Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 13(2)

இருவரும் கிளம்பி மெல்லோட்டத்திற்கு தயாராக வர, ப்ரதாப் தனது பரிவாரங்களுடன் பின்தொடர்ந்தார். 

வார இறுதி நாள், அதுவும் அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இருந்தாலும், தற்போதைய பாதுகாப்பு சூழல் கருதி தற்காலிகமாக பொதுமக்கள் நுழைவு தடை செய்யப்பட்டிருந்தது. வசுந்தராவிற்கு அதில் உடன்பாடு இல்லையென்றாலும், ப்ரதாப்பின் வேலையில் அதிகம் குறுக்கிட வேண்டாம் என அமைதி காக்க, வருணன் தான் பேச்சை ஆரம்பித்தார்.

“நேத்து உதய் அண்ணா என்ன சொன்னாங்க? ஏன் அப்டி பல்லைக் கடிச்ச நீ?”



Advertisement

“ம்ப்ச், உன்னோட நொண்ணன் தொல்லை தாங்கலை. நான் ஒன்னு சொன்னா அவர் ஒன்னு பண்றார். மிஷன் 4 என்ன ப்ராக்ரஸ்? இந்தியாலேர்ந்து வெளில போற ‘ப்ரெயின் டிரெயின்’ எப்டி டாக்கில் பண்றதுன்னு கேட்டா, எப்பவும் போல தமிழ்நாட்டு எலெக்‌ஷன் மட்டும் தான் பேசறார். சோ அனாயிங்” என்றார் வசுந்தரா அலுப்புடன்.

“ம்ம்ம், இன்னும் கொஞ்ச நாள் தானே. எலெக்‌ஷன் முடிஞ்சப்பறம் ஹீ’ல் கம் அரௌண்ட்”

Advertisement

Advertisement

“அந்த ஒரு விஷயத்தை நினைச்சு தான் நானும் அமைதியா இருக்கேன்”

“ஈரான் விஷயமா சித்தார்த் என்ன சொன்னார்? இன்னிக்கே கிளம்பணுமா வசு?”

Advertisement

“அவர் மேனேஜ் பண்ணலாம்னு தான் சொல்றார். பட் போயிட்றது பெட்டர்னு நினைக்கிறேன். உங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு. பார்த்தப்பறம் ஐ ஃபீல் பெட்டர் நௌ. இங்க செக்யூரிட்டி இஷ்யூ தான். பாவம் ப்ரதாப் அண்ட் டீமை நான் போட்டு படுத்தி வைக்கிறேன்”

“என்னைய பார்க்கணும் போல இருந்துச்சுன்னே சொல்லலாம் மேடம். நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்” என வருணன் சிரிக்க, வசுந்தரா திரும்பி அவரை முறைத்தார். 

“இந்தக் கொழுப்பு மட்டும் குறைய மாட்டேங்குது உனக்கு, என்ன?” 

“அதெல்லாம் கூடவே பொறந்தது. எப்பவும் கொறையாது” என்ற வருணன், சற்று தீவிர தொனியில்,

“ஐ ஆம் நாட் ஜோக்கிங் வசு. நீ என்னையப் பார்க்கணும்னு சொன்னா நான் அடுத்த ப்ளைட்ட பிடிச்சு உன் முன்னாடி வந்து நிப்பேன். அதே தான் நம்ம பேரண்ட்ஸுக்கும். நீ இவ்வளவு மெனக்கிட தேவையில்லை. அதோட” என நிறுத்தியவர் சில நிமிடங்கள் அமைதியாக ஓடினார்.

அவர் என்ன சொல்ல வந்தார் என்பது போல் வசுந்தரா பார்க்க,

“நீ கேட்ட கேள்விக்குப் பதிலும் அது தான் வசு. நோ மேட்டர் வாட் யூ டிசைட், ஐ வாண்ட் டு பி அவெய்ளபிள் ஃபார் யூ! ஏதோவொரு விதத்துல என்னோட தேவை உனக்கு இருக்கப்போ, ஐ வாண்ட் டு பி தேர் வித் யூ. அதைத் தடுக்குற எந்த தளையும் என்னோட வாழ்க்கைல இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்” என்று கரகரத்த குரலில் கூற, வசுந்தரா நின்று விட்டார்.

“வரு, ப்ளீஸ்” என்க,

“தேர் யூ கோ, நீ என்கிட்ட ஒரு கேள்வி கேட்ட. அதுக்கு பதில் சொல்லிட்டேன். நத்திங் மோர் தேன் தேட்! எனக்கு உன் கூட வாழ்நாள் முழுசும் இருக்கணும் வசு.” என்றவர் சிறு இடைவெளி விட்டு,

“அது என்னவா வேணும்னாலும் இருந்துட்டுப் போகட்டும். ப்ரெண்ட், லவ்வர், வெல் விஷர், ஹஸ்பண்ட் இப்டி என்ன வேணும்னா பேர் வைச்சிக்கலாம். ஐ டோண்ட் கேர். 

பட் இது என்னோட முடிவு தான். ஐ வில் ஆல்வேய்ஸ் ரெஸ்பெக்ட் யுவர் சாய்சஸ் அண்ட் டிசிஷன்ஸ்” என உணர்ச்சி வசப்பட, வசுந்தராவிற்கு பேச்சே வரவில்லை. 

அதற்குள் பொழுது புலர்ந்திருக்க, நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் வரத்துவங்கினர்.

ப்ரதாப் வசுந்தரா அருகில் வந்து,

“மேம், டைம் டு லீவ்” எனவும், உடனே அங்கிருந்து கிளம்பி விட்டனர். அதற்குப் பின் நேரம் அவர்கள் கையில் இல்லை. வசுந்தராவுக்கு வருணனிடம் பேசும் தனிமையும் பெரிதாகக் கிட்டவில்லை. 

வசுந்தரா வீடு திரும்பியதும் பேச்சிலேயே சற்று நேரம் கழிய, அஞ்சலி மகளை இழுத்து அமர்த்தி, காய்ச்சிய எண்ணெயை தலையில் வைத்து தேய்த்து விட்டார். 

அன்னையின் விரல்கள் பரபரவென தேய்க்க, அதில் ஒரு பக்கம் சுகம் இருந்தாலும்,

“மா, எதுக்கு இதை வைச்சீங்க… கண்ணு எரியுதுமா” என்று வசுந்தரா சிணுங்க,

“சூடு கண்ணு! அவ்ளோ எண்ணெய் வைச்சேன், சட்டுன்னு காய்ஞ்சிடுச்சு. உடம்பு முழுக்க சூடு. சரியா தூங்காம, இப்படி டென்ஷனாவே சுத்திட்டிருந்தீன்னா சூட்டுல முடியெல்லாம் கொட்டி, சீக்கிரமே நரைச்சிடும்” என்று அலுத்துக் கொண்டு, அன்றைய புலம்பல் ‘கோட்டா’வை ஆரம்பித்து வைத்தார் அஞ்சலி.

“ஷப்பா, முடியல மா. இருக்குற சிச்சுவேஷன்ல இப்ப இந்த முடி தான் உங்களுக்கு பிரச்சனையா? பாருங்க அடுத்த வாட்டி பாய் கட் பண்ணிட்டு வரேன்!” என அம்மாவை சீண்டினார் வசுந்தரா. 

“ம்ப்ச், எல்லாம் விளையாட்டு வசு உனக்கு! அங்க தனியா இருக்க. பெரிய பொறுப்புல இருக்க. நேரங்காலம் இல்லாம ஓடணும். எல்லாம் சரி தான். ஆனா உன் ஹெல்த்தும் முக்கியம் தானே. நீதான் உன்னைய கவனமா கவனிச்சுக்கணும். சொல்லப் போனா அப்டி கவனிச்சிக்கிட்டா தான் உன் வேலைய நல்லா செய்ய முடியும்” என்றவர் கையில் இருந்த எண்ணெய் கிண்ணத்தை தள்ளி வைத்து விட்டு, கையாலேயே முடியை ஒதுக்கி கட்டி விட்டார்.

“மாசத்துக்கு ஒரு வாட்டியாச்சும் இது போல வைக்கணும் வசு. தலைக்கு வைக்க நேரம் இல்லாட்டி கூட தொப்புள்லயாச்சும் வைச்சிட்டு படு” என்க, வசுந்தரா, வேகமாக வருணனைப் பார்த்தார்.

அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, அங்கேயே தான் இந்த அம்மா – மகள் உரையாடல் எல்லாம் நடந்தது. தேவராஜனும், வனதேவனும் அன்றைய செய்திகளை அலசிக் கொண்டிருக்க, வருணன் மடிக்கணினியில் மூழ்கி விட்டார். ராஜியோ, கஸ்தூரி மஞ்சளை தேனில் குழைத்து மருமகளுக்கு ‘ஃபேஸ் பாக்’ போட்டுக் கொண்டிருந்தார்.

வேலையில் தீவிரமாக இருந்த வருணன், நமுட்டுச் சிரிப்பை உதடு கடித்து அடக்குவது அப்பட்டமாகத் தெரிய, அன்னையை முறைத்த வசுந்தரா, 

“நான் குளிச்சிட்டு வரேன்” என பட்டென்று எழுந்து கொண்டார். 

“ஏய், உடனே குளிக்காத. ஒரு பத்து நிமிசமாச்சும் கழிச்சுக் குளி” என அஞ்சலி கூற, ராஜியும்,

“ஆமா கண்ணு, முகத்தில போட்டிருக்கறதையும் பத்து நிமிசம் கழிச்சு துண்டு வைச்சி துடைச்சு எடுத்துட்டு, கழுவிட்டு குளி” என்றார். 

“சரி, சரி, ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு அது முடிச்சிட்டு குளிக்கிறேன்” என்று அறைக்குள் ஓடி விட்டார்.

“என்ன புள்ளையோ போங்க. ஒன்னும் கவனிச்சிக்கிறது இல்ல” என்றபடி  எழுந்து கொண்ட அஞ்சலியும், ராஜியுடன் சேர்ந்து மடமடவென காலை உணவிற்கே ஒரு விருந்து தயாரித்து விட்டார்.  

சித்தார்த்திடம் அன்றைய நிலவரம் குறித்து கேட்டறிந்து கொண்ட வசுந்தரா, சில அலுவலக வேலைகளையும் முடித்துக் கொண்டு, நிதானமாகக் குளித்து தயாராகி வர, 

“அஞ்சு, வசு வந்துட்டா பாரு” என குரல் கொடுத்தார் வனதேவன்.

“சரி எல்லாரும் சாப்பிட வாங்க” என அஞ்சலி அழைத்துப் பரிமாற, உணவு மேசையில் அடுக்கி வைத்திருந்த உணவு வகைகளைப் பார்த்த வசுந்தரா தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

“மா, எதுக்கும்மா இவ்ளோ செஞ்சீங்க?” என அஞ்சலியைக் கேட்க,

“அங்க நீ என்னத்த சாப்பிடுறீயோ என்னவோ? திரும்ப இங்க எப்ப வருவன்னும் தெரியாது. சாப்பிடு கண்ணு” என எல்லா வகையிலும் இருந்து வசுந்தரா தட்டை நிரப்ப, 

“அச்சோ, மா அதெல்லாம் கரெக்ட் தான். நான் அங்க காய்ஞ்சி போய் தான் இருக்கேன். ஆனா எனக்கு ஏர் சிக்னஸ் இருக்குல்ல. இப்போ ஃப்ளைட்ல போணும்மா. இதெல்லாம் சாப்பிட்டா டெல்லி போற வரைக்கும்”

‘உவ்வே’ தான் என சைகை செய்த வசுந்தரா, அவர் தட்டில் இருந்து முக்கால் வாசி பண்டங்களை வருணன் தட்டிற்கு மாற்றி விட்டார். 

வசுந்தராவை வருணன் முறைக்க, அதைக் கண்டு கொள்ளாமல்,

“எனக்கு ரெண்டு இட்லி போதும்மா” எனவும்,

“என்னவோ போ, வீட்டுக்கு வந்த புள்ளைக்கு வாய்க்கு ருசியா சமைச்சிக் கூட கொடுக்க முடியாது போல இந்த வேலைல. இன்னிக்கே கெளம்புணுமா கண்ணு” என கவலையாகக் கேட்டார் அஞ்சலி.

“ஆமாம்மா. ஈரான் – இஸ்ரேல் போர் பெரிய இஷ்யூ ஆகிடுச்சு. அங்க இருந்தா தான் வசதி. நீங்களும், அப்பாவும் வாங்கம்மா. மாமா கட்சிக் கூட்டத்துக்கு வருவார், அப்ப அத்தையும் கூட்டிட்டு நீங்களும் வந்துடுங்க” என்றவர், உண்டு முடித்து எழும்பும் போது, 

“இப்ப சாப்பிட முடியாதுன்னு தான் சொன்னேன். பார்சல் போட்டு விடுங்க. நைட் சாப்பிடுறேன்” என்று அம்மாவையும் சரிக்கட்டி விட்டார்.

வசுந்தரா தட்டை கழுவிக் கொண்டிருக்கும் போது, கை கழுவ வருணன் வர, விலகி அவருக்கு வழி விட்டார். 

“மாமா, அத்தைக்கு மட்டும் தான் இன்விட்டேஷனா வசு?” என்க, 

வசுந்தரா அவரை அடிபட்ட பார்வை பார்த்தார்.

“ஓய், நோ சோக கீதம்! நா எங்கயும் போய்ட மாட்டேன். ஐ ஆம் ஜஸ்ட் அ ஃபோன் கால் அவே. எதுனாலும் பார்த்துக்கலாம். இப்போ எதுவும் யோசிக்காம ஜம்முன்னு போய்ட்டு வா” என வருணன் வார்த்தைகளாலயே வசுந்தராவைத் தேற்ற, அதை ஆமோதிப்பது போல் சிறு தலையசைப்பு மட்டுமே அவரிடம். இதே வார்த்தைகளை தந்தையிடமிருந்து கேட்டதும் நினைவில் வந்தது.

ஆனால் தலையாட்டல் மட்டும் வருணனுக்கு போதவில்லை போலும். 

“என்னடாம்மா?” என ஆதுரமாக வினவ, அவரது கனிவே வசுந்தராவை இன்னும் குத்திக் கிழித்தது.

“வேண்டாம் வரு. நீ என்னைய இப்டி தாங்குறது இன்னுமே கில்ட்டி ஆக்குது” என்றவர், விறுவிறுவென தன் அறைக்குச் சென்று கதவை அடைத்து விட்டார். 

அழுகை முட்டியது. ஆனால் எதற்கு இந்த அழுகை என்றால் அதற்கு பதிலில்லை அவரிடம். மூடின கதவையே பார்த்திருந்த வருணனின் முகத்திலும் வேதனையின் சாயல். 

சுற்றம் கருதி தன்னை அடக்கியவர், கதவை லேசாகத் தட்டி,

“வசு, ப்ரதாப் நீ ரெடி ஆகிட்டியா கேக்குறாரு” எனவும், 

“பத்து நிமிசத்துல வர்றேன்னு சொல்லுங்க” என பதிலளித்து விட்டு, மளமளவென தன் அறையில் இருந்து சிறு வயது பொக்கிஷங்கள் சிலவற்றை பெட்டியில் அடுக்கியவர், முகத்தைக் கழுவி அழுந்தத் துடைத்து அழுகையின் தடங்களை கரைக்க முயன்றார். 

அவர் வெளியே வந்ததும் வருணன் அவரை ஆழ்ந்து நோக்க, அதை கவனமாகத் தவிர்த்தார்.

“ஏர்போர்ட் வரலாமா வசும்மா?” என வனதேவன் வினவ, வசுந்தரா பதிலளிப்பதற்குள்,

“நான் போய்ட்டு வரேன் மாமா” என்று விட்டார் வருணன். 

இருவர் முகத்தையும் பார்த்த பெரியவர்கள் குடைந்து கேள்வி எதுவும் கேட்காமல், பத்திரம் சொல்லி வசுந்தராவை வழியனுப்பி வைத்தனர்.

வழி நெடுக மௌனமே ஆட்சி செய்ய, வருணன் வசுந்தரா முன் தன் கையை நீட்ட, அதை ஆதரவாகப் பற்றிக் கொண்டவர் அவர் தோள் மேல் சாய்ந்து கொண்டார். இவர்களுக்குள் மௌனமும் பலவகை தான் போலும். 

பெற்றவர்களுக்காக என்ன தான் வெளியில் தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டாலும், வருணன் காலையில் கூறிய வார்த்தைகள், மனதின் பாரத்தை கூட்டியே இருந்தது. அதைக் குறைக்கும் மார்க்கம் தெரியாமலே தில்லி திரும்பினார் வசுந்தரா வனதேவன்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!