Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 21

அத்தியாயம் – 21

புது தில்லி, தலைமை அமைச்சர் இல்லம்



Advertisement

“மேம்” என வலது கையை நெற்றியில் வைத்து வணங்கினார், கௌதம் வாசுதேவன்.

சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்ட வசுந்தரா, சில நொடிகள் அவரை ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தார். கௌதம் அதை உணர்ந்தாலும், கண்ணைக் கூட சிமிட்டாமல் விறைப்பாக நின்றிருந்தார். 

Advertisement

Advertisement

“உங்க ப்ரீஃபிங் முடிஞ்சுதா?”

“எஸ் மேம்”

Advertisement

“எனி இனிஷியல் அப்சர்வேஷன்ஸ்?”

“இன்வெஸ்டிகேஷன் முடியற வரை, இங்க வேலை செய்றவங்களோட ‘வெட்டிங்’ எல்லாம் மூனு மாசத்துக்கு ஒரு வாட்டி செக் பண்றது பெட்டர் மேம்!”

“அப்போ மாசக்கணக்கா இன்வெஸ்டிகேஷன் முடியாதுன்னு சொல்ல வர்றீங்க?”

“அது என்னோட ரெமிட் இல்ல மேம். ஆனா அப்டி நடக்க வாய்ப்பு இருக்குறதால, நாம தயாரா இருக்குறது நல்லது” 

அதைக் கேட்டு மெச்சுதலான பார்வை வசுந்தராவிடம்.

“மக்களோட வரிப்பணத்துக்கு இன்னும் எவ்வளவு செலவு வரப்போகுதோ…” என்று பெருமூச்சிட்டவர்,

“வாட் நெக்ஸ்ட்?” என்றார்.

“உங்களோட  உள்பாதுகாப்பு வளையத்தில சில பேரை மாத்த ரெகமெண்ட் பண்ணிருக்கேன் மேம். அவங்களோட ‘வெட்டிங்’ கொஞ்சம் டிலே ஆகுது…அப்பறம்…” 

கௌதமை கேள்வியாகப் பார்த்தார் வசுந்தரா.

“உங்க…பேரண்ட்ஸ் இருக்குறது ஓகே. மத்த ரிலேட்டிவ்ஸ் எல்லாம் இங்க விசிட் அலோவ் பண்ண முடியாது மேம். இன்னிக்கு மிஸ்டர். வருணன் தேவராஜன் கிட்டேயிருந்து, அவரும் அவரோட பேரண்ட்ஸும் உங்களைப் பார்க்க பெர்மிஷன் கேட்டிருக்காங்க”

கௌதமை தீர்க்கமாகப் பார்த்த வசுந்தரா,

“வருண் இஸ் ஃபேமிலி கௌதம்!” என்றார்.

“ஐ நோ மேம்…பட் அவங்க இமிடியட் ஃபேமிலி இல்லையே, டிஸ்டண்ட் கசின் தானே. சோ ரிஸ்க் தான்”

“அர்ஜுன் கிட்ட இது கன்சல்ட் பண்ணீங்களா?”

“யெஸ் மேம். அர்ஜுன் சார் என்னோட டிசிஷன் அக்ரீ பண்ணிட்டார்”

இரண்டு கைகளையும் கோர்த்து விரல்களை நெரித்த வசுந்தரா,

“ரைட்! எப்போ இந்த ரெஸ்டிரிக்‌ஷன்ஸ் ரிமூவ் பண்ணுவீங்கன்னு எனக்கு இன்னிக்கு நைட்குள்ள ரிவியூ டைம்லைன் கொடுங்க. யூ மே லீவ் நவ்” என்று விட, மீண்டும் வணக்கம் வைத்து விட்டு வெளியேறினார் கௌதம்.

அந்த அறையின் அமைதியில், ‘வருண் இஸ் ஃபேமிலி’ என்ற அவரின் குரலே அறையெங்கும் பிரதிபலிப்பது போல் ஒரு பிரமை. ‘உண்மையா ஃபேமிலின்னா இப்டி ஈசியா விட்டுக் கொடுத்துடுவியா?’ என்று மனசாட்சி வேறு குடைந்தெடுக்க, தலையைப் பிடித்து அமர்ந்து விட்டார் வசுந்தரா. 

நேற்று இரவே வருணனின் குரலில் இருந்த தவிப்பை உணர்ந்திருந்தாரே! இந்தச் சூழல், அவரிடமிருந்து விலகிக்கொள்ள எடுத்த முடிவை எளிதாக்கியிருந்தது. ஆனால் மனமோ வருணனின் அருகாமைக்கு ஏங்கித் தவித்தது.

சில நொடிகள் வருணனுக்கு அழைத்துப் பேசிவிடலாமா என யோசிக்க, அந்த எண்ணம் நீளும் முன்பே, லலிதா வந்து விட்டார்.

.

“மேம், பிரின்ஸ்சிபல் செக்ரட்டரி இஸ் ஹியர்!” 

அதற்குள்ளாகவா என்றிருந்தது வசுந்தராவுக்கு. எதிர்பார்த்தது தான் என்றாலும், சிறு தயக்கமும், தவிப்பும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. முன்னிருந்த குவளையிலிருந்து தண்ணீரை மடமடவென பருகியவர், 

“வர சொல்லுங்க லலிதா” என்றார். லலிதாவிற்கும் அவர் நிலை புரிய, சில நிமிடங்கள் கழிந்த பின்னரே, புது தலைமை செயலாளரை உள்ளே அனுப்பினார்.

மனோகர் ஜோஷி! முன்னர் சித்தார்த்திற்கு அண்ணன் போன்ற தோற்றத்திலிருப்பார். கடந்து வந்த இழப்பின் வலியில், சில நாட்களில் பல வருடங்கள் மூப்பை எட்டியிருந்தார். ஆனால் கண்களின் தீட்சண்யம் சற்றும் குறையவில்லை.

“மேம்” என கை குலுக்க, அவர் கைகளைப் பற்றிய வசுந்தரா ஆதரவாக ஒரு நொடி அழுத்திக் கொடுத்தே விடுவித்தார். அந்த சிறு அன்பில் மனோகருக்கு கரகரத்தது, லேசாக செருமி தன்னை சமன்படுத்தினார்.

“தேங்க் யூ ஃபார் ஜாயினிங் மை ஆஃபிஸ் மனோகர் ஜி” 

மற்றவர்களை அழைப்பது போல, முதற்பெயரை சொல்லி அழைக்க லேசான தயக்கம். அவர் வயதும் ஒரு காரணம் என்றாலும், தன் தந்தையின் இடத்தில் வைத்திருப்பதும் மற்றொரு காரணம்.

“இட்ஸ் மை ட்யூட்டி மேம்” என்று லேசாகக் தலை குனிந்து ஆமோதித்தார் மனோகர்.

“ஆர் யூ ஸ்யூர் டு டேக் ஆன் டியூட்டி டுடே? ப்ளீஸ் டேக் யுவர் டைம் அஸ் நீடட்”

“இட்ஸ் ஃபைன் மேம். நாம ரெஸ்ட் எடுக்குற மாதிரி நாட்டோட நிலைமை இல்ல…” என்று நிறுத்தியவர்,

“அதோட இதுல என்னோட செல்ஃபிஷ்னசும் இருக்கு மேம்” என்க, வசுந்தரா கேள்வியாகப் பார்த்தார்.

“எ…எனக்கு…சித்தார்த்தோட லாஸ்ட் விஷஸ் நிறைவேத்தணும். உங்களுக்கு ஃபுல் சப்போர்டிவ்வா இருக்கணும்னு தான் இந்த போஸ்ட்டுக்கு வந்தான்.  நடுவில விட்டுட்டு போறது சரி கிடையாதே” எனவும் அவர்களது அர்ப்பணிப்பில், வசுந்தராவுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. கண் சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டார்.

“மோரோவர், எனக்கு வீட்ல இருக்குறதும் ரொம்ப கஷ்டமா இருக்கு. வொர்க் இஸ் அ வெல்கம் டிஸ்ட்ராக்‌ஷன்!”

ஆமோதிப்பாகத் தலையசைத்த வசுந்தரா,

“தேட், ஐ அக்ரீ!” என்றார்.

சில நொடிகள் மௌனத்திற்குப் பின்,

“சுசித்ரா மேம் எப்டி இருக்காங்க?” என்றார் வசுந்தரா.

“ஷி இஸ் ஸ்டில் க்ரீவிங். வீ ஆல் ஆர்! அவங்க சிஸ்டர் ஃபேமிலி கோவால இருக்காங்க. ஒரு சேஞ் வேணும்னு சொல்லி, கம்பெல் பண்ணி அங்க அனுப்பி வைச்சிருக்கேன்” என்றார் மனோகர் பெருமூச்சுடன்.

“ஓ…ரிச்சுவல்ஸ்…?”

“ஸ்டேட் ஃப்யூனரல் அன்னிக்கே எல்லாம் முடிச்சிட்டோம் மேம்! சிலது பண்ண வேண்டியிருக்கு, எனக்கு அதை விட அவனோட ஆத்மா ஷாந்தி ஆகுறதுக்கான விஷயம் பண்றது தான் சரின்னு தோனுச்சு, அதான் ஜாயினிங் டேட் ப்ரீபோன் பண்ணி வந்துட்டேன்” 

“ம்ம்ம், யூ ஆர் வெரி ஸ்டிராங் அண்ட் ப்ரேவ்! உங்க இடத்துல நான் இருந்திருந்தா இதே மாதிரி ஸ்டேண்ட் எடுத்திருப்பனான்னு தெரியல! எனி வே, ஐ ரியலி அப்ரிசியேட் யூ ஜாயினிங் அவர் டீம்”

“திஸ் கன்ட்ரி அண்ட் யுவர் கவர்ன்மெண்ட் இஸ் பிக்கர் தேன் ஆல் ஆஃப் அஸ்! இஸ் ஈரான் க்ரைசிஸ் ஸ்டில் த போக்கஸ்?”

“எஸ், அதுல சித்தார்த் வாஸ் லீடிங் இன்டர்நேஷனல் நெகோசியேஷன்ஸ் வித் எக்ஸ்டேர்னல் மினிஸ்டிரி. லலிதா வில் ஹேவ் த எக்சாக்ட் டீடெயில்ஸ்”

“காட் இட்” என்றவர் விடைபெற்று, அறை வாயிலை அடைய, வசுந்தரா,

“மனோகர் ஜி” என அழைக்க, மனோகர் அங்கிருந்தே கேள்வியாகப் பார்த்தார்.

ஒரு கையை நெஞ்சில் வைத்து,

“தேங்க் யூ” என்றார் வசுந்தரா. ஒரு நொடி மௌனித்து, 

“ப்ளஷர் மேம்!” என்று விட்டு மனோகர், கதவை அடைத்து வெளியேற அந்த சத்தமே அறையில் பல நிமிடங்கள் எதிரொலித்தது. 

மனோகரை சந்தித்த பின், சித்தார்த்தின் நினைவுகள் அதிகமாகவே அலைக்கழிக்க, அதன் தாக்கத்தைக் குறைக்க நாள் முழுவதும் வேலையில் மூழ்கடித்துக் கொண்டார் வசுந்தரா. கடந்த சில நாட்களாகக் குவிந்திருந்த வேலைகள் அதற்கு வசதியாய்ப் போய் விட, துக்கத்தையும், தனிமையையும் அலுவலகப் பணியிலேயே கரைத்தார். 

பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக, அவரது வெளி சந்திப்புகள் வெகுவாக குறைந்திருந்தது. ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகளை கௌதம் இன்னும் அதிகப்படுத்தி இருந்தார். வீட்டிலும், தோட்டத்திலும் கூட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருந்தது. அந்தச் சூழலே இன்னும் அவரை அழுத்தியது.

துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பிறகு தோட்டத்தில் அவ்வப்போது நடப்பதையும் நிறுத்தியிருந்தார். அரிதாக, பெற்றோர் மற்றொரு பகுதியில் இருக்கும் நேரம் வேறு வழியின்றி, நடுக்கத்தை மறைத்து, முடிந்த அளவு குறைவான நேரமே அவர்களுடன் கூட இருந்துவிட்டு தப்பித்து வந்து விடுவார். 

இப்போதும், கிடைத்த சிறு இடைவேளை நேரத்தில், பெற்றோரை சந்திக்க முயலாமல், அவரது தற்போதைய அடைக்கலமான அலுவலக அறையின் சாளரத்தின் அருகே வந்து நின்றிருந்தார். வனதேவனின் கண்களை நேராகப் பார்த்துப் பேசும் சக்தியை எப்போதோ இழந்திருந்தார். 

மனதில் ‘எங்க ரெண்டு பேர் வாழ்க்கைல விளையாடுற ரைட்ஸ் உனக்கு யார் கொடுத்தா?’ என்ற சித்தார்த்தின் சீற்றம் ஒரு புறம் ஒலிக்க, மறுபுறம் ‘இங்க யாருக்கு வசு தண்டனை?’ என்ற வருணனின் கேள்வி குத்தீட்டியாய் குதறியெடுத்தது. 

அவரது நியாயமான மனம் எப்போதும் போல் வருணன் பின்னே ஓடி, ஒளிந்து கொள்ள, அதை சரிப்படுத்தும் மார்க்கம் தெரியாமல் தவித்தார். இதெல்லாம் போதாதென்று, ‘கல்யாணம் பண்ணாம இருக்குறதுக்கு இதெல்லாம் சரியான ரீசனா?’ என்ற தந்தையின் கேள்வி வேறு இன்னும் குழப்பியடித்தது. 

‘ஆ…ஆ…ஆ…லீவ் மீ அலோன்’ என உரக்கக் கத்த வேண்டும் போலிருக்க, தனது வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு எழுத்தும் கூட அதிகாரிகளின் ஆய்வுக்குட்படுத்தப்படும் என்ற எண்ணமே அவரை சுய பச்சாதாபத்தில் தள்ளியது. 

‘விட்டால் உடைந்து விடுவேன்’ என்ற மனநிலையில் உழன்று கொண்டிருந்தவரை, தொலைபேசி சத்தம் தான் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. 

“மேம், உங்க அப்பா உங்களைப் பார்க்கணும்னு வெயிட் பண்றாங்க. அனுப்பட்டுமா?” என உதவியாளர் கேட்கவும், சில நொடிகள் யோசித்த வசுந்தரா,

“எங்க இருக்காங்க?”

“லைப்ரரில மேம்”

“இட்ஸ் ஓகே, நானே போய் பாக்குறேன்” என்றவர் தந்தையைக் காண விரைந்தார்.

“என்னாச்சுப்பா?”

“அ…அது ஒன்னுமில்ல கண்ணா. நானும், அம்மாவும் ஏர்போர்ட் போய் தேவராஜனையும், ராஜியையும் வழியனுப்பிட்டு வரலாம்னு பாத்தோம். அந்தப் புதுசா வந்திருக்குற தம்பி அதெல்லாம் முடியாதுன்ற மாதிரி சொல்லிட்டாங்க போல. அம்மா ரொம்ப அப்செட்டா இருக்கா”

“ஓ, எத்தனை மணிக்கு ஃப்ளைட்?”

“6.30க்குடா” என்றதும் நேரத்தைப் பார்த்து விட்டு, தந்தையிடம்

“ஒரு நிமிஷம்பா…” என்றவர், தொலைபேசியில் வருணனை அழைத்தார்.

“சொல்லும்மா” என்றார் வருணன் அழைப்பை ஏற்றதுமே. 

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” எனக் கேட்க, வருணனால் என்ன முயன்றும் அதை இலகுவாக எடுக்கமுடியவில்லை.

“நமக்குள்ள என்னைக்கு வசு இந்த மாதிரி கேள்வியெல்லாம் வந்துச்சு?” என்று அழுத்தமாகக் கேட்டவர்,

“என்ன பண்ணனும்னு சொல்லு, செஞ்சிட்டு போறேன்” என்றார்.

“அ..அது அத்தை, மாமாக்கு இன்னிக்கு போட்டிருக்குற டிக்கெட் கேன்சல் பண்ண முடியுமா?”

“கேன்சல் பண்ணிட்டு…?”

“அவங்களைக் கூட்டிட்டு, நீங்களும் இன்னிக்கு நைட் இங்க வந்திடுங்க”

“இதுக்கு உங்க கௌதம் வாசுதேவன் ஒத்துக்கிட்டாரா?” என்றார் வருணன் சிறிது நக்கலுடன்.

“வரு!” என்று வசுந்தரா குரலுயர்த்த, 

“நான் சீரியசா தான் சொல்றேன் மேடம். காலைலேர்ந்து அதுக்கு டிரை பண்ணி தான் நான் தலையால தண்ணி குடுச்சி உக்காந்துருக்கேன்” என்றார் வருணன் எரிச்சலுடன்.

“நானும் அவர்கிட்ட பேசினேன்…அவர் முடியாதுன்னு சொல்லிட்டார்”

“அதெல்லாம் சரி, அட்லீஸ்ட் எனக்கு ஒரு ஃபோன் பண்ணியாச்சும் சொல்லிருக்கலாம்ல. நான் இங்க பைத்தியக்காரன் மாதிரி ஒவ்வொரு கான்டாக்ட் வழியா ஏதாச்சும் ஆப்ஷன் இருக்கான்னு பாத்துக்கிட்டு இருக்கேன்!”

அதற்கு வசுந்தராவிடம் மௌனமே பதிலானது. அவருக்கும் அது தவறென்று தெரியுமே.

வசுந்தராவின் மௌனமும் வருணனை வருத்த,

“ம்ப்ச்” என சலித்தவர், 

“அதான் முடியாதுன்னு ஆகிடுச்சே, அப்புறம் ஏன் எங்களை வர சொல்ற?” என்றார். 

வசுந்தரா என்ன நினைக்கிறார் என யூகிக்கும் நிலையில் நிற்பதை அறவே வெறுத்தார் வருணன்.

“நான்…அர்ஜுன் கிட்ட பேசுறேன். ஏதாச்சும் வழி கண்டுபிடிக்கிறேன்”

“சரி…நாங்க அங்க வந்து என்ன பண்றது?” வருணனுக்கு இன்னும் புரியவில்லை.

“நாளைக்கு ஃப்ளைட்ல எ..எல்லாருக்கும் டிக்கெட் போடுங்க” எனவும், வருணன் புருவத்தை உயர்த்த, வனதேவனும் மகளைக் கேள்வியாகப் பார்த்தார்.

“எல்லாரும்னா?”

“அம்மா, அப்பாக்கும் சேர்த்து சொல்றேன்”

“இப்ப உன்னை விட்டுட்டு நாங்க எப்படி போறது கண்ணா. இன்னும் நீ சரியா தூங்குறது மாதிரி கூட தெரில…” என்று வனதேவன் கேட்கும் போதே,

“ஏன்?” என்றார் வருணனும் வேகமாக. இருக்கும் துணையையும் ஏன் மறுக்கிறார் என்ற கோபம் அவருக்கு. 

“இ..இல்ல வரு. அவங்க இங்க இருக்குறது அவங்களுக்கு கஷ்டம். ரொம்ப ரெஸ்டிரிக்‌ஷன்ஸ். தேவையான ஃப்ரீடம் இல்லாம, அவங்களையும் அடைச்சி வைக்கிற மாதிரி இருக்கு” எனவும், வனதேவன் ஆச்சரியாமாகப் பார்த்தார். 

வருணனோ, “அப்டின்னு அவங்க வந்து சொன்னாங்களா உன்கிட்ட?” என்றார் காட்டமாக.

“அவங்க சொல்லித்தான் தெரியணுமா வரு? எனக்கே உணர முடிஞ்சது” 

‘அதானே…என்னைத் தவிர எல்லாரையும் உன்னால உணர முடியும்’ என கசப்பாக நினைத்துக் கொண்டவர்,

“சரி டிக்கெட் போட்டுட்டு மாமாக்கு சொல்றேன்” என்றார்.

“அப்புறம்…?”

“வேற என்ன?”

“நைட் டின்னர் இங்க வந்துடுங்க”

‘ரொம்ப முக்கியம் இப்போ’ என பல்லைக் கடித்தவர்,

“ரைட், நைட் பார்க்கலாம்” என அழைப்பை துண்டிக்கப் போக,

“வருண்” என்றார் வசுந்தரா அவசரமாக.

“என்ன?”

“அப்டியே உ…உனக்கும் டிக்” என முடிப்பதற்குள்,

“எங்க பரலோகத்துக்கா?” என சீறினார் வருணன்.

“வருண்” என மீண்டும் வசுந்தரா மீண்டும் குரல் உயர்த்த, வனதேவனுக்கு தான் புரிந்தும் புரியாமல் மண்டை காய்ந்தது. தொலைபேசியின் பகுதியை கை வைத்து மூடியவர், தந்தையிடம் திரும்பி,

“அப்பா, நீங்க அம்மாகிட்டயும் ரெடியாக சொல்லுங்க. நான் வந்து பேசுறேன்” என, தலையசைத்த வனதேவன் மகளை யோசனையாகப் பார்த்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அறைக் கதவை மூடியபடி,

“என்ன வருண் பிரச்சனை உனக்கு?” என்று வசுந்தராவும் கோபமாகக் கேட்க,

“எனக்கு ஒரு மண்ணும் பிரச்சனை இல்ல. எதுக்கு இப்ப அத்தை, மாமாவை ஊருக்கு அனுப்புற? அங்க போய் அவங்க சந்தோஷமா இருந்துடுவாங்களா?”

“ம்ப்ச், வருண் இங்க நிலைமை எதுவும் சரியா இல்ல. கோவைனா, நீங்க எல்லாரும் பக்கத்துல இருக்கீங்கன்னு நானும் நிம்மதியா வேலையப் பார்ப்பேன்”

“நான் அங்க இருப்பேன்னு உனக்கு யார் சொன்னா?”

“விளையாடாத வருண். அசெம்பிளி எலெக்‌ஷன் நெருங்கிடுச்சுல்ல. நீ போய் தான் ஆகணும். நீ…இங்க இருந்தாலும், நாம அவ்ளோ ஈசியா மீட் பண்ண முடியாது. முடிஞ்சப்ப நான் ஃபோன் பண்றேன்” என்றார் வசுந்தரா கொஞ்சம் நிதானமாக. 

மறுமுனை மௌனம் காக்க, அதுவும் வசுந்தராவை வதைத்தது. அந்த மௌனத்தை தாள இயலாதவராய்,

“ப்ளீஸ் வருண்” என்கவும், வசுந்தராவின் கோபத்தை விட, இந்தக் கெஞ்சல் வருணனை வெகுவாக அசைத்தது. 

“இன்னும் என்னைய எவ்ளோ நாள் அவாய்ட் பண்ணப் போற கண்ணம்மா?” 

அந்தக் குரலிலிருந்த பேரன்பு வசுந்தராவை உருக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். 

வசுந்தரா அமைதியாகவே இருக்க,

“எனக்கு தண்டனை தந்தாலும், அதுக்கும் நீ தான் ஃபீல் பண்ணுவ வசு” என்று நிறுத்தியவர், 

“நான் இங்க இருக்குறது உனக்கு கஷ்டமா இருக்குன்னா, நான் இன்னிக்கே கெளம்புறேன்! ஆனா, நான் டெல்லில இருந்து கிளம்பிட்டா எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிடுமான்னு உன் மனசாட்சிட்ட கேளு” என்ற வருணன் அழைப்பை துண்டித்து விட்டார். 

வருணனின் குரலில் இருந்த தேடலையும், தவிப்பையும் மிகத் துல்லியமாக உணர்ந்த வசுந்தராவிற்கு, தனது உணர்வுகளை வடிக்க வார்த்தைகளுக்கு பஞ்சமாகிப் போனது. உடலின் இருந்த மொத்த சக்தியும் வடிந்தது போல், அருகிலிருந்த நீள்விருக்கையில் சோர்வாக அமர்ந்து விட்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!