Skip to content
Post Views: 208
அத்தியாயம் – 24
சென்னை, ம.ம.க விருந்தினர் மாளிகை
Advertisement
தேவராஜனையும், வருணனையும் சந்திக்க வந்த உதயனின் முகம் தெளிவில்லாமல் இருந்தது.
“என்னண்ணா அப்டி ஃபோன்ல கூட பேச முடியாத விஷயம்?” என்றார் வருணன் பதில் தெரிந்தே.
Advertisement
Advertisement
“ரிசல்ட் எப்டியிருந்தாலும் கூட்டணி பிரேக் ஆகாதுன்னு எனக்கு அசூரன்ஸ் வேணும் வருண்!”
“அதெப்படி தம்பி, இப்பவே முடிவெடுக்க முடியும்?” – இடையிட்டார் தேவராஜன்.
Advertisement
“அதைப் பேச தான் சி.எம் என்னைய அனுப்பினார். சென்டர்ல எங்க ஆதரவு இல்லாட்டி, ஆட்சி கவிழ்ந்திடும்னு தாரா மேம்க்கு தெரியுமே”
“ணா, டீல் என்னன்னு சொல்லுங்க?” எனவும், உதயன் சில விஷயங்களைச் சொல்ல, யோசனையில் புருவங்களை நெறித்தார் வருணன். தேவராஜனிடம் சற்றே அதிருப்தியான பார்வை.
“இது நான் மட்டும் முடிவெடுக்குற விஷயம் கெடையாது! அதோட தாராமேமும் கூட்டணி கட்சிகள் கிட்ட கன்சல்ட் பண்ணனுமேண்ணா”
“ம்ப்ச், அதெல்லாம் எனக்கும் தெரியும் வருண். உன்னைய இங்க வர வைச்ச ரீசனே எங்கள அட்வோகேட் பண்ணத்தான். நாளைக்கு ரொம்ப லேட்…என்ன நடந்தாலும் ஃபேஸ் பண்றதுக்கு நான் தயாரா இருக்கணும்!”
“அது ஓகே தான், ஆனா இதுல எங்களுக்கென்ன ஆதாயம்?”
“ஸ்டெபிளிட்டி!” என்றார் உதயன் பளிச்சென.
“ம்ப்ச், அது இப்போ இருக்குறது. புதுசா என்ன கெடைக்கும்?”
“நான் சொல்லமாட்டேன் வருண், செஞ்சு காட்டுவேன்!” என்ற உதயன் எழுந்து விட்டார் பேச்சு முடிந்தது என்பது போல்.
தந்தையும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, வருணனின் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு, தேவராஜனிடம் வணங்கி விடைபெற்றார் உதயன்.
“என்ன கண்ணு, தம்பி இப்டி சொல்லிட்டு போறாரு? அம்மணிக்கும், இவருக்கும் சுத்தமா ஆகாதே” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார் தேவராஜன்.
“விடுங்கப்பா, பாத்துக்கலாம். இது தான் நடக்கும்னு இன்னும் தெரியாதே? அதோட கூட்டணி ஆட்சின்றப்போ எல்லாத்தையும் அனுசரிச்சுத் தான் போகணும். அது தாரா மேமுக்கும் தெரியும், வசுந்தராவுக்கும் தெரியும்!”
“சரி கண்ணு, நான் வந்ததும் நல்லதாப் போச்சு. நீ கெளம்பு. அப்பப்ப அங்க என்ன நிலவரம்னு எனக்கு தகவல் குடு. முடிஞ்சா அம்மாகிட்டயும் ஒரு வார்த்தை பேசிடு. அஞ்சலி வீட்டுக்குத் தான் போறேன்னு சொன்னா”
எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டு, டெல்லிக்குப் பறந்த வருணன் மனம் முழுவதும் வசுந்தரா தான். கடைசியாக அவருடன் பேசியதையே அசைபோட்டவரிடம் லேசான குறுகுறுப்பு.
என்ன சொல்வார் என்ற யூகம் இருந்தபோதும், அதை அவர் வாயால் கேட்க வேண்டும் என்ற பேராவல் பொங்கியெழுந்தது. விட்டால் நேராக தலைமை அமைச்சர் இல்லத்தில் போய் நின்றிருப்பார்!
டெல்லி வந்திறங்கியதுமே வசுந்தராவுக்கு அழைக்க, அவர் ஏற்கவில்லை என்றதில் சிறு சுணக்கத்துடனே கட்சியின் விருந்தினர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.
அடுத்த நாளின் விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்தது. மளமளவென தயாரான வருணன், கட்சி அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் முடிவுகளைக் குறித்த ஆய்வில் இறங்கி விட்டார்.
தாரா தேவி வந்த போது, அவரிடம் பேசுவதற்கு தயாராக தரவுகளை சரிபார்த்து எழ,
“என்ன வருண், அதுக்குள்ள ரெடி பண்ணிட்டியா?” என்றபடி, கண்ணாடியை அணிந்தவர், மேலோட்டமாக பார்வையை ஓட்டினார். யோசனையில் நெற்றி சுருங்க,
“எதுக்கு கேபினட் ரீசஃபுல் பண்ணனும் சொல்ற வருண்? இது நம்ம பிளான்லயே இல்லையே” என்றார்.
“மேம், மஹாராஷ்டிரால விக்ரம் தேசாய் சி.எம்மா உட்காரணும்னு தான் பார்ப்பார். நமக்கு அது நல்ல ஆப்பர்சூனிட்டி! அவரைத் தூக்கிட்டு உதயனை டெபுடி பிஎம் ஆக்கிடலாம். விக்ரம் ரீப்லேஸ்மென்ட்டுக்கு வேற சின்ன மினிஸ்டிரி ஏதாவது கொடுக்கலாம்”
தாராதேவியின் முகத்தில் இன்னும் சிந்தனை ரேகைகள்.
“டைம் இருக்கு, யோசிச்சு சொல்லுங்க” என்றபடி வெளியேறப் போக,
“இதுக்கு வசு ஒத்துக்க மாட்டா, வருண்!” என அவரை நிறுத்தினார் தாரா தேவி.
“வேற ஆப்ஷன் இல்ல மேம்! நாம வேந்தன் மக்கள் கழகத்துக்கு ஆதரவு குடுக்க முடியாது. மக்கள் காறித்துப்புவாங்க. அது பரவாயில்லன்னு பார்த்தாலும் உதயன் அவரோட கட்சி சப்போர்ட் வாபஸ் வாங்கிடுவார்”
“ஹ்ம்ம்ம், கூட்டணி ஆட்சினாலே இது ஒரு தலைவலி!” என்று சலித்த தாராதேவி, உடனடியாக தலைமை அமைச்சரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார்.
அதில் கவனம் வைத்த வருணன், சில நிமிடங்கள் வெளியேறாமல் அப்படியே நின்றார்.
“லலிதா, 5 ஸ்டேட்ஸ் எலெக்ஷன் ரிசல்ட் வந்துட்டு இருக்கு. டிசிசன்ஸ் எடுக்குறதுக்கு பி.எம் இங்க இருந்தா பெட்டர்”
மறுமுனை என்ன கூறியதோ,
“நோ, நோ அது தேவையில்லாத மீடியா அட்டென்ஷன்” என உடனே மறுத்த தாராதேவி,
“எஸ், இன்னிக்கு ஈவினிங் ஃபுல்லா கிளியர் பண்ணிடுங்க” என்று அழைப்பை துண்டிக்க, என்ன முயன்றும் வருணனால் முகம் பிரகாசிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.
கண்ணும், கையும் தீவிர அலசலில் இருக்க, மனமோ வசுந்தராவை நேரில் காணும் நேரம் வர ஆவலுடன் காத்திருந்தது. வருணன் யூகித்திருந்த திசையிலேயே தேர்தல் முடிவுகளும் வெளி வரத் துவங்கியது.
கட்சிக்கு விசுவாசமான சில மூத்த தலைவர்களை வைத்துக் கொண்டு, மடமடவென காய்களை நகர்த்திய படியே இருந்தார். அதில் நேரம் இறக்கை கட்டிப் பறக்க வருணன் மதிய உணவைக் கூட மறந்து விட்டிருந்தார்…
அந்த மாலை வேளையில், கருப்பு ஜார்ஜெட் புடவையில் வசுந்தரா வந்திறங்கிய போது வருணனுக்கு இருந்த பசியும் மறந்து விட்டது. எப்போதும் காட்டன் புடவையில், அதிகாரத் தோரணையுடன் வருபவர், இன்று ‘கேஷுவல் லுக்’லில் இருந்தார்.
வசுந்தரா தாராதேவியின் அறைக்குள் நுழைந்த போது, வருணனின் கண்கள் அவரை மொய்க்க, வசுந்தாராவோ வருணனை ஆழ்ந்து பார்த்தார். முகத்தில் அப்படி ஒரு தெளிவு, உறக்கமின்மையினாலான சோர்வையும் மீறிய பொலிவு. அவரது அந்தப் பார்வையில் வருணனுக்கு மூச்சடைத்தாலும், பல வருட காத்திருப்பு கையில் வரமாக தவழும் பரவசம்!
கேள்விகளுக்கும், பேச்சுகளுக்கும் இனி இடமேதுமில்லை என ஐயம் திரிபற உணர்ந்தவர், கடின முயற்சிக்குப் பின்னரே தாராதேவியின் பக்கம் பார்வையைப் பதித்து அவர்களது பேச்சில் கவனம் வைத்தார்.
“மேம், விக்ரம் தேசாய தூக்குறது நல்ல ஐடியா தான். ஆனா அவர் அவ்ளோ ஈசியா டிஃபென்ஸ் அன்ட் ஃபனான்ஸ் அவர் கட்சிகிட்ட இருந்து எடுக்குறதுக்கு ஒத்துக்க மாட்டார்!” என்றார் வசுந்தரா யோசனையுடன்.
“அது என்னோட பிரச்சனை வசுந்தரா! ஐ வில் டீல் வித் ஹிம். வேற?”
“சம்பந்தமே இல்லாம எதுக்கு உதயனுக்கு டெபுடி பிஎம்? எனக்குப் புரியல!”
“இப்போ இது கண்டீஷன் ஆயிடுச்சு வசுந்தரா!”
“ம்ப்ச், ஆனா நாம ஏன் ஒத்துக்கணும்? இட்ஸ் நாட் ஃபேர். அவருக்கு கொடுத்த மிஷன் வேலையக் கூட அவர் ஒழுங்கா எதுவும் பண்ணல. வெறும் எலெக்ஷன் வேலை தான் பண்ணார்!”
“அண்ணா இனிமே பண்ணுவார் வசு. அவங்க ப்ரொஃபைல் நேஷனல் லெவல் ரெய்ஸ் பண்றது தான் பிளான்” என்று முதல்முறையாக வாய் திறந்தார் வருணன். அவரை முறைத்தபடி,
“அதுக்கு நான் தான் கிடைச்சேனா?” என்றார் வசுந்தரா.
“லிசன் வசுந்தரா! என்ன பண்ணாலும் தமிழ்நாட்டுல ரீஜனல் பார்ட்டிஸ் கைல தான் பவர் இருக்கு. இப்ப அவங்க மித்த ஸ்டேட்ஸ் கூடவும் சேர்ந்து ஒரு நெட்வொர்க் லீட் பண்றாங்க. இல்லாட்டி போன கவர்ன்மெண்ட் கொண்டு வந்த டீலிமிட்டேஷன் பில் ஈசியா தோற்கடிச்சிருப்பாங்களா?”
“மேம், எல்லாமே எனக்கு புரியுது. ஆனா டெபுடி பி.எம்னா நான் உதயன் கூட க்ளோசா வொர்க் பண்ணனும். அந்த டைனமிக்ஸ் எப்டி வொர்க் ஆகும்னு எனக்குத் தெரில”
சில நிமிடங்கள் மௌனம் காத்த தாரா தேவி வருணனைப் பார்க்க, அவரோ வசுந்தராவின் ஒரு நொடி காதல் பார்வை, கோபக் கனலாக மாறிய நொடியிலிருந்து, ‘மீண்டுமா?’ என்ற தவிப்பை வெளிக்காட்ட முடியாதபடி அமர்ந்திருந்தார்.
“வருண்” என தாராதேவி அழைக்கவும், சட்டென கவனம் கலைந்தார்.
“மேம்?”
“டு வீ ஹேவ் எனி அதர் ஆப்ஷன்?”
“இல்ல மேம். உதயண்ணா இதுல ரொம்ப தீவிரமா இருக்கார்!”
“நான் வேணும்னா மணிவாசகம் சார் கிட்ட பேசிப் பார்க்கட்டுமா? டிஃபென்ஸ் இல்ல பைனான்ஸ் ரெண்டுல எது வேணுமோ குடுத்துடலாம், அது ஒன்னும் பிரச்சனையில்ல”
“ம்ம்ம்ம்” என சில நொடிகள் கைகளை நெட்டி முறித்தவர்,
“மேம், இதுல என்னோட செல்ஃபிஷ்னசும் கொஞ்சம் இருக்கு” என்றார் மெல்லிய குரலில்.
“உனக்கு என்ன மேன் செல்ஃபிஷ்னஸ்?” என்று சிரித்தார் தாரா.
“இல்ல அன்னிக்கு வசுந்தராக்கு அடிபட்டப்போவே ஐ ஃபெல்ட் தேட் நீட். இது ஒரு ஆளுக்கு டூ மச் பர்டன் மேம்” என்று நிறுத்தியவர்,
“…சித்தார்த்தும் இல்லன்றப்போ உதய் அண்ணா இஸ் குட் சாய்ஸ். அவங்களயும் சேட்சிஸ்ஃபை பண்ணி, கூட்டணிய ஸ்டிராங்கா வைச்சிக்கலாம். நமக்கும் கேப்பபுள் ஆளுங்க கூட இருப்பாங்க” என்றார் வசுந்தராவின் முக மாற்றங்களை அவதானித்துக் கொண்டே.
அதை தலையசைத்து ஆமோதித்தார் தாரா தேவி.
“உன்னோட டிசிசன் தான் ஃபைனல் வசுந்தரா. வாட் டு யூ சே?”
‘அப்டியே எனக்கு நூறு ஆப்ஷன் கொடுத்த மாதிரி…நல்லா கார்னர் பண்ணிட்டு. மவனே வெளில வா, இருக்கு உனக்கு. ஐடியாவ குடுக்குற நீ’ என மனதினுள் இருவரையும் வறுத்தெடுத்த வசுந்தரா,
“அஸ் யூ விஷ் மேம். அட் எனி காஸ்ட், கூட்டணிய ப்ரொடெக்ட் பண்ணித் தானே ஆகணும்” என்று மறைமுகமாக, தனது ஒப்புதலை வழங்கினார்.
“வேற எதுவும் பேசணுமா மேம்?”
“இல்ல வசுந்தரா. கேரளால நாம மெஜாரிட்டி சீட்ஸ் வின் பண்ணிருக்கோம். அதுக்கு சின்ன டின்னர் செலிப்ரேஷன். உன் ஆபிஸ்ல ஃபுல் டைரி கிளியர் பண்ண சொல்லிர்ந்தேனே?”
“யா, அது ஒன்னும் பிரச்சனையில்ல மேம்…கேன் ஐ பாரோ வருண் ஃபார் 30 மினிட்ஸ்?”
“ஷ்யூர். பாத்து, பையன் காலைலேர்ந்து கொலை பட்டினி!”
அதற்கும் வருணனை முறைத்துவிட்டு, வசுந்தரா முன்னே நடக்க, அவரை பின் தொடர்ந்தார் வருணன். பேசித் தீர்க்க வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்க, கோபத்தையோ வருத்தத்தையோ பிடித்துத் தொங்கும் நேரம் இதுவல்ல என்று உணர்ந்தே இருந்தார். அவருக்கு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து அந்தத் தருணத்தின் இனிமையை அனுபவிக்கும் எண்ணமே வியாபித்திருந்தது.
error: Content is protected !!