Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 45.3

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 45.3

மாலதியை தவிர்த்தது விட எண்ணியே அவளை வரவழைத்திருந்தாள்.ஆனால் அவளோ அவளின் அக்கா குழந்தையை அழைத்து வந்திருந்தாள்,அந்த குழந்தையை பார்த்தும் இவள் மனம் மாறியது. பேக்கரியில் அந்த குழந்தைக்கு ஸ்நாக்ஸ் வாங்க மாலதி மறுத்து விட்டாள்.

சிறிது நேரம் மீண்டும் மீண்டும் சல்மானை பற்றிய பேச்சு வர, இவள் அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்.

கங்கா ஏன் என் முகத்தைகூட நீ பார்க்க மாட்டீங்கறே? என்னை பாரு.



Advertisement

எனக்கு உன் முகத்தை பார்க்க விருப்பமில்லை மாலதி.நாம்ம ஒருத்தர முழுமையா நம்பும் போது ஒரு இடத்துல அந்த நம்பிக்கை உடையுது.அதுக்கு அப்பறோம் எப்படி அந்த உறவை நாம்ம தொடறது? எப்படி முகத்தை பார்த்து பேசறது?

நான் என்ன நம்பிக்கை துரோகம் உனக்கு பண்ணுனே கங்கா.

“நீ செய்த சில விஷயங்கள் எனக்கு பிடிக்கல மாலதி. இனியும் நம்ம பிரெண்ட்சிப் தொடர எனக்கு விருப்பமில்ல. இதோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்” என திரும்பி பார்க்காது கிளம்பி விட்டாள்.

Advertisement

நல்ல பெண்தான் மாலதி.சல்மான் விஷயம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு நல்ல தோழியாக இருந்து இருப்பாள். நித்யாவை தவிர்த்த போதுகூட இவ்வளவு வலி வரவில்லை. ஆனால் மாலதியை விட்டு வரும் போது வலிதான்.

Advertisement

என்ன இருந்தாலும் சல்மான் என வரும்போது அவனை யாருக்கும் விட்டுத்தர விருப்பமில்லை அவளுக்கு.

அடுத்தடுத்த நாட்களில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
‘இதற்கு மேல் முடியாது’ என லட்சுமியிடம் சொல்லி ஹாஸ்பிடல் சென்றாள்.மீண்டும் முதலில் இருந்து… உடம்பையே ஃபுல் ஸ்கேன் செய்ய … எல்லாம் நார்மலாக இருந்தது.

கலா,”ஏன் கங்கா எங்க அக்காவே இப்படி கஷ்டப்படுத்தறே?அவளை பாரு எப்படி பயந்து போய் இருக்கானு.உன் உடம்பை பத்திரமா பார்த்துக்கோ.நீ அவளை பார்ப்பேனு நினைச்சா.அவ உன்னையே பார்த்திட்டு இருக்கா.” என்றார்.

Advertisement

தன்னில் பாதியை இழந்த வலி.தந்தை இல்லாத இடத்தில் தன்னால் முடியாவிட்டாலும் முடிந்த அளவு அதையும் சமாளித்து நிற்கிறார்.அவரது சோர்ந்த முகம் கங்காவை பயமுறுத்தியது.
சிவராமன போல இவரும் தன்னை ஏமாற்றி சென்று விட்டால்? கூடாது எப்படியாவது உடலை சரி செய்ய வேண்டும் என முடிவெடுத்தாள். ஆனால் பலன் தான் இல்லை.

இந்த நிலையில் ஆறுமாதம் அடைப்பு முடிய,கோவிலுக்கு சென்றனர் மூவரும்.

முருகா!என் வீடு அழகான குருவிக்கூடு. அதை இப்படி கலச்சிட்டையே.எங்க அப்பாவே ஏன் என்கிட்ட இருந்து எடுத்துகிட்டே?எல்லாரும் ஒருநாள் இறக்கறதுதானே,ஏன் அவருக்கு மட்டும் இப்படி நிம்மதி இல்லாத இறப்பை கொடுத்தே?என தன் மனதில் இருந்த ஆதகங்களை கொட்டி விட்டு கிளம்பினாள்.

லட்சுமியும்,கெளசியும் முன் செல்ல.. இவள் நடக்க முடியாமல் மெதுவாக சுவற்றையும், கைப்பிடியையும் பிடித்து நடந்து வந்தாள்.

கோவில் நுழைவு வாயிலில்…’அக்கா!’ என ஒரு இருபது வயது இளைஞன் இவளை அழைத்தான்.இவளும் நின்று அவனை பார்க்க…பச்சை நிறச் சட்டை.காவி வேஷ்டி, காவி துண்டு அணிந்திருந்தான்.
நெற்றியில் காசு அளவிற்கு குங்குமம் வைத்திருந்தான். லட்சுமியும் கெளசியும் இவர்கள் அருகில் வந்தனர்.

அக்கா உங்களுக்கு உடம்புல எதாச்சு பிரச்சனையா?

ஆமா..என்றவளது கண்ணில் அவளது வலி கண்ணீராக வழிந்தது.

உங்க அப்பாதான் இறந்துட்டாரே.நீங்க ஏன் இன்னமும் அவரை உங்க உடம்புல வெச்சிட்டு இருக்கீங்க?அவருக்கு முக்தி கொடுத்து அனுப்புங்க அக்கா.அவரு போலானு நினைக்கறாரு ஆனா நீங்கதான் அவரே இழுத்து பிடிச்சு வெச்சிருக்கீங்க.

நீங்க நைட் எல்லா தூங்காம அழுதுட்டே இருக்கீங்களாமா..
அவரு கேட்கறாரு. “நான்தான் கூடவே இருக்கனே” ஏன் அழுகறேனு?

வீட்டை வித்து,அவங்க அண்ணாவுக்கு பங்கு கொடுக்க சொல்றாரு. உங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வெக்க சொல்றாரு. கடையே மட்டும் விற்க வேண்டானு சொல்றாரு.”அது நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்சது அதே மட்டும் எதுவும் செய்ய வேண்டானு” சொல்றாரு.

எதாச்சு அம்மன் கோவிலுக்கு போங்க, அப்பா நான் எல்லாம் பார்த்துக்குவே.நீ இங்கே இருந்துக்கனு சொல்லுங்க. அவங்கள உங்க உடம்புல வெச்சி கஷ்டப்படுத்தாதீங்க.
அவருக்கு முக்தி கொடுங்க

கண்களில் நீரோடு ‘சரி’ என்றாள்.

அக்கா, நீங்க யாரையாவது திருமணம் செய்ய விருப்பப்படறீங்களா?

கங்காவிற்கு ‘பக்’ என்றானது.உடனே லட்சுமியையும்,கெளசியையும் கொஞ்சம் தள்ளி நிற்க சொல்லி ‘ஆம்’ என்றாள்.

அவரு ஃபோட்டோ இருந்தா காட்டுங்க.

இவளும் சல்மான் ஃபோட்டோவை எடுத்துக் காட்டினாள்.

ரொம்ப நல்ல பையனா தெரிறாரு. இவரே விட்றாதீங்க.அவருகிட்ட பேசி கல்யாணம் பண்ணீக்கோங்க…

சரி என்றாள் புன்னகையுடன்…

லட்சுமியும் கெளசியும் அவிநாசியே போதும் என கூற மறுத்து, ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு அம்மன் கோவிலை சிவராமனுக்காக தேர்ந்தெடுத்தாள் கங்கா.

இரண்டு பெரிய ஐய்யனார் சிலை. அதன் நடுவே கருணையே உருவாக ஒரு அம்மன் கையில் குழந்தையோடு அமர்ந்திருந்தார்.

சிறுவயதில் எல்லாம் இந்த ஐய்யனார் சிலையை பார்க்க அவளுக்கு பயமாக இருக்கும்.சிவராமன் வேஷ்டியை பிடித்து பின்னால் ஒளிந்து கொள்வாள்.

“கங்கா,முன்னாடி வந்து சாமி பார்த்து கும்பிடு” என அவளை தூக்கிக் கொள்வார் சிவராமன்

அப்பா இந்த சாமி அருவாளை கையிலே வச்சிட்டு,நாக்கு எல்லா வெளியே நீட்டி பாக்கவே பயமா இருக்குப்பா..

நம்ம கடவுள் எல்லாம் நம்மள பாதுக்காக்கதான் கையிலே அருவாளையும்,
வேலையும்,
சூலாயுதத்தையும் வெச்சிருக்காங்க.
அதை பார்த்து எல்லாம் பயப்படக் கூடாது. அப்பா கூட இருக்கும் போது உனக்கு என்ன பயம். எனக்கு நல்லா படிப்பே கொடு சாமின்னு கும்பிட்டுக்க.

சரிப்பா.அந்த நினைவுகளில் கண்ணீர் வழிந்தது.

அங்கிருந்த அம்மனிடம்,” அம்மா, எங்க அப்பாவுக்கு அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல. நீதான் அவரே பார்த்துக்கணும்.
உன்ன நம்பிதான் நான் அவரே உன்கிட்ட ஒப்படைக்கிறே. அவருக்கு நிழலான ஒரு இடத்தை கொடு. எங்க அப்பாவுக்கு ரொம்ப தாகம் எடுக்கும்.
அப்பவெல்லாம் குடிங்க தண்ணீ கொடு.எந்த கஷ்டத்தையும் அவருக்கு கெடுக்காதே.நான் எப்போ வந்து எங்க அப்பாவே கொடுனு கேட்டாலும் கொடுத்தரனும்”என அழ ஆரம்பித்தாள்.

கெளசி முன்னே வந்து , “கங்கா! ஒழுங்கா அப்பாக்கு முக்தி கொடு.நீ இப்படி அழுதேனா அப்பா போகாது கங்கா. சின்ன வயசுல இருந்து அப்பாவுக்கு எவ்வளவு கஷ்டம்.இப்போ இறந்தும் அவரு கஷ்டப்படனுமா?வேண்டா கங்கா அவரே விட்டுரு.

“அழாதே.எனக்கு தெய்வமா இருந்து வழிகாட்டுப்பானு சொல்லி அவரே விடு கங்கா” என்றார் லட்சுமி.

ஒரே ஒரு நினைவின் இழையைத்தான் பற்றிக்கொண்டு நின்றாள் கங்கா. அதை விட்டுவிட்டால், சிவராமன் தன்னிடமிருந்து முற்றிலுமாக விலகிச் சென்று விடுவார் போலத் தோன்றியது. இனி எப்போது? எங்கே?எந்த வடிவில் அவரை மீண்டும் காண முடியும்?

அவரை கஷ்டப்படுத்திய போதெல்லாம், அவர் தன்னை கடிந்து கொண்டிருந்தால் கூட பரவாயில்லை. கோபப்பட்டிருந்தால் கூட மனம் ஏற்றுக் கொண்டிருக்கும்.
ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல், தன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தருணத்திலும் தன்னை விட அதிகமாக நினைத்த மனிதரை எப்படி விட முடியும்?

உறவுகள் பல இருக்கலாம். ஆனால் சிவராமன் அவளுக்கு வெறும் தந்தை மட்டும் அல்ல.பாதுகாப்பு, பாசம்,நம்பிக்கை, அடைக்கலம்…அவள் வாழ்வின் மொத்த வடிவமுமே அவராக இருந்தார். அதனால் தான் அவரை தன்னில் இருந்து விடுவிக்கும் துணிவு அவளுக்கு வரவில்லை.

அவரை தன்னில் இருந்து விடுவிப்பது என்பது ஒரு மனிதரை விடுவிப்பது அல்ல.தன் வாழ்வின் ஒரு பகுதியையே இழப்பது போன்றிருந்தது அவளுக்கு.

“இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா”

“அப்பா!என்னை மன்னிச்சிருப்பா.நீ இந்த அம்மன்கிட்ட இருந்துக்கப்பா.உன் இடத்துல இருந்து எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்ப்பா.உன்னை இங்கே விட்டுட்டு போறேனு நினைச்சுக்காதேப்பா.கொஞ்ச நாள் நீ இங்கே ஓய்வெடுப்பா. என்னோட மகனா நானே உன்னை வந்து கூட்டிட்டு போறே.நீயே எனக்கு மகனா வந்து பிறக்கனும்ப்பா” என அவருக்கு முக்தியை தந்தாள்.

சிவராமன் வரலாற்றுத் தலைவன் இல்லை. ஒரு சாதாரண குடும்ப தலைவன்.நீதி, நேர்மை, சத்யம் போன்ற வார்த்தைகளின் வடிவம் அவன். கடின உழைப்பாளி.ஒரு உண்மையான போராளி.கங்காவின் யுகத்தின் தலைவன் அவன்தான்.

வீடு,கெளசி திருமணம் என அனைத்தையும் சிவராமன் இருந்திருந்தால்,எப்படி செய்வாரோ அப்படியே செய்தாள் கங்கா.

லட்சுமியின் உடன்பிறப்புகளும், பழனிச்சாமி குடும்பமும் உறவை காத்து நின்றனர். குடும்பம் என்பது ஆயிரம் சண்டை சச்சரவு மனஸ்தாபங்களை உடையதுதான்.ஆனால் விட்டுக் கொடுத்து போனால் வாழும் போதே சொர்க்கம்தான்.

கடையை மட்டும் என்ன செய்வது என அவளுக்கு தெரியவில்லை.
நிச்சயமாக சிவராமனே அதற்கும் வழிகாட்டுவார் என எண்ணினாள்.

அந்த புதுக்கடைக்காரன் வாடகை கூட கொடுக்காமல் கடையை காலி செய்து ஓடினான்.எத்தனை இக்கட்டான நிலை வந்தாலும் லட்சுமியும் கங்காவும் உறுதியாக நின்று அந்த கடையை காத்தனர்.

அன்று மாலை சல்மான் புகைப்படம் அவளது ஃபோனில் வந்தது.

ஒரு புகழ்பெற்ற மாநாட்டில் தனது ஆய்வுக் கட்டுரையை உலகின் தலைசிறந்த அறிஞர்கள் முன்னால் விளக்கி முடித்திருந்தான்.

அந்த மேடையின் நடுவில் சிரித்தவாறு நின்றிருந்த அவனை பார்த்தால், நான்கு வருடங்களுக்கு முன் கங்கா அறிந்திருந்த அந்த சாதாரண இளைஞனாக தோன்றவில்லை.

அவன் ஒரு ஆய்வாளன் மட்டுமல்ல…
தன் வாழ்க்கையைத் தானே வடிவமைத்த சிறந்த சிற்பி.

அந்த புகைப்படத்தை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, “உண்மையா உழைக்கிறவன் எப்பவும் தோற்க மாட்டான் கங்கா…” என்ற சிவராமனின் குரல் கேட்டது.

அந்த புகைப்படத்தில் “தேஜஸ்வி நவதிதமஸ்து” என்ற சமஸ்கிருத வாசகம் இடம் பெற்றிருந்தது அதன் பொருள்: “நாம் கற்ற அறிவு ஒளிமிக்கதாகட்டும்…
நமது சிந்தனை மேலும் மேலும் பிரகாசிக்கட்டும்…”

இவளும் பதிலுக்கு “மா வித்விஷாவஹை” என்ற சமஸ்கிருத வார்த்தையை உச்சரித்தாள் அதன் பொருள்: நம் இருவரும் ஒருவர் மேல் இன்னொருவர் பகைமை கொள்ளாது. எப்போதும் அன்புடன் இருப்போம்.

வாழ்க்கைத்துணை என்பது நாமாக அமைத்துக் கொள்வது இல்லை. இன்னாருக்கு இன்னார்தான் என நாம் பிறக்கும் போதே எல்லாம் எழுதப்பட்டு விட்டது.இதை கங்கா நன்கு அறிந்திருந்தும், சல்மானை மறந்து விடவும் முடியவில்லை. அவனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வாழவும் முடியவில்லை.

“தவக்குல்”என்றால் “எனக்கு பிடித்தது நடக்க வேண்டும்” என்று பிடிவாதமாக காத்திருப்பது அல்ல.

“தன்னால் முடிந்ததை செய்து விட்டு, அதன் முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைத்து,அவர் தீர்ப்பை மனநிறைவோடு ஏற்றுக்கொள்வது”
கங்கா சல்மானை தவக்குல் செய்ய முடிவெடுத்தாள்.

“யா அல்லாஹ்! சல்மான் எனக்கும் எனது குடும்பத்திற்கும் என் எதிர்கால வாழ்விற்கும் நன்மையானவனாக இருந்தால்,அதே போல் நானும் அவனது குடும்பத்திற்கும்,
அவன் எதிர்கால வாழ்விற்கும் நன்மையானவளாக இருந்தால்,எந்த வித கஷ்டமும் இன்றி, எங்களை சுற்றியுள்ள மனிதர்களின் எந்தவித சூழ்ச்சியும் இன்றி எங்களை வாழ்வில் இணைத்து விடு.

இல்லையென்றால் பழுத்த வெள்ளரிப்பழம்,
அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவது போல்… வழியில்லாமல் அவனை என் வாழ்வில் இருந்து விடுவித்து விடு.”என வேண்டியவள், காற்றில் பறந்து வந்த எஸ்.ஜானகியின் குரலில் மயங்கினாள்.

“உனக்காக ஆஆஆஆஆஆஹா
உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன்…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

–தலைவன் நிறைந்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!