Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 12.2

அவள் வரும் போது மணி பத்தை நெருங்கியிருக்க தற்போது சூரியன் உச்சிக்கு சென்று மொத்த வெயிலையும் தயவு தாட்சண்யமின்றி சந்தியாவின் தலைக்கவசத்தையும் தாண்டி அவள் தலையில் கொட்டிக் கொண்டிருக்க சூரியாவின் வீட்டை அடையும் போது கிட்டத்தட்ட அவள் வியர்வையில் குளித்துவிட்டாள்.

 

வழக்கம் போல காவலாளிக்கு வணக்கத்தைச் செலுத்திவிட்டு ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தாள். வழக்கம் போல அல்லாமல் சொற்பமான பணியாளர்கள் மட்டும் இருக்க “எனக்கு மட்டும் தான் சண்டே லீவ் இல்லாம போச்சு” என்று புலம்பியபடி சூரியாவின் அறையை நோக்கிச் சென்றாள்.

 



Advertisement

அவனது அறைக்கதவு திறந்திருக்கவே உள்ளே நுழைந்தவள் அங்கே அவன் சோஃபாவில் கால் நீட்டி காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும் “ஏதோ இந்த டி.எஸ்.சி இல்லைனா என் தொழில் சாம்ராஜ்ஜியமே கவுந்துடுங்கிற லெவலுக்குப் பேசுனான்.. இப்போ சார் ஹாயா பாட்டு கேட்டிட்ருக்கான்…” என்று பொருமியபடி அவன் முன் சென்று நிற்க சூரியா ஏதோ உள்ளுணர்வு உறுத்தக் கண்ணைத் திறந்தவன் தன் எதிரே கையில் கறுப்பு நிற பிளாஸ்டிக் டப்பாவுடன் நின்றவளைக் கண்டதும் தான் சொன்ன வேலையை முடித்துவிட்டாள் போல என்று எண்ணியபடி கைநீட்டி வாங்கிக் கொண்டான்.

 

அவனுக்கு இன்று எப்படியாவது சந்தியாவின் பாராமுகத்தைப் பற்றிக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம். அதோடு அவர்கள் இருவருக்குமிடையே இருக்கும் இந்த சிறுபிள்ளைத்தனமான கருத்து வேறுபாடு அவன் மனதுக்குச் சங்கடத்தைக் கொடுத்தது. இப்போது கூட அவள் தன்னைப் பார்க்காமல் சுற்றி முற்றி வேடிக்கை பார்த்தது அவனுக்கு வருத்தத்தைக் கொடுக்கவே அவன் மனதின் வருத்தத்தைக் கண்கள் பிரதிபலித்தது.

Advertisement

 

Advertisement

சந்தியா அவனது பார்வையைக் கவனிக்காதவளாய் இவ்வளவு நேர வெயில் பயணத்துக்கு அவனது அறையின் ஏ.ஸி இதமாக இருக்க அதை அனுபவித்தபடி நின்று கொண்டிருந்தாள். அவன் அந்த கீயை பெற்றுக் கொண்டதும் “ஓகே சார்! நான் கிளம்புறேன்” என்று அந்த ஏ.ஸி காற்றை இழக்க இஷ்டமில்லாதவளாய் அங்கிருந்து நகரப் போக அவனது குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

 

“அப்போ நான் கோவமா இருந்தா நீ என்னைச் சமாதானப்படுத்த டிரை பண்ண மாட்டியா பிரவுனி?” என்றவனின் கேள்வியில் திகைத்துத் திரும்பினாள் சந்தியா.

Advertisement

 

அவனது கேள்வியின் அர்த்தம் புரிய அவன் எதிரில் வந்து நின்றவள் “நான் சமாதானம் பண்ண டிரை பண்ணுனேனே சார், அன்னைக்கு பீச்சுல….மறந்துட்டிங்களா?” என்று நினைவுறுத்திவிட்டு

 

“நீங்க தான் என்னைப் பேசவே விடலையே…ஒரு எம்.டியா எனக்கு ஆர்டர் போட்டுட்டுத் தானே போனிங்க..” என்று இறுகிய குரலில் அவள் விளக்க

 

அவன் பெருமூச்சை இழுத்துவிட்டபடி “ஓகே! சாரி..அன்னைக்கு நான் அப்பிடி பேசிருக்கக் கூடாது சாரி.. பட் நீயும் என் கோவத்துக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்க விரும்பவே இல்லை” என்று பொறுப்பை அவள் புறமாகத் தள்ளிவிட

[the_ad id=”6605″]

சந்தியா அவன் மன்னிப்பு கேட்டதால் மனம் குளிர்ந்தவள் அவனது குற்றம்சாட்டுதலில் முகம் சுருக்கியவளாய் “பெருசா என்ன காரணம் இருக்க முடியும்? என்ன தான் நான் உன்னோட ஃப்ரெண்டாவே இருந்தாலும் ஒரு பொண்ணு உன்னை அடிச்சது உன்னோட ஈகோவைத் தூண்டி விட்டிருக்கும்.. நீயும் ஒரு சராசரி ஆம்பளை தானே..அது தான் உன் கோவத்துக்குக் காரணம்” என்றாள் மனத்தாங்கலுடன்..

 

சூரியா சட்டென்று “ஈகோவும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை…எனக்கு ஒரு ஃப்ரெண்டா நீ அங்கே எனக்கு சப்போர்ட் பண்ணலையேனு தான் கோவம்…மத்தபடி உன் கிட்ட நான் ஏன் ஈகோவை காட்டப் போறேன் பிரவுனி?” எண்று படபடத்தபடி தன் மனதில் இருப்பதைக் கொட்டிவிட்டான்.

 

சந்தியாவோ இத்தனை நாட்களாக அவன் ஒரு ஆண் என்ற அகம்பாவத்தில் தான் அப்படி நடந்து கொள்கிறான் என்று எண்ணியிருந்தவள் அவ்வாறு இல்லையென்று அறிந்ததும் அவள் மனதுக்குப் பெரும்நிம்மதி ஆனது…அவளுடைய மார்ஸ்மாலோ நண்பன் ஒன்றும் ஈகோ பிடித்தவன் அல்ல என்று பெருமையாக எண்ணிக் கொண்டவள் தான் அன்று அவனை கைநீட்டி அடித்தது கூட தவறு தான் என்று புரிந்து கொண்டவள் அவனிடம் மன்னிப்பு கேட்ட விழைந்தாள்.

 

“சாரி சூரியா..நான் உன்னை அனைக்கு அறைஞ்சுட்டேன்ல…உனக்கு அது வலிச்சிருக்காதுனு எனக்குத் தெரியும்… ஆனா நான் கைநீட்டுனது ரொம்ப தப்பு தான்” என்று தயக்கத்துடன் கூற சூரியாவுக்கு அவள் மன்னிப்பு கேட்டது மனதுக்கு இதமாக இருந்தாலும் இவளைக் கொஞ்சம் சீண்டினால் என்ன என்று தோணவே பொய்யாகப் புருவத்தைச் சுழித்தான் சூரியா.

 

“வாட்? எனக்கு வலிக்காதுனு நீயா நினைச்சுப்பியா பிரவுனி? ஏன் என்னைப் பார்த்தா மனுசனாட்டம் தெரியலையா உனக்கு?”

 

“அது….நீ தான் ஜிம்பாடி ஆச்சே.. உனக்கு நான் அடிச்சதுலாம் வலிக்காதுனு நினைச்சேன்”

 

“அப்பிடினு நீயா நினைச்சுகிட்டா நான் பொறுப்பு கிடையாது பிரவுனி… எனக்கு அன்னைக்கு எப்பிடி வலிச்சுது தெரியுமா? வலியால என்னால சாப்பிடக் கூட முடியலை… உன்னோட கை என் கன்னத்துல அப்பிடியே பதிஞ்சுப் போச்சு…அதை விட முக்கியமா நான் பிறந்ததுல இருந்து என்னை அம்மா, அப்பா, ஸ்கூல் டீச்சர்னு யாருமே அடிச்சது கிடையாது தெரியுமா? நீ தான் முதல் தடவை என்னை அறைஞ்சது”

 

அவன் அப்படி கூறவும் சந்தியாவுக்குச் சங்கடமாகி விட்டது. அவன் பொய் சொல்வது போலவும் அவளுக்குத் தெரியவில்லை.

 

“சாரி… நான் வேணும்னே அடிக்கலை மார்ஸ்மாலோ..”

 

“ஓகே…டிட் ஃபார் டேட்… நீ என்னை கன்னத்துல அடிச்சல்ல… பதிலுக்கு நானும் இப்போ அடிச்சுடுறேன்… ரெண்டும் டேலி ஆயிடும்” என்று சாதாரணமாகக் கூறிவிட்டு சட்டையின் ஸ்லீவை மடித்துவிட்டு அவளை நெருங்க

 

சந்தியா “ஏய் என்னய்யா நீ ஏதோ போருக்கு வர்ற மாதிரி சட்டையை மடிச்சு விட்டுக்கிற? என்னைப் பார்த்தா பாவமா இல்லையா உனக்கு?” என்று கேட்டவளிடம் புன்னகையுடன் இல்லையென்று அவன் மறுக்க சந்தியா மனதிற்குள் “இன்னைக்கு அவன் கிட்ட அறை வாங்கணும்னு உன் தலையெழுத்துல எழுதியிருக்கு…இதுக்கு தான் கையடக்கம் வேணும்னு அம்மா சொல்லுவாங்க போல” என்று எண்ணியபடி அவன் அடித்துவிடுவானோ என்ற பயத்துடன் கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

[the_ad id=”6605″]

சூரியா கண் மூடி தன் எதிரே பயத்துடன் நிற்பவளை நமட்டுச்சிரிப்புடன் நெருங்கியவன் அவள் காதருகில் குனிந்து “நீ எனக்கு கன்னத்துல பனிஷ்மெண்ட் குடுத்த மாதிரி நானும் அங்கே தான் குடுக்கப் போறேன்… பட் நீ நினைக்கிற மாதிரி இல்லை” என்றுச் சொல்லிவிட்டு அவளது கன்னங்களுக்கு வலித்துவிடுமோ என்று மென்மையாகத் தன் இதழைப் பதித்தான் அவன்.

 

அவனது தாடியின் உரோமங்களின் குறுகுறுப்பை உணர்ந்தவள் கண்ணைத் திறக்க அதற்குள் அவன் அவளைப் பலிவாங்கி முடித்திருந்தான். சந்தியா கண்ணை விரித்து அதிர்ச்சியாய் பார்க்க அவனோ “என்ன ஷாக்கா?” என்று கேட்டுவிட்டு கன்னத்தில் குழிவிழச் சிரிக்க சந்தியா அந்தச் சிரிப்பில் கரையத் தொடங்கிய மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

மூச்சுக்காற்று படும் தூரத்தில் நின்றவனை விலக்கியவள் முறைப்புடன் “இப்போ நீ என்னடா பண்ணூன?” என்று மிரட்டலாகக் கேட்க

 

சூரியா சாதாரணமாக “ஐ கிஸ்ட் யூ அஸ் அ ஃப்ரெண்ட்” என்று கூறிவிட்டுத் தோளைக் குலுக்க

 

“வாட்?” என்று அதிர்ந்தவளின் கையைப் பற்றிக் கொண்டவன் “யெஸ்… வேணும்னா நீயும் ஒரு ஃப்ரெண்டா என்னை கிஸ் பண்ணிக்கோ… நான் எதுவும் சொல்ல மாட்டேன்பா” என்று அமர்த்தலாகக் கூற

 

சந்தியா “ஒன்னும் தேவை இல்லை சார்…” என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்க சூரியா “எங்கே கிளம்புற நீ? இன்னும் கொஞ்சநேரத்துல மார்க் வீடியோ கால்ல வருவான். சோ நீயும் என் கூட இருக்கணும்.. இன்னைக்கு சண்டேனு லெட்சுமிம்மா செமயா சமைச்சிருக்காங்க.. என் கூட வந்து சாப்பிடு” என்று அவள் பேசவோ அங்கிருந்து செல்லவோ இடம் கொடுக்காமல் தன்னுடன் அழைத்துச் சென்றான் அவன்…

 

அவளுடனானது வெறும் நட்பு மட்டும் இல்லை என்பதை அன்று சந்தியாவுக்கு உணர்த்திவிட்ட திருப்தியில் சூரியா இருக்க அவளோ தன் மனம் கவர்ந்தவனின் இதழ்கள் ஸ்பரிசித்த கன்னத்தைத் தடவிக் கொண்டே அவனுடன் கீழே சென்றாள்.

 

சாரல் வீசும்….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!