Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Varam Vaangi Vanthaval

Varam Vangi Vanthaval Naan 9 2

 

லிப்டில் வந்தால் முதல் அறையாக அவர்கள் அறை இருந்திருக்க  இப்போதிருந்த பதட்டத்திலும் அவசரத்திலும் அதை விட கண்கள் மயக்கத்தை தழுவ தயாராக இருக்க கவனக்குறைவாக படிகளின் துவக்கத்தில் இருந்த முதல் அறையை திறந்திருந்தாள்.. மெதுவாக கட்டிலிற்கு வந்தவள் சுந்தர் அருகிலேயே படுத்திருக்க அறைகுறை ஆடையில் இருந்ததால் ஏசியின் குளிருக்கு தன்னைப்போல அவனிடம் நெருங்கி அவன் போர்வையை இழுத்து போர்த்தியிருந்தாள்..

 

அதுவரை தர்ஷினி சொன்ன அனைத்தையும் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தவன் தன் மேல் எந்த தவறும் இல்லை என தெரியவும் அந்த நிம்மதியில் அப்படியே கட்டிலில் தடார் என விழுந்திருந்தான்.. திடிரென இப்படி விழுவான் என எதிர்பார்க்காதவள் சுந்தருக்கு மயக்கம் வந்துவிட்டதோ என அவன் கன்னத்தை தட்ட அவனோ கண்களை மூடி அந்த நிமிடத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.. நல்ல வேளை நாம இந்த பொண்ண ஒன்னும் செய்யல.. சந்தோசத்தில் மனம் துள்ளியது..



Advertisement

 

அவன் அப்படியே படுத்திருக்கவும் செய்வதறியாமல் அங்கிருந்த ஜக்கில் இருந்த நீரை அவன் முகத்தில் அப்படியே ஊற்ற சட்டென சுயத்துக்கு வந்தவன்… ஏய் என்ன பண்ற..?”

 

Advertisement

நீ என்ன மேன் பார்க்கத்தான் ஜிம்பாடி மாதிரி இருக்க … நான் கஷ்டப்பட்டத சொன்னதுக்கு நீ போய் மயங்கி விழுர.. என்னாச்சு மேன்..??”

Advertisement

 

அவன் எப்படி சொல்லுவான்.. நான்தான் உன்னை கெடுத்திட்டதா நினைச்சேன்னு.. ஏய் முதல்ல இங்க உட்காரு .. தன் அருகில் கைகாட்டியவன் முதல்ல என்னை எப்படி கூப்பிடுறதுன்னு முடிவு பண்ணுவோம்..

 

Advertisement

அடப்பாவி இப்ப இதுதான் பிரச்சனையா..??” நீயென்ன லூசா என்பது போல பார்த்துவைக்க..

 

[the_ad id=”6605″]

 

ஆமாடி முதல்ல என்னை வாங்க போங்கன்னு கூப்பிட்டு பழகு .. பொறடியில அடிச்ச மாதிரி வா போன்னு சொல்லிட்டு.. இல்லனா பேர் சொல்லி கூப்பிடுற.. ஆமா உன்னை கடத்துனானே அவன் யாருன்னு உனக்கு நியாபகம் இருக்கா..?”

 

ப்பச் கேட்ட வாய்ஸ் மாதிரிதான் இருக்கு.. நான் கண்டுபிடிக்க கூடாதுன்னு கொஞ்சம் கட்டை குரல்ல பேசினானோ..??”

 

அப்பத்தாவின் குரல் அறைக்கு வெளியில் கேட்க..

 

இங்க பாரு நைட் நடந்தது யாருக்கும் தெரிய வேணாம்.. நீ என் ரூம்ல இருந்ததால மேரேஜ் முடிஞ்சது அப்படியே இருக்கட்டும்.. இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் யார்ன்னு நான் கண்டுபிடிக்கிறேன்..?”

 

ப்பச் போய்யா எனக்கு இந்த மேரேஜே பிடிக்கல..? யாரையுமே எனக்கு பிடிக்கல.. என்னை விட்ரு நான் இப்படியே இருந்துக்குறேன்.. இல்லனா எங்க அம்மா அப்பாட்டா போறேன். .கண்டிப்பா நான் செத்துப்போறேன்.. எனக்கு அவங்கள எல்லாம் பார்க்கனும்..அவள் அப்படியே மீண்டும் மீண்டும் சொல்ல,

 

தர்ஷினி தர்ஷினி கூப்பிட்டு பார்த்தவன் அவள் தன் நினைவில் இல்லாமல் புலம்ப பளார் என அறைந்திருந்தான்.. நீயென்ன லூசாடி..?” அவள் தாடையை பிடித்து உயர்த்த கண்கள் கலங்கியபடி அப்படியே அதிர்ச்சியில் நின்றிருந்தாள்..

 

கன்னத்தில் கைவைத்தவள் ஏன்டா என்னை அறைஞ்ச ஸ்டுப்பிட்.. ப்ளடி.. உன்னை சுந்தரின் கழுத்தில் கைவைத்தவள் என்னை யாருமே அடிச்சதில்ல தெரியுமா..??”

 

அவள் கன்னத்தை பார்க்க ஐந்து விரலும் அப்படியே தெரிந்தது.. ச்சே நாம ஏன் இப்படி மாறினோம்.. அவள் கன்னத்தை தடவ தர்ஷினியோ என்னடா நாம இவன் கழுத்தை நெறிக்கிறோம் இவன் என்னன்னா என் கன்னத்தை தடவுறான்..

 

என்ன மேன் உனக்கு வலிக்கலையா..??”

 

உனக்கு வலிக்கிதா லட்டுமா..??” இன்னும் அவன் கை கன்னத்தை வருடுவதை விடவில்லை..

 

மளுக்கென கண்ணில் நீர்வழிய அவன் கழுத்தில் இருந்து கையை எடுத்தவள், எங்க டாடியும் இப்படித்தான் ஒருநேரத்துக்கு ஒருபேர் வைச்சு கூப்பிடுவாங்க.. லட்டு, அம்மு, செல்லம், பவுனு அப்படின்னு..??” தந்தையின் நினைவுகளை தாங்கமாட்டாமல் அவன் மார்பில் அப்படியே சாய்ந்து அழ ஆரம்பிக்க அவள் உச்சியில் முத்தமிட்டவனோ அவளை இறுக்க அணைத்திருந்தான்..

 

தர்ஷினிக்கு சுந்தரை தனியாளாக நினைக்க முடியாமல் தன் குடும்ப உறுப்பினராக மனதில் பதிய.. சுந்தருக்கோ தர்ஷினியோடு ஜென்மஜென்மமாய் வாழ்ந்த ஒரு உணர்வு.. சற்று முன்தான் அவளை அடித்திருந்தான்.. அவளும் சண்டை போட்டிருந்தாள் இருவருக்குமே அது நினைவில்லை..

 

 

[the_ad id=”6605″]

 

 

வெளியில் அப்பத்தா கதவை தட்ட அவளை தள்ளி நிறுத்தியவன் கதவை திறக்க போக, அவன் கையை பிடித்தவள்.. எங்க கிரான்மா கேட்டா நான் உன்னை மரியாதையா கூப்பிட்டேன்னு சொல்லு.. என்னயா..?”

 

சட்டென சிரித்தவன் இதத்தான் அப்பத்தா உன்காதுல சொல்லிட்டு போனாங்களா.. நான் போய் இவ என்னை வாடா போடான்னு கூப்பிடுறான்னு சொல்றேன்..?”

 

சொல்லு சொல்லு அப்ப நான் உங்க வீட்டுக்கே வரமாட்டேன்.. இப்படியே எங்கயாச்சும் ஓடப்போறேன்..?”

 

கால ஒடிச்சிருவேன்..?”

 

டேய் போடா..!!”

 

போடி.. அவளுடன் வம்பிழுத்தபடியே கதவை திறக்க அவன் குடும்பமே வெளியில் நின்றது..

 

தம்பி வீட்டுக்கு போவோமாப்பு..?”

 

அப்பு கொஞ்ச வேலை இருக்கு நான் அத முடிச்சிட்டு வர்றேன்.. நீங்க எல்லாரும் உள்ள இருங்க..?” அப்பத்தாவை பார்த்தவன்,

 

அப்பத்தா வாங்க டாக்டர் உங்கள கூட்டிட்டு வரச் சொன்னாக.. அவரை வெளியில் தனியாக அழைத்துவர,

 

என்னப்பு சுந்தரு இந்த அப்பத்தாகிட்ட என்ன கேட்கனும்..?”

 

ம்ம் அதெப்படிப்பத்தா மயக்கம் வராமலே மயக்கம் வர்ற மாதிரி நடிச்சிங்க..?”

 

ஹிஹிஹி கண்டுபிடிச்சிட்டியாப்பு.. நான் மட்டும் மயங்கி விழலைன்னா என் பேத்திக்கு இப்படி ஒரு நல்லவனோட கல்யாணம் நடந்திருக்குமா.. அதோட அந்த உடையில மத்தவங்க பார்த்தா உங்க ரெண்டுபேரையும் தப்பா நினைச்சிருப்பாங்கன்னு தாப்பு அப்பத்தா அப்படி பண்ணினேன்..

 

அப்பத்தா ..

 

ஆமாப்பு.. என் பேத்திய உன்ன மாதிரி ஒரு நல்லவனுக்குத்தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்.. ஆனா உங்க குடும்ப சூழ்நிலை அது கொஞ்சம் கஷ்டம்ன்னு தெரிஞ்சதால வேற மாப்பிள்ளை பார்க்க யோசிச்சு இருந்தேன்.. ஆனா இது மாதிரி நடக்கவும் இதை விட எனக்கு மனசு வரல..

 

அதவிட என் பேரன் பாலா பண்ற அநியாயம் கொஞ்ச நஞ்சமில்லப்பு.. எப்ப பார்த்தாலும் கழுகு மாதிரி என் பேத்திய வட்டமிடுறான்.. அதான் எனக்கும் வேற வழி தெரியல.. அதவிட மருமக அவள கரிச்சு கொட்டுறா.. நல்லா இருந்தாக்கூட இவ பேசுறத கேட்டா சாகத்தான் மனசுவரும் அதுமாதிரி கொத்தி பிடுங்குறாப்பு..

 

சுந்தரும் தர்ஷினி தன்னிடம் சொன்ன அனைத்தையும் சொல்ல.. ஒருவேளை பாலாவா இருக்குமோ.. அவன் இப்படி கேவலமா நடந்துக்குவானா..??”

 

தெரியலையேப்பு.. கடவுளே இன்னும் எம்புள்ளைக்கு எம்புட்டு சோதனையத்தான் தருவ.

 

நல்லவேளை சுந்தரு அவ உன்ரூமுக்கு வந்தா.. வேற யார்கிட்டயும் மாட்டல.. ஏன் ராசா என் பேத்தியால தப்பு செய்யாமலே உன் பேரு கெட்டுப்போச்சுன்னு நினைக்கிறியாப்பு.??”

 

முதல்ல இந்த எண்ணம் இருந்திச்சு அப்பத்தா .. ஆனா இப்ப இல்ல.. நீங்க கவலைப்படாதிங்க நான் உங்க பேத்திய பார்த்துக்குறேன்.. ஆனா..??”

 

ஆனா என்னய்யா என் பேத்திய அதட்டி உருட்டி கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்களேன்னு நினைக்கிறியா…? நான் மட்டும் அங்கன மயங்கி விழலைன்னு வைச்சுக்கோ இன்னேரம் உன் பொண்டாட்டி எல்லாரையும் பேசியே லெப்ட், ரைட் வாங்கியிருப்பா… நான் மயங்கி விழுந்த அதிர்ச்சியில பிள்ளைக்கு கையும் ஓடல காலும் ஓடல அதான் உன்கையால தாலி வாங்கிட்டா..

 

[the_ad id=”6605″]

 

 

ஹாஹாஹா இப்படி யாருக்குமே கல்யாணம் நடந்திருக்காது அப்பத்தா..

 

அப்பு நான் என் பேத்தின்னு சொல்லல அவ உண்மையிலே ரொம்ப நல்ல குணம்.. அவ்வளவு வசதியிருந்தாலும் ரொம்ப எளிமையாத்தான் நடந்துக்குவா..எப்படியாச்சும் அவள பழைய மாதிரி மாத்திருப்பு..” அவர் கையெடுத்து கும்பிட..

 

அவ என்னோட மனைவி .. இனி அவ எப்பவும் சந்தோசமா இருப்பா கவலைப்படாதிங்க.. எனக்கு அவளோட மெடிக்கல் ரிப்போர்ட் வேணுமே..?”

 

இங்கதான்ப்பு ஹோட்டல்ல இருந்து இப்ப கொண்டுவந்த என் பொட்டியில இருக்கு.. நாங்க கல்யாணம் முடியவும் அப்படியே சின்ன மவன் வீட்டுக்கு போகலாம்ன்னு அதெல்லாம் கொண்டுவந்தேன்.. இருப்பு எடுத்துட்டு வர்றேன்..

 

நீங்க அலைய வேண்டாம் அப்பத்தா.. அத சுந்தரிக்கிட்ட கொடுத்து விடுங்க.. அப்படியே உங்க பேத்திய எதாச்சும் சாப்பிட சொல்லுங்க.. நான் டாக்டர் எப்ப வருவார்ன்னு விசாரிக்கிறேன்.” .அவன் ரிசப்ஷன் செல்ல,

 

அப்பத்தா ரிப்போர்டை சுந்தரியிடம் கொடுத்துவிட்டு தன் பேத்தியை அழைத்துக் கண்டு கேன்டீனை நோக்கிச் சென்றார்..

 

ரிப்போர்ட்டை அண்ணனிடம் கொடுத்த சுந்தரியோ ஓட்டமாக ஓடிவந்தவள் ஆத்தா அண்ணே கட்டியிருக்க அந்த பொண்ணுக்கு ஏதோ மூளை கோளாருபோல… நான் அந்த ரிப்போர்ட்ட படிச்சு பார்த்தேன்..??” சத்தமாக சொல்ல.. ராமையாவோ முதல்முறையாக தன் பெண்ணை அறைந்திருந்தார்..

 

அப்புபுபு……!!!”

 

ஆத்தி என்ன காரியம் பண்ணிப்புட்டிக.. என்னாச்சுங்க உங்களுக்கு..? என்ன சொல்லிப்புட்டான்னு இப்ப அவள அடிச்சிக..?” என்றைக்கும் தங்களை கைநீட்டாத தந்தை அடிக்கவும் நாயகியும் , சௌந்தரமும் அப்படியே அதிர்ச்சியில் உறைய..

 

வாய மூடு எப்பவாச்சும் நீ பிள்ளைக வளர்க்கிறதுல நான் தலையிட்டுருக்கனா.. இவ மட்டும் ஏன் இப்படி… ப்பச்..

 

சுந்தரிக்கோ கோபம் … நான் என்னப்பு பண்ணினேன்..?”

 

என்ன பண்ணினயா… அறிவு கெட்டவளே இன்னைக்கு நடந்த எல்லாப்பிரச்சனைக்கும் நீதான் காரணம்..?”

 

[the_ad id=”6605″]

 

 

நாயகியோ என்னப்பு சொல்றிக..? சின்னவளா.. இவ என்னப்பு செய்வா.. அந்த பொண்ணு மேல தப்ப வைச்சிட்டு ..!!”

 

என்னத்தா நீயும் புரியாம பேசுர.. இவ சுந்தர எழுப்ப போனாளே.. அங்க சூழ்நிலை சரியில்லைன்னு தெரியவும் என்ன பண்ணியிருக்கனும்.. சத்தமில்லாம அவன எழுப்பியிருக்கனும்.. இல்லயா காதும் காதும் வைச்ச மாதிரி என்கிட்டயோ இல்ல ஆத்தாக்கிட்டயோ சொல்லியிருந்தா நாங்க வேற மாதிரி சரிபண்ணியிருப்போம்.. இப்ப பாரு எவ்வளவு பிரச்சனை..?”

 

 

சுந்தரு இந்தமாதிரி எல்லாம் நடந்திருப்பான்னு நினைக்கிறியா..?”

 

இல்லப்பு இல்லப்பு..

 

அப்புறம் நாமளே நம்ம சுந்தர் பேர கெடுத்த மாதிரி ஆயிருச்சுள்ல.. பொம்பள பிள்ளைக்கு அடக்கம் வேணும்..  எங்க எப்ப எப்படி பேசனும்னு ஒரு வரைமுறை இருக்குத்தா.. எப்ப பாரு வரட்டு தவளை மாதிரி கத்தப்பிடாது..

 

சுந்தரிக்கோ தந்தை அடித்தது வேறு வலித்திருக்க, தப்பு பண்ணினது அந்த பொண்ணு.. அண்ணே அறைக்கு ஏன் வந்தாகன்னு யாருமே கேட்கல.. என்னைப்போய் அடிக்கிறாங்க.. வாங்க வாங்க எங்க வீட்டுக்குத்தானே வரனும்.. கோபத்தில் தர்ஷினியை என்னன்ன செய்யலாம் என பட்டியலிட்டு கொண்டிருந்தாள்..!!!

 

                                             இனி…………….????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!