்னோட வின் – வின் ஸ்டேரடஜி மேம். கண்டிப்பா வொர்க் ஆகும். டிரஸ்ட் மீ. தமிழ்நாடு என்னோட ஹோம் க்ரவுண்ட். சோ கள நிலவரம் அத்துப்படி! 23 நமக்கு பெரிய நம்பர் தான். இதுக்கே நானும், அப்பாவும் தீயா தான் வேலை செய்யணும்!
அண்ட் சி.எம் சார்க்கு இது ரொம்ப கம்ப்ஃபர்ட்டபிள் நம்பர். உதய் அண்ணா ஃபுல்லா சப்போர்ட் பண்ணுவாங்க. அண்ட் இங்கயும் வசுக்கு ஸ்ட்ராங் சப்போர்ட் இருக்கும். இது எடுத்துட்டு அடுத்து அஞ்சு வருசத்துல இன்னும் எஃபோர்ட் போடுவோம். ஸ்லோலி மக்களுக்கு நம்ம மேல கான்பிடன்ஸ் பில்ட் ஆகும். ஒரு நாள் ஆட்சியப் பிடிச்சிடலாம்!” என்றார் வருணன் சிரிப்புடன் வெகு நம்பிக்கையாக.
“ம்ம்ம், பார்க்கலாம். உங்க அளவுக்கு எனக்கு நம்பிக்கை இல்ல” என்ற தாரா தேவி,
“என்ன பிளான் இன்னிக்கு? அப்பா எப்போ வர்றாங்க? நீயும் உதயனோட மீட்டிங் வர்றீயா?” என்ற அடுத்த விஷயத்திற்கு தாவினார்.
“இல்ல மேம், அப்பா அதுக்குள்ள வந்துடுவாங்க. நீங்களும், அப்பாவும் பேசுங்க. 10%க்கு குறைஞ்சா நோ டீல். நா இருந்தா உதய் அண்ணா அஞ்சுல வந்து தான் நிப்பாங்க. எனக்கு தெரிஞ்சு அவங்க அதுல தான் ஸ்டார்ட்டே பண்ணுவாங்க. நான் இன்னிக்கு மித்த சவுத் ஸ்டேட்ஸ் பார்ட்டிஸ் கூட ஒரு ப்ரி-லிம் டிஸ்கஷன் முடிச்சிட்டு, ஐ ஹேவ் டு டீல் வித் அ சுனாமி!” என்ற எழுந்த வருணன், விடை பெற தயாராக, தாரா தேவி கேள்வியாகப் பார்த்தார்.
“தமிழ்நாட்டுக்கு திட்டம் அறிவிக்கணும்னா பி.எம் மேடம் தானே மனசு வைக்கணும்”
“அதுவும் சரி தான், கீப் மீ போஸ்டட். நான் பேசணும்னா சொல்லு” என்ற தாரா தேவி, தனது வேலைகளில் மூழ்கி விட்டார்.
திட்டமிட்ட படி, தென்னிந்திய மாநில கட்சிகளுடன் கூட்டணி பற்றிய ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தைகளை வருணன் முடித்த போது, மதிய உணவு நேரம் கடந்திருந்தது.
வேறு வழியில்லாமல் காலையில் ரொட்டியை உண்டிருக்க, மதியம் சோறு மட்டுமே வேண்டும் என்ற வயிற்றின் கோரிக்கைக்கு செவி மடுத்த வருணன், தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி விட்டார்.
“சாமிண்ணா, என்ன லஞ்ச்? தயவு செஞ்சு சப்பாத்தி மட்டும் சொல்லிராதீங்க” என்றவர் உணவு மேசையில் தாளமிட்டபடியே அமர்ந்தார்.
“இல்ல தம்பி. தேவராஜன் ஐயா காலைலயே சொல்லிட்டாங்க. நீங்க சாப்பிடாமா போனதால, உங்களுக்கு தனியா சோறு வைச்சு மீன் குழம்பும், வறுவலும் செய்ய சொல்லிட்டாங்க” என்ற படி, ஒவ்வொன்றாக எடுத்து வைத்து பரிமாறவும் துவங்கினார்.
“சூப்பர்ணா, நீங்க எடுத்து வைச்சிட்டு போங்க. நான் பாத்துக்குறேன்” என்று விட்டு அலைபேசியை எடுக்க, புரிந்தவராக சாமிநாதன் உணவு அறையிலிருந்து வெளியேறி விட்டார்.
அலைபேசியில் இருந்த இரண்டு தொடர்பு எண்களை மாறி, மாறி பார்த்தவர் அரை மனதாக ஒரு எண்ணிற்கு அழைக்க, மறுமுனை
“சித்தார்த் ஜோஷி ஸ்பீக்கிங்” என்றது.
“பி.எம் மேடமுக்கு நேத்து பயங்கர வேப்பிலை அடுச்சிருக்கீங்க போல?” என்றார் வருணன் எடுத்தவுடன்.
ஒரு முறை அழைப்பு வந்த பேரைப் சரிபார்த்த சித்தார்த்,
“உன்னை எண்டெர்டெயின் பண்ற மூட்ல நான் இப்போ இல்ல மேன். வேற எதுவும் விஷயம் இல்லாட்டி மூடிட்டு ஃபோனை வை” என்றார் கடுப்பாக.
“ப்பா, செம கடுப்புல இருக்கீங்க போல” என்று சிரித்த வருண்,
“பி.எம் மேடம் உங்களையும் சிறப்பா செய்றாங்க போலயே” என்றார் மீன் வறுவலை சுவைத்தபடியே.
“வருண்ண்ண், உன்னோட சாப்பாட்டு டைம்ல கம்பெனி குடுக்க நான் ஆள் கிடையாது. என்கிட்ட அந்த டைமும் இல்லை. என்ன விஷயம்னு டக்குன்னு சொல்லு?” என்று சித்தார்த் பல்லைக் கடிக்க,
“இல்ல, மேடம் இன்னிக்கு ஜாகிங் வரலை. அதான் எதுவும் பிரச்சனையா இல்ல நீங்க போட்ட மந்திரத்துக்கு மயங்கிட்டாங்களான்னு கேட்டேன்” என்றார் வருணோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்.
“சீரியஸ்லி? அவ்ளோ வெட்டியா இருக்கியா வருண்?” என்று காய்ந்த சித்தார்த் அழைப்பை துண்டித்து விட்டார்.
வருண் மீண்டும் அழைக்க,
“எதுவும் எமர்ஜென்சி இல்லாட்டி எனக்கு ஃபோன் பண்ணாதே” என்றார் கடுமையாக.
“சில் ப்ரோ. நீங்களும் எப்பவும் சூடாவே இருந்தா பூமி தாங்காது செயலாளரே” என்று வருண் இன்னும் விளையாட்டாகவே தான் பேசினார்.
“உஃப்ப்ப்ப்” என்று உதடுகளை குவித்து மூச்சுக் காற்றை வெளியேற்றி ஒரு நொடி தன்னை சமன்படுத்திய சித்தார்த்,
“நான் சொல்லி எல்லாம் எதுவும் உன் ஃபிரெண்ட் கேட்டுட மாட்டாங்கன்னு உனக்கே தெரியும் தானே. மேடம் இன்னிக்கு அதிகாலைல தான் தூங்கினாங்க. வீ வேர் வொர்க்கிங் ஆன் யு.எஸ் டிரேட் டேரிஃப்ஸ் ரெஸ்பான்ஸ். அதுனால வந்திருக்க மாட்டாங்க” என்றார் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.
“பிரஸ்ல நான் எதுவும் ரெஸ்பான்ஸ் பார்க்கலையே” என்றார் வருணன் யோசனையாக, தான் எதையும் தவற விட்டு விட்டோமோவென்று நினைவடுக்கில் ஒரு அதிவிரைவு தேடலுடன்.
“பிரஸ் ரெஸ்பான்ஸ் எல்லாம் இல்ல. மேடம் ஒன்லி ஆக்சன்” என்று மெச்சுதலாகக் கூறிய சித்தார்த்,
“உன்னோட இன்பர்மேஷன் கேதரிங் முடிஞ்சிடுச்சுன்னா ஃபோனை வைக்கட்டுமா?” என்றார்.
“ஒரு நிமிஷம் சித்தார்த். நான் அதுக்காக கூப்புடலை. தாரா மேமும், நானும் தமிழ்நாடு அசெம்பிளி எலெக்ஷனுக்காக உதயன் கிட்ட கூட்டணி பத்தி டிஸ்கஷன்ல இருக்கோம். தேர்தலுக்கு முன்னாடி 4 பெரிய திட்டங்கள் அறிவிக்கிற மாதிரி பார்த்துக்கணும். அதை உங்க காதுல போட்டு வைக்க தான் கால் பண்ணேன்” என்றார் வருணன்.
“ம்ப்ச், இதெல்லாம் டூ ஏர்லி டு டாக் அபவுட் திஸ் வருண். எந்த கமிட்மெண்ட்டும் உதயனுக்குக் கொடுக்காதீங்க” என்றார் சித்தார்த் எச்சரிப்பு கலந்த தொனியில்.
“நீங்க தானே சித்தார்த் கூட்டணி இண்டெர்னல் பாலிட்டிக்ஸ் எல்லாம் எங்கள பார்க்க சொன்னீங்க. இப்ப கமிட்மெண்ட் குடுக்காதன்னா என்ன அர்த்தம்?” என்று வருணனும் எகிற,
“நான் சொன்னது டி.என் கவர்னர் மாத்தலாம் அப்டின்றது தான். அது ஈசியான விஷயம். இந்த பிராஜக்ட், பாலிசி அறிவிப்புக்கு எல்லாம் மேடத்தை அக்செப்ட் பண்ண வைக்க முடியாது. அவங்க மிஷன்ஸ் பிளான் என்னவோ அதை வைச்சி தான் எல்லாம் எக்ஸிக்யூட் பண்ணுவாங்க. அது அவ்ளோ ஈசி இல்ல.” என்றார் சித்தார்த் எப்படியாவது வருணுக்கு புரிய வைக்கும் நோக்கில்.
“அதுனால தான் நான் உங்ககிட்ட வந்தேன் சித்தார்த். தாரா மேம் வழியா புஷ் பண்ணினா மேடம் கன்சிடர் பண்ண வாய்ப்பு இருக்கு. நீங்க மிஷன்ஸ் பிளான்லயே எந்த மாநில கூட்டணிக்கு என்ன திட்டம் அறிவிக்கலாம்ன்ற மாதிரி ஒரு டிராஃப்ட் ரெடி பண்ணி உள்ள சேர்த்து அப்ரூவல் வாங்கிடுங்க” என்றார் வருணன் யோசனையாக.
“என்ன மேன் பேசுற? நான் கவர்மெண்ட்க்கு வேலை பாக்குறேனா இல்ல SPP கட்சிக்கு வேலை பாக்குறேனா? அண்ட் யூ நோ வசுந்தரா இஸ் சூப்பர் ஸ்மார்ட். முத பக்கத்தையே கிழிச்சு கைல குடுத்திடுவாங்க” என்ற சித்தார்த்திடம் தயக்கமே.
“எல்லாம் தெரியும் சிட். அதுக்கு தானே உங்கள இங்க உட்கார வைச்சிருக்கோம்! மியூச்சுவல் பெனிஃபிட்டுக்கு இதெல்லாம் பண்ணி தான் ஆகணும். கூட்டணி கட்சிகள் வாய அடக்குறதுக்கு இதை விட்டா வேற வழி இல்லை.
இதை பேக்கிரவுண்ட்ல ஸ்மூத்தா முடிச்சிட்டா, உங்களோட மித்த வேலைகள்ல ஃபோக்கஸ் பண்ணலாம். தப்பா எதுவும் பண்ணலியே. எப்படியும் நலத்திட்டங்கள் செயல்படுத்தணும். எப்ப, எங்க அப்டின்றது மட்டும் அசெம்பிளி எலெக்ஷனுக்கு ஏத்த மாதிரி செயல்படுத்தணும். அவ்ளோ தானே?” என்றார் வருணன், எப்படியாவது சித்தார்த்தை ஒத்துக்கொள்ள வைக்கும் நோக்கில்.
“சரி லீவ் இட் வித் மீ ஃபார் நவ். என்கிட்ட கேட்காம நோ பிராமிஸஸ் டு எனி ஒன் வருண்! நான் டிராஃப்ட் ரெடி பண்ணிட்டு மேம் காதுல போட்டு வைச்சிடுறேன். ஐ கான்ட் டு எனிதிங் பிஹைண்ட் ஹெர் பேக்! நீ அடுத்து பேசறப்போ ஒரு ஜெனரல் பார்ட்டி அப்டேட் மாதிரி சொல்லிடு. என்கிட்ட பேசின அப்டின்னும் சொல்லிடு. கண்டிப்பா திட்டு விழும். வாங்கிக்க வேண்டியது தான்.”
“வேற வழி! இப்போ தான் நீங்க என் வேவ்லெந்த் வந்திருக்கீங்க” என்று சிரித்தவர், சற்று குரலைத் தளர்த்தி,
“சிட், இஸ் ஷீ ஓகே?” என்றார் கரகரத்த குரலுடன்.
மறு முனையில் சில நொடிகள் மௌனம்.
“சிட்? இருக்கீங்களா?”
“ம்ம்ம், உனக்கு என்ன தோனுது வருண்?” என்றார் சித்தார்த் கேள்வியையே பதிலாக்கி.
“தெரியல சிட். இப்போ அவங்க எனக்கு ஆக்செசிபிளும் இல்ல, அவெய்ளபிளும் இல்ல” என்றோர் வருணனோ அமைதியாக.
“அதே இடத்துல தான் நானும் இருக்கேன் வருண். என்ன நீ சில மைல் தள்ளி இருக்க; நான் சில அடிகள் தள்ளி இருக்கேன். அவ்வளவு தான் வித்தியாசம். அவங்க மனசுல என்ன இருக்குன்னு அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம்” என்ற சித்தார்த்தின் குரல் உடைந்து விட்டது.
அதில் பதறிய வருணன்,
“சிட், என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுறீங்க?” என்று அவர் இயல்பு மீறி படபடக்க,
“ம்ம்ம், நத்திங்! ஐ திங்க் நான் இந்த போஸ்ட்க்கு வந்தது ரொம்ப பேட் ஐடியா. முடிஞ்சத முடிஞ்சதாவே விட்டிருக்கணும் வருண்” என்றார் சித்தார்த் தன்னை சமன்படுத்தியவராய். அவருக்கும், வசுந்தராவுக்கும் நடுவில் நடக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை அறவே வெறுப்பவருக்கு, வருணனிடம் அதை வெளிக்காட்டும் எண்ணம் இல்லை போலும்.
சித்தார்த்தின் இடத்திலும் இருந்து வருணனால் அவரது உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்ததால்,
“இது அக்னி பரீட்சைன்னு தெரிஞ்சே தான் சிட் உள்ளே குதிச்சிருக்கோம். ஒரு வழிப் பாதை தான். மீண்டு வர்றதோ இல்லை சாம்பலாகி செத்து மடியறதோ விதியோட கைகள்ல” என்றார் வருணன் பேரமைதியுடன்.
“ரைட்! நைஸ் கேட்ச்சிங் அப் வருண்” என்ற சித்தார்த் அழைப்பை துண்டித்தார்.
error: Content is protected !!