Skip to content
Post Views: 457
அத்தியாயம் – 12
மருதமலை சாலை, கோவை.
Advertisement
“அம்போன்னு விட்டு கிளம்பியாச்சு. இருக்கேனா, செத்துட்டேனான்னு கூடப் பார்க்கலை” என்று எடுத்தவுடனே போட்டுத் தாக்க ஆரம்பித்து விட்டார் வசுந்தரா.
“நான் அப்படி நினைச்சாலும் அது நடக்காது மேடம். டெய்லி நியூஸ்ல தேவையான, தேவையில்லாத எல்லா விஷயமும் வந்துடும். சோ சேட்” என்றார் வருணன் போலி சோகத்துடன்.
Advertisement
Advertisement
ஒரு நொடி அவரை நம்பாத பார்வை பார்த்த வசுந்தரா, வருணனின் இடது கையில் நறுக்கென்று கிள்ளி வைக்க, வலியில் “ஆ” வென அலறினார் வருணன்.
அதில் வாகனமும் லேசாக தடுமாறி ஒரு நொடியில் சீரானது.
Advertisement
“கிள்ளாதடி வலிக்குது” என்ற வருணன் ஒரு கையால் மறு கையை தேய்த்து விட முயல,
“ம்ப்ச், ரோட்டைப் பார்த்து ஓட்டு வரு. அப்புறம் ப்ரதாப் டென்ஷன் ஆகிடுவார்” என்ற வசுந்தராவே, தான் கிள்ளியதால் சிவந்திருந்த இடத்தை மெதுவாக தடவிக் கொடுக்க, வருணனுக்கு மயிலிறகு வருடிய உணர்வு!
“அதுவும் கரெக்ட் தான். சிங் மாமா முறைச்சிட்டே தான் வண்டி கொடுத்தார். நான் டெல்லில இல்லாம இங்க இருக்குறதுல முதல்ல சந்தோஷப்படுற ஆள் அவர் தான்னு நினைக்கிறேன்” என்று சிரித்த வருணன் வாகனத்தை செலுத்துவதில் கவனத்தைப் பதித்தார்.
அதன் பிறகு அவர் எதுவும் பேசுவது போல் தெரியவில்லை. ஏதோ பேசுவதற்கு தான் தன்னை அழைத்திருக்கிறார் என்பதால் வசுந்தராவே ஆரம்பிக்கட்டும் என்று வருணன் அமைதியாக இருக்க, வசுந்தராவிடமோ ஒரு அசௌகர்யமான மௌனம்.
சில நிமிடங்களுக்கு மேல் அதை சகித்துக் கொள்ள முடியாத வருணன், ஆதுரமாக,
“என்னடாம்மா? வாட் இஸ் ஈட்டிங் யூ?” என்றார் வசுந்திராவிடம் திரும்பி.
“நான் என்ன டூ டைமிங் பண்ற ஆளா வரு?” என்றார் வசுந்தரா லேசாக கலங்கிய கண்களுடன்.
இந்த முறை மீண்டும் வாகனம் குலுங்க, ஒரு மரத்தின் அடியில் ஓரங்கட்டி நிறுத்தி விட்டார் வருணன்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் பின்னால் வந்த பாதுகாப்பு வாகனங்களும் கீரிச்சிட்டு நிறுத்தப்பட, வேகமாக வந்த ப்ரதாப் வருணனை முறைத்து விட்டு,
“எனி பிராப்ளம் மேம்?” என்றார் வசுந்தராவிடம்.
அதற்குள் வசுந்தராவும் தன்னை நிலைப்படுத்தியிருக்க,
“சார், மேடத்துக்கு பசிக்குது. இங்க கார்ல எதுவும் சாப்பிட இல்லை” என்ற வருணன் ஒரு இடத்தைக் சுட்டிக் காட்டி,
“அது இவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஹோட்டல். அங்க வாங்கலாமா?” என்று வேறு அப்பாவியாக கேட்டு வைக்க, ப்ரதாப்பிற்கு தான் இரத்த அழுத்தம் ஏறியது.
அவர் வருணனுக்கு பதில் சொல்லாமல், மீண்டும் வசுந்தராவிடமே,
“மேம், இதெல்லாம் ப்ரோட்டோக்கால் கிடையாது! செக்யூரிட்டி ரிஸ்க். நம்ம பிளான்ல இல்லாதது எல்லாம் இங்க நடக்குது மேம். ஐ வோண்ட் அட்வைஸ் டு ப்ரோசிட்” என்றார் ப்ரதாப். பாவம் மனிதர், இதற்கு முன்னர் இது போல் சூழ்நிலைகள் அவருக்கு ஏற்பட்டதில்லையே.
“எனக்காகத் தான் வருணன் கேட்டார் ப்ரதாப். ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் இங்க வெயிட் பண்ணலாம் ப்ளீஸ். நீங்க நம்ம ஸ்டாஃபே அனுப்பி வாங்கிட்டு வர சொல்லுங்க. இஸ் தேட் ஓகே?” என்க, வேறு வழியின்றி தலையாட்டியவர், சுற்றிலும் பாதுகாப்பு வீரர்களை நிறுத்திவிட்டே, பின்னிருந்த போக்குவரத்து காவல் வாகனத்தை அருகில் அழைத்தார்.
ப்ரதாப் அங்கிருந்து நகர்ந்ததும், வருணன் வாகனத்தின் ஜன்னலை திரும்பவும் அடைத்து விட்டு,
“வாட் நான்சென்ஸ் வாஸ் தேட் வசு?” என்று உறுமினார்.
“ம்ப்ச், எதுக்கு காரை நிறுத்தின? ப்ரதாப்பை எப்பவும் ரொம்ப டென்சன் பண்ற வரு நீ” என்றார் வசுந்தராவும் கோபமாக.
“நான் எதுவும் பண்ணலை. இந்த பிளான் எல்லாமே உன்னோடது… உன்னோடது மட்டும் தான்! நீ காரை எடுன்னு சொல்லி இந்த இடத்துக்குப் போன்னு சொல்ற வரைக்கும் உன்னோட பிளான் என்னன்னு கூட எனக்குத் தெரியாது.
மீட்டிங் முடிச்சிட்டு நீ டெல்லி போவன்னு தான் நாங்க எல்லாரும் நினைச்சோம். நான் அத்தை, மாமாவைக் கூட கூப்பிட்டேன். அவங்க அவளுக்கு டைம் இருக்குமா தெரியலப்பான்னு வரலைன்னுட்டாங்க” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார்.
“வீட்ல நிம்மதியா பேச முடியாதுன்னு தான் கார்ல பேசலாம்னு நினைச்சேன்” என்ற வசுந்தராவின் குரல் சற்று இறங்கி விட்டிருந்தது.
“வீட்லயா?”
“ம்ம்ம், ரெண்டு நாள் இங்க தான்! அம்மா வீட்டுக்குத் தான் போகப் போறேன்”
“சிறப்பு!” என்ற நக்கலாக உரைத்த வருணன் எதுவும் பேசாமல், வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
வசுந்தராவும் அமைதியாகி விட, கண்களில் கலக்கம் மட்டும் ஏனோ நிற்கவில்லை. அதுவும் வருணை வதைக்க,
“ம்ப்ச், என்ன லாங்குவேஜ் வசு அது? உன் வாய்ல இருந்து இந்த மாதிரி பேச்செல்லாம் வரலாமா?” என்றார் பொறுமையாக.
“உனக்கு நான் சொல்றப்பவே இவ்வளவு வருத்தமா இருந்தா, இன்னொருத்தர் சொல்லி கேக்குற எனக்கு எப்படி இருக்கும்?” என்றார் மூக்கை உறிஞ்சியபடி, விழவிருந்த கண்ணீரையெல்லாம் விழுங்கி.
“யார் சொன்னா அப்படி? சொன்னவங்கள நீ சும்மாவ விட்ட? நாக்கை இழுத்து அறுத்துருக்க வேண்டியது தானே?” என்றார் வருணன் திரும்பிவிட்ட கோபத்துடன்.
அதற்கு வசுந்தரா அமைதியாகவே இருக்க,
“கேக்குறேன்ல. பதில் சொல்லு” என்றார் வருணன் அதட்டலாக.
“சிட்” என்றார் வசுந்தரா வெளியே வராத குரலில்.
“நோ வே!” என்றார் வருணன் ஆணித்தரமாக.
“என்னைய விட அவர் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா வரு?” என்றார் வசுந்தரா இப்போது முற்றிலும் உடைந்து போனவராக.
“ம்ப்ச், வசு. இதுல நம்பிக்கை எங்கயிருந்து வந்துச்சு? எனக்கு சித்தார்த்தையும் தெரியும். உன்னையும் தெரியும். உன் மேல அவர் எவ்வளவு மரியாதை வைச்சிருக்கார்னும் தெரியும். சித்தார்த் இந்த மாதிரி லூஸ் டாக் விடுற ஆள் கிடையாது. அதுவும் உன்னைப் பத்தி இப்படி ஒரு வார்த்தை கண்டிப்பா அவர் வாய்ல இருந்து வந்திருக்காது”
வசுந்தராவிற்கு வருணன் பேசியதைக் கேட்டு கொஞ்சம் அதிர்ச்சியும், மிகுந்த பொறாமையும். அவரது அந்த நேரத்து மனநிலை கூட லேசாக இளகத் துவங்கியிருந்தது.
“ஓய், நீ எனக்கு பிரெண்ட்டா, இல்லை அவருக்கா? நான் தப்பே பண்ணாலும் எனக்கு தான் வரு நீ சப்போர்ட் பண்ணனும்” என்றார் திடீரென முளைத்த அதீத உரிமையுடன்.
“பேச்சை மாத்தாதீங்க மேடம். இந்த வருண் எப்போதும் நியாயத்துக்கு தான் சப்போர்ட் பண்ணுவான்” என்று காலரை தூக்கி விட்டவர்,
“சொல்லு, சிட் எக்சாக்ட்டா என்ன சொன்னார்? உனக்கு ஒன் டைமிங் பண்ணவே துப்பு…சாரி டைம் கிடைக்காது, இதுல டூ டைமிங்கா. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேணாமா?” என்ற வருணனிடம் இயல்பான குறும்புத்தனம் மீண்டிருந்தது.
அவர் பேச்சில் கடுப்பான வசுந்தரா, “எனக்குத் துப்பு இல்லையா? கொழுப்புடா உனக்கு” என்று மீண்டும் வருணன் கையைக் கிள்ள வர, இந்த முறை சுதாரிப்பாக கையை இழுத்துக் கொண்டவர்,
“பேச்சு பேச்சா தான் மேடம் இருக்கணும். நீங்க என்ன தான் பண்ணாலும், சிங் மாமா என்னைய தான் நொங்கெடுப்பார். சோ நோ வயலன்ஸ் ப்ளீஸ்” என்க, வசுந்தரா சிரித்தே விட்டார்.
“சமத்து சக்கரை…” என்ற வசுந்தராவின் கன்னத்தை லேசாகத் தட்டிய வருணன், முழுவதும் வசுந்தராவின் புறம் திரும்பி அவர் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டு,
“என்ன பிரச்சனை? சரியா சொல்லுங்க அம்மணி” என்றார்.
சில நொடிகள் தயங்கினார் வசுந்தரா. வானத்தின் கீழ் நடக்கும் எல்லா விஷயங்களையும் தங்கு தடையின்றி வருணனுடன் உரையாடும், வாதிடும், வசுந்தராவிற்கு, இந்த ஒரு விஷயம் மட்டும் எப்போதும் ஒரு உறுத்தலான விதிவிலக்கு. வருணனும் எந்த அழுத்தமும் கொடுக்காமல் இலகுவாகவே காண்பித்துக் கொள்ள, முடிந்த அளவு ஒரு தீவிர உரையாடலை தவிர்த்தே வருடங்களைக் கடந்து வந்திருந்தார் வசுந்தரா.
“உங்க ரெண்டு பேர் வாழ்க்கையில விளையாடுற உரிமைய எனக்கு யார் கொடுத்ததுன்னு கேட்டார்?” என்று வசுந்தரா கூறியதும், முதலில் அமைதி காத்த வருணன் வாய்விட்டு சிரிக்கத் துவங்கினார்.
வசுந்தரா அவரை கோபமாக முறைக்க,
“சாரி… சாரி” என்று கையை தூக்கி கும்பிடுவது போல் காண்பித்தார்.
“நான் எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கேன். என்ன சிரிப்பு உனக்கு? அப்பாவும் இப்டி தான், சிட் அந்த மாதிரி அர்த்தத்துல சொல்லிருக்க மாட்டார்னு சொல்றாங்க. இப்போ நீயும் அதே சொல்ற. கேலியா சிரிக்க வேற செய்ற” என்றார் சலிப்பாக.
ஏதோ இந்த விசயம் பேசி தீர்க்கப்படாமலே இருக்க, அவரும் அறியாமலே மனதில் ஒரு மூலையில் இருந்து கொண்டு அழுத்தியதோ என்னவோ. அதுவும் தான் நெருக்கமாக நினைக்கும் நபர்களிடம் இருந்து வந்த எதிர்வினை வசுந்தராவை இன்னுமே சோர்வடையச் செய்தது.
“ம்ப்ச், இது ஒரு விசயமா வசு? நான் எதுக்கு சிரிச்சேன்னா, முதல்ல உனக்கு டூ டைமுக்கு அர்த்தம் தெரியுமான்னு தான். டூ டைம்னா ஒரு ரிலேசன்ஷிப்ல இருக்கறப்போ, இன்னொரு டிராக் ஓட்டி சீட் பண்றது.
நல்லா கவனி வசு, ஒரு ரிலேசன்ஷிப்ல இருக்குறப்போ! உன்னை மாதிரி கடமையையே வாழ்க்கையா வைச்சிருக்குறவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. சொல்லு உனக்கு என்ன ரிலேசன்ஷிப் இருக்கு?” என்றார் வருணன் சற்று தீவிரமாக.
அதில் வசுந்தரா அடிபட்ட பார்வை பார்க்க, வருணனுக்கு அதுவும் வலித்தது.
“சரி அதெல்லாம் விடு. நானும், சித்தார்த்தும் என்ன பால்வாடி பாய்ஸா? வீ ஆர் க்ரோன் அப் மென்; ரெஸ்பான்ஸிபில் அடல்ட்ஸ்! எங்களோட ஒரு வில்லிங்னஸ் இல்லாம உன்னால எங்க வாழ்க்கையில என்ன விளையாட முடியும் சொல்லு?”
“அப்போ எதுக்கு என்ன அந்த மாதிரி வார்த்தை சொல்லணும்?” என்று வசுந்தராவும் வெடிக்க,
“முதல்ல எல்லா வார்த்தைக்கும் இப்டி ஆராய்ச்சி பண்ணா இந்த உலகத்துல யாராலயும் வாழவே முடியாது வசுந்தரா. அண்ட் பிரஸ்ல டெய்லி கிழி கிழின்னு கிழிக்கிறான். அதெல்லாம் இதே மாதிரி எடுத்துக்குறியா என்ன?” என்றார் வருணன் கேள்வியாக.
அதற்கு மட்டும்,
“ஐ டோண்ட் கேர் அ *** அபவுட் தேட். என்னைப் பத்தி எனக்குத் தெரியும்” என்ற மிடுக்கான பதில் நொடி தாமதில்லாமல் வந்தது.
“சீ…தேட்ஸ் மை வசுந்தரா. யார் என்ன சொன்னா எனக்கென்னா தூசி மாதிரி ஊதிட்டு போயிட்டே இருப்பாங்க மேடம். வொய் திஸ் இஸ் எனி டிஃபெரண்ட்?” என்றார் வருணன் புன்சிரிப்புடன்.
“ம்ப்ச் உனக்குமா புரியல வரு?”
“என்ன புரியல?”
“ஐ அக்ரீ, மே பி நான் சித்தார்த் சொன்னது தப்பா புரிஞ்சிகிட்டேன், இல்ல அவர் சொன்னது சரியா புரிஞ்சாலும் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்னு கூட வைச்சிப்போம். பட், அவர் இப்டி சொல்லலாமா?”
வசுந்தராவை விசித்திரமாகப் பார்த்த வருணன்,
“ஏன் சொல்லக் கூடாது? அவரும் மனுசன் தானே. இத்தனை வருசம் ஆதங்கம் உன்னைப் பார்த்ததும் வெளில வர்றது ரொம்ப நேச்சுரல் தானே. அது ஒன்னும் தப்பில்லயே.
அண்ட் நான் முன்னமே சொன்ன மாதிரி இன்னியோட நெலமைக்கு மூனு பேருமே தான் காரணம்” என்றார்.
எதற்காக இந்த ஒற்றைக் கேள்வி வசுந்தராவை வாட்டுகிறதென அவருக்கு இன்னுமே புரியவில்லை. அவர் அறிந்த வசுந்தரா இது போன்ற விஷயங்களில் நேரம் செலவளிப்பதே வீணென, குப்பை போல் ஒதுக்கித் தள்ளிவிட்டு வேலையை பார்க்கும் ரகம்.
தன் கைகளை வருணனிடமிருந்து பிரித்தெடுத்த வசுந்தரா, ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டார். கைகளைக் கோர்த்து மடியில் வைத்து வருணனை நேராகப் பார்த்து அமர்ந்தவர்,
“வரு, கொஞ்சம் ஃப்ராங்கா பேசலாமா?” எனக் கேட்டார்.
“நாம என்னிக்கிமே அப்டி தானே டார்லிங் பேசிருக்கோம்” என்று வருணன் கண்சிமிட்ட,
“ப்ளீஸ்” என்றார் வசுந்தரா கெஞ்சுதலாக.
“ஓகே, ஓகே. பெர்மிஷன் க்ராண்டட்” என்று சிரித்தவரிடம்,
“நீ ஏன் வரு உனக்குன்னு ஒரு வாழ்க்கைய அமைச்சுக்கல?” என்று கேட்க, ஆழ்ந்த பார்வை மட்டுமே வருணனிடம்.
“இந்தக் கேள்விக்கு உனக்கு பதில் தெரியும் வசு. நான் ஒன்னும் என் மனசை ஒளிச்சு வைக்கலயே” என்றார் அமைதியாக.
“சீ…இது தான், இந்த கில்ட்டினெஸ் தான் என்னைய கொல்லுது வருண்” என்றார் வசுந்தரா தவிப்பாக.
வருணன் மௌனம் காக்க,
“மே பி சித்தார்த் சொன்னது தப்பில்ல தான். நீ சொன்ன மாதிரி நீங்களும் ஒரு ஃபேக்டர் தான். ஆனா எனக்கு தானே குத்துது வருண். நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கே தெரியல, ஆனா வலிக்குது.
நிம்மதியா நான் தூங்கி வருஷமாச்சு வருண். நான் சுயநலமா யோசிச்சிட்டேனோன்னு டெய்லி என் மனசாட்சி கேக்குற கேள்விக்கு பதில் தெரியல. இப்போ சித்தார்த் கிட்டயிருந்து அதே மாதிரி ஒரு வார்த்தை வந்ததும், எனக்கு தாங்கல” என்றார் கண்களீல் நீருடன்.
அவர் அழுகையை காண சகிக்கவில்லை வருணனுக்கு.
“வசும்மா, ப்ளீஸ். எதுனாலும் பார்த்துக்கலாம். தயவு செஞ்சு அழாதே. இட் டஸிண்ட் சூட் யூ” என்று கண் துடைக்க, வாகனத்தில் இருந்து கைத்துண்டை எடுத்து நீட்டினார்.
அதை வாங்கி முகத்தை அழுந்த துடைத்த வசுந்தரா,
“என்ன நான் அழுதா மூஞ்சி கேவலமா இருக்கா?” என்றார் முறைப்பாக. அவரை இலகுவாக்க,
“ஹா ஹா, கள்ளி. எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவா” என்ற வருணன் லேசாக கன்னம் சுற்றி நெட்டி முறிக்க, வசுந்தராவிற்கு சிரிப்பு வந்தாலும்,
“கிரேட், வழக்கம் போல பேச்சை மாத்தியாச்சு” என்றார் கோபம் போல்.
“ஹ்ம்ம்ம், உனக்கென்ன தோனுது? நான் பேச்சை மாத்துறேன்னா?”
“பின்ன? கேட்ட கேள்விக்கு இன்னும் ஒழுங்கா பதில் வரலையே?”
ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பின் வருணன்,
“பதில் வரலைன்னா அதுக்கு அர்த்தம், சில சமயம் கேள்வியே தப்புன்னு கூட இருக்கலாம் வசுந்தரா” என்பதற்கும், ப்ரதாப் உணவுடன் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.
“தாங்க்ஸ் ப்ரதாப்” என்று வசுந்தரா வாங்கிக் கொள்ள,
“மேம், கிளம்பிடலாம். இங்க நியூஸ் ஸ்பிரெட் ஆகி கொஞ்சம் கொஞ்சமா டிராஃபிக் பில்ட் ஆகுது” என்றார் ப்ரதாப்.
வசுந்தரா வருணனின் முகம் பார்க்க,
“ஓகே சார்” என அவர் வாகனத்தைத் திருப்பினார்.
“பீஸ் பரோட்டா தான் வசு சொன்னேன், நீ அப்டியே சாப்பிட்டுட்டே வா. இன்னும் ஒரு இருபது நிமிஷத்தில வீட்டுக்கு போயிடலாம். இந்நேரம் அப்பா எல்லாம் சொல்லிருப்பாங்க. வாட் அபவுட் செக்யூரிட்டி?” என்றார் வருணன் யோசனையுடன்.
“அதெல்லாம் ப்ரதாப் ஏற்கனவே சார்ட் அவுட் பண்ணிட்டார். ஒரு லிமிடெட் க்ரூப் என்கூட வீட்ல இருப்பாங்க. மீதிப்பேர் கெஸ்ட் ஹவுஸ்ல இருக்காங்க அண்ட் நாளைக்கு ரொட்டேட் பண்ணிடுவாங்க”
“இவ்ளோ ரிஸ்க் தேவையா வசு? இதுக்கு அத்தை, மாமாவை டெல்லிக்கு கூப்பிட்டுருக்கலாமே” என்ற வருணனுக்கும் இதில் உடன்பாடில்லை.
அதைக் காதில் வாங்காதது போல், தேக்கரண்டியில் உணவை எடுத்து சுவைத்து, ஒரு நிமிடம் கண் மூடி சிலாகித்த வசுந்தரா,
“யம்மி வரு! தேங்க் யூ. உனக்கு?” என வருணனிடம் நீட்டப் போக,
“ம்ம்ம், வேண்டாம். நீ சாப்பிடு” என முகத்தை பின் இழுத்துக் கொண்ட வருணன்,
“என்னைய சிங் மாமாகிட்ட பிடிச்சிக் கொடுக்காம விட மாட்ட போலயே” என்றார் சிரித்துக் கொண்டே.
“இதெல்லாம் உனக்கு ஒரு விஷயமா. சாப்டுட்டே அசால்ட்டா ஒத்தைக் கையில வண்டி ஓட்ற ஆளு நீ. அதுவும் இந்த ரோட்ல நாம ஓராயிரம் தடவை வந்திருக்கோம். எனி வே லாஸ் இஸ் யுவர்ஸ்…” என்ற வசுந்தரா உணவின் மீது கவனமாக,
“தேட்ஸ் ட்ரூ, லாஸ் இஸ் மைன்!” என்றார் வருணன் அவருக்கே கேட்காத குரலில்.
“என்ன சொல்ற வரு?” என வசுந்தரா கேட்க, அதற்கு வருணன் பதிலளிக்கும் முன்னரே, வசுந்தராவின் அலைபேசி அலறியது.
அழைப்பை ஏற்ற வசுந்தரா,
“எஸ் சித்தார்த்” என்றார் கம்பீரமாக.
வருணனுக்கு சித்தார்த் என்ன பேசினார் என முழுவதுமாக கேட்கவில்லை என்றாலும் ஏதோ அவசரம் என்று மட்டும் புரிந்தது.
“திஸ் இஸ் அட்ராசியஸ் சித்தார்த். ஈரான் ஷிப் பீஸ் ஃபுல் எக்சர்சஸைஸுக்கு தானே இந்தியா வந்துச்சு. இட் வில் லுக் லைக் நம்ம ஏதோ யூ.எஸ்க்கு சப்போர்ட்டிவ்வா இண்டெல் கொடுத்தோம் மாதிரி” என்றார் வசுந்தரா படபடப்பாக.
“எஸ் மேம், இது நமக்கு எம்பாரெசிங் மொமெண்ட் தான். பட் இம்பல்சிவ்வா எதுவும் பண்ண முடியாது. நான் உங்களுக்கு ஹெட்ஸ் அப் கொடுக்க தான் கால் பண்ணேன். நீங்க நியூஸ் பாத்துத் தெரிஞ்சிக்குற விஷயமில்லையே…”
“ம்ம்ம், எதுவும் பண்ணாம இன்னும் எத்தனை விஷயத்தில நாம கை கட்டி வேடிக்கை பார்த்துட்டு நிக்கணும்னு தெரியல” என்று பெருமூச்சு விட்ட வசுந்தரா,
“இப்ப என்னோட பிளான்ஸ் எல்லாம் கேன்சல் பண்ணனுமா?” என்றார் யோசனையாக.
“இல்ல மேம், பட் ஈரான் வார் சிச்சுவேஷன் எஸ்கேலேட் தான் ஆகுது. நாம இன்வால்வ் ஆகலை அப்டின்னாலும் இந்த ஷிப் விஷயம் தேவையில்லாத டென்ஷன் கிரியேட் பண்ணிருச்சு.
நமக்கு பெரிய பிரச்சனை ஆயில் இம்போர்ட் தான் மேம். கண்டிஜென்சி பிளான் இருக்கு. சோ, அதுக்கான ப்ரோட்டக்கால் தான் பாத்துட்டு இருக்கோம். நீங்க இங்க இருந்தா செக்யூரிட்டி சேனல் கொஞ்சம் ஈசியா இருக்கும். பட் இட் கேன் பி மேனேஜ்ட் ஃபார் டு டேய்ஸ்”
“ஓகே, இன்னிக்கு எப்டியும் ரொம்ப லேட். நான் இன்னும் வீட்டுக்குப் போகலை. பட் வேணும்னா நாளைக்கு கிளம்பிடுறேன். எதுவும் சீக்ரட் ப்ரோட்டோக்கால் பேசனும்னா, குட் யூ செக் இஃப் சம்திங் கேன் பி செட் அப் ஹியர்?”
“எங்க இருக்கீங்க மேம்?”
“ஐ ஆம் ஆன் தி வே, வருண் கூட இருக்கேன்”
“சாரி டு பாதர் மேம். ஐ’ல் கால் யூ டுமாரோ வித் அப்டேட்” என்று சித்தார்த் அலைபேசியை துண்டித்து விட்டார்.
வருணன் வசுந்தராவை திரும்பிப் பார்க்க, அவர் உணவை அப்படியே மூடி வைத்தார்.
“ஏன் வசு வைச்சிட்டே? இன்னும் பத்து நிமிஷம் இருக்கே, கிடுகிடுன்னு சாப்பிட்டு முடிச்சிட வேண்டியது தானே?” என்றார் வருணன், எப்படியாவது வசுந்தராவை சாப்பிட வைத்து விடும் நோக்கில்.
ஆசையாக வாயில் எடுத்து வைத்து சிலாகித்ததைப் பார்த்திருந்தாரே. அதோடு எப்போது இந்த வழியாக வந்தாலும், வசுந்தராவிற்கு மிகப் பிடித்த உணவு வகை அது.
“ம்ப்ச் வேண்டாம்…மனசும், வயிறும் ஏற்கனவே நிறைஞ்சிடுச்சு!” என்று நிறுத்தியவர்,
“எனக்காக ஒன்னு பண்ணுவியா வரு?” என்றார் வருணனைப் பார்த்து.
“கட்டளை இடுங்கள் தேவி, உங்கள் சித்தம் என் பாக்கியம்” என்றார் வருணன் அமர்த்தலாக.
“யூ ஆர் இம்பாசிபிள் வரு” என்று தலையை உலுக்கிய வசுந்தரா,
“இன்னிக்கு நம்ம வீட்ல தான் நீயும் தங்கணும். அத்தை, மாமாவையும் வர சொல்லிடு” என்ற போது அவரது வீடும் வந்திருக்க, வாயிலில் ஆவலோடு காத்திருந்த தந்தையிடம் விரைந்தார்.
error: Content is protected !!