Skip to content
Post Views: 1,205
“சார் எல்லாம் உங்களால தான் சார், உங்க பிராத்தனையும், விடாமுயற்சியா நீங்க குழந்தையை வச்சுகிட்டு இருந்ததால தான் சார்,, குழந்தைக்கு உயிர் பிழைச்சிருக்கு” என்றாள் நர்ஸ்..
அவனுக்கு நர்ஸ் சொல்லியது காதில் கேட்கவில்லை..
Advertisement
குழந்தைக்கு மாஸ்க் கழட்டப்பட்டு இயற்கையாகவே குழந்தை சுவாசிக்க அதை பார்த்து சந்தோஷப்பட்டவன் குழந்தையை கொஞ்சி தீர்த்து விட்டான்….
“என் தங்க குட்டி, புச்சு குட்டி, ” என்று மகளை கொஞ்சிக்கொண்டு இருந்தான்
Advertisement
அக்னி கல்கத்தா வந்து அடுத்த நாளே மாயாவுக்கு சுயநினைவு வந்து விட்டது..
Advertisement
முதலில் மெல்ல மெல்ல விழித்துப் பார்த்தவள்..
இரண்டு நாளில் நார்மலாக முழித்துப் பார்க்க ஆரம்பித்தாள்..
Advertisement
உலகநாதன் மகளின் பக்கத்தில் இருந்து அவளை நன்றாக பார்த்துக் கொண்டார்..
பார்வதியும் ரதியும் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் காட்ட குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டவள் குழந்தைகளுக்கு அமுதூட்டினாள்..
அவள் கண்கள் அக்னியை தேட.. உலகநாதன் அனைத்தையும் சொல்லிவிட்டார் குழந்தைக்காக அவன் கல்கத்தா சென்றிருப்பதை…
உலகநாதன் மாயா கண்விழித்த நாளிலிருந்து, அக்னிக்கு போன் போட…
அவன் குழந்தை உயிருக்கு சீரியஸ்சாக இருக்கவும் போனை சார்ஜ் போடா மறந்திருந்தான்,,..
நான்கு நாள் பார்த்தவள் ஐந்தாவது நாள் அக்னியையும் தன் பெண் குழந்தையும் பார்க்க வேண்டும் என்று கல்கத்தா கிளம்பினாள்..
ஆண் குழந்தைகள் விமானத்தில் அழைத்துச் செல்ல டாக்டர் தடை விதித்துவிட.
உலகநாதனோடு கல்கத்தா புறப்பட்டாள் மாயா..
அக்னி இருக்கும் ஹாஸ்பெட்டலுக்கு வந்து சேர்ந்ததும்..
அங்கே உள்ள நர்சிடம் அக்னியை பற்றி விசாரிக்க, இவளை பார்த்ததும் அந்த நர்ஸ்..
” நீங்க அக்னி சாரோடா ஒய்ஃப் மாயா தானே” என்று கேட்க..
“உங்களுக்கு எப்படி என்னை தெரியும்” என்றாள் மாயா..
“மேம் உங்களை தெரியாதா உங்க வீட்டுக்காரர் தான் உங்க முகத்தை அவர் உடம்பு முழுக்க டாட்டூ போட்டு வச்சு இருக்காறே” என்று கூற..
“டாட்டுவா” என்றாள் மாயா..
” மேம் அவர் முதுகு பின்னாடி உங்களோட முகத்தை டாட்டு போட்டு ஐ லவ் மாயா என்று டாட்டு போட்டு இருக்காரு நீங்க அத பாக்கலையா” என்று கேட்க..
மாயாக்கு தலை கிருகிருவென்று சுத்தியது.. அக்னி என் முகத்தை டாட்டு போட்டு வச்சிருக்காறா?
அவளுக்கு ஆச்சரியமாக இருக்க நர்ஸ் பேசுவதைக் கேட்டு கொண்டே வந்தாள்,, அக்னி இங்கே வந்து தன் மகளை எப்படி பார்த்துக் கொண்டான், எவ்வளவு கஷ்டப்பட்டான்,, தூங்காம, சாப்பிடாம எவ்வளவு மணி நேரம் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தான்,, ஒவ்வொன்றும் சொல்ல சொல்ல மாயாவுக்கு நெஞ்சு வலிப்பது போல் இருந்தது,, நர்ஸ் சொல்வதை கேட்டு கொண்டே அமைதியாக வந்தாள்..
“நேத்துதான் நான் உங்க குழந்தைக்கு ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்டினோம் மேம்,,
சார் விடிய விடிய தூங்கல,, உங்க குழந்தையை மாருல வச்சுக்கிட்டே விடிய, விடிய நடந்துகிட்டு இருந்தாரு. அவர் பிரார்த்தனையால தான் உங்க பொண்ணு உயிர் பிழைத்து இருக்க,” என்று அக்னி இருக்கும் அறை கதவை திறந்து விட்டவள் “இங்கே தான் இருக்காங்க அக்னி சார் போய் பாருங்க” என்று சொல்லிவிட்டு நர்ஸ் சொல்ல..
உலகநாதன் மகளிடம் “நீ போமா நான் அப்புறம் வரேன்” என்று வெளியில் அமர்ந்து கொள்ள..
மாயா அந்த அறை கதவை திறந்து விட்டு உள்ளே செல்ல..
கதவு திறக்கும் சத்தம் கேட்ட அக்னி,, நர்ஸ் தான் வந்திருக்கிறார் என்று திரும்பி பார்க்காமலே,,
” பேபி இப்பதான் தூங்குற,, அப்புறம் வாங்க சிஸ்டர் ” என்று சொல்ல..
பால்கனி பக்கத்தில் சட்டையில்லாமல் திரும்பி நின்று குழந்தையை தோளில் வைத்திருந்த அப்படியே நின்றிருந்தவளை பார்த்தாள் மாயா “..
அவன் முதுகில் மாயாவின் மண கோலத்தில் இருத்த உருவம் வரைந்து இருந்தது அதில் ஐ லவ் யூ மாயா என்று எழுதியிருக்க…
அந்த டாட்டுவையே பார்த்தபடியே மாயா நின்று இருக்க.
நர்சு சத்தம் கொடுக்காமல் இருக்கவும், யாரு என்று அக்னி திரும்பி பார்த்திருந்தான்..
மாயாவை சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை..
மாயாவை பார்த்ததும்,, தன் முன்னாடி அவள் நிற்க்கிறாளா என்று உணர்ந்தவன்.
“மாயா, மாயா,மாயா” என்று அழைத்துக்கொண்டே அவள் அருகில் வர..
அவன் திரும்பி பார்த்ததும் உயிரே போய்விட்டது மாயாவுக்கு..
குழந்தையை தன் மார்போடு அணைத்து வைத்திருந்தவன் பாதி ஆளாக இருந்தான்,, அவன் கண்கள் சிவப்பேரி இருக்க,, கண்களை சுற்றி கருவளையம் போல இருந்தது மிகவும் மெலிந்து காணப்பட..
இது என் அக்னியா? என்றிருந்தது மாயாவுக்கு,, ஒருவாரம் சேவ் பண்ணாத தாடியுடன் இருந்தான்,, எப்போது சேவ் செய்து நீட்டாக இருப்பவன், அவனின் இந்த தோற்றத்தை பார்த்த மாயாவுக்கு தாங்கவே முடியவில்லை..
அக்னிக்கோ இன்ப அதிர்ச்சி.. அவள் எப்படி இருக்கிறாளோ என்று நினைத்தவனுக்கு அவள் தன் கண் முன்னாடி வந்து நிற்கவும்..
“மாயா,மாயா,மாயா” என்று அவளின் பெயரை ஜபம் போல சொல்லி அழைத்துக் கொண்டே அவள் அருகில் வர…
மாயா நிற்க முடியாமல் தள்ளாடுவதை கண்டவன்,, ஒரு கையில் குழந்தையும்,, இன்னொரு கையால் மனைவியை கீழே விழாமல் தாங்கி பிடித்து அணைத்து இருந்தான்…
மாயா அக்னியின் மார்பில் சாய்ந்து இருந்தவள் மெல்ல கண் திறந்து அவனைப் பார்க்க..
“என்னாச்சுடா ஏன் இங்க வந்த,, என்கிட்ட சொல்லி இருந்தா நானே அங்க வந்து இருப்பேனே” என்று பேசியபடியே ,, பக்கத்தில் இருந்த கட்டிலில் அவளை படுக்க வைத்தான்..
மாயா கட்டிலில் படுத்தவுடன் இடுப்பை பிடித்தபடியே படுத்திருந்தாள்,,,
” என்ன செய்து மாயா, டாக்டரை வர சொல்லவா” என்றான்..
” ஒரு பைவ் மினிட்ஸ்” என்றவள்..
தன்னை ஆசுவாதம் செய்து கொண்டாள்..
அக்னி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி பருகியவள்..
“பாப்பா” என்று அவனிடம் கேட்க..
தன் மார்பில் வைத்திருந்த தன் மகளை.. மாயாவின் மடிக்கு மாற்றி இருந்தான் அக்னி. குழந்தையை கொடுத்துவிட்டு அவள் அருகில் அமர..
தன் மகளை பார்த்த மாயா அப்படியே ஷாக் அடித்தது போல் இருந்தது அவளுக்கு…
“பாப்பா யார் மாதிரி இருக்கா”? என்றான்,,
“என் அம்மா மாதிரியே” இருக்க என்றவளுக்கு பேச்சே வர வில்லை….
அக்னியை நிமிர்ந்து பார்த்தவள் “தேங்க்ஸ்” என்று அவனிடம் சொல்ல..
” அடி வாங்குவ, அவ நம்ம பிள்ளை டி,, இது என் கடமை,, என் கடமையை செஞ்சதுக்கு எனக்கு தேங்க்ஸ் சொல்வீயா” என்றவன்..
” உனக்கு உடம்பு எப்படி இருக்குடா,, ஏன் இவ்வளவு தூரம் வந்தே பாப்பாவை பார்க்கவா? “.. என்றான்..
மாயா “இல்லை” என்ற தலையாட்ட..
“பின்ன என்னை பார்க்கவா”? என்றான்…
அவள் “ஆமாம் “என்றவள்…
அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அழ….
“எனக்காகவா வந்த” என்றான்..
அவள் “ஆமாம்” என்று தலையாட்டி அழ..
“டேய் அழதடா உனக்கு உடம்பு முடியாம ஆகிட போகுது, அதான் எல்லாம் சரியாகிடுச்சே இப்ப ஏன் அழுகுற”….
“என்னை விட நீங்க தான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க,.. ஏன் இப்படி இருக்கீங்க,, உங்களை என்னால இப்படி பாக்க முடியல, நீங்க சாப்பிடுறீங்களா இல்லையா,” என்றவள் அவன் உடலை தடவி பார்த்து கூற…
“நம்ம பிள்ளைக்காக இதை கூட நான் பண்ண மாட்டேனா..”..
“அதுக்கு உங்களை இவ்வளவு வருத்தி ஏன் இப்படி ” என்றவள்.,, “இது என்ன” என்று அவன் போட்டு இருந்த டாட்டுவை சுட்டிக்காட்ட..
“அது என் பொண்டாட்டி மேல இருக்குற லவ்வுல போட்டது”..
“உண்மையை சொல்லுங்க” என்றாள் மாயா..
“உன்னை எப்போ எல்லாம் ஹர்ட் பண்ணுற மாதிரி பேசி உன்ன வருத்தப்பட வைப்பேனோ,, அப்போ போய் உன் முகத்தை நான் டாட்டு போட போவேன்” என்றான் அக்னி..
“ஏன் அப்படி” என்றாள் மாயா…
“உன்னை நான் திட்டி ஹர்ட் பண்ணிட்டு, என்னால இயல்பா இருக்க முடியாது மாயா,,உனக்கு நான் திட்றதால எவ்வளவு வலிக்குமுன்னு எனக்கு தெரியும், அதனால நானும் எனக்கு அந்த வலியை அனுபவிக்கனுமுன்னு நெனச்சேன்,,
ஒவ்வொரு தடவையும் உன்னை திட்டிட்டு டாட்டு போட போவேன்.. இது சாதாரண டாட்டு இல்ல, மிஜின் போடுற டாட்டு,, எந்த ஒரு வலி மருந்தும் செலுத்தாம டாட்டு போடுவேன் வலி உயிர் போகும்..
மெஜினில் உன் முகத்தை ஆட் பண்ணிட்ட போதும்,, டாட்டு போட்டுடும்,, ஆனா ரெண்டு நாள் பயங்கரமா வலிக்கும், தாங்க முடியாது, பீவர் வரும், வாமிட் வரும், தலை வலிக்குதும்,, இது தான் ஒரிஜினல் டாட்டு இதை அழிக்கவே முடியாது” என்றான்..
மாயா அவன் போட்டு இருந்த டாட்டுவை தொட்டு தடவி பார்த்தவள், “இது எப்போ” என்றாள்..
“இது தான், நான் கடைசியா போட்ட டாட்டு இதுல நீ கர்ப்பமாக இருக்கிற மாதிரி இருக்குல,, நான் உன்னை எந்த சூழ்நிலையில ஹர்ட் பண்ணுறேனோ அந்த பிக்சர அப்படியே டாட்டுவா” போடுவேன்…
முதுவுக்கு பின்னாடி இருந்து அவள் மணக்கோலத்தில் இருந்த டாட்டுவை தொட்டு பார்க்க..
“இவ்வளவு பெருசா இருக்கே வலிச்சிருக்குமே எப்ப போட்டீங்க” ..
” இது நம்ம கல்யாணம் நின்னு போன நைட் போட்டேன்,, எனக்கு தெரியும் அன்னைக்கு நீ எவ்வளவு வருந்தப்பட்டு இருப்பன்னு,, என்னால ஒன்னும் பண்ண முடியல,, எனக்கு உங்க அப்பாவை பழிவாங்கனும் அதுக்கு தான் நான் கல்யாணம் நிப்பாட்டி, உன்னை திட்டி ஹர்ட் பண்ணேன்..
நீ என்மேல எவ்வளவு ஆச வச்சிருக்கேன்னு எனக்கு தெரியும், தெரிஞ்சும் உன்னை கல்யாண மேடையில விட்டுட்டு வந்ததது பெரிய தப்பு,, அத விட உன்கூட வாழ்ந்துட்டு,, உன்னை விட்டது,, எனக்கு இந்த டாட்டு எல்லாம் எறுப்பு கடிச்ச மாதிரி தான்,,
ஆனா நீ அனுபவிச்ச வேதனை பெருசுன்னு எனக்கு தெரியுது… உன்கிட்ட மன்னிப்பு கேட்கனுமுன்னு நிறைய முறை நெனச்சிருக்கேன்,, அதுக்கு அப்பறம் நிறைய பிரச்சனை, உங்க அப்பா உடம்பு சரியில்லாமா இறந்து, பின்பு உயிர் வந்து,, எல்லாம் பெரிய விசயம்,, உங்க அப்பா உயிரோட இருக்குற தான் எனக்கு பெரிய விசயம்,, அதுவும் அவர் கல்யாணம் பண்ணாம என் அத்தை நினைவா இருக்குற, கேட்டு,, நான் உனக்கு பண்ணதுக்கு ஒரு அர்த்தம் இல்லாமா ஆகி போச்சு,,, பழச பேசி, பேசி வருத்தம் , வலி தான் மிச்சம் ,,…. என்றான்…
” அப்புறம் ஏன் என் கிட்ட வருத்தப்படுற மாதிரி நடந்துக்கிட்டீங்க, நான் வருந்தப்படுற மாதிரி பேசுனீங்க”..
“சாரிடா என் அத்தை வாழ்க்கை போச்சேன்னு நான் உன்னை பழி வாங்கிட்டேன் என்னை மன்னிச்சிரு” என்றான்..
“சரி உங்களை மன்னிச்சிடுறேன் எனக்காக இன்னொரு பாட்டு போடுங்க” என்றாள்..
“சரி சொல்லு உனக்காக என்ன வேணாலும் செய்வேன்,, ஒரு டாட்டு போட மாட்டேன, எந்த மாதிரி போடணும் சொல்லு போடுறேன்” என்றான்..
“அது என்னுடைய முகம் மட்டுமல்ல உங்களையும் சேர்த்து போடணும்” என்றாள்..
“உன்னுடைய பிம்பமும் என்னுடையதும் எப்படி போடணும் மாயா” என்றான்..
” இப்படித்தான் ஐ லவ் யூ அக்னி” என்று அவன் இதலோடு இதல் இணைத்திருந்தாள்..
அக்னி இதை எதிர் பார்க்கவே இல்லை.. ஷாக் அடித்தவன் போல அவளைப் பார்க்க..
‘கண்ணை மூடு’ என்றாள் அவள் விழிகளால்..
மூடமாட்டேன் என்பது போல் அக்னி, அவள் முத்தத்தை அனுபவிக்க..
மாயாவாக அக்னிக்கு கொடுக்கும் முதல் முத்தம்,,.
அவளின் முத்தம் அவனுக்கு உணர்த்தியது,, அவளுக்கு தன் மேல உள்ள கோபம் போய் விட்டது என்று,,..
முத்தமிட்டு தன்னை விட்டு விலகியவளை..
தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டவன்..
அவள் தலைகோதி “என் மேல உள்ள கோபம் எல்லாம் போச்சா” என்றான்..
“உங்க மேல எனக்கு எப்பையும் கோபம் இல்ல,, வருத்தம் மட்டும்தான்,, நீங்க என்னை பார்த்த முதல் நாளே ரதி அம்மாவை பத்தி என்கிட்ட சொல்லி இருந்தா.. நான் அன்னைக்கே அப்பாவை பற்றி எல்லாமே உங்ககிட்ட சொல்லி இருப்பேன், இவ்வளவு தூரம் நம்ம கஷ்டப்பட்டு இருக்க தேவையில்லை, இனி பழச பேசி ஒரு பிரயோஜனம் இல்லை” என்றவள்..
” சரி எனக்கு ஒரு உண்மையை சொல்லுங்க என்னைஉங்களுக்கு புடிச்சிருக்கா”? என்றாள் மாயா..
“நான் போட்டிருக்கும் டாட்டு வை பார்த்தமா உனக்கு டவுட் வருது பொண்டாட்டி?” என்றாள்..
” பதில் சொல்லுங்க” என்றவளிடம்..
“பதில் வாயில் சொல்லட்டுமா, செயலில் காட்டட்டுமா?” என்றவனை ..
பார்த்து சிரித்தவள் “இப்போ பாடி கண்டிஷன் சரி இல்ல,, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு காட்டுங்க அப்ப பாக்குறேன்” என்றாள்…
குழந்தை சினுங்கவும் “குழந்தைக்கு ஃபீட் பண்ணலாமா” என்று மாயா கேட்க..
” இல்லடா குழந்தைக்கு இவ்வளவு எம்மல் தான் கொடுக்கணும்னு கணக்கு இருக்கு,, அதன்படி தான் கொடுக்கணும் நீ உன் மில்க்கை எடுத்து ஸ்டோர் பண்ணி ஐஸ் பாக்ஸில் வைச்சிடு, நர்ஸ் பார்த்துப்பாங்க” என்றான்,,
“என் குழந்தைக்கு என்னால பால்” என்று கண்கலங்கியவளை..
அணைத்து கொண்டவன்..
“கொஞ்ச நாள் தான் டா எல்லாம் சரியாகிவிடும் நான் டாக்டர் கிட்ட கேட்டு நான் சொல்றேன்,, அப்புறம் நீ பேபிக்கு ஃபீட் பண்ணு ” என்று அவளை சமாதானம் பண்ணவன்..
ரெண்டு நாள் கழித்து பாண்டிசேரி ஹாஸ்பெட்டலுக்கு வந்து சேர்ந்தான்,,
இரண்டு மாதம் கழித்து அக்னியின் பெண் குழந்தை வீடு வந்து சேர்ந்தாள்..
error: Content is protected !!