Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 14.1

சென்னை சர்வதேச விமான நிலையம்…

சூரியாவும் சந்தியாவும் ரோலர் லக்கேஜ் பேக் சகிதம் நின்று கொண்டிருக்க ஆரியாவும் சுமித்ராவும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தனர். சுமித்ரா சந்தியாவிடம் அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்க ஆரியா அண்ணனிடம் மார்க்கின் கம்பெனி நிலவரம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு இரவு ஒன்பது மணியளவில் விமானம் என்பதால் அதற்கான அறிவிப்பும் வந்துவிட சூரியா சந்தியாவிடம் “கிளம்பலாமா பிரவுனி?” என்று கேட்க அவள் சரியென்று தலையசைத்துவிட்டு அவனுடன் புறப்படத் தயாரானாள்.

 

ஆரியாவும் சுமித்ராவும் அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு வெளியேறியவர்கள் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை. தாங்கள் பேசிக் கொள்வதற்கு எந்த அவசியமும் இல்லை என்பது சுமித்ராவின் எண்ணம். ஆரியாவுக்கோ அண்ணனும் சந்தியாவுமின்றி நாட்களை எப்படி கடத்தப் போகிறோம் என்ற வருத்தம். அதில் அவன் சுமித்ராவை எதாவது சொல்லிக் கேலி செய்யலாம் என்ற எண்ணத்தைக் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டான்.



Advertisement

 

ஆனால் பார்க்கிங்கில் காரை எடுத்தவன் டாக்சிக்கு காத்திருந்த சுமித்ராவிடம் வந்து காரை நிறுத்திவிட்டு “ஹலோ மேடம்! வாங்க நான் டிராப் பண்ணுறேன்” என்றுச் சொல்லிக் கார்க்கதவை எக்கித் திறந்துவிட

 

Advertisement

சுமித்ரா “நோ தேங்க்ஸ்! நான் பாலாண்ணாவை வரச் சொல்லிருக்கேன். அவரோடவே போய்ப்பேன்” என்று அமர்த்தலாக மொழிந்துவிட்டு நின்றுக்கொள்ளவும்

Advertisement

 

ஆரியா “ரொம்ப ஓவரா பண்ணாதே ஓகே! எதோ தியாவோட அக்கானு இரக்கப்பட்டுக் கூப்பிட்டா ஓவர் ஆட்டிட்டியூடா காட்டுற?” என்று அலட்சியமாகக் கூறிவிட்டுக் காரை எடுத்துச் சென்றுவிட்டான். அவன் சென்றுச் சில நிமிடங்களில் பாலாவும் அவரது காருடன் வந்துவிட அவளும் கிளம்பிவிட்டாள்.

 

Advertisement

அதே நேரம் விமானத்தில் சந்தியா சூரியாவுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவள் குலத்தெய்வத்தில் ஆரம்பித்துச் சாய்பாபா வரைக்கும் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள். சூரியா அவள் கண்ணை மூடி வேண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு சீட் பெல்ட்டைப் போட்டுவிட முயல அவன் கை உராயவும் கண் மூடியிருந்தவள் திடுக்கிட்டுப் போய் “ஐயோ அம்மா’ என்றுக் கத்திவிட்டாள்.

 

அவளின் சத்தத்தில் மற்றப் பயணிகளின் கவனம் இவர்கள் இருவரை நோக்கித் திரும்ப சூரியா சிரித்துச் சமாளித்தவன் சந்தியாவிடம் “ஏய் பிரவுனி! உன்னை நான் என்ன கொல்லவா போறேன்? சீட் பெல்ட்டை மாட்டிவிட டிரை பண்ணுனா ஏன் கத்துற?” என்று கேட்க

 

சந்தியா “நான் ஆல்ரெடி பயந்துப் போயிருக்கேன். நீ வேற இன்னும் பயம் காட்டாதே மார்ஸ்மாலோ” என்று முகத்தைச் சுருக்கிச் சொல்லிவிட்டு மீண்டும் வேண்டுதலை ஆரம்பிக்கும் நேரம் விமானம் ரன்வேயில் மெதுவாக ஓட ஆரம்பிக்க அவள் இன்னும் பயந்தவளாய் சூரியாவின் புஜத்தைப் பற்றிக் கொண்டபடி கண்ணை மூடிக் கொண்டாள்.

 

சூரியாவுக்கு அவளின் சிறுபிள்ளைத்தனமான பயம் சிரிப்பை வரவழைத்தாலும் முகத்தை மூடி தோளில் சாய்ந்திருந்தவளின் தோற்றம் மனதுக்கு சொல்லவொணா இதத்தை அளிக்க அவன் தன் தலையை அவள் தலை மீது சாய்த்துக் கொள்ளவும் அவள் கண் திறந்து எழ முயற்சிக்க

 

சூரியா “இன்னும் கொஞ்சநேரத்துல ஃப்ளைட் பறக்க ஆரம்பிச்சிடும். அப்போ வயித்துக்குள்ள ஏதோ உருளுற மாதிரி இருக்கும்” என்றுச் சொல்லவும் மீண்டும் பயந்துப் போய் கண்ணை மூடி அவன் புஜத்தில் சாய்ந்துக் கொண்டாள்.

 

இருவரின் பேச்சையும் கவனித்துவிட்ட விமானப்பணிப்பெண் அவர்கள் பேசும் மொழி புரியாவிட்டாலும் சந்தியாவின் முகபாவத்திலிருந்தே அது அவளின் முதல் விமானப்பயணம் என்பதைப் புரிந்து கொண்டவர் இருவரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டுக் கடந்துச் சென்றார்.

 

[the_ad id=”6605″]

 

சூரியா அவளைத் தன்னுடன் அழைத்து வருவதற்கு அவளது குடும்பத்தினரைச் சமாளிக்க அவன் பட்ட கஷ்டம் அவனுக்குத் தான் தெரியும். அவனால் அனைவரையும் சுலபமாகச் சமாளித்துவிட்டான். ஆனால் ரேணுகா தான் மகளைத் தனியாக அவ்வளவு தூரம் அனுப்ப மிகவும் யோசித்தார். போதாக்குறைக்குச் சந்தியாவே அரைமனதாகத் தான் அவனுடன் வரச் சம்மதித்திருந்தாள்.

 

அன்னையின் தயக்கத்தை காரணம் காட்டி அவள் வர மறுக்கவே சூரியா சந்தியாவின் பாட்டியுடைய உதவியை நாடினான். அவரிடம் தான் கூடவே இருந்து சந்தியாவைப் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தவன் தொழில்முறைப்பயணத்துக்குக் கூட இப்படி தயங்கினால் வருங்காலத்தில் அவள் எப்படி அவளது ஆடிட்டர் தொழிலில் சொந்தக்காலில் நிற்க முடியும் என்ற கேள்வியையும் முன் வைக்க கோமதியம்மாள் இளையமகளிடம் எடுத்துக் கூறினார்.

 

“சூரியா கூடத் தானே போறா. அதுவுமில்லாம இப்போ சூரியா இல்லாம வேற யாரு அவளோட மேலதிகாரியா இருந்தாலும் வேலை சம்பந்தமா போகணும்னா அவ போய் தானே ஆகணும். இப்போவும் நீ வேண்டாம்னு சொல்லிட்டா சூரியா தப்பா எடுத்துக்க மாட்டான். ஆனா நமக்குப் பழக்கமானவன்ங்கிற ஒரே காரணத்துக்காக ரொம்ப சலுகை எடுத்துக்கிறது தப்பு ரேணு” என்று நிதர்சனத்தை உரைக்க அவரும் சம்மதித்தார். மனைவி சம்மதத்துக்கு மறுப்பு சொல்லாத தேவராஜ் மகளிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டார்.

 

இந்தச் சம்பவங்களை நினைத்தபடியே அவன் கண் மூடிவிட்டான். சந்தியாவும் முதலில் பயத்தில் விழிகளை இறுக்கமாக மூடியிருந்தவள் வழக்கமான உறங்கும் நேரம் வந்துவிட்டதால் நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள்.

 

***************

விமானம் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் இண்டர்காண்டினெண்டல் ஏர்போர்ட்டை அடைந்திருந்த போது நேரம் மாலை ஆகிவிட்டது. செக்கிங் எல்லாம் முடிந்து இருவரும் வெளியேற ஐந்து மணியைத் தாண்டிவிட்டது. சூரியா யாரையோ தேடச் சந்தியா பயணக்களைப்பில் இருந்தவள் சோர்வுடன் “சூரியா யாரைத் தேடுற?” என்று கேட்க

 

அவன் யோசனையுடன் “டிரைவரை அனுப்பி வைக்கேனு சொன்னாளே… இன்னும் யாரையும் காணும்னு பார்க்கிறேன் பிரவுனி” என்றவன் சுற்றுபுறத்தை ஆராயும் போதே ஒரு உயரமான நீலவிழிகள் கொண்ட மனிதன் அவனிடம் வர சூரியாவின் முகம் தெளிவானது.

 

வந்தவனிடம் “ஹாய் ராபர்ட்! ஹவ் ஆர் யூ?” என்று கைகுலுக்கிவிட்டு அவனுடன் பேச ஆரம்பித்தவன் சந்தியாவின் கரத்தைப் பற்றியபடி சூட்கேசை இழுத்தபடி நடக்க ஆரம்பிக்கச் சந்தியாவும் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தபடி அவனுடன் இணைந்து நடந்தாள்.

 

ராபர்ட் லக்கேஜ் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அவர்களைக் காரில் அமரச் சொன்னவன் ரிவர் ஓக்ஸை நோக்கிக் காரைச் செலுத்தினான். ரிவர் ஓக்ஸில் தான் சூரியாவும், ஜித்தேஷும் கல்லூரிக்காலத்தில் தங்கியிருந்த வீடு இருக்கிறது. சூரியா அங்கே காரை விடச் சொல்லவும் சந்தியாவுக்கு முன்னே பின்னே தெரியாத இடம் என்பதால் அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.

 

அரைமணி நேரப் பயணத்தில் வீடு இருக்குமிடமும் வந்துவிட காரிலிருந்து கீழே இறங்கிய சந்தியா தன் கண் எதிரே இருந்த வீட்டைக் கண்டதும் வாய் பேச மறந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

பொதுவாக ஹூஸ்டனில் டிசம்பர் மாதத்தில் மழை ஆரம்பித்துவிடும் என்பதால் பெரும்பாலான நேரம் மேகமூட்டத்துடன் இருக்கும் வானம் அன்று தெளிவாக இருக்க நீலவானப் பின்னணியில் சந்தன வண்ணச் சுவர்களுடன், மேற்கூரையில் சிவப்புவண்ண ஓடுகள் பதிக்கப்பட்டு சிம்னிகளுடன், பச்சைநிறப் புல்வெளிகளுக்கு நடுவில், மரங்கள் சூழ கம்பீரமாக நின்று கொண்டிருந்த அந்த வீடு அவளின் ரசனையைத் தூண்டிவிட ராபர்ட் சல்யூட் அடித்துவிட்டுக் கிளம்பியது கூட அவளது புத்தியில் உறைக்கவில்லை.

 

சூரியா அவள் கரத்தைப் பற்றிக் கொள்ள அவனுடன் புல்வெளியின் நடுவில் செங்கற்களாலான நடைபாதையில் நடந்துவந்தவள் வீட்டை நெருங்கும் போது நடைபாதையின் இருபுறமும் வளர்ந்திருந்த புல்வெளி அத்தோடு முடிந்துவிட அவள் உயரத்துக்கு அழகுக்காக வளர்க்கப்பட்ட புதர்கள் அவர்களை வரவேற்பது போல நின்று கொண்டிருக்க, வீட்டின் பிரெஞ்சு விண்டோக்களில் கொடிகள் படர்ந்திருக்க, விட்டால் அவள் அங்கேயே நின்று அந்த வீட்டின் அழகை ரசித்துக் கொண்டிருந்திருப்பாள்.

 

ஆனால் சூரியா அவளிடம் “இப்பிடியே நிக்கப் போறியா பிரவுனி? உள்ளே வர்ற ஐடியா இல்லையா? இன்னும் கொஞ்சநேரத்துல இருட்ட ஆரம்பிச்சிடும்” என்று கூறவும் தான் அவள் கவனம் வீட்டிலிருந்து அவன் புறம் திரும்பியது.

 

சூரியா பேசியதைக் கேட்டுப் புருவத்தைச் சுழித்தவள் “நான் உள்ளே போறேன்.. நீ எங்கே தங்குறதா ஐடியா?” என்று கேட்க

 

சூரியா சாதாரணமாக “நான் எங்கே போவேன் பிரவுனி? இது என்னோட வீடு.. நான் இங்கே தான் தங்கிக்கப் போறேன்… வா” என்று அவள் புறம் கை நீட்ட சந்தியா அவன் கையைத் தட்டிவிட்டாள்.

 

“வாட் த ஹெல்? ஒரே வீட்டுலயா நம்ம ரெண்டு பேரும் ஸ்டே பண்ணப் போறோம்? இதை நீ ஏன் முன்னாடியே சொல்லலை மார்ஸ்மாலோ?

 

“சொன்னா நீ வந்திருக்க மாட்டியே… இப்போ என்ன ஒரே வீட்டுல தானே இருக்கப் போறோம்! ஒரே ரூம்ல இல்லையே” என்றுச் சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டு உள்ளே செல்ல சந்தியா எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறான் என்று வாயைப் பிளந்தவள் வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்தாள்.

 

வீட்டின் உள் அலங்காரமும் பிரமாதமாக இருக்க சந்தியா அதை ரசித்ததில் சூரியாவின் பேச்சை மறந்துவிட்டாள். அதன் பின் இருவரும் அவரவர் உடைமைகளை அடுக்கிவைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வு எடுக்க ஆரம்பித்தனர். இரவானதும் சந்தியாவுக்குப் பசிக்க ஆரம்பிக்க சூரியாவின் அறைக்கதவைத் தட்டியவள் அவன் கதவைத் திறக்கவும் “சூரியா எனக்கு ரொம்ப பசிக்குதுடா. சாப்பிட என்ன இருக்கு?” என்று கேட்க சூரியாவுக்குமே பயங்கரப்பசி.

 

அவளைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றவன் ஃப்ரிட்ஜில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்துவிட்டு மேங்கோ ஜூஸை எடுத்து கண்ணாடி தம்ளரில் ஊற்றியவன் அவளிடம் நீட்ட சந்தியா “இது மட்டும் தானா? என்னைப் பட்டினி போட்டுக் கொல்லவா நீ இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்த? ஐயோ பயங்கரமா பசிக்குதே” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டுக் கத்த ஆரம்பிக்க

 

சூரியா அவளை முறைத்தவன் “ஓகே! உனக்கு ஜூஸ் வேண்டாம்னா அதையும் நானே குடிச்சிக்கிறேன்” என்று அவளிடமிருந்து தம்ளரைப் பிடுங்க முயல சந்தியா அவசரமாக மறுப்பாகத் தலையசைத்துவிட்டு மடமடவென்று தம்ளரைக் காலி செய்தாள். சூரியா அவள் ஜூஸ் குடிப்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடி போனை எடுத்து யாருக்கோ அழைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தான்.

 

“வேர் ஆர் யூ? நான் இங்கே வந்து எவ்ளோ நேரம் ஆகுது தெரியுமா? ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ….” என்று பேச சந்தியா அவன் யாரிடம் பேசுகிறான் என்று கேள்வியோடு அவன் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

 

அவனது பேச்சு ஆங்கிலத்தில் இருக்கவே யாரோ ஒரு பெண்ணிடம் பேசுகிறான் என்பது மட்டும் புரிந்தது சந்தியாவுக்கு. அடுத்தவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பது நாகரிகமில்லை என்று புரிந்து கொண்டவள் மெதுவாக நகர்ந்து ஹாலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

சூரியாவின் சிரிப்புச்சத்தம் சமையலறையிலிருந்து கேட்கச் சந்தியா “இப்போ எதுக்கு கெக்கே பிக்கேனு சிரிக்கிறான் இவன்? இங்கே நான் பசியில செத்துட்டு இருக்கேன்… இவனுக்கு யாரோ ஒருத்தி கிட்ட கடலை போடுறது தான் முக்கியம்… மா! நீங்க இன்னும் கொஞ்சம் பிடிவாதமா இருந்திருக்கலாம்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

 

அவன் இப்போதைக்கு பேசி முடிக்க மாட்டான் என்று எண்ணியபடி வாசல் கதவைத் திறந்து வெளியே பார்க்க இருளின் சாம்ராஜ்ஜியத்தில் ஆங்காங்கு குழல் விளக்குகளின் ஒளி மின்ன புல்வெளியுடன் கூடிய அந்த இடம் பார்க்க இருளிலும் அழகாக இருந்தது.

 

சந்தியா வராண்டாவின் படிக்கட்டில் அமர்ந்தவள் அந்த அழகை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். கண்கள் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததே தவிர மனமோ “இவன் இன்னுமா பேசிட்டிருக்கான்? அப்பிடி என்ன தான் பேசுவானோ!” என்று சூரியாவை எண்ணி யோசித்துக் கொண்டிருந்தது. தான் ஏன் இப்படி யோசிக்கிறோம் என்றுத் தன் தலையில் மானசீகமாகக் குட்டிக் கொண்டாள்.

 

அவள் தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்க சூரியா அவளைத் தேடி வந்தவன் கன்னத்தில் கைவைத்து புருவம் சுளித்தபடி யோசித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடி அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

 

அவன் “என்ன பிரவுனி இங்கே வந்து உக்காந்துட்ட? இப்போ உனக்கு வயிறு பசிக்கலையா?” என்று கேட்க

 

 

[the_ad id=”6605″]

 

சந்தியா உதட்டைச் சுழித்துவிட்டு “என் வயிறு பசிச்சு அடங்கிடுச்சுடா. நீ தான் போன் பேச ஆரம்பிச்சதும் நான் ஒருத்தி இருக்கிறதையே மறந்துட்டியே” என்று மனத்தாங்கலுடன் கூறினாள்.

 

சூரியா நாக்கைக் கடித்துக் கொண்டவன் “சாரி பிரவுனி! நான் சொன்னேன்ல என்னோட ஃப்ரெண்டுனு ஒருத்தியைப் பத்தி… அவ கிட்ட பேசினதுல நான் நீ பசிக்குதுனு சொன்னதை மறந்துட்டேன்” என்றுச் சொல்ல

 

சந்தியா “இஸின்ட்? ஓகே! சாருக்கு புது ஃப்ரெண்ட் வந்ததும் என்னை மறந்துப் போச்சுல்ல” என்று சிறுகுழந்தை போலச் சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

 

சூரியா கேலியாக “எக்ஸ்யூஸ் மீ மேடம்! அவ என்னோட ரொம்ப பழைய ஃப்ரெண்ட்… உனக்கு முன்னாடியே எனக்கு அவளைத் தெரியும்” என்றுக் கூறச் சந்தியா அவனது கேலியை ரசிக்கவில்லை என்பது அவளின் முகபாவத்திலேயே தெரிந்தது.

 

சூரியா ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடி “பிரவுனி உன் முகத்துல ஏதோ இருக்கு! என்ன அது?” என்று கேட்க சந்தியா பதறியவளாய் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

 

முகத்தில் என்ன இருக்கிறது என்று குழம்பியவளின் மூக்கை நிமிண்டியவன் “இந்த ஃபேஸ்ல இது வரைக்கும் நான் பார்க்காத ஒரு விஷயம் இன்னைக்கு நிறைஞ்சிருக்கு” என்று தீவிரமானக்குரலில் கூறி நிறுத்தியவன் நிதானமாக “பொறாமை…” என்றுச் சொல்ல சந்தியா முகத்தைச் சீர்படுத்த முயன்று தோற்றாள்.

 

“நீ பொறாமைப்படுறியா பிரவுனி? உன் ஃபேஸ்ல பொறாமை அப்பட்டமா தெரியுது” என்று கூறிவிட்டுப் பக்கென்று சிரிக்க ஆரம்பித்தான் சூரியா.

 

சந்தியா ஏற்கெனவே அவனது செய்கையில் எரிச்சலானவள் சட்டென்று எழும்பி உள்ளே செல்ல முயல அவள் கரத்தைப் பற்றியவன் “எங்கே போற? வேடிக்கை தானே பார்த்துட்டிருந்த?” என்று கேட்க

 

சந்தியா “நான் தூங்கப் போறேன்” என்றாள் மொட்டையாக.

 

“பட் நீ பசிக்குதுனு சொன்னேல்ல, வா நம்ம ப்ரட்டை டோஸ்ட் பண்ணிச் சாப்பிட்டுட்டு, கொஞ்சநேரம் கதை பேசிட்டு, அப்புறமா தூங்குவோம்” என்று வழக்கம் போல பேசியபடி அவளுடன் அவனும் எழுந்தான்.

 

சந்தியா எவ்வளவு சீக்கிரமாகத் தன் வயிற்றுப்பசியைப் புரிந்துக்கொண்டான் இவன் என்ற எரிச்சல் மூள “எனக்குச் சாப்பாடு வேண்டாம். உனக்கு வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ” என்றுச் சொல்லிவிட்டு உள்ளே விறுவிறுவென்றுச் செல்ல சூரியா “பிரவுனி நில்லு” என்றுச் சொன்னபடி அவள் பின்னே ஓடினான்.

 

சந்தியா அவனைக் கண்டுகொள்ளாது அவளது அறைக்குள் செல்ல முயல சூரியா “சாப்பிடாம படுத்தா தூக்கம் வராது பிரவுனி. அட்லீஸ்ட் ஒன் ஸ்லைஸாவது சாப்பிட்டிட்டு படு” என்று வேண்டவும்

 

[the_ad id=”6605″]

 

சந்தியா “உன்னோட அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ்… பட் அதுக்காக எல்லாம் என்னால சாப்பிட முடியாது. எனக்கு பசிக்கிதுனு சொன்னப்போ நீ அதைக் கண்டுக்கல… இப்போ நீ சொன்னதும் நான் மட்டும் சாப்பிடணுமா? சாப்பாடும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டு தனது அறைக்குள் புகுந்து கதவை அறைந்துச் சாத்திக் கொண்டாள்.

 

சூரியா அவளின் இந்த திடீர் பிடிவாதத்துக்கான காரணம் புரியாமல் நின்றவன் அவனும் சாப்பிடாமலே தூங்கச் சென்றான். சந்தியா அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு “உனக்கு அவ தானே ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி… ஏதோ போனா போகுதுனு என்னைச் சாப்பிடச் சொன்னா நான் சாப்பிடணுமா? அதுக்கு நான் பட்டினியாவே இருந்துடுவேன்” என்று எரிச்சலுடன் மொழிந்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவள் தன்னைப் போலவே சூரியாவும் பட்டினியுடன் தான் உறங்கச் சென்றான் என்பதை அறியவில்லை.

 

விளக்கை அணைத்துவிட்டு விழிகளை மூடியவள் நித்திராலோகத்தை முற்றுகையிட கஜினிமுகமதுவாக தொடர்ந்து முயற்சி செய்து அதில் நீண்டநேரம் கழித்து வெற்றியும் பெற்றாள்.

 

***********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!