Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடிநிலா – 25

அத்தியாயம் – 25

கேட்ட அரை மணி நேரம், முக்கால் மணி நேரமாகக் கடந்திருக்க பேச்சு வார்த்தை பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம்! இருவரது முகத்தின் பொலிவை கூர்ந்து பார்த்தார் தாரா தேவி.



Advertisement

“ஐ கெஸ் கன்க்ராஜுலேஷன்ஸ் ஆர் இன் ஆர்டர்?”

“யெஸ் மேம்” என்றார் வருணன் விரிந்த புன்னகையுடன்.

Advertisement

Advertisement

“வெல், வெல். கன்க்ராஜுலேஷன்ஸ் அண்ட் மை பிளசிங்க்ஸ் டு போத் ஆஃப் யூ. வாங்க சாப்டுட்டே பேசலாம், எல்லாரும் உங்களுக்கு தான் வெயிட்டிங்”

“தேங்க் யூ மேம். விக்ரம் தேசாய் கிட்ட பேசிட்டீங்களா?”

Advertisement

“ம்ம்ம், பேசினேன் வருண். நம்ம பிளான் ஓகே தான். பட் டிஃபென்ஸ், பைனான்ஸ் ரெண்டும் மாத்த முடியாதுன்னு சொல்றார். நீ என்ன சொல்ற வசு?”

“உதயன் டெபுடி பி.எம்னா, அவர் மிஷன் 4 & 2 ரெண்டும் லீட் பண்ணா பெட்டர். சோ பைனான்ஸ் அவருக்குக் கொடுத்துட்டு, டிஃபென்ஸ் ராஜேஷ் பவாருக்கு மாத்தி விட்டுடலாம். விக்ரம் தேசாய் பார்ட்டில இவர் தான் கொஞ்சம் சென்சிபிள். சிட் ரொம்ப நல்லா ரிலேஷன்சிப் செட் பண்ணி வச்சிருக்கார்”

“ம்ம்ம், அப்போ உதயன் கிட்ட இருக்குற எஜுகேஷன்?”

“அது என்னோட வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்து பெஸ்ட் கேண்டிடேட் எடுக்கலாம். அண்ட் எல்லாத்துக்கும் நானோ, உதயனோ ஓவர்சீ பண்றப்போ வீ வில் ஹேவ் கன்ட்ரோல்ஸ் இன் ப்ளேஸ்”

“ரைட், வாட் நெக்ஸ்ட்?”

“பிரசிடெண்ட் கிட்ட பேசிட்டு நான் நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் சொல்றேன்” 

பேச்சோடு பேச்சாக உணவு நேரம் முடிந்திருக்க, மற்ற முக்கிய விருந்தினர்கள் விடை பெற்றுக் கிளம்ப ஆரம்பித்தனர். கௌதமை அழைத்த வசுந்தரா,

“உங்க டீம் சாப்பிட்டாங்களா?” என்றார்.

“அது ப்ரோட்டக்கால் இல்ல மேம்…”

“இட்ஸ் ஓகே கௌதம், எனக்காக தானே வந்தீங்க. இட்ஸ் கெட்டிங் லேட்…ப்ளீஸ்” 

அதை மீற முடியாத கௌதம், தன் குழுவினர் சிலரை வசுந்தராவுடன் நிறுத்தி விட்டு, மற்றவர்களை உணவுண்ண அழைத்துச் சென்றார். சற்று தள்ளி நின்ற தாரா தேவி மற்றும் வருணனின் அருகே வந்தார் வசுந்தரா. வருணனின் முகத்தில் வசுந்தராவைக் கூடவே இருத்திக் கொள்ளும் பேராசை.

“அவங்க சாப்பிட்றதுக்கு தான் வெயிட் பண்றீயா வசு?”

“மேம்…”

“ஹா, ஹா…சில் கேர்ள்! இது எனக்கு லாங்க் அவெய்ட்டட் குட் நியூஸ் தான் வசு. ஆனா யூ போத் ஆர் பில்லர்ஸ் ஆஃப் மை பார்ட்டி. சோ உங்க கல்யாணத்துக்கப்பறம் இந்த டைனமிக்ஸ் எப்டி சேஞ் ஆகும்னு கன்செர்ன் இல்லாம இல்ல!”

வசுந்தரா, வருணைப் பார்க்க அவரது முழு கவனமும் வசுந்தரா மீதே இருந்தது. அவரிடம் இருந்தும் பதில் வராமல் போக, இருவரையும் அளவீட்டுப் பார்வை பார்த்தார் தாரா.

“மேம், நானும் வருணும் இன்னும் ஃபுல்லா வொர்க் பத்தி டிஸ்கஸ் பண்ணல. அதோட எங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உங்க கிட்ட சொல்லிருக்கோம்!”

“ஐ அண்டர்ஸ்டாண்ட், பட் என்னோட கன்செர்ன் வேலிட் தானே வசு?”

“வேலிட் தான், ஆனா அவசியம் இல்ல மேம். வருண் எந்த விதமான கவர்ன்மென்ட் போஸ்ட்லயும் இல்ல. சோ லீகலா எந்த இஸ்யூசும் வர வாய்ப்பில்ல. இட்ஸ் அப் டு ஹிம் ரியலி! வருண்?”

‘கொஞ்ச நேரம் இந்த ஃபீலிங்க முழுசா அனுபவிக்க விடுறாங்களா’ என மனதிற்குள் புலம்பினாலும்,

“கிவ் மீ சம் டைம் மேம். எனக்கு இன்னும் இவங்க எஸ் சொன்னது டைஜஸ்ட் பண்ண முடியல. வீட்ல பேசணும். அட் எனி காஸ்ட் வசுவோட வேலைக்கு குறுக்க நிக்கிற மாதிரி நான் எதுவும் பண்ண மாட்டேன்”

“என்ன மேன் நீ, நான் கட்சிக்கு சப்போர்ட் பண்றதுக்கு வழி கேட்டா நீ வசுவோட வேலைக்குன்னு சொல்ற. ஐ காண்ட் லூஸ் யூ வருண்!”

“மேம்…நான் நோன்னு சொல்லல. ஜஸ்ட் டைம் வேணும்னு தான் சொல்றேன்! அதோட அப்பா எப்டியும் கட்சில தான் இருப்பாங்க, தமிழ்நாடு ஃபோக்கஸ் பண்ணிட்டு. சோ என்னோட இன்புட்ஸ் ஏதாச்சும் ஒரு வழியா உங்களுக்கு வந்துடும்” என்றார் பூடகமாக.

அதில் சற்று சமாதானம் அடைந்தார் தாரா தேவி.

“எப்ப கல்யாணம்?”

“கூடிய விரைவில் மேம்…” – இடையிட்டார் வசுந்தரா. 

“ரைட், வெயிட்டிங் ஃபார் த இன்விட்டேஷன்” என்றவரை அணைத்து வசுந்தரா விடை பெற, வருணன் காதில் புகை மட்டும் தான் வரவில்லை. 

தாரா தேவியை வழியனுப்பி வைத்து விட்டு, விருந்தினர் இல்லத்திற்குக் கிளம்பிய வருணனை உதயன் அழைத்து விட்டார். 

“ஆல் சார்ட்டட் வருண்?” என்றார் எடுத்தவுடனே. 

“ம்ம்ம், ஆல்மோஸ்ட்…”

“என்னடா, இழுக்குற? உங்க மேடம் கட்டைய போடுறாங்களா?”

“அதெல்லாம் இல்லண்ணா. கண்டீஷனாலா தான் ஒத்துட்ருக்காங்க!”

“என்ன கண்டீஷன்?”

“அவங்களே சொல்லுவாங்கண்ணா. அங்க என்ன லேட்டஸ்ட், அப்பா ரொம்ப டென்ஷனா இருந்தாங்க”

“நீயூஸ் பாத்துருப்பியே! இங்க யாருக்கும் மெஜாரிட்டி கெடைக்கலடா. வெற்றி வேந்தன் தான் ஆட்சி அமைக்கிறதுக்கு கேட்டிருக்கார். அப்பா எதிர்க்கட்சியா தான் இருப்போம் சொல்லிட்டார்”

“சாரிண்ணா!”

“விடுடா…இது ஒன்னும் எங்களுக்கு புதுசில்லயே. எதிர்கட்சியா சிறப்பா செயல்படுவோம்!”

“ம்ம்ம்”

“நான் ஃபுல்லா டெல்லிக்கு ஷிஃப்ட் ஆகுறேன் வருண். இங்க அப்பா பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க! எங்கதைய விடு…உங்க மேடம் என்ன சொல்றாங்க? கண்ணாமூச்சி ஆட்டம் முடிஞ்சுதா இல்லியா?” 

“ஹாங்…முடிஞ்சுது…முடிஞ்சுது” – மெல்லிய சிரிப்பு வருணனிடம்.

“டேய்…தம்பி! சிங்கத்தை சாய்ச்சுப்புட்டியே” தேர்தல் முடிவுகள் குறித்த தனது வருத்தத்தையும் மீறி, அத்தனை ஆர்ப்பரிப்பு உதயன் குரலில். 

“கங்கிராஜுலேஷன்ஸ் மேன். ஐ ஆம் சோ ஹாப்பி ஃபார் யூ போத்”

“தேங்க்ஸ்ணா. இனிமே தான் வீட்ல சொல்லணும். நீங்க அப்பாட்ட எதுவும் சொல்லிடாதீங்க”

“ஓ…ரைட். ஐ வோண்ட் ப்ரேக் யுவர் சர்ப்ரைஸ். நீ அந்த வேலையப் பாரு அப்போ” என்று அழைப்பை துண்டித்து விட்டார். வருணன் மனநிறைவுடனே தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தார்.

நேரம் பின்னிரவைத் தொட்டிருக்க, உல்லாசமான மனநிலையில் வசுந்தராவுக்கு அழைத்தார்.

“ஹாய் பொண்டாட்டி”

“பார்றா…அதுக்கு இன்னும் டைம் இருக்கே”

“எனக்கு இல்ல! நீ யெஸ் சொன்னவுடனே பொண்டாட்டி தான். டெக்னிக்கலி என்னப் பொருத்தவரை அதுக்கும் முன்னாடியிருந்தே தான்…ஆனா அப்டி உரிமையா நினைக்க முடியாம ஒரு பவுண்டரி வச்சிருந்தேன்”

“ஏனாம்?”

“என்ன இருந்தாலும், நீ ப்ரெண்ட் இடத்தில தான் வச்சிருந்த. அது எனக்கு நல்லா தெரியும்ன்றப்போ, நம்பிக்கைய உடைக்கிற மாதிரி நடந்துக்கக் கூடாதுல்ல”

அதில் மனம் நெகிழ்ந்தாலும்,

“அவ்ளோ நல்லவனா நீ?” என்று வாரினார் வசுந்தரா.

“100% அக்மார்க்”

“எங்கயாவது எழுதி ஒட்டு!”

“என்னடி…வாய் ரொம்ப நீளுது! அந்த வாய…”

“வருண்!”

“கம் போட்டு ஒட்டணும்னு சொல்ல வந்தேன். நீ என்ன நெனச்ச?”

“ம்ம்ம்…நம்பிட்டேன்” என்று நொடித்தவர்,

“எதும் பிராப்ளமா வரு? இவ்ளோ லேட்டா கூப்பிட்டுருக்க…”

“அதெல்லாம் இல்ல. வீட்ல எல்லார் கிட்டயும் சொல்லணும்ல. அதுக்காகத் தான் கூப்பிட்டேன். மோரோவர், எனக்கு பழகிக்கோ வசு!”

“என்ன பழகணுமாம்?”

“இப்டி லேட் நைட் கால் பண்றது. என்ன பேசுறோம்னே தெரியாம வெட்டிக் கதை பேசுறது…இதுக்கெல்லாம் தான்”

“அது சரி, இதெல்லாம் வேலைக்காகாதுன்னு தான் நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றேன். ஐ வாண்ட் யூ டு பி நெக்ஸ்ட் டு மீ வரு! என்னோட வேலைக்கு ஃபோன்ல குடும்பம் நடத்துறது எல்லாம் ஒத்து வராத விஷயம்”

‘ம்ப்ச், உனக்கு கொடுத்து வைச்சது அவ்ளோ தாண்டா வருணா’ என மெல்லிய குரலில் முனங்க,

“என்ன?”

“ஹாங், ஒன்னும் இல்ல. இப்போ அப்பா, மாமாக்கு கான்ஃப் கால் போடவா?”

“ரொம்ப லேட் ஆகிடுச்சே?”

“யாரும் தூங்கிருக்க மாட்டாங்க. நிம்மதியா தூங்குற மாதிரியா தமிழ்நாடு எலெக்‌ஷன் ரிசல்ட் இருக்கு?”

“அதுவும் சரி தான். வெற்றி வேந்தன் எல்லாருக்கும் நாமம் சாத்திட்டர்!”

“ம்ம்ம், நீ லைன்லயே இரு” என்றவர், இரு வீட்டு பெரியவர்களையும் அழைப்பில் இணைத்தார்.

“என்ன கண்ணு? இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க?” – தேவராஜன்.

“ஒரு விஷயம் சொல்லணும்ப்பா. வெயிட் பண்ணுங்க மாமாவையும் கால் பண்றேன்” 

“மாமா, அத்தையும், அம்மாவும் தூங்கிட்டாங்களா?”

“யாரும் தூங்கல, இங்க தான் டிவி பாத்துட்டு இருக்காங்க. எதுவும் பிரச்சனையா தம்பி?”

“இல்ல மாமா, வசுவும், அப்பாவும் லைன்ல இருக்காங்க”

“ஓ, இரு ஸ்பீக்கர்ல போடுறேன்”

சில நொடிகள் மௌனம்.

“வசும்மா, என்னாச்சு?” – அஞ்சலி, பதட்டமாகக் கேட்டார்.

“மா, அடுத்த முகூர்த்த நாள் எப்பம்மா?”

“முகூர்த்த நாளா? ஏன் கேக்குற?” என்று குழப்பமாகப் பார்க்க, ராஜியோ,

“நெஜமாவா கண்ணு?” என்றார் பூரிப்பாக.

“ஆமாத்தை. உங்க பையனுக்கும் வயசாகிட்டே போகுதுல்ல. அதான் பாவம் பார்த்து வாழ்க்கை குடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்” 

“அடிங்க, யாருக்கு வயசாகுது” என்று வருணன் துள்ள, 

“என்ற மருமக சொன்னா கரெக்டா தான் இருக்கும்” என்றார் தேவராஜன்.

“வாழ்த்துகள் மாப்ள, வசும்மா உனக்கும் வாழ்த்துகள்” 

அஞ்சலிக்கு கண்ணீரே வந்து விட்டது. யாரிடமும் எதுவும் பேசாமல் பூஜையறைக்குள் நுழைந்து விட்டார். வனதேவன் பார்த்தாலும், மனைவியைத் தடுக்கவில்லை. 

“தேங்க்ஸ்ப்பா…” என்று நிறுத்தியவரிடம் சில நொடிகள் மௌனம்.

“என்ன கண்ணா?”

“நான் எல்லாரையும் ரொம்ப படுத்திட்டேன்ல…” என்று முடிப்பதற்குள்,

“வசு!” என்று வனதேவன் மற்றும் வருணனின் குரல்கள் ஒருங்கே ஓங்கி ஒலித்தது. அதில் தான் கூற வந்ததை அப்படியே விட்டவர்,

“அம்மா எங்கப்பா?” என்று பேச்சை திருப்பினார்.

“உங்கம்மாவுக்கு தலையும் புரியல, காலும் புரியல. சாமி ரூம்க்கு போயி ஏதோ பண்ணிட்டு வரா. அஞ்சு…”

“இருங்க, என் பொண்ணு கல்யாணத்துக்கு எவ்ளோ வேண்டுதல் வைச்சிருக்கேன். என்னன்னு பாக்கணும்ல” என்றவர், நாட்காட்டியை எடுத்து வந்தார். 

“நாமளே பாக்குறதா கண்ணு? ஒரு நாள் குடேன். நாங்க நாளைக்கே ஜோசியரைப் போய் பார்த்துட்டு வர்றோம்?”

“அதெல்லாம் வேண்டாம்மா. நான் கேட்டது கூட உங்க நம்பிக்கைக்காகத் தான்”

“ஆமாத்தை, டெல்லில சின்னதா ஒரு ப்ரைவேட் ஈவண்ட். நம்ம ஃபேமிலி, நெருங்கிய அரசியல் வட்டம் மட்டும் கூப்பிட்டு பண்ற மாதிரி தான் இருக்கும்”

“ஏங்கண்ணு, க்ராண்ட்டா நாம கோயம்புத்தூர்ல செய்யலாமே?”

“இல்லப்பா, அதெல்லாம் சரி வராது. நம்ம ஊர்ல சின்ன ரிசெப்ஷன் வைக்க முடியுமான்னு பாக்கலாம். அதுவே கஷ்டம் தான். செக்யூரிட்டி ப்ராப்ளம் வரும்”

“மாப்ள சொல்றதும் கரெக்ட் தான். ஃபங்ஷன் எப்டி வைச்சா என்ன? அவங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருக்குறது தான் முக்கியம்”

“அதுக்குன்னு…வசு நமக்கு ஒரே பொண்ணு. வருணும் அண்ணனுக்கு ஒரே பையன். நமக்குன்னு ஆசை இருக்கும்ல”

“மா, உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிறது முக்கியமா? இல்ல பெருசா ஃபங்ஷன் வைக்கிறது முக்கியமா?”

“இவ ஒருத்தி…வாயத் தெறக்க விடமாட்டா”

“வசும்மா, கொஞ்சம் டைம் எடுத்து பிளான் பண்ணி பண்ணலாமே” – ராஜி

“அ…அது வருண் இல்லாம இங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குத்த…” என்று விட்டார்.

அவர் அப்படி கூறியதும், அழைப்பின் எல்லா முனைகளிலும் நிசப்தம். இதற்கு மேல் யார் என்ன கூற முடியும்? 

பெரியவர்களுக்கு இன்னும் ஆச்சரியமே. வசுந்தரா அவர் இயல்பிற்கு மாறாய், இந்தளவு தன் உணர்வுகளை பகிர்வார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவரது கண்ணசைவில் தான்  வருணனின் மொத்த வாழ்க்கையும் என்பது தான் அவர்கள் எல்லாருக்கும் தெரியுமே. இருந்தும் வசுந்தரா பேசியது அப்படி ஒரு பூரிப்பைக் கொடுத்தது. 

வருணனுக்கோ வசுந்தரா கூறியதைக் கேட்டதும், பேச்சே வரவில்லை. அவரது மனமோ,‘அம்மணி என்கிட்ட சொல்றத அப்டியே பெத்தவங்க கிட்ட சொல்றா’ என்று சலுகையாக கொஞ்சவும் மறக்கவில்லை. 

அவர் அதிலேயே சிலாகித்துக் கொண்டிருக்க, அமைதியைக் கலைத்த தேவராஜன்,

“ராஜி, நமக்கு புள்ளைங்க விருப்பம் தான். இவ்ளோ நாள் இதுக்கு தானே ஏங்கிப் போயிருந்தோம்? விடு, அம்மணி சொல்ற படியே பண்ணிடலாம்” என்றார். 

“அடுத்த வாரம் ஒரு நல்ல நாள் இருக்கு கண்ணு. அதுக்குள்ள எல்லாம் எப்டி ரெடி பண்றது? மலைப்பா இருக்கே”

“அத்த நீங்க வொரி பண்ணாதீங்க. நான் இன்னும் ரெண்டு நாள்ல கோவை வந்துடுவேன். அப்பாவும் வந்திடுவாங்க. பாத்துக்கலாம்”

“டெல்லில பண்ண வேண்டிய வேலை?”

“அதுவும் நான் பாத்துக்குறேன். வசு…இன்விட்டேஷன் யாரு கூப்பிடுறது எல்லாம் நீயும் ஹெல்ப் பண்ணனும்”

“என்னைய டம்மியா வைச்சிக்கோங்க உங்க பிளானிங்ல. கேபினட் வேலை முடிஞ்சா தான் நான் இதுக்கு கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ண முடியும்”

“சரி விடு, நான் பாத்துக்குறேன்” என்ற வருணன், எல்லா திட்டமிடலையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார். பெரியவர்களிடம் தேவையான ஆலோசனையைப் பெற்று எல்லா ஆயத்த வேலைகளையும் நேர்த்தியாக செய்து முடித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!