Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 13.2

நவம்பர் மாதமும் வந்துவிட அன்று தான் சந்தியாவுக்கு முதல் தேர்வு. காலையில் எழும் போதே பயமா பதற்றமா என்று புரியாத இனம் காணாத உணர்வு உடல் முழுவதும் பரவ அதே உணர்வுடன் தேர்வுமையத்துக்குச் செல்லத் தயாரானாள் அவள். தேர்வு மதியம் தான் என்பதால் காலையில் படித்தவற்றை திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சூரியாவின் அழைப்பு வரவே அதை ஏற்றவள் “ஹலோ சூரியா!” என்று சொல்ல சூரியா அவள் தேர்வுக்கு தயாராகி விட்டாளா என்று கேட்க

சந்தியா “ஏதோ ரெடியாயிட்டேன்பா… ஆனா உள்ளுக்குள்ள திக்கு திக்குனு இருக்கு.. நேத்து ஆச்சியும், பெரியம்மாவும் பேசுனாங்க… அவங்க கிட்ட பேசுனதுக்கு அப்புறமா நான் கொஞ்சம் தைரியமா இருக்கேன்” என்று அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

சூரியா எத்தனை மணிக்கு தேர்வு என்று விசாரித்தவன் சில பொதுவான அறிவுரைகளைக் கூறிவிட்டுப் போனை வைத்துவிட்டான்.

சந்தியா மீண்டும் புத்தகத்துக்குள் தலையை நுழைத்துக் கொள்ள அலுவலகம் செல்லத் தயாரான சுமித்ரா பேக்குடன் அவளிடம் வந்தவள் “நேத்து நைட் பூரா கண் முழிச்சுப் படுச்சேல்ல, கொஞ்சம் நேரம் அமைதியா உக்காரு… உனக்கு மதியம் லன்ச் ரெடி பண்ணி வச்சிட்டேன்… எக்சாம் டென்சனல் சாப்பிடாம போலாம்னு கனவுல கூட நினைக்கக் கூடாது… அப்புறம் என்னோட ரூம் ஷெல்ஃப்ல திருமலைக்கோயில் விபூதி இருக்கு…. கிளம்புறப்போ மறக்காம பூசிட்டுப் போ… ஆல் த பெஸ்ட்” என்று தங்கைக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள் அவள்.



Advertisement

ஆனால் போனவள் மணிக்கு ஒரு முறை போன் செய்து விசாரிக்கவே “சுமிக்கா! எக்சாம் எழுதப் போற நான் கூட இவ்ளோ எக்சைட்டா இல்லை… நீ ரொம்ப டென்சனா இருக்க… நான் மேனேஜ் பண்ணிப்பேன்கா… நீ கவலைப்படாம ஒர்க்கைப் பாரு” என்று சொல்லவும் தான் அவள் நிம்மதியானாள்.

மதியம் அவள் தயாராகி வெளியே வந்தவள் அப்போது வேகமாக வந்து நின்றச் சூரியாவின் காரைக் கண்டதும் அவளுக்குப் புது தைரியம் வந்தது போல இருந்தது. சூரியா காரில் இருந்துக் கதவைத் திறந்தவன் “பிரவுனி கம் ஹியர்… நான் உன்னை எக்சாம் சென்டர்ல டிராப் பண்ணுறேன்” என்று கூற சந்தியாவும் தலைக்கவசத்தை வீட்டுக்குள் சென்று வைத்துவிட்டு வந்தாள்.

பேக்குடன் காரில் அமர்ந்தவளிடம் “வருங்கால ஆடிட்டரே! எக்சாமுக்கு ரெடியாயிட்டிங்களா?” என்று அவன் கேட்க சந்தியா தெம்பாகத் தலையாட்டினாள்.

Advertisement

புன்னகையுடன் காரை தேர்வுமையம் நோக்கிச் செலுத்தினான். செல்லும் போது சந்தியாவின் பதற்றத்தைக் குறைக்க சாதாரணமாகவே உரையாடலை நகர்த்திச் சென்றவன் தேர்வு மைய வாயிலில் அவளை இறக்கிவிட்டு “ஆல் த பெஸ்ட் பிரவுனி… எக்சாம் எப்போ முடியும்?” என்று கேட்க அவள் மாலை ஆகிவிடும் என்று மட்டும் சொல்ல அவன் தலையாட்டி விட்டுக் காரில் சாய்ந்து கொண்டவன் “ஓகே! அப்போ ஃபைவ் ஓ கிளாக் வரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணுறேன்” என்று இலகுவாகக் கூற

Advertisement

சந்தியா ஆச்சரியத்துடன் “என்னது? இன்னும் த்ரீ அண்ட் ஆஃப் ஹவர்ஸுக்கு இங்கேயே இருக்கப் போறியா? விளையாடாம கிளம்பு” என்று அவன் கையைப் பற்றிக் காருக்குள் அமர வைக்க முயல அவன் செல்ல முடியாது என்று மறுத்தபடி நின்றான்.

[the_ad id=”6605″]

சந்தியா அவன் முதுகில் கை வைத்துத் தள்ளிக் காருக்குள் அமர வைத்தவள் குனிந்து “எக்சாம் முடிஞ்சதும் நானே உனக்குக் கால் பண்ணுறேன்.. அப்போ வந்து என்னை அழைச்சுட்டுப் போ” என்றுச் சொல்ல சூரியா சரியென்று கூறியவன் அவள் மூக்கைச் செல்லமாக நிமிண்டிவிட்டுக் காரை எடுக்கச் சந்தியா புன்னகையுடன் அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு தேர்வறையை நோக்கிச் சென்றாள்.

Advertisement

அடுத்து மூன்றுமணி நேரம் அவளைப் பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட அவள் இந்த உலகிலேயே இல்லை. ஆடிட்டர் சொன்னபடி அவள் கவனம் முழுவதும் அவள் முன்னே இருந்த வெள்ளைத்தாளின் மீதும், அவள் கையில் பிடித்திருந்தப் பேனாவிலிருந்து பிறக்கின்ற ஒவ்வொரு எழுத்தின் மீதும் இருந்ததேயன்றி, அவ்வபோது சுவர்க்கடிகாரத்தைத் தொட்டு மீளும் கண்களைத் தவிர தன்னைச் சுற்றி நடக்கும் வேறு எந்த நிகழ்விலும் அவள் கருத்து செல்லவில்லை.

வெற்றிகரமாக முதல் தேர்வை முடித்துவிட்டு வந்தவள் சூரியாவுக்கு அழைக்கச் சிறிதுநேரத்தில் அவனும் வந்துவிட சந்தியா முதல் தேர்வை முடித்துவிட்டத் திருப்தியில் காரில் அமர்ந்தாள்.

ஆனால் சூரியாவோ முதல் நாள் மழலையர் பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய குழந்தையின் தாயுடைய மனநிலையில் இருந்தவன் “எக்சாம் எப்பிடி எழுதுன பிரவுனி? ரொம்ப டென்சன் ஆயிட்டியா? கொஸ்டீன்ஸ்லாம் ஈஸியா இருந்துச்சா? எல்லா கொஸ்டீன்ஸுக்கும் ஆன்சர் பண்ணிட்டியா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க

சந்தியா “எப்பா சாமி! ஒவ்வொரு கொஸ்டீனா கேளுயா… எக்சாம் நல்லா எழுதியிருக்கேன்…ஸ்டார்ட்டிங்ல கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன்… அப்புறமா பரவால்ல. கொஸ்டீன்ஸ் ஆர் ரியலி வெரி வெரி டிஃபிகல்ட்…எல்லா கொஸ்டீன்ஸுக்கும் முடிஞ்சவரைக்கும் ஆன்சர் பண்ணிருக்கேன்” என்று உற்சாகமாகச் சொல்ல

சூரியா “கொஸ்டீன்ஸ் கஷ்டமா இருக்குனு சிரிச்சிட்டே சொல்லுற?” என்று ஆச்சரியப்படவே

சந்தியா சாதாரணமாக “கொஸ்டீன் கஷ்டமா இருந்தா வேல்யூசன் கொஞ்சம் லிபரலா இருக்கும்” என்று கூற சூரியா நம்ப முடியாமல் பார்த்துவிட்டுக் காரை எடுத்தான்.

சந்தியா தான் சொன்னதை நம்பாதவனைப் பார்த்து முறைத்தவள் “இப்பிடி நினைச்சு தான் நாங்க மனசைத் தேத்திக்கிறோம் மார்ஸ்மாலோ… என் திருப்திக்கு நான் சொல்லுக்கிறேன்” என்றுச் சொல்ல சூரியா “இப்போ சொன்னியே இது தான் உண்மை” என்றபடி அவள் வீட்டை நோக்கிக் காரைச் செலுத்த ஆரம்பித்தான்

அன்று மட்டும் இல்லாமல் அனைத்துத் தேர்வுகளுக்கும் அவளைத் தேர்வுமையத்தில் இறக்கிவிட்டுத் தேர்வு முடிந்ததும் அழைத்துச் செல்லும் பணியைத் தவறாமல் செய்து வந்தான் சூரியா. சந்தியாவுக்கும் தேர்வின் போது இருந்த இறுக்கமான மனநிலை அவனுடன் உரையாடும் போது இலகுவாகிவிட அவளுமே தேர்வு முடிந்த பிறகு தன்னை அழைக்க வருபவனுக்காக ஆவலுடன் காத்திருப்பாள் ஒவ்வொரு நாளும்.

தேர்வானது அறிவிக்கப்பட்டத் தேதிக்குள் முடியாமல் ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பு காரணமாக சில நாட்கள் தாமதத்துக்குப் பின்னர் முடிவுக்கு வர சந்தியா அதன் பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

******

தேர்வு முடிந்து அலுவலகம் வந்தவள் சுப்புலெட்சுமியிடம் குசலம் விசாரித்தவள் தேர்வு பற்றிய சில கதைகளைப் பேசிவிட்டு சூரியாவின் அலுவலக அறைக்குள் நுழைய அங்கே அவளுக்கு முன்னரே சூரியாவும் ஆரியாவும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவள் உள்ளே வந்தவளைக் கண்டுப் புன்னகைத்தனர்.

சூரியா “வெல்கம் பிரவுனி” என்று புன்னகைக்கச் சந்தியாவும் பதிலுக்குப் புன்னகைத்தவள் ஆரியாவுக்கு ஹைஃபை கொடுத்துவிட்டு நாற்காலியில் அமரச் சூரியா இருவரையும் முறைக்க ஆரம்பித்தான்.

சந்தியா “எப்போ யூ.எஸ் கிளம்புறதா இருக்க மார்ஸ்மாலோ?” என்று கேட்க

சூரியா “எப்போ கிளம்புறேனு கேக்காதே பிரவுனி… எப்போ கிளம்பறோம்னு கேளு” என்றுச் சொல்லிவிட்டு தன் கையிலிருக்கும் கோப்பினை பார்த்துக் கொண்டிருக்க

சந்தியா திகைப்புடன் என்ன இது என்பது போல ஆரியாவைப் பார்க்க அவனோ சூரியாவை நோக்கித் தனது பெருவிரலைக் காட்ட இருவரின் ரகசிய உரையாடலை சூரியா கண்டும் காணாதது போல இருந்து கொண்டான்.

சந்தியா குழப்பத்துடன் சூரியாவை நோக்கியவள் “அப்போ நானுமா உன் கூட வரணும்? ஆனா நான் எப்பிடி வர முடியும்? அம்மா, அப்பா என்னை அங்கேலாம் போக அலோ பண்ண மாட்டாங்க சூரியா…” என்று மெதுவாகத் தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பிக்க

சூரியா “நீ தான் என்னோட வரணும் பிரவுனி.. நீ என்னோட செகரட்டரி… அதுவுமில்லாம இந்த எம்.ஓ.ஏவோட ஒர்க்கை நீயும் நானும் தான் சேர்ந்து பார்த்தோம். சோ அங்கே நீயும் நானும் போறது தான் கரெக்டா இருக்கும்” என்று கூற

சந்தியா “ஆனா அம்மா…..” என்று மீண்டும் இழுக்க சூரியா கடுப்புடன் கோப்பினை மூடிவைத்துவிட்டு “என்ன எதுக்கெடுத்தாலும் அம்மா, அப்பா, ஆச்சினு சொல்லிட்டிருக்க பிரவுனி? பேசாம நீ திருநெல்வேலிக்குத் திரும்பிப் போய் உங்க அம்மா மடியிலயே படுத்துக்கோ.. உன்னால சுயமா முடிவெடுத்து ஒரு அஃபிஷியல் டிராவலுக்கு வர முடியலைனா நீயெல்லாம் ஆடிட்டர் ஆகி என்ன பண்ணப் போற?” என்று அவன் கடுகடுக்க ஆரம்பிக்கச் சந்தியா வாயை மூடிக் கொண்டாள்.

[the_ad id=”6605″]

அதன் பின் வேலையைத் தவிர மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வந்த வேலை முடிந்ததும் ஆரியா தனது அலுவலக அறையை நோக்கிச் செல்ல சந்தியாவும் எழும்பவே சூரியா அவளை அமருமாறு சைகை காட்டவும் அவள் அமைதியாக அமர்ந்தாள்.

சூரியா “லிசன் பிரவுனி, ஆன்ட்டி கிட்ட நான் பேசுறேன்.. பட் நீ என் கூட வர்றதுல எந்த மாற்றமும் கிடையாது.. விசா ப்ரொஜிசர்ஸ் முடிஞ்சதும் நம்ம அங்கே கிளம்புறோம்” என்று மறுக்க முடியாதக் குரலில் கூறிவிடவே சந்தியாவும் தலையாட்டி வைத்தாள்.

ஆரியா அண்ணனின் அறையிலிருந்து வெளியேறியவன் வீட்டுக்குப் போன் செய்து லெட்சுமிம்மாவிடம் “லெட்சுமிம்மா இன்னைக்கு அல்வா பண்ணிடுங்க.. நான் மதர் இந்தியாவுக்கு ஒரு குட்நியூஸை ஷேர் பண்ணனும்” என்று கூறிவிட்டான்.

அன்றைக்குச் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிட்டவன் அன்னையின் வருகைக்காகக் காத்திருக்க ஹேமாவும் வெளியே சென்றுவிட்டு வந்தவர் இளையமகன் அமர்ந்திருக்கும் தோரணையைப் பார்த்துத் துணுக்குற்றவராய் தனது அறையை நோக்கி முன்னேற அதற்குள் அன்னையைத் தடுத்து ஹால் சோஃபாவிலேயே அமர வைத்தான் ஆரியா.

 

அவர் என்னவென்று புரியாமல் விழிக்க “லெட்சுமிம்மா ஸ்வீட் கொண்டு வாங்க” என்று உற்சாகக்குரலில் கூற அடுத்த நொடி இனிப்புடன் வந்து நின்றார் அவர். அவரிடம் தானே கொடுத்துக் கொள்வதாகக் கூறி கிண்ணத்தைக் கையில் எடுத்துக் கொண்டான் ஆரியா.

 

அன்னையின் அருகில் அமர்ந்தவன் “மாம்! திஸ் இஸ் ஃபார் யூ.. ஸ்பெஷலா உங்களுக்காகப் பண்ணச் சொன்னேன்…” என்று அவரிடம் நீட்ட ஹேமாவும் இளையமகனை வினோதமாக நோக்கியபடி கிண்ணத்தை வாங்கிக் கொண்டார்.

 

அவரைச் சாப்பிடுமாறு அவன் சைகை செய்ய ஹேமா ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைக்கவும் ஆரியா “அண்ணாவும் தியாவும் கூடிய சீக்கிரமே யூ.எஸ் போறாங்க” என்று கூற அவருக்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அல்வா தொண்டையிலேயே சிக்கிக் கொண்ட உணர்வு..

 

நம்பமுடியாமல் இளையமகனைப் பார்க்க அவனோ “ஒழுங்கா அவன் பாட்டுக்கு பிஸினஸ் டிரிப்பை முடிச்சிட்டு வந்துருப்பான்.. நீங்க இல்லாத கனவுலாம் கண்டுட்டு, போதாததுக்கு என்னை வேறத் தூண்டிவிட்டுட்டு இப்போ பாருங்க! உங்க பையனோட பிஸினஸ் டிரிப் ப்ரீ ஹனிமூன் டிரிப்பா மாறப் போகுது” என்று கிண்டலாகக் கூற ஆரியாவின் ‘ப்ரீ ஹனிமூன் டிரிப்’ என்ற வார்த்தையில் ஹேமாவுக்கு சிரசில் அடித்து அவர் இரும ஆரம்பித்தார்.

 

ஆரியா இருமுபவரைக் கேலியாகப் பார்த்தபடி தண்ணீர் தம்ளரை நீட்டியவன் “அச்சோ என்னாச்சு மாம்? லெட்சுமிம்மா அல்வால சுகருக்குப் பதிலா உப்பை போட்டுட்டாங்களா?” என்று கிண்டல் செய்ய

 

ஹேமா தண்ணீரை முழுவதுமாகக் குடித்துவிட்டுக் கிண்ணத்தை நங்கென்று டீபாயின் மீது வைத்தவர் ஆரியாவைப் பார்த்தபடி “இதுக்குலாம் நீ தானே காரணம்… மனுசங்க பண்ணுன பாவம், புண்ணியம் தான் அவங்களுக்குப் பிள்ளைங்களாப் பிறக்கும்னு சொல்லுவாங்கடா.. நான் ஏதோ பெரிய பாவம் பண்ணிருக்கேன்.. அதான் நீ எனக்குப் பிள்ளையா பிறந்துருக்க” என்று திட்டிவிட்டுத் தனது அறையை நோக்கி வேகமாக நடைப் போட்டார்.

 

ஆரியா சத்தமாக “பாராட்டுக்கு நன்றிகள் மம்மி! உங்க மகன் நான், உங்களை மாதிரி தானே இருப்பேன். அப்புறம் அல்வா எப்பிடி இருக்குனு சொல்லவே இல்லை?” என்று நக்கலாகக் கேட்க அவரது அறைக்கதவை ஹேமா அறைந்து சாத்தும் சத்தமே அவனுக்குத் திருப்தியைத் தர தனது சட்டையின் காலரைத் தூக்கிப் பெருமைப்பட்டுவிட்டு சோஃபாவில் அமர்ந்து போனில் அழைத்த் அண்ணனிடம் ஏதோ பேச ஆரம்பித்தான் அவன்.

 

அண்ணனின் வாழ்க்கையில் சந்தியாவை வரவழைக்க அவன் ஒரு புறம் முயற்சி செய்ய, அதே நேரம் ஹேமா தனது தகுதிக்குக் குறைவான மருமகள் தனக்கு வந்துவிடக்கூடாது என்று பகீரதப்பிரயத்தனப்பட இரண்டுக்கும் நடுவில் விதியானது யாருமே எதிர்பாரா வகையில் சூரியாவுடன் சந்தியாவை நிரந்தரமாகச் சேர்த்துவைக்கத் தயாராகி விட்டது…

 

சாரல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!