Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 15.1

சூரியா தானும் சந்தியாவும் காலையுணவை மார்க்கின் அலுவலகம் செல்லும் வழியில் முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபடி மார்க் சூரியாவின் உபயோகத்துக்காக அனுப்பி வைத்திருந்த காரில் சந்தியாவுடன் சென்று கொண்டிருந்தான். ஆனால் செல்லும் வழியிலேயே மார்க்கின் செகரட்டரி சூரியாவுக்குப் போன் செய்து துரிதமாக வருமாறு கூறிவிடவே இருவருமே காலையுணவையும் தியாகம் செய்ய வேண்டியச் சூழ்நிலை.

 

சந்தியா எதுவும் பேசாமல் வருவது வேறு அவனுக்குள் ஏதோ சங்கடத்தை உண்டாக்க சூரியா அவளிடம் பேச்சுக் கொடுக்க முயல சந்தியா அவனது கேள்விகள் அனைத்துக்கும் ஒருவரி பதிலாகக் கொடுத்து அவனது பொறுமையைச் சோதிக்க ஆரம்பிக்கவும் அவனே வாயை மூடி மவுனியாகி விட்டான்.

 



Advertisement

மார்க்கின் அலுவலகம் இருக்குமிடம் ரிவர் ஓக்ஸிலிருந்து எட்டுநிமிடக் கார் பயணத்தில் வந்துவிடும் அளவு தூரம் தான். அவனது அலுவலகம் இருக்கும் இடத்திற்கு வரும் போதே சந்தியா அந்த அலுவலகம் இருக்கும் கட்டிடத்தைப் பார்த்து அதிசயித்துப் போனாள்.

 

மார்க்கின் அலுவலகம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடியால் இழைக்கப்பட்டிருந்த வானளாவியக் கட்டிடத்தின் பெயர் வில்லியம்ஸ் டவர். கிட்டத்தட்ட அறுபத்து நான்கு தளங்களைக் கொண்ட அந்தக் கட்டிடத்தின் பார்க்கிங் ஏரியாவுக்கு தான் கார் போய்க் கொண்டிருந்தது.

Advertisement

 

Advertisement

கண்காணிப்பாளர்கள் காரின் ரியர்வியூ மிர்ரரில் தொங்கிக் கொண்டிருந்த டேகைப் பார்த்துவிட்டு காரை நிறுத்த அனுமதித்தனர். சந்தியா சூரியாவிடம் “இந்த டேக்ல அப்பிடி என்ன இருக்கு?” என்று ஆர்வம் தாங்காது கேட்டுவிட சூரியா அதன் பெயர் ஹேங்க்டேக்(HANG TAG) என்றும்,  அங்கே வாகனம் நிறுத்த வேண்டுமென்றால் அதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டுமென்றும் விளக்கியவன் இந்த டேக் தங்களின் கார் இங்கே நிற்பதற்கான அனுமதிச்சீட்டு போல என்றுக் கூற சந்தியா அவன் கூறிய விவரங்களைக் கேட்டபடியே அமர்ந்திருந்தாள்.

 

பார்க்கிங்கில் காரை நிறுத்தியபிறகு இருவரும் லிஃப்டில் பயணிக்கத் தொடங்கினர். சந்தியா பேச்சு சுவாரசியத்தில் “மார்க்கோட ஆபிஸ் எத்தனாவது ஃப்ளோர்?” என்று கேட்க சூரியா சாதாரணமாக “நாப்பத்து அஞ்சு” என்று சொல்லவும் சந்தியாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

அவர்கள் செல்ல வேண்டிய தளம் வந்துவிடவே லிஃப்டின் கதவு திறக்கவும் இருவரும் வெளியேற சந்தியா சூரியாவிடம் சாதாரணமாகப் பேசியதே அவனுக்கு பெருத்த நிம்மதியைக் கொடுக்க அவனும் சகஜமாக அவளுடன் உரையாடியபடி மார்க்கின் “லிபர்ட்டி ஃபேப்ரிக் கம்பெனியின்” தலைமை அலுவகத்தினுள் நுழைந்தான்.

 

அலுவலகத்தின் அமைப்பைப் பார்த்து வியந்தபடி சூரியாவுடன் நடந்து கொண்டிருந்தாள் சந்தியா. சிறிது தூரத்தில் மார்க்கின் செகரட்டரி இவர்கள் இருவரையும் வரவேற்கப் புன்னகைமுகத்துடன் வரவேற்பை ஏற்றவர்கள் செகரட்டரியைத் தொடர்ந்தனர். அலுவலக ஊழியர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்க அவர்களைப் பார்த்தவாறே நடந்தச் சந்தியாவுக்குச் சிறிது தூரம் செல்லும் போதே கண்பார்வை மங்குவதை உணர்ந்தவள் இருவேளை உணவைத் தியாகம் செய்ததன் விளைவு தான் இது என்று மூளை எச்சரிக்கை மணி அடிக்கும் நேரத்தில் மார்க்கின் அறை வந்துவிட்டது.

 

சூரியாவுடன் இணைந்து நடந்து வந்தவளின் கண்ணுக்கு தன் அருகில் நிற்கும் சூரியாவின் உருவமே மங்கலாகத் தெரிய சற்று தொலைவில் அவர்கள் இருவரையும் வரவேற்கும் பொருட்டுச் சுழல்நாற்காலியை விட்டு எழுந்த அந்த வெளிநாட்டவனின் உருவம் சுத்தமாகத் தெரியவில்லை.

 

சூரியா அவனிடம் நெருங்கியவன் “ஹலோ மார்க்” என்றபடி அவனை அணைத்துக் கொள்ள இருவரும் கல்லூரிப்பருவ நிகழ்ச்சிகளைப் பேசுவது ஏதோ ஒரு உலகத்தில் நடக்கும் நிகழ்வு போலச் சந்தியாவின் காதில் விழுந்தது. தலையை உலுக்கித் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவளை மார்க்கிடம் சூரியா “மீட் மை ஃப்ரெண்ட் சந்தியா” என்றுச் சொல்ல அவன் கை நீட்டவும் சந்தியா பிரக்ஞையின்றி மயங்கிவிழத் தொடங்கினாள்.

 

மார்க் தனது கரத்தைப் பற்றாமல் சரியும் சூரியாவின் தோழியைப் பதறிப் போய்த் தனது கரங்களில் தாங்கிக் கொள்ள சந்தியா கண்ணை மூடியிருக்கவும் சூரியா பதறிப் போனவனாய் “பிரவுனி என்னாச்சு?” என்று படபடக்க மார்க் தனது செகரட்டரியிடம் தண்ணீரை எடுத்துவர கட்டளையிட்டான்.

 

அவர் தண்ணீருடன் திரும்ப தம்ளரை வாங்கி அவள் முகத்தில் தெளித்தான் மார்க். குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் முகத்தைச் சுருக்கிவிட்டு மெதுவாக கண்களைத் திறக்கத் தொடங்கினாள் சந்தியா. கண்ணைத் திறந்தவள் தன் அருகில் கையில் கண்ணாடி தம்ளருடன் அமர்ந்திருந்த வெளிநாட்டவனைச் சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு “நீங்க வில் ஸ்மித் தானே?” என்று கேட்க அவள் அருகில் அமர்ந்திருந்த மார்க் அவளை வினோதமாகப் பார்த்துவிட்டு சூரியாவின் புறம் திரும்பி இவளுக்கு என்னவாயிற்று என்று சைகையில் கேட்டான்.

 

சூரியா சட்டென்று “அவ பசிமயக்கத்துல பேசுறா..  மேடம் நேத்து நைட்டில இருந்து சாப்பிடலை” என்றுச் சொல்லவும்

 

சந்தியா அதை மறுக்கும் விதமாக “இல்லை மார்ஸ்மாலோ! நான் எந்த மயக்கத்திலயும் பேசலை” என்று சொன்னவள் மார்க்கின் புறம் திரும்பி “நான் இந்த ரூம்குள்ள வர்றப்போ உங்க முகம் தெளிவா தெரியலை.. நீங்க பார்க்கிறதுக்கு வில் ஸ்மித் மாதிரியே இருக்கிங்க… ஹீ இஸ் மை ஃபேவரைட் ஆக்டர்” என்று உற்சாகமாகப் பேச மார்க் அவளது பேச்சைக் கேட்டுக் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தான்.

 

பின்னர் “ஓகே ஓகே! பியூட்டிஃபுல் லேடி தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமெண்ட்ஸ்….” என்று தலைகுனிந்து அவள் பேச்சை பாராட்டாக எடுத்துக் கொள்வதாக அவன் சொன்ன விதமே சந்தியாவுக்குப் பிடித்துப் போய்விட்டது.

 

மார்க் அதோடு நிற்காமல் அவளுக்கு ஃபுட்கோர்ட்டிலோ அல்லது ஆன்லைனிலோ சாப்பிட எதாவது ஆர்டர் செய்துவிடுமாறு தனது செகரட்டரியிடம் கட்டளையிட்டவன் சந்தியாவிடம் சாப்பிட்டு முடித்ததும் தங்களது டிஸ்கசனில் கலந்துக் கொண்டால் போதுமென்று கட்டளையிட்டுவிட்டுச் செல்ல சந்தியா ஆர்வம் ததும்பும் விழிகளால் மார்க்கைப் பார்க்க அங்கே சூரியா என்ற ஒருவன் அவளது செய்கைகளைக் கண்டு எரிச்சலில் நிற்கிறான் என்பதைக் கவனிக்கவில்லை.

 

சிறிதுநேரத்தில் சாண்ட்விச் மாதிரி எதோ வந்துச் சேர பசி ருசியறியாது என்பதை உணர்ந்த சந்தியா அதை அவசர அவசரமாக உள்ளே தள்ளினாள். வயிறு நிரம்பியதும் உற்சாகமாக சூரியாவுடன் தொழில்முறை பேச்சுக்களில் கலந்து கொண்டவளின் விழிகள் அடிக்கடி மார்க்கை ஒருவித ஆர்வத்துடன் தழுவிச் செல்ல சூரியா சந்தியாவின் காதில் “அவனை அப்புறமா சைட் அடிச்சுக்கோ… இப்போ நான் கேக்கிற டீடெயிலைச் சொல்லு” என்று அவள் கவனத்தைத் தன்புறம் திருப்ப முயல சந்தியாவும் அவன் கேட்ட விவரத்தைக் கூறிவிட்டு மீண்டும் மார்க்கின் புறம் விழிகளைத் திருப்பினாள்.

 

தொழில்முறைப்பேச்சுக்கள் முடியவும் சூரியாவும் மார்க்கும் அவர்களின் கல்லூரிக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள சந்தியா மனதிற்குள் “ஓ! இந்த வில் ஸ்மித் மார்ஸ்மாலோவோட கிளாஸ்மேட்டா?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

சூரியா அவள் வைத்தக் கண் வாங்காமல் புன்னகையுடன் மார்க்கைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் கடுப்புடன் “போதும் பிரவுனி, வாயை குளோஸ் பண்ணு… இல்லைனா கொசு எதுவும் உள்ளே போயிடப் போகுது” என்று அடக்கப்பட்டக் கோபத்துடன் கூற

 

சந்தியா “அப்பிடி போனா ஆல் அவுட் லிக்விடை குடிச்சு கொசுவை சாகடிச்சிக்கிறேன் மார்ஸ்மாலோ… நீ சும்மா நொய்நொய்னு பேசி அந்த வில் ஸ்மித்தை ரசிக்க விடாம பண்ணாதே” என்றுக் கூற

 

சூரியா அவள் முகவாயைப் பற்றித் தன்புறம் திருப்பியவன் “நீ ரொம்ப ஓவரா பண்ணுற பிரவுனி… அவன் ஆர்டர் பண்ணுன சாண்ட்விச்சை தனியா உள்ளே தள்ளுனியே! இங்கே நான் ஒருத்தன் சாப்பிடாம இருக்கிறது உனக்கு நியாபகம் இல்லைல” என்று அவளைக் குறை கூறவும் தான் சந்தியாவுக்கு அவன் சாப்பிடவில்லை என்பதே நினைவுக்கு வந்தது.

 

அவனைப் பார்த்து அசட்டுப்புன்னகை செய்தபடி “சாரி மார்ஸ்மாலோ… நான் என்ன பண்ணுறது? மயக்கம் தெளிஞ்சு கண்ணை முழிச்சுப் பார்க்கிறப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோவோட சாயல்ல ஒருத்தன் என் பக்கத்துல இருந்ததும் எனக்கு இந்த உலகமே மறந்துப் போச்சு… அதுல நான் உன்னோட பசியையும் மறந்துட்டேன்…” என்று சொல்ல சூரியா டையைத் தளர்த்தியவன் பெரிய மூச்சை எடுத்துவிட்டபடி சிகையைக் கோதிக் கொண்டான்.

 

சந்தியா அவனது இந்தச் செய்கை அவன் மனதில் உண்டான புகைச்சலைக் குறைக்க அவன் செய்யும் முயற்சி என்பதை எளிதாகக் கண்டுகொண்டவள் அவனது நேற்றைய கேலி நினைவுக்கு வர கிண்டலாக நண்பனைப் பார்த்தபடி “மார்ஸ்மாலோ உன்னோட முகத்துல எதுவோ இருக்கு… என்ன இது?” என்று அவன் தாடையைப் பற்றி அவனது முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்தாள்.

திடீரென்று “யுரேகா! பொறாமை தானே! உனக்கு நான் மார்க்கை சைட் அடிக்கிறதைப் பார்த்து பொறாமை… பட் அதுக்காகலாம் என்னால வில் ஸ்மித்தை சைட் அடிக்காம இருக்க முடியாது… நீயே பாரேன், ஆள் செம ஹேண்ட்சம்ல… நீ ஏன் மார்ஸ்மாலோ உனக்கு இவ்ளோ ஸ்மார்ட்டான ஃப்ரெண்ட் இருக்கான்னு என் கிட்ட ஏன் சொல்லலை?” என்று அவனிடம் கேட்டு அவனது புகைச்சலை இன்னும் அதிகமாக்கிவிட்டாள் அவள்.

 

சூரியா அதைக் கேட்டுப் புருவம் உயர்த்தி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இம்பாஸிபிள்” என்று மட்டும் உரைத்தவன் சட்டென்று எழுந்திருக்கவும் சந்தியா “எங்கே போற?” என்று கேட்டபடி அவளும் எழுந்தாள்.

 

“சாப்பிடப் போறேன் தாயே! நீயும் வர்றியா?”

 

“நோ நோ! நான் இங்கேயே இருந்து வில் ஸ்மித் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கிறேன்.. நீ போய்ச் சாப்பிட்டுட்டு வா” என்று சந்தியா சொல்லிவிடவே இது தேறாத கேஸ் என்று தலையிலடித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு நடையைக் கட்டினான் சூரியா.

 

அங்கே சென்று அமர்ந்தவனின் மனம் முழுவதும் மார்க்கின் அலுவலகத்திலேயே இருக்க தன் முன் வைக்கப்பட்ட உணவை கடனே என்று சாப்பிட்டு முடித்தவன் மனதிற்குள் சந்தியாவுக்கு அர்ச்சனை செய்யவும் தவறவில்லை.

 

சாப்பிட்டுவிட்டு மீண்டும் அங்கே திரும்பியவனின் மனம் “அந்தப் பொண்ணு மார்க்கை பார்த்தா உனக்கு என்னடா செய்யுது? அவளுக்குப் பிடிச்ச ஹீரோ மாதிரி அவன் இருக்கான்னு தான் அவ இவ்ளோ ஆர்வமா அவனைப் பார்க்கிறா… இதுல உனக்கு என்ன பிரச்சனை? அவ உன்னோட ஃப்ரெண்டுங்கிறதுக்காக வேற யார் கூடவும் பேசிப் பழகாம இருக்கணுமா என்ன? இதே மாதிரி தான் அவ ஆரியா கிட்ட பேசுறப்போவும் நீ ரியாக்ட் பண்ணுற” என்றுச் சொல்லி அவனைக் கண்டிக்க அவனது குழப்பம் அதிகரித்ததே தவிர இன்னும் குறைந்தபாடில்லை.

 

[the_ad id=”6605″]

 

அவன் மார்க்கின் அலுவலக அறைக்குள் நுழையும் போது அவர்கள் இருவரும் சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தது கூட சூரியாவுக்கு அசவுகரியத்தையே கொடுத்தது.

 

இம்மாதிரியான மனநிலை அன்றைய நாள் முழுவதும் தொடரச் சூரியா எவ்வாறு இந்த மாதம் முழுவதும் தான் சமாளிக்கப் போகிறோம் என்று அங்கலாய்த்தபடி அன்றைய நாளை நெட்டித் தள்ளினான்.

 

*************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!