Skip to content
Post Views: 417
அத்தியாயம் – 16
புதுதில்லி, தலைமை அமைச்சர் இல்லம்
Advertisement
அன்றைய நாளில் சித்தார்த்திடம் தனியாக அமர்ந்து பேசும் வாய்ப்பே கிடைக்கவில்லை வசுந்தராவுக்கு. வேலை நெட்டித் தள்ள, அடுத்த நாளும் அமைச்சரவை குழுவுடனான சந்திப்பில் பல அவசர முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.
சந்திப்பிற்கு முன் சித்தார்த் வசுந்தராவிடம்,
Advertisement
Advertisement
“மேம், ஃபைனான்ஸ் மினிஸ்டிரில ராஜேஷ் பவார் கிட்ட நான் பேசிருக்கேன். இப்போதைக்கு டிஃபென்ஸ் இம்பாக்ட் பெருசா இல்லாததால விக்ரம் தேசாய்க்கு பிரச்சனை பண்ண வாய்ப்பு கம்மி தான். மத்த எல்லாம் ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட் தான்” என்க, தலையசைத்துக் கேட்டுக் கொண்டார்.
போரினால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் தங்களது திட்டங்களை பகிர்ந்து கொள்ள, வசுந்தரா கேள்வியெழுப்பி சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு, தனது ஆலோசனைகளையும் வழங்கினார்.
Advertisement
“ராஜேஷ், மத்த எல்லாம் ஓகே. ஆனா நம்ம கரன்சி ரொம்ப வீக் ஆயிடுச்சே, ஹிஸ்டாரிக் லோ! ஸ்ட்ராங் டாலர் ஒரு காரணம் அப்டின்னாலும், இப்டி அதல பாதாளத்துக்கு போனதுனால ஃபாரீன் இன்வெஸ்ட்மெண்ட் எல்லாம் அடி வாங்கிடுச்சு.
இந்த பிரச்சனைய எப்டி சரி பண்றதுன்னு, எனக்கு ஷார்ட் டேர்ம் அன்ட் லாங்க் டேர்ம் சொல்யூசன் ஆப்ஷன்ஸ் வைச்சி ஒரு அர்ஜெண்ட் ப்ரோப்போசல் வேணுமே” என்றார் யோசனையுடன்.
“அந்த வேலை ஆல்ரெடி நடந்துட்டு தான் மேம் இருக்கு. ஆர்.பி.ஐ எமர்ஜென்சி ஆக்ஷன் எடுத்துருக்காங்க. நாளைக்கு அதோட இம்பாக்ட் ரிவ்யூ பண்ணி, நம்ம கன்ட்ரோல்ல இருக்குற அடுத்த கட்ட நடவடிக்கை பிளான் பண்ணப் போறோம் மேம்.
லாங் டேர்ம்ல க்ரூட் ஆயில் இறக்குமதி குறைக்குறது தான் பெரிய இம்பாக்ட் தரக்கூடிய சொல்யூஷன். அதுக்கு நாம புதுப்பிக்கிற மாதிரி எரிபொருள் வளங்களுக்கான கட்டமைப்பைத் தான் மேம்படுத்தணும்” என்று பதிலளித்தார் ராஜேஷ்.
“ரைட், அது க்ராஸ் கவர்ன்மென்ட் வேலை தான்! ஆனா இப்போதைக்கு நீங்களே லீட் பண்ணுங்க ராஜேஷ். ஒரு டிராப்ஃட் ப்ரோப்போசல் இன்னும் ரெண்டு நாள்ல கொடுத்துடுங்க. உடனே செய்யக்கூடிய விஷயங்களைத் தனியா லிஸ்ட் பண்ணி அதுக்கு என்ன ரிசோர்சஸ் வேணும்னாலும் எடுத்துக்கோங்க” என்றவர், “சித்தார்த்” என அழைக்க,
“யெஸ் மேம், ஐ’ல் ஃபாலோ அப்” என்றவர் அதைக் குறித்துக் கொண்டு,
“இது தான் லாஸ்ட் அஜென்டா ஐட்டம் மேம்” என்றார்.
“தேங்க்ஸ் சித்தார்த். எனி அதர் பிஸ்னஸ் எனி ஒன்?” என வசுந்தரா அமைச்சரவை குழுவைப் பார்த்துக் கேட்க, விக்ரம் தேசாய் கை உயர்த்தினார்.
“எல்லாம் சரி தான் வசுந்தரா ஜி. இந்தப் பிரச்சனையே பேசிட்டு நீங்க அசெம்பிளி எலெக்ஷன் பத்தி ஒன்னும் கண்டுக்க மாட்டேங்குறீங்க! தமிழ்நாட்டுக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு போயிருக்கீங்க. மத்த மாநிலங்களுக்கு ஒன்னும் திட்டம் அறிவிக்கலையே” என்றார்.
இது போன்ற நெருக்கடி சூழலில், விக்ரமின் பேச்சை வசுந்தரா ரசிக்கவில்லை. அவரது முகமே அதிருப்தியை வெளிப்படுத்தியது. மற்ற அமைச்சர்களும் பார்வைகளைப் பரிமாறிக் கொள்ள, அறையில் சில நொடிகள் அசௌகர்ய மௌனம் நிலவியது.
நேரத்தை வீணடிக்க விரும்பாதவராய்,
“விக்ரம் ஜி, தமிழ் நாட்டுலயும் நான் எந்த திட்டமும் அறிவிக்கலை! ஆக்சுவலி அது என்னோட பெர்சனல் டிரிப்! என்னோட வீட்டுக்குப் போயிட்டு, தொகுதிக்கும் ஒரு விசிட் அடிக்கணும்னு பிளான். தாரா மேம் கேட்டதுனால அந்த டைம் போற மாதிரி பாத்துக்கிட்டேன், தேட்ஸ் ஆல்” என்றார் வசுந்தரா அழுத்தமாக.
“அதே தான் நானும் சொல்றேன் வசுந்தரா ஜி! எப்பவும் இந்த மாதிரி ஏதோ ஒரு பிரச்சனை வந்துட்டு தான் இருக்கும். ஆனா உங்க பெர்சனல் வேலை எல்லாம் நடந்துட்டு தானே இருக்கு. உங்க கட்சிக் கூட்டத்திலே கலந்துக்குறீங்க. அதே போ கூட்டணி கட்சிகளோட வந்து நாலு நலத்திட்டம் அறிவிச்சிட்டு உங்க முகத்தைக் காட்டிட்டு போனா முடிஞ்சது”
“ரைட், நீங்க சொல்ற விசயத்துக்கும், இந்த மீட்டிங்கும் சம்பந்தமில்ல விக்ரம் ஜி! சோ வித் ஆல் ட்யூ ரெஸ்பெக்ட், ஐ டோண்ட் வாண்ட் டு வேஸ்ட் டைம் ஆஃப் அவர் ஹானரபுள் கமிட்டி மெம்பர்ஸ்” என்ற வசுந்தரா, மற்றவர்களுக்கு புன்னகையுடன் விடை கொடுக்க விக்ரமின் முகம் கருத்தது.
சித்தார்த்தைத் தவிர அனைவரும் சென்றிருக்க,
“வாட் இஸ் யுவர் ப்ராப்ளம் விக்ரம் ஜி?” என்று விக்ரமிடம் திரும்பி சீறினார் வசுந்தரா.
“எல்லாம் நான் முன்னாடியே சொன்னது தான் வசுந்தரா ஜி. எனக்கு மஹாராஷ்டிரா எலெக்ஷன் வின் பண்ணனும். அது கிடைச்சிடுச்சுன்னா, இந்த போஸ்ட் கூட நான் ரிசைன் பண்ணிட்டு சி.எம் சீட்ல உட்கார்ந்துடுவேன்” என்றார் நிதானமாக.
அவரது அனுபவத்தில் எத்தனையோ பேரைப் பார்த்திருப்பார் தானே. அதனால் வசுந்தராவின் எரிச்சலுக்கு, விக்ரமிடம் இருந்து பெரிதாக எந்த எதிர்வினையும் இல்லை.
சித்தார்த்திடம் விக்ரமை சமாளிக்கப் போதுமான திட்டங்கள் இருந்தாலும், வசுந்தரா பேசும் போது தலையிடுவது சரியாக இருக்காது என்பதால் அமைதி காத்தார். வசுந்தரா தன்னைப் பார்த்தால் சமிக்ஞை செய்யலாம் எனப் பார்த்தால், அதற்கான அறிகுறி கூட இல்லை!
எந்நேரமும் பறக்கத் துடித்த பொறுமையை இழுத்துப் பிடித்த வசுந்தராவோ,
“பாருங்க விக்ரம் ஜி, என்னோட பெர்சனல் ட்ரிப், அது கூட பாதில கேன்சல் பண்ணிட்டு திரும்ப வந்துட்டேன். எனக்கு டைரக்ஷன் கொடுக்குறது இதோட நிறுத்திக்கோங்க ப்ளீஸ். நான் ஏற்கனவே தெளிவா தான் சொல்லிருக்கேன்.
ஐ வில் ஆக்ட் ஒன்லி இன் நேஷனல் இன்ட்ரெஸ்ட். நாட் ரீஜனல் ஆர் பார்ட்டி அஜென்டா! பட், யூ வில் கெட் த சப்போர்ட் யூ நீட்” என்றவர், சித்தார்த்தைப் பார்க்க, அந்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்ட சித்தார்த்,
“விக்ரம் ஜி, ஆல் இஸ் இன் ஹாண்ட். நீங்க கவலைப்படத் தேவையே இல்லை. நான் ஃபுல் பிளான் வித் ஸ்கெட்யூல் வொர்க் அவுட் பண்ணியாச்சு. எலெக்ஷன் டேட் அனவுன்ஸ் பண்றதுக்கு ஒரு மாசம் முன்னாடியே இது எல்லாமே சார்ட் அவுட் பண்ணிடலாம். நான் ஒரு டிராஃப்ட் கூட ராஜேஷுக்கு அனுப்பிருக்கேன்” என்றார் வேகமாக.
அவரை நம்பாத பார்வை பார்த்த விக்ரம்,
“அப்டியா? ஆனா ராஜேஷ் என்கிட்ட எதுவும் சொல்லலையே?” என்றார் யோசனையுடன்.
“அது அவர் சிலது மாத்த சொல்லிருக்கார் விச் ஐ ஆம் வொர்க்கிங்” என்றார் சித்தார்த்.
சில நிமிடங்கள் அமைதி காத்த விக்ரம்,
“நீங்க எல்லாம் எனக்கும் சேர்த்தே அனுப்புங்க சித்தார்த், நான் பார்த்துட்டு அடுத்து என்ன பண்றதுன்னு சொல்றேன்” என்றவாறு, வசுந்தராவிடம் ஒரு தலையசைப்புடன் விடை பெற்றார்.
அவர் வெளியேறியதும், வெகு நேரம் அமர்ந்திருந்ததால் மரத்துப் போயிருந்த கால்களை ஊன்றி நிற்க முயல, லேசாக தடுமாறினார் வசுந்தரா.
“ஆர் யூ ஓகே மேம்?” என சித்தார்த் அருகில் வருவதற்கு முன் அருகில் இருந்த நாற்காலியைப் பிடித்து நின்று விட்டு, மெல்ல கால்களை உதறி சரி செய்த வசுந்தரா,
“ஐ ஆம் ஃபைன்” என்றவர், மீண்டும் அமர்ந்து,
“ஐ காண்ட் ஸ்டேண்ட் திஸ் கை சிட். ஹி இஸ் சோ அனாயிங்” என்றார் எரிச்சலாக.
“வெல், இதெல்லாம் ஆக்குப்பேஷனல் ஹாசார்ட். அன்அவாய்டபுள்!” என்க, வசுந்தரா சிரித்து சிட்டார்.
“யூ ஆர் இம்பாசிபிள், பட் தேட்ஸ் அ குட் ஒன்” என்றவர் சிரமமில்லாமல் எழுந்து நின்று,
“மீட்டிங்ஸ் அவ்ளோ தானா? இன்னிக்கு வேற என்ன அஜென்டா? இட் ஃபீல்ஸ் லைக் அ லாங் டெ ஆல்ரெடி” என்றவாறு தனது அலுவலகத்தை நோக்கி நடந்தார்.
அவருடன் சேர்ந்து கொண்ட சித்தார்த்,
“மீட்டிங்ஸ் பெருசா இல்ல மேம், பட் RAW* சீஃப் உங்க கிட்ட பேசனும்னு நேசனல் செக்யூரிட்டி அட்வைசர் (NSA**) எனக்கு ஒரு நோட் அனுப்பிருக்கார்” என்றார் யோசனையுடன்.
“ஓ, என்ன விஷயம்னு சொல்லலையா?” என்றார் வசுந்தரா.
“இல்ல மேம், யூசுவலி ஃப்ரீப் அனுப்புவாங்க எதைப் பத்தி பேசணும்னு. ஈ-மெயில் அனுப்ப முடியாத அளவு சீரியஸ் விஷயம்னு நினைக்கிறேன். சோ இது தள்ளிப் போட முடியாது. ஐ’ல் அரேஞ் சம்திங் அஸ் அ ஃபர்ஸ்ட் திங் ஆஃப்டர் லஞ்ச்” என்றவர் தன்னறைக்குத் திரும்பி விட்டார்.
உணவை தனது அலுவலக அறைக்கே வரவழைத்த வசுந்தரா, உணவருந்திக் கொண்டே கோப்புகளில் மூழ்கி இருந்தார். சில நிமிடங்களில் அறை வாயிலில் ப்ரதாப் அனுமதிக்காகக் காத்து நிற்க,
“வாங்க ப்ரதாப்” என்றவர் முட்கரண்டியை தட்டில் ஒதுக்கி வைத்து, ‘என்ன விஷயம்’ என்பது போல் ப்ரதாப்பைப் பார்த்தார்.
“சாரி டு இன்ட்டரப்ட் யுவர் லஞ்ச் மேம். ஒரு எமர்ஜென்சி அதுனால தான்…” என்க,
“நோ வொரீஸ். என்ன பிரச்சனை ப்ரதாப்? கொஞ்ச நேரம் முன்னாடி தான் சித்தார்த் RAW சீஃப் பேசனும்னு டைம் கேட்டதா சொன்னார். இஸ் திஸ் ரிலேட்டட்?” என்றார் யோசனையுடன்.
“எஸ் மேம். அவங்களோட கான்பரன்ஸ் கால் அரேஞ் பண்ணிருக்கேன். அதுக்கு முன்னாடி எங்கிட்ட உங்களை ப்ரீஃப் பண்ண சொன்னாங்க” என்றார்.
“ஓகே, ஒரு நிமிஷம் ப்ரதாப்” என்றவர், சித்தார்த்தை அழைக்க அவரும் உடனே வந்துவிட்டார்.
ப்ரதாப்பின் முகத்திலிருந்த இறுக்கமே விஷயத்தின் தீவிரத்தை சொல்ல, வசுந்தராவும் சித்தார்த்தும் அவரை கேள்வியாகப் பார்த்தனர்.
“ஆப்பரேஷன் தாரிணி உடனே ஆரம்பிக்க சொல்லிருக்காங்க” என்றார் சுருக்கமாக.
“வாட்?” என்றார் சித்தார்த் அதிர்ச்சியுடன்.
“எஸ் சார். பி.எம்’ஸ் லைஃப் இஸ் இன் டேஞ்சர்னு ரிலையபுள் இன்டெல் கிடைச்சிருக்கு. எஸ்.பி.ஜி யோட ப்ளூ புக் ப்ரோட்டக்கால் ஃபாலோ பண்றதோட இன்னும் செக்யூரிட்டி டைட்டன் பண்ண சொல்லிருக்காங்க”
“ஓகே, நீங்க கான்ஃப் கால் அரேஞ் பண்ணுங்க ப்ரதாப்” என்ற வசுந்தரா, யோசனையுடன் சித்தார்த்தைப் பார்க்க, அவர் வசுந்தராவின் அருகில் வந்தார்.
“ஆப்பரேஷன் தாரிணி உங்க ஸ்பெஷல் ப்ரொடெக்ஷனுக்கு எதுவும் ஆபத்து வந்துச்சுன்னா அட்ரஸ் பண்றதுக்காக க்ரியேட் பண்ணது மேம். இட்ஸ் அ ஸ்டாண்டர்ட் ப்ரோசிஜர்!
புதுசா பி.எம் பதவி ஏத்த உடனே அவங்க பாதுகாப்புக்கு ஸ்பெசிஃபிக்கா ஒரு கோட் வோர்ட் வைப்பாங்க. ஆனா இதுக்கு முன்னாடி ரொம்ப ரேரா தான் யூஸ் பண்ணிருக்காங்க. இப்போ இன்வோக் பண்ற அளவு என்ன பிரச்சனைனு தெரியல”
“ம்ம்ம், வார் சிச்சுவேஷனாலயா?”
“நாட் லைக்லி, NSA என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்” என்க, அதற்குள் ப்ரதாப், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை காணொளி அழைப்பில் இணைத்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அர்ஜுன் மல்ஹோத்ரா தான் அந்த சந்திப்பை தலைமை தாங்கினார்.
“நம்பகமான சோர்ஸ் கிட்ட இருந்து சில மெசேஜஸ் இண்டர்ப்ரெட் பண்ணிருக்கோம் மேம். ஒரு தீவிரவாத அமைப்பு ஆப்பரேஷன் பூமின்னு உங்களை டார்கெட் பண்ணப் போறதா தகவல் வந்திருக்கு.
நீங்க பதவியேத்ததுல இருந்து உங்க மூவ்மெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ணிருக்காங்க. நீங்க கோயம்புத்தூர் போனப்போ ஒரு கொலை முயற்சி பிளான் பண்ணிருக்காங்க. பட் நீங்க ஒரு நாள் முன்னாடியே ரிட்டர்ன் ஆயிட்டதால இட் வாஸ் கால்ட் ஆஃப்” என்று அர்ஜுன் விளக்கினார்.
“பட் வொய் அண்ட் நவ்?” என்று கேள்வி எழுப்பினார் வசுந்தரா.
“நிறைய ரீசன்ஸ் இருக்கு மேம். எங்க கணிப்பு என்னன்னா போர் சூழல்ல நாம டிஸ்ட்ராக்ட் ஆக வாய்ப்பு அதிகம். அந்த கேப்ல புகுந்து கலகம் பண்றது ஈசி. இன்னொன்னு” என்று அர்ஜுன் தயங்க, வசுந்தரா ‘ஏன் தயக்கம்’ என்பது போல் கேள்வியாகப் பார்த்தார்.
“நீங்க உங்க ஆக்ட்டிவிட்டிஸ் பப்ளிக்ல ரெஸ்ட்ரிக்ட் பண்ணாதது தொடர்ந்து மானிட்டர் பண்ணிருக்காங்க மேம். மே பி தேட் கேவ் அன் இம்ப்ரஷன் யூ ஆர் அன் ஈசி டார்கெட்” என்று ஒரு வழியாக தான் கூற வந்ததை சொல்லி முடித்தார் அர்ஜுன்.
அதைக் கேட்ட வசுந்தராவின் முகம் இறுகியது. ஆனால் அதைக் குரலில் காட்டாமல்,
“ரைட், ஆப்பரேஷன் தாரிணி இன்வோக் பண்ணா என்ன இம்ப்ளிக்கேஷன்?” எனக் கேட்டார் வசுந்தரா.
அர்ஜுன், ப்ரதாப்பை குறிப்பாகப் பார்க்க,
“மேம், உங்க ப்ரொடெக்ஷன் இன்னும் ஒரு லெவல் இன்க்ரீஸ் பண்ணுவோம்.
த்ரெட் லெவல் ரெட்க்கு என்ன ப்ரோசிஜரோ அது ஃபாலோ பண்ணுவோம். அன் அவாய்டபிள் ஆன் ட்யூட்டி பப்ளிக் அப்பியரன்ஸ் தவிர மித்தது எல்லாம் நாட் அலோவ்ட்” என்றார் ப்ரதாப் தயக்கமாக. அடுத்து என்ன வருமென்று தான் அவருக்குத் தெரியுமே.
அவர் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல்,
“லைக்?” என்றார் வசுந்தரா.
“ஃபார் எக்சாம்பிள், நீங்க் டெய்லி ஜாகிங்கு இந்தியா கேட் போக முடியாது மேம்” என்றார் முயன்று வரவழைத்த திடத்துடன்.
“ம்ம்ம்ம், யூ வில் பி ஹேப்பி ஃபைனலி” என வசுந்தரா சிரிக்க,
“மேம்…” என்றார் ப்ரதாப் என்ன எதிர்வினையாற்றுவது என தெரியாமல்.
“ஃபார் ஹவ் லாங்க்?” என வசுந்தரா மீண்டும் கேள்வி கேட்க,
“ஃபார் அ ஃபோர்சீயபுள் ஃப்யூச்சர் மேம்” என்ற பதிலளித்த உளவு அமைப்பின் தலைவர்,
“நாங்க தொடர்ந்து மானிட்டர் பண்ணிட்டே தான் இருப்போம். த்ரெட் ந்யூட்ரலைஸ் ஆகுற வரைக்கும் லெவல் ரெட் தான் மேம். பட் வி வில் ரிவ்யூ அண்ட் கம்யூனிக்கேட் எனி டெவலப்மென்ட்ஸ் டு ப்ரதாப்” என்றார்.
“வெல், ஐ வோண்ட் மேக் இட் ஹார்ட் ஃபார் யூ கைஸ் டு டூ யுவர் ஜாப்” என்ற வசுந்தரா, அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
“ப்ரோசீட்” என்றார்.
மற்றவர்கள் விடை பெற்றுக் கிளம்பி விட, சித்தார்த் ப்ரதாப்பிடம்,
“மேம் கோவை போன பிளான் க்ளாசிஃவைட் தானே ப்ரதாப். அது எப்டி லீக் ஆச்சு?” என்றார் யோசனையுடன்.
“எஸ் சார், மேம் அன்னிக்கு நைட்டே ரிட்டர்ன் ஆகுற மாதிரி தான் பிரஸ்க்கு நியூஸ் போச்சு. அன்ட் அது அவங்க பெர்சனல் விசிட் அப்டின்றதுனாலயும் வீ கெப்ட் எவிரிதிங் க்ளோஸ். மேடமோட ஃபேமிலிக்கே கூட அன்னிக்கு நாங்க சைட் செக்யூர் பண்ணப் போனப்போ தான் தெரியும்” என்றார் ப்ரதாப் தன்னிலை விளக்கும் பொருட்டு.
“சரி, நீங்க அது கொஞ்சம் என்னன்னு பாருங்க. உங்க இண்டெர்னல் சர்க்கிள்ல யாரும் காம்ப்ரமைஸ் ஆகிட்டாங்களான்னு செக் பண்ணுங்க” என்க, ப்ரதாப்பிடம் ஒரு இறுக்கம்.
“சார், மை டீம் இஸ் ஃபுல்லி க்ளியர்ட். ஆல் லாயல் ஆஃபிசர்ஸ். வொர்த் செக்கிங் பி.எம்.ஓ ஆல்சோ” என்க, சித்தார்த் அதை சரியான புரிதலோட எடுத்துக் கொண்டார்.
“வொய் நாட், எல்லாரையுமே லிஸ்ட் ல ஆட் பண்ணி புது செக்யூரிட்டி க்ளியரன்ஸ் ரன் பண்ணிடுங்க” என்று விட, ப்ரதாப்புக்கு ஒரு நொடி சிறு குற்றக் குறுகுறுப்பு.
“ஸ்யூர் சார்” என்றவர், “மேம்” என்று வசுந்தராவிற்கு வணக்கம் வைத்துக் கிளம்பி விட்டார்.
அது வரை இவர்களது உரையாடலில் தலையிடாமல் அமைதியாகக் கவனித்தருந்த வசுந்தரா சித்தார்த்திடம் திரும்பி,
“என்னைய கொலை பண்றதால என்ன லாபம்? நான் போய்ட்டேன்னா SPP லேர்ந்து இன்னொருத்தர் வரப்போறாங்க” என புரியாத பாவனையில் கேட்டார் வசுந்தரா.
“டெரர் மேம்! அது தான் தீவிரவாதிங்களோட நோக்கம். ஒரு நாட்டோட பிரதமரை பாதுகாக்க முடியாட்டி, நம்ம நாட்டோட பாதுகாப்பே ஒரு கேலிக்கூத்து ஆகிடும்ல. அவங்களுக்கு தேவையும் அது தான்”
“ரைட், சும்மாவே ப்ரதாப் சாமியாடுவார். இப்ப சலங்கை வேற கட்டியாச்சு. இனிமே ஒரே கதகளி தான்” என்றார் வசுந்தரா சலிப்பாக.
“அஸ் யூ நோ, இட்ஸ் ஆல் பார்ட் ஆஃப் த ஜாப் மேம்!” என்றார் சித்தார்த் இலகுவாக.
“சரி, யூ கேரி ஆன். நீங்க பார்க்க சொல்லி கொடுத்த டாக்குமெண்ட்ஸ் இன்னும் கொஞ்சம் இருக்கு” என்ற வசுந்தரா, தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.
சித்தார்த் சிறிது தயக்கத்துடன், அங்கேயே காத்திருக்க,
“என்ன சித்தார்த்?” என்று நிமிர்ந்து பார்த்தார் வசுந்தரா.
“நத்திங் மேம், இன்னிக்கு காலைல நீங்க பேசணும்னு சொன்னீங்க?” என்று நிறுத்த,
“நாட் டுடே சித்தார்த். மை ஹெட் இஸ் ஆல் ரெடி எக்ஸ்ப்ளோடிங்!” என்க, பொங்கியெழுந்த ஏமாற்றத்தை இன்னொரு முறை அடக்கி,
“நோ இஸ்யூஸ் மேம். இஃப் யூ நீட் எனிதிங் ஜஸ்ட் லெட் மீ நோ” என்றபடி சித்தார்த் விடைபெற, அவரது முதுகை சில நொடிகள் வெறித்த வசுந்தரா ஒரு நீண்ட பெரு மூச்சுடன் கையில் இருந்த ஆவணத்திற்கு தன் கவனத்தைத் திருப்பினார்.
*RAW – Research and Analysis Wing – ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு. இந்தியாவின் முதன்மை வெளிநாட்டு உளவு அமைப்பு.
**NSA – National Security Advisor – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
error: Content is protected !!